முஸ்லிம்களாகிய
நாம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
இஸ்லாமிய
ஷரீஅத் சட்டத்தை கடை பிடிக்க கடைமைப்
பட்டிருக்கிறோம்.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ
أَمْرًا أَنْ يَكُونَ لَهُمْ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ
فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا(36) الأحزاب
அவ்வாறு
கடைபிடிக்கிற போது தான் முஸ்லிம்
என்று சொல்லிக் கொள்ளும் தகுதி நமக்கு இருக்கிறது.
ورد في الحديث "والذي نفسي بيده لا
يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به"
وورد في الحديث كل أمتي يدخلون الجنة إلا من أبى، قيل: يا رسول الله ومن يأبى؟ قال:
من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى))
وقال البخاري: حدثنا علي بن عبدالله حدثنا
محمد بن جعفر حدثنا معمر عن الزهري عن عروة قال: خاصم الزبير رجل ا في شراج الحرة فقال
النبي صلى الله عليه وسلم "اسق يا زبير ثم أرسل الماء إلى جارك" فقال الأنصاري:
يا رسول الله إن كان ابن عمتك؟ فتلون وجه رسول الله صلى الله عليه وسلم ثم قال
"اسق يا زبير ثم احبس الماء حتى يرجع إلى الجدر ثم أرسل الماء إلى جارك"
قال الزبير: فما أحسب هذه الآية إلا نزلت
في ذلك "فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم" الآية. هكذا رواه
البخاري
பெருமானாரின்
தீர்ப்பை ஏற்க மறுத்த முஸ்லிமுக்கு உமர் ரலி மரண தண்டனை கொடுத்தார்கள். ஒரு முஸ்லிமை உமர் எப்படி கொல்லலாம்
என அவருடைய குடும்பத்தவர்கள் சர்ச்சை செய்த போது இறைத்தூதரின் தீர்ப்பை ஏற்காதவர்கள்
விசயத்தில் உமர் ரலி அவர்களை நிரபராதியாக்கும் வகையில் அல்லாஹ் வசனத்தை அருளினான்,
عن أبي الأسود قال: اختصم رجلان إلى رسول
الله صلى الله عليه وسلم فقضى بينهما فقال المقضى عليه: ردنا إلى عمر بن الخطاب فقال
رسول الله صلى الله عليه وسلم "نعم انطلقا إليه" فلما أتيا إليه فقال الرجل:
يا ابن الخطاب قضى لي رسول الله صلى الله عليه وسلم على هذا فقال ردنا إلى عمر بن الخطاب
فردنا إليك فقال أكذاك؟ قال نعم فقال عمر: مكانكما حتى أخرج إليكما فأقضي بينكما فخرج
إليهما مشتملا على سيفه فضرب الذي قال ردنا إلى عمر فقتله وأدبر الآخر فأتى إلى رسول
الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله قتل عمر والله صاحبي ولولا أنى أعجزته
لقتلني فقال رسول الله صلى الله عليه وسلم "ما كنت أظن أن يجترئ عمر على قتل مؤمن"
فأنزل الله "فلا وربك لا يؤمنون حتى يحكموك" الآية فهدر دم ذلك الرجل وبريء
عمر من قتله
சட்டத்தை கடைபிடிக்க
வேண்டியதற்கான கண்டிப்பு அழுத்தமாக செய்யப்பட்டிருக்கிறது.
அவ்வாறு கடை
பிடிப்பது வேண்டா வெறுபாக அல்ல. இது அல்லாஹ் நமக்களித்த மாபெரும் நிஃமத் இது பரிபூரணமானது, இந்த உலகின் செயற்கையான எந்தச் சட்ட விதியும் இதற்கருகே
கூட நிற்கும் தகுதியற்றது என்ற எண்ணத்தில் விருப்பத்தோடும் நன்மையை எதிர்பார்த்தும்
கடை பிடிக்க வேண்டும்.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ
نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ﴾ [المائدة: 3
அல்லாஹ்
பரிபூரணப்படுத்திய மார்க்கம் மனிதச் சட்டங்களுடன் எந்த
வகையிலும் ஒப்பிட்டு பார்க்க முடியாதது,
தத்துப்
பிள்ளை சொந்தப் பிள்ளையாக முடியாது
என்பது இஸ்லாமிய ஷரீ அத்தின் சட்டம்
உலகின்
பல சட்ட அமைப்புக்களும் சொந்தப்பிள்ளைகளாகவே
கருதுகின்றன.
ஆணால்
என்ன நடந்தது,
தமிழக
முதலமைச்சர் தத்தெடுத்த தனது மகனை இரத்து
செய்தார்.
அதே
போல் தமிழகத்தின் பெரும் செல்வந்தர் செட்டி
நாட்டி அரசர் எம். ஏ,
எம் இரமசாமி
உடையார் தனது தத்தை இரத்து
செய்வதாக அறிவித்தார். அது சர்ச்சையானது,
ஒரு திருமணத்தில்
இணையும் போது தமது சொந்த முடிவில் இணையும் தம்பதியர் அவரது சொந்த விருப்பத்தின் அடிப்படையில்
நியாயமாகவும் எளிதாகவும் பிரிந்து கொள்ளும் வாய்ப்பை இஸ்லாம் வழங்குகிறது.
