வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, December 30, 2015

ஹிஜ்ரத்திலிருந்து ஹுதைபிய்யா வரை


إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا(1)
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்என்பது துளியும் கலப்படமில்லாத சத்தியம்.
காரணம் இதைச் சொல்லிக் கொடுத்தவர் முஹம்மது நபி (ஸல்)
அவர் சொன்னால் அது சத்தியமாகத்தான் இருக்கும் என்று மக்கா நகரமே சான்று வழங்கியிருக்கிறது,
இருந்தும் பிடிவாத குணத்தாலும் தற்பெருமையினாலும் மக்கா பெருமானாரை முழுமையாக ஏற்றுக் கொள்ள வில்லை,
சத்தியத்தை ஏற்றுக் கொண்டதற்காக முஸ்லிம்கள் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்கள், சத்தியத்தை எடுத்துச் சொன்னதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்களை கொல்லவும் மக்காவாசிகள் துணிந்தனர்.
இந்த கால கட்டத்தில் மக்காவிலிருந்து 450 கி மீ தொலைவிலிருக்கிற யத்ரிப் என்ற நகர மக்கள் மூன்று கட்டமாக இஸ்லாமை தழுவினர். அதுவே பின்னர் நபியின் பட்டணம் என்ற பொருளில் மதீனாவாக மாறியது. அம்மக்கள் பெருமானாரை தாங்கள் பாதுகாப்பதாக வாக்களிக்கவே மதீனா நோக்கி பெருமானார்  பயணமானார்கள்,
وكان خروجه صلى الله عليه وسلم من مكة يوم الخميس أول يوم من ربيع الأول وقدم المدينة لاثنتي عشرة خلت منه، وذلك يوم الاثنين الظهر لثلاث وخمسين سنة من مولده 28 يونيه (622 م) ورُوي أن النبي صلى الله عليه وسلم قال حين خروجه من مكة إلى المدينة: «اللهم إنك تعلم أنهم أخرجوني من أحب البلاد إليّ فأسكني أحب البلاد إليك». رواه الحاكم في «المستدرك»
பெருமானார் (ஸல்) அவர்கள் தன்னைக் கொலை செய்தவதற்கு திட்டமிட்ட மக்காவின் எதிரிகளிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்ததால் ஹிஜ்ரத் பயணத்தின் தொடக்கத்தில் மக்காவிற்கு  அருகிலேயே -  மூன்று மைல் தொலைவில் - இருந்த தவ்ர் குகையில் மூன்று நாட்கள் பதுங்கியிருந்த பின் அங்கிருந்து பயணமாகி மதீனாவிற்கு இரண்டு மைல் தொலைவிலிருந்த குபா பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள்,

ஏற்கென்வே ஹிஜ்ரத் செய்து வந்தவர்களும் குபா வில் தங்கியிருந்தனர்.

குபாவின் வரவேற்பு

قال عروة بن الزبير‏:‏ سمع المسلمون بالمدينة بمخرج رسول الله صلى الله عليه وسلم من مكة، فكانوا يغدون كل غداة إلى الحَرَّة، فينتظرونه حتى يردهم حر الظهيرة، فانقلبوا يومًا بعد ما أطالوا انتظارهم، فلما أووا إلى بيوتهم أَوْفي رجل من يهود على أُطُم من آطامهم لأمر ينظر إليه، فبصر برسول الله صلى الله عليه وسلم وأصحابه مُبَيَّضِين يزول بهم السراب، فلم يملك اليهودى أن قال بأعلى صوته‏:‏ يا معاشر العرب، هذا جدكم الذي تنتظرون، فثار المسلمون إلى السلاح‏.‏ وتلقوا رسول الله صلى الله عليه وسلم بظهر الحرة‏.‏


குபாவில் உலகின் முதல் பள்ளிவாசல்

ونزل قُباء على كلثوم بن الهدم شيخ بني عمرو بن عوف وهم بطن من الأوس، وقباء قرية على ميلين من جنوب المدينة وهي خصبة بها حدائق من أعناب ونخيل وتين ورمان وأقام بها رسول الله يوم الاثنين والثلاثاء والأربعاء والخميس وأسس مسجد قباء وهو الذي أسس على التقوى من أول يوم، 

ஹிஜ்ரத்தின் போது பெருமானாரின் படுக்கையில் படுத்திருந்த அலி  ரலி பின்னர் மற்றவ எளியவர்கள் பலருடன் குபாவிற்கு வந்து சேர்ந்தார்கள்.

