தலைவர்களும் சீர்திருத்தவாதிகளும்
தமது காலத்திற்கு முந்தைய பிரச்சனைகளுக்கு அல்லது தம் காலத்து பிரச்சனைகளுக்கு
தீர்வு சொல்லியிருக்கிறார்கள்.
முஹம்மது நபி (ஸ்ல்) அவர்கள் மட்டுமே
தமது காலத்திற்கு பின்னர் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் அவற்றிலிருந்து
தப்பித்துக் கொள்ளும் வழிமுறையையும் விவரித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் எவற்றை
குழப்பம் என்று குறிப்பிட்டார்களோ அவற்றை அக்கறையுடன் கண்டறிந்து விலகிக் கொள்ள
வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
குழப்பங்களிலிருந்து தப்பிக்கும் வழியை கவனமாக தேடிக் கொள்ளாவிட்டால்
முஃமின்கள் தமது ஈமானையும் அமல்களையும் இழக்க வேண்டியதாகிவிடும்.
குழப்பங்களைப் பற்றி பெருமானார் (ஸல்) கூறியவை
மார்க்கத்தை பற்றி நிற்பதே சிரமமாக இருக்கும்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ الصَّابِرُ
فِيهِمْ عَلَى دِينِهِ كَالْقَابِضِ عَلَى الْجَمْرِ – الترمذي 2186
இன்றைய உலகில் மார்க்கத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் கடை
பிடிப்பதற்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்புக்களை எண்ணிப்பாருங்கள்.
முஸ்லிம்கள் ஒழுக்கமாக வாழ்வதைக் கூட எதிர்க்கிறார்கள்
மார்க்கத்தின் எதிரிகள்
தொழுகைக்கு பள்ளி கட்ட அனுமதி மறுக்கப்படுகிறது. – ஒரு
காலத்தில் ஐந்து நேரம் தொழுகிறார்கள் முஸ்லிம்கள் என்று போற்றப்பட்டோம்.
தனிப்பட்ட வாழ்வு சமூக வாழ்வு இரண்டிலும் இஸ்லாமிய வழி
முறைகளை தேவையற்று வம்புக்கிழுத்து சர்ச்சை செய்கிறார்கள், கறி சாப்பிடுவதிலிருந்து
தாடி திருமணம் தலாக் வரை ஒவ்வொரு விசயத்திலும் தலையிட்டு தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சமயத்தை கடைபிடிப்பதை அடிப்படை வாதம் பிற்போக்குத்தனம்
என்கிறார்கள்.
நான் முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால் அச்சப்பட வேண்டிய
அளவு சூழ்நிலைகள் சிக்கலாக்கப்படுகின்றன,
இங்கிலாந்தினுடைய
பாப் இசைப் பாடகர் கேட்
ஸ்டீவன்ஸன் (Cat Stevens )
1977 டிஸம்பரில் இஸ்லாமை தழுவினார். அவர் பாடகராக இருந்தவரை
தலை மேல் வைத்துக் கொண்டாடிய உலகம் இஸ்லாமைத் தழுவியதும் அவரை தூற்றத் தொடங்கியது.
செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்கு பிறகு 2004 செப்டம்பர் 21 ம் தேதி அவர் இல்ண்டனிலிருந்து
வாஷிங்க்டன் சென்ற போது அவரை தேடப்படும் குற்றவாளி என்று சொல்லி அவரை திருப்பியனுப்பியது
அமெரிக்கா.
சல்மான்
ருஷ்டியின் நூலை அவர் கண்டித்த போது அவர் குமைனியின் தலை வெட்டும் உத்தரவை ஆதரிக்கிறார்
என இங்கிலாந்தின் பிரபல் தி சன் பத்ரிகை எழுதியது.
இத்தனை நெருக்கடிகளையும் தாண்டி யூசுப் இஸ்லாம் முஸ்லிமாக
இருக்கிறார். இப்போதும் பலர் முஸ்லிம்களாகி வருகின்றனர்,
முஸ்லிம்கள் இத்தனையையும் தாண்டி மார்க்கத்தை கடை பிடித்து
வருகிறோம்.
மார்க்கத்தை கடை பிடிப்பதற்கு நேரும் சோதனைகளை முஸ்லிம்
சமுதயாம் வெற்றிகரமாக சமாளித்து விடும்.
இதற்கு முன்னாள் இது போல தரப்பட்ட நெருக்கடிகளிலிருந்து
இஸ்லாம் வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளது.
முஸ்லிம்கள் பயப்பட வேண்டிய ஒன்று அதன் சொந்த சமூகத்திற்குள்
ஏற்படும் குழப்பங்களைப் பற்றியதாகும்.
