இஸ்லாம்
ஒரு மானுட மார்க்கம்.
ஆகவே
இஸ்லாம் விளையாட்டை ஆதரிக்கிறது.
உடல்
ஆரோக்கியத்திற்கும்
புத்தணர்ச்சிக்கும்
அது அவசியம்
களிப்படையுங்கள் விளையாடுங்கள் உங்களது
மார்க்கம் கடினமானது என்று தோற்றமளிப்பதை நான் வெறுக்கிறேன் என்றார்கள் நபிகள் நாயகம்
ويقول - صلى الله عليه وسلم
-: ((الْهَوا
والْعَبُوا؛ فإني أكرهُ أن أرى في دينِكم غلظةً))؛ (رواه البيهقي).
இதற்கான இன்னொரு காரணத்தை அலி ரலி விளக்குகிறார்.
மனம் கடினப்படும் எனில் அது குருடாகிவிடும்.
يقول عليٍّ - رضي الله عنه -: "روِّحوا عن
القلوبِ ساعةً بعد ساعةٍ؛ فإن القلبَ إذا كَرِه عَمِي".
இப்னு அப்பாஸ் ரலி தனது வகுப்புகளுக்கு நடுவே நகைச்சுவையான பேச்சுக்களையும் ரசிக்கத்தக்க கவிதைகளையும் கேட்பார்கள் உடல் களைப்படைவது போல மனமும் களைப்படைகிறது என்பார்கள்.
ولابن عباس - رضي الله عنه - تفسير عملي لحديث رسول
الله - صلى الله عليه وسلم - ومن خلال ممارستِه التعليمَ اكتشف هذه الظاهرة
النفسيَّة؛ فقال - في وصفها وعلاجها -: "احمضوا (أي: مِيلوا إلى المُفَاكَهة،
والأخذ في مُلَح الكلام والخطابات) وهاتوا من أشعارِكم؛ فإن النفس تَمَلُّ كما
تملُّ الأبدان".
விளையாட வாய்ப்பளிக்கப்படாத போது புத்தி கூர்மை கெடும் என்கிறார் இமாம் கஸ்ஸாலி rah. அது மட்டுமல்ல.
படிப்பை விட்டு விலக வேறு வழி தேடுவார்கள் என்றும் கூறுகிறார்
لإمام الغزالي في الأحياء فقال: "وينبغي له بعد الفراغ من
المكتب (كتاب تحفيظ القرآن) أن يلعب لعباً جميلا يستفرغ إليه تعب الكتاب، بحيث لا
يتعب في اللعب، فإن منع الصبي من اللعب وإرهاقه بالتعليم دائماً يميت القلب، ويهبط
ذكاءه، وينغص العيش عليه حتى يطلب الحيلة في الخلاص منه رأساً"
பேரக்குழந்தையின் விளையாட்டை ஊக்கப்படுத்திய பெருமானார் (ஸல்)
روى الطبراني عن جابر رضي الله عنه قال: كنا مع رسول
الله صلى الله عليه وسلم فدعينا إلى طعام، فإذا الحسين يلعب في الطريق مع صبيان
فأسرع النبي صلى الله عليه وسلم أمام القوم ثم بسط يده فجعل يفر ههنا وههنا
فيضاحكه رسول الله صلى الله عليه وسلم حتى أخذه فجعل إحدى يديه في ذقنه والأخرى
بين رأسه وأذنيه، ثم اعتنقه فقبله.
உமர் ரலியை கண்டு
சிறுவர்கள் ஒட தைரியமாக
நின்ற அப்துல்லாஹ் பின்
சுபைர் ரலி
وقصة عبد الله بن الزبير حينما مر عليه عمر وهو يلعب مع
الغلمان، ففروا جميعاً خوفاً من عمر إلا ابن الزبير فسأله عمر لم لم تفر فقال: ما
كانت الطريق ضيقة فأوسع لك، ولست مذنبا فأخاف منك.