மதீனா பயணமுன் ஜும் தொழுகையும்

திங்கட் கிழமை குபாவை வந்தடைந்த பெருமானார் நான்கு நாட்கள் குபாவில் தங்கியிருந்தபின் வெள்ளிக்கிழமை மதீனா பிரவேசம் செய்தார்கள், வழியில் முதல் ஜும் கடமையாக்கப்பட்டது,

ثم ركب النبي صلى الله عليه وسلم يوم الجمعة يريد المدينة وأدركته الجمعة في بني سالم بن عوف فصلاها في المسجد الذي ببطن الوادي بمن معه من المسلمين وكانوا مئة وهي أول جمعة صلاها بالمدينة وأول خطبة خطبها في الإسلام

முதல் ஜும்ஆ உரை யின் ஒரே அம்சம் தக்வா

خطبة رسول الله صلى الله عليه وسلم ي أول جمعة صلاها بالمدينة
هذا نص الخطبة التي خطبها رسول الله صلى الله عليه وسلم في أول جمعة صلاها بالمدينة في بني سالم بن عوف:

من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالاً بعيداً،
وأوصيكم بتقوى الله فإنه خير ما أوصى به المسلم المسلم،
فاحذروا الله من نفسه ولا أفضل من ذلك نصيحة ولا أفضل من ذلك ذكراً،
ومن يصلح الذي بينه وبين الله من أمره في السر والعلانية لا ينوي بذلك إلا وجه الله يكن له ذكراً في عاجل أمره وذخراً فيما بعد الموت حين يفتقر المرء إلى ما قدم، وما كان من سوى ذلك يود لو أن بينه وبينه أمداً بعيداً ويحذركم الله نفسه والله رؤوف بالعباد،
فاتقوا الله في عاجل أمركم وآجله، في السر والعلانية، فإنه من يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجراً، ومن يتق الله فقد فاز فوزاً عظيماً،
وإن تقوى الله يوقي مقته ويوقي سخطه، وإن تقوى الله يبيض الوجوه ويرضي الرب ويرفع الدرجة،
فأكثروا ذكر الله واعملوا لما بعد اليوم فإنه من يصلح ما بينه وبين الله يكفه الله ما بينه وبين الناس ذلك بأن الله يقضي على الناس ولا يقضون عليه،

இந்த உரையில் மக்கா வாசிகளின் அகம்பாவம் பற்றியோ அவர்கள் கொடுத்த தொல்லைகள் பற்றியோ , அவர்களை பழி வாங்க இருப்பதாகவோ பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நபித்துவத்துவத்தின் நோக்கம் எதுவோ அதுவே பெருமானாரின் முதல் ஜும்ஆ உரையின் தலைப்பாக இருந்தது.
மதீனா பிரவேசம்

ثم ركب راحلته (القصوى) يريد المدينة وأرخى زمامها فكان لا يمر بدار من دور الأنصار إلا قالوا: هلم يا رسول الله إلى العدد والعدة والمنعة ويعترضون ناقته فيقول: خلوا سبيلها فإنها مأمورة حتى بركت عند موضع مسجده اليوم وكان مربداً للتمر لغلامين يتيمين وهما: سهل وسهيل ابنا عمرو من بني النجار فلما بركت لم ينزل عنها ثم وثبت فسارت غير بعيد ورسول الله صلى الله عليه وسلم واضع لها زمامها لا يثنيها به فالتفتت خلفها ثم رجعت إلى مبركها الأول فبركت فيه ووضعت جرانها (مقدم عنقها) فنزل عنها رسول الله صلى الله عليه وسلم واحتمل أبو أيوب الأنصاري رحل ناقته إلى بيته

அபூபக்கர் ரலி அவர்களின் 10 தீனாரில் மஸ்ஜிதுன்னபவி

فأقام عنده حتى بنى حجره ومسجده ودعا رسول الله صلى الله عليه وسلم صاحبي المربد -
 وكانا غلامين - فساومهما بالمربد ليتخذه مسجداً فقالا: بل نهبه لك يا رسول الله، فأبى أن يقبل منهما هبة حتى ابتاعه منهما بعشرة دنانير ذهباً أدّاها من مال أبي بكر ثم بناه مسجداً وطفق رسول الله صلى الله عليه وسلم ينقل معهم اللبن (الطوب النيىء) في بنيانه

