இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் காலை
10 மணிக்கு மேல் பொருளாதார ஆலோசனைகள் நிறை வழங்கப்படுகின்றன. மக்கள் சேனைலை மாற்றி மாற்றி தங்களுடை முதலீடுகளை பாதுகாப்பானதாக ஆக்கிக் கொள்ளவும் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் அதிக இலாபம் காணவும் மாய்ந்து மாய்ந்து அந்த ஆலோசனைகளை கேட்கிறார்கள்.
மக்கள்
தமது சொத்தை தமக்கு நன்மையானதாக பாதுகாத்துக் கொள்ள இஸ்லாம் ஒரு அற்புதமான வழியை கூறுகிறது .
அதுவே
வக்பு.
வக்பு
என்றால் ஒரு சொத்தை ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக ஒதுக்கி அதன் நன்மைகளை ஆகுமானவழியில் தர்மம் செய்வதாகும்.
உதாரணமாக!
அபூதல்ஹா ரலி அவர்களின் வக்பு. அது இன்றும் மதீனாவில் காணக் கிடைக்கிறது. பொது மக்களுக்காக அவர் செய்த வக்பை அவரது சொந்தக்காரர்களுக்கான வக்பா (ஸல்) அவர்கள் ஆக்கினார்கள்.
இஸ்லாத்தின்
முதல் வக்பு மஸ்ஜிது குபா பள்ளிவாசலாகும். அடுத்தது மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலாகும். அதை அபூபக்கர்
சித்தீக் ரலி அவர்கள் 10 தீனார் கொடுத்து வாங்கினார்கள்.
பள்ளிவாசல்
அல்லாத பொதுக் காரியங்களுக்கான முதல் வக்பு செய்தது நபி (ஸல்) அவர்களேயாவார்கள்.
முகைரிக்
என்ற யூதப்பாதிரி பெரும் செல்வந்தர். அவர் உஹது யுத்தம் நடை
அன்று காலை இஸ்லாத்தை ஏற்று யுத்தத்தில் கலந்து கொண்டார். அப்போது தான் இறந்து விட்டால் தனது சொத்து முழுவதும் பெருமானாருக்குரியது என்று கூறினார். உஹது யுத்தத்தில் அவர் ஷஹீதான போது அவருடை சொத்துக்களாக 7 தோட்டங்கள் பெருமானார் வசம் வந்தன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் முஸ்லிம்களின் பொது நன்மைக்குரியதாக அவற்றை ஆக்கினார்கள்.
قال بن إسحاق: وكان من حديث مخيريق، وكان حبرا
عالما، وكان رجلا غنيا كثير الأموال من النخل وكان يعرف رسول الله بصفته وما يجد
في علمه وغلب عليه إلف دينه فلم يزل على ذلك حتى إذا كان يوم أحد، وكان يوم أحد
يوم السبت، قال يا معشر يهود والله إنكم لتعلمون أن نصر محمد عليكم لحق. قالوا: إن
اليوم يوم السبت قال لا سبت لكم. ثم أخذ سلاحه فخرج حتى أتى رسول الله بأحد وعهد
إلى من وراءه من قومه إن قتلت هذا اليوم فأموالي لمحمد يصنع فيها ما أراه الله.
فلما اقتتل الناس قاتل حتى قتل. فكان رسول الله فيما بلغني - يقول مخيريق خير
اليهود وقبض رسول الله أمواله فهي عامة صدقات رسول الله بالمدينة منها
இரண்டாவது வக்பு உமர் ரலி அவர்களுடையது..
وقف عمر
بن الخطاب رضي الله عنه، وقيل هو ثاني وقف في الإسلام
قد جاء في الصحيحين وغيرهما عن أبن عمر رضي الله عنهما
قال: أصاب عمربخيبر أرضا فأتى النبي صلى الله عليه وسلم ـ فقال: أصبت
أرضا لم أصب مالا قط أنفس منه فكيف تأمر ني به ؟ قال: إن شئت حبست أصلها وتصدقت
بها، فتصدق عمر أنه لا يباع ولا يوهب ولا يورث في الفقراء والقربى والرقاب
وفي سبيل الله والضيف وابن السبيل لا جناح على من وليها أن يأكل منها بالمعروف أو
يطعم صديقا غير متمول فيه.
சஹாபாக்களின்
வக்புகள்
روي عن عثمان
بن عفان رضي الله عنه قال: قدم النبي ، المدينة وليس بها ماء يستعذب
غير بئر رومة، فقال: "من يشتري بئر رومة، فيجعل فيها دلوه مع دلاء المسلمين
بخير له منها في الجنة"، قال عثمان:"فاشتريتها من صلب مالي
உருக்குச்
சட்டை வக்பு
روى أبو هريرة، رضي الله عنه أن خالد بن الوليد
احتبس أدراعه وأعتاده في سبيل الله
வீடுகள் வக்பு
روي البيهقي من أن عدداً من الصحابة تصدقوا بدورهم ومساكنهم،
وجعلوها وقفاً في سبيل الله أو على ذريتهم.
வக்பு வங்கி
வங்கிகள் அதிகப்படியான வட்டி தருவதாக கூறி தமது நிறுவனத்தில் பணத்தை செலுத்துமாறு மக்களை கூவிக் கூவி அழைக்கின்றன.