கருணையோடு அந்த
பிரிதல் அமைய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.
فَإمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ
ஆண்கள் தான்
விவாகரத்து செய்ய முடியும். பெண்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று இது காலம் வரை உலகம்
சொல்லிக் கொண்டிருந்த நிலையில் தன்னைக் கவனித்துக்கொள்ளாத - திருப்திப்படுத்தாத – துன்புறுத்துகிற கணவனிடமிருந்து
பிரிந்து கொள்ளும் குலா எனும் வாய்ப்பை இஸ்லாம் பன்னூறு வருடங்களுக்கு முன்பே வழங்கியிருந்தது.
இது விசயத்தில் கணவர்கள் மனைவியை துன்புறுத்தக்கூடாது என்ற எச்சரிக்கையையும் வழங்கியிருந்தது.
في الحديث: أن امرأة ثابت بن قيس جاءت إلى النبي صلى الله عليه وسلم،
فقالت: يا رسول الله، ما أنقم عليه من خلق ولا دين، إلا أني أكره الكفر في
الإسلام، فقال رسول الله صلى الله عليه وسلم: "أتردين عليه حديقته؟" فقالت: نعم، فردتها عليه، وأمره ففارقها.
وفي رواية، فقال له: "اقبل الحديقة وطلقها تطليقه" رواه البخاري.
وفي رواية، فقال له: "اقبل الحديقة وطلقها تطليقه" رواه البخاري.
இது
நடந்தது ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு
என்பதை நினைவில் வையுங்கள்.
ஒரு
பெண்மணி தைரியமாக நபியிடம் வந்து தலாக் கேட்கிறார்.
வேறு கடுமையான காரணம் ஏதும் இல்லை.
மனம் ஒத்து வாழ முடியாது
என்கிறார். பெருமானார் அவர் பிரிந்து செல்ல
அனுமதித்தார்கள். தலாக்கை
பெற்றுக் கொடுத்தார்கள். மிக எளிமையாக இந்தக்
காரியம் நிறைவேறியது.
ويسن له إجابتها أي إجابة طلب زوجته المخالعة، لحديث امرأة ثابت بن
قيس .
என்று இஸ்லாமிய
சட்ட நூல்கள் கூறுகின்றன.
பிரிவு என்பது
தீர்மாண பிறகு அதற்கான வழியை இஸ்லாம் இலகுவாக்கியுள்ளது.
வேறு பல சமூகங்களிலும்
பெண்கள் பிரிய நினைத்தால் அது இன்றும் கூட பெரும் கஷ்டமான விசயமாகவே இருக்கிறது.
தலாக் நடை முறை
எளிதாக இருப்பது ஆண்களின் ஆதிக்கத்தின் அடையாளம் என்றே பலரும் தவறாக நினைக்கிறார்கள்.
அது ஒரு சில
முறைகெட்டவர்களின் நடவடிக்கையை பார்த்ததால் எழும் சிந்தனையாகும்.
தலாக் குலா
நடை முறைகள் பெண்களின் பாதுகாப்பையும் அவர்களது நன்மையையும் முழுக்க கவனத்தில் கொண்ட
ஒரு நடவடிக்கையாகும்.
ஒரு வாரத்திற்கு
முன் எனக்கு தெரிந்து ஒரு திருமணம் நடந்தது.
ஒரு பெண் இரண்டு
குழந்தைகள் பெற்றவர். அவரை கணவன் கவனிக்கவில்லை. செலவுக்கு கொடுப்பதும் இல்லை. வீட்டுக்கு
வருவதும் இல்லை. பல மாதங்கள் தனித்து இருக்கிறார். அவர் படும் சிரமத்தை பார்த்த தந்தை
மகளுக்கு விவாகரத்து பெற்று விட்டால் வேறு நல்ல மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்து
விடலாம் என நினைத்தார். ஜமாத்தை அணுகினார். அந்தப் பெண்ணின் தரப்பில் நியாயமிருப்பதை
ஜமாத்தார் அறிந்தார்கள். கணவனை வரவழைத்து விவாரத்து பெற்றுக் கொடுத்தார்கள். அந்தப்
பெண்ணின் இத்தா காலம் முடிந்ததவுடன் நல்ல மாப்பிள்ளை கிடைத்தார். அந்தப் பெண்னுக்கு
மறுமணம் இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது இருபதாயிரம் ரூபாய் ரொக்கமும் சிறிதளவு தங்கமும்
மஹராக கொடுத்து ஒரு இளைஞன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
எல்லாமுமாக
சேர்ந்து ஐந்து மாததில் முடிந்து விட்டது.
