வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 17, 2022

தூர்வாருதல் கவனமாக கவனிக்க வேண்டிய பணி

 وَأَنزَلْنَا مِنْ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ(18) – المؤمنون

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சிறப்பாக பெய்து வருகிறது.

தேன்மேற்கு பருவ மழையை விட தமிழகத்திற்கு அதிக நன்மை தருவது இந்த மழையே ஆகும்.

சாதாரணமாக தமிழகத்துக்கு இந்தப்பருவத்தில்   44 சென்டி மீட்டர் பருவ மழை பொழிய வேண்டும்ஆனால்  நமது தேவை 200 செ மீ ஆகும்.

அதனால் மழையை நாம் வரவேற்க வேண்டும்.

நாம் கால நேரமில்லாமல் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதால் நமக்கு மழை இடையூறாக இருக்கிறது என்று நினைக்க கூடாது.

عائشة   رضي الله عنها- أن النبي –صلى الله عليه وسلم- كان يقول إذا رأى المطر "رحمة" رواه مسلم (899

இன்றைய நாம் வாழ்கிற சூழலில் மழையை தடுக்கும் அனைத்து காரியங்களையும் குறைவின்றி செய்கிறோம்.

 

மரங்களை அழிக்கிறோம்.

காற்றை மாசுபடுத்தி காற்று மண்டலத்தை கடுமையாக சூடாக்குகிறோம்.

 

மழை பொழிவிற்கு என்னென்ன காரணங்கள் உண்டு என்று விஞ்ஞானம் கூறுகிறதோ அந்த காரணங்கள் அனைத்தையும் நாம் சிதைத்து வருகிறொம்.

ஆனாலும் அல்லாஹ் மக்களை பாதுகாக்கும் அவனது கருணை மிக்க ஏற்பாட்டில் குறைவின்றி மழையை தந்து வருகிறான். எனவே இந்த சூழலிலும் சிறப்பாக மழை பொழிகிறதே என்று நாம் மகிழ்ச்சியடையவேண்டும்.

 வானம் அடை மழை பொழிவது அல்லாஹ்வின் பரிசே!

 وقال تعالى حكاية عن هود عليه وعلى نبينا الصلاة والسلام: "وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلا تَتَوَلَّوْا مُجْرِمِينَ" [هود:52]

 தமிழில் அடை மழை என்ற வார்த்தை மக்களை வீட்டிற்குள் அடைத்து வைக்கிற மழை என்ற அர்தத்ததிலேயே சொல்லப்பட்டது,

 அந்த அடை மழையின் போது இது நிஃமத் என்பதை உணராமல் வீட்டிற்குள் அடை பட நேர்ந்ததறகாக வருத்தப்படவும் அதீத்மாக கவலை வெளிப்படுத்திக் கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

நல்ல மழை பொழிகிற நேரம் துஆ க்கள் அங்கீகரிக்கப்படும் நேரங்களில் ஒன்று என்பது மார்க்க அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.

மழை வேண்டும் என்று அரபு நாடுகளில் தொடர்ந்து பிரார்த்தனை செய்யப்படு வருகிறது. இங்கு நாம் கேட்காமலே நமக்கு மழை கிடைத்துக் கொண்டிருக்க்கிறது.

 மழை பொழிகிற போது இது நன்மையாக அமைய வேண்டும் என்று துஆ செய்ய வேண்டும்.

 عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أُمْطِرَ قَالَ اللَّهُمَّ اجْعَلْهُ صَيِّبًا نَافِعًا

 மழையின் அருளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 மழையினால் தண்ணீர் கிடைக்கிறது .

நாம் இப்போது குடிக்கிற தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

 முன்னொரு காலத்தில் தண்ணீருக்கு காசு வாங்குவதை பாவம் என்று நினைத்தார்கள். இப்போது அந்த பரிதாபம் தான் நம் வாழ்க்கையாக இருக்கிறது.

 மழையின் அளவை மில்லி மீட்டர் என்று அழைக்கிறார்கள் .

 ஒரு மில்லி மீட்டர் மழை என்றால் ஒரு மீட்டர் அளவு கொண்ட சதுர நிலத்தில் 10 லிட்டர் மழை பொழிந்துள்ளது என்று பொருளாகும்.

  ஒரு லிட்டர் தண்ணீர் சென்னை சென்ட்ரலில் 4 ரூபாயுக்கு கிடைக்கிறதுஅப்படியானால் ஒரு சதுர அளவில் பெய்கிற மழை நமக்கு நாற்பது ரூபாய் மதிப்புடையதாகிறது.