இஸ்லாமோ வக்பு எனும் தர்மம் செய்யுங்கள். அது தான் உங்களுக்கான உண்மையான அக்கவுண்ட் எனக் கூறுகிறது.
مَا
عِندَكُمْ يَنفَدُ ۖ وَمَا عِندَ اللَّهِ بَاقٍ ۗ
நம்மில் அனைவரும் நாம் சந்பாதிப்பதை நமது பிள்ளைகளுக்கானதாக கருதுகிறேம்.
குடும்பத்தார்களிடம் பேசுகிற போது “ நான் இவ்வளவு சம்பாதிப்பது யாருக்காக!
எல்லாம் உங்களுக்காகத் தானே என்று கூறுகிறோம்.
நமது சிந்தனையில் ஒரு மாற்றம் தேவை என்பதை இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது.
நமது சம்பாத்தியத்தில் எதை நாம் அறச் செயல்களுக்காக தர்மம் செய்கிறோமோ அதுவே நமக்குரியது.
நாம் விட்டுச் செல்பவை நமது பிள்ளைகளுக்குரியவை.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்களிடம் உங்களுடை சொத்து உங்களுக்கு பிரியமானதா
? உங்களுடைய பிள்ளைகளுடையதா ? என்று கேட்டார்கள்.
அதெப்படி நாயகம் அவர்களே ! எங்களுடைய சொத்து தான் எங்களுக்கு பிரியமானது என தோழர்கள் சொன்னார்கள்.
அப்போது பெருமானார்
(ஸல்)
அவர்கள் மனித வாழ்க்கையில் சொத்து பற்றிய ஒரு அற்புதமான பிரக்ஞையை மக்களுக்குச் சொன்னார்கள்.
“நீங்கள் எதை செலவ்ழித்தீர்களோ அதுவே உங்களுடைய சொத்து நீங்கள் எதை விட்டுச் செல்கிறீர்களோ அது உங்களது பிள்ளைகளுடைய சொத்து என்றார்கள்.
நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் .
நாம் பாடுபட்டு சம்பாதிக்கும் சொத்துக்கள் நமக்குரியதாக ஆக வேண்டாமா ?
அப்படி ஆக்கிக் கொள்ளும் ஒரு வழிதான் வக்பு ஆகும்
قا ل المصطفى : "إذا مات ابن آدم انقطع عمله إلا من
ثلاث : صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له"، والصدقة
الجارية محمولة على الوقف عند العلماء.
اورد في سنن ابن ماجة يقول النبي : "إن مما يلحق
المؤمن من عمله وحسناته بعد موته: علماً نشره أوولدًا صالحاً تركه، أو مصحفاً
ورثه، أو مسجداً بناه، أو بيتا لابن السبيل بناه أو نهراً أجراه أو صدقة أخرجها من
ماله في صحته وحياته تلحقه بعد موته".
உண்மையில் வக்பு செய்கிறவர்களே புத்திசாலி பணக்காரர்கள்
தங்ளது சம்பாத்தியத்தில் தங்களுக்கான பங்கை அவர்கள் உறுதி செய்து கொள்கிறார்கள்.
இல்லை எனில் அவர்களுடை சொத்து முழுவதும் அவர்களுடை வாரிசுகளுக்கு போகும்.
‘
அந்த வாரிகள் சொத்துக்காக அடித்தும் கொள்ளும் கூத்துக்களை பார்த்தால் இவர்களுக்காகவா இத்தனை பாடு பட்டோம் என்று எண்ணத்தோன்றும்.
அவர் பாடுபட்டுச் சேர்த்த சொத்துக்களை வாரிசுகள் தப்பான வழிகளில் செலவிட்டு பாவத்தை தேடிக் கொள்ளவும் கூடும்.
முஸ்லிம்
சமுதாயம் இந்த வக்பின் மகத்துவத்தை புரிந்து கொண்டிருந்ததால் பண்க்காரர்கள் ஏராளமாக வக்பு செய்தார்கள்:.
வக்பு
வாரியம்.
உமைய்யாக்கள்
காலத்தில் கிழக்கே சீனாவிலிருந்து மேற்கே பிரான்ஸ் வரை இஸ்லாமிய சாம்ராஜ்யம் பரவிய போது எல்லா இடத்திலும் செல்வந்தர்கள் சம்பாதிப்பது என்றால் என்ற என்பதன் சரியான அர்தத்தை புரிந்து கொண்டனர். அதனால் வக்புகளும் பெருகின.
வக்பு
அதிகரித்ததால்
உமய்யாக்கள் காலத்தில் வக்பு நிர்வாங்களை ஒழுங்குபடுத்த ஒரு துறை அமைக்கப்பட்டது.. அது வக்பு சொத்துக்களை பதிவு செய்தது.
அப்பாஸிய
கிலாபத்தின் காலத்தில் வக்பு விவகாரங்கள் நீதித்துறையிலிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு ஒரு தனி துறை உருவாக்கப்பட்டு வக்புகளின் தலைவர் என்ற ஒரு பதவி ஏற்படுத்தப் பட்டது.
காரணம்
வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்கு தனியான சட்ட விதிகள் உள்ளன.
