வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 21, 2016

தஃவாவின் பாதை

முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒரு கடமை
மார்க்கத்தை பிறருக்கு எடுத்துச் சொல்வது..
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنْ الْمُسْلِمِينَ(33
பிரச்சாரம் என்றவுடன் மேடை போட்டு மைக் வைத்து பயான் செய்வது என்று அர்த்தமல்ல.
நன்மை தீமையை எடுத்துச் சொல்லும் வாய்ப்புக் கிடைக்கிற எந்த இடத்திலும் தயங்காமலும் கூச்சப்படாலும் அதை எடுத்துச் சொல்லிவிடுவதாகும்.
மதீனாவில் தனக்குப் பணியாளனாக இருந்த ஒரு யூதச் சிறுவனை நோய் விசாரிக்கச் சென்ற இடத்தில் நீ முஸ்லிமாகி விடு என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
 عن أنس بن مالك رضي الله عنه : ( أَنَّ غُلَامًا مِنَ اليَهُودِ كَانَ يَخدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ فَمَرِضَ ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ يَعُودُهُ ، فَقَعَدَ عِندَ رَأسِهِ ، فَقَالَ : أََسلِم . فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِندَ رَأسِهِ ، فَقَالَ لَه : أَطِع أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ . فَأَسلَمَ ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ : الحَمدُ لِلَّهِ الذِي أَنقَذَهُ مِنَ النَّارِ البخاري ( 1356.

மூஸா அலை அவர்கள் போட்டி மைதானத்தில் வைத்து மந்திரவாதிகளுக்கு அவர்களுடைய தவறை சுட்டிக் காட்டினார்கள்

قَالَ لَهُمْ مُوسَى وَيْلَكُمْ لَا تَفْتَرُوا عَلَى اللَّهِ كَذِبًا فَيُسْحِتَكُمْ بِعَذَابٍ وَقَدْ خَابَ مَنْ افْتَرَى(61)

யூசுப் அலை அவர்கள் சிறையில் கனவுக்கு விளக்கம் கேட்டு வந்தவர்களிடம் நல்லது கெட்டதை எடுத்துச் சொன்னார்கள்.

يَاصَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمْ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ(39)مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنْ الْحُكْمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ(40)

முஸ்லிம்களின் வாழ்க்கையை பார்க்குமாறு ஏற்பாடு செய்வது பெருமானாரின் ஒரு உத்தியாக இருந்தது.
சுமாமத் பின் அஸால்  ثمامة بن أثال
யமாமாவின் குறுநில மன்னர்.  அகழ் யுத்ததிற்கு பிந்தைய ஒரு பொழுதில் ஹிஜ்ரீ 6 முஹர்ரமில்   சுமாமாவை பாலைவனத்தில் ஒரு இடத்தில் போருக்குச் சென்ற முஸ்லில்கள் அவர் மன்னர் என்று தெரியாமல் கைது செய்து கொண்டு வந்து மஸ்ஜிதுன்னபவியில் ஒரு தூணில் கட்டிப்போட்டார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களோ அவரிடம் மரியாதையாக நடந்து முஸ்லிம்களின் பண்புகளை பார்க்க ஏற்பாடு செய்தார்கள்.

ثمامة بن أثال الصحابي الجليل، ملك نصراني قبل الإسلام يحكم اليمامةما بين عامي: (623 – 628 ميلادية)، وأحد اشراف قبيلة بني حنيفةوسيد من سادات العرب

كانت سرية محمد بن مسلمة – رضي الله عنه – هي أول عمل عسكري بعد غزوة الأحزاب وقريظة، وقد تحركت هذه السرية [ في المحرم من العام السادس للهجرة] في مهمة عسكرية ضد بني القرطاء في أرض نجد, وفي طريق عودة السرية؛ تم أسر ثمامة بن أثال الحنفي سيد بني حنيفة، والصحابة لا يعرفونه، فقدموا به المدينة وربطوه بسارية من سواري المسجد، فلما خرج إليه رسول الله – صلى الله عليه وسلم – قال : "أَتَدْرُونَ مَنْ أَخَذْتُمْ ؟ هَذَا ثُمَامَةُ بْنُ أُثَالٍ الْحَنَفِيّ ، أُحْسِنُوا إسَارَهُ " [ ابن هشام 2/638]