 சென்னையின் சதுர மீட்டர் என்பது 17 கோடியே 40 இலட்சமாகும்அதனடிப்படையி சென்னையில் ஒரு எம் எம் மழை பெயதது என்றால் நூற்றி எழுபத்து நான்கு கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கிடைத்தது என்பது பொருளாகும் அதன் படி ஒரு மில்லி மீட்டர்  மழை பொழிகிற போது சென்னைக்கு கிடைக்கிற இலாபம் 6960,000,000 .  ஆறுநூற்று தொன்னூற்றூ ஆறு கோடி ரூபாய் ஆகும்.

 தமிழகத்திற்கு பொதுவாக மழைபருவத்தில் 949 மி மி பொழிகிறது. அதை தமிழகத்தின் நிலப்பரப்புடன் சேர்த்து பெருக்கிப் பார்த்தால் தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு தெரியும் .

 மாஷா  அல்லாஹ். ஒவ்வொரு மழைக்காலத்திலும் நாம் யாருக்கும் ஒரு பைசா கொடுக்காமல் இவ்வளவு தண்ணீரை பெருகிறோம்.

 மழை பெய்யும் போது ரஹ்மதுன் என்று சொல்லச்  சொன்ன பெருமானாரை எப்படி பாராட்டுவது

 மழையினால் கிடைக்கும் நல்ல தண்ணீரே இந்த அளவு மதிப்புடையது என்றால் மழையினால் கிடைக்கிற விவசாயப் பலன் மேலும் பல கோடியாகும்.

 மழை நீர் விவசாயத்தால் தமிழகத்திற்கு கிடைக்கும் பலன் ஏராளம்.  

 மழை நீரினால் மண் வளம் பெருகும். மண் வளமானதாக இல்லாவிட்டால் நமக்கான பயிர்களுக்கும் தாவரங்களுக்கும் நாம் திண்டாட வேண்டியதாகும்.  

 மழை நீரினால் பல்லுயிர்கள் வாழும். மழை வளத்தால் நீர் நிலைகள் ஊருணிகள் குளங்களில்  தேங்கி நிற்கும் நீரில் ஏராளமான மீன்கள் கிடைக்கின்றன. அதில் பஞ்சாயத்துகளுக்கு கிடைக்கும் வருமானத்தை கணக்கிட்டுப் பார்த்தால் மழையின் அருமை தெரியும்

 அதே போல மழையிருந்தால் தான் பறவைகள் வரும். பறவைகள் வாழும் இடங்கள் தான் மனிதர்கள் வசிப்பதற்கேற்ற நிலப்புகள் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 நாம் வாழும் நிலத்தை வாழ்வதற்கேற்ற நிலமாக ஆக்குவதே மழைதான் எனும் போது மழையை இறைவனின் எத்தகைய கொடையாக நாம் உணர கடமைப் பட்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

 எனவே மழையால் சில பணிகள் தாமதமாகிற போது பாதிக்கப்படைகிற போது சலித்துக் கொள்ளல் கூடாது.

 ஆனால் அதே நேரம் அடை மழை பொழிகிறபோது இது அல்லாஹ்வின் வேதனையாக ஆகிவிடக்கூடாதே என்று அச்சப்ப்ட வேண்டும், அதற்காக அல்லாஹ்வை பிரார்த்திக்க வேண்டும்.

 عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَسُبُّوا الرِّيحَ فَإِذَا رَأَيْتُمْ مَا تَكْرَهُونَ فَقُولُوا اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ  ترمذي

 أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ أَصَابَتْ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ قَامَ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ فَادْعُ اللَّهَ لَنَا أَنْ يَسْقِيَنَا قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ وَمَا فِي السَّمَاءِ قَزَعَةٌ قَالَ فَثَارَ سَحَابٌ أَمْثَالُ الْجِبَالِ ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ الْمَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ قَالَ فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ وَفِي الْغَدِ وَمِنْ بَعْدِ الْغَدِ وَالَّذِي يَلِيهِ إِلَى الْجُمُعَةِ الْأُخْرَى فَقَامَ ذَلِكَ الْأَعْرَابِيُّ أَوْ رَجُلٌ غَيْرُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تَهَدَّمَ الْبِنَاءُ وَغَرِقَ الْمَالُ فَادْعُ اللَّهَ لَنَا فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ وَقَالَ اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا قَالَ فَمَا جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنْ السَّمَاءِ إِلَّا تَفَرَّجَتْ حَتَّى صَارَتْ الْمَدِينَةُ فِي مِثْلِ الْجَوْبَةِ حَتَّى سَالَ الْوَادِي وَادِي قَنَاةَ شَهْرًا قَالَ فَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلَّا حَدَّثَ بِالْجَوْدِ  - البخاري 1033

