வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 01, 2021

குற்றவாளிகள் தண்டிக்கப்பட சரியாக சாட்சி சொல்லுங்கள்

 இஸ்லாம் மக்களுக்கு ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து வாழும் வழிமுறையை எல்லா நிலையிலும் வலியுறுத்தி உள்ளது.

قل النبى صلى الله عليه وسلم ( إذا كنتم ثلاثة فأمروا أحدكم

இது பயணத்த்திற்கு சொல்லப் பட்ட்து என்றாலும் எல்லா நிலைக்கும் இது பொருந்தும்.

அல்லாஹ் ரஸூலுக்கு அடுத்து தலைமைக்கு கட்டுப்பட குர் ஆன் கூறுகிறது.

أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم

ஒரு தலைமை சார்ந்தே வாழவேண்டும் என்ற வலியுறுத்தல் இதில் உண்டு.

ஜமாத் தொழுகை என்பது ஒரு தலைமையை சார்ந்து வாழ்வதற்கான உன்னதமான பயிற்சியாகும்.

தலைவரை தேர்ந்தெடுக்கும் எளிய வழிமுறையை பெருமானார் கற்றுத்தருகிறார்கள்.

وقال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ وَأَقْدَمُهُمْ قِرَاءةً فَإِنْ كَانَتْ قِرَاءَتُهُمْ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَكْبَرُهُمْ سِنًّا .." . رواه مسلم 1079

فَإِذَا حَضَرَتْ الصَّلاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ رواه البخاري 

பாங்கு யார் வேண்டுமானாலும் சொல்லட்டும் என்ற பெருமானார் தலைமைக்கு தகுதியை நிர்ணயிக்கிறார்கள். அதில் தடுமாற்றம் ஏற்படும் எனில் அதிலும் சிறப்பானவரை தேர்ந்தெடுக்க அறிவுறுத்துகிறார்கள். அதற்கான வழிகளையும் கற்பிக்கிறார்கள்.

 அதே போல தேர்ந்தெடுத்த இமாமைப் பின்பற்றுவதற்கும் அதிக முக்கியத்துவம் அளித்தார்கள்.

 وْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ { : لَا تَسْبِقُونِي بِالرُّكُوعِ وَلَا بِالسُّجُودِ ؛ وَلَا بِالْقِيَامِ ، وَلَا بِالِانْصِرَافِ } رَوَاهُ مُسْلِمٌ.

  وَعَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ { : أَمَا يَخْشَى أَحَدُكُمْ إذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ } مُتَّفَقٌ عَلَيْهِ فَ

 தலைவர்கள் - இமாம்கள் தொழுகையிலும் கூட மக்களின் நலனில் கவனம்  செலுத்த வேண்டும் என்பதையும் கற்பிக்க பெருமானார் தவறவில்லை

 عن أبي هريرة رضي الله عنه أن النبيَّ صلى الله عليه وسلم قال: ((إذا أمَّ أحدُكم الناسَ فليُخفِّف، فإن فيهم الصغيرَ والكبيرَ والضعيفَ وذا الحاجة، فإذا صلى وحده فليُصلِّ كيف شاء))؛ متفق عليه.

 أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ((إني لأدخل في الصلاة وأنا أريد إطالتها، فأسمع بكاء الصبي فأتجوَّز في صلاتي، مما أعلم من شدة وجد أمه من بكائه)).

 முஆது ரலி அவர்கள் நீளமாக ஓதுகிறார் என ஒருவர் புகார் செய்தார். பெருமானார் (ஸல்) அவர்கள் மக்களை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தினார்கள்

 قَالَ رَجُلٌ: يا رَسولَ اللَّهِ إنِّي لَأَتَأَخَّرُ عَنِ الصَّلَاةِ في الفَجْرِ ممَّا يُطِيلُ بنَا فُلَانٌ فِيهَا، فَغَضِبَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، ما رَأَيْتُهُ غَضِبَ في مَوْضِعٍ كانَ أَشَدَّ غَضَبًا منه يَومَئذٍ، ثُمَّ قالَ: يا أَيُّهَا النَّاسُ، إنَّ مِنكُم مُنَفِّرِينَ، فمَن أَمَّ النَّاسَ فَلْيَتَجَوَّزْ، فإنَّ خَلْفَهُ الضَّعِيفَ والكَبِيرَ وذَا الحَاجَةِ.

மாஷா அல்லாஹ்!