முஸ்லிம்
அறிஞர்கள் பல பாகங்களாக வக்பு சொத்துக்களின் நிர்வாகங்கள் பற்றிய சட்டங்களை எழுதியிருக்கிறார்கள்.
வக்புகளில்
மூன்று பிரிவுகள் உண்டு,
1.
ஒரு குறிப்பிட்ட சாராருக்காகவும் அவர்களுடைய சந்ததிகளுக்காகவும் செய்யப் பட்ட வக்பு
2.
பொதுமக்களுக்காக செய்யப்பட்ட வக்பு
3.
இரு தரப்பிற்குமானது.
வக்பு
செய்வதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. அது சராசரி தர்மம் அல்ல.
للوقف شروط معتبرة لصحته وهي كما فصلها الرحيباني الحنبلي :
1-
كون
الوقف من مالك جائز التصرف وهو المكلف الرشيد؛ فلا يصح من صغير أو سفيه أو مجنون.
சுவாதீனத்திலுள்ள சொத்தில் மட்டுமே வக்பு செல்லும். ஒருவருக்கு சொந்தமான சொத்து இன்னொருவரின் சுவாதீனத்தில் இருக்கும் என்றால் அதை வக்பு செய்ய முடியாது. இன்னொருவருக்குச் சொந்தமான பொருளை அந்நிய ஆள் வக்பு செய்ய முடியாது.
2- كون الموقوف عينا؛ فلا يصح وقف ما في الذمة
வக்பு செய்யப்படும் பொருள் நடப்பில் உள்ளதாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் வரும் இலாபத்தை வக்பு செய்கிறேன் என்று சொல்ல முடியாது,
2-
كون
الوقف على بر وهو اسم جامع للخير.
நல்ல காரியங்களுக்கு மட்டுமே வக்பு செல்லும். தீய அடிப்படைகள் நோக்கங்களுக்கான வக்பு செல்லாது.
3-
كون
الواقف على معين من جهة كمسجد كذا، أوشخص ما، غير نفسه.
வக்பின் செலவினம் வகுத்துச் சொல்லப்படனும்.
4-
من شروط
الوقف كذلك أن يقف ناجزاً غير معلق ولا موقت ولا مشروط بنحو خيار.
வக்பு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அமுலாக்கப்படனும், குறீப்பிட்ட காலம் வரை என்றோ. அல்லது நான் விரும்பும் வரை என்றோ நிபந்தனைகள் கூடாது.
5-
أن لا
يشترط الواقف في الوقف أي شرط ينافيه من الشروط الفاسدة كشرط نحو بيعه أو هبته متى
شاء، أو شرط خيار فيه.
வக்பிற்கு
பொருந்தாத நிபந்தனைகள் கூடாது. தனக்கு அதை விற்கவோ அல்லது அன்பளிப்புச் செய்யவோ உரிமை இருப்பதாக எந்த நிபந்தனையும் கூடாது.
முழுக்கவே
குறிப்பிட்ட ஒரு நல்ல காரியத்திற்காக முழு பாத்தியதை உடன் ஒரு சொத்தை அர்ப்பணிப்பதே வக்பு ஆகும்.
வக்பு
என்ன வழிகளில் செய்யப்படலாம்
பள்ளி
வாசல் மதரஸாக்களுக்கு மட்டுமே வக்பு என்பதில்லை. பல காரியங்களுக்காகவும் வக்பு செய்யலாம்.
للوقف مجالت كثيرة ومتعددة منها :
- الوقف بإنشاء المساجد ورعايتها والقيام
بشؤونها وتزويدها بالمصاحف.
- الوقف على الجهاد في سبيل الله.
- الوقف على توزيع الكسوة للفقراء والأرامل
والمحتاجين.
- الوقف على المكتبات العامة كإنشائها وإيقاف
الكتب الشرعية بها.
- إنشاء المدارس العلمية التي تكفل مجانية
التعليم لأبناء المسلمين.
- حفر الآبار وإجراء الماء.
- الأوقاف على الدعاة والوعاظ.
- الوقف على نشر دعوة التوحيد وتبليغ الإسلام؛
وذلك بطبع الكتب والأشرطة وتوزيعها.
- إقامة مراكز للمهتدين الجدد.
- بناء مراكز الأيتام ورعايتهم والعناية بهم.
- الوقف على تطوير البحوث المفيدة والنافعة.
- الوقف على جماعات تحفيظ القرآن الكريم التي
نفع الله بها أبناء المسلمين.
- الوقف على مدارس تحفيظ القرآن النسائية.
- الأوقاف على الدعوة على شبكة المعلومات
(الإنترنت).
கீரனூரில் ஒரு பழை பள்ளிவாசல் உள்ளது எந்த வகையிலாவது வக்பு செய்து விட வேண்டும் என்ற முஸ்லிம் உம்மத்தின் ஆர்வத்தை அங்கு சென்று விசாரித்தால் புரிந்து கொள்ளலாம்.
குளிர்
காலத்தில் தண்ணீரை சூடாக்குவதற்கான விறகிற்கான வக்பு
விளக்கில்
எண்ணை ஊற்றுவதற்கான வக்பு
டேலா
கட்டிக்கான வக்பு
என
பல வக்புகள் அந்தப் பள்ளிவாசலுக்காக செய்யப்பட்டுள்ளன.
