வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 22, 2018

நிவாரணப் பணிகள்



فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنْفِقُوا خَيْرًا لِأَنْفُسِكُمْ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ * إِنْ تُقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ شَكُورٌ حَلِيمٌ) [التغابن:16-17].

النبي -صلى الله عليه وسلم- يقول: "مَن لم يهتم بأمر المسلمين فليس منهم".

கஜா புயலினால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
புயல் வீசி முடிந்து ஒரு வாரம் கடந்து விட்டது.  புயல் சென்ற பாதையில் வசித்த மக்களின் வாழ்க்க பெரும் சிரமத்திற்குள்ளாகியிருக்கிறது.
சுமார்  46  பேர் பலியாகியுள்ளனர்.

231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 1181 ஆடுகளும்  மிகப் பரிதாபமாக உயிரிழந்துள்ளன். தண்ணீரில் செத்து மிதக்கும் ஆடுகளின் புகைப் படங்களைப் பார்க்காவே பரிதாபமாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் இதயத்துடிப்பாக விளங்கிக்கொண்டிருக்கும் வேளாண் பெருமக்கள் புயலின் கோரத்தாண்டவத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் வேளாண்மை மற்றும் தோட்டகலைப் பயிர்கள் பாதிப்படைந்துள்ளது.

32,706 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள், 30,100 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்கள், 7,636 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், 4,747 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, 4,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காபி பயிர், பயறு, பருத்தி, முந்திரி மற்றும் பலா மரங்கள் போன்றவையும் 3,253 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி பயிர்களும், 500 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களும், 945 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மா மரங்களும், 2,707 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்களும்  சேதம் அடைந்துள்ளன.  வேறோடு சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களைப் பார்க்கையில் உள்ளம் பரிதவிக்காமல் இருக்காது.

 86,702 மின் கம்பங்கள், 841 மின் மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன.  சீரமைப்பு பணிகள்  நடை பெற்ற போதும் கூட சுமார் ஒருவார காலமாக மின்சாரசம் இன்றி கடும் கொசுத் தொல்லையில் ஏராளமான மக்கள் வாழ்கைகைக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கில் மெழுகுவர்த்திகளும் கொசுவர்த்திகளும் வேண்டும்  என்ற கோரிக்கை விளம்பரங்கள் இன்னும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. மின்சாரமின்மையே அதற்கு காரணம்.


நாகூரிலிருக்கிற ஒரு சகோதர்ரிடம்  பேசினேன். கரெண்ட நேற்றுத்தான் வந்தது என்றார். இன்னும் சில பகுதிகளுக்கு இரவில்  மட்டும் மின்சாரம் வழங்கப் படுகிறது. பகலில் இல்லை.  திடீர் மின் அழுத்த தாக்குதலில் ஏராளமான வீடுகளில் மின்சார இயந்திரங்கள் கருகி விட்டன. என்று கூறினார்.  
சுமார் 4,844  மீன்பிடி படகுகள், 5,550 மீன் வலைகள் மற்றும் 5,727 படகுகளின் எஞ்சின்கள் சேதமடைந்துள்ளன. 

இந்த தகவல் அனைத்தும் முதலமைச்சரின் அறிக்கையில் வெளியான தகவல்கள்.  இந்த அறிக்கை வெளியிடும் புள்ளிவிவரங்களைத் தாண்டி சேதாரங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருப்பதை சோஷியல் மீடியாக்கள் வெளிப்படுத்தி வருகின்றன,

சேதாரங்களைப் பற்றிய விவரங்களே அதிர்ச்சியளிக்கின்றன என்றால் இத்தகைய சேத்த்தை அனுபவிக்கும் மக்களின் துயரத்தை என்ன வென்று சொல்வது.

அல்லாஹ் அம்மக்களின் துயர்களை விரைவாக   நீக்கியருள்வானாக!  மேலும் பாதிப்புக்க ஏற்படாமல் பாதுகாத்து அருள்வானாக!

துயர் நீக்கும் பணிகளில் அரசின் திறன் போதவில்லை என்பதை மக்களது கோபம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது, மக்களைச் சந்திக்க முடியாமல் அமைச்சர்கள்  இரு சக்கர வாகணத்தில் தப்புவதும். சுவர் ஏறிக் குதித்து தப்புவதும் தமிழகம் இதுவரை சந்தித்திராத காட்சிகள்.

