கஜா புயல்
வேதாரணயத்தில் கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான 7 மாவட்டங்களில்
மட்டுமல்லாது மற்ற சில மாவட்டங்களும் புயலின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
அல்லாஹ் இயற்கையின்
சீற்றங்களிலிலிருந்து மக்களை பாதுகாத்து அருள்வானாக! இந்த கஜா புயலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடாத
வாறு பாதுகாத்தருள்வானாக! பாதிக்கப் பட்டுள்ள
மக்களுக்கு விரைவான நிவாரணத்தை அல்லாஹ் தந்தருள்வானாக!
கஜா புயல்
15 ம் தேதி கரையை கடக்க கூடும் என்று அறிவிக்கப் பட்ட நிலையில் ஒரு நாளைக்குப் பிறகு
புயல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே புயல் பற்றியும் வானிலை அறிக்கை பற்றியும்
- தமிழ் நாட்டிற்கு கஜா கூட தாமதமாத்தான் வருது.
- கஜான்னாலே யானைன்னு தானே அர்த்தம் யானை மெதுவாத்தானே வரும்.
- கஜா பாதிப்பு புதுக்கோட்டையில் கடும் வெயில் .
- கஜா வாவது கத்தரிக்காயவது அட போய் தூங்குங்கப்பா
என்ற ரீதியில்
பல்வேறு கேலி கிண்டல் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி விட்டன.
கஜாவோடு செல்பி
எடுத்துக் கொள்வதற்காக திரண்ட சிலரை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர் என்ற செய்தியும்
வெளியானது.
இயற்கையின்
சீற்றங்களோடு இத்தகைய விளையாட்டுக்கள் கூடாது என இஸ்லாம் வழிகாட்டுகிறது. பேஸ்புக்
டிவிட்டர் வாட்ஸப்புகளில் இத்தகைய மீம்ஸ்களை பதிவு செய்வது தகாது.
காற்று வீசுவதும்
அது நிலை கொண்டு நிற்பதும் மனிதக் கற்பனைக்குரிய அம்சங்கள் அல்ல. அல்லாஹ்வின் தீர்மாணங்கள்.
அவற்றின் வழியே அல்லாஹ் என்ன திட்டமிட்டிருக்கிறான் என்பது அஞ்சுதலுக்குரிய ஒரு விசயமாகும்.
எனவே காற்றை
குறை சொல்லக் கூடாது. காற்று வேகமாக வீசுகிற
போது அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோர வேண்டும்.
الرِّيحُ مِن رَوْحِ اللهِ،
تَأتِي بِالرَّحْمةِ، وتَأْتِي بِالعَذابِ؛ فلا تَسُبُّوها، وسَلُوا اللهَ
خَيْرَها، واسْتَعِيذُوا مِن شَرِّها
மழை பொழிகிற
போது
மழை பொழிந்தால் அல்லாஹ்வின் கிருபையால் மழை பொழிந்த்து என முஃமின்கள் கூற வேண்டும்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத்தால்
மழை பொழிந்த்து என மற்றவர்கள் சொல்வார்கள் எனில் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கிருபையால்
வங்க்க கடலில் உருவான காற்றழுத்தத்தால் மழை பொழிந்த்து என்று சொல்ல வேண்டும்.
عن زيد بن خالد رضي الله عنه قال صلى لنا رسول الله
صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية على إثر سماء كانت من الليل -أي على إثر
مطر- فلما انصرف أقبل على الناس، فقال: «هل تدرون ماذا قال ربكم؟» قالوا: الله
ورسوله أعلم، قال: «أصبح من عبادي مؤمن بي وكافر، فأما من قال: مطرنا بفضل الله
ورحمته، فذلك مؤمن بي كافر بالكوكب، وأما من قال: مطرنا بنوء كذا وكذا، فذلك كافر
بي مؤمن بالكوكب
நல்ல மழைக்காக
பிரார்த்தனை செய்ய வேண்டும்.
·
عائشةُ -رضي اللهُ عنها-: كان النَّبيُّ -صلَّى
اللهُ عليه وسلَّم- إذا عَصَفتِ الرِّيحُ قالَ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ
خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ؛ وَأَعُوذُ بِكَ
مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
·
عن سَلَمةَ بنِ الأَكْوَعِ -رضي اللهُ عنه- قال: كان
رسولُ اللهِ -صلَّى اللهُ عليه وسلَّم- إذا اشتَدَّتِ الرِّيحُ يقولُ: «اللَّهُمَّ
لِقَحًا لا عَقِيمًا» ومعنى: «لِقَحًا» أي: (حاملٌ للماءِ كاللِّقْحةِ مِن الإبلِ،
والعَقِيمُ الَّتي لا ماءَ فيها كالعَقِيمِ من الحيوانِ لا وَلَدَ فيها).