நாகூரில்
ஆண்டு தோரும் மீலாது சொற்பொழிவு செய்யப்படுவதற்காக ஒரு வக்பு உண்டு. அது 70 ஆண்டுகளை கடந்து இப்போதும் நடப்பில் உள்ளது.
நாகப்பட்டினத்தில் புறாக்கிராமம் என்று
ஒரு கிராமம் உண்டு. அது நாகூர் தர்காவில் உள்ள மினாராவில் தங்கும் புறாக்களுக்கு தீனி வாங்குவதற்காக தஞ்சை மன்னர் அளித்த மானியமாகும்.
உஸ்மானிய
துருக்கியர்களின்
காலத்தில் வக்பு சொத்துக்களின் வருமானம் ஏராளமாக பெருகிய போது அதில் நாலில் ஒரு பங்கு மருத்துவ கல்லூரிகளுக்காகவும் மருத்துவ மனைகளுக்காகவும் நவீன் ஆய்வுகளுக்காகவும் செலவிடப்பட்டது.
பிரபல
பயணி இப்னு ஜுபைர் கூறுகிறார்.
பஃதாதில்
மட்டும் 30 வக்பு மதரஸாக்கள் இருந்தன. அவை பெரிய கோட்டைகளைப் போலவும் பெரும் கட்டிடங்களுடையதாகவும் இருந்தன. அவற்றில் பெரியது நிஜாமிய்யா மதரஸா /அந்த மதரஸாவிற்காக உலகின் பல பகுதியிலும் வக்புகள் இருந்தன.
அந்த
மதரஸாவின் வக்பிலிருந்து 15 ஆயிரம் தீனார் வருமானம் மாதந்தோறும் வந்தது.
கெய்ரோவிலும்
டமாஸ்கஸிலும் ஏழைகளுக்காகவும் எதீம்களுக்காகவும் வக்பு மதரஸாக்கள் பல இருந்தன.
இதே
போல இப்னு கல்தூன் இஸ்லாமின் பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் பல வக்பு மதரஸாக்கள் இருந்ததை குறிப்பிடுகிறார்.
அரபு நாடுகளில்
மட்டுமல்ல இஸ்லாம் கால் வைத்த ஒவ்வொரு நிலப்பரப்பிலும் வக்பு வேறூன்றி நின்றது.
நம்முடைய நாட்டிலும்
மாநிலத்திலும் ஏராளமான வக்புகள் பள்ளிவாசல்களுக்காகவும் மதரஸாக்களாகவும் பொதுக் காரியங்களுக்காகவும்
செய்யப்பட்டுள்ளன.
திருச்சி யிலுள்ள
ஜமால் முஹம்மது கல்லூரிக்கு காஜா மியான என்பவர் 100 ஏக்கர் நிலத்தை வக்பு செய்திருக்கிறார்,
மேல்விஷாரத்தை
சேர்ந்த நவாப் ஹக்கீம் அவர்களுடைய வக்பு சென்னையில் செண்டரல் இரயில் நிலையத்திற்கு
அருகில் சித்தீக் சராயாக இன்றும் முஸ்லிம்களுக்கான தங்கும் விடுதியாக இருந்து கொண்டிருக்கிறது.
சென்னையில்
பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிற ஹஜ் ஹவுஸ் பில்டிங்க் பலருடைய வக்பு என்பதை அங்கே எழுதி
வைக்கப்பட்டிருக்கிற பெயர்ப் பலகைகளை வைத்து அறிந்து கொள்ளலாம். அது மக்களுக்கு எவ்வளவு
நன்மையானதாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்
அதே போல் இந்திய
ஹாஜிகள் தங்குவதற்காக ஆற்காடு மன்னர்கள் சார்பாக மக்காவில் ஒரு பெரிய வக்பு பில்டிங்
இருக்கிறது. அது எவ்வளவு நன்மையானது, நன்மையை தேடித்தரக்கூடியது என்பதை நினைத்துப்
பாருங்கள்.
முஸ்லிம்களின்
பகுதிகளில் நிறை வீடுகள் வக்பு செய்யப்பட்டிருக்கும். ஒரு வீட்டில் குடியிருக்கும்
குடும்பத்தினர் , அவர்களுக்கு வசதி வாய்ப்பு வந்து பெரிய வீடுகள் கட்டி குடியேறுகிற
போது பழைய வீட்டை வக்பு செய்து விடுகிற பழக்கம் சர்வ சாதாரணமாக இருந்தந்து.
(ஆலிம்களே!
உங்களது பகுதியில் இருக்கும் வக்புகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்)
இவ்வாறு செய்யப்படுகிற
வக்பு சொத்துக்கள் மிகச் சரியாக வக்பு செய்தவர் எந்த நோக்கத்திற்காக வக்பு செய்தாரோ
அதே நோக்கத்தில் பயனபடுத்தப் பட வேண்டும். அதில் எல்லை மீறுதலோ – அபகரித்தல் கொள்ளையிடல்
திருடுதல் அநீதியாக பயன்படுத்துதல் அனைத்தையுல் இஸ்லாம் வெகு கண்டிப்புடன் தடை செய்திருக்கிறது.
