உச்ச நீதிமன்றம்
முத்தலாக் சர்ச்சையை தொடங்கி வைக்க
இந்திய சட்ட வாரியம்
பொது சிவில் சட்ட சர்ச்சையை தொடங்கி வைக்க
மத்தியை ஆட்சியை
செய்து கொண்டிருக்கிற பாஜக அரசு தன்னுடைய இந்துதுவ முகத்தின் கோரத்தை வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறது.
முஸ்லிம்கள் ஷரீஅத்தின்
மீது தமக்குள்ள அக்கறையை உணர்ச்சி வசப்படுத்திக் கொண்டு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களை இவ்வாறு
உணர்ச்சி வசப்பட வைத்து அதன் மூலம் முஸ்லிம்கள் பிற்போக்கு தனமாக காட்டி ஒரு அநாவசிய
விவாதத்தை மீடியாக்கள் பரபரப்பாக செய்து வருகின்றன.
அரசின் திட்டம்
என்ன ?
தலித்கள் மீதான
தாக்குதல் சர்ஜிகல் ஸ்டிரைக் மீதான சந்தேகங்களை மறக்கடிக்கச் செய்யவும் உத்தரப் பிரதேசம்
உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு நடை பெற உள்ள தேர்தலில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை
கூர்படுத்தி இலாப மடையுவும் மத்திய அரசு நினைக்கிறது.
இந்துத்துவ அமைப்புக்களின்
செயல் திட்டங்களில் ஒன்று சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான சர்ச்சைகளை கிளப்பி விட்டுக்
கொண்டிருக்க வேண்டும் என்பது.
அதையே அவர்கள்
கவனமாக தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள்
நாம் என்ன செய்ய
வேண்டும்
இது மாதிரியான
சர்ச்சைகள் தொடர்ந்து உண்டு பண்ணப்பட வாய்ப்புக்கள் உண்டு. (அல்லாஹ் காப்பாற்றட்டம்.
சதிகாரர்களின் முயற்சியை அவர்களுக்கே பாதகமாக அல்லாஹ் மாற்றட்டும்!)
இது மாதிரியான
சந்தர்ப்பங்களில் நாம் பிரச்சனையை உண்மையான பிரச்சனையாக நினைத்துக் கொண்டு சட்டங்களுக்கான
விளக்கங்களை கூறவும், அதன் நியாயங்களை பேசவும் பிக்ஹு , ஷரீஅத் போன்ற வற்றின் புனிதங்களைப் பற்றி பேசவும் ஆரம்பித்து
விடுகிறோம்.
இது மாதிரியான
சந்தர்ப்பங்களில் அறிவுப்பூர்வமான செய்திகளை அல்லது சட்ட நுணுக்கங்களை நிதானமாக ஆராயவும்
எதார்த்தமான உண்மைகளையும் புரிந்து கொள்ள தயாரில்லாதவர்கள் பிரச்சனையை பூதாகரமாக்கி
விடுகிறார்கள்.
உதாரணத்திற்கு
மீடியாக்கள் முத்தலாக் பிரச்சனை அல்லது ஆண்களிடம் தலாக் அதிகாரம் இருப்பதை பெண்களுக்கு
செய்யப்படும் அநீதி என்று கூக்குரல் இடுகிறார்கள்.
அதே நேரத்தில்
இது விசயத்தில் எதார்த்தம் என்ன ? என்பதை கிரவுண்ட் லெவலில் ஆய்வு செய்யவோ அல்லது ஆய்வு
முடிவுகளை கேட்கவோ அவர்கள் தயாராகவே இருப்பதில்லை/. இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில்
தான் இருப்பதிலேயே தலாக்குகள் குறைவு என்பதையும் முஸ்லிம் ஜமாத்துக்கள் மூலம் தீர்த்து
வைக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் நூற்றுக்கு தொன்னூற்று ஐந்து சதவீதம் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு
சாதகமாகவோ தான் தீர்ப்பாகியிருக்கிறது என்பதையோ கவனிப்பதே இல்லை. இது சம்பந்தப்பட்ட தகவல் எவ்வளவு நாசூக்காக எடுத்துச்
சொல்லப்பட்டாலும் அதை அவர்கள் கண்டு கொள்வதில்லை.
அவ்வாறு கண்டு
கொண்டால் தலாக்கை எளிமைப் படுத்தியிருக்கிற இஸ்லாத்தின் சிறப்பியல்பு வெளிப்பட்டு விடுமே!
இப்போதும் மீடியாக்களுக்கும்
நீதிமன்றங்களுக்கும் மத்திய அரசுக்கும் நாம் அறைக கூவல் விடுகிறோம்.
பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் எந்தச் சமூகத்தில் அதிகமாக இருக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தவோ ஆய்வு
செய்யவோ தயாரா ?
தலாக் நடை முறையினால்
பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகமா ? நன்மை அடைந்த பெண்களின் எண்ணிக்கை அதிகமா
என்பதை கணக்கெடுப்பு நடத்திப் பார்த்து விடலாமா?
இது வரை புரியாத
புதிர் ஒன்று இருக்கிறது.
முத்தலாக் என்பதை
பெண்களுக்கு செய்யப்படுகிற அநீதி என்று குரல் எழுப்புகிறவர்கள் முத்தலாக் என்ன என்பதை
சிந்தித்துத்தான் பேசுகீறார்களா?
டிவோர்ஸ் என்ற
வார்த்தைக்கு இந்திய சட்ட வார்த்தைகளில் என்ன அர்த்தம் இருக்கிறதோ அதுத்தான் முத்தலாக்
என்பது
கணவனும் மனைவியும்
நிரந்தரமாக பிரிந்து விடுவார்கள் என்பது தானே!
டிவோர்ஸ் என்பது
பெண்களுக்கு எதிரானதாகவே பெரும்பாலும் இருக்கிறது.
சமீபத்தில் உச்ச
நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தனது தந்தையை விட்டு பிரிந்து வருமாறு
நிர்பந்தப்படுத்து கிற மனைவியிடமிருந்து டிவோர்ஸ்
கோரும் உரிமை கணவனுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் விவாகரத்து வழக்கில்
, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ்
ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'இந்து சமூகத்தில்
பிறந்த மகன், தன்னுடைய பெற்றோரை
இறுதி வரை காப்பாற்ற வேண்டும்;
பெற்றோரை பாதுகாப்பது அவனுக்கு பக்தியுள்ள கடமை; அவன் தான் பெற்றோரை கவனிக்க வேண்டும்; அப்படி பெற்றோருக்கு
பணம் செலவழிக்க மனம் இல்லாத தன் மனைவி,
தனிக்குடும்பம் செல்ல வேண்டும் என்று அவனை நிர்ப்பந்தித்தால், அவளை விவாகரத்து செய்ய, இந்து மதத்தை பின்பற்றும்
கணவனுக்கு உரிமை உண்டு'
இன்னொரு தீர்ப்பும்
இந்த ஆண்டு அக்டோபர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பதிவானது. (தி ஹிந்து 13 அக்டோபர் )
எந்த ஒரு நியாயமும், காரணமுமின்றி
நீண்ட காலம் கணவனுக்கு மனைவி பாலியல் உறவை மறுப்பது விவாகரத்திற்குரியதே என்று டெல்லி
உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
நான்கரை ஆண்டுகளாக தனக்கு பாலியல் உறவை காரணமில்லாமல் மறுத்து
மனரீதியாக கொடுமை இழைத்ததாக கணவர் ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய மனு செய்திருந்தார்.
அதாவது தன் மனைவிக்கு உடல் ரீதியாக எந்த ஒரு உபாதைகளும் இல்லை என்பதையும் அவர் தன்
மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், விசாரணை நீதிமன்றத்தில்
கணவனின் இந்தக் குற்றச்சாட்டை மனைவி மறுக்கவில்லை என்பதை கவனத்தில் எடுத்து கொண்ட உயர்
நீதிமன்றம், “மனைவி தனக்கு மனரீதியாக நீண்ட காலமாக கொடுமை
இழைத்து வந்துள்ளார் என்பதை கணவர் ஐயத்திற்கிடமின்றி நிறுவியுள்ளார். ஒரே வீட்டில்
வசித்து நீண்ட காலமாக கணவனுக்கு பாலியல் உறவை மறுப்பது எந்தவொரு நியாயமுமற்ற மனரீதியான
கொடுமை இழைத்தலே. மேலும் மனைவிக்கு எந்த வித உடற்கோளாறுகளும் இல்லை என்பதையும் கவனத்தில்
எடுத்து கொள்வதால் கணவனின் விவாகரத்து கோரிக்கையை இந்த கோர்ட் ஏற்றுக் கொள்கிறது” என்று தீர்ப்பளித்துள்ளது
இந்த தீர்ப்புக்களும்
பெண்களுக்கு பெண்ணுரிமைக்கு எதிரானவை என்று பெண்ணுரிமை பேசும் அமைப்புக்கள் கோருகின்றன.
எனவே டிவோர்ஸ்
நடைமுறையையையே எடுத்து விடலாமா ?
