வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 17, 2020

கடவுள் கண்டெடுத்த தொழிலாளி விவசாயீ!

 திருக்குர்ஆன் விவசாய உற்பத்தி குறித்து பேசுகிறது. அது கடவுளின் கைங்கரியம் என்கிறது.  

أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ (63) أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ } [الواقعة: 63، 64

இன்றைய சூழலில் மக்கள் மிக ஆழமாக யோசிக்க வேண்டிய செய்தி இது.

விவசாயி நிலத்தை பண்படுத்துகிறான். உழுகிறான் விதைக்கிறான், அவ்வளவே ?

விதையை வெடித்து முளைக்கச் செய்கிறவன் அல்லாஹ்வே ? அதன் கதிர்களையும் தானியங்களையும் அவனே தீர்மாணிக்கிறான்.

எந்த விவசாயியிம் தனது மகசூல் எவ்வளவு என்பதை முன் கூட்டியே தீர்மாணமாக சொல்ல முடியாது.

பல நேரங்களில் மனித முயற்சிகளை விட பேரதிகமாக இறைவன் வாரிவழங்குகிறான். சில நேரங்களில் சுருக்கி விடுகிறான்.

எனவே விவசாயின் உழைப்பிற்கு அரசுகள் உத்தரவாதமளிக்க வெண்டியது கடமை.

காரணம் விவசாயி இல்லை என்றால் நாட்டு மக்களுக்கு உணவு கிடைக்காது.

நாங்கள்

சேற்றில் கால் வைக்காவிட்டால்

நீங்கள்

சோற்றில் கை வைக்க முடியாது, 

என்றார் மு. மேத்தா

அதனால் தான் இஸ்லாம் விவசாயத்தை தொழிலாக மட்டுமல்லாது நன்மைகளை சமபாதித்து தருகிற இபாதத்தாக போற்றியது. முஸ்லிம் அறிஞர்களில் பெரும்பான்மையினர் சம்பாதிக்கும் வழி முறைகளில் வியாபாரத்தை விட விவசாயத்தை போற்ற இதுவே காரணமாகும்.

فعن أنس بن مالك[1] رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ، إِلاَّ كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ  .  البخاري

 

وقال السَّرَخْسِيُّ: "وفيه (أي الحديث) دليل أنَّ المسلم مندوبٌ إلى الاكتساب بطريق الزراعة والغراسة... فإنه يتوصَّل بهذا الاكتساب إلى الثواب في الآخرة"

 

விவசாயப் பொருட்களில் திருடப்படுபவையும் உதிர்க்கப் படுபவையும் கூட தர்மம். அதுவும் கூலியின் கணக்கில் வரும்.

 

وزاد في رواية مسلم: "وَمَا سُرِقَ لَهُ مِنْهُ صَدَقَةٌ... وَلاَ يَرْزَؤُهُ[3] أَحَدٌ إِلاَّ كَانَ لَهُ صَدَقَةٌ".

 

என்ன ஆச்சரியமான நபி மொழி இது.

 

பொதுவாக தோட்டங்களில் காய்கள் கணிகள் திருடப்படுவது வாடிக்கை. அது போல பல பெருட்கள் உதிர்க்கப் படுவதும் வாடிக்கை.

 

நெல் விவசாயி தனக்கு தானிய மணிகளை மட்டுமே பலன் என்று நினைக்கிறான். இஸ்லாமோ அதன் உமிகளால் கூட உனக்கு நன்மை உண்டு என்கிறது.

தோட்ட முதலாளி தேங்காயை மட்டும் பலனாக நினைக்கிறான். நபி மொழியோ உறித்துக் கொட்டப்படும் தென்னை நாரிலும் கூட அவருக்கு நன்மை உண்டு என்கிறது.

இஸ்லாம் கூறும் இந்த நன்மை மறுமையில் மட்டும் அல்ல இந்த உலகிலும் கிடைக்கும் என்பதை இன்றைய   அறிவியலும் தொழில் நுட்பமும் உணர்த்தி வருகின்றன.

இன்று விவசாயிகள் அவர்களது பிரதான மகசூலை மட்டுமல்ல, இது வரை வீணடிக்கப் பட்டு வந்தகழிவுகள் என்று ஒதுக்கப் பட்டு வந்த பொருட்களால் கூட பயன்பெற்று வருகிறார்கள்.

