வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, July 06, 2016

பகையுணர்வை குறைப்போம் ! அதன் காரணிகளை தவிர்ப்போம்.



அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
அல்லாஹ் நமது ரமலானிய வணக்கங்களை அங்கீகரித்து உயர்ந்த கூலியை தந்தருள்வானாக!
இனிவரும் காலங்களை ஈமானிய தெளிவும் வலிவும் மிக்கதாக ஆக்கிய மென்மேலும் நல்லமல்களை செய்கிற தவ்பீக்கை தந்தருள்வானாக!
நம்முடைய இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் சிறப்பானாதாக ஆக்கியருள்வானாக!
மகிழ்ச்சியோடு நாம் கூடியிருக்கிற இந்நாளில் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவதற்கான வழிகளை யோசிப்போம்.
குடும்பத்தினரோடும் உறவுகளோடும் நண்பர்களோடும் மனம் விட்டு மகிழ்ச்சியை பரிமாரிக்கொள்வோம்.
வாழ்த்துக்களையும் அன்பளிப்புக்களை பரிமாறிக் கொள்வோம்.
தயக்கம் வேண்டாம்.
முந்திக் கொள்வோம். சஹாபாக்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்பவர்களாக இருந்தனர்.
فقد جاء في المغني لابن قدامة قال: وذكر ابن عقيل في تهنئة العيد أحاديث منها: أن محمد بن زياد، قال: كنت مع أبي أمامة الباهلي وغيره من أصحاب النبي صلى الله عليه وسلم فكانوا إذا رجعوا من العيد يقول بعضهم لبعض: تقبل الله منا ومنك،

وفي سنن البيهقي: عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ: لَقِيتُ وَاثِلَةَ بْنَ الأَسْقَعِ فِي يَوْمِ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ، فَقَالَ: نَعَمْ تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ، قَالَ وَاثِلَةُ: لَقِيتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ، فَقَالَ: نَعَمْ تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكَ

ஒவ்வொரு பகுதியிலும் வாழ்த்துக்களை பரிமாரிக் கொள்வதற்கு விதவிதமான சொற்கள் இருக்கும். அவற்றில் அனுமதிக்கப்படாத சொற்கள் இருந்தால் தவிர அந்த வாசகங்களைப் பயன்படுத்திக் கொள்ள தடையேதும் இல்லை,

பெருமானார் (ஸல்) அவர்கள் ரமலான் நல்லிணக்கத்தின் மாதம் என்றார்கள் அந்த நல்லிணக்ககச் சிந்தனையை நினைவில் ஏந்துவோம்.

ஒரு காலம் இருந்தது, மனிதர்கள் சமூகத்தோடும் சுற்றத்தோடும் கூடி வாழ்வதில் நாட்டம் கொண்டவர்களாக இருந்தனர்.
அதற்காக தேடித்தேடி வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டனர்.
அதில் சில சிக்கல்களும் கஷ்டங்களும் இருந்த போதும் கூட அவற்றை சகித்துக் கொண்டு அன்பு பாராட்டினர் நேசத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தினர்,
கல்யாண வீடாக இருந்தாலும் மைய்யித்தின் வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் பல நாட்களாக மக்கள் தங்கியிருந்தனர்.

பொதுவாக மனித மனம் தனக்குள் சுருங்கிப் போவதையும் பிறரிடமிருந்து பிரிந்து நிற்பதை விரும்புகிற காலமாக மாறிவிட்டது,


وهو شهر المواساة
لنكن من المؤمنين الذين قال فيهم رسول الله صلى الله عليه وسلم (مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى)


நாகரீக உலகில் நமது வாழ்வு தனிமை நிறைந்ததாக மாறிவருகிறது, நாம் பழகு வட்டம் சுருங்கி வருகிறது . இந்தப் போக்கை மாற்றுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் பெருநாள் ,
மகிழ்ச்சியை பெருக்கிக் கொள்ளுவும் ஒரு வழியாகவே நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று முஸல்லாவுக்கு ஒரு வழியாக சென்று வேறு வழியாக திரும்புவார்கள்
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ . ومعنى مخالفة الطريق أنه يذهب من طريق ويعود من طريق آخر .- البخاري (986)


