வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 28, 2017

போராட்டக் களங்களை எதிர் கொள்வதே ஈமான்


முஹர்ரம் மாதத்தின் 8ம் நாளில் இருக்கிறோம்.
9 10 ஆகிய இரு நாட்களில்  ( 30 ம் தேதி சனிக்கிழமை 1 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரு நாட்களில் நோன்பு வைப்பது சுன்னத்து.
·       عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ  
அதற்கான கூலி அபரிமிதமானது
عن  أَبِي قَتَادَةَ - رضي الله عنه: ((وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ))  صحيح مسلم (1982).

பெருமானாரின் ஈடுபாடு

·       عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ  - البخاري 2006

சஹாபாக்களின் ஆர்வம்குழந்தைகளும் நோன்பு

فعن الربيّع بنت معوذ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار: " من أصبح مفطراً فليتم بقية يومه، ومن أصبح صائماً فليصمقالت: فكنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبة من العهن، فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار. البخاري:1960.

முன்னோர்களின் ஆர்வம்

·       كان بعض السلف يصومون يوم عاشوراء في السفر، ومنهم ابن عباس وأبو إسحاق السبيعي والزهري،
·       وكان الزهري يقولرمضان له عدة من أيام أخر، وعاشوراء يفوت، ونص أحمد على أنه يصام عاشوراء في السفر".   
ஆஷூராவில் மற்றொரு சுன்னத்து

·       والسنة في صوم هذا اليوم أن يصوم يوماً قبله أو بعده؛ لقول رسول الله صلى الله عليه وسلم: "لئن بقيت إلى قابل لأصومن التاسع" رواه مسلم.
·       عن عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا :  قال  حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

கிருத்துவுக்கு 1447 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு முஹர்ரம் மாதத்தின்  10 நாளில் எகிப்திய கொடுங்கோல் மன்னன் பிர் அவ்னிடம் கொத்தடிமைகளாக சிக்கி அல்லல் பட்டுக் கிடந்த யூதர்களை அல்லாஹ் காப்பாற்றினான்.

மிக ஆச்சரியமான முறையில்

மூஸா அலை அவர்கள் தனது தடியால் ஓரடி அடிக்க செங்கடல் 12 பாதைகளாக பிளந்து நின்றது. அதன் வழியாக யூதர்கள் தப்பித்தார்கள்

فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعينثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم- سورة الشعراء

கடலை தடியால் அடிப்பது என்பது ஒரு தத்துவம் – தடியால் அடிக்காமலும் கடலை பிளக்காமலும் கூட அம்மக்களை காப்பாற்றியிருக்க அல்லாஹ்வால் முடியும்.

அப்படி காப்பாற்றப் பட்டிருந்தால் அந்த மக்கள் அனைவரும் இறைநேசர்களாக ஆகியிருப்பார்கள், அது அவர்கள் ஒவ்வொரு வரின் கராமத்தாக அமைந்திருக்கும்.

அதனால் மூஸா  அலை தன்னுடைய மக்களை கடலுக்குள் இறங்குமாறுதான் முதலில் கூறினார்கள்.

ஆனால் யூதர்கள் அவர்களுடை இயற்கையான அவ நம்பிக்கை காரணமாக அந்த வாய்ப்பை இழந்தார்கள்.

