வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 07, 2016

உடலும் ஊடகமும்



இஸ்லாமிய வாழ்வென்பது மிகவும் தரமானது.  உயர்வானது.
முஸ்லிமுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் கொடுத்த விளக்கத்தை கவனித்தால் இது புரியும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْمُسْلِمُ مَنْ سَلَمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
நமது பெற்றோரில் தொடங்கி வேலைக் காரர்கள் வரை யாருக்கும் கையாலும் நாவாலும் தொல்லை தராத வாழ்வைப் பற்றி யோசித்துப் பாருங்கள்!
குடும்ப நடவடிக்கைகளில் இருந்து சமுதாயப் பணிகள் வரை அனைத்திலும் இவ்வாறு நடந்து கொள்ளும் ஒரு வாழ்வை யோசித்துப் பாருங்கள்.
இன்றைய நம்முடைய நடைமுறையிலோ பிறருக்கு துன்பம் தராத வகையில் எதுவும் இல்லை என்றாகிவிட்டது, பேச்சால் நடத்தையால் ஆக்ரமிப்பால், அதிகப்பிரசங்கித்தனமான செயல்களால் அடுத்தவருக்கு தொல்லை கொடுப்பது சகஜமாகி விட்டது, அது நமது தனிப்பட்ட உரிமை என்றும் அவ்வாறு நடந்து கொள்வது தான் நமது அந்தஸ்த்து என்றும் கருதுகிற மனப்போக்கு வந்து விட்டது,
சென்னையில் ஒரு பெண் பகலில் இரயில் நிலையத்தில் இளைஞன் ஒருவனால் வெட்டிக் கொல்லப்பட்டாள்.  படித்த இன் ஜினியர் இளைஞன், பக்கா ரவுடி போல் இளம் பெண்ணை நிமிட நேரத்தில் வெட்டிச் சாய்த்து விட்டு ரொம்ப சாதுவாக ஆடு மேய்க்கச் சென்று விட்ட கதை கடந்த வாரத்தில் தமிழகத்தை உளுக்கி எடுத்தது.  
பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்தது போல நாட்டில் கொலைகள் சகஜமாகி விட்டது,
: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
( لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ ، وَتَكْثُرَ الزَّلَازِلُ ، وَيَتَقَارَبَ الزَّمَانُ ، وَتَظْهَرَ الْفِتَنُ ، وَيَكْثُرَ الْهَرْجُ ، وَهُوَ الْقَتْلُ الْقَتْلُ ، حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ - البخاري (1036) ومسلم (157)

படு கொலை செய்யப் பட்ட இளம் பெண் சுவாதியின் வழக்கு மட்டுமல்ல, சமூக ஊடகங்கள் பல வற்றின் பாதிப்பினாலும் பல இளம் பெண்கள் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதையும் கவனித்துப் பார்க்கிற போது இரண்டு விசயங்களில் நாம் உடனடி கவனம் செலுத்த வேண்டியிருப்பது புலனாகிறது.
1.   பெண்களுக்கான எச்சரிக்கை
சோஷியல் மீடியாக்களில் நமது பெண்களின் ஈடுபாட்டை எந்த அளவு எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது.
கால நேரமில்லாமல் ஸ்மார்ட் போன்களில் மூழ்கிக் கிடக்கிற பெண்கள் சைத்தானிய வலைக்குள் தாமாகவே சிக்கிக் கொள்கிறார்கள்.
நட்பு வட்டம். சமூக உறவு , பரஸ்பரம் புரிந்துணர்வு – என்றெல்லாம் எத்தகைய நாகரீக வார்த்தைகளை சொல்லி ஊடகங்களான செல்போன் , வாட்ஸ் அப் பேஸ்புக் ஆகியவற்றை நியாயப்படுத்த முயன்றாலும் ஆபத்தின் குகைக்குள் வலியச் சென்று தலையை விடுவதாகவே இவை அமைந்துள்ளனர் என்பதில் நாம் எச்சரிக்கை அடைய வேண்டும் , நம்மைச் சார்ந்தவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.
பெருமானாரின் அற்புதமான எச்சரிக்கை இது
عَنْ جَابِرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلا يَخْلُونَّ بِامْرَأَةٍ لَيْسَ مَعَهَا ذُو مَحْرَمٍ مِنْهَا ، فَإِنَّ ثَالِثْهُمَا الشَّيْطَانُ " .  

