வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 19, 2020

ஆசை வெற்றிக்கும் தோல்விக்குமான பாலம்

 ஆசைப்படுவது மனிதவாழ்வின் பிரதான இயல்பு

ருசியாக உண்ண வேண்டும்,அழகாக உடுத்த வேண்டும்,உல்லாசமாக அனுபவிக்க வேண்டும் அதிகாரம் செய்ய வேண்டும்,மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற இந்த ஆசைகள் இல்லை என்றால் மனித வாழ்கை சூனியமே!

ஆசை அருமை இல்லாத மனிதன் ஒரு ஜடம்.

வானத்தில் பறக்க வேண்டும், நிலாவை தொட வேண்டும். ஒளியின் வேகத்தில் விரையும் வசதி வேண்டும் என்பது போன்ற ஆசைகள் தான் மனிதனின் எல்லா வெற்றிக் கும் காரணமாகும்.

இஸ்லாம் இந்த ஆசையை வரவேற்கிறது.

فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ} (البقرة:148

நல்லதில் போட்டி போட்டு செயல்படுங்கள் 

உயர்த்ரமான காரியங்களுக்கு ஆசைப்படுங்கள் என்றார்கள் பெருமானார் (ஸல்)

عن الحسن بن عليّ -رضي اللّه عنهما- قال: قال رسول الله  " صلى الله عليه وسلم" : «إنّ اللّه -تعالى- يحبّ معالي الأمور وأشرافها، ويكره سفسافها»

عن أبي هريرة قال: قال النبي  " صلى الله عليه وسلم" : «إن في الجنة مئة درجة أعدها الله للمجاهدين في سبيل الله، ما بين الدرجتين كما بين السماء والأرض، فإذا سألتم الله فاسألوه الفردوس، فإنه أوسط الجنة وأعلى الجنة أراه فوقه عرش الرحمن، ومنه تفجر أنهار الجنة

முஸ்லிம்களின் வரலாற்றில் மிகவும் சோதனையான கால கட்டமாக அமைந்த கன்தக் யுத்த்தின் போது பாரசீகம் ரோம் யமன் நாடுகளின் வெற்றியை பற்றிய களிப்பை சஹாபாக்கள் மனதில் பதிய மிட்டார்கள் முஹம்மது நபி (ஸல்)

ففي حديث البراء بن عازب  "رضي الله عنه"  قال: أمرنا رسول الله  " صلى الله عليه وسلم"  بحفر الخندق، قال وعرض لنا فيه صخرة لم تأخذ فيها المعاول، فشكوناها إلى رسول الله  " صلى الله عليه وسلم" ، فجاء فأخذ المعول ثم قال: «بسم الله». فضرب ضربة، فكسر ثلث الحجر، وقال: «الله أكبر. أعطيت مفاتيح الشام. والله إني لأبصر قصورها الحمر من مكاني هذا». ثم قال: «بسم الله». وضرب أخرى، فكسر ثلث الحجر، فقال: «الله أكبر. أعطيت مفاتيح فارس. والله إني لأبصر المدائن، وأبصر قصرها الأبيض من مكاني هذا». ثم قال: «بسم الله». وضرب ضربة أخرى فقلع بقية الحجر، فقال: «الله أكبر. أعطيت مفاتيح اليمن. والله إني لأبصر أبواب صنعاء من مكاني هذا» (7).\\\

எனவே வாழ்வில் ஆசைகள் இருக்க வேண்டும். அதை அடைய நியாயமான வழிகளில் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் முயற்சிக்க வேண்டும். குறுக்கு வழிகளையும் அநியாயமான நடைமுறைகளையும் கை கொண்டு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்க கூடாது.

உமய்யா சகரவர்த்திகளில் அப்துல் மலில் பின் மர்வான் ரஹ் அவர்களும் ஒருவர். ஐந்தாமவர். ஹிஜ்ரீ 65 லிருந்து 86 வரை 21 ஆண்டுகள் சக்ரவர்த்தியாக இருந்தார்.  ஆனால் அவர் ஆரம்பத்தில் அரசியல் வாதியல்ல.

மிகச்சிறந்த கல்வியாளர்.