ورجع رسول الله -صلى الله عليه وسلم - إلى أهله، فقال لهم : "اجْمَعُوا مَا كَانَ عِنْدَكُمْ مِنْ طَعَامٍ فَابْعَثُوا بِهِ إلَيْهِ " .. وقد أمر – صلوات الله وسلامه عليه – بِلِقْحَتِهِ – أي ناقته - أَنْ يشرب ثمامة من حليبها. ولازال رسول الله – صلى الله عليه وسلم – يتودد إليه ويتردد عليه، ويدعوه إلى الإسلام،

ثم أمر أصحابه بفك أسر ثمامة. فذهب ثمامة من تلقاء نفسه إلى نخل قريب من المسجد النبوي اغتسل غُسل المسلمين، فلقد هزته الأخلاق المحمدية هزّا عنيفًا،. ثم قدم إلى المسجد هذه المرة على قدم وساق، في حَبْرة وسرور، قد هطلت على وجهه مُزنة الإيمان، ، وإذا به ينطق كلمات ما أجملها ! صدّرها بشهادة التوحيد، وثنَّاها بكلمة حق،

பிறகு அங்கிருந்து அவர் பெருமானாரிடம் அனுமதி பெற்று உம்ராவுக்காக மக்கா சொன்றார்.

மக்காவில் முதன் முதலாக தல்பியாவை உரத்த குரலில் சொன்னவர் அவர் தான்

استأذن ثمامة الرسول ان يؤدي العمرة فكان أول مسلمٍ على ظهر الأرض يدخل مكة ملبِّياً، ولا تزال مكة بيد الكفار، ولا يزال فيها الأصنام . حتى إذا بلغ بطن مكة وقف يجلجل بصوته العالي، قائلاً: لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمـد, والنعمة, لك والملك، لا شريك لك، لا شريك لك سمعت قريشٌ صوتَ التلبية، فهبَّت غاضبةً مذعورة، واستلت سيوفها مِن أغمادها، واتجهت نحو الصوت لتبطش بهذا الذي اقتحم عليها عرينها، ولما أقبل القوم على ثمامة، رفع صوته بالتلبية رفع العيار، وهو ينظر إليهم بكبرياء، فهمَّ فتىً من فتيان قريش أن يرديه بسهمٍ، فأخذوا على يديه، وقالوا: ويحك أتعلم من هذا؟ إنه ثمامة بن أثال، ملك اليمامة، فقتْلُه يشعل علينا نارَ حربٍ كبيرةٍ، أخذوا على يديه، ومنعوه أن يناله بسهم، وقال الناصح: والله إن أصبتموه بسوءٍ لقطع قومه عنا الميرة، وأماتونا جوعاً, ثم أقبل القوم على ثمامة، بعد أن أعادوا السيوف إلى أغمادها، وقالوا: ما بك يا ثمامة، أصَبَوْتَ؟ يعني أسلمت، وتركتَ دينك ودين آبائك, قال: ما صبوت، ولكني اتبعتُ خير دينٍ، اتبعت دين محمد.

மக்கா மதீனாவின் ஒரே விளைச்சல் பேரீத்தம் பழம் தான்.
மதீனாவாசிகள் பேரீத்தம் பழத்தையும் ஒட்டகப் பாலையுமே உணவாக கொண்டு வாந்தவர்கள்.
மக்கா வாசிகளுக்கு இபுறாகீம் நபியின் துஆ வின் பொருட்டால் கோதுமை திராட்சை  போன்ற உணவுப் பொருட்கள் தாராளமாக இறக்குமதியாகி வந்தன. யமாமாவிலிருந்து தான் கோதுமை இறக்குமதியாகி வந்தது.
 சுமாமா (ரலி) உம்ராவை முடித்துக் கொண்ட பிறகு இனி மக்காவிற்கு கோதுமையை அனுப்ப மாட்டேன் என சத்தியம் செய்தார்.  பட்டினியால் வாடிய அவர்களுக்கு பெருமானாரின் சம்மத்ததிற்குப் பிறகே தொடர்ந்து கோதுமை கிடைத்தது.