அணிஅணியாக எழூம் குழப்பங்கள்
قَالَ أُسَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَشْرَفَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُطُمٍ مِنْ آطَامِ الْمَدِينَةِ
فَقَالَ هَلْ تَرَوْنَ مَا أَرَى إِنِّي لَأَرَى مَوَاقِعَ الْفِتَنِ خِلَالَ بُيُوتِكُمْ
كَمَوَاقِعِ الْقَطْرِ- البخاري 1745
عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّتِي هَذِهِ أُمَّةٌ مَرْحُومَةٌ لَيْسَ عَلَيْهَا
عَذَابٌ فِي الْآخِرَةِ عَذَابُهَا فِي الدُّنْيَا الْفِتَنُ وَالزَّلَازِلُ وَالْقَتْلُ
– ابوداوود
அக்குழப்பங்களில் ஈடுபடுவதை விட தவிர்த்துக்
கொள்வதே சிறந்தது. முடிந்தவகையிலும் வரையிலும்.
أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَكُونُ فِتَنٌ الْقَاعِدُ
فِيهَا خَيْرٌ مِنْ الْقَائِمِ وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنْ الْمَاشِي وَالْمَاشِي
فِيهَا خَيْرٌ مِنْ السَّاعِي وَمَنْ يُشْرِفْ لَهَا تَسْتَشْرِفْهُ وَمَنْ وَجَدَ
مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ – البخاري 3334
அக்குழப்பங்கள்
தீனையே பறித்து விடும். மட்டுமல்ல,
துன்யாவிற்காக தீனை விற்பதற்கு தீயவர்கள்
தயாராகிவிடுவார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ
الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا
وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنْ الدُّنْيَا- مسلم 169
தற்காலத்து
சச்சரவுகளை ஒப்பிட்டுப் பாருங்கள் தமது சொந்த கவுரவத்திற்காக
பிடிவாதத்திற்காக எப்படி எல்லாம் மார்க்கத்தை
மாற்றி மாற்றி பேசுகிறார்கள்,
·
பரஸ்பரம் சண்டை
தொடங்கி விட்டால் நிற்காது.
عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهَا
إِلَى يَوْمِ الْقِيَامَةِ – الترمذي 2128
أي يبقى إلى يوم القيامة إن لم يكن في بلد
يكون في آخر – تحفة الاحوذي
ஆயுதங்களை உடைத்துப் போட்டு வீடுகளுக்குள்
தஞ்சமடைவதே நல்லது.
عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ قَالَ فِي الْفِتْنَةِ كَسِّرُوا فِيهَا قَسِيَّكُمْ وَقَطِّعُوا فِيهَا أَوْتَارَكُمْ
وَالْزَمُوا فِيهَا أَجْوَافَ بُيُوتِكُمْ وَكُونُوا كَابْنِ آدَمَ - الترمذي -2130
( وكونوا كابن آدم ) وهو هابيل حين استسلم
للقتل , وقال لأخيه قابيل { لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك
إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك } الآية .
ஆயுதங்கள்
என்பது வாட்ஸப் பேஸ்புக் போன்ற
இன்றைய சோஷியல் மீடியாக்களையும் எடுத்துக்
கொள்ளும் போதிய பக்குவமில்லாமல் சர்ச்சைகளுக்குள்
தலையிட்டு கருத்துப் போராட்டங்களை நடத்தாமல் இருப்பதே சிறந்தது.
இனி ஒரு காலம் வரும் என்று சொல்லி பெருமானார்
(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன குழப்பங்கள் .
பாவம் செய்! அல்லது சும்மா இரு!
سمع أبا
هريرة - رضي الله عنه - ، يقول : قال رسول الله - صلى الله
عليه وآله وسلم - : " يأتي على الناس زمان يخير فيه الرجل بين العجز والفجور ، فمن أدرك ذلك
الزمان فليختر العجز على الفجور "-
المستدرك على الصحيحين
இன்று
நிலமை அப்படித்தானே இருக்கிறது, இலஞ்சம் வாங்கு! அல்லது
சும்மா இரு!
நாம்
இலஞ்சம் வாங்காமல், மோசடி செய்யாமல், திருடாமல், பொய்சாட்சி சொல்லாமல் இருக்க முயற்சிக்க
வேண்டும்.