وكان قبل توليه الخلافة ممن اشتهر بالعلم والفقه والعبادة، وكان أحد فقهاء المدينة الأربعة، قال الأعمش عن أبي الزناد: «كان فقهاء المدينة أربعة: سعيد بن المسيب، وعروة بن الزبير، وقبيصة بن ذؤيب، وعبد الملك بن مروان»

 

அவரது தந்தை மர்வான் பின் ஹகம் மூலம் அவருக்கு அதிகாரம் வந்தது. அப்படி அதிகாரம் தனக்கு வரக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆட்சியதிகாரம் என்பது பல நிலைகளிலும் கடும் விமர்சனத்திற்குள்ளாகி யிருந்த நேரம் அது. ஆயினும் அது தனக்கு கிடைத்தால் நன்மை செய்ய முடியும் என்று நினைத்தார்.  தன் நண்பர்களிடமும் அதைப் பற்றி கூறியிருந்தார்.

சகரவர்த்தியாக உயர்ந்த சூழ்நிலையில் முன்னாள் தன்னுடன் அறிவுலகில் இணைந்து பயணித்த நண்பர் மாலிக் பின் இமாராவிடம் அப்துல் மலிக் பின் மர்வான் கூறினார்.

உயர்ந்த அந்தஸ்திற்கு ஆசைப்படுகிற ஒவ்வொருவரிடமும் இந்த இயல்பு இருக்க வேண்டும். இருந்தால் அது மிக  நல்லது.

இந்த அதிகாரம்,

நம்பியவர்கள் யாரயும் நான் ஏமாற்றியதில்லை, எதிரிகளின் வேதனையில் நான் இன்பமுற்றதில்லை, பேச வருகிற எவரையும் இடைமறித்து நான் பேசியதில்லை , ஹரமான காரியங்களை எதையும்  நான் லயித்து செய்ததில்லை. இதனாலேயே எனக்கு இந்த அந்தஸ்தை அல்லாஹ் தர வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அப்படியே கிடைத்தது.

ولكني أُخبِرك بخصال مني سمت بها نفسي إلى الموضع الذي ترى، ما خُنْتُ ذا ودٍ قط، ولا شمتُ بمصيبة عدوٍ قط، ولا أعرضتُ عن محدث حتى ينتهي حديثه، ولا قصدتُ كبيرة من محارم الله متلذذاً بها فكنتُ أؤمّل بهذه أن يرفع الله تعالى منزلتي وقد فعل.

என்ன அருமையான வெற்றிச் சிந்தனை பாருங்கள் ?

எனவே நல்ல சிந்தனைகளோடு உயர்ந்த நிலையை அடைய ஆசைப்பட வேண்டும்.

இருக்கிற நிலையிலேயே இருந்து கொள்கிறேன் என்று நினைக்கலாகாது.   

போதும் என்ற மனம் என்பது இருப்பது போதும் என்ற  சோம்பேறித்தனத்தின் முகவரி அல்ல.

போதும் என்ற மனம் என்பது கிடைக்காததில் மனம் அலைபாயக் கூடாது என்பதாகும்.

கவுன்சிலர், எம் எல அமைச்சர் என்று ஆசைப்படும் போது ஒரு தனிமனிதனின் அரசியல் வாழ்வு பரிமளிக்கும்.

எனவே முஸ்லிம்கள் தங்களது தனி வாழ்விலும் சமூக பொது வாழ்விலும் மேலும் மேலும் வெற்றிகளை குவிக்கவும் நன்மைகளை சிறப்பாக செய்யவும், தமது அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளவும் ஆசைப்பட வேண்டும்.

فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ} (البقرة:148

என்ற ஒற்றை வாசகம் அத்தனைக்கும் போதுமானது.

ஆசை பேராசையாகவோ மனோ இச்சையாகவோ மாறிவிடக்கூடாது.

தகுதிக்கு மீறிய ஆசை பேராசை

எப்படியாவது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் மனோ இச்சை.

ஆசை இந்த நிலையை அடையும் போது மனித வாழ்வின் குற்றங்களுக்கான வாசல் திறக்கிறது.

உண்ணுவதில், உடுத்துவதில், அனுபவிப்பதில்,அதிகாரம் செய்வதில் பதவிகளைப் பெறுவதில் இத்தகைய பேராசை அல்லது மனோ இச்சைப் படி நடப்பது நமது அந்தஸ்தை அழித்து தோல்வியின் பள்ளத்தில் வீழ்த்தி விடக் கூடியவை மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் மிருக நிலைக்கு தள்ளி விடக் கூடியதுமாகும்.