மகிழ்ச்சியை பெருக்கிக் கொள்ளும் இந்த நாளில் நம்முடை மகிழ்ச்சிக்கும் சமுதாயத்தின் சங்கடங்களுக்கும் முக்கியக் காரணமாக இருக்கிற ஒரு அம்சத்தை இன்று எண்ணிப் பார்க்கிறோம்.
மனிதர்களுக்கு இறைவன் செய்த பிரதானமான முதல் எச்சரிக்கை
பூமி பகை நாடு என்பதாகும்.
ஆதம் அலை அவர்களை பூமிக்கு அனுப்புகிற போது அல்லாஹ் சொன்னான்.
وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ(36)
முதல் மனிதரின் பிள்ளைகளே பகைவர்களானாயினர்.
காபீலின் முறைதவறிய ஆசை சகோதரனை பகையாளியாக்கியது.
குர்பானியின் வழியாக அல்லாஹ்வின் தீர்ப்பு வெளியான பிறகும் காபீல் தனது விருப்பத்தை கைவிட வில்லை. அவர் தனது சகோதரனையும் தந்தையையுமே கூட பகைவராக நினைத்தார்.
ஹாபீலின் குர்பானியை அல்லாஹ் ஏற்றுக் கொண்ட போதே அவர் தெளிவு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதையே அவர் பகைக்கான காரணமாக மேலும் பெறுக்கிக் கொண்டார்.
(நாமும் இப்படித்தான் பல சமயத்திலும் மகிழ்ச்சிக்கான காரணிகளையே பகைகையை வளர்க்க பயன்படுத்திக் கோள்கிறோம். கல்யாணத்திற்கு முறையாக அழைக்க வில்லை என்று சொல்லி மேலும் பல வருடங்களுக்கு தொடர்பை அறுத்துக் கொள்கிறோம். )
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آَدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآَخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (27) لَئِنْ بَسَطْتَ إِلَيَّ يَدَكَ لِتَقْتُلَنِي مَا أَنَا بِبَاسِطٍ يَدِيَ إِلَيْكَ لِأَقْتُلَكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ (28) إِنِّي أُرِيدُ أَنْ تَبُوءَ بِإِثْمِي وَإِثْمِكَ فَتَكُونَ مِنْ أَصْحَابِ النَّارِ وَذَلِكَ جَزَاءُ الظَّالِمِينَ (29) فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ (30)
இந்த உலகில் யார் யாருக்கு பகைவராக முடியும் என்பதை நிரூபித்த தொடக்க நிகழ்ச்சி அது.
ஒரு மாலை நேரத்தில் ஹாபீலை தனியே சந்தித்த காபீல் நம் தந்தை உனக்காக துஆ செய்தார் அதனால் தான் உனது குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விவாதத்தை தொடங்கி இறுதியில் இரும்புத்த் தடியால் அடித்து ஹாபீலை கொன்றார்,
காபீலின் பகை ஒரு கொலைக்கான தண்டனையை மட்டுமல்ல. உலகின் அத்தனை கொலைகளுக்கு அவரை பங்காளியாக்கிவிட்டது,
عن أبي هريرة  عن رسول الله: "لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها لأنه كان أول من سن القتل

யூசுப் அலை அவர்கள் மீது பகை கொண்ட சகோதரர்கள் அவரை கிணற்றில் வீசினர். அது மட்டுமல்ல வழிப்போக்கர்கள் அவரை காப்பாற்றிய போது அவர்களிடம் இவர் எங்களிடமிருந்து தப்பி வந்த அடிமை என்று சொல்லி 10 திர்ஹம்களுக்கு விற்று விடவும் செய்தனர்,
وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُودَةٍ وَكَانُوا فِيهِ مِنْ الزَّاهِدِينَ(20)
அபூஜஹ்ல் பெருமானாரின் குடும்பத்தின் மீது கொண்ட பகை காரணமாக சத்தியம் என்று தெரிந்தும் இஸ்லாத்தை ஏற்கவில்லை, அதுவே அவனது அழிவுக்கு காரணமாக இருந்தார்.
பகை என்பது மனித வாழ்வில் மிகக் கெட்ட தீய விளைவுகளை ஏற்படுத்தும் குணமாகும்.
சைத்தான் இந்த இயல்பை தூண்டி விடுவதன் மூலம் மனிதர்களின் நல் அமல்களை அழிக்கிறான்.
நல்லுணர்வு பெறத்தவறியவர்களுக்கு பகையுணர்வைவும் குரோதத்தைதையும் ஏற்படுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்.
فَنَسُوا حَظًّا مِمَّا ذُكِّرُوا بِهِ فَأَغْرَيْنَا بَيْنَهُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ
ஷைத்தான் ஊடுறுவ முடிந்த வழி
عَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (( إِنَّ الشَّيْطَانَ قَدْ أَيِسَ أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِي جَزِيرَةِ الْعَرَبِ، وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ   [ رواه مسلم
மது சூதாட்டங்களின் மூலம் சைத்தான் பகையை உண்டு பண்னுகிறான்,
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاء فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ
உலகில் நடைபெறுகிற பல தனி நபர் குடுமபச் சண்டைகள் இவ்விரண்டின் மூலமே ஏற்படுகின்றன


