வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 24, 2015

நாற்பது முதல் ஹிஜ்ரத் வரை

நாற்பது முதல் ஹிஜ்ரத் வரை (40 – 53)
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ(1)خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ(2)اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ(3)الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ(4)عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ(5)
40
நபி (ஸல்) அவர்களுடைய இளமையின் நிறைவில் இருந்தார்கள், அப்போது தனிமையில் இருப்பது அவர்களுக்கு பிடித்தமானதாக இருந்தது, தன்னுடைய 38 , 39 ஆகிய வயதுகளில் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுவதும் ஹிரா குகையில் தனிமையில் இருந்தார்கள்.
மக்காவிலிருந்து 2 மைல் தொலைவில் ஜபலுன்னூர் என்றொரு மலை இருக்கிறது, நெட்டுக்குத்தான மலை, அதன் மேல் ஏறி கிழே சற்று இறங்கினா அங்கு ஒரு குகை இருக்கிறது. 4 முழம் நீளம், ஒண்ணே முக்கால் முழம் அகலம் கொண்ட அந்தக் குகைக்குப் பெயர், ஹிரா.. குகைக்கு மேலே இருக்கிற பாறையில் ஏறி உட்கார்ந்தால் அங்கிருந்து கஃபாவைக் காணலாம்.
மக்காவின் சூழலிலிருந்து ஒதுங்கியிருக்க பெருமானார் (ஸல்)இவ்வாறு தனிமையில் இருந்தார்கள். நபித்துவத்திற்காக தயார் படுத்தும் ஒரு செயலாக அல்லாஹ் இவ்வாறு அமைத்தான் என்றும்.
அப்துல் முத்தலிப் இவ்வாறு ஹிராவில் தனிமையில் இருக்கும் பழக்க முடையவராக இருந்தார் அதை பின்பற்றியே பெருமானாரும் தனிமையில் இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது, , .
40 வது வயதில் அவ்வாறு தனிமையில் இருக்கும் போது ரமலான் 27 ம் நாள் ஜிப்ரயீல் அலை வந்து திருக்குர் ஆனின் ஆரம்ப ஐந்து வசனங்களை அருளினார்கள்,
‏.‏‏.‏‏.‏ دبر الله له هذه العزلة قبل تكليفه بالرسالة بثلاث سنوات، ينطلق في هذه العزلة شهرًا من الزمان، مع روح الوجود الطليقة، ويتدبر ما وراء الوجود من غيب مكنون ) ரஹீக்
ரமலான் 17 – 21 என்றும் கருத்துக்கள் உண்டு, அப்போது பெருமானாருக்கு 40 சந்திர ஆண்டுகள் நிறைவுற்று ஆறுமாதமும் எட்டு நாட்களும் கடந்திருந்தன ( முஹம்மது ரஸூலுல்லாஹ்)
வஹி வருவதற்கு முன் ஆறு மாதங்களாக அவருக்கு உண்மைக் கனவுகளை அல்லாஹ் காட்டினான். அன்னார் எதைக் கனவில் பார்ப்பார்களோ அது அப்படியே நடந்தது, வஹிக்கு தயார் படுத்தும் ஒரு நடவடிக்கையாக இது அமைந்தது,
ஸஹீஹுல் புகாரியின் முதல் பாடம் வஹியின் தொடக்கம் பற்றியது, அதில் இந்த ஹதிஸ் இடம் பெற்றுள்ளது,
عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهَا قَالَتْ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْوَحْيِ الرُّؤْيَا الصَّالِحَةُ فِي النَّوْمِ فَكَانَ لَا يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ ثُمَّ حُبِّبَ إِلَيْهِ الْخَلَاءُ وَكَانَ يَخْلُو بِغَارِ حِرَاءٍ فَيَتَحَنَّثُ فِيهِ وَهُوَ التَّعَبُّدُ اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ قَبْلَ أَنْ يَنْزِعَ إِلَى أَهْلِهِ وَيَتَزَوَّدُ لِذَلِكَ ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ فَيَتَزَوَّدُ لِمِثْلِهَا حَتَّى جَاءَهُ الْحَقُّ وَهُوَ فِي غَارِ حِرَاءٍ فَجَاءَهُ الْمَلَكُ فَقَالَ اقْرَأْ قَالَ مَا أَنَا بِقَارِئٍ قَالَ فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ قُلْتُ مَا أَنَا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ فَقُلْتُ مَا أَنَا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُفُ فُؤَادُهُ فَدَخَلَ عَلَى خَدِيجَةَ بِنْتِ خُوَيْلِدٍ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقَالَ زَمِّلُونِي زَمِّلُونِي فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الْخَبَرَ لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي فَقَالَتْ خَدِيجَةُ كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ فَانْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ الْعُزَّى ابْنَ عَمِّ خَدِيجَةَ وَكَانَ امْرَأً قَدْ تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعِبْرَانِيَّ فَيَكْتُبُ مِنْ الْإِنْجِيلِ بِالْعِبْرَانِيَّةِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ فَقَالَتْ لَهُ خَدِيجَةُ يَا ابْنَ عَمِّ اسْمَعْ مِنْ ابْنِ أَخِيكَ فَقَالَ لَهُ وَرَقَةُ يَا ابْنَ أَخِي مَاذَا تَرَى فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَبَرَ مَا رَأَى فَقَالَ لَهُ وَرَقَةُ هَذَا النَّامُوسُ الَّذِي نَزَّلَ اللَّهُ عَلَى مُوسَى يَا لَيْتَنِي فِيهَا جَذَعًا لَيْتَنِي أَكُونُ حَيًّا إِذْ يُخْرِجُكَ قَوْمُكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَمُخْرِجِيَّ هُمْ قَالَ نَعَمْ لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمِثْلِ مَا جِئْتَ بِهِ إِلَّا عُودِيَ وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ وَفَتَرَ الْوَحْيُ புகாரி 4
எந்த ஆசிரியரிடமும் சென்று கல்வி கற்காத பெருமானாருக்கு ஓதுவீராக என்று சொல்லி அல்லாஹ் முதல் வசனங்களை அருளினான்.