வயிறு
அந்தஸ்து பெண்களின் ஆதிக்கம் பண மோகம்
قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان همهم
بطونهم وشرفهم متاعهم وقبلتهم نساؤهم ودينهم دراهمهم ودنانيرهم أولئك شر الخلق لا
خلاق لهم عند الله تعالى - كنز العمال
புதிய
புதிய கருத்துக்களால் குழப்பத்தை ஏற்படுத்துவோர் விச்யத்தில் அதிக எச்சரிக்கை தேவை
يكونُ في آخِرِ الزمانِ دَجَّالُونَ كَذَّابُونَ . يأتونَكم من الأحاديثِ بما لم تَسْمَعُوا أنتم ولا آباؤُكم . فإيَّاكم
وإيَّاهم . لا يُضِلُّونَكم ولا يَفْتِنُونَكم
الراوي: أبو هريرة المحدث:مسلم
الراوي: أبو هريرة المحدث:مسلم
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَنَّهُ قَالَ سَيَكُونُ فِي آخِرِ الزَّمَانِ نَاسٌ مِنْ أُمَّتِي
يُحَدِّثُونَكُمْ مَا لَمْ تَسْمَعُوا بِهِ أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ
فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ.
مسند أحمد
مسند أحمد
முஸ்லிம்களும்
குறிப்பாக இளைஞர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய
அம்சம் இது,
இந்த
தீன் ஆயிரம் வருடங்கள் பழமையானது,
இதன் முன்னோடிகள் உன்னதமானவர்கள், மார்க்கத்தை மிகப் பற்றோடும் அக்கறையோடும்
பின்பற்றியவர்கள், அவர்களை பின்னுக்குத் தள்ளி
விட்டு, அவர்களை மார்க்கம் தெரியாதவர்களாக
, மார்க்கத்தை கெடுத்தவர்களாக காட்டடிக் கொண்டு புறப்படும் தஜ்ஜால்
கள் விச்யத்தில் எச்சரிக்கை அவசியம்.
இந்த
ஆண்டு பெருநாள் பிறை விசயத்தில் இஸ்லாத்தை விட்டு வெளியேறிச் சென்று விட்ட ததஜ அமைப்பினர்
ஏற்படுத்திய குழப்பத்தில் சுன்னத் ஜமாத்தை சார்ந்த சிலரும் சிக்கிக் கொண்டது வேதனையானது.
நாங்கள்
சுன்னத் ஜமாத்தினர் தான் ஆனாலும் பெருநாள் காஜி செய்தது சரியல்ல, அதனால் நோன்பை விட்டு
விட்டோம் என்று சொன்னவர்கள் மிகப் பெரும் தவறிழைத்து விட்டனர்,
ததஜ்
வை நம்பிய நீங்கள் தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அவர்களின் பிரதிநிதியாக
இருக்கிற் தமிழக அரசின் தலைமை காஜியையும் நம்ப மறுத்தது வெட்கக் கேடானது. சிறுபிள்ளைத்
தனமானது,.
நம்முடைய
காஜி பிறை பார்த்தலுக்கு சட்ட பூர்வமான வரையறைகளை வைத்திருக்கீறார். பிஎச்டி பட்டதாரியான அவர் மிக எளிமையானவர், பக்திமிக்கவர்
என்பது அவரை சற்றேனும் நெருங்கிப் பார்த்த அனைவருக்கும் தெரியும்.
தமிழகத்தில்
எங்கும் பிறை தென்பட வில்லை. சென்னையிலிருந்து குமரி வரை.
குமரி
மாவட்டத்து மக்கள் கேரளாவைப் பின்பற்றி நோன்பை ஒரு நாளுக்கு முன்னதாக கடை பிடித்து
விட்டதால் 30 ஐ பூர்த்தி செய்தி பெருநாளுக்கு தயாரானார்கள்.
குமரி
மாவட்டத்தில் பிறைபார்க்கப்பட்டதாக் ததஜவினர் கூறிய ஊரில் உள்ள சுன்னத் ஜமாத்தினர்
எவரும் பிறை பார்த்ததாக கூறவில்லை.
ததஜவினர்
வெளியிட்ட தொலை பேசி எண்களும் போலியானவை. அவர்கள்
வெளியிட்ட புகைப்படம் இலங்கையில் எடுக்கப்பட்டது.