மரக்கட்டைகளை
ஒரு மனிதர் பள்ளிவாசலின் உத்திரப் பணிகளுக்காக வக்பு செய்திருந்தால் அது மக்கி மண்ணாகிப்
போனாலும் போகலாமே தவிர அதை விற்க கூடாது என்னும் அளவுக்கு வக்புக்கான சட்டங்கள் கடுமையானவையாகும்.
الأموال التي تُجمع للقيام على المساجد بما تحتاجه هي
أموالٌ وقفية لا يحل للقائم عليها أن يقترض منها لنفسه ، ولا أن يُقرض منها أحداً
، فهو مؤتمن على هذا المال لإنفاقه في المصرف الذي حدده المتبرع ، وهو – هنا –
احتياجات المسجد .
சமீபத்தில் இரு அரபு பத்ரிகையில் ஒரு மனிதர் கேளிவி
ஒன்றை கேட்டார்.
நான் என் ஊர்வாசிகளின்
நன்மைக்காக ஒரு டேக்ஸியை வாங்கி வக்பு செய்தேன். என்னிடம் வேறு டேக்ஸி எதுவும் இல்லை,
இப்போது நான் ஊருக்கு போகும் போது என்னுடைய தேவைக்காக அல்லது எனது குடும்பத்தினரின்
தேவைக்காக அந்த டேக்ஸீயை பயன்படுத்திக் கொள்ளலாமா என்று கேட்டார்.
அதற்கு சொல்லப் பட்ட பதில்
என்ன தெரியுமா ? நீங்கள் வக்பு செய்த போது என்னுடைய் தேவைக்கும் ஆகட்டும் என்று நிய்யத்
செய்து வக்பு செய்திருந்தால் உங்களது சொந்த தேவைகளுக்கு அதை பயன்பண்டுத்திக் கொள்ளலாம்
, இல்லை எனில் கூடாது என்று பதில் கூறப்பட்டிருந்தது.
الأصل أن
تقصر منافع الوقف على ما وقف له إلا إذا كان هناك نية من الواقف أو عرف يقتضي
انتفاع الواقف بما وقفه فيجوز له الانتفاع، قال العلامة ابن حجر الهيتمي في
الفتاوي الفقهية (مقرر معروف أن العرف المطرد في زمن الواقف منزل منزلة شرط فينزل
الوقف على العرف المذكور كما ينزل على شرط الواقف) وعليه فإن كنت نويت أن
يكون دخل السيارة لأهلك دون أن تخرج نفسك من استخدامها عند الحاجة بالمعروف أو كان
العرف يقتضي ذلك جاز لك الاستخدام، وإن كنت أخرجتها من ملكك وقفا لهم فلا يجوز
انتفاعك بها ولو عند الحاجة إلا بإذن الموقوف عليهم. والله تعالى أعلم.
والخلاصة
لا يجوز لك الانتفاع بالسيارة إلا
إذا كنت نويت الانتفاع بها عند الوقف أو اقتضاه العرف عندكم وإلا فلا يجوز لك
الانتفاع إلا بإذن الموقوف عليهم.
இன்னும்
ஏராளமான நுணுக்கமான கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய திட்ட வட்ட
மான சட்டங்கங்க உண்டு, வக்பு விசயத்தில்
வக்பு சொத்துக்களை நிர்வகிக்கிற எவடும் அவற்றை அறிந்து
கொள்ள வேண்டியது கட்டாயமாகும் இதை அறியாமல் செய்யும்
ஏற்பாடுகள் அது எவ்வளவு தான்
நன்மை போல வெளியே தோன்றினானும்
அது இஸ்லாமின் விருப்பத்திற்கு மாற்றமானதாகும். அது நன்மையை தராது.
தீமமயாகவே அமையும்.
வக்பு சொத்துக்கள்
விசயத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டாலோ அதற்கான தண்டனைகள் கடுமையானவை. நாளை மறுமையில்
.
وفي الصحيحين من حديث أبي هريرة قال: "خرجْنا مع رسول الله -
صلَّى الله عليه وسلَّم - يوم "خَيْبَر"، فلم نَغْنمْ ذهبًا ولا فِضَّة،
إلاَّ الأموال والثياب والمتاع، فأهْدَى رجلٌ من بني الضُّبَيْب يُقال له: رِفَاعة
بن زيد لرسول الله - صلَّى الله عليه وسلَّم - غلامًا يُقال له:
"مِدْعَم" فوجَّه رسولُ الله - صلَّى الله عليه وسلَّم - إلى وادي
القُرى، حتى إذا كان بوادي القُرى، بينما "مِدْعَم" يحطُّ رحْلاً لرسول
الله - صلَّى الله عليه وسلَّم - إذا سَهْمٌ عائِر فقَتَله، فقال الناس: هنيئًا له
الجنة، فقال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((كلاَّ والذي نفسي بيده، إنَّ
الشَّمْلَة التي أخَذَها يومَ "خَيْبَر" من المغانم لَم تُصِبْها
المقاسِمُ، لتَشْتَعِلُ عليه نارًا))، فلمَّا سَمِع ذلك الناسُ، جاء رجلٌ بشِرَاكٍ
أو شِرَاكين إلى النبي - صلَّى الله عليه وسلَّم - فقال: ((شِرَاكٌ من نارٍ أو
شِرَاكان من نار الشَّمْلَة التي غَلَّها لتَشتعِلُ عليها نارًا)
فقد روى الشيخانعن أبي هريرة - رضي الله عنه - قال: " قام فينا النبي - صلَّى الله عليه وسلَّم - فذكَرَ الغُلول، فعظَّمه وعظَّمَ أمرَه، قال: ((لا ألفِيَنَّ أحدَكم يومَ القيامة على رَقبته شاة لها ثُغاء، على رَقبته فرس له حَمْحَمة، يقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبْلَغْتُك، وعلى رَقَبته بعيرٌ له رُغاء، يقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبلغتُك، وعلى رَقَبته صامتٌ، فيقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبلغتُك، أو على رَقَبته رِقَاعٌ تَخْفِق، فيقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبلغتُك.