ஆயினும் பொதுமக்கள்  உடுக்கை இழந்தவன் கை போல  உதவிக்களத்தில் தமது உதவிக்  கரங்களை தாராளமாக  நீட்டியுள்ளனர்.

அரசு தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து செயலாற்ற  துடிப்பு மிக்க அதிகாரிகளை நியமித்திருக்க வேண்டும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

தேவைய்டையவர்கள் தொடர்பு கொள்ளவும்,  சேவையாற்றுபவர்கள் அவர்களை சென்றடையவும் தேவையான ஒரு நட்புப் பாலத்தை அரசு உருவாக்கி விடத் தவறிவிட்டது.    சென்னையிலிருந்து வியாபாரிகள் உடனடியாக திரட்டியணுப்பிய சுமார் 40  இலட்சம் ரூபாய் மதிப்பிலான் பொருட்களை  லாரியிருந்து இறக்குவதற்கு அதிகாரிகள் ஒரு லாரிக்கு
2000 ரூபாய் கேட்டனர், இல்லாவிட்டால் எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினர்.  உதவிப் பொருட்களை கொண்டு வந்த வேலைக் காரர்கள் தன் பங்குக்கு இருக்கட்டுமே என்று தமது சொந்த காசை  இறக்கு கூலியாக கொடுத்தனர் என்ற செய்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சக் கூடியது.  மக்களின் உதவிக் கரத்தை கை நீட்டி வர வேற்றிருக்க வேண்டும்.
கேரளாவில் கடும் வெள்ளச் சேதம் ஏற்பட்ட போது கேரள அரசை மக்கள் நம்பினார்கள். பல ஆயிரம் கோடிகளை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.  தமிழகத்தில் அப்படி ஒரு நிலைமை இல்லை என்பது தமிழக அரசியலின் அவலமாகும்.
தமிழகத்தில் மக்களுக்கு பயன்பட முடியாத வலுவற்ற  ஒரு அரசை மத்திய் அரசு தனது சுய இலாபத்திற்காக தொடர்ந்து ஆட்சியில் இருக்க அனுமதித்துக் கொண்டிருக்கிறது.
காஷ்மீரில் மக்களுக்கு பயனளிக்கிற ஒரு அரசை ஏற்படுத் த மாநிலத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கிடையேயுள்ள எதிர்ப்பை மறந்து ஒன்று கூடியிருக்கிற வேளையில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மாநில சட்டமன்றத்தை கலைத்திருக்கீறார்.
ஒரு மக்கள் விரோத மத்திய அரசாங்கத்தின் – தங்களை ஆதரிக்காத மக்களை பழி வாங்கும் போக்கு அப்பட்டமாக வெளிப்பட்டு வருகிறது.
பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்க என்பதற்கேற்ப  காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய அரசுகளை  தேர்ந்தெடுத்த்தற்காக மக்கள் இப்பேதேனும் வருத்தப் பட வேண்டும். இனி இத்தகைய விபத்துக்கள் நடந்து விடவே கூடாது என்பதில் உறுதி காட்ட வேண்டும்.  நிவாரணப் பணிகளில் யாரும் அரசியல் செய்து விட மக்கள் அனுமதிக்க கூடாது.
வாய்ப்பும் வசதிகளும் அற்ற முற்கால ஆட்சித் தலைவர்களின் வரலாற்றை  இத்தகைய சந்தர்ப்பத்தில் நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை.
அங்கே மனிதாபிமானம் கோலோட்சியது. இங்கே மனிதாபிமானத்தை புதைத்து விட்டு அதன் மேல தங்களது கட்சிக் கொடிகளை நாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சுதந்திரம் பெற்ற இந்தியாவின் ஆட்சியாளர்கள் ஹழரத் உமரைப் போல இருக்க வேண்டும் என்று ஆசைப்ப் பட்டார் காந்தியடிகள்.
காந்தியடிகளின் கனவு கனவாகவே போய்விட்டது.
உமர் ரலி அவர்கள் சிரம காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலகின் தலை சிறந்த முன்னோடியாக இருந்தார்கள்.
ஹிஜ்ரீ 17 ம் வருடம் மதீனாவையும் அதன் சுற்று புறங்களையும் கடும் பஞ்சம் வாட்டியது. ஒரு வருடம் முழுவதும் மழையே இல்லை.  காற்று கடும் சூடாக வீசியது. சுடுமணலைப் போல காற்று வீசியதால் அதை  மணல் வருடம் عامَ الرمادة என்று வரலாறு குறிப்பிடுகிறது.
அந்த பஞ்ச காலத்தை  உமர் ரலி அவர்கள் சமாளித்த விதமும் , அவர்களின் நிவாரண ஏற்பாடுகளும் வரலாற்றை வியக்க வைத்தவை.
அரபு தேசத்தை பஞ்சம் வாட்டிய ஆம் ரமாத் கால கட்ட்த்தில் நடை பெற்ற நிகழ்வுகளை வரலாறு கூறுகிறது.
சமையல்காரர்   உமர் (ரலி)
சகரவர்த்தி உமர் தானே உணவுப் பொருட்களை சுமந்து சென்று மக்களுக்கு சமைத்துக் கொடுத்தார். அவரது தாடி முடிகளின் வழியே புகை வெளியேறுவதை வரலாறு கண்டது.
فحمل الفاروق - رضي الله عنه - جِرابينِ من دقيق، وأمَر خادمَه أسْلمَ أن يَلحقه بقِرْبة مملوءة زَيتًا، وأسْرع عمرُ في الخُطَا، حتى وصل إلى أولئك المحتاجين، ورَقَّ لحالهم، وتأثَّر مِن خماصتهم، فوضَع بنفسه الطعامَ في القِدْر، ونفَخ في النار، حتى كان الدُّخَان يخرُج من بيْن لحيته البيضاء، فطبَخ للقوم طعامَهم، ووزَّعه عليهم حتى شَبِعوا، وطابتْ عينُه بعدَ ذلك، ثم أمَر بهم، فحُمِلوا إلى داخلِ المدينة حتى يكونوا قريبًا منه.