 

 இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை சிற்ப்பாக பெய்து கொண்டிருக்கிரது. அல்லாஹ் இம்மழையை நன்மையானதாக பாதிப்புகள் அற்றதாக ஆக்குவானாக!

சென்னையில் சமீபத்தில் பெய்த மழையில் அதிக அளவில் பாதிப்பில்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.

இதற்கு முன்னால் வரை சிறு மழை என்றாலே சாலைகளில் நீர் தேங்குவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் மழை என்றாலே சென்னையில் அடுத்த சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் கண்டிப்பாக இருக்கும் என்ற சூழலே இருந்து வந்தது. ஆனால் இப்போது போர்க்கால அடிப்படையில் தூர் வாரும் பணிகள் நடை பெற்றுள்ளதாக் கடந்த காலங்களை போல பெரிய பாதிப்பில்லை. சாலைகளில் வீட்டுப்புறங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் விரைவாக வடிந்து விட்ட்தாக கூறுகிறார்கள்

இத்தகைய தூர் வாரும் பணி சென்னையில் மட்டுமல்லது தமிழகம் முழுவதிலும் நடை பெற வேண்டும்.

 கோவை மாநகரில் இப்போது எங்கு பார்த்தாலும் குளங்கள் நிரம்பி அழகாக காட்சி தருகின்றனர். ஆனால் ஒரு இருபது வருடங்களுக்கு முன் இருந்த நிலை வேறு. உக்கடம் பெரிய குளம் உட்பட அனைத்து குளங்களும் வறண்டு பாலை நிலைம் போல் காட்சியளித்தன. இந்த சூழலில் தான் உக்கடம் காவல் நிலையம் உக்கடம் பேருந்து நிலையம் உக்கட்த்தில் உள்ள பஸ் டிப்போ அதே போல உக்கட்த்தில் உள்ள மின் பகிர்வு நிலையம் ஆகியவை குளத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டன. அப்போது பலரும் பய்ந்தார்கள். எங்கே உக்கடம் பெரிய குளத்தை பட்டா போட்டு குடியிருப்புகளாக மாற்றிவிடுவார்களோ என்று, ஆனால் இறைவனின் நாட்டத்தாலும் கோவையை பூர்வீகமாக கொண்ட சில தொழில் நிறுவன்ங்களின் முயற்சியினாலும் குளங்களுக்கு நீர் வரும் பாதைகளில் தூர் வாரப்பட்டது. அதன் பயனாக இன்று கோவையின் குளங்கள் நீர் நிரம்பி வழிகின்றன. இப்போது கோவையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற அவை பெரிதும் உதவி இருக்கின்றன.

தூர் வாருதல் மூலம் நீர் நிலக்கு தண்ணீர் வருவதும் மழை நீரின் வழித்தடம் பாதிப்படையாமல் இருப்பதும் நிகழ்கிறது.

 எந்த சூழ்நிலையிலும் மழையை பொழிவிக்கிற இறைவன் அது முறையாக வழிந்தோடி  மக்களுக்கு நன்மையானதாக அமைய வதற்கான ஏறபட்டையும் சிறப்பான ஏற்பாட்டையும் செய்திருக்கிறான்.

 ஆறுகள் சிற்றாறுகள் ஓடைகள் என்ற அந்த ஏற்பாடுகள் மனித வாழ்விற்கு பல வகைகளில் பயனளிப்பவை ஆகும்.

திருக்குர் ஆனில் அல்லாஹ் மழை நீரை நானே தேக்கி வைக்கிறேன் என்று கூறுகிறான்.

وَأَنزَلْنَا مِنْ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ(18) – المؤمنون

 இவ்வசனத்திற்கு உதாரம் நைல் நதி.

.நைல் நதி எகிப்துக்கு அல்லாஹ் வழங்கிய மாபெரும் அருள். அது ஆப்ரிக்காவில் எங்கோ ஒரு இட்த்தில் உற்பத்தியாகி எகிப்துக்குள் பாய்கிறது. தண்ணீரை மட்டுமல்ல தரமான மண்ணையும் எகிப்துக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. (தப்ஸீர் இபுனு கதீர்)

 உலகிலுள்ள பல ஆறுகளின் கதையும் இதுதான்.