ندما انتهى ثمامه بن اوثال من عمرته، قال لسادات قريش ( أقسم برب هذا البيت إنه لايصلكم بعد عودتي إلى اليمامة حبةٌ من قمحها أو شيء من خيراتها حتى تتبعوا دين محمد عن آخركم.) و عاد إلى بلاده فأمر قومه بأن يحبسوا الميرة عن قريش، فصدعوا بأمره واستجابوا له، مما جعل الأسعار ترتفع في مكة، ويفشو الجوع ويشتد الكرب حتى خافوا على أنفسهم وأبنائهم الهلاك. عند ذلك كتبوا إلى الرسول صلى الله عليه وسلم يقولون: إن عهدنا بك تصل الرحم وتحض على ذلك.. وإن ثمامة بن أثال قد قطع عنا ميرتنا وأضرَّ بنا. فإن رأيت أن تكتب إليه أن يبعث بما نحتاج إليه فافعل. فكتب عليه الصلاة والسلام إلى ثمامة بأن يطلق لهم ميرتهم فأطلقها.

இஸ்லாத்தின் பெரும் சார்பாளராகிய் மாறிய சுமாமா பெருமானாரின் மென்மையான  தஃவாவினால் இஸ்லாமை தழுவியர் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தஃவாவின் எதார்த்தமான வழிகள் இவை.

யூதர்களுக்கும் கிருத்தவர்களுக்கும் பெருமானார் தஃவா செய்தார்கள்.

யூதர்களிடம் பெருமானாரின் தஃவா
عن عوف بن مالك رضي الله عنه قال : انطلق النبي صلى الله عليه وسلم يوما وأنا معه حتى دخلنا كنيسة اليهود بالمدينة يومَ عيدٍ لهم ، فكرهوا دخولنا عليهم ، فقال لهم رسول الله صلى الله عليه وسلم : يا معشر اليهود أروني اثني عشر رجلا يشهدون أنه لا إله إلا الله وأن محمدا رسول الله يُحبط الله عن كلِّ يهوديٍ تحت أديم السماء الغضب الذي غضب عليه . 
قال : فأسكتوا ما جاء به منهم أحد . 
ثم رد عليهم فلم يجبه أحد . 
ثم ثلّث فلم يجبه أحد . 


பெருமானார் (ஸல்) இறுதி தீர்க்க தரிசியான தன்னைப் பற்றி தவ்ராத்தில் வந்திருக்க்கும் அடையாளங்களை சொல்லிக் காட்டினார்கள். அங்கிருந்த ஒரு பாதிரி சாட்சி சொன்னார்.

فقال : أبيتم ! فوالله إني لأنا الحاشر وأنا العاقب وأنا النبي المصطفى آمنتم أو كذبتم . 
ثم انصرف وأنا معه حتى إذا كدنا أن نخرج فنادى رجل من خلفنا : كما أنت يامحمد . 
قال : فأقبل ، فقال ذلك الرجل : أي رجل تعلمون فيكم يا معشر اليهود ؟ 
قالوا : والله ما نعلم أنه كان فينا رجل أعلم بكتاب الله منك ولا أفقه منك ولا من أبيك قبلك ولا من جدك قبل أبيك . قال : فإني أشهد له بالله إنه نبي الله الذي تجدونه في التوراة . قالوا : كذبت . ثم ردوا عليه قوله وقالوا فيه شرا . قال رسول الله صلى الله عليه وسلم : كَذَبْتم لن يقبل الله قولكم . أمّا آنفا فتُثنون عليه من الخير ما أثنيتم ، ولما آمن كذّبتموه وقلتم فيه ما قلتم ، فلن يقبل الله قولكم .

قال : فخرجنا ونحن ثلاثة رسول الله صلى الله عليه وسلم وأنا وعبد الله بن سلام وأنزل الله عز وجل فيه الآية .
قُلْ أَرَأَيْتُمْ إِن كَانَ مِنْ عِندِ اللَّهِ وَكَفَرْتُم بِهِ وَشَهِدَ شَاهِدٌ مِّن بَنِي إِسْرَائِيلَ عَلَى مِثْلِهِ فَآمَنَ وَاسْتَكْبَرْتُمْ 
 أخرجه الإمام أحمد في المسند 