தப்ஸீர் கபீரில் இது பற்றிய செய்தி பதிவாகியிருக்கிறது.,

روي عن ابن عباس رضي الله عنه ما أن موسى عليه السلام لما انتهى إلى البحر مع بني إسرائيل أمرهم أن يخوضوا البحر فامتنعوا إلا يوشع بن نون فإنه ضرب دابته وخاض في البحر حتى عبر ثم رجع إليهم فأبوا أن يخوضوا فقال موسى للبحر : انفرق لي ، فقال : ما أمرت بذلك ولا يعبر علي العصاة ، فقال موسى : يا رب قد أبى البحر أن ينفرق ، فقيل له : اضرب بعصاك البحر فضربه فانفرق فكان كل فرق كالطود العظيم أي كالجبل العظيم وصار فيه اثنا عشر طريقا لكل سبط منهم طريق فقال كل سبط : قتل أصحابنا ، فعند ذلك دعاموسى عليه السلام ربه فجعلها مناظر كهيئة الطبقات حتى نظر بعضهم إلى بعض على أرض يابسة ، وعن عطاء بن السائب أن جبريل عليه السلام كان بين بني إسرائيل وبين آل فرعون وكان يقول لبني إسرائيل ليلحق آخركم بأولكم ، ويستقبل القبط فيقول : رويدكم ليلحق آخركم ، وروي أن موسى عليه السلام قال عند ذلك : " يا من كان قبل كل شيء والمكون لكل شيء والكائن بعد كل شيء

இதில் பல செய்திகள் இருக்கிறது.

·         மூஸா அலை அவர்களின் முதல் உத்தரவு
·         யூசஃ நபியின் கராமத்
·         பாவிகள் தன்னை கடந்து செல்ல அனுமதிக்க முடியாது என்ற கடலின் மறுப்பு
·         அதை கட்டுப் படுத்த மூஸாவின் அடி
·         அதன் மூலம் மூஸா அலை அவர்களின் மக்ததுவத்தை மக்களுக்கு புரிய வைக்க அல்லாஹ் செய்த ஏற்பாடு.
·         யூதர்கள் அனைவரையும் காப்பாற்றவும் பிர் அவனுடைய படைகள் அனைத்தையும் அழிக்கவும் ஜிப்ரயீல் அலை அவர்கள் செய்த வேலை


யூதர்கள் மூஸா நபியின் முதல் உத்தரவுக்கு கட்டுப் பட்டிருப்பார்கள் எனில் அது யூதர்களின் விலாயத்தையும் அல்லாஹ்வின் குத்ரத்தையும் ஒரு சேர நிரூபித்திருக்கும். யூதர்கள் தமது நம்பிக்கையில் சருகியதால் இது அல்லாஹ்வின் குத்ரத்தை மூஸா நபின் முஃஜிஸாவையும் அடையாளப்படுத்தக் கூடியதாக மட்டுமே அமைந்து விட்டது.,

இஸ்லாமிய வரலாறு இன்னொரு களத்தை காட்டுகிறது, ஈமானில் உறுதிமிக்க மக்களுக்கு கடலும் நதியும் வழி விட்டு நிற்கும் என்ற வரலாறு அது.

அல் பிதாயா வன்னிஹாயாவில் உமர் ரலி அவர்களின் காலத்தில் முஸ்லிம் படைகள் பாராசீக்த் தை வென்றெடுத்த வரலாற்றை கூறி வருகையில் பாரசீகத்தின் அப்போதைய பிரதான நகராக இருந்த மதாயின் நகர வெற்றியை பற்றி பேசுகிறார் அல்லாமா இப்னு கஸீர் ரஹ் அவர்கள்
இதோ வரலாற்றின் அந்த மகத்தான பக்கம்