அலைச்சலோ செலவோ
எதுவும் இரண்டாயிரத்து மேலில்லை.
முத்தலாக் விவகாரத்தில்
மிகச் சில இடங்களில் பெண்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதுவும் விவரமற்று நடந்து
கொள்ளும் ஆத்திரக் கார ஆண்களால் அல்லது அறியாமையில்
பஞ்சாயத்து செய்பவர்களால் இந்த விபரீதம் நடக்கிறது.
முத்தலாக் நடை
முறை கூட பெண்களை பாதுகாக்கும் நோக்கில் செய்யப்பட்ட ஒரு ஏற்பாடே ஆகும்.
கணக்கில்லாமல்
விளையாட்டுத் தனமாக தலாக் விடுவதும் பிறகு ஏதாவது ஒரு வகையில் நிர்பந்தமாக மனைவியைச்
சேர்த்துக் கொள்வதும் நடை முறையில் இருந்த காலகட்டத்தில் மூன்று தலாக்கிற்கு மட்டுமே
அனுமதி என்றும் அதற்கு பிறகு கணவன் மனைவி எளிதில் சேர முடியாது என்றும் ஒரு வரையரையை
மார்க்கம் விதித்தது.
كان الرجل
في الجاهلية يطلق امرأته ما شاء أن يطلقها، وهي امرأته إذا راجعها وهي في العدة،
وإن طلقها مائة مرة أو أكثر، حتى جاء الإسلام وحدد الطلاق بمرتين، فإذا طلق
الثالثة فلا تحل له حتى تنكح زوجاً غيره
இன்று இஸ்லாமிய
சட்டங்களில் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் அனைத்து விசயங்களிலும் இஸ்லாம் பெண்களுக்கு
உபகாரமும் கருணையும் காட்டியது என்பது தான் உண்மை.
எனவே இஸ்லாமிய
ஷரீஅத்தின் சட்டங்களோ நமக்கு நன்மையானது. அது அல்லாஹ் கொடுத்தது. அதை கடை பிடித்தால் இம்மையிலும் மறுமையிலும் நன்மையை
தேடித்தரக்கூடியது என்ற கருத்தில் முஸ்லிம்கள் உறுதியோடு இருக்க வேண்டும்.
சில நேரங்களில்
இஸ்லாமிய ஷரீ அத்தின் சட்டங்கள் நமக்கு பொருத்தமற்றவை போலத் தெரியலாம். ஆழ்ந்து சிந்தித்து
சரியான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டோமானால் அதன் அழகையும் புனிதத்துவத்தையும் நம்மால்
உணர்ந்து கொள்ள முடியும்.
ஒரு முறை ஒரு
கல்யாண வீட்டில் பந்தியில் இருந்த போது பக்கத்தில் வந்து உட்கார்ந்து ஒருவர் கேட்டார்.
ஹஜ்ரத் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். பெண் வீட்டார் வசதியான குடும்பத்தவர்கள்.
எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான் . அதன் பிறகு என் மனைவி இறந்து விட்டார். நான் வேறு
திருமணம் செய்து என் மகனை என்னுடன் வைத்து கவனித்து வருகிறேன். எனது முன்னாள் மனைவியின்
தந்தை சமீபத்தில் இறந்து விட்டார். அவர்களிடம் எனது மகனுக்கான சொந்த்து வேண்டும் என்று
கேட்டேன். தந்தைக்கு முன்னாலேயே மகள் இறந்து விட்டதால் இஸ்லாமிய வாரிசுரிமைப் படி சொத்து
கிடைக்காது என்று சொல்லி விட்டனர். இது சரியா என்று அவர் கேட்டார். அப்படித்தான் ஷரீ
அத் சொல்கிறது என்று நான் சொன்னேன். அதென்ன நியாயம் என்றார். சாப்பிட்டு முடியும் வரை
காத்திருங்கள் என்று சொல்லி விட்டு கை கழுவிய பிறகு அவரை ஒரு இடத்தில் அமர்த்தி விளக்கினேன்.
இஸ்லாத்தில் வாரிசுரிமை என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு கிடைக்கி ஒரு வழிப் பாதை
அல்ல. ஒரு சில நேரங்களில் தந்தையின் குற்றத்திற்காக
மகன் தன்னிடமிருக்கிற சொத்தை அளிக்க வேண்டியதும் வாரிசுரிமையின் படி நிர்பந்தமாகும்
இப்போது சொல்லுங்கள் உங்களது மாமனாருக்கு சொத்து இருப்பதால் உரிமை கேட்கிறீர்களே ஒரு
வேளை அவர் இரண்டு கோடி ரூபாய் கடன் வைத்திருந்தால் அதில் பங்கேற்க முன் வருவீர்களா
என்றேன். அவர் சரிதான் என்று சொல்லி எழுந்து சென்றான்.
சட்ட ரீதியாக
இந்த தீர்ப்பை வழங்கிய இஸ்லாம். நீதியின் அடிப்படையில் இன்னொரு ஏற்பாட்டிற்கும் அனுமதி
வழங்கியிருக்கிறது.