 ஒரு தலைமையை தேர்ந்தெடுப்பதிலும் தலைமைக்கு கட்டுப்படுவதிலும் தலைமை நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும் பள்ளிவாசலில் வைத்தே கற்றுக் கொடுத்தார்கள் பெருமானார் (ஸல்).

 முஸ்லிம் சமூகத்திற்கு பள்ளிவாசலில் கற்பிக்கப்படுகிற இந்த வழிகாட்டுதல் அவர்களது வாழ்க்கை முழுவதும் பயன்படும்

 எந்த இடத்திலும் ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் அவருக்கு கட்டுப்படுவதிலும் சமுதாயத்திற்கு அதிக சிரமம் பிடிக்காது.

 மக்களை கவனித்துக் கொள்வதில் பெருமானார் காட்டிய அக்கறை தான் கலீபாக்களை உலகின் தலை சிறந்த ஆட்சியாளர்களாக உருவாக்கியது.

 22 இலட்சம் கிலோ மீட்டர்களை ஆட்சி செய்த உமர் ரலி மக்களை பாதுகாப்பதில் கண்ணும் கருத்த்மாக இருந்தார்.

 மதீனாவுக்கு வரும் வியாபாரக்குழுவினர் மதீனாவின் வெளிப்புறத்தில் கூடாரம் அடித்து தங்குவர். அங்கு வரும் உமர் ரலி அவர்கள் தான் அவர்களுக்கு காவல் இருப்பதாக கூறுவார். குர் ஆனை ஓதிக்கொண்டு இரவு முழுக்க காவல் செய்வார். வியாபாரிகள் நிம்மதியாக உறங்குவர். அதிகாலை அஸ்ஸலாத் அஸ்ஸலாத் என்று கூறி அவர்களை எழுப்பி விட்டு உமர் ரலி அவர்கள் பள்ளிவாசலுக்கு செல்வார்கள்.

  தலைவரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்

 நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வேலைக்கும் அதற்கு தகுந்த நபர்களையே தேர்வு செய்தார்கள். தனக்கு வேண்டியவர் என்பதற்காகவோஇவர் இருக்க இவரை சொன்னால் என்ன நினைப்பார்கள் என்றோதயங்கியதே இல்லை

 பாங்கின் வாசங்கள் அப்துல்லாஹ்பின் ஜைது ரலி அவர்களின் கனவில் தோன்றியது என்றாலும் பாங்கு சொல்ல உரத்த குரலுடைய பிலால் ரலி யை தான் பெருமானார் தேர்ந்தெடுத்தார்கள்.

 يا رسول الله، إنه طاف بي هذه الليلة طائف، مر بي رجل عليه ثوبان أخضران، يحمل ناقوسا في يده، فقلت له: يا عبد الله، أتبيع هذا الناقوس؟ قال: وما تصنع به؟ قال: قلت: ندعو به إلى الصلاة، قال: أفلا أدلك على خير من ذلك؟ قال: قلت: وما هو؟ قال: تقول: الله أكبر الله أكبر، الله أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدًا رسول الله، أشهد أن محمدًا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر الله أكبر، لا إله إلا الله.»، فأَمر النبيُّ محمد بلال بن رباح أَن يؤذِّن على ما رآه عبد اللّه

 அதே போல தனது வாழ்நாளின் இறுதி நேரத்தில்  பெரும் சஹாபாக்களை கொண்ட படைக்கு சிறிய வயது தோழரான உஸாமா ரலியை நியமித்தார்கள்.

 முன்பு அவரது அவரது தந்தை கொல்லப்பட்டதன் பதிலடியாக திட்டமிடப்பட்ட யுத்தம் அது.

   فيهم أبو بكر الصديق وعمر بن الخطاب وأبو عبيدة بن الجراح وسعد بن أبي وقاص وسعيد بن زيد.

فتكلم قوم وقالوا «يستعمل هذا الغلام على المهاجرين الأولين»، فغضب النبي محمد غضبًا شديدًا، فخرج وقد عصب على رأسه عصابة وعليه قطيفة، فصعد المنبر، فحمد الله وأثنى عليه ثم قال «أما بعد، أيها الناس فما مقالة بلغتني عن بعضكم في تأميري أسامة، ولئن طعنتم في إمارتي أسامة، لقد طعنتم في إمارتي أباه من قبله، وأيم الله إن كان للإمارة لخليقًا وإن ابنه من بعده لخليق للإمارة، وإن كان لمن أحب الناس إلي، وإنهما لمخيلان لكل خير، واستوصوا به خيرًا، فإنه من خياركم

தகுதியும் பொருத்தமுமான தேர்ந்தெடுத்தலே பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த உத்தியாகும்.

இனம் அல்லது குழு மன்ப்பான்மைக்கு இதில் இடமே இருக்க வில்லை.

தம்ழிநாட்டில் இப்போது நடைபெறுகிற சட்டமன்றத தேர்தலில் நாம் வாக்களிக்க காத்திருக்கிறோம்.

நமக்கான ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது போன்றது. தன் இதுவும்.

இதில் நாம் பின்தங்கி விடக்கூடாது.

கடந்த தேர்தலில் நமது மாநிலத்தில் நாட்டின் மக்களை பிளவு படுத்தக் கூடிய இந்துத்துவ அமைப்புக்களின் ஆதரவு பெற்ற பகுதிகளில் 70 / 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த போது சிறுபான்மை இன மக்கள் நிறைந்த பகுதிகளை 50 சதவீத்த்திற்கு குறைவாகவே வாக்குகள் பதிவானதாக அரசியல் கட்சிகள் புள்ளிவிபரத்துடன் தெரிவிக்கிறார்கள்.

ஓட்டுப்போடுவது என்பது இன்னாரை எங்களது பிரதிநிதியாக இருக்க நான் சாட்சியமளிக்கிறேன் என்பதாகும். எனவே ஓட்டுப்போடாமல் இருப்பது சாட்சியை மறைப்பது போன்ற ஒரு குற்றமாகும்.

 ولا يأب الشهداء إذا ما دعوا

 தேர்தல் கமிஷன் வா வா என்று நம்மை அழைக்கிறது.

  وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் ஜாலியாக பொழுதைக் கழிக்கலாம் என்று நினைப்பது குறித்த குற்ற உணர்வை இது ஏற்படுத்துகிறஹ்டு.

எனவே நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். வீட்டில் உள்ள பெண்கள் முதியவர்கள் இளைஞர்களை வாக்களிக்க தூண்ட வேண்டும். பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்.

இந்த தேர்தலில் நாம் குழப்பம் அடையவும் கூடாது,

தற்போதைய சூழலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் முஸ்லிம்கள் தடுமாறி நிற்க எதுவும் இல்லை.

தேர்தல் களம் தெளிவாகவே இருக்கிறது.

ஒரே ஒரு செய்தி போதுமானது.

மத்தியில் ஆட்சியில் இருக்கிற பாஜக, முஸ்லிம்களின் குடியுரிமையை திட்டமிட்டு பறித்து அவர்களை நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக்கும் கொடூரமான சி ஏ ஏ . மற்றும் என் பி ஆர் - என் ஆர் சி  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்க  சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது நாங்கள் ஆட்சிக் வந்தால் என் ஆர் சியை முதல் கூட்ட்த்திலேயே அமுல்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

தற்போது நமது மாநிலத்தை ஆளும் அரசு பாஜக வுக்கு பயந்தே அனைத்து விவகாரங்களிலும் நடந்து கொள்கிறது/

சி ஏ ஏ சட்ட திருத்தம் பாராளுமன்ற மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு வந்த போது அ இ அ தி முகவின் 11 வாக்குகள் கிடைக்காமல் போயிருந்தால் அந்த சட்டம் நிறைவேறியிருக்காடு, அதிமுக அளித்த ஆதரவுதான் அந்தச் சட்டத்தை நிறைவேற்றியது. அதிமுக உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாகவே தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின் காரணமாக ஆதரவாக வாக்களித்தேன் என்று கூறினார்.

இப்போது இந்த தேர்தல் நடைமூறையிலும் கூட பாஜகவுக்கு பயத ஒரு அரசு ஆட்சியில் இருப்பதையே நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

கோவையில் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக உத்திரப் பிரதேச முதல்வர் பிரச்சாரம் செய்ய வருகிறார். அவருடன் பிபிசியின் தகவலின் படி ஆயிரக்கணக்கானோ இரு சக்கர ஊர்வலமாக முஸ்லிம்களின் வியாபார தளங்கள் – பள்ளிவாசல்கள் வழியாக சென்று அருவருப்பான வார்த்தைகளில் கோஷம் எழுப்பியுள்ளனர் .

தேர்தல் விதி முறைகள், இன்றைய கொரோனா பரவல் சூழ்நிலை களுக்கான விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் திட்டமிட்டு நகர மக்களை அச்சுறுத்து வகையில் – ஊரடங்கு போடப்பட்டுள்ளதோ என்று நினைக்கும் அளவு காவல் துறையே கடைகளை மூடச் சொல்லி ஒரு ஊர்வலத்தை நடத்த  எந்த அடிப்படையில் காவல்துறை அனுமதி அவர்களுக்கு மட்டும் வழங்கியது ?

எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. எலக்சென் கமிஷனும் கண்டு கொள்ள வில்லை.

தமிழகம் யார் கையில் இருக்கிறது என்பதை இது தெளிவாகவே காட்டி விடுகிறது.

இந்தச் சூழலை மாற்றாவிட்டால் நிலமை இன்னும் விபரீதமாகிவிடக் கூடும்.

எனவே இந்த தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதில் நான் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

தேர்தலில் முடிவுகள் இழுபறியாகவோ அல்லது குறைந்த மெஜாரிட்டியிலோ வது விடும் என்றால் பாஜக வின் தகிடுதித்தங்கள் எப்படி இருக்கும் என்பதை கர்நாடகா மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்தவை நமக்கு உணர்த்து கின்றனர்.

திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழக மக்களைப் பொருத்தவரை அதிக அன்பிற்குரிய கட்சிகள் தான் . என்றாலும் இப்போதைய அதிமுக வின் நிலை பாஜக வின் முழு கட்டுப்பாட்டில் அவர்களது கண்ணசைக்கும் எந்த காரியத்தையும் செய்து கொடுக்கவும் அவர்களின் குற்றச் செயல்கள் எதையும் தடுக்க முடியாத தாகவும் இருக்கிறஹ்டு.

எனவே முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிற பாஜக அதன் தோழமைக்கட்சிகளை மிகப்பெரிய அளவில் தோல்வி அடைய வைப்பதே இந்த தேர்தலில் நமது தீர்வாக இருக்கும்.

அதற்கு மதச்சாபற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களையே ஆதரிக்க வேண்டும்.

நமது வாக்கு வீணாகி விடக்கூடாது.

தமிழ் இனம் அல்லது நமது இயக்கம் என்ற குழு மனப்பான்மையில் முஸ்லிம்கள் வாக்களிப்பது இன்றைய சூழலில் வேணுமென்றே மதிப்புமிகு வாக்குரிமையை வீணடிப்பதாகும்.

எனவே முஸ்லிம் சகோதரகள் தனது குடும்பத்தில் வாக்குரிமை அனைவரையும் வாக்களிக்க ஏற்பாடு செய்து, அனைவரும் வாக்கை சிறிய குழு உணர்வுக்கு ஆட்பட்டு விடாமல் மக்களை பீளவு படுத்தும் சக்திகளை தோற்கடிக்கும் நோக்கில் வாக்களிக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் ஏப்ரல்  6 ம் தேதி குற்றவாளிகளை அடையாளப்படுத்த ஒரு சரியான சாட்சியமளிக்க நாம் வாகுச் சாவடிகளுக்கு செல்வோம்.

குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது சாட்சிகள் சரியாக சாட்சியமளிக்க தவறினால் அது குற்றவாளிகள் வென்று விட வாய்ப்பளித்து விடும் அல்லவா ? இவர்தான் என்று சொல்வதற்கு பதில் இவர் மாதிரிதான் தெரிந்தது என்று சொல்லிவிட்டால் வழக்கு திசை மாறிவிடும் அல்லவா? அது போல இந்த தேர்தலில் வாக்களிப்பதில் நாம் சருகினால் அது மக்களை பிளவு படுத்தும் குற்றவாளிகளுக்கு மேலும் அதிக பலத்தை கொடுத்து விடும் . அப்பாவி மக்களை மென்மேலும் அல்ல்லுக்கு உள்ளாக்கி விடும்ز எனவே 

நினைவிருக்கட்டும் யார் வெல்வது என்பது அல்ல. யார் வென்று விடக்கூடாது என்பதே இப்போதைய நமது இலக்கு. 

அல்லாஹ் ஒரு நல்ல தலைவரை நமக்கு வழங்கியருள்வானாக!  

 

  

 

No comments:

Post a Comment