ذكر فتح المدائن

لما فتح سعد نهرشير واستقر بها، وذلك في صفر، لم يجد فيها أحدا ولا شيئا مما يغنم، بل قد تحولوا بكمالهم إلى المدائن، وركبوا السفن وضموا السفن إليهم، ولم يجد سعد رضي الله عنه شيئا من السفن، وتعذر عليه تحصيل شيء منها بالكلية، وقد زادت دجلة زيادة عظيمة، وأسودَّ ماؤها، ورمت بالزبد من كثرة الماء بها، وأخبر سعد بأن كسرى يزدجرد عازم على أخذ الأموال والأمتعة من المدائن إلى حلوان، وأنك إن لم تدركه قبل ثلاث فات عليك وتفارط الأمر.
فخطب سعد المسلمين على شاطئ دجلة فحمد الله وأثنى عليه وقال:
إن عدوكم قد اعتصم منكم بهذا البحر فلا تخلصون إليهم معه، وهم يخلصون إليكم إذا شاؤا فينا وشونكم في سفنهم، وليس وراءكم شيء تخافون أن تؤتوا منه، وقد رأيت أن تبادروا جهاد العدو بنياتكم قبل أن تحصركم الدنيا، ألا أني قد عزمت على قطع هذا البحر إليهم.
فقالوا جميعا عزم الله لنا ولك على الرشد فافعل.
فعند ذلك ندب سعد الناس إلى العبور، ويقول: من يبدأ فيحمي لنا الفراض - يعني: ثغرة المخاضة من الناحية الأخرى - ليجوز الناس إليهم آمنين.
فانتدب عاصم بن عمرو ذو البأس من الناس قريب من ستمائة، فأمر سعد عليهم عاصم بن عمرو فوقفوا على حافة دجلة، فقال عاصم: من ينتدب معي لنكون قبل الناس دخولا في هذا البحر فنحمي الفراض من الجانب الآخر؟
فانتدب له ستون من الشجعان المذكورين - والأعاجم وقوف صفوفا من الجانب الآخر - فتقدم رجل من المسلمين وقد أحجم الناس عن الخوض في دجلة، فقال: أتخافون من هذه النطفة؟
ثم تلا قوله تعالى: وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابا مُؤَجَّلا[آل عمران: 145] .
ثم أقحم فرسه فيها واقتحم الناس، وقد افترق الستون فرقتين أصحاب الخيل الذكور، وأصحاب الخيل الإناث.
فلما رآهم الفرس يطفون على وجه الماء قالوا: ديوانا ديوانا. يقولون: مجانين مجانين.
ثم قالوا: والله ما تقاتلون إنسا بل تقاتلون جنا.
ثم أرسلوا فرسانا منهم في الماء يلتقون أول المسلمين ليمنعوهم من الخروج من الماء، فأمر عاصم بن عمرو وأصحابه أن يشرعوا لهم الرماح، ويتوخوا الأعين، ففعلوا ذلك بالفرس، فقلعوا عيون خيولهم.
فرجعوا أمام المسلمين لا يملكون كف خيولهم حتى خرجوا من الماء، واتبعهم عاصم وأصحابه فساقوا وراءهم حتى طردوهم عن الجانب الآخر، ووقفوا على حافة الدجلة من الجانب الآخر، ونزل بقية أصحاب عاصم من الستمائة في دجلة فخاضوها حتى وصلوا إلى أصحابهم من الجانب الآخر، فقاتلوا مع أصحابهم حتى نفوا الفرس عن ذلك الجانب، وكانوا يسمون الكتيبة الأولى: كتيبة الأهوال، وأميرها عاصم بن عمرو.
والكتيبة الثانية: الكتيبة الخرساء وأميرها القعقاع بن عمرو، وهذا كله وسعد والمسلمون ينظرون إلى ما يصنع هؤلاء الفرسان بالفرس، وسعد واقف على شاطئ دجلة.
ثم نزل سعد ببقية الجيش، وذلك حين نظروا إلى الجانب الآخر قد تحصن بمن حصل فيه من الفرسان المسلمين، وقد أمر سعد المسلمين عند دخول الماء أن يقولوا: نستعين بالله ونتوكل عليه، حسبنا الله ونعم الوكيل، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.
ثم اقتحم بفرسه دجلة، واقتحم الناس لم يتخلف عنه أحد.
فساروا فيها كأنما يسيرون على وجه الأرض حتى ملؤا ما بين الجانبين فلا يرى وجه الماء من الفرسان والرجالة، وجعل الناس يتحدثون على وجه الماء كما يتحدثون على وجه الأرض، وذلك لما حصل لهم الطمأنينة والأمن، والوثوق بأمر الله ووعده ونصره، وتأييده، ولأن أميرهم سعد بن أبي وقاص أحد العشرة المشهود لهم بالجنة، وقد توفي رسول الله صلى الله عليه وسلم وهو عنه راضٍ ودعا له فقال: « اللهم أجب دعوته، وسدد رميته ».
والمقطوع به: أن سعدا دعا لجيشه هذا في هذا اليوم بالسلامة والنصر، وقد رمى بهم في هذا اليم فسددهم الله وسلمهم فلم يفقد من المسلمين رجل واحد غير أن رجلا واحدا يقال له: غرقدة البارقي ذل عن فرس له شقراء، فأخذ القعقاع بن عمرو بلجامها، وأخذ بيد الرجل حتى عدله على فرسه، وكان من الشجعان، فقال: عجز النساء أن يلدن مثل القعقاع بن عمرو.
ولم يعدم للمسلمين شيء من أمتعتهم غير قدح من خشب لرجل يقال له: مالك بن عامر، كانت علاقته رثة فأخذه الموج، فدعا صاحبه الله عز وجل، وقال: اللهم لا تجعلني من بينهم يذهب متاعي.
فرده الموج إلى الجانب الذي يقصدونه فأخذه الناس، ثم ردوه على صاحبه بعينه.
وكان الفرس إذا أعيا وهو في الماء يقيض الله له مثل النشز المرتفع فيقف عليه فيستريح، وحتى أن بعض الخيل ليسير وما يصل الماء إلى حزامها، وكان يوما عظيما وأمرا هائلا، وخطبا جليلا، وخارقا باهرا، ومعجزة لرسول الله صلى الله عليه وسلم، خلقها الله لأصحابه لم ير مثلها في تلك البلاد، ولا في بقعة من البقاع، سوى قضية العلاء بن الحضرمي المتقدمة؛ بل هذا أجل وأعظم فإن هذا الجيش كان أضعاف ذلك.
قالوا: وكان الذي يساير سعد بن أبي وقاص في الماء سلمان الفارسي فجعل سعد يقول: حسبنا الله ونعم الوكيل. والله لينصرن الله وليه وليظهرن الله دينه، وليهزمن الله عدوه، إن لم يكن في الجيش بغي أو ذنوب تغلب الحسنات.
فقال له سلمان: إن الإسلام جديد، ذللت لهم والله البحور، كما ذلل لهم البر، أما والذي نفس سليمان بيده ليخرجن منه أفواجا كما دخلوا أفواجا.
فخرجوا منه كما قال سليمان لم يغرق منهم أحد ولم يفقدوا شيئا.