சட்டம் அல்லது
சந்தர்ப்பம் காரணமாக வாரிசுரிமை பெற முடியாமல் போகிறவர்களுக்கு நன்மை செய்ய சொத்துக்கு
சொந்தக்காரர் நினைத்தால் தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதி வரை அவர் தானமாக எழுதி வைக்க
முடியும். இதன் மூலம் சொத்தில் நேரடி பங்குபெற முடியாதவர்கள் நிம்மதி அடைவார்கள்.
இவ்வாறு ஒரு
பரிபூரணமான ஏற்பாட்டை எல்லா துறையிலும் இஸ்லாமிய ஷரீ அத் சட்டம் வழங்குகிறது.
செருப்பணிவதிலிருந்து நகம் வெட்டுவது வரை குழந்தை
பெறுவதிலிருந்து இறந்தவர்களை அடக்கம் செய்வது வரை நமது ஷரீஅத் நமக்கான வழிகாட்டுதல்கள்
சிறப்பாகவும் எளிமையாகவும் வழங்கியிருக்கிறது/
ஒரு முஸ்லிம் இறந்து போனால் அவர் அடக்கம் செய்யப்படுகிற
ஒழுங்கைய்யும் மரியாதையையும் கவனித்துப் பார்த்தால்
போதுமானது இஸ்லாமிய ஷரீ அத் எனக்கு ஏன் வேண்டும் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.
(மதுரையில் நான் சந்தித்த ஒரு நிகழ்ச்சி இது
(ஆலிம்கள் ஊரைச் சொல்ல வேண்டாம்.)
ஒரு கிறுத்துவ சகோதரர் இஸ்லாமை தழுவினார். அவரது
பெற்றோர்களுடனேயே அவர் வசித்தார். 17 வருடங்களாக பெற்றோர்கள் கிருத்துவர்களாகவும் மகனும்
அவனது குடும்பமும் முஸ்லிம் குடும்பமாகவும் ஒரு வீட்டில் வசித்தனர். மகன் பல முறை எடுத்துச் சொல்லியும் தந்தை இஸ்லாத்திற்கு
வரவில்லை. கடைசி நேரத்தில் தாய் இஸ்லாத்தில் இணைந்தார். அந்த அம்மையார் இறந்த போது
அவரது ஜனாஸாவை அடக்கம் செய்ய ஜமாத்தார்கள் ஒன்று திரண்டதும் மூஸ்லிம் பெண்கள் அந்த
அம்மையாரை மிகுந்த மரியாதையோடு குளிப்பாட்டி அடக்கம் செய்ததையும் கண்ட தந்தை இஸ்லாமை
தழுவினார்.
இஸ்லாமிய ஷரீ
அத்தின் அழகுகளும் நன்மைகளும் ஏராளம் என்பதால் தான் இந்த நவீன கால கட்டத்திலும் முஸ்லிம்கள்
அதை கூடுமானவரை கை விடாது பின்பற்றி வருகின்றனர்.
நம்முடைய நாட்டில்
நமது அர்சியலமைப்பு சிவில் உரிமைகளில் இஸ்லாமிய ஷரீஅத்தை பின்பற்ற நமக்கு முழு உரிமை
அளித்துள்ளது. நமக்கு மட்டு மல்ல இந்த நாட்டில் வாழ்கிற ஒவ்வொரு மதத்தவரும் அவரது மத
விதிகளின் படி வாழ்ந்து கொள்ள பூரண அனுமதி பெற்றவர் ஆவார்.
சாமாணிய மக்கள்
நிர்வாணமாக செல்ல சட்டம் அனுமதிக்காது. அதே வேளையில் இந்து மதததில் நிர்வாணம் என்பது
ஒரு துறவு நிலை என்பதால் துறவிகள் நிர்வாணமாக இருப்பதை சட்டம் அனுமதிக்கிறது. காசியில்
நடை பெறுகிற கும்ப மேளாவின் போது சாமியார்கள் கூட்டம் கூட்டமாக நிர்வாணமாக இருப்பதையும்
அந்த சாமியார்களிடம் பெண்கள் ஆசி வாங்கச் செல்வதை ஒரு கலாச்சாரமாக இந்திய ஊடகங்கள்
காட்டுவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஜைன மதத்திலும்
கிருத்துவ மதத்திலும் பெண்கள் திருமண உறவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட
அடையாளத்தோடு இருக்க வைக்கப்படுவதை சமய உரிமை என்ற வகையில் இந்திய அரசியல் ஏற்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு
தனி நபரும் அவரது தனிப்பட்ட வாழ்வில் தங்களது சமயத்தின் சிவில் சட்டங்களின் படி வாழ்
அனுமதிப்பதுதான் நாகரீக அரசியலின் அடையாளமாகும்.