உமர் ரலியின் வயிற்றுக் குள்ளிருந்து பசியினால் கர் கர் என்று சப்தம் வந்தது,  உமர் ரலி பேசும் போது அந்த சத்தத்தை  மக்கள் கேட்டனர். உமர் ரலி தன் வயிற்றில் குத்திக் கூறினார். “ நாடிலுள்ள  குழந்தைகளின் பசியாறாதவர நான் உண்ணப் போவதில்லை.
خطَب الناسَ عامَ الرمادة، فقَرْقَر بطنُه وأمعاؤه من الجوع، حتى سَمعتِ الرعية قرقرةَ بطنه، فطعَن بإصْبعه في بطْنه، وقال: قرقِرْ أو لا تقرقِر، والله لا تشبعْ حتى يشبعَ أطفالُ المسلمين.


உப்பை தொட்டு ரொட்டியை சாப்பிட தன் குடும்பத்திற்கு உத்தரவிட்டார் உமர் ரலி)

دخَل يومًا على ابنه عبدالله، فوجدَه يأكُل شرائحَ لحْم، فلامه، وقال له: ألا إنَّك ابنُ أمير المؤمنين، تأكُل لحْمًا، والناس في خَصاصة! ألاَ خُبزًا ومِلحًا، ألا خبزًا ومِلحًا.

ورأى يومًا بطيخةً في يدِ ولدٍ من أولاده، فصاح به: بخٍ بخٍ يا ابنَ أمير المؤمنين، تأكل الفاكهةَ وأمَّة محمَّد هَزْلَى!

بطيخةً: தர்பூசணி 

தனக்கு இறைச்சி வைக்கப் பட்ட்தை அவர் தொட வில்லை . உணவருந்த உட்கார்ந்தவர் சட்டென எழுந்து மூன்று நாட்களாக ஒரு குடும்பம் பட்டிணி கிடப்பது எனக்கு தெரியும் என்றூ கூறி  அவர்களுக்கு உணவை எடுத்துச் சென்றார்.