இந்திய சட்ட வரையறைகளில்
கூறப்படும் டிவோர்ஸ் என்ற வார்த்தையுன் பொருளைத் தான் முத்தலாக் என்ற சொல் சுமந்திருக்கிறது.
இஸ்லாம் கூறும்
முதல் தலாக் இரண்டாம் தலாக் என்ற சிறப்பம்சங்கள் முஸ்லிம் அல்லாத மற்றெவருக்கு கிடைக்கவே
வாய்ப்பில்லை.
முத்தலாக்கின்
ஒரே வேறு பாடு அதற்கு பின் தம்பதிகள் சேர்ந்து கொள்ள முடியாது என்பது தான். திருமணத்தின்
சட்டங்களான வாரிசுரிமை பெறுதல் போன்றவை கிடைக்காது
மூன்று முறையாக
தனித்தனியாக சொல்லிவிட்டாலும் அந்த நடை முறை தொடருமே!
டிவோர்ஸின் நடை
முறையும் இது தானே ! அனைத்து முஸ்லிம் நாடுகளிலும்
இந்தச் சட்டம் இருக்கிறதே!
பிறகு இதில் பெரிதாக
பேசுவதற்கு என்ன இருக்கிறது ?
இந்த எதார்த்தங்களை
நிதானமாக புரிந்து கொள்ள தயாராக இல்லாதவர்கள் இதை ஒரு சர்ச்சையாக தொடரவே ஆசைப்படுவார்கள்.
முத்தலாக் என்ற
ஒற்றை வார்த்தை பெண்னினத்திற்கு செய்யப்படும் அநீதி என்று பேசுவது ஒரு விசயத்தை வலிந்து
சர்ச்சையாக்குவதாகும்.
பலதார மண விவாகாரமும்
இப்படித்தான்.
ஒன்றிற்கும் மேற்பட்ட
பெண்களை திருமணம் செய்து கொள்ள
இஸ்லாம் அனுமதியளிக்கிறது.
கவனிக்க வேண்டும்
பல பெண்களை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் தூண்ட வில்லை, தேவை எனில் செய்து கொள்ள அனுமதி வழங்குகிறது
இது மனித உணர்வின் நியதிக்கேற்ற விசயமாகும்.
وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى
فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ
خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ
أَدْنَى أَلاَّ تَعُولُواْ
அதற்கான தேவையை ஏற்றுக் கொண்டு நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது.
قد احل الإسلام
تعدد الزوجات ولكن بشروط فإن لم يكن الرجل يملك هذه الشروط فلا يحق له التعدد ومن
أهم هذه الشروط :
· العدل
العدل هو أهم
الشروط : ((فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً)) [النساء 3]
فإن كان الإنسان غير قادر على العدل فلا يحق له التعدد ويكون العدل في كل الصور في
الماكل والمشرب والملبس والمسكن فلا يُفَرِقْ بين الاولى والثانية في المال او
المبيت
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ فَمَالَ إِلَى إِحْدَاهُمَا جَاءَ
يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ مَائِل – البخاري
عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ فَيَعْدِلُ وَيَقُولُ اللَّهُمَّ هَذَا قَسْمِي
فِيمَا أَمْلِكُ فَلَا تَلُمْنِي فِيمَا تَمْلِكُ وَلَا أَمْلِكُ قَالَ أَبُو
دَاوُد يَعْنِي الْقَلْبَ– ابوداوود
இதுகுறித்து ஒரு
திறந்த வெளிப்படையான விவாதத்திற்கும் ஆய்விற்கும் அரசும் மீடியாக்களும் தயாராவார்கள்
எனில் பலதாரமணத்த்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களை விட சட்ட ரீதியான அதிகாரம் சொத்துரிமை
பெருதல் சமூக அங்கீகாரம் ஆகிய விவகாரங்களில்
நன்மை அடைந்த பெண்களின் பட்டியலையே அதிகமாக காட்ட முடியும்.
அதே நேரத்தில்
பலதார மனத்தை மறுத்து வப்பாட்டி நடை முறையை ஏற்கிற இந்திய திருமணச் சட்டத்தால் தான்
பெண்களுக்கு அதிக தீமை எனது அப்பட்டமான உண்மையாகும்.
வப்பாட்டிக்கு
பிறந்த மகனுக்கு சொத்துரிமை உண்டு என்று இந்து திருமணச் சட்டம் கூறுகிறது.
சமீபத்தில் மூத்த
அரசியல் தலைவர் – ஆந்திர மாநிலத்தின் கவர்ணராக இருந்த திர்பாதி தனது முதிய வயதில் வப்பாட்டிக்கு
பிறந்த மகனை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப ஏற்றுக் கொண்டார்
சமீபத்தில் குட்டி
ராதிகா என்கிற நடிகையின் (வயது 22) போட்டோ
ஒரு ஆணுடன் இருப்பது போல பதிரிகையில் வந்தது. அப்போது தான் அவர் கர்நாட முன்னால் முதலமைச்சர்
குமாரசாமிக்கு (வயது 60) இரண்டாவது மனைவியாக இருப்பதாக தெரிய வந்தது . நான் இன்னொருவருடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
என்னை ஏன் துன்புறுத்துகிறீர்கள் என்று அவர் பதிரிகைகளுக்கு ஆதங்கப்பட்டு செய்தியளித்தார்.
மற்ற சமூக அமைப்பில்
கிட்டத்தட்ட கால்வாசிப் பெண்கள் வப்பாட்டி முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி ஒரு
தெளிவான விவாதத்திற்கு ஆய்வுக்கோ தயாராக இல்லாதவர்கள் பலதாரமணம் பற்றி பேசுகீறார்கள்.
எனவே இந்த விவாதங்களில்
முழக்கங்களில் உண்மை எதுவும் இல்ல.
ஒரு பரபரப்பை உண்டு
பண்ணவும் கவனத்தை திசை திருப்பவுமே இந்த வாதங்கள் பயன்படுகின்றன.
இந்தியச் முஸ்லிம்
தனி நபர் சட்ட வாரியத்தின் செயலாளளர் மொளலான வலி ரஹ்மானி மிக தெளிவாக இதைப் பற்றி கூறியுள்ளார்.
மத்திய அரசு தனது
தோல்விகளை மறைப்பதற்காக இந்தப் பிரச்சனையை எழுப்பியுள்ளது.
எனவே முஸ்லிம்கள்
இந்த எதார்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் திசை
திருப்புதலுக்கு நாமும் இணைந்து போய்விடக் கூடாது.
நாம் செய்ய வேண்டிய
முதல் காரியம்
நமது உறுதியையும்
தெளிவையும் வெளிப்படுத்தி விட வேண்டும்
கிப்லா மாற்றம்
செய்யப்பட்ட போது யூதர்கள் அதை பெரும் பிரச்சனையாக்கி திசை திருப்ப முயற்சி செய்தனர்.
மார்க்கத்தின் சத்தியத் தன்மையின் மீது கேள்வி எழுப்பினர். அவர்கள் எழுப்பிய சலனத்தின்
அடர்ந்த்தியை அல்பகரா அத்தியாத்தின் 142 முதல் 150 வரையிலான வசனங்களில் காண முடியும்.
அல்லாஹ் மிக எளிதாக
அதற்கு பதிலளித்தான். கிழக்கென்ன மேற்கென்ன அல்லாஹ்வுக்கே எல்லா திசையும் உரியது அவன்
எங்கு நோக்கச் சொன்னாலும் திரும்ப வேண்டியது தான் உங்களது பணி என்பதை தெளிவுபடுத்தினான்.
யூதர்கள் எழுப்பிக்
கொண்டிருந்த கூக்குரலுக்கு அதிகம் செவி கொடுக்கவில்லை. அவர்கள் சத்தியம் இன்னதென்று
உறுதியாக தெரிந்தும் அதை ஏற்க மறுப்பதற்கு இதை ஒரு தந்திரமாக பயன்படுத்துகீறார்கள்
என்பதை தெளிவுபடுத்தி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்
سَيَقُولُ السُّفَهَاءُ
مِنْ النَّاسِ مَا وَلَّاهُمْ عَنْ قِبْلَتِهِمْ الَّتِي كَانُوا عَلَيْهَا قُلْ لِلَّهِ
الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ(142)
وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ
الَّتِي كُنتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنقَلِبُ
عَلَى عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ
وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ(143)قَدْ
نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ
وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ
وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا
وُجُوهَكُمْ شَطْرَهُ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ
الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ(144)وَلَئِنْ
أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا
أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ وَلَئِنْ
اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنْ الْعِلْمِ إِنَّكَ إِذًا لَمِنْ
الظَّالِمِينَ(145)الَّذِينَ آتَيْنَاهُمْ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ
أَبْنَاءَهُمْ
وَإِنَّ فَرِيقًا مِنْهُمْ
لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ(146)الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُونَنَّ
مِنْ الْمُمْتَرِينَ(147)وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ
أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمْ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ
قَدِيرٌ(148)وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ
وَإِنَّهُ لَلْحَقُّ مِنْ رَبِّكَ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ(149)وَمِنْ
حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ
وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا
وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ
ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ
وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ(150)
இதே போல மக்காவின்
காபிர்கள் தேவையற்ற சத்தற்ற ஒரு விவாதத்தை தொடங்கினர்.
நீங்கள் அறுத்து
சாகடித்ததை சாப்பிடுகிறீர்கள் ; அல்லாஹ் உயிரைப் பறித்து சாகடித்ததை (தானாக செத்ததை
) சாப்பிட மறுக்கிறீர்களே என்று ஒரு கேள்வியை கேலியாக எழுப்பினர்
சத்தியத்தை ஏற்க
மறுக்கும் புத்தியின் திசை திருப்பும் வாதம் இது. இதற்கு எத்தனையோ வழிகளில் பதிலளிக்க
முடியும்.
நாம் சமைத்ததை
நாம் சாப்பிடலாம். ஒரு இடத்தில் சமைத்து வைக்கப்பட்ட உணவு கெட்பாரற்று இருக்கும் என்றால்
அதை சாப்பிட முடியாது. ஏனெனில் அதில் விசம் கலந்திருக்கலாம்.
அல்லாஹ் சாகடித்தத்தில்
விஷத்தனமை இருக்கலாம். அது உடலுக்கு ஆபத்தாக அமையக் கூடும்.
இப்படி பதில் சொல்லலாம்.
அறிவியல் பூர்வமாக
இப்படியும் பதில் சொல்லலாம்.
நாம் இரத்ததை வெளியேற்றி
விடுகிறோம். இரத்ததில் தான் எல்லா வகையான தீமைகளும் இருக்கின்றன.
செத்துப் போன பிராணியின்
இரத்தம் உறைந்து விடுகிறது . அது விசத்தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது எனவே தானாக செத்த்தை
சாப்பிடக் கூடாது
என்றும் பதில்
அளிக்கலாம் – இது போல இன்னும் பல வகைகளில் சிறப்பாக பதிலளிக்க முடியும்.
ஆனால்
அல்லாஹ் இதன் பக்கம் முஸ்லிம்களின்
கவனத்தை திருப்பவில்லை.
எதிரிகளின் திட்டம்
என்ன ? கவனத்தை திசை திருப்புவது ! அதற்கு நாம் உடன்பட்டு விடக்கூடாது
அல்லாஹ் வழி காட்டினான்,
முஸ்லிம்களே அவர்களிடம் சொல்லி விடுங்கள்
ஒவ்வொருத்தருக்கும்
ஒரு தனி வழி இருக்கிறது.
அறுத்து சாப்பிடுவது எங்களின் வழி
குர் ஆண் பல இடங்களிலும்
ஜாஹில் களிடமிருந்து அவர்களது வாதங்களில் இருந்து விலகி நிற்க அறிவுத்துகிறது.
புறக்கணிப்பு - கண்டு கொள்ளாமை என்பதும் பிரச்சனைகளை கையால்கிற
ஒரு ஆயுதம் தான்.
தேவையற்று உருவாக்கப்படுகிற
– அல்லது தீய நோகில் உருவாக்கப்படுகிற பிரச்சினைகளுக்கு சிக்கிக் கொள்வதிலிருந்து விலகிக்
கொள்வது புத்திசாலித்தனமாகும்
பொது சிவில் சட்டம்
முத்தலாக பிரச்சனைகள் தொடர்பாக தற்போது உருவாக்க்கப்பட்ட சூழலை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.
இது முழுக்க ஒரு
திசை திருப்பும் நடவடிக்கை எனப்தை புரிந்து கொள்ள வேண்டும்
நமது ஷரீஅத்தின்
பரிசுத்த தன்மையில் நமக்கிருக்கும் உறுதியை வெளிப்படுத்தி விட்டு அமைதியாக இருந்து
விட்டால் போதுமானது.
அதே நேரத்தில்
எதிலிருந்து மக்களின் கவனத்தை அவர்கள் திசை திருப்ப முயற்சி செய்கிறார்களோ அந்த உண்மையான
பிரச்சனைகளை நோக்கி மக்களின் கவனத்தை திருப்ப நாம் முயற்சிக்க வேண்டும்.
1.
இந்த்துத்துவா திணிப்பு
2.
தலித்கலின் மீதான தக்குதல்
3.
அரசின் தோல்விகள்
4.
மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் முயற்சிகள்
ஆகிய வற்றை ஷரீ
அத்திற்கு ஆதரவாக திரள்கிற அதே ஈடுபாட்டோடு நாம் பொது அரங்கிற்கு கொண்டு வர வேண்டும்.
No comments:
Post a Comment