இத்தனையிலும்
போலித்தனமான செய்திகளை வைத்துக்க் கொண்டு ததஜவின்ர் எழுப்பிய சந்தேகத்திற்கு சுன்னத்
ஜமாத்தினர் சிலர் ஆட்பட்டது அவர்களது உறுதியற்ற தன்மையையே காட்டுகிறது,
உறுதியாக
ஒன்றை நாபகப்படுத்துகிறோம். சுன்னத் ஜமாத் என்பது ஆலிம்களை சாந்து நிற்பதாகும். குழப்பத்திற்கு ஆட்படுத்தப் பட்ட போது சுன்னத் ஜமாத்தைச்
சார்ந்தவர்கள் தமது ஆலிம்களையே அனுகியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் குழப்பவாதிகளின்
சொல்லுக்கு அவர்கள் செவியேற்றது ததஜவினரின் தந்திரங்களை அவர்கள் அறியாததை காட்டுகிறது,
அதே நேரத்தில் சுன்னத் ஜமாத்தின் அறிஞர்கள் மீதும் வழிகாட்டிகள் மீதும் அவர்களது அவநம்பிக்கையை
காட்டுகிறது, இத்தையோர் சுன்னத் ஜமாத் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
ததஜவின் வழிகாட்டுதல்களுக்கு பணிந்தோர் அந்த
அமைப்பு சார்ந்தவர்கள் என்றே பொருளாகும்.
அரசு
தலைமை காஜி அரசின் திட்டத்திற்கு செவிசாய்த்து விட்டார் என்பதும் அரசாங்கத்தின் சுற்றறிக்கை
இரண்டு நாட்களுக்கு முன்பே பல்வேறு துறைகளுக்கும் அனுப்பப் பட்டது என்பது வலிந்து புனையப்பட்ட
கருத்துக்களாகும்
அரசு
வழக்கப்படியே விடுமுறை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது,
பல
தடவைகளிலும் இவ்வாறு அறிவிப்பு அனுப்பப் பட்ட பிறகு தலைமை காஜியின் அறிவிப்பிற்கேற்ப
அரசு மாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது,
தற்போதையை
இதே அரசு முன்பு ஆட்சியிலிருந்த சந்தர்பத்தில் பல முறை 29 ம் நாள் பிறை காணப்பட்ட சந்தர்ப்பங்களில்
அரசின் அறிவிப்பு மாற்றப் பட்டிருக்கிறது, செய்திகளை கவனிக்கிற் எவரும் இதை அறிந்திருப்பர்.
ததஜ
அமைப்பு என்பது சமூகத்திற்குள்ளே குழப்பங்களை பிளான் பண்ணி ஏற்படுத்தும் ஒரு அமைப்பாகும்,
இதற்காகவென்ற விசமிகளின் குழு ஒன்றை அவர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் இஸ்லாமிய விரோதிகளுக்கு எடுபிடி வேலை பார்க்கும் சக்திகளாவர். உண்மையில் அவர்களே
முஸ்லிம்களுக்கு எதிராக எடுபிடி வேலை பார்ப்பவர்களாவர்,
தமிழகத்தில்
ஒன்று பட்டு நின்ற முஸ்லிம்களின் பெருநாளை பிரித்த சதிகாரர்கள் ஏதோ ஒரு திட்டத்தோடு
எதார்த்தமாக நடை பெற்ற அரசின் அறிவிப்பை தமக்கு சாதகமாக பூதாகரமாக்கி ததஜ அமைப்பு வெளியிட்ட
கருத்துக்களை சுன்னத் ஜமாத்தை சார்ந்த சிலரும் நம்பிப் பிரச்சாரம் செய்தது பாவமான காரியமாகும்.
அதற்காக அவர்கள் தவ்பா செய்ய வேண்டும்.
ரமலான்
30 அன்று நோன்பை நோற்காதவர்கள், அல்லது நோன்பை இடையில் விட்டவர்கள் கண்டிப்பாக நோன்பை பிரிதொரு நாளில் கழா செய்ய வேண்டும். ரம்லானின்
பகல் பொழுது ஒன்றில் உணவு உண்டதற்காக அவர்கள் அல்லாவிடம் பாவமன்னிப்பும் தேடவேண்டும்.
சவூதி
அரேபியாவிலோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிலோ பிறை காணப்பட்டது என்றாலும் நம்முடை
நாட்டில் பிறை காணப்பட்டால் மட்டுமே நமக்கு ரமலான் தொடங்கும் ரமலான் முடியும். சவூதியின்
நேரத்த்தைப் பார்த்து நாம் தொழுவதில்லை, நாம்
நோன்பு திறப்பதும் இல்லை, நமக்கான நேரம் வரும் போது தான் நாம் தொழ வேண்டும். அதே போல
நோனபை வைக்கவும் விடவும் வேண்டும். சவூதி அறிஞர்களே உங்களது ஊரின் பிறை அறிவிப்பை பின்பற்றுங்கள்
என்றுதான் உலகிற்கு பத்வா வழங்குகிறார்கள்.