இஸ்லாமிய அரசு
நடை பெறுகிற நாடுகளில் சிறுபான்மை இனத்தவர்களின் சிவில் உரிமைகளிலும் நம்பிக்கைகளிலும்
குறுக்கீடுகள் செய்யப் படாது, செய்யப்படக் கூடாது என்பது இஸ்லாமின் வழிகாட்டுதலாகும்.
முஹம்மது நபி
(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மஜூஸிகல் வாழ்ந்தார்கள்,
அவர்கள் நெருப்பை வணங்கினர். அதே போல சொந்த சகோதரிகளை திருமணம் செய்யும் நடைமுறையும்
அவர்களிடம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை தடுக்க வில்லை. (மஆரிபு)
இந்தியாவை முஸ்லிம்கள்
ஆட்சி செய்த போது இங்கும் அப்படியே மக்களது சிவில் விசயங்கள் அவர்களது சொந்த மதக் கோட்பாடுகளின்
படியே தீர்க்கப்பட்டன.
எனவே
தனியார் சட்டம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல.
பன்னூறு
ஆண்டுகளாக இங்கே நடை முறையில் இருந்த வழக்கமாகும். இத்தனை நூற்றாண்டுகளாக இந்திய
ஐக்கியத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை.
ஆங்கிலேயர் காலத்தில் கி.பி. 1862-ல் I.P.C. (
INDIAN PENAL CODE ) என்ற கிரிமினல் சட்ட முறையைக் கொண்டு வந்தார்கள். இது இங்கிலாந்தின் சட்ட முறையினை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்டது.
பின்னர்,
1937-ல் முஸ்லிம் தனியார் சட்டம் ( MUSLIM
PERSONAL LAW – Shariath Application Act – 1937 ) அமலுக்கு வந்தது. பின்னர், அதனைத் தொடர்ந்து 1939-ல் முஸ்லிம் திருமணச் சட்டம் ( MUSLIM MARRIAGES ACT – 1939 ) ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
இன்று வரை அது நடப்பில் இருக்கிறது.
இந்த தனியார் சட்ட அமைப்பானது இப்போது வரை இந்திய முஸ்லிம்களுக்கு பல வகையிலும் நிம்மதியளிக்கிற பிரச்சனைகளுக்கான சரியான தீர்வை விரைவாக அளிக்கிற நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த
நிம்மதியை குலைத்து விட வேண்டும் என்று
அவ்வப்போது சில தீய திட்டங்கள்
பூதகாரமாக கிளப்பப் பட்டு வந்தது.
ஏதேனும்
ஒரு சில வழக்குகள் அரிதாக
கிடைக்கிற போது அதை கையில்
எடுத்துக் கொண்டு இந்திய நீதி
அமைப்புக்களும் ஊடகங்களும் பேயாட்டம் ஆடிவிடுகின்றன.
அவர்களுக்கு
சாதகமாக இருக்கிற இன்னொரு விசயம் இந்திய
அரசியல் சாசனத்தின் இறுதியில் சட்டமாக ஆக்கப்படாவிட்டாலும் எதிர்காலத்தில்
சட்ட மாக ஆக்கலாம் என்ற
கருத்தில் சில விதிகளை வழி
காட்டு நெறிகளாக கூறப்பட்டுள்ளது.
அதில்
44 வது விதி இந்தியா முழுமைக்குமான
ஒரு பொதுவான சிவில் சட்டத்தை
கொண்டு வர வேண்டும் என்று
கூறுகிறது.
இப்படி
ஒரு விதியை அம்பேத்கார் ஜவஹர்லால்
நேரு உள்ளிட்டோர் சேர்ப்பதற்கு காரணம் இந்து மதத்தில்
உள்ள ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மூலம்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்க்கப்பட்ட அநீதியை சமன் செய்வதற்காகவேயாகும்.
இந்து
மதத்திற்கு ஒரு சட்ட அமைப்பு
இருக்க வில்லை. எனவே நாடாளுமன்றத்தின்
நான்குசுவர்களுக்குள் இந்து மதத்திற்கான சட்டம்
வகுக்கப்பட்டது.
ஒரு தார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்ட திருத்தம் போன்ற சில திருத்தங்களை உள்ளடக்கிய இந்துச் சட்ட மசோதாவை 1951-ல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார் அன்றைய சட்ட அமைச்சர் அம்பேத்கர்.
காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் இந்துத்துவ வாதிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் இம்மசோதாவை மூர்க்கமாக எதிர்த்தனர்.
இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.
இந்து மசோதா மீதான விவாத்தையே தடை செய்யத் திட்டமிட்ட இந்துத்துவக் கும்பல், எல்லா மதத்தினருக்கும் சேர்த்து பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கோரி பிரச்சினையைத் திசை திருப்பியது.
அதன் மூலம் முசுலீம்களையும் தூண்டிவிட்டு இந்துச் சட்டத்திற்குச் சமாதி கட்ட முயன்றது.