நபித்துவம் பெற்ற 40 முதல் ஹிஜ்ரத செய்த 53 ஆண்டு வரையுண்டான காலம் பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாற்றில் வேதனைக் கால கட்டம் என்றால்
53 முதல் 59 வரையான ஆறு வருட காலங்கள் பெரும் சோதனைக் களமாக இருந்தது.  
ஹிஜ்ரத்தில் சத்திய சோதனை தொடங்கியது என்றால் ஹுதைபிய்யாவில் அதன் வெற்றி முகம் வெளிப்பட்டது.
பெருமானார் (ஸல்) அவர்கள் தனது சத்திய சோதனையின் கால கட்டத்தை மஸ்ஜிதுன் னபவியின் கட்டிடப்பணியில் தொடங்கினார்கள்,
மஸ்ஜிதுன்னபவியின் அஸ்திவாரம் இறுதித்தூதை நிலை நாட்டும் அஸ்திவாரமாகவும் இருந்தது.
அதற்குப் பிந்த்தைய இஸ்லாமிய வரலாறு மொத்தமும் பேரீத்த மரக் கிளைகளால் ஆன அந்தப் புனிதப் பள்ளியின் கூரையின் தாளாகத்தான் விரிந்தது.
மிகச் சாமாணியமான அந்தக் கட்டிடத்திலிருந்து ஒரு மகத்தான சாம்ராஜ்யம் உருவான வரலாறு எத்தனை ஆச்சரியமானது ?
இறுதி நபித்துவத்தைன் பட்டும் போன்ற மென்மையான கரங்கள் கட்டி எழுப்பியது சுவர்களை அல்ல, ஒரு பெரும் சமூகத்தைஉலகின் கடைசி மூச்சு வரை சத்தியத்தை காத்து நிற்கிற முஸ்லிம் சமூகத்தை
அபூபக்கர் ரலி அவர்களின் அந்த 10 தீனார்களில் அல்லாஹ் வைத்த பரக்கத்து தான் எத்தகையது?
பள்ளிவாசல்கள் விசயத்தில் முஸ்லிம்களின் பொறுப்புணர்வு அலாதியானது. அவை வெறும் கட்டிடங்கள் அல்ல, உம்மத்தின் வெற்றி வாழ்க்கைக்கான அடித்தளங்கள். பள்ளிவாசல்களின் உத்வேகமும் உணர்வெழுச்சியும் சமூகத்தில் சத்தியத்தின் எழுச்சியை நிலை நிறுத்தும். சமுதாயம் மேம்படும். அங்கே ஏற்படுகிற சச்சரவுகளும் சண்டைகளும் சமூகத்தை சீரழித்துவிடும்.
சகோதரத்துவத்தின் ராஜபாட்டை
மஸ்ஜிதுன்னபவி கட்டமைக்கப்பட்ட பின் மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்அகதிகளுக்கு மதீனாவின் அன்சாரிகளோடு சகோதரத்துவ பந்தத்தை பெருமானார் (ஸல்) ஏற்படுத்தினார்கள்.
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!
இப்படி ஒரு இறுக்கமான உறவை உலக வரலாறு சந்தித்ததில்லை.
குப்பெருமையும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த அரபுச் சமூகத்தில் அதி அற்புதமான சகோதரத்துவத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள்.
அகதிகளுக்கு என்று தனி முகாம் அமைக்கவில்லை. அகதிகளை அன்சாரிகளின் வீட்டில் ஒரு அங்கமாக ஆக்கினார்கள்.
இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் அன்சாரியின் சொத்தில் முஹாஜிர் வாரிசாவார் என்னும் அளவில் அந்தப் பிணைப்பு அழுத்தமாக கட்டமைக்கப்பட்டது.
وبعد قدومه صلى الله عليه وسلم إلى المدينة بخمسة أشهر آخى بين المهاجرين والأنصار لتذهب عنهم وحشة الغربة وليؤنسهم من مفارقة الأهل والعشيرة ويشد بعضهم أزر بعض، وقد آخى بينهم على الحق والمواساة ويتوارثون بعد الممات دون ذوي الأرحام وكانوا تسعين رجلاً خمسة وأربعين من المهاجرين وخمسة وأربعين من الأنصار، ويقال: كانوا مائة وخمسين من المهاجرين وخمسين من الأنصار وكان ذلك قبل بدر فلما كانت وقعة بدر وأنزل الله تعالى: {وَأُوْلُواْ الارْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ فِي كِتَبِ اللَّهِ إِنَّ اللَّهَ بِكُلّ شَىْء عَلِيمٌ} (الأنفال: 74)، نسخت هذه الآية ما كان قبلها وانقطعت المؤاخاة في الميراث