சாம்பல் கூட மறு சுழற்சி முறையில் இப்போது பல வகையிலும் பயன்பாட்டிற்கு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

நிலங்களை தரிசாக விடுவதை விட பண்படுத்தி பயன்படுத்துவதை இஸ்லாம் பாராட்டுகிறது.

: "جاء رجلٌ إلى عَلِيٍّ رضي الله عنه، فقال: أتيتُ أرضًا قد خربت، وعجز عنها أهلها، فكريت أنهارًا وزرعتها. قال: كُلْ هنيئًا، وأنت مصلحٌ غير مفسد، معمِّرٌ غير مخرِّب"- في الخراج ليحيى بن آدم

 பெருமானாரின் இப்பாராட்டுரைகள் காரணமாக நபித்தோழர்களில் பெரும்பான்மையோர்  விவசாயிகளாக இருந்தனர்.

 قال ابن حزم: "لم تزل الأنصار كلهم، وكلُّ من قسَّم له النبيُّ صلى الله عليه وسلم أرضًا من فتوح بني قريظة، ومن أقطعه أرضًا من المهاجرين يزرعون ويغرسون بحضرته صلى الله عليه وسلم، وكذلك كلُّ مَنْ أسلم من أهل البحرين، وعمان، واليمن، والطائف

 பெருமானாருக்குப் பிறகு தான் மதீனாவில் கோதுமை பயிரடப்பட்டது.

 இருபது ஒட்டகைகளை பயன்படுத்தி கோதுமை பயிட்டார் தல்ஹா (ரலி)

كان طلحة بن عبيد الله رضي الله عنه أوَّل من أدخل زراعة القمح للمدينة، وكان يزرع على عشرين ناضحًا، وينتج ما يكفي أهله بالمدينة سنتهم

 மக்கள் செய்யும் நன்மைகளுக்கான கூலியை விவசாயத்தை உவமையாக கூறி இறைவன் பேசுகிறான் என்கிறார் அபூ ஹய்யான் அல் அன்துலூஸீ

 يُعَلِّق أبو حيان الأندلسيُّ على قوله سبحانه وتعالى: {مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ} [البقرة: 261]. فيقول: "وفي هذه الآية دلالة على أنَّ اتخاذ الزرع من أعلى الحِرَفِ التي يتَّخذها الناس؛ ولذلك ضرب الله به المثل"[

 விவசாயத்தைப் பாராட்டியது போலவே விவசாயிகளின் நன்மைகளை பாதுகாக்கவும் இஸ்லாம் அக்கறை செலுத்தியது,

 இஸ்லாமிற்கு முந்தைய பாரசீக மற்றும் ரோமப் பேரரசுகளில் நிலம்  அனைத்தும் அரசனுக்கு உரிமையானதாகவும் அதில் வேலை செய்வோர் கொத்தடிமைகளாகவுமே இருந்தன. அவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டுமே அவர்களுக்குரிய பலனாக இருந்தது. ( ஜுர்ஜீ ஜைதான். இஸ்லாமின் நாகரீக வரலாறு)

 இஸ்லாமிய அரசுகள் விவசாயிகளை பாராட்டின. மக்களை தூண்டின.

 விவசாயிகளின் மகசூலில் பெரும்பான்மையானதை விவசாயிகளுக்கே வழங்கின.

 உமர் ரலி காலத்தில் முஸ்லிம்கள் வெற்றி கொண்ட நிலங்களில் விவசாய நிலங்கள் விவசாயிகளிடமே விடப்பட்ட அவற்றை எடுத்துக் கொள்ள முஸ்லிம் வீர்ர்கள் அனுமதிக்கப் படவில்லை.

 விவசாயம் எந்த அளவு பெருமைக்குரியதோ அதே அளவு சிரமத்திற்குரியதும் கூட

 மகசூலுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

அதிக நாள்கள் காத்திருக்க வேண்டும்.

வெள்ளம் பூச்சிகள் போன்ற ஆபத்துக்கள் அதிகம்.

 அதனால் விவசாயிகளை ஆதரிக்க வேண்டியது நல்ல அரசுகளின் கடமை 

 விவசாயத்தையும் விவசாயிகளையும் காத்த உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் . அரசாங்கத்தின் நிதியிலிருந்து விவசாயிகளுக்கு கடன் வழங்க கூறினார். அவர் மாற்றுமத்த்தை சார்ந்தவராக இருந்தாலும்.