 அல்லாஹ்வின் நேர்த்தி மிக்க வலிமையான ஆற்றலுக்கு அடையாளம் இது.

 தண்ணீர் மென்மையனது அதே நேரத்தில் வலிமையானதும் கூட.

  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ الْأَرْضَ جَعَلَتْ تَمِيدُ فَخَلَقَ الْجِبَالَ فَعَادَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ فَعَجِبَتْ الْمَلَائِكَةُ مِنْ شِدَّةِ الْجِبَالِ قَالُوا يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْجِبَالِ قَالَ نَعَمْ الْحَدِيدُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْحَدِيدِ قَالَ نَعَمْ النَّارُ فَقَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ النَّارِ قَالَ نَعَمْ الْمَاءُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْمَاءِ قَالَ نَعَمْ الرِّيحُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الرِّيحِ قَالَ نَعَمْ ابْنُ آدَمَ تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ

 அதனால்மேட்டிலிருப்பவர் கணுக்கால் அளவு தண்ணீரை ம்ட்டுமே தடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் வ்ழிந்தோட இடம் தரவேண்டும் என பெருமானார் உத்தர்விட்டார்கள். தண்ணீரின் ஓட்ட்த்தை தடுக்கிற வகையில் செயல்படக் கூடாது என்பது இஸ்லாமின் கட்டளை இது காட்டுகிறது..

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُمْنَعُ فَضْلُ الْمَاءِ لِيُمْنَعَ بِهِ الْكَلَأُ -  البخاري

 أَنَّ رَجُلًا مِنْ قُرَيْشٍ كَانَ لَهُ سَهْمٌ فِي بَنِي قُرَيْظَةَ فَخَاصَمَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَهْزُورٍ يَعْنِي السَّيْلَ الَّذِي يَقْتَسِمُونَ مَاءَهُ فَقَضَى بَيْنَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْمَاءَ إِلَى الْكَعْبَيْنِ لَا يَحْبِسُ الْأَعْلَى عَلَى الْأَسْفَلِ - ابوداوود

 

தண்ணீர் வடிந்தோட அனுமதிக்க வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பது இந்நபிமொழிகளின் கருத்தாக அமையும்.

  வடிகால் வசதி சரியாக செய்யப் படாவிடில் சிறிய மழையும் பெரிய ஆபத்தாக முடியக் கூடும். .

 மேட்டூர் அணையை கட்டிய பிரிட்டிஷ் இன்ஞினியர்கள் தமிழகத்தின் த்ஞ்சை பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை பகுதிகளுக்கு கால்வாய் வெட்டி நீர்ப்பாசனத்திற்கு வழி வகை செய்த போது ஒரு கால்வாயை நீர்ப்பாசனத்திற்கு என்றும் இன்னொரு கால்வாயை வடிகாலுக்கு என்றும் வெட்டியிருக்கிறார்.

 வடிகால்கள் சரியாயக் இல்லாவிட்டால் ஆபத்து தான். தண்ணீர் தடம் புரள்வதையும் ஊரை அழிப்பதையும் தவிர்க்க முடியாது.

 மனிதன் தண்ணீருக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் கை கட்டி நின்று புலம்பத்தான் வேண்டியது வரும்.

 வடிகால்களையும் நீர்தேக்கங்களையும் முறையாக  கவனிப்பதும் பராமரிப்பதும் மக்களின் கடமை.

 உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஓடைப் புறம் போக்கு நிலம் இருந்தால் அது உங்களுக்கு சொந்தம்ல்ல மழைக்குச் சொந்தம். அதை நீங்கள் சொந்தம் கொண்டாடினால் மழை நீர் ஒரு நாளில் உங்கள் சொந்தமாக்கிவிடும் என்ற எச்சரிக்கையை கடந்த கால்நூற்றாண்டுகளாக மக்கள் கவனிக்க தவறிவிட்டார்கள்.