பெருமானார் (ஸல்) அவர்களின் வருகையால் தலை முறை தலைமுறையாக சண்டையிட்டுக் கொண்டிருந்த சகோதர குடும்பங்களான அவ்ஸ் கஜ்ரஜ் களிடையே பகை அழிந்தது, அன்சார் என்ற ஒற்றை வார்த்தையில் பெருமானார் (ஸல்) அவர்களை இறுகப்பிணைத்தார்கள்,   
யூதர்களுடன் உடன்படிக்கை
மதீனாவின் சுற்றுப் பகுதியில் பனு கைன்காஃ , பனுன்னுழைர், பனூ குறைழா என மூன்று யூதக் குழுக்கள் வசித்தனர், அவர்கள் மதீனாவில் தமது அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக அவ்ஸ் களிடையேயும கஜ்ரஜ்களிடையேயும் சண்டைகளை மூட்டி விட்டுக் அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர்,
பெருமானார் (ஸல்) அவர்கள் இம்மூன்று குழுக்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதோடு பிரச்சனை ஏதும் ஏற்படும் எனில் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் ரஸூல் முஹம்மது (ஸல்) அவர்களையும் முன் வைத்து அதை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்தார்கள்
மதீனாவின் மக்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கொடுத்த மரியாதை யூதர்களை இதற்கு உடன்பட நிர்பந்தித்தது, அத்தோடு நிர்வாகத் தலைவராக நபி (ஸல்) அவர்களை அங்கீகரிக்க வேண்டிய நிர்பந்த்தத்தை யூதர்களுக்கு அது ஏற்படுத்தியது,,
மகத்தான மாற்றங்களுக்கு களம் அமைத்த ஹிஜ்ரி 2
அடிப்படையான வேலைகளுக்கு ஹ்ஜிரி முதல் ஆண்டு ஒரு நல்ல சமூக கட்டமைப்புக்குத் தேவையானதாக இருந்தது,
ஹிஜிரீ இரண்டாம் ஆண்டு இஸ்லாமிய சமய மற்றும் அரசியல் பணிகளின் களமாக இருந்தது. 


கிப்லா மாற்றம்,
மற்ற வேதக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்க ஏதுவாகும் என்ற வகையில் ஆரம்ப 17 மாதங்கள் முஸ்லிம்கள் பைத்துல் முகத்தஸை கிப்லாவாக வைத்திருந்தனர், ஹிஜ்ரி 2 ல் அல்லாஹ் கஃபாவை நோக்கி திரும்பிக் கொள்ள அனுமதித்தான்,
{قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَآء فَلَنُوَلّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا} (البقرة: 144)، فوجه إلى الكعبة إلى الميزاب،
பாங்கு
அப்துல்லாஹ் பின் ஜைது (ரலி) என்ற சஹாபியின் கனவிலும் உமர் ரலி அவர்களின் கனவிலும் பாங்கின் வாசகங்கள் காட்டப்பட அதையே பெருமானார் (ஸல்) அவர்கள் பாங்காக ஏற்றார்கள், முதன் முறையாக பிலால் ரலி பாங்கு சொன்னார்கள்,
ரமலான் நோன்பு பெருநாள் தொழுகைகள் சதகத்துல் பித்ர்
கஃபா கிப்லா வாக ஆக்கப்பட்ட பிறகு வந்த ஷஃபான் மாததில் ரமலானுடைய நோன்பு கடமையாக்கப்பட்டது,
ஜகாத்
الزكاة ركن من أركان الإسلام الخمس، وقد فرضت في السنة الثانية من الهجرة،

யுத்த அனுமதி

மக்காவின் 13 ஆண்டுகால வாழ்விலும் மதீனாவில் முதலாண்டிலும் எதிரிகளை திருப்பி தாக்குதவற்கான அனுமதி கிடைக்கவில்லை, பொறுமை பொறுமை என 70 வசனங்களில் அறிவுறுத்தப்பட்டார்கள்

وقال جماعة من الصحابة منهم عبد الرحمن بن عوف والمقداد بن الأسود وقدامة بن مظعون - وهو أخو عثمان بن مظعون - وسعد بن أبي وقاص: يا رسول الله كنا في عز ونحن مشركون فلما آمنا صرنا أذلة فائذن لنا في قتال هؤلاء، فقال: «كفوا أيديكم عنهم فإني لم أومر بقتالهم».