 الخليفة العادل الراشد عمر بن عبد العزيز يقوم بتقديم القروض الحسنة للعاملين في الارض ولو كانوا من أهل الذمة لما في ذلك من مصلحة للمسلمين وذلك عندما كتب الى واليه عبد الحميد بن عبد الرحمن الذي بعث اليه يستشيره بشأن التصرف في فضول بيت المال - قال: (أنظر من كانت عليه جزية فضعف عن أرضه فأسلفه ما يقوى به على عمل أرضه فإنا لانحتاجهم لعام ولا لعامين).

 உலகின் உன்னதமான மனிதர்கள் அனைவருமே விவசாயத்தை போற்றியும் விவசாயிகளை மதித்துமே வந்துள்ளனர்.

 ஆனால் தற்போதுள்ள நமது நாட்டின் மத்திய பாஜக அரசு தொடர்ந்து மக்கள் நலனுக்கு எதிரான காரியங்களில் கவனம் செலுத்துவது போல இப்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

 கொரோனோ தொற்றிலிருந்து மக்கள் முற்றிலுமாக மீண்டு வராத நிலையில். கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிற நிலையில். கடந்த செப்டம்பர் 29 ம் தேதி எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி  மூன்று வேளாண் மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது. அதற்கு மிக அவசரமாக ஜனாதிபதியும் ஒப்புதல் தந்து விட்டார். அவை இப்போது சட்டமாகி விட்டன்.

இந்தச் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் கடந்த 20 நாட்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். கடுமையான குளீர்காலம் இது,

ஆண்களும் பெண்களும் வயோதிகர்கள் முதியவர்களுமாக கூடி நடத்துகிற போராட்டத்தை மத்திய பாஜக அரசு கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது.

தொடர்ந்து அகமபாவமாக பேசி வருகிறது. 

சாதாரண பொதுமக்களுக்கு புரியாத கேள்வி

விவசாயிகள் எதிர்க்கிற ஒரு விவசாய சட்டத்தை வேறு யாருக்காக எதற்காக மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது ?

நம்மை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேயர்களே போராடுகிறவர்களை இவ்வளவு தூரம் துன்புறுத்தியதில்லை. இப்போதுள்ள பாஜக அரச் துன்பூறுத்துகிறது. கேவலப்படுத்துகிறது.

அவர்களை தீவிரவாதிகள் புரோக்கர்கள் என்கிறது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சட்டங்கள் என்ன ? அவை என்ன சொல்கின்றன ?

`விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020'

(The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020).  

 இந்தச் சட்டம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழலைக் கருத்தில்கொண்டு, விலையை உறுதிப்படுத்தி, விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது, தங்கள் விளைநிலத்தில் விளைவிக்கப்போகும் உற்பத்திப்பொருள் குறித்து பெரு நிறுவனங்களுடன் விவசாயிகள் முதலிலேயே ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், விளைவித்த பொருளை ஏற்கெனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் விலைக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமே விற்றுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் சாராம்சம்.

 இதன் தீமைகள்

 பெரு நிறுவனங்கள் விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, கான்ட்ராக்ட் முறையில் விளைபொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை வசதிகளை அதிகாரபூர்வமாக இந்தச் சட்டம் செய்துதருகிறது. இதன் மூலம் சொந்த நிலத்திலேயே விவசாயிகள் கூலிகளாக்கப்படுவார்கள். ஏற்கெனவே கரும்பு விவசாயிகள் இது போன்று சர்க்கரை ஆலைகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டுதான் கரும்பு விவசாயம் செய்துவருகின்றனர். ஆனால், கரும்பைக் கொள்முதல் செய்த ஆலைகள், விவசாயிகளுக்கு உரிய தொகையை செலுத்தாததால், பல்வேறு சிக்கல்களும் வழக்குகளும் உருவாகியிருக்கின்றன.

 மேலும், நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவி உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்க வேண்டியது ஓர் அரசின் கடமை. இப்படியான ஆக்கபூர்வமான விஷயங்களை ஓர் அரசு செய்து தரும்போதுதான், விவசாயி தன் விளைபொருளுக்கான விலையை லாபகரமானதாக மாற்றுவதற்கான வழியும் உருவாகும். ஆனால், விவசாய உற்பத்திக்கான உதவிகளை அரசு நிர்வாகம் செய்யாமல் விலகிக்கொள்ளும்போது, அந்த வேலைகளைச் செய்துவரும் தனியார் பெரு நிறுவனங்கள், விவசாயிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்க்க இயலாது. இதன் தொடர்ச்சியாக விவசாயி தன் விளைபொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயிப்பதும் கேள்விக்குறியாகிவிடும் சூழலே தொடரும். 

 வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020

(Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)

இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மாநிலம் தாண்டி இந்தியா முழுக்க எந்த வியாபாரியிடமும் விற்றுக்கொள்ளலாம். இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை, கூடுதல் லாபம் கொடுக்கும் வியாபாரியிடம் விற்று, லாபம் பார்க்க வழிவகை ஏற்படும்என்கிறது அரசுத் தரப்பு.

வியாபாரிகளும் இடைத்தரகர்களும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கொடுக்காமல், மிகக்குறைந்த விலையில் வாங்கி வருவதைத் தடுப்பதற்காகவே மாநில அரசால், `ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்' கொண்டுவரப்பட்டது.

இந்த .வி.கூடத்துக்கு விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை அரசே நிர்ணயிக்கும். அதன் பிறகு மறைமுக ஏல முறையில் வியாபாரிகள் விளைபொருள்களை ஏலம் எடுத்துச் செல்வார்கள். இதன் மூலம் விளைபொருளுக்கு நட்டம் ஏற்படாது என்ற உறுதிநிலை விவசாயிகளுக்கு இருந்துவந்தது. `விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை' என்று விவசாயிகள் தொடர்ந்து குறைபட்டு வருவதையறிந்துதான், மாநில அரசே `குறைந்தபட்ச ஆதார விலை' ஒன்றை நிர்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்துவந்தது. `இந்தக் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தித்தாருங்கள்' என்றுதான் இதுநாள்வரையிலும் விவசாய சங்கங்கள் போராடிவருகின்றன. ஏனெனில், அரசு சாராத தனியார்கள் விவசாயிகளின் விளைபொருளுக்கு அரசின் ஆதாரவிலையைவிடக் கூடுதல் விலை கொடுக்கத் தயங்கியதே இதற்குக் காரணம். இந்தநிலையில், `நேரடியாக தனியார்களிடமே கூடுதல் விலைக்கு விற்றுக்கொள்ளலாம்என்று இந்தப் புதிய சட்டம் சொல்வது சாத்தியமற்றது

 

அது விவசாயிகளுக்கு கிடைத்து வந்த ஆதார விலையை அழித்து விவசாயிகளை பெரும் நெருக்கடிகளுக்குள் தள்ளிவிடும்.

 

மாநில அரசிடமிருந்த விவசாய விலை பெருள் நிர்ணய அதிகாரம் பறிபோய்விடும்.

'அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020' (Essential Commodities (Amendment) Act 2020).

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் என்றால் என்னவென்று அறிவதற்கு முன்னர், `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்' என்றால் என்னவென்று அறிந்துகொள்ள வேண்டியிக்கிறது. அதாவது, பொதுமக்களின் உணவுத் தேவைக்கு அத்தியாவசியமான பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, அவற்றைப் பதுக்கிவைப்பதற்கோ அல்லது ஏற்றுமதி செய்யவோ 'அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்' தடைவிதிக்கிறது.

ஏனெனில், குறிப்பிட்ட உணவுப் பொருள்களைப் பதுக்கிவைத்து, சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, பின்னர் அதிக விலைக்குப் பொருள்களை விற்பதால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதேபோல், உள்நாட்டிலேயே குறிப்பிட்ட பொருளுக்கு தட்டுப்பாடு நிலவிவரும்போது, அதே பொருளை ஏற்றுமதி செய்ய நேர்ந்தால், உள்நாட்டின் தேவை மிகவும் அதிகரித்து, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகவும் நேரிடும். எனவே, கொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்டு வியாபாரிகளில் சிலர் செய்துவரும் பதுக்கல் மற்றும் ஏற்றுமதியைக் கட்டுப்பட்டுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதே `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்.

ஆனால், தற்போது மத்திய பா.. அரசு கொண்டுவந்திருக்கும் புதிய `அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020', வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்தே நீக்கியிருக்கிறது. எனவே, `மேற்கண்ட பொருள்களை இருப்பு வைத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லைஎன்கிறது புதிய சட்டம்.


தோட்டப் பயிர்களின் விலை கடந்த ஒரு வருடத்தில் விற்கப்பட்ட சராசரி விலையைவிடவும் 100 சதவிகிதம் அதிகமாக விற்கப்பட்டாலோ அல்லது தானியங்களின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்கப்பட்ட சராசரி விலையிலிருந்து 50 சதவிகிதம் அதிகமாக விற்கப்பட்டாலோ அரசு கட்டுப்பாடு விதிக்கும் சூழல் ஏற்படும் என்கிறது. ஆனாலும், `உணவுப் பொருள்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாதுஎன்ற கூடுதல் தகவலையும் இந்தப் புதிய சட்டத் திருத்தம் சொல்கிறது.

 இனி பெரு நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்களை அளவுக்கதிகமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளும். இதன் தொடர்ச்சியாக சந்தையில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். பின்னர், தங்களிடமுள்ள பதுக்கல் பொருளை அதிக விலைக்கு சந்தையில் விற்று, கொள்ளை லாபம் சம்பாதிக்கும். ஆக, பெரு நிறுவனங்கள் இதுவரை பயந்து பயந்து செய்துவந்த பதுக்கல் மற்றும் மறைமுக ஏற்றுமதி மோசடிகளை, வெளிப்படையாகச் செய்வதற்கு இந்தப் புதிய சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது

 மிக எளிமையாக கூறினால் இந்தச் சட்டம் நமது நாட்டின் விவசாயிகளை காப்பாற்றுவதை விட  விவசாயப் பொருட்களை சந்தைப் படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்மைக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்பது அப்பட்ட மான் உண்மையாகும்.

 நாட்டில் கொரோனோ நெருக்கடிகள் இன்னும் அகலாத நிலையில் – அரசு அவசர அவசரமாக விவசாயிகளிடம் கருத்துக் கூட கேட்காமல் பாரம்பரியம் மிக்க விவசாய நாட்டில் வியாபாரிகளுக்கான சட்டத்தை கொண்டுவந்து விவசாயிகளின் மீது திணிக்க முயற்சிக்கிறது.

விவசாயிகள் மிக எதார்த்தமாக கேட்கிறார்கள் . இதுவரை எங்களது நெல்லுக்கு அரசின் ஆதார விலையாக கிலோவிற்கு 18.ரூபாய் தந்து வந்தது. இதற்குகாக 1 சதவீத கட்டணத்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பெற்று வந்தன.

இந்த ஆதார விலையை இச்சட்டம் தகர்க்கிறது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை சிதைக்கிறது.

இதனால் விவாசாயிகளோடு வியாபாரிகள் நேரடியாக தொடர்பு கொள்வார்கள் என்கிறது. அதனால் விவசாயிகள் இலாபமடைவார்கள் என்கிறது அரசு.

உண்மையில் இது எமாற்றுவாதமாகும்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இல்லாத இடங்களில் 12 ரூபாயுக்கு ஒரு கிலோ நெல்லை  விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு கிலோவிற்கு 6 ரூபாய் நட்டம் என்றால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய நஷ்டம் எவ்வளவு கடுமையானது.

மத்திய அரசு வேணுமென்றே இதை உணர மறுக்கிறது.

விவசாயிகளின் போராட்ட்த்தினால் இந்த ஆதார விலையை அமைப்பை மாற்ற மாட்டோம் என்று தற்போது அரசு கூறினாலும் அரசின் மற்ற சட்டங்களில் மறைந்துள்ள கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அம்சங்கள் தங்களை மேலும் அழித்து விடும் என்று விவசாயிகள் அச்சப்படுகின்றன.

எனவே அரசு விவசாயிகள் ஏற்றுக் கொள்ளாத – ஒரு சட்டத்தை

அரசில் பங்குவகித்த அகாளி தளம் ஆட்சியிலிருந்து விலகி எதிர்க்கிற இந்த கடுமையான சட்டத்தை  மக்கள் நலன் கருதி மத்திய அரசு கை விட வேண்டும். தொடர்ந்து மக்கள் நலனுக்கு எதிராக வே சிந்திப்பதை கை விட்டு நாட்டுமக்களுக்கு நல்லதாக எதையாவது செய்ய மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்

அல்லாஹ் நமது ஆட்சியாளர்களை நம்மீது கருணை கொள்ளச் செய்வானாக!

No comments:

Post a Comment