தனி அறையில் இருந்தால் தான் தனிமை என்பதல்ல. நூறு பேர்களுடன் கலந்திருந்தாலும் இன்றை ஸ்மார்ட் போன்களும் டேட்டா கனெக்சனும் நம்மை சுற்றி ஒரு தனிமையை சிருஷ்டித்து விட்டன,

அல்லாஹ் யூதர்களை தீஹ் மைதானத்தில் கம்பி இல்லாமல் , சுற்றுச் சுவர் இல்லாமல் சிறைக்காவலர்கள் இல்லாமல்  திறந்த வெளிச்சிறையில் தனிமைப் படுத்தியது போல இன்றைய ஸமார்ட் போன்கள் நம்மை எந்த சுற்றுச் சுவரும் இல்லாமல் தனிமைப் படுத்தி வைக்கின்றன,

சைத்தான் ஊடுறுவதற்கான எளிய பாதை அது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

பெண்களுக்கு இந்த எச்சரிக்கைய சரியாக புரிய வைக்க வேண்டும்.

படித்துப் பட்டம் பெற்று கை நிறையச் சம்பாதிக்கிற சூழ்நிலைக்கு அவர்கள் வந்திருந்தாலும் கூட, ஆண்களுடன் சகஜமாக பழக்கம் ஒரு நாள் அல்லது இன்னொரு நாள் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். சைத்தான் ஊடுறுவம் மிக எளிய வழி அது.

2.       பிறருக்கு துன்பம் தரக் கூடாது எனும் அடிப்படைச் மானுடச் சிந்தனை

பிறருக்கு தொல்லை தரக் கூடாது என்ற சிந்தனையை  எவ்வளவு அழுத்தமாக நம்முடைய மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான அடுத்தமான பாடமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது,
ஒருவர் தன்னை விரும்பாவிட்டால் – தன்னுடைய கோரிக்கையை ஏற்காவிட்டால் அவரை கொலை செய்து விடலாம் என்ற சிந்தனை தனிமனிதர்களிடமு அரசுப் பெருப்பில் இருப்பவர்களிடமும் ஏற்பட்டு விட்டால் உலகம் மிகக் கொடூரமான நிகழ்வுகளை சந்திக்க வேண்டியது வரும்.
இப்னு லுஃலுஃ என்ற பணியாளனின் கோரிக்கையை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ள வில்லை, அதனால் அவன் தேர்ந்தெடுத்த முடிவு எவ்வளவு ஆபத்தாகி விட்டது?  நீதிக்கென்றே உயிர் வாழ்ந்த உமர் ரலி அவர்களை சாய்த்து விட்டது.
உஸ்மான் (ரலி) தமது விருப்பத்திற்கு எதிராக செயபடுவதாக தாங்களாகவே நினைத்துக் கொண்டா எகிப்திலிருந்து வந்த சிறு குழுவினர் உஸ்மான் (ரலி) அவர்களை கொலை செய்தனர்.
யசீதுக்காக ஒப்புதல் பெற வந்த படை வீரர்கள் – இராக்கின் கூபா நகரத்திலிருந்து  அமைதியாக மதீனா திரும்பிச் செல்ல அனுமதி கேட்ட  ஹுசைன் ரலி அவர்களை யசீதுக்கு பை அத் செய்து கொடுத்தால் தான் விடுவோம் என நிர்பந்தித்து ஹுசைன் ரலி அவர்களை கொலை செய்தனர்,
எத்தகைய கொடூரங்கள் இவை!
ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டாலும் அழிக்க முடியாத வடுக்கள்.
எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் . பிறரை துன்புறுத்தக் கூடாது. அது என்ற அடிப்படை நியாய உணர்வை தவற விட்டதாகும்
நமது நாவால் பிறர் துன்பத்திற்குள்ளாகும் பல தீமைகள் உண்டு,

ஏசுவது
கோள் சொல்வது
புறம் பேசுவது  
அவதூறு பரப்புவது

இவை அனைத்துக்கும் கடும் கண்டனங்களை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்,

عَبْدِ اللهِ بْنِ مَسْعودٍ أَنَّ النَّبِيّ صلى الله عليه وسلم قَالَ سِبَابُ الْمُسْلِم فُسُوقٌ وَقِتالُهُ كُفْرٌ. متفق عليه.