فقد روى الشيخانعن أبي هريرة - رضي الله عنه - قال: " قام فينا النبي - صلَّى الله عليه وسلَّم - فذكَرَ الغُلول، فعظَّمه وعظَّمَ أمرَه، قال: ((لا ألفِيَنَّ أحدَكم يومَ القيامة على رَقبته شاة لها ثُغاء، على رَقبته فرس له حَمْحَمة، يقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبْلَغْتُك، وعلى رَقَبته بعيرٌ له رُغاء، يقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبلغتُك، وعلى رَقَبته صامتٌ، فيقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبلغتُك، أو على رَقَبته رِقَاعٌ تَخْفِق، فيقول: يا رسول الله، أغِثْني، فأقول: لا أملِك لك شيئًا؛ قد أبلغتُك.
வக்பு
செய்யப்பட்ட ஹவ்ழின் தண்ணீரை மின்சாரத்தை
பயனபடுத்தக் கூட கடும் நிபந்தைனைகள்
உண்டு.
நீங்கள்
பள்ளி வாசல்களில் ஒரு ப்ழக்கத்தைப் பார்த்திருக்கலாம்.
இகாமத் சொல்வத்ற்கு முன்பாக முஅத்தின் பேன்
சுவிட்சுகளை போடுவார். காரனம் பள்ளிவாசலின் வக்பு
என்பது பர்ளு தொழுகைகளுக்காக மட்டுமே
என்பதாகும். பொதுவாக பயனபடுத்திக் கொள்ளலாம்
என்ற அனுமதி இருந்தால் அன்றி
அதற்குமேல் பயன்படுத்தக் கூடாது.
நம்மில்
ஒவ்வொரு வரும் வக்பு சொத்துக்கள்
விசயத்தில் மிகவும் கவனமாக நடந்து
கொள்ள வேண்டும். வக்பு விவகாரங்களில் ஒவ்வொரு
விசயத்திலும் அது குறித்த மார்க்கச்
சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
இல்லை எனில் நாம் நன்மை
எனக் கருதிச் செய்யும் செயல்களே
கூட பாவமானதாக மாறிவிடக் கூடும்.
வக்பு
சொத்துக்களில் எல்லை மீறுதல் என்பதை
அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும். வக்பு
செய்யப் பட்ட ஒரு பிளாஸ்டிக்
பக்கெட்டை கூட சொந்த உபயோகத்திற்கு
பயன்படுத்தி விடக் கூடாது. அதை
பிறருக்கு கொடுத்துதவும் அதிகாரமும் நமக்கு கிடையாது.
ஆனால் இன்றைய
காலகட்டத்தில் இமாம் முஅத்தினும் சம்பளம் கொடுக்கிற போது மட்டும் வக்பு சட்டத்தின்
நுனுக்கங்களை பலர் பார்க்கிறார்கள்.
எதார்த்ததில்
இமாம் முஅத்தினுக்கு தேவையான வசதியான அளவு வக்பு சொத்தில் பயனபடுத்திக் கொள்ள அனுமதி
யுண்டு.
இமாம்
தனக்கு தேவையான அளவு பேன்
போட்டுக் கொள்ள முடியும் பள்ளிவாசலின்
நிர்வாகிக்கு அந்த அனுமதி கிடையாது.
ஆனால் வக்புகளின்
நிர்வாகிகள் இந்த எச்சரிக்கைகளை எந்த அளவு பொருட்படுத்துகிறார்கள் என்பது மிகவும் கேள்விக்
குரியதாகும்.
வக்பு சொத்துக்களில்
நடை பெறும் கொள்ளை என்பது இன்றை முஸ்லிம்களின் வாழ்க்கை பற்றி மதிப்பை மிகவும் கேள்விக்குள்ளாக்க
கூடியதாகும்.
பல பெரிய மனிதர்கள்
அநாயசமாக வக்பு சொத்துக்களை கொள்ளையிடுகிறார்கள். முறைகேடாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நம்முடைய இந்தியா
நாட்டில் பாதுகாப்புத்துறைக்கும் இரயில் வே துறைக்கும் அடுத்து அதிக சொத்துக் களை கொண்டது
வக்பு வாரியமாகும்.
