வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 10, 2020

உரிமைகளைக் காப்பது கடமை

 இஸ்லாமின் அடிப்படையான ஐந்து கோட்பாடுகள்

إن من مقاصد الشريعة التي جاء الإسلام بها حفظ الضروريات الخمس، وهي حفظ الدين، وحفظ النفس، وحفظ العقل، وحفظ العرض، وحفظ المال، فحف

கடவுளுக்கான கடமைகளையும் தனக்கான கடமைகளையும் சம் தட்டில் வைத்துப் பேசிய சமயம் இஸ்லாம் ஒன்று மட்டுமே

சல்மானுல் பாஸியின் அறிவுரை. பெருமானார் அங்கீகரித்தால்  அது ஹதீஸான அதிசயம்,

قال أبو جحيفة: آخى النبي ﷺ بين سلمان وأبي الدرداء،  فزار سلمان أبا الدرداء فرأى أم الدرداء متبذلة، فقال: ما شأنك؟ قالت: أخوك أبو الدرداء ليس له حاجة في الدنيا، فجاء أبو الدرداء فصنع له طعاما، فقال له: كل فإني صائم، قال: ما أنا بآكل حتى تأكل فأكل، فلما كان الليل ذهب أبو الدرداء يقوم فقال له: نم، فنام، ثم ذهب يقوم فقال له: نم. فلما كان من آخر الليل قال سلمان: قم الآن، فصليا جميعا فقال له سلمان: إن لربك عليك حقا، وإن لنفسك عليك حقا، ولأهلك عليك حقا، فأعط كل ذي حق حقه، فأتى النبي ﷺ فذكر ذلك له فقال النبي ﷺصدق سلمان - رواه البخاري

நம்மில் ஒவ்வொருவரும் அவரவரவரவரது நலன்கள் விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் தற்கொலை செய்து கொள்வதை சிறப்பாக கருதுகிற வழக்கம் சிலரிடம் இருக்கிறது.

அதனால் ஜப்பானில் வருடத்திற்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இஸ்லாம் மிக வன்மையாக அதை தடுத்துள்ளது.

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا * وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا {النساء: 29-30 }.

 وفي الصحيحين عن ثابت بن الضحاك رضي الله عنه قالقال رسول الله صلى الله من قتل نفسه بحديدة عذب عليه في نار جهنم.

அதனால் உலகளாவிய அளவில் இன்றளவும் முஸ்லிம்களிடம் தற்கொலை செய்து கொள்வோர் குறைவு.

பிறர் உரிமையை காப்பதற்கு முன் உன் உரிமைகளில் கவனம் செலுத்து என்பதே இஸ்லாமின் வழிகாட்டுதலாகும்.

தொழுகைக்குப் போவதற்கு முன் நன்றாக உடுத்திக் கொள் உண்டு கொள் என்பது இவ்வசனத்தின் கருத்தாகும்.

يا بنى آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين، قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق}(الأعراف:32).

 

جاء في الحديث: [حق على كل مسلم في كل سبعة أيام يوم يغسل فيه رأسه وجسده](متفق عليه).


அழுக்கடைந்து சடைபிடித்து வாழும் வாழ்க்கையை துறவு என்றோ பக்தி என்றோ இஸ்லாம் ஏற்கவில்லை.

கடவுளை கவனிப்பதற்கு முன் நீ உன்னை கவனித்துக் கொள்!

உடலையும் அறிவையும் வளர்த்துக் கொள்வதை சிறப்பம்சம் என்கிறது குர் ஆன்.

إِنَّ اللّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ}[البقرة: 247]

உடலுக்கு வலுவேற்றும் கலைகளை கற்றுக் கொள்ளுங்கள்

وروي عن عمر: (علموا أولادكم السباحة والرماية، ومروهم فليثبوا على ظهور الخيل وثباً

 

நமது உடமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

 

وعنْ أَبي الأعْوَر سعيدِ بنِ زَيْدِ بنِ عَمْرو بنِ نُفَيْلٍ، أَحدِ العشَرةِ المشْهُودِ لَهمْ بالجنَّةِ، y، قَالَ: سمِعت رسُول اللَّهِ ﷺ يقولُمنْ قُتِل دُونَ مالِهِ فهُو شَهيدٌ، ومنْ قُتلَ دُونَ دمِهِ فهُو شهيدٌ، وَمَنْ قُتِل دُونَ دِينِهِ فَهو شهيدٌ، ومنْ قُتِل دُونَ أهْلِهِ فهُو شهيدٌ.
رواه أَبو داود، والترمذي وَقالَ: حديثٌ حسنٌ صحيحٌ.


5/1357- وعنْ أَبي هُريرة، 
t، قالَ: جاء رجُلٌ إِلَى رَسُول اللَّه ﷺ فَقَال: يَا رسولَ اللَّه أَرأَيت إنْ جاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَفَلا تُعْطِهِ مالكَ قَالَ: أَرأَيْتَ إنْ قَاتلني؟ قَالَقَاتِلْهُ. قَالَ: أَرأَيت إنْ قَتلَني؟ قَالَفَأنْت شَهيدٌ قَالَ: أَرأَيْتَ إنْ قَتَلْتُهُ؟ قَالَهُوَ فِي النَّارِ رواهُ مسلمٌ.

 

நமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும் கவனம் அவசியம். அதுவும் இஸ்லாமின் நோக்கங்களில் ஒன்று.

 

عرض  என்ற வார்த்தை உரிமைகளையும் சேர்த்தே குறிக்கிறது.

இப்போது நமது நாட்டில் முஸ்லிம்களின் அடையாளத்தை சிதைப்பதற்கும் இல்லாமல் செய்வதற்கும் மிக தீவிரமாக முயற்சி செய்யப் படுகிறது.

ஹஜ்ரத் நிஜாமுத்தீன் என்பது தில்லியின் மறுபெயராக இருந்தது. ஒரு இரயிலுக்கு அந்தப் பெயரை மாற்ற முயற்சிக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு வித்த்திலும்.

எதிரிகளின் முக்கியத்திட்டம் நமது ஓட்டுரிமையை பறித்து இந்த நாட்டில் நம்மை ஜடங்களாக்கிவிடுவது.

நாம் அலட்சியத்தால் அதை அனுமதித்து விடக்கூடாது .

தமிழ்நாட்டில் வாக்காளர் சீர்திருத்தம் வருகிற 12 13 தேதிதிகளில் நடக்க இருக்கிறது.

முஸ்லிம்கல் ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா ? சரியாக உள்ளதா ? குடும்பத்தில் யாரேனும் விடுபட்டு உள்ளனரா என்பதை சரி பார்த்து குறைகள் இருப்பின் அதை சரி செய்வதில் மிகவும் கவனம் செலுத்த் வேண்டும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

 

 

 

 

No comments:

Post a Comment