கிருத்தவர்களுக்கு பெருமானாரின் தஃவத்
ஹிஜ்ரீ 9 ம் வருடத்தில் பல நாடுகளிலிருந்தும் தூதுக்குழுக்கள் பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தனர். அதனால் அந்த வருடத்தை عام الوفود என்று அழைப்பதுண்டு.
அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் யமன் நாட்டின் ஒரு பகுதியிலிருந்த நஜ்ரான் பகுதியிலிருந்து கிருத்துவர்களின் ஒரு குழு பெருமானாரைச் சந்தித்தது, அவர்கள் இஸ்லாமைப் பற்றி அறிந்து கொள்ள வரவில்லை. பெருமானாரிடம் தமது மேன்மையைப் பறைசாற்றி தர்க்கம் செய்வதற்காக வந்தனர். 60 பேர் கொண்ட அந்தக் குழுவில் 12 பிரபலங்கள் இருந்தனர். ஆகிப் என்பவர் அவர்களுக்கு தலைமை தாங்கி வந்தார். ஆடம்பரமான பட்டாடைகள் தங்க ஆபரணங்களை அணிந்து வந்த அவர்களை பெருமானார் (ஸல்) அன்றைய தினம் சந்திக்க வில்லை, அடுத்த நாள் பாதிரிகளின் ஆடையோடு வந்த அவர்களை பெருமானார் (ஸல்) சந்தித்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி இஸ்லாமை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார்கள்,
அதற்கவர்கள் உமக்கு முன்னதாகவே நாங்கள் முஸ்லிம்களாக இருக்கிறொம் என்றார்கள்.

لقد عرض رسول الله  عليهم الإسلام، ولكنهم رفضوا وقالوا: كنا مسلمين قبلكم.

{الَّذِينَ آَتَيْنَاهُمُ الْكِتَابَ مِنْ قَبْلِهِ هُمْ بِهِ يُؤْمِنُونَ * وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آَمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّنَا إِنَّا كُنَّا مِنْ قَبْلِهِ مُسْلِمِينَ} [القصص: 53].

சரியான இஸ்லாமை தடுக்கும் மூன்று விசயங்கள்

قال : "يَمْنَعُكُمْ مِنَ الإِسْلامِ ثَلاثٌ: عِبَادَتُكُمُ الصَّلِيبَ، وَأَكْلِكُمْ لَحْمَ الْخِنْزِيرِ، وَزَعْمُكُمْ أَنَّ لِلِّهِ وَلَدًا".

ஈஸாவை திட்டுகிறீர்கள் என்றார்கள். திட்ட வில்லை அவர் விசயத்தில் சரியானதை சொல்கிறோம் என்றார்கள் பெருமானார். அதற்கும் மேலும் அவரை புகழுகிறோம் என்றார்கள்

وكان مما قالوه: ما لك تشتم صاحبنا -يقصدون عيسى - وتقول إنه عبد الله؟
فقال : "أَجَلْ، إِنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، وَكَلِمَتُهُ أَلْقَاهَا إلى مَرْيَمَ الْعَذْرَاءِ الْبَتُولِ".

ஈஸாவை போல் தந்தையின்றி பிறந்தவரை நீர் பார்த்ததுண்டா என்றனர். அப்படியானால் அவரை விடச் சிறந்தவர் ஆதம் என்றார்கள் பெருமானார் (ஸ;ல்)

وقالوا: هل رأيت إنسانًا قَطُّ من غير أب، فإن كنت صادقًا فأرنا مثله؟
فأنزل الله  الحجة الدافعة، حيث ضرب لهم مثلاً يوضح حقيقة عيسى  فقال الله : {إِنَّ مَثَلَ عِيسَى عِنْدَ اللهِ كَمَثَلِ آَدَمَ خَلَقَهُ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُنْ فَيَكُونُ * الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُنْ مِنَ الْمُمْتَرِينَ} [آل عمران: 60].

ஈஸா மனித குலத்தின் பாவ விமோசனத்திற்காக மரணத்தை தழுவினார் என்ற கிருத்தவர்கள் சொன்ன போது பெருமானார் அதை மறுத்தார்கள்.

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلاَّ اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا} [النساء: 157].

தொடர்ந்து விவாதம் எல்லை கடந்த போது பெருமானார் (ஸல்) அவர்கள் முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்தார்கள். ஆரம்பத்தில் ஒத்துக் கொண்ட கிருத்தவர்கள் தமது தரப்பின் பலவீனத்தை அறிந்து கொண்ட பிறகு முபாஹலா முடிவை கைவிட்டனர். பெருமானாருடம் சமாதானமாக செல்ல ஓப்புக் கொண்டனர். தம்முடைய கப்பத் தொகையை வசூலித்து வர ஒரு நம்பிக்கையாளரை அனுப்ப கேட்டுக் கொண்டனர் . பெருமானார் (ஸல்) அவர்கள் அபூஉபைதா ரலி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

{فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَةَ اللهِ عَلَى الْكَاذِبِينَ} [آل عمران: 61].