இந் நிலையில் ஹிஜ்ரி 2 சபர் மாதம் 12 வது இரவுல் முஸ்லிம்களுக்கு திருப்பு தாக்கும் யுத்தத்திற்கான அனுமதியை அல்லாஹ் வழங்கினான்.
யுத்ததிற்கான அனுமதியை வழங்கிய வசனம்

وأول ما أنزل في أمر القتال قوله تعالى في سورة الحج: {أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُواْ وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ الَّذِينَ أُخْرِجُواْ مِن دِيَارِهِم بِغَيْرِ حَقّ إِلاَّ أَن يَقُولُواْ رَبُّنَا اللَّهُ وَلَوْلاَ دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّهُدّمَتْ صَوامِعُ وَبِيَعٌ وَصَلَواتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسمُ اللَّهِ كَثِيراً وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ الَّذِينَ إِنْ مَّكَّنَّهُمْ فِى الأرْضِ أَقَامُواْ الصَّلَوةَ وَآتَوُاْ الزَّكَوةَ وَأَمَرُواْ بِالْمَعْرُوفِ وَنَهَوْاْ عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَقِبَةُ الاْمُورِ} (الحج: 39 - 41).
هذا أول ما أنزل في الإذن بالقتال بعدما نهى عنه في نيف وسبعين آية.

தீய சக்திகளை அழிக்கும் நோக்கிலேயே யுதத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதுஇல்லை எனில் யூத கோயில்கள் சர்ச்சுகள் மடாலயங்கள் பள்ளிவாசல்கள் சீரழிக்கப்பட்டு விடும் என்ற வாசகத்தை கவனியுங்கள். பள்ளிவாசகல்களைப் பாதுகாப்பதற்கு மட்டுமே என்று சொல்லப்படவில்லை
நபி (ஸல்) அவர்கள் யுத்தம் செய்தார்கள், காரணம் தமது கொள்கையை நடைமுறைகளை பாதுகாத்துக் கொள்ளவும் நிலை நாட்டவும் யுத்தம் தேவைப்பட்டது, வலிந்து யுத்தம் செய்யவில்லை, மக்களை கொல்லவில்லைசமாதானத்திற்கான வழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது,

யுத்ததிற்கு அனுமதி கிடைத்த  பிறகு இராணுவ பாதுகாப்பின் ஒரு அங்கமாக நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்களின் சிறு சிறு குழுக்களை அனுப்பி எதிரிகளை வேவுபார்க்கும் பணிக்கும் அனுப்பினார்கள்

பத்ரு யுத்தம்

அதே ஆண்டு ரமலான் 17 ம் நாள் முஸ்லிம்களுக்கும் மக்காவின் காபிர்களுக்கும் மதீனாவிலிருந்து 80 மைல் தொலைவிலிருக்கிற பத்ரு மைத்தானத்தில் சண்டை நடந்தது முஸ்லிம்கள் மாபெரும் வெற்றியை பெற்றார்கள், இதில் பங்கேற்ற மக்காவின் தலைவர்கள் அத்தனை பேரும் இறந்து போனார்கள், 70 பேர் கொல்லப்பட்டார்கள், 74 பேர் முஸ்லிம்களிடம் கைதிகளாயினர். முஸ்லிம்களின் தரப்பில் 14 பேர் ஷஹீதானார்கள்,

இந்த யுத்தம் எதிர்பாராமல் நடந்தது என்றாலும் முஸ்லிம்களுக்கு கிடைத்த வெற்றி இஸ்லாத்தை ப் பற்றி  அக்கம் பக்கத்திலிருந்த உலகம் பேசுமாறு செய்தது.

ஹிஜ்ரி 3

உஹது யுத்தம்
பத்ரு யுத்ததில் தோற்றுப் போன மக்காவின் காபிர்கள் அதற்கு பழி தீர்ப்பதற்கான ஹிஜ்ரி 3 மூன்று ஷவ்வால் மாதத்தில் மதீனாவை நோக்கி மூவாயிரம் பேர்களுடன் வந்தனர், மதீனாவிற்கு மிக அருகில் உஹது மலையின் அடிவாரத்திற்கு வந்து விட்ட அவர்களோடு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 700 பேர்களோடு போராடினார்கள், ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைத்தது, ஆயினும் உஹமது மலைச் சிகரத்தை பாதுகாக்குமாறு பெருமானார் (ஸல்) அவர்க்ள் இட்ட கட்டளையை மறு உத்தரவு வருவதற்குள்ளாக கடமை முடிந்து விட்டது என்று கருதி சிலர் உதாசீனம் செய்த காரணத்தால் போரின் போக்கு திசை மாறியது, தோற்று ஓடிக்கொண்டிருந்த மக்கா காபிர்களின் குதிரை அணி உஹது குன்றின் சிகரத்தின் மீதேறி வந்து மின்னல் வேக தாக்குதல் தொடுத்ததில் முஸ்லிம்கள் தரப்புக்கு பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது, 70 பேர் ஷஹீதானார்கள், முஸ்லிம்கள் தோல்வியுற்றனர், ஆயினும் களத்தை முற்றிலுமாக இழந்து விடவில்லை, தம்முடைய ஷஹீதுகளை அடக்கம் செய்த பின்னரே மதீனாவுக்குத் திரும்பினர்,