அதன் பிறகு மூன்று வருடங்கள் வஹி வரவில்லை.

அதன் பிறகு ஒரு நாள் பெருமானார் (ஸல்) பேர்வை போர்த்திய நிலையில் அமர்ந்திருந்த போது ஜிப்ரயீல் அலை வந்தார்கள், அதன் பிறகு 20 ஆண்டுகளாக வஹீயின் அருள் மழை  தொடர்ந்தது,

جاء في صحيح البخاري عن جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما وهو يحدث عن فترة الوحي فقال: قال رسول الله صلى الله عليه وسلم في حديثه: «بينا أنا أمشي إذ سمعت صوتاً من السماء فرفعت بصري فإذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والأرض فرعبت منه فرجعت فقلت: زملوني زملوني فأنزل الله تعالى: {يأَيُّهَا الْمُدَّثّرُ قُمْ فَأَنذِرْ وَرَبَّكَ فَكَبّرْ وَثِيَابَكَ فَطَهّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ} (المدثر: 1 - 5)

முதல் முஃமின்கள்
إن أول الناس إيماناً به صلى الله عليه وسلم على الإطلاق خديجة رضي الله عنها وصلى رسول الله معها

பிறகு அபூபக்கர் சித்தீக் ரலி ஈமான் கொண்டார்கள், அன்றே அவருடைய நண்பர்கள் ஐந்து பேரை அழைத்து வந்து ஈமான கொள்ள வைத்தார்கள்.