பொதுவாக நில ஆக்ரமிப்பு என்பதே இஸ்லாமி வழிகாட்டுதலின் படி பெரும் குற்றமாகும். ,

 عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ أَرْوَى بِنْتَ أُوَيْسٍ ادَّعَتْ عَلَى سَعِيدِ بْنِ زَيْدٍ أَنَّهُ أَخَذَ شَيْئًا مِنْ أَرْضِهَا فَخَاصَمَتْهُ إِلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَقَالَ سَعِيدٌ أَنَا كُنْتُ آخُذُ مِنْ أَرْضِهَا شَيْئًا بَعْدَ الَّذِي سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ أَخَذَ شِبْرًا مِنْ الْأَرْضِ ظُلْمًا طُوِّقَهُ إِلَى سَبْعِ أَرَضِينَ فَقَالَ لَهُ مَرْوَانُ لَا أَسْأَلُكَ بَيِّنَةً بَعْدَ هَذَا فَقَالَ اللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَعَمِّ بَصَرَهَا وَاقْتُلْهَا فِي أَرْضِهَا قَالَ فَمَا مَاتَتْ حَتَّى ذَهَبَ بَصَرُهَا ثُمَّ بَيْنَا هِيَ تَمْشِي فِي أَرْضِهَا إِذْ وَقَعَتْ فِي حُفْرَةٍ فَمَاتَتْ

 عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ أَنَّ أَبَا سَلَمَةَ حَدَّثَهُ وَكَانَ بَيْنَهُ وَبَيْنَ قَوْمِهِ خُصُومَةٌ فِي أَرْضٍ وَأَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ ذَلِكَ لَهَا فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبْ الْأَرْضَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنْ الْأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ مسلم

 عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَعْظَمُ الْغُلُولِ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ ذِرَاعٌ مِنْ الْأَرْضِ تَجِدُونَ الرَّجُلَيْنِ جَارَيْنِ فِي الْأَرْضِ أَوْ فِي الدَّارِ فَيَقْتَطِعُ أَحَدُهُمَا مِنْ حَظِّ صَاحِبِهِ ذِرَاعًا فَإِذَا اقْتَطَعَهُ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ احمد  -

 عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحْيَا أَرْضًا مَيِّتَةً فَهِيَ لَهُ وَلَيْسَ لِعِرْقٍ ظَالِمٍ حَقٌّ قَالَ مَالِك وَالْعِرْقُ الظَّالِمُ كُلُّ مَا احْتُفِرَ أَوْ أُخِذَ أَوْ غُرِسَ بِغَيْرِ حَقٍّ  مالك

 அதிலும் பொது இடங்களை ஆக்ரமிப்பதும், தண்ணீர் ஓட்ட்த்தை தடுக்கும் வகையில் ஆக்ரமிப்புக்களில் ஈடுப்டுவதும் இன்னும் பெரிய சமூக குற்றமாக அமைந்து விடும். . மனித சமூகத்திற்கு எதிரான இயறகைகு எதிரான குற்றம் அது.

 நீர் நிலைகளில் அடைப்பை ஏற்படுத்தும் பொருட்களை கொட்டாமல் தவிர்க்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

 நாம் கட்டிடங்களை கட்டுகிறோம். அதன் கழிவுகளை பெரும்பாலும் நீர் நிலைகளிலும் ஓடை வெளியிலும் கொட்டுகிறொம்.

 நீர்வழித்தடங்கள் குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படுவதற்கான அதிகாரப்பூர்வமான இடமாக ஆகிவிட்டன.

 ஒரு ஊரில் என்றில்லை எல்லா ஊர்களிலும் இந்தக் கொடுமை நடக்கிறது.

 மழைத்த தண்ணீர் நமக்கு பயனுள்ளதாக ஆகவும் பாதுகாப்பனதாக அமையவும் நீர்வழித்தடங்களை தூர் வாரி மழைக்கான பாதை சரி செய்யப்பட வேண்டும்.

இதில் அரசின் கவனம் எந்த அளவு முக்கியமோ அதே அளவு மக்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.

 அதே போல மோட்டார்களும் ஆழ்துழை பம்ப் செட்டுகளும் வந்து விட்ட பிறகு கிணறுகள் கண்டு கொள்ளப்படாத சூழல் நிலவுகளிறதுஒவ்வொரு ஊரிலும் புகழ் பெற்ற பல கிணறு தூர்ந்து போய் கிடக்கின்றன.

 சமீப காலத்தில் தூர் வாரும் பணிகள் பல இடங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது என்றாலும் தூர் வாருதலிலும் கூட சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் . மக்களும் அரசும் அவற்றையும் கண்டு கொள்ள வேண்டும். இல்லை எனில் ஒரு நல்ல பணி அறைகுறையானதாகவும் வேறு தீமைகK ஏற்படுத்துவதாகவும் அமைந்து விட வாய்ப்புண்டு.