كان - رضي الله عنه - يؤثِر بطعامه الآخرين على نفسه، أمَرَ يومًا بنَحْر جزور، وتوزيع لحمِه على أهل المدينة، وعندما جلَس عمرُ لغدائه، وجَدَ سنامَ الجذور وكبدَه على مائدته، وهما أطيبُ ما في الجَذور، فسألمِن أين هذا؟ فقالوا: مِن الجزور الذي ذُبِح اليوم، فأزاحه بيده، وقال: بئس الوالي أنا، إن طعمتُ طيبَها، وتركتُ للناس كراديسَها؛ يعني: عظامها، ثم أمر بمأدبته المعهودة، خبز يابس وزَيْت، فجعل يكسِر الخبز ويثرده بالزَّيت، ولم يكملْ هذه الوجبة المتواضعة؛ لأنَّه تذكر أهل بيتٍ لم يأتِهم منذ ثلاثة أيام، فأمر خادمَه بحمْل الطعام إلى ذلك البيت.

உமர் ரலி அவர்களின் வாழ்கை காந்தியடிகளின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த்து.

தன் காலத்தில் மக்களுக்கு  எந்த அழிவும் ஏற்படக் கூடாது என இரவு நேரத்தில் அழுது பிரார்த்திப்பார் உமர் (ரலி)

قال عنه ابنُه عبدالله: سمعتُ أبي في السَّحَر يقول: اللهمَّ لا تجعلْ هلاكَ أمَّة محمَّد على يدي، وكان يقول: اللهمَّ لا تُهْلِكْنا بالسِّنين، وارْفع عنَّا البلاء.

மக்கள் பஞ்சத்தில் வாடுவதைக் கண்ட உமர் ரலி அவர்களின் பரிதவிப்பு நிற்க வில்லை.  அப்பாஸ் ரலி அவர்களை முன் வைத்து பிரார்தித்தார்.

மக்களுக்காக கவலைப்படும் தலைவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் மறுப்பதில்லை.  மழை பொழிந்த்து. 

وخرَج - رضي الله عنه - إلى المصلَّى يستسقي، ومعه النَّاس، والضَّعَفة والأطفال، فخرَج متواضعًا متضرِّعًا متخشِّعًا، فصلَّى بالناس ركعتَين، لم يدرِ الناس ما يقولُ مِن البُكاء، ثم وعَظ الناسَ وذكَّرهم، ثم ألحَّ في الدعاء، وألظَّ في المسألة، وكان مِن سؤاله: اللهمَّ عجزتْ لنا أنصارُنا، وعجزتْ عنا حَوْلُنا وقوَّتنا، وعجزتْ عنَّا أنفسُنا، ثم أخَذ بيَدِ العباس بن عبد المطَّلب، فقال: اللهمَّ إنَّا كنَّا نستسقي إليك بنبيِّنا فتسقينا، وإنَّا نتوسَّل إليك بعمِّ نبيِّنا فاسْقنا، وكان العبَّاسُ قد طال عمرُه، ورقَّ عظمُه، فجعلتْ عيناه تذرِفان، وهو يقول: اللهمَّ أنتَ الراعي فلا تُهملِ الضالَّة، ولا تَدعِ الكسيرَ بدار مضيعة، فقد صرَخ الصَّغير، ورقَّ الكبير، وارتفعتِ الشَّكْوى، وأنت تعلم السِّرَّ وأخْفَى، فأغْنِنا بغناك.

واستجاب الله الدُّعاء، وعمَّتِ الرحمة، وأرسلتِ السَّماء خيراتِها، فلم يكَد ينصَرِف الناس إلى منازلهم، حتى خاضوا الغُدران، واستبشر المسلِمون خيرًا

ஆயினும் மக்கள் பசிப்பிணியை உடனடியாக அது தீர்த்து விடவில்லை.

تَرَك أخْذ الزكاة من الناس ذلك العام، وأنْفق كلَّ ما في بيت المال من الطعام والكساء، واشترى كلَّ ما في السوق من الأكل، حتى نفد الطعام، 

இத்தனை சிரமங்களையும் உமர் ரலி தானே சமாளித்தார்.  வரலாறு கூறுகிறது.

உமர் ரலி க்கு பிறரிடம் உதவி கேட்க வேண்டும் என்றே தோன்றவில்லை.

இப்னு கஸீர் ரஹ் கூறுகிறார். பிறர் சுட்டிக் காட்டிய பிறகு தான் உமர் ரலிக்கு  அக்கம் பக்கத்திலிருக்கிற தனது ஆளுநர்களிடம் உதவி கேட்கலாம் என்று தோன்றியது.

ذكر ابنُ كثير: أنَّ عمر عام الرَّمادة قد غفل عن طلب الغَوْث من أمراء المناطق، حتى أشارَ عليه بعضُ الصحابة، فقال عمر - رضي الله عنه -: الله أكبر! بلَغ البلاء مدَّته.