நாற்பது வயதில் நபித்துவம் பெற்ற ((مبدء النبوة  பெருமானாருக்கு (ஸல்) மூன்று வருடங்கள் வஹி வரவில்லை, 43 வய்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்கள்,مبدئ الرسالة)   (
நபித்துவ அறிக்கை
உங்களது குடும்பத்தை எச்சரிப்பீராக என்று அல்லாஹ் சொன்னான். சபா மலை மீது ஏறீ ஆபத்து ஆபத்து எனக் கூறி தம் குடும்பத்தாரை அழைத்த பெருமானார் (ஸல்) அவர்கள்
جعل ينادى بطون قريش، ويدعوهم قبائل قبائل‏:‏ ‏(‏يا بني فهر، يا بني عدى، يا بني فلان، يا بني فلان، يا بني عبد مناف، يا بني عبد المطلب‏)‏‏.‏
فلما سمعوا قالوا‏:‏ من هذا الذي يهتف‏؟‏ قالوا‏:‏ محمد‏.‏ فأسرع الناس إليه، حتى إن الرجل إذا لم يستطع أن يخرج إليه أرسل رسولًا لينظر ما هو، فجاء أبو لهب وقريش‏.‏

فلما اجتمعوا قال‏:‏ ‏(‏أرأيتكم لو أخبرتكم أن خيلًا بالوادى بسَفْح هذا الجبل تريد أن تغير عليكم أكنتم مُصَدِّقِىَّ‏؟‏‏)‏‏.‏
قالوا‏:‏ نعم، ما جربنا عليك كذبًا، ما جربنا عليك إلا صدقًا‏.‏
قال‏:‏ ‏(‏إنى نذير لكم بين يدى عذاب شديد، إنما مثلى ومثلكم كمثل رجل رأي العَدُوّ فانطلق يَرْبَأ أهله- أي يتطلع وينظر لهم من مكان مرتفع لئلا يدهمهم العدو

أن أبا لهب قال‏:‏ تبا لك سائر اليوم، ألهذا جمعتنا‏؟‏ فنزلت‏:‏ ‏{‏تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ‏}‏ ‏[‏سورة المسد‏:‏1‏]‏‏.‏


இரண்டு வருடங்கள் இரகசியமாக பிரச்சாரம் நடை பெற்றது, அடுத்தவருக்கு தெரியாமல் பலரும் இஸ்லாமை தழுவி வந்தனர்.
இஸ்லாமைத் தழுவிய சாமாணிய மக்களை மக்காவின் குறைஷிக் காபிர்கள் கடுமையாக துன்புறுத்தினர். நிம்மதியை பறித்தனர்,
லாயிலாக இல்லல்ஹ் சொன்ன ஒரு குற்றத்திற்காக துன்புறுத்தப்பட்டோர் பலர். அவர்களில் சிலரது வரலாற்றையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் உச்சரிக்கிற கலிமாவின் வாசகம் இவர்களுக்கு மரண வேதனையை சுவைக்க வைத்திறுக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கனும்.
فمن الذين عذبوا لأجل إسلامهم بلال بن رباح الحبشي مولى أبي بكر، وكان أبوه من سبي الحبشة وأمه حمامة سبية أيضاً وهو من مولدي الشراة وكنيته أبو عبد الله فصار بلال لأمية بن خلف الجمحي فكان إذا حميت الشمس وقت الظهيرة يلقيه في الرّمضاء على وجهه وظهره ثم يأمر بالصخرة العظيمة فتلقى على صدره ويقول: لا تزال هكذا حتى تموت أو تكفر بمحمد وتعبد اللات والعزى، فكان بلال وهو في هذه الحال يقول: «أَحَد.، أَحَد» فرآه أبو بكر يعذب، فقال لأمية بن خلف الجمحي: ألا تتقي الله في هذا المسكين؟ فقال: أنت أفسدته فأنقذه، فقال: عندي غلام على دينك أسود أجدل من هذا أعطيكه به، قال: قبلت، فأعطاه أبو بكر غلامه وأخذ بلالاً فأعتقه، وقيل: اشتراه أبو بكر بخمس أواق،


