வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 26, 2020

இறைநேசர்களின் வாழ்வு

 நமக்கு உடலும் இருக்கிறது ஆன்மாவும் இருக்கிறது.

ஆன்மா என்பது சிந்திக்க செயல்பட தூண்டுகிற சக்தி

மனித வாழ்வில் ஆன்மா எப்படி ஒருக்கிறது என்பது மிக முக்கியமானது. அழுக்கடைந்த்தா ? பரிசுத்தமானதா என்பது முக்கியம்.

கப்ரில் ஓதப்படும் வசனம்

 يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ (27ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً (28فَادْخُلِي فِي عِبَادِي (29وَادْخُلِي جَنَّتِي (30)

நப்ஸுக்கு மரணமில்லை; நப்ஸ் வாழ்கிறது.

அது தான் நன்மை தீமைகான விளைவுலை சந்திக்கப் போகிறது.

நாம் மண்ணறையில் வைக்கப் படும் போது நமது நப்ஸு முத் ம இன்னாவாக இருக்க வேண்டும்.

மனித ஆன்மாவை பிரதானமாக மூன்று வகையாக அறிஞர்கள் வகைப்படுத்துவார்கள்

நப்ஸ் அம்மாரா  உலகியல் ஆசைகளை மட்டுமே பிரதானமாக கொண்ட்து. தீமைகளிலே உழலக் கூடியது, மறுமை நன்மைகளைப் பற்றிய சிந்தனையே இருக்காது.

இத்தகைய இதயம் படைத்தவர்கள் மனித உடலில் வாழும் மிருகங்களே!

இதற்கான அடையாளங்கள்!

ஆசைகளை தீர்த்துக் கொள்ள வழிமுறை, நேரம் காலம் சூழல் பார்க்காது.

கோபத்தில் என்ன செய்கிறோம் என்று யோசிக்காது. எதையும் செய்யும்.

பசியில் எதையும் சாப்பிடும்.

செல்வச் செழிப்பில் என்ன வேண்டுமானாலும் பேசும். பிர் அவ்ன் ரப்புக்குமுல் அஃலா என்று சொன்னது போல.

சுயநலம்.

தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள கழுதையை கூட தந்தை என்று ஒத்துக் கொள்ளும்.

எது கிடைத்தாலும் புலம்பும். நன்றி இருக்காது.

ஒரு பெரும் பணக்காரர் – நாற்பது குடும்பங்களை காப்பாற்றும் சக்தி படைத்தவரிடம் ஒரு ஞானி கேட்டார் . எப்படி இருக்கிறாய் ? அவர் சொன்னார். ஏதோ இருக்கிறேன்.

இறைவனை புகழக்கூட உனக்கு மனமில்லையா என்று கடிந்தார் ஞானி.

நப்ஸ் அம்மாராவின் இயல்பு

பஞ்சுக்கு அருகே நெருப்பை கொண்டு சென்றாலே அது பற்றிக் கொள்வது போல இவர்களுக்கு அருகே தீமை கடந்து சென்றாலே அதை பிடித்துக் கொள்வார்கள்/

சந்தர்ப்பம் வாய்க்கும் போது சட்டென்று தவறு செய்து விடுவார்கள். அதற்காக கவலைப்பட மாட்டார்கள்.

இன்றைய ரவுடிகளை பாருங்கள்! எந்த அக்கிரமத்தையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.  

நாம் இந்த நிலையிலா இருக்கிறோம் என்று பரிசீலித்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய மனோ நிலையிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

அன்மா வின் அடுத்த நிலை நப்ஸ் லவ்வாமா

எப்போதும் தவறில் விழுந்து விடுவதற்கு தயாராக இல்லாமல், மனதை இழுத்துப் பிடித்துக் கொள்பவர்கள். ஆனாலும் தவ்றுகளை கடந்து செல்லும் போது தவறிவிடும் சூழலில் இருப்பார்கள். ஒருவேளை எல்லை மீறி தவறு செய்து விட்டால் கூட அதற்காக வருத்தப் பட்டு பின்வாங்கிவிடுபவர்கள்.

இத்தகைய இதயத்தை பெற முக்கியமான மூன்று விசயங்கள்.

1.   எப்போதும் ஷரீஅத் குறித்து சிந்திக்க வேண்டும். ஷரீஅத் அனுமதிக்கிற காரியங்களை மட்டுமே செய்வேன் என்று தீர்மாணிக்க வேண்டும்.

2.   ஷரீஅத்தின் ஹலால் ஹராம் சம்பந்தப்படாத விசயங்களில் நமது முன்னோர்களின் வழிமுறை என்ன எனதை சிந்திக்க வேண்டும். அந்த வழிமுறைப்படி வாழ வேண்டும்.

