முழு உலகமும் தற்போது அமெரிக்காவை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஒரு எரிமலையின் விளிம்பில் தற்போது இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அரசியல் இது போல ஒரு இழிவான சூழ்நிலையை இதற்கு முன் சந்தித்ததில்லை.
அமெரிக்க அதிபர்
தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி
பெற 270 மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கு சுமார்
260 பிரதிநிதிகள் ஓட்டு கிடைத்து விட்டது. ஆனால் குடியரசுக் கட்சியை சேரந்த தற்போதைய
அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள இயலாமல் இந்த தேர்தல் நடைமுறையை
செல்லாததாக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சர்வாதிகாரிகள்
தான் தங்களுக்கு எதிரான தேர்தல் முடிவுகளை ஒத்துக் கொள்ள முடியாது என்பார்கள். டொனால்ட்
டிரம்ப் இப்போது அப்படி ஒரு மனோ நிலையில் இருக்கிறார்.
அமெரிக்கா நாடு,
தாங்கள் தான் ஜனநாயகத்திற்கு ஒற்றை பாதுகாவலர்கள் என்று கூறி அரைநூற்றாண்டாக உலகத்தில்
மேலாதிக்கம் செய்து வந்தது. இன்று அமெரிக்க அரசியலின் முகத்திரை உலக அரங்கில் கிழிந்து
தொங்குகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக
அகதிகளுக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக, இஸ்லாமிற்கு எதிராக, கருப்பின மக்களுக்கு
எதிராக, ஊடகங்களுக்கு எதிராக திமிர் காட்டிக் கொண்டிருந்தவர். இப்போது அமெரிக்காவின்
ஜனநாயகத்திற்கு எதிராக திமிர் காட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த் தேர்தல்
நம்பத் தகுந்தது அல்ல. இதில் மோசடி நடந்திருக்கிறது என்கிறார் டொனால்ட் டிரம்ப். அவர்
தான் இப்போதைய் அமெரிக்காவின் அதிபர். மோசடி நடந்திருக்கும் என்றால் அதற்கு அவர் தான்
காரணம் . அல்லது அதிபரால் மோசடியை தவிர்க்க முடியவில்லை என்று அர்த்தம் . இதைவிடக்
கேவலம் உலகின் வலிமை வாய்ந்த வேறு எந்த அதிபருக்கும் ஏற்பட்டிருக்காது.
அவருக்கு தகுந்த
கவுன்சிலிங்க் தரப்பட வேண்டும் என அவரை ஒரு மனோநோயாளி என்கிற அளவுக்கு சர்வதேச ஊடகங்கள்
கருத்து வெளியிட்டு வருகின்றன.
உண்மையில் உலகத்திற்கு
இலைமறை காயாக தெரிவருகிற ஒரு உன்மை என்னவென்றால்
உலகம் முழுவதிலும்
இப்போது மானுட சகோதரத்துவம் அழிந்து இன மதவாத ஆதிக்கம் மேலோங்கிவருகிறது.
முஸ்லிம்களை சமய
அடிப்படை வாதிகள் fundamendalist என்ற விமர்ச்சித்த முழு உலகும் தற்போது இன மத அடிப்படை வாத மேலாதிக்க சிந்தனைக்குள்
மூழ்கியுள்ளது.
பிரான்ஸில் முஹம்மது
நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக என்று சொல்லிக் கொண்டு அங்குள்ள சிறுபான்மையின முஸ்லிம்களை
துன்புறுத்தும் பணியை அங்குள்ள பல பத்ரிகைகள் பல கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன.
அரசு அவற்றை ஆதரித்து வருகிறது. அதைக் கருத்துச் சுதந்திரம் என்கிறார்கள். முஸ்லிம்களின்
எதிர் நிகழ்வுகளை மட்டும் கண்டிக்கிறார்கள்.
முஹம்மது நபியை
பற்றிய கார்ட்டூனை வகுப்பறையில் காட்டியதற்காக கொல்லப்பட்ட போது அவரது இறுதி அஞ்சலியில்
கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்
மக்ரோன் ஒரு அதிபருக்கான பொறுப்பான முறையில் பேசியிருப்பார் என்றால் இவ்வளவு
பதற்றம் பிரான்ஸிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டிருக்காது.
தற்போது உலகிலுள்ள
முஸ்லிம் நாடுகளின் கடுமையான எதிர்ப்பை பார்த்த பிற்கு தான் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு
எதிரானவன் அல்ல என்கிறார். கார்ட்டூனின் கருத்துக்கு ஆதரவானவன் அல்ல என்கிறார். ஆனால்
கொல்லப் பட்ட சாமுவேல் பட்டியின் அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய போது கார்ட்டூன்களுக்கு
தனது ஆதரவு உண்டு என்றார். அதன்பிறகு தான் அந்த கார்ட்டூன்களை வைத்துக் கொண்டு பெரிய அளவில் பிரான்ஸில் ஊர்வலங்கள் நடை பெற்றன.