ومن المعذَّبين: عمار بن ياسر أبو اليقظان العنسيُّ وهو بطن من مراد، وعنس هذا أسلم هو وأبوه وأمه وأسلم قديماً ورسول الله صلى الله عليه وسلم في دار الأرقم بن أبي الأرقم بعد بضعة وثلاثين رجلاً، أسلم هو وصهيب في يوم أحد، وكان ياسر حليفاً لبني مخزوم فكانوا يخرجون عماراً وأباه وأمه إلى الأبطح إذا حميت الرمضاء يعذبونهم بحر الرمضاء فمرّ بهم النبي صلى الله عليه وسلم فقال: «صبراً آل ياسر فإن موعدكم الجنة»، فمات ياسر في العذاب وأغلظت امرأته سمية القول لأبي جهل فطعنها في فرجها بحربة فماتت وهي أول شهيدة في الإسلام،

ومنهم خبَّاب بن الأرت وكان إسلامه قديماً، قيل: سادس ستة قبل دخول رسول الله دار الأرقم فأخذه الكفار وعذبوه عذاباً شديداً فكانوا يعرّونه ويلصقون ظهره بالرمضاء ثم بالرَّضْف وهي الحجارة المحماة بالنار ولووا رأسه فلم يجبهم إلى شيء مما أرادوا،

ومنهم لبيبة جارية بني مؤمل بن حبيب بن كعب أسلمت قبل إسلام عمر بن الخطاب وكان يعذبها حتى تفتن ثم يدعها ويقول: إني لم أدعك إلا سآمة، فتقول: كذلك يفعل الله بك إن لم تسلم، فاشتراها أبو بكر فأعتقها.

அபூபக்கர் சித்தீக் ரலி ஆரம்பத்திலிருந்தே பகிரங்கமாக பிரச்சாரம் செய்யத் தூண்டிக் கொண்டே இருந்தார்கள், நாம் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறோம் என்று சொல்லி பெருமானார் தவிர்த்து வந்தார்கள், ஒரு முறை முஸ்லிம்களின் எண்ணிக்கை முப்பத்தி எட்டாக அதிகரித்த போது அதை வற்புறுத்த தொடங்கினார்கள், பெருமானார் அனுமதியளிக்க கஃபாவின் முற்றத்தில் அபூபக்கர் ரலி எழுந்து முஸ்லிம்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொன்னார், இஸ்லாத்தின் முதல் சொற்பொழிவாளர் அவர். அதற்காக அவர் கடுமையாக தாக்கப்பட்டார்,
أن رسول الله صلى الله عليه وسلم لما دخل دار الأرقم ليعبد الله هو ومن معه من أصحابه سراً ألحَّ أبو بكر رضي الله عنه في الظهور، فقال له النبي صلى الله عليه وسلم «يا أبا بكر إنا قليل»، فلم يزل به حتى خرج رسول الله صلى الله عليه وسلم ومن معه من الصحابة رضي الله عنهم وقام أبو بكر في الناس خطيباً ورسول الله صلى الله عليه وسلم جالس ودعا إلى رسول الله، فهو أول خطيب دعا إلى الله تعالى، فثار المشركون على أبي بكر رضي الله عنه وعلى المسلمين يضربونهم فضربوهم ضرباً مبرحاً، ووطىء أبو بكر بالأرجل وضرب ضرباً شديداً، وصار عتبة بن ربيعة يضرب أبا بكر بنعلين مخصوفتين ويحرفهما إلى وجهه حتى صار لا يعرف أنفه من وجهه،«السيرة الحلبية»
முதல் அபீசினிய ஹிஜ்ரத்
நபித்துவத்தின் ஐந்தாம் வருடம் காபிர்களின் தொல்லை அதிகரித்த போது முஸ்லிம்களின் முதல் குழுவை பெருமானார் அபீசீனியாவுக்கு அனுப்பினார்கள் (12 ஆன்கள் 4 பெண்கள்)
قال لهم: «لو خرجتم إلى أرض الحبشة فإن فيها ملكاً لا يظلم أحد عنده حتى يجعل الله لكم فرجاً ومخرجاً مما أنتم فيه» ومكث هو فلم يبرح يدعو إلى الله سراً وجهراً.