ثم كتَب إلى عُمَّاله في المناطِق، الغوثَ الغوثَ، كتب إلى أبي عُبيدة بالشام، وإلى عمرو بن العاص بمصر، وإلى معاويةَ بنِ أبي سُفيان بالعِراق، يستغيثهم ويستمدُّهم،

كتب تب إليه عمرو بن العاص، أتاك الغوثُ يا أميرَ المؤمنين، لأبعثنَّ إليك بعِيرٍ أولُها عندَك، وآخرُها عندي، ووصلتْ تلك الإغاثات إلى عمر - رضي الله عنه - فسُرِّي عنه، وخفَّ همُّه، وبرد غمُّه، وقسم على كل ناحية مِن نواحي المدينة

மதீனாவில் ஏராளமான அமீர்களை தொண்டர்களாக்கி அவர்களிடம்  நிவாரணப் பணிகளை ஒப்படைத்தார்.  அன்று மாலை நிவாரணங்கள் வழங்கப்பட்ட  நிலவரத்தை தன்னிடம் வந்து கூற வேண்டும் என்று  உத்தரவிட்டார்.

மதீனாவில் குழுமியிருந்தவர்களுக்கு தனது வீட்டில் விருந்து ஏற்பாடு செய்து உண்வளித்தார்.

ஏழாயிரம் பேர்  வரை  உணவருந்தினர் என்கிறது வரலாறூ’

ذكر ابن سعد: أنَّ عمر - رضي الله عنه - سأل يومًا: أحْصُوا مَن تعشَّى عندنا، فأحصَوْهم فكانوا سبعةَ آلاف، وفي ليلةٍ أخرى عشرة آلاف


மதீனாவில் நிவாரணப் பொருட்கள் குவிய ஆரம்பித்த போது மக்கள் நிவாரணங்களைப் பெற்றுக் கொண்டு தமது ஊருக்கு திரும்பினர் அவர்களோடு சிறிது தூரம் நடந்ந்து சென்றூ அவர்களை வழியனுப்பினார்

وجعَل الفاروق - رضي الله عنه - يسيرُ معهم، ويودِّعهم بدمعات حارَّة، يرَى تلك الوفود التي أَوَتْ إليه جائعةً متهالِكة خائفة، ها هي الآن تعود إلى دِيارها ومساكِنها، آمنةً مطمئِنَّة، معها الزادُ والخير الكثير

 நாட்டின் உள் பகுதியில் வசித்தவர்களுக்கு ஒரு மாத்த்திற்கு தேவையானவற்றை உமர் ரலி கொடுத்தனுப்பினார்.


وكان عمر - رضي الله عنه - يُرسِل إلى الناس مؤنةَ شهر ممَّا يصله من الأمصار.

பெருமை தேடிக் கொள்ள வில்லை.

இத்தகைய உதவியை செய்து விட்டு இதை தான் செய்த்தாக உமர் ரலி பெருமை தேடிக் கொள்ள வில்லை. 

உமர் ரலி அவர்களின் வாழ்க்கை மாக  கனம்  பொருந்தியதாக மாற்றுகிற மந்திரம் இது தான்.

நிறையக் கொடுத்து விட்டீர்கள் என்று ஒருவர் கூறினார் . கத்தாபின் சொத்திலிருந்தா கொடுத்தேன் . எனக்கென்ன நஷ்டம்  ? என்று உமர் ரலி கூறினார்கள்.

فقال رجلٌ لعمر في هذا المظهر المهيب: أشهد أنَّها انحسرتْ عنك، ولستَ بابن أَمَة، فقال له عمر: ويلَك! ذلك لو كنتُ أنفقتُ عليهم مِن مالي أو مِن مال الخطَّاب، إنَّما أنفقتُ عليهم من مال الله - عزَّ وجلَّ.

ஆட்சியாளர்கள் மட்டுமல்ல மக்களும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவ கடமைப் பட்டிருக்கிறார்கள்.

அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிறான் என்ற உணர்வோடும்.
அல்லாஹ் நம்மைக் காப்பாற்றியிருக்கிறான் என்ற நிம்மதியோடும்.

மக்களுக்கு தேவையானவற்றை சரியான வகையில் கொடுத்துதவ வேண்டும்.