நமக்கு
பிறை பார்க்கப்பட்டு விட்ட செய்தியை அதற்கென நியமிக்கப்பட்டிருக்கிற காஜி தான் அறிவிக்க
வேண்டும்
ஒருவர்
பிறை பார்த்தால் அது அவருக்கு மட்டுமே பொருந்தும். அவர் பிறை பார்த்த்தாக கூறியதை காஜி
ஏற்றுக் கொண்டு அறிவித்தால் மட்டுமே நம் அனைவருக்கும் அது பொருந்தும். பிறை பார்த்தவரையும்
நம்மையும் இணைக்கிற இணப்புப் பாலம் வாட்ஸ் அப்போ பேஸ்புக்கோ அல்ல. நமக்காக நியமிக்கப்பட்டிருக்கிற
அதிகாரி காஜியே ஆவர்.
நம்
பக்கத்து வீட்டுக்காரர் எது செய்தாலும் நமக்கு பிடிக்காது எனும் நிலையில் அவர் பிறை
பார்த்த்தாக கூறினார் எனில் அதை நாம் ஏற்று
செயல் பட வேண்டும் எனில் காஜியின் அறிவிப்பு வோண்டும். காஜியின் அறிவிப்பிற்கு பிறகு
நாம் முறைத்துக் கொண்டு நிற்க முடியாது.
அதே
நேரத்தில் ஓரிருவரின் கூற்றை காஜி ஏற்க மறுப்பதற்கு நியாயமிருக்கிறது, ததஜ வின் இந்த
மோசடி விளையாட்டை அவர் ஏற்க வில்லை, காரணம் குமரி மாவட்டத்திலோ தமிழகத்தின் வேறு எந்தப்
பகுதியிலோ பிறை பார்க்கப்பட்டதாக நம்பத் தகுந்த ஒரு சிறு தகவலும் வரவில்லை,
சுமார்
800 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தமிழகத்தில் வானம் தெளிவாக இருந்தால் பரவலாக பல இடத்தில்
பிறை பார்க்கப்பட்டிருக்க வேண்டும். வானம் மேக மூட்டமாக இருந்தால் எங்காவது ஓரிரு இடத்தில்
பலர் பிறையைப் பார்த்திருக்க வேண்டும் என்ற சட்ட விதியை காஜி பின்பற்றி வருகிறார்.
இதை முதலில் நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு
தலைமை காஜியை அவதூறுக்குள்ளாக்கிய சக்திகளை கண்டிக்க வேண்டும்.
இனிமேல்
இத்தகைய குழப்பங்கள் உண்டுபண்ணப்படும் போது புத்திசாலித்தனமாக பெருமானாரின் அறிவுரைகளைப்
பின்பற்றி இத்தகைய குழப்பத்திற்கு ஆட்படாமல் நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் பாதுகாத்துக்
கொள்ள வேண்டும்.
ஊடகங்கள்
சைத்தானின் ஆயுதங்களாக மாறி வருகிற போது அவற்றில் மேலும் குளிர்காய்ந்த் கொண்டிருக்காமல்
அவற்றிலிருந்து வெளியேறி விட வேண்டும். அல்லது ஆப் செய்து விட வேண்டும்.
நமது
வழிகாட்டிகள் யார் என்பதில் உறுதியோடு நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சமுதாயத்தில்
தீய சக்திகளும் குழப்பவாதிகளும் வெற்றி பெறாமல் தடுக்க முடியும்.
இந்த ஆண்டு பிறை விசய்த்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு காரணம்
- ததஜாவின் குழப்பம் செய்யும் உத்தியை சமுதாயம் புரிந்து கொள்ளாதது.
- காஜியையும் அவர் சார்ந்து நின்ற ஆலிம்கள் ஜமா அத்துக்கள் விசயத்தை கவுரமாக எடுத்துக் கொள்ளாதது.
- பிறை விசயத்தீல் காஜி கடைபிடிக்கும் நடைமுறை என்ன என்பதை அறிந்து கொள்ளாதது.
- சமூக வலைத்தளங்களின் பரப்புதல்களுக்கு மூறையற்ற முக்கியத்துவம் கொடுத்தது.
அல்லாஹ்
கூறுவதை நினைவில் வையுங்கள்
هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ
هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ
زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ
وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ
آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُوْلُوا الْأَلْبَابِ(7)
وَالْفِتْنَةُ أَشَدُّ مِنْ الْقَتْلِ.
وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنْ الْقَتْلِ
No comments:
Post a Comment