நஹ்ர ஷேர் என்ற இடத்தை முஸ்லிம் படைகளின் தளபதி சஃது ரலி அவர்கள் அடைந்த போது எதிரிகள் அந்த ஊரை காலி செய்து மதாயின் நகரத்திற்கு அனைத்து செல்வங்களையும் கடத்திச் சென்று விட்டதும் அதே போல அங்கு செல்வதற்கு தேவையான கப்பல்கள் படகுகள் அனைத்தையும் கடத்தி சென்று விட்டதையும் அறிந்தார், இன்னும் மூன்று நாட்களுக்குள் மதாயின் நகரை அடையாவிட்டால் பாரசீக மன்னன் யஜ்தஜ்ரிதும் மற்ற  எதிரிகளும் அங்கிருந்தும் ஹலவானுக்கு தப்பிச் சென்று விடுவார்கள் என்பதை அறிந்தார். வெகு தூரத்தை மூன்று நாட்களுக்குள் கடக்க வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல. அப்போது திஜ்லா நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது, காற்றாற்று வெள்ளத்தின் காரணமாக நதியின் நிரமே கருத்துக் கிடந்தது,
சஃது ரலி கடலில் இறங்க ஆயத்தமானார். எதிர் கரைக்கு சென்று நாம் பாதுகாப்பாக இறங்குவதற்கான இடைவெளிகளை கண்டறிய முன்னதாக செல்ல யாரும் தயாரா என்று கேட்டார். 60 சஹாபாக்கள் தயாராயினர்.
அவர்கள் முன்னே சென்றார்கள். பின்னால் முஸ்லிம் படை மொத்தமும் நதியில் இறங்கி நடந்தது. வரலாறு சொல்கிறது ஏதோ சம் தரையில் நடப்பது போல அவர்கள் பேசிக் கொண்டு நடந்தனர், அவர்களின் குதிரை குளம்படிகள் கூட நனையவில்லை. ஒரு பொருளும் தொலைந்து போக வில்லை.