ஒரு நாயுக்கு இறைச்சித்துண்டு ஒன்று கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு ஓடியது. ஒரு தடாகத்தில் வந்து தண்ணீரை எட்டிப் பார்த்தது. தண்ணீரிலும் ஒரு நாய் ஒரு இறைச்சித்துண்டோடு இருப்பதை அது பார்த்து. அது தனது நிழல் தான் என்று அதற்கு தெரியவில்லை. அந்த இறைச்சித்துண்டையும் தனதாக்கிக் கொள்வதற்காக அந்த நாயைப் பார்த்து குறைத்து மிரட்டியது. அப்போது அதன் வாயிலிருந்த இறைச்சித்துண்டு தண்ணீர்ல் விழுந்து மூழ்கியது.

ஆசை பேராசையாகி அல்லது மனோ இச்சையாகி கடந்து போன மனித வாழ்வை எப்படி எல்லாம் அழித்தது என்பதற்கு எண்ணிலடங்கா உதாரணங்கள் ஒவ்வொரு பகுதியிலும் உண்டு. ஏரளமான பழமொழிகளும் உண்டு.

ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

Bird in hand is better than two birds on tree

கையில் இருக்கும் ஒரு பறைவை மரத்தில் இருக்கும் இரண்டு பறவைகளை விட ச் சிறந்தது.

மனோ இச்சையும் பேராசையும் கப்பலில் விழும் ஓட்டையை போன்றவை. அது பெரிதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் உடனடியாக சரி செய்யாவிடில் கப்பல் மூழ்கிவிடும்.

ஆசை தேவையான அளவில் இருப்பதே நல்லது.

மொளலானா ரூமி ரஹ் அவர்கள் மனிதனின் பேராசையின் விளைவை அற்புதமாக விளக்குவார்கள்

தனது வீட்டில் நிறைய விலங்குகளை பராமரித்து வந்த ஒரு பேராசைக்காரன் மூஸா அலை அவர்களிடம் எனக்கு விலங்குகளின் மொழி தெரிய வேண்டும் அதற்காக பிரார்த்தியுங்கள் என்றான். அதன் மூலம் தான் இன்னும் அதிகம் லாபம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்தான்.  மூஸா அலை பிரார்த்தித்தார்.

அவன் மறு நாள் காலை வீட்டில் மிச்சமாகியிருந்த எலும்புத்துண்டுகளை வெளியில் வீசிய போது அவனது வீட்டருகே இருந்த நாயும் ஒரு சேவலும் அதை நோக்கி ஓடியது. சேவல் வேகமாக சென்று எலும்பை எடுத்துக் கொண்டது. நாய் அதனிடம் கொஞ்சியது, இரவு முழுக்க கண் விழித்து நான் இவரது வீட்டை பாதுகாத்திருக்கிறேன். அந்த எலும்பை எனக்கு கொடு ! உனக்குத்தான் பகலில் நிறைய கிடைக்குமே என்றது. சேவல் கூறியது “ கவலைப் படாதே இன்று இவர் வீட்டிலுள்ள கழுதை இறந்து விடும் உனக்கு வேட்டை தான் என்றது. சேவலின் பேச்சை புரிந்து கொண்ட போது முதலாளிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் கழுதையை விரைவாக கடை வீதிக்கு கொண்டு சென்று விற்றுவிட்டான். தனது மனைவியிடம் தன்னுடைய புத்திசாலித்தனத்தை கூறி மெச்சிக் கொண்டான். மறு நாளும் அவன் மீதியிருந்த எலும்புத்துண்டை வெளியே வீசிய போது மறுபடியும் சேவல் அதை கவ்விக் கொண்டது. இம்முறையும் நாய் மன்றாடியது. சேவல் கூறியது, கவலைப் படாதே இன்று அவனுடைய மாடு இறந்து போகும் உனக்கு கொண்டாட்டம் தான் என்றது. முதலாளி மாட்டை விற்றான். அடுத்தாள் குதிரை என்றது முதலாளி குதிரையை விற்றான். அடுத்த நாள் நாய் அந்த சேவலிடம் சண்டையிட்டது. தொடர்ந்து நீ என்னை ஏமாற்றி வருகிறாய் இன்று உன்னை விடமாட்டேன் என்றது. அப்போது சேவல் கூறியது. இன்று நான் சொல்வது நிஜம், நிச்சயமாக இன்று இந்த வீட்டுக் காரன் இறந்து போவான் நிறைய ஆட்கள் வருவார்கள். உனக்கானது கிடைக்கும் என்றது. சேவலின் வார்த்தைகளை கேட்ட முதலாளி அதிர்ச்சியடைந்தான்.