جاء النبي و معه عائلته المكونة من عليّ بن أبي طالب، وابنته فاطمة والحسن والحسين، ثم قال: "إِذَا دَعَوْتُ فَأَمِّنُوا". ولما رأى النصارى جدية الرسول  خافوا من هذه الملاعنة، وقالوا: مَا بَاهَلَ قَوْمٌ نَبِيًّا إِلاَّ هَلَكُوا.

யாருக்கு தீனைப் பற்றிய அழைப்புக் கொடுத்த போதும் நபி (ஸல்) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மலினப்படுத்த வில்லை.

அவர்களை ஷேம் – வெட்கத்திற்குள்ளாக்க முயற்சிக்க வில்லை.

இத்தகைய வழிமுறையை கையாள்வது எதிர்லிருப்பவர்களிடம் கோபத்தையும் பகையுணர்வையும் உண்டாக்கி விடும்.

பிற மதத்தைவர்களை அவர்களது முகத்தில் அறைவது போல வாதம் செய்து வாயடைக்கச் செய்வது பெருமானார் (ஸல்) அவர்களின் பாணியல்ல.

சமீபகாலமாக நம்முடைய நாட்டில் தஃவா செய்கிறோம் என்ற பெயரில் கிருத்துவர்களின் வழி முறைகளை முஸ்லிம்களும் கடை பிடிக்கிறார்கள்.

கிருத்துவர்களைப் போலவே பிரம்மாண்ட மேடைகளை அமைத்துக் கொள்கிறார்கள். கிருத்துவர்களைப் போலவே விளம்பரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், தஃவா என்பதை மேடைப் பிரசங்கமாகவும், விவாதமாகவும் மாற்றிவிட்டனர்.

இதனால் இஸ்லாமை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் ஒரு வித அச்சமும் அசூசையும் பிற சமூக மக்களிடத்தில் பரவி வருகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய தாஈ – காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி ரஹு

90 இலட்சம் பேரை ஆயிரம் வருடங்களுக்கு முன் அவர் தீனுல் இஸ்லாத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். என்கிறார் வரலாற்று ஆசிரியர் ஆர்னால்டு தாயன்பி.

ஜிஸ்தி ரஹ் அவர்கள்  சூரத்துல் இஹ்லாஸை ஓதி அதற்கு சமஸ்கிருத மொழியில் அர்த்தம் சொன்னார்கள், அவ்வளவு தான், சாரை சாரையாக மக்கள் அவரை சந்தித்து இஸ்லாமைத் தழுவினர்.

ஜிஸ்தி ரஹ் அவர்கள் வந்த பிறகு இந்தியாவிற்கு கோரி முஹம்மது படை எடுத்து வந்து முஸ்லிம் அரசை இங்கு நிறுவினார்.

அஜ்மீர் நகர மக்களிடம் ஜிஸ்தி ரஹ் கூறினார். கோரி படையுடன் வருகிறார். நான் உங்களை முஸ்லிம்களாக்க தனியாக வந்திருக்கிறேன்.

மேடைகள். ஜிகினா ஆடம்பரங்கள், வீடியோக்கள், ஹெச் டி கேம்ராக்கள் இல்லை, ஒரு கோடிப்பேர் இஸ்லாமை தழுவினர்.

தஃவா வில் ஈடுபடுவோர் கவனிக்க வேண்டும்.
இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதாக கூறி பெரிய பெரிய கூட்டங்களை திரட்டுவதும். அக்கூட்டங்களில் முஸ்லிம் அல்லாதவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறோம் என்ற பெயரில் முகத்தில் அடித்தது போல பதில்களை பேசுவதும். விவாத அழைப்புக்களை சர்வசாதாரணமாக சவடால்களாக விடுவதும் .. கூட்டத்திற்கு வருகிற சாமாணிய மக்களை எதிர்க் கேள்விகளால் கிடுக்கிப் பிடிக்குள்ளாக்குவதும் இஸ்லாமிய நடை முறை அல்ல
சகோதர சமுதாய மக்களிடம் கோபத்தை ஏற்படுத்துவே செய்யும்.

டாக்டர் ஜாகிர் நாயக் வன் முறையை தூண்டுகிற பேச்சாளர் அல்ல.