وكان الذي خرجوا اثني عشر رجلاً وأربع نسوة

وذلك في شهر رجب سنة خمس من بعد النبوّة ( سنة 615 م
இஸ்லாம் பகிரங்கப்பட்ட ஐந்தாம் வருடம்

இதே கால கட்டத்தில் ஹம்ஸா ரலி அவர்கள் 39 ஆம் நபராகவும் உமர் ரலி 40 வது நபராகவும் இஸ்லாமைத் தழுவினர்,

உமர் ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பகிரங்கமாக கஃபாவுக்கு அழைத்து வந்தார்கள்,

عن ابن عباس أنه قال: «أسلم مع رسول الله صلى الله عليه وسلم تسعة وثلاثون رجلاً وامرأة، ثم إن عمر أسلم فصاروا أربعين»،

குறைஷிகளின் மாற்றுத் திட்டங்கள்

முஸ்லிம்களை துன்புறுத்தி ஒன்றும் செய்ய முடியாமல் போன போதுகதீஜா அம்மாவின் பாதுகாப்பும் அபூதாலிபின் அரவணைப்பும்பனூ ஹாஷிம் குடும்பத்தாரின் செல்வாக்கும் இருப்பதால் பெருமானாரை எதுவும் செய்ய முடியாமல் தவித்த குறைஷிகள் பெருமானாரை ஆசை காட்டி திசை திருப்பி விட முயற்சித்தனர்,

குறைஷித் தலைவரான் உத்பா பெருமானாரை திசை மாற்ற தான் முயற்சிக்கப் போவதாக கூறி பெருமானாருக்கு சில சலுகைகளை அளிக்க தனக்கு அதிகாரம் தறுமாறு கேட்டுக் கொண்டு பெருமானாரிடம் வந்து பேசினார், வரலாற்றுப் புகழ் பெற்ற பேரம் அது,

பெண்ணையும் பொன்னையும் காட்டி மயக்க வந்தவர் குர் ஆனுக்கு மயங்கிய அதிசயம்.

முஹம்மது உன்னையும் வசியம் செய்து விட்டார் குறைஷிகள் தம் தலைவரையே தூசித்த அதிசயம்.

فقام إليه عتبة حتى جلس إلى رسول الله فقاليا ابن أخي إن كنت إنما تريد بما جئت به من هذا الأمر مالاً جمعنا لك من أموالنا حتى تكون أكثرنا مالاً، وإن كنت تريد به شرفاً سودناك علينا حتى لا نقطع أمراً دونك وإن كنت تريد ملكاً ملكناك علينا وإن كان هذا الذي يأتيك رَئِيّاً تراه لا تستطيع رده عن نفسك طلبنا لك الطب وبذلنا فيه أموالنا حتى نُبرئك منه فإنه ربما غلب التابع على الرجل حتى يُداوى منه، حتى إذا فرغ عتبة ورسول الله يستمع منه قال: «أقد فرغت يا أبا الوليد»؟ قال: نعم، قال: «فاسمع مني»، قال: أفعل، قال: «بسم الله الرحمن الرحيم: {حم تَنزِيلٌ مّنَ الرَّحْمَنِ الرَّحِيمِ كِتَبٌ فُصّلَتْ ءايَتُهُ قُرْءاناً عَرَبِيّاً لّقَوْمٍ يَعْلَمُونَ بَشِيراً وَنَذِيراً فَأَعْرَضَ أَكْثَرُهُمْ فَهُمْ لاَ يَسْمَعُونَ} (فصلت:1 - 4)، ثم مضى رسول الله فيها يقرأها عليه، فلما سمعها عتبة منه أنصت لها وألقى يديه خلف ظهره معتمداً عليهما يستمع منه ثم انتهى رسول الله صلى الله عليه وسلم إلى السجدة منها فسجد، ثم قال: قد سمعت يا أبا الوليد ما سمعت فأنت وذاك».
فقام عتبة إلى أصحابه فقال بعضهم لبعض: نحلف بالله لقد جاءكم أبو الوليد بغير الوجه الذي ذهب به، فلما جلس إليهم قالوا: ما وراءك يا أبا الوليد؟ قال: ورائي أني قد سمعت قولاً والله ما سمعت مثله قط، والله ما هو بالشعر ولا بالسحر ولا الكهانة، يا معشر قريش أطيعوني واجعلوها بي، خلوا بين هذا الرجل وبين ما هو فيه، فاعتزلوه فوالله ليكونن لقوله الذي سمعت منه نبأ عظيم فإن تصبه العرب فقد كُفِيتموه بغيركم وإن يظهر على العرب فملكه ملككم وعزه عزكم وكنتم أسعد الناس به، قالوا: سحرك والله يا أبا الوليد بلسانه، قال: هذا رأيي فيه فاصنعوا ما بدا لكم.