உமர் ரலி யின் அறிவுறுத்தல்
روى عن عمر بن الخطاب في قولته المشهورة (علموا أولادكم السباحة
والرماية وركوب الخيل).
பெண்களும் விளையாட்டில் ஈடுபட அனுமதி உண்டு
فقد روى البخاري ومسلم عن عائشة رضي الله عنها قالت: [كنت ألعب
بالبنات عند رسول الله صلى الله عليه وسلم – وكانت تأتيني صواحبي، فينقمعن من رسول
الله صلى الله عليه وسلم، وكان يسربهن إلى فيلعبن معي](ينقمعن: أي يستترن)
போட்டிகளில் ஈடுபட பெருமானார் ஊக்கமளித்தார்கள்
ففي مسند أحمد عن عبد الله بن الحارث رضي الله عليه عنه قال: [كان رسول
الله صلى الله عليه وسلم يصف عبد الله وعبيد الله وكثير بني العباس رضي الله عنهم
ثم يقول : من سبق فله كذا وكذا... قال فيسبقون إليه، فيقعون على ظهره وصدره،
ويقبلهم ويلتزمهم].
பெருமானார் *ஸ்ல)
அவர்கள் ஒட்டகங்களுக்கு இடையேயும் குதிரைகளுக்கு இடையேயும் போட்டி நடத்தினார்கள் என்று வரலாறு கூறுகிறது.
மெலிந்த ஒட்டகைகளுக்கு அதிக தூரம் மெலியாத ஒட்டகைகளுக்கு குறைந்த தூரம்
وعن ابن عمر أن الرسول سابق بين الخيل التي أُضْمرت
من “الخفياء”، وكان غايتها ثنية الوداع، وسابق بين الخيل التي لم تضمر من الثنية
إلى مسجد زريق
குதிரை பந்தையம்
عن ابن عمر «أن النبي -صلى الله عليه وسلم-
سَبَّقَ بين الخيل، وفَضَّلَ القُرَّحَ في الغاية».
5 வயதுக்கு மேற்பட்ட திடகாத்திரமான
குதிரைகளுக்கு அதிக தூரத்தை நிர்ணயிப்பார்கள் பெருமானார்.
விளையாட்டுக்களை காண்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அதுவும் மனதுக்கு இதமளிக்க
கூடியது என்பதை மார்க்கம் ஏற்கிறது.
عن عروة بن الزبير قال قالت عائشة والله
لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يقوم على باب حجرتي والحبشة يلعبون بحرابهم في مسجد رسول الله صلى الله عليه وسلم يسترني بردائه لكي أنظر إلى
لعبهم ثم يقوم من أجلي حتى أكون أنا التي أنصرف فاقدروا قدر الجارية
الحديثة السن حريصة على اللهو
பயனுள்ள
விளையாட்டுக்கள் பள்ளிவாசல் வளாகத்திலேயே நடைபெறுவதை பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்
என்பதை இது காட்டு கிறது.
சிங்கப்பூர்
நாட்டிலும் கால்பந்தாட்ட மோகம் கொண்ட இளைஞர்கள் அதிகம். அவர்கள் நண்பர்களோடு சேர்ந்து
பெரிய திரையில் கால்பந்தாட்டத்தை காண்பதற்காக
வெளியே செல்லும் போது பெரும்பாலும் அவர்கள் பப்புகளுக்கும் ஸ்டார் ஹோட்டல்களுக்கும்
செல்லும் சூழ் நிலை ஏற்படுகிறது. அந்த சூழலில் அவர்கள் மது வருந்த நேர்கிறது. இதை தடுப்பதற்காக சிங்கப்பூரில்
உள்ள புதிய தலை முறை பள்ளிவாசல்களிலேயே பெரிய திரை வைத்து கால்பந்து போட்டிகளை ஒலி
பரப்பினார்கள். தொழுகை நேரத்தில் தொழுகை. விளையாட்டு நேரத்தில் விளையாட்டு. அதே நேரத்தில்
இளைய தலைமை வழி தவறிச் சென்றுவிடாமல் இருக்கவும் ஒரு சிறந்த ஏற்பாடு என்று அங்குள்ள
வர்கள் திட்டமிட்ட்தற்கு இந்த் ஹதீஸ் காரணமாக இருந்தது.
விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்விகள் சகஜம்.
فعن أنس بن مالك قال: كانت ناقة الرسول ـ صلى
الله عليه وسلم ـ تُسمى الغضباء، فكانت لا تُسبق ( لسرعتها )، فجاء أعرابيٌّ على
قَعود له فسابقها فسبقها، فاشتد ذلك على المسلمين، فلمَّا رأى الرسول ـ صلى الله
عليه وسلم ـ ما في وجوههم قالوا: يا رسول الله سُبقت العضباء. فقال: حقٌّ على الله
ـ عز وجل ـ أن لا يرفع شيئًا من الدنيا إلا وضعه.
விளையாட்டுக்களில் தேவையற்ற சிறு கவலையை கூட பெருமானார் (ஸல்) அவர்கள் ஏற்கவில்லை எனும் போது ஆக்ரோஷப்படுவது, தற்கொலை செய்து கொள்வது அல்லது எல்லை கடந்து செயல்படுவது எதுவும் இஸ்லாமில் ஏற்புடையது அல்ல.
சூதாட்டம் கூடாது
போட்டிகளில் பரிசுகளை வழங்க அனுமதி உண்டு, ஆனால் அப்பரிசுகள் போட்டியாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுவதாக இருக்க கூடாது.அதாவது 10 போட்டியாளர்களிடமிருந்து
வசூலித்து ஒருவருக்கு கொடுப்பது என்பது போல இருக்க கூடாது. அது சூதாட்டமாகிவிடும்.
حديث لابن عمر قال: سبَّقَ (بتشديد الباء) النبي
ـ صلى الله عليه وسلم ـ بين الخيل، وأعطى السابق.
ولكن الفقهاء اشترطوا أن تكون المكافأة من غير
المتسابقين، كأن يقول الوالي أو غيره من الناس: مَن سبق فله كذا من بيت المال، أو
من بيتي لمَا في ذلك من فضيلة التحريض على المسابقة والتقوى وكذلك يجوز أن يكون من
أحدهما فيقول: إن سبقتني فلك كذا .. وأما من الطرفين فلا
விளையாடலாம், போட்டிகள் நடத்தலாம், பரிசுகள் வழங்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கிற அதே நேரத்தில் விளையாட்டுக்கள் வெறியாகி மனிதர்களின் அடிப்படை
பணிகளை பாதித்து விடக் கூடாது. அது வெறுமனே நேரத்தையும் ஆரோக்கியத்தையும் வீணடிப்பதாகவும்
அமைந்து விடக் கூடாது எனவும் விளையாட்டுக்களில் இன வாதம் போன்ற சண்டைகள் எதுவும் தலை
தூக்க கூடாது எனவும் முக்கியமாக எச்சரிக்கிறது.
இப்போது கத்தாரில் பிபா உலக கோப்பை கால பந்து போட்டி நடை பெற்று வருகிறது.
அதில் முதல் ஆட்ட்த்தில் பல முறை உலக கோப்பையை வென்ற அர்ஜெண்டீன அணியை சவூதி
அரேபியா வெற்றி பெற்றது. அது ஒரு பெரும் செய்தியாக இப்போது உலகம் முழுவதும் வலம் வருகிறது.
ஒரு அதிர்ச்சியளிக்கிற உண்மை என்ன தெரியுமா ?
சவூதி அரேபியாவின் மூத்த முப்தியான பின் பாஸ் அவர்கள் கால்பந்தாட்டை ஹராம் என்று
ஒரு கட்ட்த்தில் பத்வா வழங்கினார்.