”இந்துச் சட்ட மசோதாவை எதிரிப்பவர்கள் ஒரே நாளில் பொது சிவில் சட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிவிட்டது எனக்கு வியப்பளிக்கிறது” என்று அவர்களின் முகத்திரையைக் கிழித்தார் அம்பேத்கர்.
இப்போதும் அப்படித்தான்
மத்தியில் இருக்கிற பாஜக அரசு நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதில் பல வகையிலும்
தோற்று விற்ற நிலையில் பொது சிவில் சட்டம் என்ற பூச்சாண்டியை கையில் எடுத்துள்ளது.
ஒரு பக்கமும்
முஸ்லிம்களுக்கு ஆத்திரமூட்டுவது இன்னொரு பக்கம்
மீடியாக்களின் கவனத்தை இந்தப் பக்கமாக திசை திருப்பி விடவும் நினைக்கிறது.
தீய நோக்கங்களும்
தீய திட்டங்களும் நீண்ட நாளைக்கு வெற்றியை தராது..
இதற்கு முன்னரும்
மிகச் சாதாரணமான வலிவற்ற ஷாபானு வழக்கை வைத்துக் கொண்டு நாட்டில் ஒரு பெரும் கிளர்ச்சியையும்
கலவரத்தையும் நீதிமன்றங்களே நாட்டில் உருவாக்கி விட்டன. இப்போதும் அப்படி முயற்சிகள்
நடக்கிறது.
முத்தலாக் விசயத்தில்
நீதி மன்றம் எல்லை மீறுகிறது, மத்திய சட்டக் கமிஷன் இன்னொரு பக்க்கம் பொது சிவில் சட்டத்திற்காக
முன்னோட்டம் பார்க்கும் வகையில் தன்னுடைய இணைய தளத்தில் கேள்வித்தாள் ஒன்றை கொடுத்து
கருத்துக் கணிப்பு நடத்துகிறது.
சட்டக் கமிசன்
வெளியிட்டுள்ள 16 கேள்விகளும் உண்மையில் கேள்விகளே அல்ல. அவை திட்டமிட்டு முஸ்லிம்
சமூகத்தை குறிவைப்பதை அப்பட்டமாக உணர முடிகிறது என சட்ட அறிஞர்களும் என் டி டிவி ஹிந்தி
போன்ற நியாயமான ஊடகங்களும் வெளிப்படுத்தியுள்ளன,
தனியார் சட்டம்
ஏற்புடையது தானா அது மக்களுக்கு நன்மையானதா என்று என்று 3 வதாக கேட்டுவிட்டு பிறகு 7 வது கேள்வியில் முத்தலாக் என்ன
செய்யப்பட வேண்டும் என்று தனியாக கேள்வி எழுப்ப்பப்பட்டுள்ளது.
பேருக்கு இந்து
கிருத்துவ நடைமுறைகள் குறித்து இரண்டு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன,
இத்தனைக்கும்
இந்து கிருத்துவ திருமண சட்ட விதிகள் குறித்து கேட்பதற்கு நூற்றுக்கணக்கான கேள்விகள்
இருக்கின்றன.
பொது சிவில்
சட்டம் என்பது இந்திய மக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளுக்கும் சமாதி கட்டி விட்டு அந்த
சமாதியின் மேல் எழுப்பப் பட முடியுமே தவிர மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒரு
போதும் உருவாக்கப்பட முடியாது.
அக்கா மகளை
திருமணம் செய்வது முறை என்கிற தமிழ இந்துக்களின் வழக்கு அது கூடவே கூடாது என்கிறது
இஸ்லாம். சித்தப்பா மகளை திருமணம் செய்யலாம் என்கிறது இஸ்லாம். அது கூடவே கூடாது என்கிறது
தமிழக கலாச்சாரம்.
இது மட்டுமல்ல
குடும்பத்தின் மூத்த ஆண் மகன் தான் சொத்துக்கு முழு வாரிசு என்கிறது சில இந்துச் சமூகங்கள்.
அனைத்து மகன்களுக்கு வாரிசுரிமை சமமானது என்கிறது இஸ்லாம். அதே நேரத்தில் கேரளத்தில்
சில சமூகங்கள் மருமகனுக்குத் தான் வாரிசுரிமை சேரும் என்று சொல்கின்றன.
இராஜஸ்தானிலும்
நாட்டின் மற்ற பல பகுதிகளிலும் புதிரான் வழக்கங்களும் பழக்கங்களும் ஏராளமாக இருக்கின்றன.
இவற்றை ஒன்றாக
ஆக்குவது என்பது தேவையற்றது என்பது மட்டுமல்ல. நாட்டின் பல்லின சமூக சூழலுக்கு கேடு
விளைவிப்பதுமாகும். மக்களை இயந்திரங்களாக கருதுவதுமாகும்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிற போது மாட்டுக்கறிக்கு தடை விதிப்பது போன்ற சட்டங்கள் அடுத்த வீட்டுக்காரரை நமக்கு எதிராகத் தூண்டுமே தவிர இணக்கமாக வாழ்வதற்குரிய வழி அதுவாக இருக்க முடியாது.