·
عن عَائِشَةَ رضي الله عنها أَنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى المَطَرَ
قَالَ : ( اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا ) رواه البخاري
·
முதல் மழையில் நனைந்த பெருமானார் (ஸல்)
عَنْ أَنَسٍ رضي الله عنه أنه قال : "
أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ ،
قَالَ : فَحَسَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ ،
حَتَّى أَصَابَهُ مِنَ الْمَطَرِ ، فَقُلْنَا : يَا رَسُولَ اللهِ لِمَ صَنَعْتَ
هَذَا ؟ قَالَ : ( لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى ) " . رواه
مسلم (898).
حَسَر :كشف- رسول الله صلى الله عليه وسلم ثوبه،
மழை பெய்யும் நேரம் பிரார்த்தனைகள் ஏற்கப்படும்
أن النبي صلى الله عليه وسلم قال: (ثنتان ما تردان:
الدعاء عند النداء، وتحت المطر).
இடி இடிக்கும் போது
·
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ رضي الله عنه
: " أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ ، وَقَالَ:
سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ
خِيفَتِهِ [الرعد: 13] ، ثُمَّ يَقُولُ : إِنَّ هَذَا لَوَعِيدٌ شَدِيدٌ لِأَهْلِ
الْأَرْضِ " . رواه البخاري في "الأدب المفرد"
·
عن ابن عباس رضي الله عنه قال : قال رسول الله
صلى الله عليه وسلم : "إذا سمعتم الرعد فاذكروا الله عز وجل فإنه لا
يصيب ذاكرا" .
·
عن عبيد الله بن أبي جعفر أن قوما سمعوا الرعد
فكبروا ،فقال رسول الله صلى الله عليه وسلم : "إذا سمعتم الرعد فسبحوا ،
ولا تُكبروا
இடி மின்னல் பற்றி திருக்குர் ஆன்
هُوَ الَّذِي
يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنشِئُ السَّحَابَ الثِّقَالَ (12) وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ
وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي
اللَّهِ وَهُوَ شَدِيدُ الْمِحَالِ (13)
இடி மின்னலால் நன்மையும் இருக்கிறது அச்சமும் இருக்கிறது. இரண்டும் இறைவனின் நாட்டம்
மழை கடுமையானால் ?
حديث أنس، أن النبي صلى الله عليه وسلم لما قيل له: هلكت الأموال، وانقطعت السبل، فادع الله يمسك المطر، قال:
"اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ"
)شرح الدعاء: حوالينا: أي قريبًا منا، لا على نفس المدينة، لا علينا: لا على
المدينة نفسها التي خاف أهلها من كثرة الأمطار، الآكام: الجبال الصغار، الآجام:
الشجر الكثير الملتف، وقيل: أرض تتكاثف فيها الأشجار، الظِّراب: الروابي الصغار،
وهي الأماكن المرتفعة من الأرض، وقيل: الجبال المنبسطة، والمعنى بين الظراب
والآكام متقارب، وبطون الأودية: داخل الأودية، والمقصود بها مجاري الشعاب، ومنابت
الشجر: الأمكنة التي تكون منبتًا للشجر.(
காற்று சற்று
வேகமாக வீசினாலே பெருமானார் (ஸல்) அவர்கள்
அச்சத்தை வெளிப்படுத்துவார்கள். அங்குமிங்குமாக நடப்பார்கள். மழை வந்தால் மகிழ்ச்சியடைவார்கள்.
فعن عَائِشَةَ زَوْجِ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قالت: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الرِّيحِ وَالْغَيْمِ عُرِفَ
ذَلِكَ فِي وَجْهِهِ وَأَقْبَلَ وَأَدْبَرَ فَإِذَا مَطَرَتْ سُرَّ بِهِ وَذَهَبَ عَنْهُ
ذَلِكَ قَالَتْ عَائِشَةُ فَسَأَلْتُهُ فَقَالَ: (إِنِّي خَشِيتُ أَنْ يَكُونَ
عَذَابًا سُلِّطَ عَلَى أُمَّتِي وَيَقُولُ إِذَا رَأَى الْمَطَرَ رَحْمَةٌ) رواه
مسلم،
இன்னொரு அறிவிப்பில்
அந்த பதற்றத்திற்கான காரணத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் ஆயிஷா அம்மாவுக்கு விளக்கிச்
சொன்னார்கள்.
இது போன்ற
ஒரு காற்றை மழையை தரும் என்று நம்பிய ஆது சமூகத்தினர். அக்காற்றாலேயே அழித்தொழிக்கப்
பட்டார்கள்.