அவர்களது ஆபியத்திற்காகவும் நமது ஆபியத்திற்காகவும் அல்லாஹ்வை அஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘
سلوا الله العافية

துஆக்களில் சிற்ந்த்து.
 قام أبو بكر الصديق على المنبر ثم بكى فقال قام رسول الله صلى الله عليه وسلم عام الأول على المنبر ثم بكى فقال اسألوا الله العفو والعافية فإن أحدا لم يعط بعد اليقين خيرا من العافية thir
عن العباس بن عبد المطلب قال قلت يا رسول الله علمني شيئا أسأله الله عز وجل قال سل الله العافية فمكثت أياما ثم جئت فقلت يا رسول الله علمني شيئا أسأله الله فقال لي يا عباس يا عم رسول الله سل الله العافية في الدنيا والآخرة   thir
عن أنس بن مالك أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الدعاء أفضل قال سل ربك العافية والمعافاة في الدنيا والآخرة ثم أتاه في اليوم الثاني فقال يا رسول الله أي الدعاء أفضل فقال له مثل ذلك ثم أتاه في اليوم الثالث فقال له مثل ذلك قال فإذا أعطيت العافية في الدنيا وأعطيتها في الآخرة فقد أفلحت thir
அல்லாஹ்வுக்கு பிரியமானது
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ما سئل الله شيئا أحب إليه من أن يسأل العافية thir
சப்ருக்கு பதில் ஆபியத்
عن معاذ بن جبل قال سمع النبي صلى الله عليه وسلم رجلا وهو يقول اللهم إني أسألك الصبر فقال سألت الله البلاء فسله العافية
 فإنها أوسع وكل احد لا يقدر أن يصبر على البلاء , ومحل هذا إنما هو قبل وقوع البلاء وأما بعده فلا منع من سؤال الصبر بل مستحب لقوله : { ربنا أفرغ علينا صبرا }
பாங்குக்கும் இக்காமத்திற்கும் இடையில்
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرد بين الأذان والإقامة قالوا فماذا نقول يا رسول الله قال سلوا الله العافية في الدنيا والآخرة
நோயாளி
عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم عاد رجلا قد جهد حتى صار مثل الفرخ فقال له أما كنت تدعو أما كنت تسأل ربك العافية thir
மவ்தானவர்களுக்கான பிரார்த்தனயிலும்
سمعت رسول الله صلى الله عليه وسلم يصلي على ميت  وهو يقول اللهم اغفر له وارحمه وعافه thir
ஆபியத்திற்கு விளக்கம்
வீடு உணவு நல்ல மனைவி
ஆபியத்தின் அடையாளம் மூன்று
·         அரசர்களிடம் சிக்காமல் இருப்பது
·         மருத்துவர்களிடம் செல்லாமல் இருப்பது
·         அடுத்தவர்களிடம் தேவையாகமல் இருப்பது.
ஆபியத்தான வாழ்க்கைக்கு வழி
·         தொடர் திக்ருகள் தஸ்பீஹ்கள்
லாயிலாஅக் இல்ல்லாஹ் சிறந்த திக்ரு
இதன் சிறப்பம்சங்கள்  
·         12 எழுத்துக்கள் – 12 மாதங்களில் அல்லாஹ்வைநினைத்தல்
·         12+12 எழுத்துக்கள் 24 மணி நேரம்
·         வார்த்தைகள் – கண் காது நாக்கு கை கால் இனஉறுப்புவயிறு ஆகியவற்றின் பாவம்
சிறப்பம்சம் மிக்க மொழி பெயர்பு

ஆபியத் என்றால்
·         நிவாரணம் –
·         அமைதி
·          அமைதிக்கான காரணம்
·         அமைதி இழப்பை தடுப்பது
·         உடல் நலம் 
·         சண்டை இன்மை –
·         தொழில்வளம்-
·         பாதுகாப்பு
இத்தனையையும் குறிக்கும்
அதனால் தான் தினமும்  காலையில் குனூத்தில் ஹிதாயடத்திற்கு அடுத்தபடி  அல்லாஹ்விடம் கேட்கிறோம்.



وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون

.அல்லாஹ் சேதங்களிலிருந்து நம்மை பாதுகாப்பானாக!  சேத்த்திற்குள்ளானவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்குவானாக!

No comments:

Post a Comment