இந்திய அரசியல் சாசணத்தின் வழி காட்டு நெறிகள் முதலில் நாடு முழுக்க மதுவிலக்கை அமுல் படுத்தக் கூறுகிறது. அனைத்து சாராரும், அனைத்து மதத்தவரும் எதிர்க்கக்கூடிய, சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் அழித்தொழிக்க விரும்பும் ஒரு விஷயத்தை முதலில் கையில் எடுப்பதை விட்டு விட்டு மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கிற ஒன்றை தேச நலனாக காட்டுவது சந்தர்ப்பவாத அரசியலின் சதிப் புத்தியாகும் இதில் நீதி மன்றங்களும் சிக்கிக் கொண்டு விட்டன என்பது தான் தேசத்திற்கு நேர்ந்த பெருங்கவலையாகும்
உண்மையில் பொது
சிவில் சட்டம் என்பதற்கான சாத்தியங்கள் அறவே கிடையாது என்பதை முஸ்லிம் தலைவர்கள்
30 வருடங்களுக்கு முன்னரே தெளிவு படுத்தி விட்டனர்.
இந்துத்துவாவின்
தலைவர்களின் ஒருவரான கோல்வால்கர்
1972
ஆகஸ்ட் 20-ல் தீனதயாள் உபாத்யாயா ஆராய்ச்சிக்கழகத்தைத் துவக்கி வைத்துப் பேசியபோது,’பாரதத்தில் தேசிய ஒற்றுமையை உருவாக்கப் பொது சிவில் சட்டம்தான் கருவியாகும் என்று சொல்வது தவறு; இயற்கைக்கு விரோதமானது; விபரீத விளைவுகள் உண்டாக்கக் கூடியது.’ என்று அறிவுறுத்தி இருந்தார். (MOTHER LAND பத்திரிக்கை - 21/08/1972 )
பொது சிவில்
சட்டம் என்பதன் சாத்தியக்கூற்றையும் அதன் பாதிப்புக்களையும் அனைவரும் தெரிந்தே இருக்கின்றனர்.
இருந்தும் தமது குறைகளை மறைப்பதற்காகவும் நாட்டின்
ஒரு வெறுப்பு அரசியலை நடத்துவதற்காககவும் இந்துத்துவ சக்திகள் இதை முன்னெடுத்து வருகின்றன
இது விசயத்தில்
முஸ்லிம்கள் அதிகம் உணர்ச்சி வசப்பட வேண்டாம் என்று முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில்
முஸ்லிம்களை சீண்டிப்பார்க்கும் அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களின் தீய முயற்சிக்கு
நாங்கள் விழித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நாங்கள் ஷரீஅத்தின் படியே வாழ விரும்புகிறோம்
என்று பதில் தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது/
எனவே இந்திய
சட்ட கமிஷனின் முய்ற்சிக்கு இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் சரியான பதிலை அளித்திருக்கிறது/
சட்டக் கமிஷனின்
கருத்துக்கணிப்பை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
இது முஸ்லிம்களின்
மீது தொடுக்கப்பட்டுள்ள போர் என ஆயத்தமாகிறது
என எச்சரித்திருக்கிறது.
அதே நேரத்தில்
நாங்கள் இஸ்லாமிய ஷரீ அத் சட்டத்தின் படி வாழ விரும்புகிறோம் என்பதை இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் கீழ்
நாங்கள் ஒன்றினைந்து பிரகடணப்படுத்துகிறோம் என்ற ஒரு படிவத்தை தயார் செய்து அதில் நாட்டிலுள்ள
முஸ்லிம் ஆண்கள் பெண்கள் அனைவரிடமும் கையெழுத்துப் பெற்று இந்திய சட்ட வாரியத்திற்கு
வழங்கவும் அது திட்டமிட்டிருக்கிறது.
ஆகவே முஸ்லிம்கள்
அரசாங்கத்தின் தீய திட்டத்தை தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த படிவத்தில் கையெழுத்திட்டு
வழங்குமாறு தமிழ் மாநில அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத் ஜமாத்துல் உலமா கேட்டுக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில்
நமது ஷரீஅத் சட்டத்தின் மீது நாம் மேலும் பற்றுதலுடனுன் மதிப்புடனும் இருக்க வேண்டிய
அவசியத்தை இந்த சதி முயற்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. அதையும் நாம் சரியாக உனர்ந்து
கொள்ள வேண்டும்.
ஷரீ அத்தை சரியாக
புரிந்து அதனடிப்படையில் முழுமையாக வாழ வேண்டும்.
ஷரீ அத் சட்டங்களை
தவறாக பயன்படுத்தவும் கூடாது. ஷரீ அத் சட்டங்களை புறக்கணித்து விட்டு மரியாதையை தேட
முயற்சிக்கவும் கூடாது.