காரணம் சவூதி மற்றும் அரபு நாடுகளின் சிறுவர்களும் இளைஞர்களும் கால்பந்தாட்டத்தின்
மீது ஒரு விளையாட்டு என்பதை தாண்டி வெறி கொண்டு அலைகிறார்கள். மருத்துவர்கள் கூட நோயாளிகளை
பார்ப்பதை விட்டு விட்டு கால்பந்து விளையாட்டை காணச் சென்று விடுகிறார்கள்.
அதே போல கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் விளையாட்டுக்கள் எந்த ஒரு பயனுமற்ற நாசகர
விளையாட்டுக்களாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிற அறிஞர்கள் அவைகளும் ஹராம் தான் என்கிறார்கள்.
இத்தகைய விளையாட்டுக்கள்
·
கற்பனையானவை. அவை விளையாட்டுக்களே அல்ல.
·
உடலுக்கோ இதயத்திற்கோ பயனளிப்பவைகளும் அல்ல. இவ்விளையாட்டுக்கள் உள்ளொடுங்கி போக வைக்கின்றன.
·
தனிமைமை தேர்ந்தெடுக்க வைக்கின்றன.
·
உறவுகளை கண்டு கொள்ளாமல் செய்கின்றன.
·
உதவி மனப்பான்மையை தடுக்கின்றன.
·
எதார்த்த்தை விட்டு விலகி ஒரு தூரமான உலகில்
வாழ வைக்கின்றன இவை பல நேரங்களிலும் மன நோயுக்கு காரணமாகின்றன என்று
இவற்றை தடுப்பதற்கான காரணங்களை முஸ்லிம் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
உலகப் புகழ் பெற்ற அல் அஸ்ஹர் பல்கலை கழகம் இஸ்லாம் அனுமதிக்கிற விளையாட்டுக்கான
வித்களை பின்வருமாறு பட்டியலிட்டுள்ளது.
وأكد المركز، أن اللعب مباح في
الإسلام، دون إغفال ضوابطه، حفظًا للمرء لدينه، ونفسه، وعلاقاته الأسرية
والاجتماعية، وماله، ووقته، وسلامته، وسلامة غيره.
وضع الأزهر عدة ضوابط لخصها في:
1 – اللعب يكون نافع.
2 – لا يشغل عن صلاة أو بر الوالدين، أو يهدر الأوقات.
3 – لا يشغل عن طلب العلم وتحصيل الرزق، وأداء الحقوق للأهل والأبناء.
4 – ألا يضر اللاعب أو جيرانه أو يؤدي إلى خلافات ومنازعات، وألا تؤدي إلى
ضعف البصر وإرهاق الأعصاب.
5 – ألا يؤدي لاختلاط مُحرم أو كشف عورات.
6 – أن يخلو من إيذاء الإنسان بضرب الوجه، أو الحيوان بتحريم تعذيبه.
7 – ألا يكون في اللعب مقامرة «قُمار».
8 – ألا يشمل مخالفات عقدية كاحتوائها على أفكار إلحادية أو شعارات أديان
أخرى، أو شعائر ومعتقدات تخالف عقيدة الإسلام الصحيحة، أو يكون بها إهانة مقدسات
إسلامية.
9 – ألا تشتمل على صور عارية وممارسات شاذة، أو قول فاحش وأصوات مُحرمة.
10 – ألا تنمي العُنف لدى اللاعب، أو تحثه على الكراهية، أو ازدراء
الأديان، أو ارتكاب محرمات كشرب الخمر ولعب القمار وفعل الفواحش.
இஸ்லாமின் அடிப்படையிலான இந்த நிபந்தனைகளை மீறி நடைபெறும் விளையாட்டுக்கள் ஒரு போதும் தனி மனிதர்களுக்கோ சமூதாயத்திற்கோ நன்மை அளிப்பதாக இருக்க முடியாது.