இந்தக் கடல் பயணத்தில் சஃது ரலி அவர்களுடன் இருந்து நடக்கிற காட்சியை கண்டு வியந்து நின்ற சல்மானுல் பார்ஸி ரலி கூறிய வார்த்தைகள் சத்தியத்தின் பறையறிவித்தலாகும்
முஸ்லிம்களுக்கு தரை அடிபணிந்தது போல கடலும் அடிபணிந்து விட்டது. நிச்சயமாக எப்படி இவர்கள் கூட்டமாக நதிக்குள் நுழைந்தார்களோ அது போலவே வெளியேறுவார்கள்.

فقال له سلمان: إن الإسلام جديد، ذللت لهم والله البحور، كما ذلل لهم البر، أما والذي نفس سليمان بيده ليخرجن منه أفواجا كما دخلوا أفواجا.

முஸ்லிம்கள் மதாயின் நகரத்தை வென்றார்கள். அவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகள் பன்னூறு ஆண்டுகளை கடந்து இப்போதும் முஸ்லிம் நாடாகவே திகழ்கிறது. காலம் கடந்தும் அந்த வெற்றி நிலைத்துக் கொண்டிருக்கிறது, கியாமத் நாள் வரை நிலைக்கும்.

யூதர்களோ மூஸா நபியின் பரக்கத்தினால் தப்பினார்கள் எனினும் தமக்கு கிடைத்த வாய்ப்பை இழந்தார்கள்.

அவர்களுடை பரிதாபம் தொடர்ந்தது. அது இறைவனின் சாபத்தில் வந்து நின்றது.

கடல் பிளந்து காப்பாற்றப்பட்ட யூதர்களுக்கு அல்லாஹ் ஒரு ஊரை தங்குமிடமாக தர நினைத்தான்.
தூர் சினாய் பகுதியில் இருந்த அரீஹா எனும் ஊரில் நுழைந்து அங்கிருக்கிற அக்கிரமக் காரர்களை விரட்டி விட்டு அங்கு குடியேறுமாறு அல்லாஹ் உத்தரவிட்டான்.
ஆனால் அப்போது அவர்களில் சிலர் “ மூஸாவின் சொல்லைக் கேளுங்கள், நீங்கள் உள்ளே நுழைய தயாராகி விட்டாலே , அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை தந்து விடுவான் எதிரிகளை விரட்டி விடுவான் என்ற சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள் கடல் பிளந்து காப்பாற்றப்பட்டதால் அல்லாஹ்வின் எந்தக் கட்டளைக்கும் கட்டுப்பட கடமைப் பட்ட யூதர்கள் அல்லாஹ்வின் உத்தரவை நபியின் வழிகாட்டுதலை மீறினார்கள். அல்லாஹ் தீஹ் மைதானத்தில் 40 வருடங்கள் நாடற்றவர்களாக அவர்களை அலைந்து திரிய வைத்தான்.

தீஹ் மைதானத்தை இப்போது இஸ்ரவேலர்களின் பாலை வனம் என்று அழைக்கிறார்கள். அது இப்போது ஜோர்டானில் இருக்கிறது. யூதர்களின் இழிவுக்கு இன்றும் சாட்சியாக இருக்கிறது.

 وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنبِيَاءَ وَجَعَلَكُم مُّلُوكًا وَآتَاكُم مَّا لَمْ يُؤْتِ أَحَدًا مِّنَ الْعَالَمِينَ (20يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا عَلَىٰ أَدْبَارِكُمْ فَتَنقَلِبُوا خَاسِرِينَ (21قَالُوا يَا مُوسَىٰ إِنَّ فِيهَا قَوْمًا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدْخُلَهَا حَتَّىٰ يَخْرُجُوا مِنْهَا فَإِن يَخْرُجُوا مِنْهَا فَإِنَّا دَاخِلُونَ (22قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ ۚ وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِن كُنتُم مُّؤْمِنِينَ (23)

قَالُوا يَا مُوسَىٰ إِنَّا لَن نَّدْخُلَهَا أَبَدًا مَّا دَامُوا فِيهَا ۖ فَاذْهَبْ أَنتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ (24)قَالَ رَبِّ إِنِّي لَا أَمْلِكُ إِلَّا نَفْسِي وَأَخِي ۖ فَافْرُقْ بَيْنَنَا وَبَيْنَ الْقَوْمِ الْفَاسِقِينَ (25قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ ۛ أَرْبَعِينَ سَنَةً ۛ يَتِيهُونَ فِي الْأَرْضِ ۚ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفَاسِقِينَ (26)

இப்னு அப்பாஸ் ரலி கூறுகிறார்கள் பூமியில் நீங்கள் அல்லல் படுவீர்கள் என அல்லாஹ் கூறினான். அந்த மைதானத்திற்குள் நுழைகிற போது இருபது வயதுடையவர்களாக இருந்த அனைவரும் அங்கு ஏற்பட்ட சிரமத்தால் இறந்து போனார்கள் . அல்லாஹ்வின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள் என்று கூறிய இருவரை தவிர மற்ற அனைவருடைய பிள்ளைகள் தான் பிற்காலத்தில் அரீஹாவுக்குள் நுழைந்தார்கள். நாங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறோம் என்று சொன்ன அனைவருமே இறந்து போனார்கள்.

عن ابن عباس قال: قال الله جل وعز: لما دعا موسى=" فإنها محرّمة عليهم أربعين سنة يتيهون في الأرض "(30) قال: فدخلوا التيه، فكلُّ من دخل التيه ممن جاوز العشرين سنًة مات في التيه

  ذكر لنا أن موسى صلى الله عليه وسلم مات في الأربعين سنة، وأنه لم يدخل بيت المقدس منهم إلا أبناؤهم والرجلان اللذان قالا ما قالا

மிக மிக முக்கியமான தொரு வாழ்க்கை பாடத்தை இந்த நிகழ்வு மக்களுக்கு தந்து கொண்டே இருக்கிறது,

மக்கள் அவர்களது ஈமானின் அடிப்படையில் வாழ வேண்டும். சம காலத்தின் வெற்றி தோல்விக்கான அம்சங்கள் அனைத்தையும் ஈமானிய அடிப்படையிலேயே அணுக வேண்டும் .

அவ்வாறு அணுகினால் அவர்கள் அல்லாஹ்வின் நேசர்களாகி விடுவார்கள். தமது பிரச்சனைகளுக்கான தீர்வையும் பெறுவார்கள்.

சஃது ரலி அவர்களுக்கு கிடைத்த மதாயின் வெற்றியை போல – திஜ்லாவை  நடந்தே கடந்ததைப் போல

போராட்டக் களத்தை விட்டு ஓடுவது ஈமானிய வாழ்க்கை அல்ல.  அவ்வாறு ஓடுகிறவர்கள் தமது நம்பிக்கையையும் இழப்பார்கள். உலகில் மேலும் சோதனைகளை அனுபவிக்கவே செய்வார்கள்.

மிக ஆச்சரியமாக ஆஷூரா நாளின் இந்த வரலாற்றுப் பாடம் இப்ப்போதைய ராக்கைன் மாநில முஸ்லிம்களுக்கும் ஒரு வகையில் பொருந்திப் போகிறது.

பர்மீய இராணுவத்தின் தாக்குதலை நேரிட்டு எதிர் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கத் தவறிய அவர்கள் பங்களாதேஷுக்கு தப்பிச் செல்வதையே ஒரு திட்டமாக நடை முறைப்படுத்துகிறார்கள். கடந்த ஆகஸ்டு 26 ம் தேதிக்கு ப் பிறகு சுமார் 10 இலட்சம் முஸ்லிம்கள் பங்களாதேஷின் அகதி முகாம்களுக்கு வந்திருக்கிறார்கள் என பி பி சி கூறுகிறது.