قَالَتْ عَائِشَةُ:
فَسَأَلْتُهُ فَقَالَ: لَعَلَّهُ يَا عَائِشَةُ كَمَا قَالَ قَوْمُ عَادٍ: ﴿ فَلَمَّا رَأَوْهُ عَارِضًا
مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا ﴾
[الأحقاف:
24]
எனவே வழமைக்கு
மாற்றமான இயற்கையின் அடையாளங்கள் வெளிப்படும் போது அச்சப்பட வேண்டும் . என்னவும் நிகழ
வாய்ப்புண்டு.
தமிழம் சந்தித்த
மிகப்பெரும் வரலாற்றுத்துயரமான சுனாமி எத்தகைய கடும் பாதிப்பை ஏற்படுத்தியது ? எண்ணிப்பார்க்கவே
அச்சமாக இருக்கிறதே!
இதனால் பாதிக்கப்
பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒவ்வொரு காற்றழுத்த தாழ்வு நிலையின் போது எத்தகைய
அச்சத்திற்கும் கவலைக்கும் உள்ளாவார்கள் ? ‘
புயல் சில
நேரங்களில் சாமாண்யமாக கரையை கடந்து சென்று விடலாம். சில நேரங்களில் கடும் சேதங்களை
விளைவித்து விடும்.
2005 ம் ஆண்டு
டிசம்பர் 7 ம் தேதி 101 கிமீ
வேகத்தில் வேதாரணயத்தில் கரையை கடந்த
புயலால் 25 ஆயிரம் பே ர் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. விவசாயத்தை பெருமளவில் பாதித்தது.
2008 நவம்பர்
25 ம் தேதி தமிழ்கத்தை தாக்கிய நிஷா புயல் தஞ்சை அதை சுற்றியுள்ள மக்களின் வாழ்வை கடுமையாக
பாதித்த்து. 189 பேர் உயிரிழந்துனர். ‘
2011 டிஸம்பர்
28 ம் தேதி புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே 165 கிமி வேகத்தில் கரையை கடந்த தானே புயலால் 46 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலரது வாழ்வாதாரம்
முற்றிலும் அழிந்து போனது. எண்ணற்ற வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த
பயிர்கள் வீணாயின. கடலூர் காரைக்கால் புதுச்சேரி விழுப்புரம் மாவட்டங்கள் இதில் பெரிதும்
பாதிப்புக்குள்ளாயின. இப்பாதிப்புக்கள் இப்போதும்
கூட சீரடையவில்லை. இந்தப் பகுதிகளில் பயணம் செய்கிற போது தானே புயலின் எச்சங்களை இப்போதும்
நாம் பார்க்கலாம்.
2016 ம் ஆண்டு
டிஸம்பர் 7 ம் தேதி சென்னை பழவேற்காடு அருகே
120 கீமி வேகத்தில் கரையை கடந்த வர்தா புயல் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு
சாய்ந்தன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்
கம்பங்கள் முறிந்து விழுந்தன. பொதுமக்களின்
இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப் பட்டது. சென்னையில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது. உணவுக்கும் பாலுக்கும்
மருந்துக்கும் வேறு ஊர்களுக்கு பயணம் செய்வதற்கும் சென்னை மக்கள் பரிதவித்த்தை அவ்வளவு எளிதில் மறந்து
விட முடியாது.
அல்லாஹ் காப்பானாக!
ஒரு காற்றை
உருவாக்குவதில் அல்லாஹ்வின் திட்டம் என்னவென்பது யாருக்குத் தெரியும் ?
எத்தனை தான்
விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும் அதுவும் அல்லாஹ்வின் தீர்மாணங்களுக்கு முன் தலை வணங்கித்தான
நிற்கிறது.
நேற்றைய தொலை க்காட்சி ஒளிபரப்பில் கஜா புயல் தாமதமாகிக்
கொண்டிருந்த நிலையில் ஒரு பெண் செய்தியாளர்
வானிநிலை நிபுணரிடம், புயல் ஏன் இவ்வளவு மெதுவாக
நகர்கிறது ?. வரும்னு சொல்றாங்க ஆனா வரமாட்டேங்குதே! என்றார். அதற்கவர் சில நேரங்களில்
புயல் அப்படியே வாரக்கணக்கில் கடலிலேலேயே நிலைக் கொண்டு விட்டு பிறகு கரையை கடக்கும்
என்றார். அதற்கு அந்த அம்மையார் அப்படி தாமதமாக
காரணம் என்ன என்றார். அந்த நிபுணர் கொஞ்சம் அயற்வுற்று, “காற்றின் மேலடுக்கில் ஏற்படுகிற அழுத்தம் குறைவாக
இருந்தால் புயல் கரையை கடப்பது தாமதாகும்” என்றார். அத்தோடு அந்தப் பெண்மணி கேள்வியை நிறுத்திக் கொண்டார்.