قال النبي صلى الله عليه وسلم: (( لا يكون اللعانون شفعاء ولا شهداء يوم القيامة )) رواه مسلم .

قال النبي صلى الله عليه وسلم: (( لا يدخل الجنة نمام )) رواه البخاري ومسلم .

قال النبي صلى الله عليه وسلم: (( لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم )) رواه أبو داود .

ن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم مر بقبرين يعذبان فقال(( إنهما يعذبان وما يعذبان في كبير بلى إنه كبير أما أحدهما فكان يمشي بالنميمة وأما الآخر فكان لا يستتر من بوله )) رواه البخاري ومسلم .

قال السمرقندي: (ليس شيء من الذنوب أعظم من البهتان، فإنَّ سائر الذنوب يحتاج إلى توبة واحدة، وفي البهتان يحتاج إلى التوبة في ثلاثة مواضع. وقد قرن الله تعالى البهتان بالكفر، فقال تعالى: فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ [الحج: 30]

ஒருவரிடம் இருக்கும் குறையை பிறரிடம் பேசுவது கீபத் – இல்லாததை சொல்வது அவதூறு.

சோஷியல் மீடியாக்களில் இந்த தவறுவகள் தவறுகளைப் போல தெரியாமலே நடந்து விடுகின்றன,

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குவாலிட்டியான முஸ்லிமிற்கு இது அழகல்ல,

நமது செயல்களால் பிறரை துன்புறுத்தும் செயல்கள் பலதுண்டு,
அடிப்பது , மிரட்டுவது
திருட்டு கொள்ளை கொலை
அடுத்தவரின் உரிமையை ஆக்ரமிப்பது.\
وقال صلى الله عليه وسلم : ( من غصب شبراً من الأرض طوقه من سبع أرضين ) ,
 وقال صلى الله عليه وسلم : ( من قضيت له بحق أخيه ؛ فلا يأخذه ؛ فإنما أقطع له قطعة من نار


وَاعْبُدُوا اللهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي القُرْبَى وَاليَتَامَى وَالمَسَاكِينِ وَالجَارِ ذِي القُرْبَى وَالجَارِ الجُنُبِ وَالصَّاحِبِ بِالجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا {النساء:36}

قال النبي صلى الله عليه وسلم: خير الأصحاب عند الله خيرهم لصاحبه. رواه أحمد والترمذي وصححه الألباني وقواه شعيب الأرناؤوط.

وَالصَّاحِبِ بِالجَنْبِ  என்பதற்கு கொஞ்ச நேரம் அருகிலிருப்பவர்கள் என்று பொருள்.
இரயிலில் அல்லது பேருந்தில் கொஞ்ச நேரம் அருகில் இருப்பவருக்கும் அவரது உரிமையை தர வேண்டும். அவரது இடத்தை ஆக்ரமிக்க கூடாது, ஜன்னலை உபயோகிப்பதில் கவனம் வேண்டும். பேசிக் கொண்டோ விளையாடிக் கொண்டோ வரும் போது அவரது உரிமைகளையும் மதிக்க வேண்டும் என முப்தீ ஷபீ சாஹிப் இதற்கான விளக்கத்தை தெளிவு படுத்தியுள்ளார்கள்.
பிறருக்கு துன்பம் தரக் கூடாது என்ற இலட்சியத்தை முஸ்லிமுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விதைத்தார்கள். அதை பிஸிகலாகவும் உடல் ரீதியாகவும் டெக்னிகலாகவும் கருத்து ரீதியாகவும் கவனித்து நடந்து கொள்ள வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும்.
இது முஸ்லிமின் குவாலிட்டியாகும். நமது தனிப்பட்ட  எந்த விருப்பமும் ஈடுபாடும் இந்த எல்லைகளை மீற நாம் அனுமதிக்க  கூடாது,
நாமும் சமுதாயமும் அமைதியாகவும் சிறப்பாகவும் வாழ இது அவசியமானது,  

No comments:

Post a Comment