இஸ்லாமிய மார்க்கத்தில் அக்கறையுள்ளவர்கள் இவற்றை சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ் வழங்கிய பொன்னான ஒவ்வொரு நிமிடத்துளிக்கும் நாம் மரியாதை அளிக்க வேண்டும்
என்று சிந்திக்க வேண்டும். அதில் நாம் நன்மை செய்யாவிட்டால் கூட தீமைகள் செய்து விடக்
கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
நமக்கு கிடைத்திருக்கிற ஆரோக்கியம், நமக்கு கிடைத்திருக்கிற வாய்ப்பு வசதிகள்
ஒவ்வொன்றிலும் இந்த அளவு கோலை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு அரோக்கியமான செயல் துடிப்பு மிக்க தலைமுறை விளையாட்டில் ஆர்வம் செலுத்த
வேண்டும் என்கிற அதே நேரத்தில் பொழுதை வீணடிக்கவோ கடமைகளை மறக்கவோ சச்சரவுகளுக்கும்
ஒழுக்க சீர்கேடுகளுக்கும் காரணமாகவோ விளையாட்டு காரணமாக கூடாது என்பதில் இஸ்லாம் மிக
கவனமாக இருக்கிறது.
விளையாட்டில் மற்றொரு நன்மை இருக்கிறது.
விளையாட்டு சமூக உறவுகளை வலுப்படுத்தும்.
விளையாட்டுக்களின் போது மக்கள் ஜாதி மத இன ரீதியன பிளவுகளை கடந்து ஒன்று படுவார்கள்.
கத்தாரில் கால்பந்தாட்டப் போட்டியின் தொடக்க நிகழ்வு நன்றாக இருநத்து.
வெறும் ஆட்டம் பாட்டம் என்று மட்டுமில்லாமல் சில செய்திகளை அது உலகிற்கு கூறியது. அதில்
மிகவும் ஹைலைட்டான செய்தி. திறப்பு விழா நிகழ்வில் அரங்கில் முதலில் தோன்றியவர் அரை
மனிதரான் கானிம் அல் முப்தாஹ் غانم_المفتاح அவரை தான் கத்தான் அரசு இந்தப் போட்டியின் தூதுவராக தேர்ந்தெடுத்திருந்தது.
இப்போது அது கத்தாரின் பெரு மதிப்புக்கு காரணமாகி இருக்கிறது.
உலகமே விழிகளை திறந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த பிரம்மாணட
மேடையில் வெள்ளை ஆடை அணிந்து அந்த குள்ளமான மனிதர் நடந்து வந்த போது உலகம் அமைதியில் உறைந்து
போயிருந்தது.
அவர் மனித குலத்தின் நம்பிக்கையின் ஒரு பெரும் அடையாளம்.
கானிம் அல் முப்தாஹ் 2002 ம் ஆண்டு கத்தாரில் பிறந்தார். இரட்டை குழந்தைகளில் ஒருவரான அவர் பிறக்கும் போதே caudal retraction என்ற நோயின்
பாதிப்புக்கு ஆளாகியிருந்தார். அதாவது இடுப்புக்கு கீழ் உள்ள எலும்புகளில் வளர்ச்சி இருக்கவில்லை. உலகில் பிறக்கிற 25 ஆயிரம்
குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
அவரது தாயார் அவரை ஆரம்ப பள்ளியில் சேர்க்க பெரும்பாடு பட்டார். பல கல்வி
நிறுவனங்களும் மறுத்துவிட்டன. இறுதியில் ஒரு பள்ளிக் கூட்த்தில் அவருக்கு இடம் கிடைத்தது. இன்று கானிமுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பலரும்
போட்டி போடுகிறார்கள். ஆனால் அவரது பள்ளித் தோழர்கள் அவருடன் விளையாட வெட்கப்பட்டனர்.