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ
وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ ﴾ [آل عمران: 85]،
حَدَّثَنَا أَبُو
هُرَيْرَةَ ، إِذْ ذَاكَ
وَنَحْنُ بِالْمَدِينَة ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ : " تَجِيءُ الْأَعْمَالُ يَوْمَ الْقِيَامَةِ ، فَتَجِيءُ
الصَّلَاةُ ، فَتَقُولُ : يَا رَبِّ ، أَنَا الصَّلَاةُ ، فَيَقُولُ : إِنَّكِ عَلَى خَيْرٍ ، فَتَجِيءُ الصَّدَقَةُ ، فَتَقُولُ : يَا
رَبِّ ، أَنَا الصَّدَقَةُ ، فَيَقُولُ : إِنَّكِ عَلَى خَيْرٍ ، ثُمَّ يَجِيءُ
الصِّيَامُ ، فَيَقُولُ : يَا رَبِّ ، أَنَا الصِّيَامُ ، فَيَقُولُ : إِنَّكَ عَلَى خَيْرٍ ،
ثُمَّ تَجِيءُ الْأَعْمَالُ عَلَى ذَلِكَ ، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ : إِنَّكَ عَلَى خَيْرٍ ، ثُمَّ يَجِيءُ الْإِسْلَامُ ، فَيَقُولُ : يَا
رَبِّ أَنْتَ السَّلَامُ ، وَأَنَا الْإِسْلَامُ ، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ
: إِنَّكَ عَلَى خَيْرٍ ، بِكَ الْيَوْمَ آخُذُ ، وَبِكَ أُعْطِي "مسند أحمد
بن حنبل
ஷரீஅத் சட்டத்திற்கு
ஒரு எதிர்ப்பு வரும் என்றால் அதை நாம் சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை நமது உறுதியால்
அரசிற்கும் உலகிற்கும் புரிய வைக்க வேண்டும்.
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ
مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
ஒரு
அரபி குத்பா அற்புதமாக அறிவுறுத்துகிற்து
أيها المسلمون:
اعرفواحقيقة دينكم وتفقَّهوا فيه، وتمسَّكوا به واثبتوا عليه،
واغتَبِطوا به وحافظوا عليه، ولا يهولنَّكم إرجاف المرجِفين ووَعِيد المتسلِّطين
ممَّن طغَى وبغَى وجانَب الحق والهُدَى، ولا يفتننَّكم زخرف المبطِلين وتشبيه
المشبِّهين ممَّن آثَر الدنيا على الأخرى، وانحَرَف من بعد ما تبيَّن له الهدى،
وناب عن الشيطان في الدعوة إلى سبل الرَّدى، فلقد كان لكم في سلفكم الصالح خيرُ
مثالٍ يُحتَذَى؛ في الثَّبات على الحق، والتمسُّك بالدين عن إخلاص وصدق، والحذر من
مكائد المغضوب عليهم والضالِّين، ومؤامرات المنافقين والمبتدعين، وتلبيس أئمَّة السوء
المفتونين، فعَصَم الله السلف من الضَّلالة، وسلَّمَهم من الغواية، ونَجَّاهم من
الفتنة، وأنقَذَهم من الهلَكَة.
وإنَّ مْن يتأمَّل تاريخ الإسلام
الطويل في سائر الأعصار وشتَّى الأمصار، لَيتَجلَّى له حفْظ الله للإسلام، وصدْق
وعده ببقائه وظهوره على سائر الأديان، وتحقيق وعْد الله جلَّت قدرته للمؤمنين
بالعز والتَّمكين، والنصر المبين على سائر أعداء الدين، مهما كانوا عليه من قلَّة
العدد وضعْف العُدد، ومهما كان عليه أعداء الدين من كثْرة في العَدد وقوَّة في
العُدد، وإنَّ ذلك ممَّا يبعد خواطر التشاؤم عن القلوب، ويَبعَث على التفاؤل
بتمَكُّن الإسلام في القلوب، وضرورة غلبته وظهوره وهَيْمَنته على سائر الأمم
والشُّعوب.
وفي الحديث الصحيح عن النبيِّ - صلَّى الله عليه وسلَّم - قال:
((ليبلغنَّ هذا الدين ما بلَغ الليل والنهار))، وقال - صلَّى
الله عليْه وسلَّم -: ((إنَّ هذا الدين لا يترُك بيتَ مَدَرٍ - أي: طين - ولا وَبَرٍ - أي: غزل -
إلاَّ دخَلَه، بعزِّ عزيز وذلِّ ذليل
அல்லாஹ் கிருபை
செய்வானாக!
மா ஷா அல்லாஹ்!
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வு பொதிந்த ஆக்கம்.இன்ஷா அல்லாஹ் இன்றைய ஜுமுஆ வில் இது சம்பந்தமாகவும் திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்களுக்கு தலாக் இன்ன பிற திருமணத்திற்குப் பின் உண்டான நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவோம்
ReplyDeleteNalla karuttu
ReplyDeleteஅருமையான கருத்துக்கள்
ReplyDelete