இது பிரான்ஸில் உள்ள சிறுபான்மை மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் அடையாளமாக அங்கு மேலும் சில வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
பிரான்ஸ் அதிபர்
மக்ரோனுக்கு கருத்துச் சுதந்திரத்தின் பொருள் என்ன வென்பது தெரியாமல் இல்லை. குறிப்பிட்ட
ஒரு மதத்தினரை குறிவைத்துச் செய்யப்படுகிற பத்ரிகை தாக்குலை கருத்துச் சுதந்திரம்;
அதை அரசு பாதுகாக்கும் என்றால் அதற்கு வன்முறை வழியில் எதிர் வினையாற்ற யாருமே இருக்க
மாட்டார்கள் என்று ஒரு பொறுப்பான தலைவர் நினைக்க முடியாது. தனது பிராந்தியத்தில் அப்படி
ஒரு மோசமான நிகழ்வு நடப்பதை எந்த சரியான தலைவரும் அனுமதிக்க மாட்டார்.
ஆனால் அதிபர் மெக்ரோன்
அடுத்து வரக்கூடிய தேர்தலில் கிருத்துவர்களின் வாக்குவங்கியை தனதாக்கிக் கொள்வதற்காக
இந்த கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையை பயன்படுத்திக் கொள்கிறார். அதுதான் தற்போதைய
ஐரோப்பாவின் பிரச்சனையாகும்.
அமெரிக்காவிலும்
நிலை அது தான்.
அதிபர் டிரம்ப்புக்கு
தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது முன் கூட்டியே தெரியும். தேர்தல் முடிவு தனக்கு
எதிராக இருக்கும் எனில் அதிகார மாற்றம் சுமூகமாக இருக்காது என அவர் ஆறுமாதமாக கூறிவருகிறார்.
அதே நிலைப்பாட்டைத்
தான் அவர் இப்போது வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு கிடைத்துள்ள கனிசமான வெற்றி வாய்ப்பு
நிச்சயமாக அவருக்கு பெரிய் உந்துதலை தரும். அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களின்
கண்ணாடிகளை உடைத்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு போராடிவருகிறார்கள். அமெரிக்காவின்
பாதுகாப்பு அமைச்சர். கலவரக்காரர்களை தடுப்பதை விட்டு விட்டு தேர்தலில் முறைகேடுகள்
நடந்துள்ளதா என்பதை கண்டறிய ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இரானுவத்தினரை பயன்படுத்தப்
போவதாக அறிவித்துள்ளார்.
உலகின் அப்பட்டமான
இந்த அத்து மீறலுக்கு பின்னால் வெட்கமற்ற வெள்ளை இனவாத ஆதிக்க வெறியே காரணமாகும். கருப்பின
மக்கள், மற்றும் குடியேறிகளின் வாக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைத்தான் டொனால்ட்
டிரம்ப் தேர்தல் முறைகேடு என்ற வார்த்தையில் கூறிவருகிறார்.
மானுட வரலாற்றில்
இத்தகைய ஆதிக்க வெறி பரவி வருவது மிகவும் கவலை அளிக்க கூடியது.
இது அமெரிக்க தேர்தலை
பற்றி மட்டும் கவலைப் படக் கூடிய நேரமல்ல. முழு மானுடத்தின் மதிப்பைப் பற்றி கவலைப்
பட வேண்டிய நேரமாகும்.
நேற்று பாலஸ்தீனின்
மேற்குக் கரை பகுதியில் 80 முஸ்லிம் வீடுகளை இஸ்ரேலிய இராணுவம் இடித்துத் தள்ளியுள்ளது.
உலகின் எந்த மூலையிலிருந்தும்
அதற்கு எதிர்ப்பில்லை.
யூதர்கள் என்ன
வேண்டுமானும் செய்யலாம். முஸ்லிம்கள் அதை சகித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க சிந்தனை
உலகம் முழுவதிலுமே பரவிவிட்டது.
மக்களை ஜாதி அடிப்படையில்,
ஆதிக்க மேல் ஜாதிக்காரர்கள் அடங்கிக் கிடக்க வேண்டிய கீழ் ஜாதிக்காரர்கள் என்று பிரிவினை
செய்கிற மனுஸ்மிருதியின் ஆதரவாளர்கள் அதை வெடகங்கெட்ட முறையில் பிரச்சாரம் செய்ய ‘வேல்
யாத்திரை” நடத்தப்போவதாக தமிழகத்தில் ஒரு சூழல் நிலவுவதும், இந்தியா முழுவதிலும் நீதி
மன்றங்கள் கூட இந்துத்துவ அலையில் வீழ்ந்து வருவதும் கூட உலகம் முழுவதும் பரவிவருகிற
இனவாத ஆதிக்க வெறிச் சிந்தனையின் விளைவுதான்.
இஸ்லாம் மக்களுக்கு
சேவையாற்றுவதற்காக அதிகாரம் வேண்டும் என்று கேட்பதை ஏற்றுக் கொள்கிறது.
யூசுப் (அலை) கேட்டார்கள்.
قَالَ اجْعَلْنِي
عَلَىٰ خَزَائِنِ الْأَرْضِ ۖ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ (55)
ஆட்சிப் பொறுப்பு வகிப்பதை ஒரு சிறந்த வணக்கமாகவும் மானுடக் கடமையாகவும் கருதுகிறது.
இந்தியாவை ஆண்ட குத்புதீன் ஐபக் ம்ம்லூக் வமிசத்தவரே
இத்தகை பண்டைய அனுபவங்கள் உலகிற்கு ஒரு மாற்று சிந்தனையை தர போதுமானவை
No comments:
Post a Comment