கானிமின் தாயாருடைய அலாதியான மன உறுதியும்
தந்தையின் பெருமைமையும் அவரது இன்றைய வெற்றிக்கு பெரிதும் காரணம் என்கிறார்கள். சிறப்பு
குழந்தைகளை வளர்க்கிற ஒவ்வொரு பெற்றோருக்கும் இது பெரும் ஊக்கம் தரும் செய்தி.
அதற்கடுத்தாக கானிமின் நம்பிக்கை
கானிம் கூறுகிறார்.
முதலில் என்னை நான் ஏற்றுக் கொண்டேன்.
இதை நான் மாற்ற முடியாது. எனது உடலை நான் போதுமானது என அங்கீகரித்துக் கொண்டேன்.
எனது தோற்றம் நன்றாகவே இருக்கிறது என தீர்மாணித்துக் கொண்டேன் என்கிறார் .
Ghanim said in one of the videos, “Since I was
young, I learned to reconcile with myself, and with things that I cannot
change, so I reconciled with my body, I reconciled with my appearance.”
மாற்றிக் கொள்ள முடியாத எந்த சோதனைக்குள்ளானவருக்கும் கானிமின்
வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை.
20 வயதான கானிம் இப்போது பல்கலைகழக மாணவர். அதே நேரத்தில் தனது
கடுமையான உழைப்பால் Gharissa Ice Cream” என்ற ஐஸ்
கிரீம் கம்பெனியின் உரிமையாளர். காத்தரில் 6 கிளை நிறுவன்ங்களையும் 60 ஊழியர்களையும்
கொண்டு அது செயல்படுகிறது. ஆக கானிம் ஒரு இளம் தொழிலதிபர்.
அது மட்டுமல்ல. அவர் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதியுள்ளார்.
அந்த நூல்கள் அவரை போன்ற பலருக்கு பெரும் ஊக்கம் அளித்தவை.
அவர் தனது குடும்பத்தினரின் உதவியோடு Al-Ghanem
Foundation என்ற அற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் நடக்க இயலாதவர்களுக்கு
இலவச வீல் சேர்களை வழங்கி வருகிறது.
உலகிற்கே வீல் சேர்களை வழங்கினாலும் கானிம் முடிந்தவரை
வீல் சேரில் பயனிப்பதை தவிர்க்கிறார். கைகளை ஊன்றியே வெகு வேகமாக நடக்கிறார். அவருக்கு
உம்ரா செய்ய வாய்ப்புக் கிடைத்த போது வீல் சேரின் துணை இன்றி அவர் உம்ரா செய்தார்.
அது அப்போது ஃகல்ப் நியூஸ் உபட பல செய்தி நிறுவன்ங்களின் வழி யே மிகவும் பிரபலமடைந்தது.
இன்னொன்றையும் கவனியுங்கள். கானிம் கைகளைப் பயன்படுத்தி
சரளமாக புட்பால் விளையாடுகிறார்.
புட்பாலுக்கு அப்பால் கடலில் 200 மீட்டர் வரை நீச்சலடித்திருக்கிறார்.
ஒரு உலக கோப்பை போட்டியின்
முதல் நிகழ்வில் அவரை அவரது தோற்றம் கொண்டு வந்து நிறுத்தவில்லை. அவரது நம்பிக்கை எதர்தத்த்தை
ஏற்றுக் கொண்டு துணிச்சலோடு வாழப்பழகி அதில் எதிப்பட்ட சவால்களில் அவர் அடைந்த வெற்றியே அவரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
ஒரு விளையாட்டுப் போட்டியின் தொடக்கத்தில் இந்த நம்பிக்கையை தவிர
வேறென்ன வேண்டும்.
கத்தார் நாடு ஒரு விளையாட்டுப் போட்டியின் வழியே உலகிற்கு ஒரு
நம்பிக்கையின் எடுத்துக்காட்டை வழங்கியிருக்கிறது.