 சமீபத்தில் படித்த ஒரு கட்டுரை தூர் வாருதலில் நேர்கிற பாதிப்பை எடுத்துக் கூறுகிறது.

தூர் வாரும் போது நீர்வழித்தட்த்தை ஆக்ரமித்திருக்கும் பொருட்களை மட்டும் எடுக்காமல் மிஷின் கொண்டு மண் அள்ளுகிற போது நீர் நிலைகளில் காணப்படுகிற பல் வேறு நன்மையான அம்சங்களை அழித்து விடுகிறார்கள் என்ற குற்றச் சாட்டு பரவலாக கூறப்படுகிறது.

 புதர்கள் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல. வறிய நிலையிலுள்ள உள்ளூர் மக்களுக்கு அவை மூலிகையாக, கீரையாக, கிழங்காகப் பயன்படுகின்றன. அத்துடன் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும் அவை பயன்படுவதால் கிராம வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்காக இருக்கின்றன. புதர்களை நம்பிப் பூச்சிகள், புழுக்கள், தேனீக்கள், பறவைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன.

 ஆறுகளிலும் குளங்களிலும் ஓடைகளிலும் புதர்களும் நாணல்களும் முட்செடிகளும் இருப்பது அசிங்கம் என்ற மனநிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும். புல், பூண்டு, செடிகளுடன் ஓர் இடம் இருப்பது, உயிரினப் பன்மை கொண்ட தனித்துவம்மிக்க சூழல் தொகுப்பு. இவற்றை மொட்டையடிப்பதால் மண்ணரிப்பும் கூடுதலாகிறது. நீர்நிலை அழியும் வேகமும் விரைவாகிறது. இதனால் விளைவாக மண் படிந்து மேடுதட்டி விடுகிறது.

குளங்களைத் தண்ணீரைத் தேக்கும் தொட்டியாக மட்டும் பயன்படுத்தக் கூடாது. அதை ஒரு உயிரினப் பெட்டகமாகப் பார்க்க வேண்டும். என்கிறார்கள் அறிஞர்கள்.

உதாரணமாக ஒரு குளம் என்பது மீன் வளப்புக்கு உதவும் தேக்கமாக இருக்கிறது. அதே போல பறவைகளின் சரணாலயமாக இருக்கிறது. தூர் வாருகிறோம் என்ற பெயரில் குளங்களில் இருக்கிற மேடுகள் அழிக்கப்படுகிற போது அல்லது மரங்கள் சிதைக்கப்படுகிற போது பறவைகளுக்கான இடம் பறிக்கப்படுகிறது.  

தமிழகத்தில் பறைவைகளின் சரணாலயாம சிறப்பாக திகழ்வது வேடந்தாங்கள். வேடந்தாங்கலுக்கு அருகிலுள்ள கரிக்கிளி குளத்துத்தை இத்தனை கியூபிக் மீட்டர் தூர்வாரினால் இவ்வளவு தொகை என்று கணக்கு பார்த்து ஒப்பந்ததார்ரிடம் ஒப்படைத்தார்கள். அவர்  ஆழமாகத் தூர்வாரியதால், அங்கு பறவைகள் வரத்து சரிந்து போனது.

எனவே மழை நீர் நிர்வாகம் என்பதும் தூர் வாருதல் என்பதும் இது குறித்து ஆழ்ந்த அனுபவமுள்ள ஊர் மக்களை முன் வைத்து செய்யப்பட வேண்டும். தூர் வாருதலை வெறுமனே மண்ணை அள்ளுதல் என்று மட்டும் செயல்படுத்தி விடக் கூடாது என்கிறார்கள்/

இந்த விவகாரத்தை அரசு மட்டுமல்ல தனி மனிதர்களும் கவனத்தில் கொள்வது நன்மையை தரும்.

 அல்லாஹ் இந்த் பருவ மழைய நமக்கு நன்மையானதாகும் பாதுகாப்பானதாகவும் ஆக்கியருள்வானாகபெரு மழையின் வழித்தடத்தில் இடையூறுகளை ஏற்படுத்தி இயற்கைக்கு எதிராக செயல்படாமல் எல்லா வகையிலும் நம்மை பாதுகாத்தருள்வானாக!

No comments:

Post a Comment