மூஸா அலை அவர்களிடம் ஓடினான். மூஸா அலை அவர்கள் கூறினார்கள். உன் வீட்டில் ஒரு மரணம் ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ் விதித்திருந்தான். குதிரை கழுதை மாடு அனைத்தையும் நீ விற்று விட்டாய். இப்போது உன்னை நோக்கி மரணம் வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார். சற்று நேரத்தில் அவன் இறந்து போனான்.

உணவு, காசு, அதிகாரம் ஆகியவற்றின் மீதான் எந்த பேராசையும் நாமே அழிவை தேடிக் கொள்ள வழி வகுக்கும்

ஆசையை கட்டுப் படுத்திக் கொள்வதற்கான அருமையான வழிகளை இஸ்லாம் கற்றுக் கொடுத்து .

1.   உனக்கு பயனளிப்பதை ஆசைப்படு!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அழகாக வழிகாட்டினார்கள்.

وفي صحيح مسلم من حديث أبي هريرة رضي الله عنه قال صلى الله عليه وسلم: «احرص على ما ينفعك»


மனோ விருப்பங்கள் தான் ஆசையாக உருவெடுக்கின்றன. கார் பங்களா அந்தஸ்து பிஸியான புகழ்மிக்க வாழ்கை ஆகியவற்றின் மீதான விருப்பம் நியாயமானதே

ஆனால் அதில் அடிப்படையாக நமக்கு பயன்படுமா என்ற கேள்வி இருக்குமானால் அது நன்மையாக இருக்கும்.

புகழைச் சம்பாதித்தவர்கள் பலருக்கும் அது நிம்மதியை தர வில்லை.

இளவரசி டயானாவை துரத்திக் கொண்டு வந்த புகழ் அவரது உயிரை பலி வாங்கியது.

2.   எல்லாவற்றிலும் ஆசைப்படாதே!

 சில நல்ல எண்ணங்களை கூட பேராசை என்கிறான் அல்லாஹ்

إِن تَحْرِصْ عَلَىٰ هُدَاهُمْ فَإِنَّ اللَّـهَ لَا يَهْدِي مَن يُضِلُّ ۖ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ} [النحل: 37]

3.   கிடைத்திருப்பதில் திருப்தி  - நமக்குள்ளது வந்து சேரும்.

قال النبي صلى الله عليه وسلم: " أيها الناس اتقوا الله وأَجمِلوا في الطلب، فإن نفسا لن تموت حتى تستوفي رزقها وإن أبطأ عنها، فاتقوا الله وأَجْمِلوا في الطلب، خذوا ما حل، ودعوا ما حَرُم " (رواه ابن ماجه وصححه الألباني).

4.   கிடைக்காதவற்றிலும் திருப்தி – இது நமக்குரியதல்ல

  عن حكيم بن حزام رضي الله عنه قال : سألت النبي صلى الله عليه وسلم فأعطاني، ثم سألته فأعطاني، ثم سألته فأعطاني، ثم قال لي : " يا حكيم، إن هذا المال خضرة حلوة، فمن أخذه بطيب نفس بورك له فيه " (رواه البخاري ومسلم).

 மிகச் சில வாழ்க்கையின் அடி நாதமான செய்திகள் இவை

இன்றைய மனித வாழ்வு ஆசைகள் அபிலாசைகளின் போராட்டமாக இருக்கிறது.

அன்றாடம் செய்தித்தாள்களும் விளம்பரங்களும் மற்ற நிகழ்வுகளும் நமது ஆசைகளை தூண்டிக் கொண்டே இருக்கின்றன.

நிம்மதியான வாழ்க்கை நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

இது வலிமார்களை நினைவு கூறுகிற காலம்’

யார் தனது ஆசைகளை கட்டுப் படுத்திக் கொண்டாரோ அவரே இறைநேசர்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

3 comments: