மனித ஆசைகளில் முக்கியமான ஒன்று, உணவின் மீதான ஆசை.
நவீன வாழ்க்கை
போங்கில் கணக்கற்ற உணவுகளை கட்டுப்பாடில்லாமல் சாப்பிடுவது உல்லாசத்தின் ஒரு அம்சமாகிவிட்டது.
தேவையே இல்லாமல் கிடைப்பதை எல்லாம் சாப்பிடுகிறோம். நியாயமே இல்லாமல் வீண்டிக்கவும்
செய்கிறோம். பார்ட்டி ஃலைப் என்பது பார்ட்
ஆப் லைஃபாகி விட்டது.
இதில் வீண் விரயம்
என்ற ஒரு பெரும் பாவம் பரவலாகி வருகிறது என்பதைப் போலவே உடல்நலக் குறைவு என்பதும் அதன்
தொடர்ச்சியால வருகிறது.
நம்முடையவும் நமது
சிறுவர்களுடையவும் இன்றைய உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டியது
இன்றைய தேவையாக உருவெடுத்துள்ளது.
சாப்பாட்டின் மீதான
ஆசைய கட்டுப்பாடாக வைத்திருக்க இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
وكُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ إِنَّهُ
لاَ يُحِبُّ الْمُسْرِفِينَ)[ سورة الأعراف]
தேவைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என்பதும்
வீண்விரயம் செய்யாதே என்பதன் பொருளாகும்.
வயிறு புடைக்க உண்பதை வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.
فقال " سيدنا عمر بن الخطاب رضي الله عنه إياكم والبطنة في الطعام والشراب فإنها مفسدة للجسم مورثة للسقم
،مكسلة عن الصلاة وعليكم بالقصد فيهما فإنه أصلح للجسد وأبعد عن السرف وإن الله
تعالى ليبغض الحبر السمين وإن الرجل لن يهلك حتى يؤثر شهوته على دينه " ورد في الدرر المنثورة للسيوطي .
கெட்ட பை
இளைஞர்கள் உணவு பழக்கத்தில் சாப்பாட்டின் விருப்பத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு காலம் வரை கணக்கின்றி நாம் சாப்பிடும் உணவு ஒரு காலத்தில் நம்மை சாப்பிட்டு விடுகிறது.
இன்றைய மருத்துவ உலகம் பசியால் இறப்பவர்களை விட அதிகம் சாப்பிடுவதால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது.
கொலஸ்ட்ரால் – பி பி – சுகர் – ஹார் அட்டாக் போன்ற பல பிரச்சனைகளும் இன்று மக்களை பெருமளவில் பாதிக்கின்றன. அவை பெருமளவில் அதிகப்படியான உணவினாலேயே ஏற்படுகின்றன.
அதிகமாக
சாப்பிடுவது அறிவை மழுங்கடிக்கிறது.
அதிகம் சாப்பிடுகிறவர்கள்
அதிகம் உறங்குகிறார்கள். சிந்திக்கிற வாய்ப்பை இழக்கிறார்கள்.
அதிகமாக சாப்பிட்டு
உடலை பெருக்க வைத்திருப்பவர்கள் அறிவாளிகளாக இருக்க மாட்டார்கள் என்பது பொதுவான அனுபவமாகும்.
மிகச் சிலர் தான்
இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள்.
இமாம் ஷாபி ரஹ்
கூறுகிறார்கள்
எனது ஆசிரியர்
இமாம் முஹம்மது ரஹ் அவர்களை தவிர வேறு யாரையும் உடல் பருத்து அறிவுடையவராக நான் கணடதில்லை.
அறிவியல் அறிஞர்
ஐன்ஸ்டீனின் உடலை பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய விஞ்ஞானி ஒரு
18 வயதுடைய இளையவரைப் போல உடல் வாகு கொண்டிருந்தார். யாரும் அவரை தூக்கி விட முடியும்.
இஸ்லாமிய அறிஞர்கள்
பலரும் குறைவாக சாப்பிடுகிறவர்களாக இருந்தார்கள்.
இமாம் புகாரி ரஹ்
அவர்கள் பெரும் பாலும் தனது தினசரி உணவாக 7 பாதம் பருப்புக்களை மட்டுமே சாப்பிடுவாகள்.
ஒருமுறை இமாம்
புகாரியை பரிசோதித்த மருத்துவர்ம் இந்த மனிதர் வாழ்நாளில் சால்னாவே சாப்பிட்டது இல்லை
போல தெரிகிறது என்றார். இமாம் புகாரி ரஹ் கூறினார். நான் கடந்த 15 ஆண்டுகளாக சால்னா
சாப்பிட்டது இல்லை.
வகை வகையான உணவே
வாழ்கை என்று நினைப்பவர்கள் சாப்பிட்ட்தை மட்டுமே சாதனையாக சொல்ல முடியும். சாதனையாளர்களோ
சாப்பாட்டை பெரிது பாடுத்தியதில்லை.
நபித்தோழர்கள்
ஒரே ஒரு பேரீத்தம் பழம் மட்டுமே சாப்பிட்டு ஒரு நாளை கழித்து விடுவார்கள்.
ஒரு பேரீத்தம்
பழம் மூன்று நாள் வரை ஒரு மனிதனுக்கு பசியினால் மரணம் ஏற்படாமல் பாதுகாக்கும் என்பது
அறிவியல் கண்டுபிடிப்பு.
தற்போதைக்கு நாம்
சாப்பிடுகிற உணவில் 25 சதவீதம் மட்டுமே நமக்கு போதுமானது என்றும் மீதி 75 சதவீதம் தேவையற்ற
சிரமத்தை உடலுக்கு தருகின்றன. அவை உடலுக்கு எந்த பயனையும் தராமல் வெளியேறிவிடுகின்றன.
சிங்கம் வளர்ப்பவர்கள்
7 நாட்களுக்கு ஒரு முறை அதற்கு தேவையான உனவை கொடுக்கிறார்கள். 7 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுகிற சிங்கம் மிகவும்
வலிமையாக இருக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகிற நாம் நோஞ்சான்களாக இருக்கிறோம்.
மன்னர் மகூகஸ்
பெருமானாருக்கு அனுப்பி வைத்த அன்பளிப்புளில் ஒரு மருத்துவரும் இருந்தார். அவர் மதீனாவில்
மருத்துவம் பார்க்கட்டுமா என்று அனுமதி கேட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் சம்மதித்தார்கள்.
ஒரு மாதமாகியும் அவரிடம் ஒரு நோயாளியும் வரவில்லை. பெருமானாரிடம் வந்து அவர் நான் திரும்பட்டுமா
என்றார். தாரளமாக திரும்பிச் செல்ல்லாம். இங்குள்ளவர்கள் பசித்தால் மட்டுமே சாப்பிடுகிறார்கள்.
பசி கொஞ்சம் மிச்சம் இருக்கிற போதே உணவை நிறுத்திக் கொள்வார்கள் என்றார்கள்.
மாபெரும் அறீஞர்களாவும்
சீர்திருத்த வாதிகளாகவும் போராளிகளாகவும் வாழ்ந்த நமது முன்னோர்கள் உணவு விசயத்தில்
மிகவும் கட்டுப்பாடனவர்களாக இருந்தார்கள்.
இப்னு உமர்
ரலியிடம் ஒருவர் ஜீரணத்திற்கு ஒரு பானத்தை தயார் செய்து தரட்டுமா என்று கேட்டார். இப்னு உமர் ரலி கூறினார்.
நான் நான்கு
மாதமாக வயிறு நிறைய சாப்பிடவில்லை. சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாமல் இல்லை. நான் பழகி
வந்த மனிதர்கள் சில நேரம் சாப்பிடுவார்கள்.
சில நேரம சாப்பிடாமலே இருந்து விடுவார்கள்
عن أبي حمزة السكري -رحمه الله- أنه قال: ما شبعت منذ ثلاثين سنة إلا أن يكون لضيف-- سير أعلام النبلاء
இபுறாஹீம் பின் அத்ஹம் ஒரு சாப்பிட உட்கார்தால் மற்ற உணவுகளை அடுத்தவர்களுக்கு கொடுத்து விட்டு ரொட்டியையும் ஜைதூனையும் மட்டும் எடுத்துக் கொள்வார்கள்
وعن إبراهيم بن أدهم كان إذا جلس على طعام طيب قَدّم إلى أصحابه وقنع
بالخبز والزيتون
يعني: يقدم الطعام لأصحابه وهو يأكل الخبز والزيتون. - سير أعلام
النبلاء
உலகப் புகழ் பெற்ற மாமேதை பெரு மதிப்பு மிக்க வாழ்ந்த பெருந்தகை அஹ்மது பின் ஹன்பல் ரஹி அவர்களின் உணவை மகன் விவரிக்கிறார்
காய்ந்து போய் சருகாய் விழும் ரொட்டித் துண்டை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மென்மைப் படுத்தி உப்போடு சேர்த்து உண்பார். மாதுளம் பழம் பேரிக்காய் காசு கொடுத்து வாங்கியதில்லை. தர்பூசனி. திராட்சை பேரீத்தம் பழம் மட்டுமே உண்டுள்ளார்.
அளவாக சாப்பிடும்
பழக்க உருவாகிற போது பலரை ஆதரிக்கிற மனமும் தானாக வரும்.
وعن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه
وسلم قال : " طعام الواحد يكفي الاثنين وطعام الاثنين يكفي الأربعة وطعام
الأربعة يكفي الثمانية "صحيح مسلم.
நிறையச் சாப்பிட்டால் தான் திருப்தியாகும் என்று நினைப்பவர்கள் வீண் விரயமும் செய்வார்கள். பிறருக்கு கிடைப்பதை தடுக்கவும் செய்வார்கள்
அதிகம் சாப்பிட்டு
தனது முன்னிலையில் ஏப்பம் விட்ட தோழரைப் பார்த்து இந்தப் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள்
என்று பெருமானார் அறிவுறுத்தினார்கள்
وعن عبد الله بن عمر رضي الله عنه قال : تجشأ أبو
جحيفة عند رسول الله صلى الله عليه وسلم فقال له : " أقصر عنا من
جشائك، إن أطول الناس جوعاً يوم القيامة أكثرهم شبعاً في الدنيا
"مجمع الزوائد للهيثمي .
அதிகமாக
சாப்பிடுகிறவர்களுக்கு மறதி அதிகமாக ஏற்படும்.
அதே
போல அதிகமாக சாப்பிடுகிறவர்களின் சொற்கள் பயனளிக்காது.
இஸ்லாமிய மார்க்க
அறிஞர்கள் தங்களது அனுபவத்தின் வாயிலாக அதிகமா சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர்களால் சமூக
மாற்றத்தை ஏற்படுத்தும் சொற்பொழிவுக்ளை நிகழ்த்த முடிந்த்தில்லை என்று கூறுகீறார்கள்.
அதிகம
சாப்பிடுகிறவர்கள் கோழைகளாகி விடுறார்கள். காமம் அதிகரிக்கவும் அது காரணமாகிறது.
அதிகப்படியான உணவு
இந்த சமூகத்தை வீர உணர்வையும் ஒழுக்கத்தையும் சிதைத்த்து என்கிறார்கள் ஆயிஷா அம்மையார்
وعن عائشة رضي الله عنها قالت :" أول بلاء حدث في هذه الأمة بعد
نبيها الشبع فإن القوم لما شبعت بطونهم سمنت أبدانهم فضعفت قلوبهم وجمحت شهواتهم" .
முந்தைய சமூகத்தின் வீரத்திற்கும் துணிச்சலுக்கும். இன்றைய மக்களின் கோழைத்தனத்திற்கும் சுயநலப் போக்கிற்கும் இதுவே பிரதானகாரணம் என்பதை சிந்தித்தால் உணரலாம்.
எப்போதும் வயிறு புடைக்க சாப்பிடுவதன் தீமைகள்
உலகமே பிரதானமாகி விடும்.
ويقول أبو سليمان الداراني: أصل كل خير الخوف من الدنيا، مفتاح الدنيا
الشبع ومفتاح الآخرة الجوع
இன்று ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் வயிறு புடைக்க சாப்பிடுகிற காரணத்தால் தான் இதயம் இருகியவர்களாக இருக்கிறார்கள்.
தில்லியில் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக உலகின் பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் . நமது பிரதமர் வரணாசியில் இசையை , அலங்கார விளக்குகளை , படகுப் பயணத்தை இரசித்துக் கொண்டிருக்கிறார். தாய்லாந்திலிருந்து வரவழைக்க பட்ட காளானை சாப்பிடுகிறார்.
يوسف عليه السلام பஞ்ச காலத்தில் உணவு கேட்டு வந்த மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கினார். ஆனால் அவர் நோன்பு வைதிருந்தார் என்கிறது வரலாறு
No comments:
Post a Comment