ஈகோ உணர்வை தூண்டிவிடுவதன் மூலம் பகையை ஏற்படுத்துகிறான்,
மிகச் சிறந்த அல்லாஹ்வின் நல்லடியார்களைத் தவிர இதிலிருந்து தப்பிக்க முடியாது,
பெரும்பாலான மனிதர்கள் ஈகோவினால் பகையுணர்வுக்கு ஆளாகிறார்கள்
கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஆட்சியில் இருந்த போது ஒரு காரியம் குறித்து அவரிடம் சில பிரமுகர்கள் பேசினார்கள், அதை ஏற்றுக் கொண்ட அபூபக்கர் ரலி அவர்கள் “எதற்கும்  உமர் ரலி அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை மறுத்தார்கள், ஜனாதிபதியிடம் திரும்பி வந்த பிரமுகர்கள்
الخليفة أنت أم هو ؟
என்று கேட்டு பகையயை உருவாக்க முய்றசி செய்தனர் ஆனால் அபூபக்கர் ரலி அவர்களோ " هو إذا شاء "  அவர் சொன்னது சொன்னது தான் என்று சொல்லி அவர்களின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் .
இத்தகைய சூழ்நிலைகள் அமைவது அரிது,
சஹாபாக்களிடையே மிகப்பெரிய சகோதரத்துவமும் ஒற்றுமையையும் ஏற்பட்ட பிறகு அதைக் குலைக்க எதிரிகள் பல கட்டமாக முய்றசித்த போதும் அல்லாஹ் அவர்களை பாதுகாத்தான்.
أحد اليهود دفع غلاماً ليُلْقي قصيدةٌ على الأوس في هجائهم، من قبل الخزرج، فهذه القصيدة أُلْقيت، ويبدو في ساعة غفلة ذكَّرتهم بالخصومات السابقة ؛ فتلاسنوا، وتماسكوا، واستلّوا سيوفهم وكادوا يقتتلون، فخرج النبي عليه الصلاة والسلام بين أظهرهم وقال: ((.أبدعوى الجاهلية وأنا بين أظهركم)))
 وغضب غضباً شديداً، وأنزل الله سبحانه وتعالى في هذا قرآناً فقال تعالى:
﴿ يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِنْ تُطِيعُوا فَرِيقاً مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ يَرُدُّوكُمْ بَعْدَ إِيمَانِكُمْ كَافِرِينَ (100) وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آَيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ (101)( سورة آل عمران )0
( الدر المنثور في التفسير المأثور
பகையுணர்வு பெருகுவதற்கு இன்னொரு முக்கியக் காரணம், பிறர் விசயத்தில் தப்பெண்ணம் கொள்வதாகும்.

தபூக் யுத்ததிற்கு கஃபு பின் மாலிக் அவர்களால் வர முடியவில்லை. யுத்த களத்தில் வைத்து அவரைப் பற்றி பெருமானார் விசாரித்தார்கள். சில தோழர்கள் அவருடைய தோட்டம் துறவுகள் அவரை வர விடாமல் செய்து விட்டன் என்று சொன்னார்கள், அப்போது அதை மறுத்த தோழர்கள் இல்லை அவர் நல்லவர் தான் ஏதோ ஒரு தடை அவரை இங்கு வரவிடாமல் தடுத்து விட்டது என்றார்கள் . அல்லாஹ்வின் தூதரே இப்போது நம்மோடு வர முடியாமல் போய்விட்ட சில தோழர்கள் எங்களை விட உங்கள் மீது அதிக அன்பு கொண்டவர்கள் என்றார்கள்.

سأل  النبي عن شخص تخلف عن معركة تبوك،قيل  له: " شغله بستانه عن الجهاد معك  ، فوقف صحابي قال له: " لا والله يا رسول الله ما علمنا عليه إلا خيراً، لقد تخلَّف عنك أناسٌ ما نحن بأشد حباً لك منهم، ولو علموا أنك تلقى عدواً ما تخلَّفوا عنك ".

பகை உணர்வு பெருகுவதற்கு இன்னும் சில முக்கியக் காரணிகள்
1.   பொறாமையுணர்வு
2.   கோள் சொல்லுதலும்
3.   எதெற்கெடுத்தாலும் கோபம் கொள்ளுதல்
4.   கருத்து வேறுபாடுள்ள பிரச்சினைகளில் ஒரு தரப்பாக அதிக
5.   காட்டுதல்
6.   சுயநலம்
இது போன்ற இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன,
இந்தப் பெருநாளின் இனிய பொழுதில் இவற்றை நாபகப் படுத்துவதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது
இன்றைய முஸ்லிம் உலகம் அதிகப்படியான பகையுணர்வுக்கு ஆளாகியிருக்கிறது,
வெளியிலிருந்து நம்மை நோக்கி வருகிற பகை அல்ல, நமக்குள்ளேயே உருவெடுக்கிற பகை அதிகரித்திருக்கிறது
மதீனாவில் குண்டு வைக்கிற அளவிற்கு அந்த பகை வளர்ந்திருக்கிறது.
நல்லிணக்கத்தின் மாதமான ரமானின் நிறைவில் பெருநாளை கொண்டாடுகிற நாம் மனித சமூகத்தின் முதல் எதிரியான பகை என்ற தீமையை அழித்தொழிக்க எல்லா நிலையிலும் சபதம் ஏற்போம்
குடும்ப உறுப்பினர்களிடம் பகை இருக்கும் எனில் மன்னிப்போம் மறப்போம் நடபுணர்வோடு வாழ்வோம் .
لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث ليال، يلتقيان فيعرض هذا ويعرض هذا، وخيرهما الذي يبدأ بالسلام . رواه البخاري ومسلم .

  فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ {الشورى:40}

பகை உருவாகும் அளவு தர்க்கம் செய்வதை தவிர்த்து விடுவோம்
عن أبي أمامة قال: قال رسول الله صلى الله عليه وسلم: أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا


பகைய உருவாக்கும் குழப்பங்களுக்கு காரணமாவதை எல்லா நிலையிலும் தவிர்ப்போம்.
சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் தொப்பி போடாமல் சென்றால் குழப்பம் வரும் என்று தெரிந்தும் அப்படி செய்கிறவர்கள் பகையுன்ர்வுக்கு காரணமாகிறார்கள்.
நமது சுய நலத்தின் அடிப்படையில் பொது விசயங்களை அனுகுவதை தவிர்ப்போம்.
நாம் மிகச் சுத்தமானவர்கள் என்ற நினைத்துக் கொண்டு அடுத்தவர்கள் மீது கோபப் படுவதை குறைத்துக் கொள்வோம்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற வரிகளை குடும்பத்தினர் விசயத்தில் அதிகமாக நினை வில் வைப்போம். அது கோபத்தை தணிக்க உதவும்.

அல்லாஹ் நல்லிணக்கத்திற்கு நம்மை பக்குவப்படுத்தும் ஒரு மாதததை நமக்கு வழங்கினான், நாம் பக்குவப்படிருக்கிறோம் என்பதை இனி வரும் காலங்களில் நிரூபிப்போம்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!
அனைவருக்கும் ஈத் முபாரக்

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. தங்களின் வெள்ளிமேடையை உபயோகிக்கும் நூற்றுக்கணக்கான ஆலிம்களில் நானும் ஒருவன். தங்களிடம் பணிவுடன் ஒரு வேண்டுகோள். வெள்ளிமேடையில் தாங்கள்குறிப்பிடும் ஹதீஸ் மற்றும் அரபு வார்த்தைகளுக்கு தமிழ் மொழி பெயர்ப்பும் கொடுத்தால் மிக மிக உதவியாக இருக்கும். மேலும் தங்களது வெள்ளி மேடைகளை புத்தகமாக தொகுத்தால் ஆயிரக்கணக்கான ஆலிம்கள் பயன் பெறுவர்.

    ReplyDelete
  2. உங்கள் தொகுப்புகள் புத்தகங்களாக வருவதை ஆவலுடன் காத்திருக்கிறோம்

    ReplyDelete