3.   ஒரு காரியத்தை இதயத்தை இலேசாக தெரிகிற வழிமுறையை விட சிரமமாக தெரிகிற வழிமுறையை பின்பற்ற வேண்டு,

இத்தகைய இதயத்தை மேலும் சீரமைத்துக் கொள்ள சில வற்றை பற்றிய சிந்தனையை அதிகரிக்க வேண்டும்

·         அல்லாஹ்வின் ஆற்றல்

·         அல்லாஹ்வின் அருட்கொடைகள்

·         அல்லாஹ்வின் தண்டனைகள் விளைந்த நாட்கள்

وَكَأَيِّن مِّن قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُّكْرًا (8)

·         மரணத்திற்கு பிந்தய வாழ்கை

இந்த சிந்தனையை ஆழமாகவும் அழுத்தமாகவும் செல்கிற போது இதயம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்

மனித ஆன்மாவில் மூன்றாவது வகை நப்ஸ் முத்ம இன்னா

 

அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நீதிக்கு உட்பட்டு ஷரீஅத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து வாழ்ந்து பழகும் மனிதர்கள் தீமைகளை கண்டால் அதில் சிக்கிவிடுவோமோ என்ற பயமற்ற மனநிலைக்கு சென்று விடுவார்கள். இவர்களே அச்சமற்ற ஆன்மாக்கள்.  மிக உயர்ந்தரமான மனித குணம் இவர்களுடையது. சராசரியான மனித வாழ்விலிருந்து மேல் நிலைக்கு சென்று விடுவார்கள்.

தீமைகளைப் பற்றிய சிந்தனை கூட இருக்காது.

இவர்கள் தான் உன்மையில் சிறந்தவர்கள்

இவர்களைத்தான் திருக்குர் ஆனில் அல்லாஹ் என்னுடைய அடியார்கள் என்கிறான் .

إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ (42)

இவர்களுக்கு அல்லாஹ்விடம் தனி அந்தஸ்து உண்டு.

 

ஒருநாள் இரவு பெருமானார் (ஸல்) அவர்கள் ஆயிஷா ரலி அவர்களோடு வானத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நட்சத்திரங்கள் அளவு நம்மில் அமல் செய்த மனிதர்கள் உண்டா என்று ஆயிஷா அம்மா  கேட்க;   ஆம் உமர் அவர்களில் ஒருவர் என்றார்கள் பெருமானார் (ஸ்ல)

ஆயிஷா அம்மா மெளனமகிவிட பெருமானார் கூறினார்கள்.

ஆயிஷா !  தந்தை அபூபக்கரை நான் குறிப்பிட வில்லை என்று கவலை வேண்டாம். அவர் என்னோடு தவ்று குகையில் தங்கியிருந்த மூன்று நாட்களில் ஒரு நாளுக்கு நிகராக இவை எதும் அமையாது என்றார்கள்.

அல்லாஹ் தனது நல் அடியார்களின் அந்தஸ்தை மிகச் சிறப்பாக உயர்த்துகிறான்

 

இத்தகை நிலையை அடைய மிக முக்கியமாக தேவைப்படுவது ஒரு சிந்தனை மாற்றம் தான்.

அல்லாஹ்வும் ரஸூலும் நமக்கு தந்தவை அனைத்தும் நமது நன்மைகாகவே. அவர்களுடைய நன்மைக்காக அல்ல. நம்மை மேம்படுத்துவதற்காக அவர்கள் தம்மை மேம்படுத்திக் கொள்ள அல்ல என்ற சிந்தனையை அழுத்தமாக இதயத்தில் வைக்க வேண்டும். ஒவ்வொரு காரியத்திலும் இது குறித்த சிந்தனை வேண்டும்.  

مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

இறை நேசர்களது வாழ்வின் இரக்சியம் இதுதான்.

 

ஒரு கணப் பொழுதிலும் கூட அவர்களது வாழ்வில் தடுமாற்றம் இருக்காது.

 

ஜுனைதுல் பக்தாதி ஒரு பறைவைய வளர்த்தார். ஒரு நாள் அந்தப் பறவையை பறக்க விட்டார்.  ஏன் விட்டு விட்டீர்கள் என்று ஒருவர் கேட்டார்.  அது எனக்கு ஒரு உபதேசம் செய்வதாக கூறியது அதனால் விட்டு விட்டேன் என்றார்.  என்ன உபதேசம் செய்த்து என்று நண்பர் கேட்டார். பறவை கூறியது. நான் அல்லாஹ்வை தஸ்பீஸ் செய்து கொண்டிருப்பேன். அதிலிருந்து கொஞ்சம் விலகி இருந்த போது பிடிபட்டு விட்டேன் என்று கூறியதாம்.