சஹாபாக்களின் பிரச்சாரம்
وعن ابن عتبة أنه قال: لما أظهر رسول الله صلى الله عليه وسلم الإسلام ومن معه وفشا أمره بمكة ودعا بعضهم بعضاً فكان أبو بكر يدعو ناحية سراً، وكان سعيد بن زيد مثل ذلك، وكان عمر وحمزة بن عبد المطلب وأبو عبيدة بن الجراح يدعون علانية

இந்தப் பிரச்சாரத்தில் இஸ்லாம் மெதுமெதுவாக வளர்ந்து கொன்டிருந்தது,

இரண்டாவது அபீசீனியப் பயணம்

உமர் ரலி இஸ்லாமை தழுவியதை கேட்டு சந்தோஷப்பட்ட அபீசீனியாவிற்கு சென்ற சஹாபாக்கள் மக்காவிற்கு திரும்பினர், ஆனால் மக்காவின் குறைஷிகளின் தாக்க்தல்களுக்கு பதில் தாக்குதல் அளிக்க பெருமானார் (ஸல்) அனுமதியளிக்காத்தால் கஷ்டம் தொடர்ந்து கொண்டிருந்தது, அதனால் மீண்டும் அபீசீனியாவிற்கு செல்லுமாறு சஹபாக்களை பெருமானார் கேட்டுக் கொண்டார்கள்,

இம்முறை 38 ஆண்களும் 11 பெண்களும் ஹிஜ்ரத் சென்றனர்,

நபித்துவத்தின் 7 ம் ஆண்டு சமூக பகிஷ்கரிப்பு,

அபீசீனியாவில் ஒரு நல்ல வாழ்க்கையை முஸ்லிம்கள் பெற்றதை கண்டு ஆத்திரம் அடைந்த أن أبا لهب பெருமானாரின் மொத்த குடும்பத்தையும் மூன்று ஆண்டுகளுக்கு சமூகப் பகிஷ்காரம் செய்வதாக மக்காவின் காபிர்கள் தீர்மாணித்த்து அதை ஒரு பலகையில் எழுதி கஃபாவிற்குள் தொங்க விட்டனர்,

ஹாஷிம் குடும்பம் அப்துல் முத்தலிபின் குடும்பம் கடும் சிரமப்பட்டது, அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து குழந்தைகளின் அழுகுரல்கள் கேட்கும் குறைஷிகளின் உள்ளம் இளகவில்லை,

கதீஜா ரலி தன்னுடையை சொத்துக்களை செலவழித்து அவர்களை காப்பாற்றினாரகள், ஆயினும் கஷ்டம் சொல்ல முடியாத்தாக இருந்தது, சில நேரங்களில் இலைகள் மட்டுமே உணவாக கிடைத்தது, ஆடு புழுக்கை போடுவது தாமும் மலம் கழித்ததாக நபித்தோழர்கள் கூறினார்கள்,

அல்லாஹ்வின் நாட்டப்படி குறைஷிகள் எழுதி வைத்த பலகையை கரையான் அரித்தது, இதைப் பற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் காபிர்களுக்கு தெரிவித்தார்கள்,

இது உண்மை இல்லை எனில் என் மகனை கொன்று போடுங்கள் என்றார் அபூதாலிப்கரையான் அந்தப் பலகையை அரித்திருர்ந்தது, அந்த தீர்மாணமும் கரைந்தது, முஸ்லிம்கள் மீண்டும் கஃபாவிற்கு அனுமதிக்கப்பட்டனர்,

أطلع الله رسوله على أمر صحيفتهم وأن الأرَضة قد أكلت ما كان فيها من جور وظلم وبقي ما كان فيها من ذكر الله، فذكر ذلك رسول الله صلى الله عليه وسلم لأبي طالب فذكر أبو طالب لإخوته وخرجوا إلى المسجد، فقال أبو طالب لكفار قريش: إن ابن أخي قد أخبرني - ولم يكن يكذبني - قط أن الله قد سلَّط على صحيفتكم الأرضة فلحست ما كان فيها من جور أو ظلم أو قطيعة رحم وبقي ما كان فيها من ذكر الله، فإن كان ابن أخي صادقاً نزعتم عن سوء رأيكم وإن كان كاذباً دفعته إليكم فقتلتموه أو استحييتموه. قالوا: قد أنصفتنا فأرسلوا إلى الصحيفة ففتحوها فإذا هي كما قال رسول الله صلى الله عليه وسلم فسقط في أيديهم ونكسوا على رؤوسهم، فقال أبو طالب: علام نحبس ونحصر وقد بان الأمر؟ ثم دخل هو وأصحابه بين أستار الكعبة والكعبة

அபூதாலிப் கதீஜா ரலி மரணம்

நபித்துவத்தின் 10 ம் ஆண்டில் அபூதாலிப் மரணமடைந்தார், அவரை தொடர்ந்து மூன்று நாட்களில் கதீஜா அம்மா மரமணடைந்தார்கள்,

தாயிப் பயணம்

பாதுகாப்பு அரணாக இருந்த இருவரும் ஒன்றன் பின் ஒருவராக மரணமடைந்த போது மக்காவில் பெருமானாரின் பாதுகாப்பு கேள்விக் குரியானது, அதுவரை பக்கத்தில் வரத் தயங்கிய எதிரிகள் இப்போது பெருமானாருக்கு நேரிடையாகவே தொலை தரத் தொடங்கினர், அவருடை முதுகில் ஒட்டகக் குடலை எடுத்து வந்து போட்டனர்,

எனவே மக்காவிலிலிருந்து 100 மைல் தொலைவிலிருக்கிற தாயிபில் இருக்கிற தம் உறவினர்களின் ஆதரவு கேட்டு பெறுமானார் சென்றார்கள், அங்கு ஆதரவு கிடைக்கவில்லை மாறாக கல்லடியும் அவமதிப்புமே கிடைத்தது

மிஃராஜ் பயணம்
தனது 50 வது வயதில் இரண்டு பாதுகாவலர்களை பறி கொடுத்தும் தாயிப் பயணத்தில் மோசமான அனுபவத்தை பெற்ற பெருமானாருக்கு உற்சாகத்தை அளிக்க மிஃராஜ் பயணத்திற்கு அழைத்துச் சென்றான்,
அதன் பிறகு மிகவும் உற்சாகமாக பெருமானார் குடும்பம் குடும்பங்களாக சந்தித்து தீனின் பிரச்சாரத்தை தொடங்கினார்கள்ஹஜஹுடை காலத்தில் ஹஜ்ஜுக்கு வருவோரை அவர்களுடைய கூடாங்களில் சந்தித்து பிரச்சாரம் செய்தார்கள்

மதீனாவின் முதல் முஸ்லிம்கள்.


இந்த வருடத்தில் (50) மதீனாவிலிருந்து வந்த ஆறுபேர்  அஸ் அது பின் ஜராராவின் தலைமையில் பெருமானார் (ஸல்) அவர்களை மினாவில் சந்தித்து இஸ்லாமை தழுவினர், அதுவே முதலாம் அகபா உடன்படிக்கை ஆகும். அக்பா என்றால் சைத்தானை கல்லெறிகிற கடைசி இடம் என்று பொருள், அதன் அருகில் இவ்வொப்பந்தம் நடந்த்தால் அகபா உடன்படிக்கை என்று பெயர்.