வக்பு
சொத்துக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள் ளது. அதில் 3 லட்சம் ஏக்கர்
பதிவு செய் யப்பட்டவை. இத்தகைய வக்பு சொத் துக்களுக்கு 800 ஆண்டுகால பழமை
உண்டு
அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும், பராமரிக் கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக
பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் அவை அடகு வைக்கப்பட்டும், விற்கப் பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும்
உள்ளன. உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துக்கள் உள்ள நாடு
இந்தியாதான். அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பதும் இந்தியாதான். இத்தகைய
செயல்களெல்லாம் அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள வர்களாலேயே
செய்யப்படுகின்றன என் பதுதான் கொடுமை.
பல மாநிலங்களிலும் பெரிய நிலத் திமிங்கலங்களின் கைகளிலும், பெரும் கட்டுமான
நிறுவனங்களின் கைகளிலும் தான் வக்பு சொத்துக்கள் சிக்கியுள்ளன. அங்கு மிகப் பெரிய
ஊழலின் உறைவிட மாகவே வக்பு வாரியங்கள் உள்ளன.
வக்பு குறித்த நாடாளுமன்றக் குழு ஓராண்டுக்கு முன்னர் ஒரு அறிக்கை யைச்
சமர்ப்பித்தது. அதன் தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவர் ரகுமான்கான் இருந்தார்.
அந்த அறிக்கை யில், வக்பு வாரிய சொத்துக்கள் உரிய முறையில்
பயன்படுத்தப்பட்டிருந்தால் வேலையின்மை, கல்விக்கான வாய்ப் பின்மை மற்றும் வறுமை ஆகிய
பிரச் சனைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது 70 சதவிகித
சொத்துக்களும் ஆக்கிரமிக்கப் பட்டோ அல்லது அபகரிக்கப்பட்டோ உள்ளன. மீதி 30 சதவிகித
சொத்துக்களை முறையாகப் பயன்படுத்தினால் கூட, பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இய லும் என்று
அந்த குழு கருதியது. ஆனால் தற்போது, மீதமுள்ளவைகளைக் கூட கொள்ளையடிக்க முனைப்பான
முயற்சி கள் நடைபெற்று வருகின்றன.
1997ல் தமிழ்நாடு
வக்பு வாரியம், சென் னை
திருவல்லிக்கேணியில் மிகவும் விலைமதிப்புள்ள பகுதியில் இருந்த 1710 சதுர அடி
நிலத்தை வெறும் 3 லட்சம்
ரூபாய்க்கு விற்க முடிவெடுத்தது.மும் பையில் மகாராஷ்டிர வக்பு வாரியம் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்த அல்டமவுன்ட் சாலையில் 4532
சதுர அடி நிலத்தை வெறும் ரூ.16 லட்சத்திற்கு
முகேஷ் அம்பா னிக்கு விற்பனை செய்தது. அதில் அவர் 27
மாடியில் ஒரு பிரம்மாண்டமான மாளி கையைக்
கட்டினார்.
பெங்களூரில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான 5
ஏக்கர் நிலத்தில் 500 கோடி ரூபாய்
மதிப் புள்ள மிகப்பெரிய ஓட்டலைக் கட்டி யுள்ள வின்சர் மேனர் ஓட்டல் நிர்வாகம், மாத வாடகையாக
வெறும் ரூ. 12000 மட் டுமே
கொடுக்கிறது. பரிதாபாத்தில் வக்பு வாரியம் 5 ஏக்கர் நிலத்தை பல வருடங் களாக 11 மாத குத்தகைக்கு
என்ற பெய ரில் குறைந்த வாடகையான ரூ. 500க்கும் ரூ.1500க்கும் கொடுத்துள்ளது. இங்கு ஒரு தொழிற்சாலை
கட்டப்பட்டுள்ளது. அவற்றிற்கெல்லாம் காரணம் வக்பு வாரி யங்கள் ஊழல்பேர்வழிகளைக்
கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதும், இதில் ஆளும் கட்சிகளின் தலையீடுகளும்தான் என்
பது மறுக்க முடியாத உண்மை.டில்லி சிறுபான்மைனர் கமிஷனின் உறுப்பினர் ஒருவர், டில்லியில்
நிஸாமுதீன் சாலையில் மிகவும் மதிப்புமிக்க பகுதியில் வக்பு வாரி யத்திற்கு
உரிமையான நிலத்தில் ஒரு தனியார் பள்ளிக் கூடத்தை நடத்துகிறார். அதற்கு ரூ.1000 பிச்சைக் காசை
வாடகை யாக வாரியத்திற்குக் கொடுக்கிறார்
பல மாநிலங்களிலும் அரசு நிர்வாகங்களே வக்பு
சொத்துக்களை கொள்ளையடித்துள்ளன.
மத்திய அரசு, டெல்லி
டெவலப்மெண்ட் அத்தாரிட்டி, தொல்பொருள்
ஆய்வு நிறுவனம், அரியனா நகர மேம்பாட்டு ஆணையம் என அரசு
நிறுவனங்கள் முக்கால்வாசி வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தன.
என்றும் டெல்லி கோல்ப் கிளப், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், மத்திய புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகம், ஓபராய் நட்சத்திர
ஹோட்டல் ஆகியவை ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாக டெல்லி வக்பு வாரியத்தின் முன்னாள்
தலைவர் வி.சி.ராஜ்பிராச்சார அவர்கள் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார்
ஆந்திர மாநிலத்தில் மாநில அரசே வக்பு வாரிய சொத்துக்களைக் கைப் பற்றியுள்ளது.