மக்காவின் காபிர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே யான யுத்தம் சமநிலையை அடைந்தது, ஒரு வெற்றி ஒரு தோல்வி.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உத்தரவை அணுவளவில் மீறினாலும் தோல்வி ஏற்படும் என்ற அழுத்தமான பாடத்தை உஹது யுத்தம் முஸ்லிம் உம்மத்திற்கு வழங்கியது.

ஹி மஜ்ரி 4

யூதர்கள் வெளியேற்றம்

பெருமானார் (ஸல்) அவர்களுடன் உடன்பாடு செய்திருந்த யூதர்களில் பனூ கைன்காஃகள் ஹிஜ்ரீ 2 ல் மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மதீனாவைச் சார்ந்த ஒரு பெண் மணி வியாபாரத்திற்காக பனூகைன்காஃகளின் சந்தகைக்கு சென்ற போது ஒரு யூதன் அவருடைய கீழாடையை கிழித்து மான பங்கம் செய்தான். இதைப் பார்த்து விட்ட ஒரு முஸ்லிம் அவனை பாய்ந்து கொன்றார். யூதர்கள் அவரைக் கொன்றனர். ஒப்பந்தத்தை மீறிய குற்றத்திற்காக அவர்க: மதீனாவிலிருந்து வெளியேறினர். இது ஒரு சிறிய அளாவிலான வெளியேற்றமாகவே இருந்தது.

ஹிஜ்ரி 4 நான்கில் ஒரு முஸ்லிம் தெரியாமல் செய்து விட்ட ஒரு  கொலைக் குற்றத்திற்காக நஷ்ட ஈடு பற்றி பேச வந்த  பெருமானார் (ஸல்) அவர்களை மரியாதையாக வரவேற்ற பனூன் னுழைர்கள் பெருமானாரை விருந்துக்கு அழைத்து ஒரு சுவற்றின் கீழ் உட்கார வைத்தனர். சுவற்றீற்கு மேல் இருந்து பெருமானாரின் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்து விட ரகசிய திட்டம் தீட்டினர். இதை ஜிப்ரயீல் (அலை) மூலம் அறிந்து கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் அன பனூநுழைர்களை மதீனாவை விட்டு வெளிகிருந்து வெளியேறி பின்னர் பனூ நுழைர்களை முற்றுகையிட்டு மதீனாவிலிருந்து தமது உடமைகளை முடிந்த வரை எடுத்துக் கொண்டு வெளியேறு மாறு பனூநுழைர்களுக்கு உத்தரவிட்டார்கள். வேறு மார்க்கம் இல்லாத யூதர்கள் மதீனாவிலிருந்து வெளியேறி யூதர்களின் வலிமையான பகுதியான கைபரில் குடியேறினர்

மது ஹராம்

இந்த பனூ நுழைர் முற்றுகையின் போது மது ஹராமாக்கப்பட்டது. இன்று வரை இஸ்லாத்தின் வலிமையான சமூக கட்டுப்பாட்டுக்கு சான்றாக அது திகழ்கிறது.

மது முற்றிலுமாக தடை செய்யப்படுவதற்கு முன் பல கட்டங்களாக அதன் பயன்பாடு தடுக்கப்பட்டது.

اجتمع قوم من الأنصار وفيهم سعد بن أبي وقاص فلما سكروا افتخروا وتناشدوا الأشعار حتى أنشد سعد شعراً فيه هجاء للأنصار فضربه أنصاري بلحي بعير فشجه شجّة موضحة فشكا إلى رسول الله صلى الله عليه وسلم فقال عمر: اللهم بيّن لنا في الخمر بياناً شافياً فإنها تذهب بالعقل والمال فنزل: {يَأَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ} إلى قوله: {فَهَلْ أَنْتُمْ مُّنتَهُونَ} (المائدة: 90، 91)،

وقد حرّمت الخمر في السنة الرابعة من الهجرة أثناء غزوة بني النضير.