அமரிக்காவின் பிரபல பாடகி ஷகீரா இப்போட்டியில் கலது கொள்ள வில்ல
என்ற ஒரு குறையும் தெரியாமல் போய்விட்டது.
பிபிசி தொலக்காட்சி கத்தாரின் தொடக்க நிகழ்ச்சியை ஒளிபரப்ப வில்லை.
அதனால் கத்தாரோ கானிமோ பிரபல மடையாமல் இல்லை/
இன்று கத்தாரும் கானிமும் தா பேசுபொருளாக இருக்கிறார்கள்.
என்ன போட்டி என்பதை விட எங்கு நடக்கிறது எப்படி நடக்கிறது என்பதே
பிரதானமாக பேசப்படுகிறது.
அரசியல் மற்றும் மதக் காழ்ப்புணர்ச்சியால் பலர் கத்தாரின் தொடக்க
நிகழ்ச்சியை புறக்கணித்தார்கள். அதற்கு மிகவும் அற்பத்தனமான காரணங்களை கூறினார்கள்.
அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி பிபிசியும்
அமெரிக்க பாடகி ஷகீராவும் தொடக்க நிகழ்ச்சியை புறக்கணித்தார்கள்.
ஒரு கறுப்பர் இனத்தவரை முழங்காலில் அமுக்கி சுட்டுக் கொன்ற நிகழ்வு
கத்தாரில் நடை பெறவில்லை. அமெரிக்காவில் நடை பெற்றது. இவர்களா நியாயம் பேசுவது என்று
சமூக ஊடகங்கள் அவர்களை காரி உமிழ்கின்றன.
இங்கிலாந்து பாகிஸ்தானோடு கிரிக்கெட் விளையாடும் போது பிபிசிக்கு
வராத கோபம் கத்தாரிடம் மட்டும் ஏன் என்று கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்து விட்டார்கள்.
கத்தாரின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கில் தொடக்க நிகழ்வில்
ஜாகிர் நாயக் பேச இருக்கிறார் என்ற பொய்யான செய்தியை பரப்பினார்கள். முட்டாள்கள். இஸ்லாமை
சொலது எனறால் அவர்களுக்கு ஜாகிர் நாயக் எதற்கு ?
அவர்களிடமே ஆட்கள் இல்லையா என்று யோசிக்க வில்லை.
இந்தியாவிலிருந்த சில கருத்துக் குருடர்கள் இதை வைத்து அவர்களுக்கு
வழக்கமான இழிவான அரசியலை செய்தார்கள். மத்திய அரசு அந்நிய உறவுகளை பாதிக்கிற வகையில்
இவ்வாறு கருத்துப் பேசியவர்களை கைது செய்யவில்லை. கண்டிக்கவும் இல்லை.
ஆனால் கத்தரின் நடவடிக்கை பக்குவமானதாக இருந்த்து. ஒரு உலகப் போட்டி
நடத்துகிறோம் என்பதற்காக தங்களது மத அடையாளத்தை அவர்கள் ஒரே அடியாக விட்டுக் கொடுத்து
விடவில்லை. பிஸ்மில்லாஹ் சொல்லி விளையாட்டை கத்தாரின் மன்னர் ஷேக் தமீன் பின் ஹமத்
ஆலு தானி தொடங்கி வைத்தார்.
முதல் நிகழ்வில் தொடக்கமாக அமெரிக்கரான மோர்கன் பிரீமேன் கத்தாரின் புகழ் பெற்ற இளைஞரான கானிம் அல் முபாத் திடம் “வேறுபாடுகளை கடந்து மக்கள் ஒன்றினைவது பற்றி ஒரு கேள்வி எழுப்ப கானிம் அல் முப்தாஹ் திருக்குர் ஆனின் அல்ஹுஜ்ராத் அத்தியாயத்தின் 28 வசனத்தை ஓதிக் காட்டி விளக்கம் சொன்னார்.