ஆணால் அவர் சகோதர சமுதாய மக்களை கோபத்திற்குள்ளாக்கியிருக்கிறார். என்பதே இப்போதைய நிலவரம் நமக்கு உணர்த்து கிறது.

அவரது பதில்கள் நம்மை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கலாம். ஆனால் மற்றவர்களை பொருந்தத வரை கம்பாரிட்டிவ் ரிலிஜன் என்ற பெயரில் அவர் பிற மதத்தவர்களை கோபத்திற்குள்ளாக்கியிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய முஸ்லிம்களுக்கு ஆர்ப்பாட்டமும் மூக்குடைய வைப்பதும் வாயடைக்கச் செய்வதும் வாதப்பிரதிவாதங்களால கிடுக்கிப் பிடி போடுவதும் மிகப் பிடித்தமான விளையாட்டுக்களாக மாறிவிட்டன. பிற மக்கள் மனதில் சத்தியத்திற்கு ஒரு இடத்தை ஏற்படுத்துவதை விட

மிகச் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை பிரம்மாண்டப்படுத்துகிறார்கள். அமைதியாக சாந்தமாக பிரம்மாண்ட மாக இஸ்லாமிய பிரச்சாரம் செய்த வலிமார்களை கேவலப்படுத்துகிறார்கள்

ஜாகிர் நாயக் விசயத்தில் தற்போது மத்தியில் இருக்கிற பாரதீய ஜனதா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நியாயமற்றதாக இருக்கலாம். அதே நேரத்தில் ஜாகிர் நாயக் போல செய்யப்படும் பிரச்சார உத்தி இஸ்லாமியம் தானா என்று யோசிக்க வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

ஒரு விசய்த்தை ஒப்பிட்டுப் பாருங்கள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலை எடுத்த போது, இலண்டனில் குண்டு வெடிப்புக்கள் நடந்த போது அவர்கள் தில்லிக்கு அருகில் உள்ள தேவ்பந்த் மதரஸாவின் கொள்கையை கொண்டவர்கள் என்று சர்வதேச அளவில் பேசப்பட்டது, ஆயினும் தேவ்பந்த் மதரஸாவை தீவிரவாதத்துடன் இணைத்து இது வரை ஒரு வார்த்தை பேசப்படவில்லை. அதை நோக்கி ஒரு விரல் நீட்டப்படவில்லை.
ஆனால் ஜாகிர் நாயக் விசய்த்தில் அவருக்கு எதிராக பலர் இல்லாவிட்டாலும் சிலர் கை தூக்க காரணம் பிற சமய மக்களிடம் ஒரு அசூசையான போக்கை ஜாகிர் நாயக் கடை பிடித்ததாகும்

தஃவா பணி என்பது இஸ்லாமிற்கு வலிமை சேர்க்கிற – முஸ்லிம்களை பாதுகாக்கிற ஒரு பணியாகும்.

பெருமானாருக்கு இரண்டு மெய்க்காவலர்கள் இருந்தார்கள்.

அல்லாஹ் அல்மாயிதா அத்தியாயத்தின் இந்த வசனத்தை அருளினான்.
நபியே உங்களுக்கு சொல்லப்படுவதை எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ் மக்களிடமிருந்து உங்களைப் பாதுகாப்பான்.

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ۚ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ (67)

இந்த வசனம் ஒரு இரவில் இறங்கியது அறையின் திரைச்சீலையை விலக்கி நபி (ஸல்) அவர்கள் தனது மெய்க்காவலர்களை சென்று விடுமாறும் அல்லாஹ் தன்னைப் பாதுகாக்கிற பொறுப்பை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்கள்

عن عائشة قالت: كان النبي صلى الله عليه وسلم يُحْرَس، حتى نـزلت هذه الآية: " والله يعصمك من الناس "، قالت: فأخرج النبي صلى الله عليه وسلم رأسه من القُبَّة فقال:أيها الناس، انصرفوا، فقد عصمني الله
واه الترمذي في كتاب التفسير

இஸ்லாத்திற்கு வலிமை சேர்க்கிற – முஸ்லிம் உம்மத்திற்கு பாதுகாப்பை வழங்குகிற தஃவா பணியை முஸ்லிம் உம்மத்திற்கு சிக்கலை உருவாக்குகிற ஒன்றாக நாம் ஆக்கிக் கொள்ளக் கூடாது.








No comments:

Post a Comment