அகழ் யுத்தம்

கைபரில் இருந்த யூதர்கள் மக்காவின் காபிர்களையும் ஹிஜாஸிலிருந்த மற்ற எதிரிகளையும் ஒன்று சேர்த்து பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு பெரும் படையாக மதீனாவிற்கு திரட்டிக் கொண்டு வந்தனர். திருக்குர் ஆன் இதை அஹ்ஸாப் கூட்டணிப்படை என்று கூறுகிறது.
3000 ஆயிரம் பேர் வீரர்களை மட்டுமே கொண்ட மதீனாவை பாதுகாப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் அகழி தோண்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு மதீனாவிற்குள்ளேயே இருந்து கொண்டார்கள்,

முற்றுகையின் கடைசியில் பரஸ்பரம் நம்பிக்கையற்ற கூட்டணிப்படையினர் அல்லாஹ் உண்டு பண்ணிய கடும் குளிர் காற்றை எதிர் கொள்ளமுடியாமல்  சிதறி ஓடினார்,

பெருமான்ரை எதிர்த்து அரபுலகம் திரண்டு நடத்திய அந்த யுத்தம் தோல்வியில் முடிந்த போது முஸ்லிம்களின் இராணுவ பலம் நிலை பெற்றது,

نغززوا ولا يغزوننا

இனி நம்மை எதிர்த்து யாரும் வரமாட்டார்கள், நாம் தாம் அவர்களை எதிர் கொண்டு செல்வோம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,

மூன்றாவது யூதக்குழுவின் முடிவு

அகழ் யுத்தத்தின் போது பெருமானாரி (ஸல்) அவர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த பனூகுறைழா யூதர்கள் வெளியிலிருந்த எதிர்ப் படைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர் . அது முஸ்லிம்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. வெளியில் எதிரிகள் காத்திருக்க உள்ளுக்குள் யூதர்கள் யுத்தம் தொடங்குவார்கள் எனில் அழிவு நிச்சய்ம் என விழு பிதுங்கி நின்றனர். அல்லாஹ் தன்னுடைய தரப்பிலிருந்து முஸ்லிம்களின் வெற்றியை ஊர்ஜிதம் செய்தான். இதற்குப் பிறகு பனூகுறைழா வினர் சிறை பிடிக்கப்பட்டன, யுத்தம் செய்யும் வலிமை கொண்டோர் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய வரலாற்றில் எதிரிகள் அதிகப்ப்டச் உயிரிழப்பிற்கு ஆளான தருணம் இது.

இவ்வாறூ மதீனாவிற்குள்ளிருந்த மூன்று யூதக்குழுவினரும் தமது முடிவை தாமே தேடிக்கொண்டனர்.

ஹிஜ்ரி 5

அதற்குப்பிறகு அக்கம் பக்கத்தில் நடைபெற்ற முரைஷிஃ போன்ற யுத்தங்களில் பிற அரபுக் குழுக்களை பெருமானார் (ஸல்) வென்றெடுத்தார்கள், அந்தப் பகுதியில் சமாதான உடன்படிக்கைகளை செய்து கொண்டு திரும்பினார்கள். தோற்றுப் போனவர்களையும் மரியாதையாகவே நடத்தினார்கள்,

பர்தா

இதே ஆண்டில் முஸ்லிம் பெண்கள் தமது ஆடைகளுக்கு மேல் ஒரு போர்வை அணிந்து தம்மை மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் அமுல் படுத்தப்பட்டது.

14 நூற்றாண்டுகளை கடந்து இன்றும் முஸ்லிம் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றாக பர்தாக உறுதியுடன் திகழ்கிறது.

இந்த ஐந்து ஆண்டுகளில் யுத்தங்களின் வழியாக அரசியலில் ஒரு  தனி அந்தஸ்த்தை முஸ்லிம் சமூகம் பெற்றது, அதே நேரத்தில் பாங்கு நோன்பு ஜகாத் மதுவிலக்கு, பர்தா போன்ற இஸ்லாமிய சமயச் சட்டங்கள் வழியாக ஷரீஅத் சிறப்பாக நடை முறைப்படுத்தப்பட்டது, இஸ்லாமிய சட்ட அமைப்பும் கலாச்சாரமும் தனித்துவத்தோடு எழுச்சி பெற்று நின்றது.  