 

ஆன்மீக அறிஞர்கள் இதை அடிக்கடி உபதேசித்துக் கொள்வார்கள் .  அல்லாஹ்வின் நினைவிலிருந்து கொஞ்சமும் விலகி இருக்க கூடாது.

 

மிகப் பேணுதலாக நடப்பார்கள்.

 

இமாம் அஹ்மது பின் ஹன்பல் ரஹ் அவர்களிடம் ஒரு பெண்மனி கேள்வி கேட்டார் . நான் நூல் நூற்றுக் கொண்டிருந்தேன், அப்போது அரசர் பவனி வந்தார். அவருடன் வந்த விளக்குகளின் வெளிச்சத்தில் நான் சிறிது நேரம் நூல் நூற்று விட்டேன். இது எனக்கு ஆகுமானதா ?

 

அஹ்மது ரஹ் ; இது உனக்கு ஜாயிஸ் அல்ல என்று கூறினார்கள் .

அவர் விடை பெற்றுச் சென்ற போது அருகிலிருந்த மாணவர் : இதென்ன இப்படி தீர்ப்பு கூறிவிட்டீர்கள் என்றார். அஹ்மது ரஹ் கூறினார்கள். இந்த தீர்ப்பு ஆளை பொருத்த்து. இந்தப் பெண்மணி யார் என்று பார்த்து வா என்றார்கள். அவர் பின்னே சென்று பார்த்தா. அந்த பெண்மணி பிஷருல் ஹாபி என்ற மாபெரும் இறைநேசரின் வீட்டிற்குள் நுழைந்தார். அவரது சகோதரி  அது என்று தெரிந்த்து.

 

பல்க் நாட்டின் தலைவன் ஒரு முறை அந்த ஊர் மக்களுக்கு அதிக வரி விதிதான், மக்கள் விழி பிதுங்கி நின்றனர். தாவூத் பல்கியின் மனைவி தனது நகைகள் அனைத்தையும்  அரசனிடம் கொடுத்தனுப்பி இதை எடுத்துக் கொள்ள வும் மக்களை துன்புறுத்த வேண்டாம் என்றார். அரசன் அவற்றை பார்த்த்து , ஒரு பெண்மணி மக்களின் துயரை நீக்க துணியும் போது தான் எப்படி அவ்வாறு துன்பம் இழைக்கலாம் என்று யோசித்து வரியை இரத்து செய்து நகையை திருப்பி அனுப்பினார் / தாவூத் பல்கியின் மனைவி திரும்பி வந்த நகைகளை அரசர் பார்த்தாரா என்று கேட்டார். ஆம் என்று பதில் கிடைத்த்து. ஒரு தீய மன்னன் பார்வை பட்ட நகை இனி எனக்கு வேண்டாம் என்று கூறி நகைகளை தர்மம் செய்தார்/

 

இத்தகையோர் மக்கள் மீது பெரும் கருணையோடு வாழ்வார்கள். தமது இபாத்த்துக்களை விட

 

மஃரூப் கர்கீயை ஒருவர் கனவில் கண்டு நீங்கள் சொர்க்கம் செல்ல காரணம் என்ன என்று கேட்டார்.

 

ஒரு நாள் நான் நபில் நோன்பு வைத்திருந்தேன்.  ஒரு ஏழை தண்ணிர் விற்பவனுக்கு அன்று விறபனை ஆகவில்லை. அவன் ஒரு கிளாஸ் தம்பளர் தண்ணீர் வாங்கி குடியுங்கள் உங்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்று கூறினார், அவருடைய துஆ வைப் பெறுவதற்காக இன்னொரு நாள் நோன்பை கழா செய்து கொள்ளலாம் என்று கருதி நோன்பை விட்டு விட்டு காசு கொடுத்து ஒரு தம்பளர் தண்ணீர் வாங்கிக் குடித்தேன் என்றார்.

 

இத்தகைய ஆன்மாக்கள் தான் அல்லாஹ்விடம் அச்சமற்ற ஆன்மாக்கள்

 

இத்தக்கய ஆன்மீகப் பெருந்தகைகளில் மிக உன்னதமானவர் தான் முஹ்யீத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்

 

நாளை அவருடைய நினைவு தினமாகும்.

 

அல்லாஹ் இத்தகைய பெருமக்களின் அடிச்சுவட்டில் நம் அனைவரையும் வாழச் செய்வானாக!

 

 

 

 

 

 

 

 

                                                                        

No comments:

Post a Comment