கார்டியன் பத்ரிகை இன்னொரு உண்மையை உடைக்கிறது.

அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பிச் செல்வதை பர்மீய இராணுவம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல. ராக்கைகன் போராட்டக் குழுவினர் தப்பிச் செல்லும் அகதிகளுக்கு உதவி செய்வதையும் இராணும் தடுப்பதில்லை என்று கூறுகிறது.
அப்படியானால் மிகத் தெளிவாக தெரிகிற திட்டம் என்ன வெனில் எப்படியாவது ராக்கைனில் இருக்கிற 15 இலட்சம் முஸ்லிம்கள் வெளியேறினால் சரி என்று பர்மீய இராணுவம் நினைக்கிறது என்பதும் அதற்கு முஸ்லிம்களின் நடவடிக்கை உறுதுணையாகவே அமைகிறது என்பதையும் மிக ஆச்சரியத்தோடு கார்டியன் பத்ரிகை கூறுகிறது.

மிகப்பரிதாப மான இரு மக்கள் போராட்டத்தில் எத்தகைய அரசியல் நடக்கிறது என்பதை பாருங்கள்!’

பங்களாதேஷுக்கு தப்பிச் செல்வதை விடுத்து பர்மாவிலேயே ராக்கைன் மக்கள் தமது நீதிக்கான போராட்டத்தை தொடர்வார்கள் எனில் நிச்சயம் அவர்கள் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது, குறைந்த பட்சம் அவர்களது அடுத்த தலைமூறைகளாவது நிம்மதியடைவார்கள்.

உலகின் எந்த பாகத்திலும் இருக்கிற இறை நம்பிக்கையாளர்களுக்கு ஆஷூரா தரும் பாடம் இது.

உங்களது களத்தை நேருக்கு நேர் எதிர் கொள்ளுங்கள். ஆபத்துக்களை கண்டு அஞ்சி விடாதீர்கள். அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை உறுதியாக பற்றி களத்தில் இறங்குங்கள் அல்லாஹ் வெற்றியை தருவான்.

ஒரு போதும் பின்வாங்கவோ புறமுதுகு காட்டி ஓடவோ செய்யாதீர்கள்! மரணம் நிச்சயிக்கப்பட்டது, அது எங்கு எப்படி வர வேண்டுமோ அப்படித்தான் வரும். மரணத்திலிருந்து எப்படியும் தப்பிக்க முடியாது.

  فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ لَوْلَا أَخَّرْتَنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ ۗ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ وَالْآخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقَىٰ وَلَا تُظْلَمُونَ فَتِيلًا (77أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ ۗ .

அப்படி ஓடிக் காப்பாற்றிக் கொள்ளும் வசதி வாய்ப்புக்கள் அற்பமானதாக வே இருக்கும்.

உச்சபட்சமான  ஒரு நெருக்கடி ஏற்படும் காலத்தில் முஸ்லிம் உம்மத் மறந்து விடக் கூடாத ஒரு பாடம் – தத்துவம் – வாழ்க்கை வழி முறை இது.

அது பூமியின் எந்தப் பாகமாக இருந்தாலும் சரீ! அரீஹா வானாலும் சரி! பர்மா என்றாலும் சரி!


அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தின் கால்களை சத்தியத்தில் உறுதிப் படுத்துவானாக! நமது ஈமானை உறுதியும் தெளிவும் மிக்கதாக ஆக்குவானாக! 

3 comments:

  1. ஆமீன்.அல்லாஹ் முஸ்லிம் மக்களுக்கு உறுதியான ஈமானை தருவானாக...ஆமீன்..

    ReplyDelete
  2. Anonymous3:26 AM

    Assalamu alaikum(varah)moulana velli medai super.ungalukke urithana nadai vitthiyasa maana anukumurai.barakallahu laka.aameen

    ReplyDelete