உதாரணமாக, ஹைதராபாத் ஹை
டெக் நகரம் வக்பு சொத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டி னத்தில் அரசு ரூ.500 கோடி மதிப்புள்ள
6000 ஏக்கர் வக்பு
நிலத்தைக் கைப்பற்றி, 900 ஏக்கர் நிலத்தை என்டிபிசி நிறுவனத் திற்கும், 800 ஏக்கர் நிலத்தை
ஹிந்து ஜாஸ் நிறுவனத்திற்கும் ஏக்கருக்கு ரூ.2.25
லட்சம் எனும் அற்ப விலைக்கு வழங்கி யுள்ளது.
தமிழக முன்னால் வக்பு வாரிய தலைவர் ஒருவர்
வக்பு வாரிய நிதியிலிருந்து 50 ஆயிரம்
ரூபாயை தொகுப்பூதியமாக (அமைச்சர் அனுமதியுடன்) பெற்றுக் கொண்டதற்கு சென்னை
உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்த உத்தரவு பல பத்ரிகைகளிலும் வெளியானது.
தமிழகத்தில் சமீபத்தில் வக்பு வாரியம்
திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை வக்பு வாரிய உறுப்பினராக இருந்த அரசு தலைமை
காஜி சலாஹுத்தீன் அய்யூபி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அரசு அதற்கு பல
சப்பையான காரணங்களை கூறுகிறது.
உண்மையில் வக்பு நிர்வாகத்தில் இருக்கிற
சிலர் பெரும் சொத்துக்களை இலஞ்சம் பெற்றுக் கொண்டு கைமாற்றியதை முன்னாள்
முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இது போல பல மூறை அவர் முறைகேடுகளை
தைரியமாக கண்டித்திருக்கிறார். அவரை வைத்திருப்பது ஒரு தொல்லை என்ற காரணத்தினாலேயே
இப்போது அவரை வெளியேற்றியிருக்கிறார்கள்.
வக்பு சொத்துக்களை பராமரிக்கிறவர்களுக்கு
உமர் ரலி அவர்களிடம் நிறைய உதாரணங்கள் உண்டு.
ஒரு முறை ஒரு வக்பு ஒட்டகையை உமர் ரலு
குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த அரசப் பிரதிநிதி ஒருவர் இதற்கு
ஒரு அடிமைய ஏவக் கூடாதா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த உமர் ரலி அவர்கள் இதற்கு
என்னை விடச் சிறந்த அடியமை யார் என்று கேட்டார்கள்.
வக்புகளின் நிர்வாகிகள் வகுபு சொத்துக்கள்
செம்மையாக நிர்வகிக்கப் பாடு பட வேண்டும். அது அவர்களின் இம்மை வாழ்க்கைகும் மறுமை
வாழ்க்கைகும் உதவும்.
குறைந்த பட்ச்ம வக்பு சொத்துக்களை முறைகேடாக
பயன்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் சமுதாயம் வக்பு சொத்துக்களை
பாதுகாப்பது குறித்து அக்கறை காட்டவேண்டும்.
வக்பு வாரிய சொதுக்கள் மீட்கப்பட வேண்டு
அச்சொத்துக்கள் சமுதாய நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்
வக்பு வாரியங் களைக் கொள்ளைக்காரர்களின் கைகளி லிருந்து மீட்பதற்கும் முஸ்லிம்
மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.
வக்பு சொத்துக்களை ஆக்ரம்பிப்பவர்கள்
அபகரிப்பவர்கள் முறைகேடாக நடந்து கொள்கிறவர்களை மதிக்க கூடாது. இதுவே
நீதிமன்றங்களை விட அதிக தண்டனைதருகிற வழியாகும்.
வக்பு சொத்துக்களில் முறைகேடுகள் ஒரு பக்கம்
இருந்தாலும்.
வக்பு செய்கிற விசயங்களில் சமுதாயம் தன்னுடைய
சொத்தை தனக்கான வங்கியில் செலுத்த அக்கறை காட்ட வேண்டும்.
அல்லாஹ் வக்பு எனும் முஸ்லிம் சமுதாயத்தின்
உன்னதமான கட்டமைப்பை பாதுகாப்பானக! வக்பு செய்தவர்களுக்கு சிறப்பான கூலியை
வழங்குவானாக!
·
அல்ஹம்து லில்லாஹ் தேவையான பல செய்திகள் அருமை
ReplyDeleteசெய்திகள் மிக மிக முக்கியமானது.
ReplyDeleteஅணைத்து தரப்பினரும் விழிப்புணர்வு
செய்திகள் மிக மிக முக்கியமானது.
ReplyDeleteஅணைத்து தரப்பினரும் விழிப்புணர்வு
புதிய ோணத்தில் சிந்தித்து நல்ல தகவல்ளை சரியான நேரத்தில் பதிவிட்டுள்ளீர்கள் ஷுக்ரன்
ReplyDeleteஅருமையான பதிவு இதை தங்கள் முகநூலில் பதிந்தால் அனைவருக்கும் பயனுள்ளத்தக்க இருக்கும் நன்றி
ReplyDeleteMasha allah
ReplyDeleteMasha allah
ReplyDeleteமா
ReplyDelete