ஹிஜ்ரி 6

இந்த ஆண்டு கஃபாவை தவாபு செய்வதாக பெருமானார் (ஸல் ) அவர்கள் கணவு கண்டார்கள், நபிமார்களின் கனவு வஹியின் ஒரு அங்கமாக இருப்பதால் மக்காவிற்கு சென்று உம்ரா செய்ய நினைத்தார்கள். மக்காவின் காபிர்களோடு சரியான நல்லிணக்கம் உருவாத நிலையில் அது சண்டைக்கு வழி வகுக்கும் என சிலர் கருதினர். எனினும் நபி (ஸ்ல) அவர்கள் 1400 நபித்தோழர்களோடு மக்காவிற்கு புறப்பட்டார்கள்

கஃபாவை கண்ணியப்படுத்துவதற்காக வருகிற எவரையும் தடுக்க கூடாது என்ற விதியை மீறி மக்காவின் காபிர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை காலித் பின் வலீதின் குதிரைப்படையைக் கொண்டு தடுத்தார்கள்.

சண்டையை தவிர்த்து விட்டு மாற்று வழியில் மக்காவிற்குள் செல்ல பெருமானார் (ஸல்) நினைத்த போது மக்காவிலிருந்து ஜித்தாவிற்கு செல்லும் பாதையில்  ஹுதைபிய்யா எனும் முற்றத்தில் பெருமானாரின் கஸ்வா ஒட்டகை படுத்துக் கொண்டது, இது அல்லாஹ்வின் திட்டம் என்று தீர்மாணித்த பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவாசிகள் எத்தகை தீர்மாணத்திற்கு அழைத்தாலும் அதை நான் ஏற்பேன் என்றார்கள்,

நிறைவாக மக்காவின் காபிர்களுக்கும் பெருமானாரி (ஸல்) அவர்களுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது.

வரலாற்றுப் புகழ் பெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கை முஸ்லிம்கள் மீது அநீதமான நிபந்தனைகளை விதித்தது.

1.   இஹ்ராம் அணிந்த நிலையிலும் கூட முஸ்லிம்கள் இந்த ஆண்டு திரும்பச் சென்று விட வேண்டும், அடுத்த ஆண்டு துல் கஃதாவில் முஸ்லிம்களுக்காக மூன்று நாட்கள் மக்கா காலி செய்து தரப்படும்.

2.   மக்காவிலிருந்து யாரேனும் மதீனாவிற்கு வந்தால் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.
3.   இனி 10 ஆண்டுகளுக்கு பரஸ்பரம் எதிர்ப்பு நடவடிக்கைகளோ சண்டைகளோ கூடாது.

போதுமான செல்வாக்கும் எதிர்களை வெற்றி பெறக் கூடிய திரனும் கொண்டிருந்த நிலையில் சண்டையை தவிர்க்கும் எந்த உடன்படிக்கைகும் தயாராக இருந்த பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவின் காபிர்களின் இந்த உடன்படிக்கைக்கு உடன்பட்டார்கள்,
ஹ்ந்த உடன்படிக்கையை மகத்தான் வெற்றி என்று கூறினான்/

ஹுதைபிய்யாவிலிருந்து மதீனாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த பாதையில் தான் அல்பத்ஹ் அத்தியாயம் முழுவதுமாக அருளப்பட்டது.

அப்படியே நடந்தது, அதுவரை முஸ்லிமாகி இருந்த மக்களை விட அடுத்த இரண்டு ஆண்டுகளில் பன்மடங்கான மக்கள் இஸ்லாமைத் தழுவினர்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல என்றும் வாழ்கிற முஸ்லிம் சமுதாயத்திற்கு இதில் அழுத்தமான பாடம் இருக்கிறது,

சண்டையில் கிடைக்கிற வெற்றீகள் அல்ல, சமாதானமாகப் போகிற வழிகளோ காரியம் சாதிக்க ஏற்றது

மிக ஆழமாகவும் எதார்த்தமாகவும் நாம் யோசிக்க வேண்டிய விசயம் இது,

மக்கா காபிர்கள் பெருமானாரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த போது  பெருமானார் ஹிஜ்ரத் செய்தார்கள், அந்தப் பெருமானாரை தேடி வந்து சமாதானம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையை ஹுதைபிய்யா ஏற்படுத்தியது.

மக்காவிலிருந்து வெளியேறிய பெருமானாருக்கு ஹிஜ்ரத் ஒரு தொடக்கச் சோதனையாக இருந்தது என்றால் ஆறு வருடம் கழித்து முதல் முறையாக மக்காவிற்கு திரும்பி வந்த அவர்களுக்கு ஹுதைபிய்யா அந்தச் சோதனையின் நிறைவாக இருந்தது..


(அரபு மேற்கோள்கள் “ முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் “  விலிருந்து)

No comments:

Post a Comment