காற்றின் அழுத்தம் குறைவதோ அதிகரிப்பதோ எதனால்
என்று கேட்க வில்லை . ஒருவேலை இந்தக் கேள்வித்
தொடர் இன்னும் சில படிகள் நீண்டிருக்கும் என்றால் நிச்சயமாக அந்த நிபுணர் “கடவுளின் சித்தம்” என்றுதான் கூறியிருப்பார்.
இயற்கை சீற்றங்களின்
போது அல்லாஹ்வின் திட்டம் குறித்து அச்சப்பட வழி காட்டிய பெருமானார் (ஸல்) அவர்கள்
எச்சரிக்கையாக இருக்கவும் அடையவும் வழிகாட்டினார்கள்.
வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள். வெளியே வர வேண்டாம்.
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ بَارِدَةٌ أَوْ
ذَاتُ مَطَرٍ فِي السَّفَرِ أَنْ يَقُولَ أَلَا صَلُّوا فِي رِحَالِكُمْ) رواه
مسلم.
·
சுகாதாரமாண தண்ணீரை
குடிப்பது.
·
மின்சார சாதனங்களை
எச்சரிக்கையாக பயன்படுத்துவது.
·
தேவையற்ற பயணங்களை
தவிர்ப்பது.
·
நோய்த் தொற்றுக்களில்
எச்சரிக்கையாக இருப்பது.
ஆகியவையும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அம்சங்களாகும்.
பாதிக்கப்
பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது
அரசாங்கத்தின் கடமை. அரசின் உதவிகள் மக்களைச் சென்றடைந்த்ததா என்று கவனிப்பது அமைச்சர்கள்
அதிகாரிகளின் பொறுப்பு. தூரப்பகுதிகளில் ஓரப்பகுதிகளில்
உள்ள மக்களும் கவனிக்கப் பட வேண்டும். நிவாரணப் பணிகளில் துரிதம் காட்டப் பட வேண்டும்.
கி.பி 630 ல் அரபுலகத்தை கடுமையான பஞ்சம் வாட்டியது.கிராமவாசிகள் பலர் பசி பட்டினியால் இறந்து போனார்கள்.பன்னூற்றுக் கணக்கானோர் தலைநகர் மதீனாவை முற்றுகையிட்டனர்.அங்குதான் உணவு பங்கிடப் பட்டு வந்த்து. உடனே உமர் (ரலி) சிரியாஇராக் பாலஸ்தீனில் உள்ள கவர்ணர்களுக்கு கடிதம் எழுதினார்.சரியான நேரத்தில் ஆளுநர்களுடை உதவி வரவேபல்லாயிரக்க்கணக்கானோர் உயிர் பிழைத்தனர். சிரியாவின்ஆளுநராக இருந்த அபூ உபைதார் (ரலி) பெருமளவிலான உதவிப்பொருட்களை அனுப்பியதோடு ஒரு கடிதமு எழுதினார். அதில புகழ்பூத்த அந்த வாசகம் எழுதப் பட்டிருந்த்து.
“நான் உங்களுக்கு உணவுப் பொதிகளைச் சுமந்த ஒட்டக அணிகளைஅனுப்பி வைக்கிறேன். அதன் ஒரு முனை சிரியாவில் இருக்கும்.மறுமுனை மதீனாவில் இருக்கும் என அதில அபூஉபைதா எழுதியிருந்தார்.
மதீனாவை தேடி வந்த மக்களின் துயரை ஆற்றிய பிறகுபாலைவனத்தில்
உள்ளோடிய மக்களை தேடிச் சென்று அவர்களுக்குஉதவ உமர் (ரலி) ஆட்களை அனுப்பினார்.
அக்காலங்களில் இரவுதோறும் மக்களை உமர் பொது விருந்துக்கு அழைத்தார். நூற்றுக்க்ணக்கானோர் அந்த விருந்தில் கலந்து தங்களது பசியை ஆற்றிக்கொண்டனர். (ஹயகல்)
நிலமை ஓரளவு சீரடைந்த்தும் மதீனாவில் தங்கியிருந்தவர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை உமர் ரலி
செய்துகொடுத்தார்.
பாதிக்கப்
பட்ட மக்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல. தனி மனிதர்களின் கடமையுமாகும்.
எனவே வாய்ப்புள்ள
பெருமக்கள் கஜா புயலால் பாதிக்கப் பட்டுள்ள
மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
ஒரு புயலுக்குப்
பின் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் என்று சுகாதார த்துறை எச்சரித்துள்ளது.
அல்லாஹ்
இந்தப் புயல் காற்றை தீமையற்றதாக ஆக்கியருள்வானாக! இதனால்
பெரும் விளைவுகள் ஏற்படாதவாறு காப்பானாக! பாதுகாப்பான
மழையை தந்தருள்வானாக! பாதிப்புக்குள்ளான மக்களுக்கு
விரைவான நிவாரணத்தை அல்லாஹ் தந்தருள்வானாக!
No comments:
Post a Comment