இறைநேசர்கள் நினைவு கூறப்படுகிற நேரம் இது
அனைத்து இறைநேசர்களது
வாழ்கையிலும் நாம் காணுகிற பொதுவான அம்சம்.
ஜுஹ்து ஆகும்.
அதாவது இறைநேசர்கள்
அனைவரும் இந்த உலகிற்கு – மிக குறைந்த அளவிலான முக்கியத்துவம் கொடுத்தார்கள். இன்னும்
சொல்லப்போனால் நற்செயல்களை தவிர வேறெதையும் ஒரு கொசுவை போன்ற அளவிற்கு கூட அவர்கள்
மதிக்க வில்லை.
கெளதுல் அஃலம் அவர்கள் ஒரு உரையில் கூறீனார்கள்
إني أقول لكم الحق ، ولا أخاف منكم ولا أرجوكم ، أنتم
واهل الأرض عندي كالبق
உலகிலிருந்து கிடைக்கிற சுகங்கள் கவுரவம் அனைத்தை துறந்து அல்லாஹ்வின் பொருத்தமே
உயர்ந்த்து என்று வாழ்ந்தார்கள்.
இன்று நாம் உலகில் கிடைக்கிற லாபம் நஷடம் , இங்கு கிடைக்கிற மரியாதை அவமரியாதை,
இங்கு அனுபவிக்கிற நிம்மதி துக்கம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இன்னும் சொல்லப் போனால் இதை நோக்கி ஓடுவதுதான் நமது இலக்காக இருக்கிறது.
சிந்தித்துப் பாருங்கள்! நிதர்சனம் விளங்கும்.
ஏதோ சில நன்மையான காரியங்களை செய்கிறோம். நாளைக்கு பயன்பட்டு விட்டு போகட்டுமே
என்று.
இறைநேசர்கள் இந்த சிந்தனையிலிருந்து விடுபடுவதை தான் தமது முதல் இலக்காக கொண்டிருந்தார்கள்.
திருக்குர் ஆன் அறிவுறுத்துகிறது. அதாவது உண்மையை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது.
மழைக்காலத்தில் எங்காவது தெருக்கலில் தண்ணீர் தேங்கியிருக்குமானால் அதில் மின்சாரம்
பாய்ந்திருக்கலாம் என்று அறிவுறுத்துவதப்படுவது போல திருக்குர் ஆன் அறிவுறுத்துகிறது.
وما الحياة الدنيا إلا متاع الغرور
ஒருவர் சர்க்கரை நோயாளி, சுகர் 400 இருக்கிறது. அவர் குலாப் ஜாமூனை விரும்பிச்சாப்பிடுகிறார்.
என்றால் அதன் அழகும் சுவையும் அவரை ஏமாற்றுகின்றன என்று தானே பொருள்/ அதே போல உலகம் மக்களை ஏதோ இவை எல்லாம் நிரந்தரம் என்பது போல நம்பவைக்கின்றன. இதில் கிடைக்கிற சுகங்கலெல்லாம் விரும்பத்தக்கதுதான் என்று நினைக்க வைக்கின்றன.
இந்த உலகம் விளைந்து நிற்கிற பயிரைப் போல என்கிறான் அல்லாஹ்.
إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ
نَبَاتُ الْأَرْضِ مِمَّا يَأْكُلُ النَّاسُ وَالْأَنْعَامُ حَتَّىٰ إِذَا
أَخَذَتِ الْأَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ
قَادِرُونَ عَلَيْهَا أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا
حَصِيدًا كَأَنْ لَمْ تَغْنَ بِالْأَمْسِ ۚ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ
لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
ஹஸன் அல் பஸரி ரஹ் இன்னொரு உவமையும் கூறுகிறார்கள். குழந்த்தகளின் விளையாட்டுப் பொருட்களை போல்
قال الحسن: كخضرة النبات، ولعب البنات لا حاصل له
குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை ஒரு கால கட்டம் வரை நெஞ்சோடு இறுக்கி வைத்துக் கொள்வார்கள், உறங்கும் போது கூட விட்டு விட மாட்டார்கள், ஒரு கட்ட்த்திற்குப் பிறகு அதை கண்டு கொள்ளமாட்டார்கள். இது தான் உலகம்.
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ
الدُّنْيَاﰏوَالْآخِرَةُ
خَيْرٌ وَأَبْقَىٰ
மறுமையின்
பெருமையை பெருமனார் (ஸல்) அவர்கள் போதிக்கிறார்கள்.
மற்றுமொரு அற்புதமான உவமை
அவர்களது வாழ்வியலை பாறுங்கள்!
உமர் ரலி அவர்கள் பாரசீக சக்ரவர்த்திகளையும் ரோமர்களையும் வென்றவர். ஆனால் ஒட்டுபோட்ட
ஆடைய அணிந்த்திருந்தார்கள். அரபுலகின் அரசரான பிறகும் பள்ளிவாசலின் படிக்கட்டுகளிம்
படுத்து நிம்மதியாக உறங்கினார்கள்.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கல்வி கற்பதற்காக தன்னுடைய 18 வது வயதில் பக்தாது
நகருக்கு 40 தங்க நாணயங்களோடு வந்தார்கள். ஆனால் சுமார் 30 ஆண்டுகள் அங்கு கல்வி கற்றார்கள்.
கையிருப்பெல்லாம் கரைந்து போன பிறகு எப்படி ஒரு வாழ்கை வாழ்ந்தார் என்றால் பசி அதிகமாக
இருக்கும் போது வயிற்றில் கையை வைத்து அழுத்திக் கொண்டு إنّ مع العُسر يُسراً. வை திரும்ப திரும ஓதிக் கொண்டிருப்பார்கள்
கெளது நாயகம் கேட்டார்கள் எனது பணம் என்றால் எப்படி என்றார்கள். அவர் சொன்னார்.
உங்களுடைய தாயார் 8 தீனார்களை என்னிடம் கொடுத்து உங்களிடம் சேர்ப்பிக் சொன்னார் என்று
கூறிவிட்டு அதில் நான் ரொட்டி வாங்கியது போக மீதி என்று இருப்பதை கொடுத்தார்.
எத்தகைய வருமையிலும் கொடையுள்ளம் என்பது உலகை புரிந்து கொண்டதன் இயல்பே ஆகும்.
முஹ்யித்தீன் பின் அரபி ரஹி மிகப்பெரும் அறிவாளி இறைநேசர். அவரத் அறிவுத்திறமையை மெச்சாதவர்கள் இல்லை. அவர் மக்காவிலிருந்து டமாஸ்கஸுக்கு வந்து குடியேறினார், அப்போது டமாஸ்கஸ் கிருத்துவர்களின் கட்டுப்பாடில் இருந்தது. கிருத்துவ மன்ன்ன் இப்னு அரபியை மரியாதை செய்யும் வகையில் ஒரு பெரிய மாளிகையை வழங்கினான்.
அங்கு அவர் வசித்துக் கொண்டிருந்த போது ஒரு ஏழை அவரிடம் வந்து இறைவனுக்காக ஏதாவது
கொடுங்கள் என்று கேட்டான். என்னிடம் கொடுப்பதற்கு இந்த மாளிகையை தவிர வேறு எதுவும்
இல்லை . இதை எடுத்துக் கொள்வதாக இருந்தால் இதை தருகிறேன் என்றான். அந்த ஏழை அதை ஏற்றுக்
கொள்ளவே அந்த மாளிகையை அப்படியே அவனிடம் கொடுத்து விட்டுச் சென்றார்.
ஆண்களில் மட்டுமே இப்படி குணம் கொண்டவர்கள் இருந்தார்கள் என்பதில்லை பெண்மணிகளிலும்
இத்தகைய இறை நேசம் கொண்டவர்க்ள் இருந்தார்கள்.
ராபியா பஸரிய்யா அம்மையார் அவர்கள் கடினமான இரண்டு ரொட்டித் துண்டுகளை வைத்து சாப்பிட
தயாரானார்கள். உடனிருந்தவர்கள் பக்கத்து வீட்டிலிருந்து சில வெங்காயங்களையாவது வாங்கிவருகிறோம்
என்றார்கள். ராபியா அம்மா , அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் எதுவும் கேட்பதில்லை என்ற
முடிவில் இருக்கிறேன் என்வே யாரிடமும் கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். அப்போது
எங்கிருந்தோ வந்த ஒரு காக்கை சில வெங்காயத் துண்டுகளை அங்கு கொண்டு வந்து போட்டது.
இது சைத்தானின் வேலையாக இருக்கலாம் எனவே இதுவும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார்கள்.
இது போல வலிமார்களின் ஜுஹ்து இயல்புக்கு பன்னூற்றுக்கணக்கான உதாரணங்கள் இருக்கின்றன்.
அரசர்களாக பெரும்
செல்வந்தர்களாக கல்வியின் கடல்களாக பெருமதிப்போடு திகழ்ந்தவர்கள் மிக சாமாணிய வாழ்கையை
தேர்ந்தெடுத்து அல்லாஹ்வின் திருப்தியில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். உலகின் சுகங்களை
வசதி வாய்ப்புக்களை கூட அல்லாஹ்விற்காக என பயன்படுத்திக் கொண்டார்கள்.
கெளதுல் அஃலம்
அவர்கள் மிகச் செல்வாக்கான நிலையில் வாழ்ந்த போதும் – பெரும் ஆன்மீகப் பயிற்சிகளை முடித்துக்
கொண்ட தவ வாழ்விற்கு பிறகு தனது 51 வயதில் 4 திருமணம் செய்து கொண்டார்கள். 27 ஆண் குழந்தைகளையும்
22 பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார்கள்.
இந்த தாம்பத்தியமும்
பிள்ளை பேறுகளும் கூட அல்லாஹ்விற்காகவே என்றிருந்தது.
கெளது நாயகத்தின்
சொற்பொழிவுகளுக்கு பின் ஜனாஸாக்கள் தொழவைப்பதற்காக கொண்டு வரப்படும். அப்படிக் கொண்டு
வரப்பட்டதில் அவர்களது பிள்ளைகளது ஜனாஸாக்களும் உண்டு. அந்த இறப்புக்கள் அவர்களது சொற்பொழிவை
தடுத்த்தில்லை என்கிறது வரலறு.
உலகை பிரதானமாக
கருதாமல் அல்லாஹ்விற்காக வாழ்ந்த வாழ்கை இத்தகையோர்களுடையது.
இந்த உலகில் எதையும் தங்களுடைய என்று இவர்கள் கருதிக் கொண்ட்தில்லை .
இது என் வீடு
என்று சொல்லிக் கொள்வதை கூட ஒரு வகை ஷிர்க் ஆக் இவர்கள் நினைத்தார்கள்.
நாம் இந்த அளவிற்கு செல்ல முடியாவிட்டாலும் கூட இது அல்லாஹ் எனக்கு கொடுத்த வீடு
அல்லாஹ் கொடுத்த செல்வம், அல்லாஹ் கொடுத்த அறிவு என்று சொல்லிக் கொள்ளவும் நடந்து கொள்ளவும்
பக்குப்படுவோம்
இந்த உலகமே பிரதானம்
என்பது போல் நமது சிந்தனைப் போக்கும் பேச்சுக்களும் செயல்ப்பாடுகளும் அமைந்து விடாமல் காத்துக் கொள்ள
இப்பெருமக்களின் வரலாறுகள் நமக்கு துணை செய்யட்டும்
அல்லாஹ் தவ்பீக்
செவானாக!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
ReplyDeleteஹஜ்ரத்! கௌதுல் அஃளமைப் பற்றி பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் பல பயான்களையும் பார்த்தேன், ஆனால் தங்களின் குறிப்புகளைப்போல கலவையாக எனக்கு கிடைக்கவில்லை! அல்ஹம்துலில்லாஹ்!
அதற்காக பிறரின் முயற்சியை குறைபடுத்தவில்லை, என் தேடலுக்கு ஏற்றார்போல் இல்லை! அவ்வளவுதான்.
இறைவன் தங்களின் சிந்தனாற்றலையும் ஆயுளையும் அதிகப்படுத்தி ஆஃபியத்தையும் நிறைவாகத் தருவானாக! ஆமீன்
Aamin
Deleteஅல்ஹம்துலில்லாஹ். மாஷா அல்லாஹ்
ReplyDelete