فبينما هو عند العقبة التي تضاف إليها الجمرة فيقال: جمرة العقبة، وهي على يسار القاصد منىً من مكة إذ لقي رهطاً من الأوس والخزرج كانوا يحجون من العرب، وهما قبيلتان مشهورتان عظيمتان من العرب في يثرب وقد لقبهم رسول الله بالأنصار لما هاجر إليهم ومنعوه ونصروه، وكان الذين لقيهم صلى الله عليه وسلم من الخزرج هم أسعد بن زرارة وعوف بن الحارث ويعرف بابن عفراء، وهما من بني النجار، ورافع بن مالك بن العجلان وعامر بن عبد حارثة وهما من بني زريق، وقطبة بن عامر بن حديدة من بني سلمة، وعقبة بن عامر بن نابىء من بني غنم، وجابر بن عبد الله بن رباب من بني عبيدة،

இரண்டாம் அகபா உடன்படிக்கை

அடுத்த வருடம் 12 பேர் வந்து இஸ்லாமை தழுவினர், அப்போது தமக்கு குர் ஆனை கற்றுக் கொடுக்க ஒரு வரை அனுப்புமாறு கேட்டனர், முஸ் அப் பின் உமைர் ரலி அவர்களை பெருமானார் அனுப்பி வைத்தார்கள்,

அதற்கடுத்த வருடம் பெருமானாரின் 52 வது வயதில் 70 பேரை அழைத்து வந்தார், முஸ் அபு ரலி அவர்கள், இது மூன்றாவது உடன்படிக்கை,

அப்போது பெருமானாரை மதீனாவாசிகள் மதீனாவிற்கு அழைத்தனர்,

ரஸூல் (ஸல்;) அவர்கள் சஹாபாக்களை முதலில் மதீனாவிற்கு செல்லு மாறு அனுப்பி வைத்தார்கள்தான் வெளியேற வில்லை,

மதீனாவில் முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கிடைத்திருப்பதை அறிந்த மக்காவின் காபிர்கள் இறுதியாக  பெருமானார் (ஸல்)) அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டினர், கொலை செய்தால் அந்தப் பழியை யார் சுமப்பது என்பது அவர்களுக்கு தயக்கமாக இருந்தது, தாருன்னத்வாவில் குறைஷிகளின் கூட்டத்தில் ஒரு முதியவரின் வேடத்தில் கலந்து கொண்ட சைத்தான் ஒரு குடும்பத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் ஒரு குழுவாக சென்று இரவு நேரத்த்தில் பெருமானாரை கொலை செய்து விட்டால் பழி அனைவரின் மீதும் விழும். தனியாக செய்தால் தான் கொலை , கூட்டாக செய்தால் அது கலவரம் என்ற திட்டத்தை குறைஷிகளுக்கு சொல்லிக் கொடுத்தான், குறைஷிகள் அவ்வாறே பெருமானாரை கொலை செய்ய முடிவு செய்தனர்.

அல்லாஹ் பெருமானாருக்கு உத்தரவிட்டான், அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுட்ன (ஸல்) தன்னுடைய 53 வயதில் ரபீஉல் அவ்வல் பிறை 12 திங்கட் கிழமை அன்று மதீனாவிற்கு வந்து சேர்ந்தார்கள்,

இஸ்லாமின் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது, பெருமானாரின் வாழ்விலும் தான்.

இந்த காலகட்டத்தில் நாம் நினைவில் வைக்க வேண்டியது,
1.   நபித்துவம்
2.   காபிர்களின் தொல்லைகளும் திட்டங்களும்
3.   அபீசீனிய ஹிஜ்ரத்
4.   அபூதாலிப் கதீஜா ரலி மரணம்
5.   தாயிப் பயணம்
6.   மிஃராஜ் பயணம்
7.   அக்பா உடன்படிக்கைகள்
8.   ஹிஜ்ரத்



2 comments:

  1. மாஷாஅல்லாஹ்! இரத்தினச்சுருக்கமாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete