வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 10, 2022

சிறப்படையவும் சிக்கலை தவிர்க்கவும் பேணுதல் அவசியம்

வாழ்கையை சராசரியாக வாழ்ந்தும் முடித்துவிடலாம். சிறப்பானதாகவும் ஆக்கிக் கொள்ளலாம்.

எல்லாம் நமது முடிவில் இருக்கிறது. அல்லாஹ்வின் தவ்பீகும் வேண்டும்.

மார்க்கம் கூறும் கட்டாய கடமைகளை நிறைவேற்றி ஹலால் ஹராமை கவனித்து வாழ்ந்துவிட்டால் சராசரியான நல்வாழ்வாகும். சொர்க்கத்தை பெற்றுவிடலாம்.

 أنَّ أعْرَابِيًّا جَاءَ إلى رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ ثَائِرَ الرَّأْسِ، فَقالَ: يا رَسولَ اللَّهِ أخْبِرْنِي مَاذَا فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الصَّلَاةِ؟ فَقالَ: الصَّلَوَاتِ الخَمْسَ إلَّا أنْ تَطَّوَّعَ شيئًا، فَقالَ: أخْبِرْنِي ما فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الصِّيَامِ؟ فَقالَ: شَهْرَ رَمَضَانَ إلَّا أنْ تَطَّوَّعَ شيئًا، فَقالَ: أخْبِرْنِي بما فَرَضَ اللَّهُ عَلَيَّ مِنَ الزَّكَاةِ؟ فَقالَ: فأخْبَرَهُ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ شَرَائِعَ الإسْلَامِ، قالَ: والذي أكْرَمَكَ، لا أتَطَوَّعُ شيئًا، ولَا أنْقُصُ ممَّا فَرَضَ اللَّهُ عَلَيَّ شيئًا، فَقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ أفْلَحَ إنْ صَدَقَ، أوْ دَخَلَ الجَنَّةَ إنْ صَدَقَ.

الراويطلحة بن عبيدالله | المحدثالبخاري 

கடமைகளை நிறைவேற்றியதற்கு மேலாக பேணுதலான ஒரு வாழ்கையை தெர்ந்தெடுத்துக் கொண்டால் சிறப்பான வாழ்வாக அது அமையும்.

பேணுதல் எனும் வார்த்தையை அரபியில் வரஃ என்கிறார்கள்.

வரஃ என்றால் பெரிய பாவத்தை பற்றிய பயத்தில் சிறிய தவறுகளை கூட விட்டுவிடுவதாகும்.

சில தெருக்களுக்கு சென்றால் ஆபாசமான அந்நிய பெண்களை பார்க்க நேரிடும் என்றால் அந்தப் பாதைக்கே செல்லாமல் இருப்பதாகும்.

தாய்லாந்திலும் ஹாங்காங்கிலும் ஏன் நம்முடைய பெங்களூருவிலும் இதற்காகவே மக்கள் கூடுகிறார்கள் என்று கூறப்படுவதுண்டு. அத்தகைய இடங்களை தவிர்த்துக் கொண்டால் நமது வாழ்கை சிறப்படையும்.

பல சந்தர்ப்பத்திலும் நாம் செய்கிற வேலைகள் மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று நினைப்போம்

சில வியாபார தந்திரங்களை

சில இடங்களுக்கு செல்வதை

சில தொலை பேசி உரையாடல்களை

சில் கொடுக்கல் வாங்கல்களை

சில மறைமுக உறவுகளை

ஒரு வேளை செய்யும் போது இதை மற்றவர்கள் அறிந்து கொண்டால் தப்பாகிவிடுமே என்று நமக்கு தோணும் காரியங்களை தவிர்த்துக் கொள்வதே வரஃ பேணுத;ல்ஆகும்.

வரஃ உடன் வாழ்வது சிறப்பானது என்பது மட்டுமல்ல அப்படி வாழும் வாப்புக் கிடைத்தால் அது ஒரு பெரும் பாக்கியமும் ஆகும்.

ஹஸன் பஸரீ ரஹ் கூறினார்கள்.

மூன்று காரியங்கள் கைகூடிவிட்டால் தீனின் முழு பாக்கியமும் கிடைத்து விட்ட்தாக கருதலாம்.

1.   ஹராமிலிருந்து தடுக்கும் வரஃ

நான் எனது இறைவனுக்கு மாறு செய்ய மாட்டேன் என்று முடிவு செய்திருப்பார். அதனால் பாவம் செய்ய மாட்டார்.

2.   அறியாமை தடுக்கும் கம்பீரம்.

கம்பீரமான மனிதர்கள் முட்டாள்தனமான காரியத்தை செய்யமாட்டார்கள். அவர்களது கம்பீரமே அவர்களை தடுத்துவிடும்.

திருக்குர் ஆனை மன்னம் செய்திருக்கிற ஒரு ஹாபிழிடம் ஒரு முரடன் தவறாக நடப்பான் எனில் அவரது இதயத்திற்குள் இருக்கும் குர் ஆன் அவரை அவனைப் போல கீழ்த்தரமாக நடக்காமல் அவரை தடுத்துவிடும்.

وقال عبد الله بن عمرولا ينبغي لحامل القرآن أن يخوض مع من يخوض، ولا يجهل مع من يجهل، ولكن يعفو ويصفح لحق القرآن؛ لأن في جوفه كلام الله تعالىكذا في تفسير القرطبي

 3.   பிறர் துன்புறுவதை சகித்துக்கொள்ளாத மனம்

மாஷா அல்லாஹ் இப்படி ஒரு வாழ்கையை நமக்கு அமையுமானா அது எவ்வளவு மரியாதைக்குரியதாகும்.

இது சிரம்ம் அல்ல. நாம் ஆசைப்பட்டு சில தீர்மாணங்களை எடுத்துக் கொண்டால் இத்தகைய வாழ்வு எல்லோருக்கும் கிட்டும்.

ஹஸன் பஸரீ ரஹி மற்றொரு முறை கூறினார்கள்.

நான் ஒரு இளைஞனிடம் மார்க்கத்தின் சுருக்கம் என்ன என்று கேட்டேன்.

அவன் சொன்னான். பேணுதல்

அவனிடம் அடுத்துக் கேட்டேன் மார்க்கத்தில் சோதனை என்பது என்ன ? அவன் சொன்னான் ஆசை.

ஹஸன் பஸரீ கூறினார் உன்னை போலஒரு அறிவாளியை நான் பார்த்த்து இல்லை. மார்க்கத்தை இரண்டு வார்த்தைகளுக்கு நீ அடக்கி விட்டாய்.

ஸயீது பின் முஸய்யப் ரஹ் கூறினார்கள்

அனைத்து நடைமுறைகளிலும் வரஃ எனும் பேணுதலை கடைபிடிப்பதே இஸ்லாமிய மார்க்கத்தின் சுருக்கம் ஆகும்.

இத்தகைய ஒரு பேணுதலான வாழ்கை முறை இந்த உலக வாழ்வையும் நமக்கு சிறப்பானதாகா ஆக்கி வைக்கும்.

பேணுதலான வாழ்கை பேரறிவை தரும்.

முஹம்மது பின் சீரீன் ரஹ் அவர்களுக்கு கனவுகளுக்கு விளக்கம் அறிந்து கொள்ளூம் ஆற்றல் இருந்த்து. இன்றும் அவர்கள் எழுதிய கனவுகளுக்கான விளக்கம் என்ற நூல் தான் இத்துறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . அவர் இப்படி ஒரு ஆற்றல் தனக்கு கிடைத்த்தற்கான் காரணத்தை இப்படி கூறுகிறார்.

நான் இந்த உலகியல் ஆசைக்காக யார் மீதும் பொறாமை கொண்டதில்லை.

பேணுதலான வாழ்கை அருமையான சந்ததிகளை தரும்.

அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் தனது காலத்தில் மிகப்பரும் ஆளுமையாக போற்றப்பட்டார். இப்போதும் போற்றப்படுகிறார். அவரது வாழ்வின் சிறப்பிற்கு அவரது தந்தையின் பேணுதல் ஒரு காரணம் என்று அறிஞர்கள் போற்றுவார்கள்

وكان كثير الانقطاع، محباً للخلوة، وكان شديد التورع، وكذا كان أبوه، وأورد عن أبيه حكاية، أنه كان يعمل في بستان لمولاه، وأقام فيه زماناً، ثم إن مولاه جاءه يوماً، وقال له: أريد رمّاناً حُلْوًا؟ فمضى إلى بعض الشجر وأحضر منها رماناً فكسره فوجده حامضاً، فغضب عليه، وقال له: أطلب الحلو فتحضر بالحامض، هات حلوًا؟

     فمضى وقطف من شجرة أخرى فأعطاه، فلما كسره وجده حامضاً أيضاً، فاشتد غضبه عليه، فقال: لا، وفعل كذلك دفعة ثالثة، فقال له مولاه فيما بعد: أما إنك أنت ما تعرف الحُلو من الحامض، أو لم تأكل؟ فقال: لا، فقال له: وكيف ذلك؟ فقال: لأنك ما أذِنْتَ لي وما أكلت من البستان شيئًا، فكشف عن ذلك فوجد قوله حقاً، فعظم في عينه، وزوّجه ابنته، ويقال: إن عبد الله هذا رزقه الله من تلك الابنة، وكان من بركة وصلاح أبيه.

 பேணுதலான வாழ்கை பெரு வாழ்வை தரும்.

இமாம் அபூஹனீபா ரஹ் இன்று உலகம் முழுக்க கொண்டாடப்படுகிற மனிதர்களுள் ஒருவர். உலகின் அதிகமான முஸ்லிம்கள் சட்ட வழிகாட்டி.

அவரது அந்தஸ்திற்கு காரனம் அவரிடமிருந்நத பேணுதல்

ஒரு நாள் மதிய நேரத்தில் அவரது ஜவுளிக்கடைய மூடிவிட்டு அவர் கிளம்பினார். வியாபார நேரத்தில் இப்படி கடையை மூசி செல்கிறீர்களே என்று ஒருவர் கேட்டர். இமாம் அபூஹனீபா ரஹி கூறினார்கள்/

வானம் மேக மூட்டமாக இருக்கிறது . இப்போது வாடிக்கையாளர்களால் துணியை சரியாக பார்க்க முடியாது. அதனால் கடையை மூடிவிட்டேன் என்றார்கள்.

ஒரு முறை இமாம அபூஹனீபா ரஹ் கடையில் இல்லாத போது வேலைக்கார்ர் கடையிலிருந்த ஒரு குறையுள்ள ஆடையை விற்று விட்டார். இமாம அபூஹனீபா குறைகளை சுட்டிக் காட்டீனீரா என்று கேட்டார்கள் இல்லை என்றார் ஊழியர், என்ன விலைக்கு விற்றாய் என்றார்கள், அவர் இருபது திர்ஹம் என்றார். உடனே இமாம் அவர்கள் கொடுத்த பணத்தை கொடு என்று வாங்கிக் கொண்டு துணியை  வாங்கிச் சென்ற மனிதரைப்பற்றிய அடையாளங்களை கேட்டுக் கொண்டு அவரை தேடிக் கொண்டு ஊர் எல்லை வரை வந்து விட்டார்கள். ஊர் எல்லையில் அவரை கண்டு பிடித்து விசயத்தை கூறி பணத்தை திருப்பிக் கொடுத்தார்கள். அந்த மனிதர் பணத்தை வாங்கியவுடன் அது தான் கொடுத்த்து தான் என்று உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு அதை அருகிலிருந்த கிணற்றில் வீசினான், பிறகு இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களிடம் கூறினான், நான் குறையுள்ளதை வாங்கி விடக் கூடாதே என்று இவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள். நான் எவ்வளவு பெரிய பாவி தெரியுமா செல்லாத போலி நாணயத்தை உங்களிடம் கொடுத்து துணியை வாங்கிவந்து விட்டேன் என்று இருமாந்து போயிருந்தேன் என்று கூறி துணிக்கு தகுந்த சரியான காசை திருப்பிக் கொடுத்தான்.

இமாம் அபூஹனீபா ரஹி அவர்களுக்கு சரியான காசு திரும்ப கிடைத்த்து என்பதல்ல பிரதானம் இந்த இயல்பு இமாம் அபூஹனீபா அவர்களை மாமனிதராக்கியது என்பதே முக்கியம்.

முஸ்லிம் வியாபாரிகளின் உன்னதமான பேணுதலை வரலாறு காட்டுகிறது.

ஒரு முஸ்லிம் வியாபாரி சந்தையில் தனது கழுதையை விற்றுக் கொண்டிருந்தார். வாங்கவந்த ஒருவர் கேட்டார். கழுதை எப்படி ? அந்த வியாபாரி இது எனக்கு பிடித்திருந்தால் நான் ஏன் விறகப்போகிறேன் என்றாராம்.

அபு தர்தா ரலி அவர்கள் தனது ஒட்டகையிடம் சொல்வார்கள்: நான் உனது சக்திக்கு மேல் ஒரு போதும் உன் மீது பாரம் ஏற்றியதில்லை. நீ கியாமத் நாளில் என்னோடு சண்டைக்கு வரக்கூடாது.

இத்தகைய் பேணுதலான மனிதர்களின் ஒரு பெரும் படையை இஸ்லாம் இந்த உலகிற்கு வழங்கியுள்ளது.

இமாம் முஜத்தின் அல்பஸானி கூறுகிறார்

இந்த சமூகம் எத்தகைய உயர்வான மனிதர்களை எல்லாம் கண்டிருக்கிறது தெரியுமா ? அவர்களது தீமைய எழுதும் மலக்குகள் இருபது வருடங்களாக எதுவும் எழுதுவதற்கில்லாமல ஓய்வில் இருந்திருக்கிறர்கள்.

இத்தகைய பேணுதலான மனிதர்கள் சந்தர்ப்ப வசத்தில் ஏதாவது தவறிழைத்து விட்டல் நன்மையை எழுதும் மல்லகு தீமையை எழுதும் மலக்கிடம் சொல்வார். உடனடியாக இதை எழுதி விடாதே ! பொறு அவர் தவ்பா செய்து விடக் கூடும் என்பாராம்.

இத்தகைய ஒரு வாய்ப்பை பெற்ற மனிதர் எவ்வளவு பெரிய பாக்கியசாலி ?

அதனால் தான் ஹஸன் பஸரீ ரஹ் கூறுவார்கள்

ஒரு துளி பேணுதல், தொழுகை நோன்பின் ஆயிரம் பொதிகளை விடச் சிறந்த்து.

مثقال ذرة من الورع خير من ألف مثقال من الصوم والصلاة

சூபியாக்கள் கூறுவார்கள்

500 ஹஜ்ஜு செய்வதை விட அல்லாஹ்வின் திருப்திக்காக ஒரு பாவத்தை தவிர்த்துக் கொள்ளும் பேணுதல் சிறந்தது.

பேணுதலான் வாழ்கை  என்பது நமது வாழ்வை சிற்ப்பானதாக ஆக்கும் என்பது  மட்டுமல்ல நாம் சிக்கல்களுக்கு ஆளாகாமல் தவிர்த்டுக் கொள்ளலாம் என்பதே இன்றைய உரையின் நோக்கமாகும்.

சமீபத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஒரு திருமணம் நிச்சயதார்த்த்த்திர்கு  நின்று போனது. அது ஒரு பணக்கார குடும்பம்.

நிச்சயதார்த்த்திற்கு பிறகு பெண்ணும் மாப்பிள்ளையும் போனில் பேசும் வழக்கம் கொண்டிருந்தனர். எங்கே ஹனிமூனுக்கு போகலாம் என்று பேச்சு வந்திருக்கிறது. படித்த அந்தப் பெண் தாய்லாதிலுள்ள ஒரு இடத்தை கூறியிருக்கிறார். இந்த இடமெல்லாம் உனக்கு எப்படி தெரிந்த்து என்று மாப்பிள்ளை கேள்வி எழுப்ப சிக்கல் உருவாகி திருமணம் நின்று போனது

நிச்சயதார்த்த்திற்கு பிறகு கல்யாணம் முடிவதற்குள்ளாக நடைபெறும் பேச்சு வார்த்தைகள் வெளியே சுற்றுதல்கள் உணவுக் கூட சந்திப்புகள் என்பவை பல இடங்களிம் பெரும் பிரச்ச்னைகளை உண்டு பண்ணியிருக்கின்றன,

பெண் வீட்டுக்கார்ர்கள் எச்சரிக்கையாக அதாவது பேணுதலாக நடந்து கொண்டால் தப்பிக்கலாம். குடும்ப மானத்தை பாதுகாக்கலாம். சிக்கல்கள் ஏதும் நிகழாமல் காத்துக் கொள்ளலாம்.

அதே போல பேணுதலாக இண்டர்நெட்டை பயன்படுத்துவது பேணுதலாக பேஸ்புக் இன்ஸா கிராம் வாட்ஸப்பை பயன்படுத்துவது அல்லது இது தேவையில்லை என்றால் பேணுதலுக்காக இவற்றை பயன்படுத்தாமே இருப்பது குறிப்பாக பெண்கள் இதன் பக்கம் செல்லாமல் இருப்பது பல சிக்கல்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.

முஸ்லிம் சமூகத்தில் இக்காலத்தில் உயர் படிப்பு படிக்கும் பெண்கள் அதிகரித்திருக்கிறாகள்/ ஒரு சகோதரி கல்லூரியில் பேரசிரியராக இருக்கிறார். அவர் சாதாரண பட்டன் போன் உபயோகிக்கிறார். அவர் கூறுகிறார். நான் ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் ஒரு சில பேராவது மறைமுகமாகவாவது எனக்கு ஐ லவ்யூ சொல்லியிருப்பார்கள். நான் தேவைக்கு எனது கணவர் அல்லது மகனின் ஸ்மார்ட் போனை பயன்படுத்டிக் கொண்டிருக்கிறேன். என வாழ்வு கமபீரமாக போய்க் கொண்டிருக்கிறது.

(ஆலிம் நண்பர்கள்! பேணுதலாக நடந்தால் சிக்கலுக்குள்ளாவதை தவிர்க்கலாம் என்பதற்கு தங்களது பகுதி சார்ந்த  மேலும் சில உதாரணங்களை சேர்த்துக் கொள்ளலாம்.)

 பேணுதலான வாழ்கையை இன்று சிலர் கேலியாக பேசலாம். அதை நாம் கண்டு கொள்ளக் கூடாது.

يقول سفيان: عليك بالورع يخفف الله حسابك

  இதுவே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது.

நாளை மறுமையில் மட்டுமல்ல இந்த உலகிலும் கேள்விகணக்கு குறையும்

மதுரையில் ஒருவர் மகனது திருமணத்தை தடபுடலாக நடத்தினார். கோழி விருந்துக்கு மட்டும் 3 கோடி ரூபாய் செலவழித்தார்.

அடுத்த் நாள் ரெர்ய்டுக்கு ஆள் வத்நு விட்டார்கள்.

அதனால் தான் கூறுகிறோம்.

 சிறப்படையவும் சிக்கலை தவிர்க்கவும் பேணுதல் அவசியம்

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

 

 

 

3 comments:

  1. Anonymous5:11 PM

    மாஷா அல்லாஹ், ஹஜரத் அவர்களுக்கு ஞானத்திலும் ஆயுளிலும் அல்லாஹ் பரகத் செய்வானாக

    ReplyDelete
  2. Anonymous6:10 PM

    அரபி வாசகங்கள் தர்ஜமாவோடு அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. Anonymous6:22 PM

    இந்த தளம் உலமாக்கள் மட்டும் திறக்கும் தளமாக அமைந்தால் நன்று இவர் இன்று இதைதான் பேசபோகிறார் என்று முன்கூட்டியே அவாம்கள் படித்து விட்டு ஜுமஆ விற்கு வருகிறார்கள் என்று ஒரு ஆலிம் பகிர்ந்து கொண்டார் மறுபரிசீலனை செய்யுங்கள் துணை பொதுச்செயலாளர் அவர்களே...

    ReplyDelete