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ
ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ
أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
மனிதர்கள் பல பிரிவினராக இருப்பது ஒருவரை ஒரு அறிந்து மதித்துக் கொள்வதற்காகவே என்ற அற்புதமான திருக்குர் ஆனின் சிந்தனையை அவர் வெளிப்படுத்தினர்ல் உலகிற்கு அன்பை உணர்த்தவே இப்போட்டிகள் நடைபெறுவதாக கூறினார்.
உலகக் கோப்பை கால்பந்தாட்டப்பட்ட போட்டி வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடை
பெற்றது இது வே முதல் முறையாகும்.
விளையாட்டு என்பதை மதுவோடும் கேளிக்கையோடும் ஆபசத்தோடும் இணைத்து வைத்திருந்த மேற்குலக நடவடிக்கை
ஓரங்கட்டி அப்படியே நடப்பதையே வேதவாக்கு போல சித்தரித்த ஊடக அவலங்களை ஒதுக்கி தள்ளி
மானுடத்தின் மரியாதையை போதிக்கிற ஒரு மதிப்பான
நிகழ்சியை கத்தர் நடத்தியிருக்கிறது.
மேற்கத்திய ஊடகங்கள் பலதும் தன்பாலின உறவினர்கள் வெளிப்படையாக
நடந்து கொள்ள அனுமதிக்க வில்லை என்று குறை கூறினார்கள். பெண்கள் முழங்கால் அளவுக்கு
மறைத்திருக்கிற ஆடை அணிய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதை சிலர் குறை கூறினார்கள்.
மைதானங்களுக்கு அருகில் மது அருந்த தடை விதித்திருப்பதை சில குறை கூறினார்கள்.
இத்தகைய அனைத்து குற்றச் சாட்டுகளுக்கும் கத்தாரின் ஆட்சியாளர்கள்
ஒற்றை வரியில் பதில் சொன்னது மிகவும் சிறப்பானது.
இந்த 28 நாட்களுக்காக நாங்கள் எங்கள் மதத்தை மாற்றிக் கொள்ள முடியாது.
அந்த வார்த்தையும் இப்போது புகழ் பெற்றதாகிவிட்டது.
Abdullah
Al Nasari, Head of Security at the 2022 World Cup in Qatar: டிவிட்டரில் கூறினார்.
"If
you want to express your views on the LGBT cause, do so in a society where it
will be accepted. Do not come and insult an entire society. We will not change
the religion for the 28 days."
முஸ்லிம் உலகை குறி வைத்து மேற்குலம் இழிவுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அரபு முஸ்லிம் நாடான கத்தார் பல சமரங்களுக்கு இடம் கொடுத்தாலும் கூட சில அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல் சமூக ஒருமைப்பாடு, அன்பு பரிமாற்றம் ஆகிய விளையாட்டு நியதியை காப்பாற்றிருப்பது பாராட்டிற்குரியது.
பெருத்த பொருட்
செலவில் நடைபெறுகிற இப்போட்டிகளின் மூலம் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்படும்
வெறுப்புணர்விலிருந்து உலகம் விடுபட்டடும் அல்லாஹ் இதை ஒரு காரணமாக்கி வைக்கட்டும்
என்று நாம் பிரார்த்திக்கிறோம். ஏனெனில் முஸ்லிம்களின் பகுதிக்குள் நுழைந்த போது தான்
ஐரோப்பிய உலகம் நாகரீகம் என்றால் என்ன என்று கற்றுக் கொண்ட்து என்று வரலாறு கூறுகிறது.
முஸ்லிம் சமுதாயம்
ஆரோக்கியமான விளையாட்டுக்களில் கவனம் செலுத்தவும் நம்பிக்கையோடு வாழவும், விளையாட்டுக்களில் வெறி கொண்டு வாழ்வின் அடிப்படை
அம்சங்களை மறந்து விடாமல் இருக்கவும் இந்த போட்டியை ஒரு காரணமாக அமைத்துக் கொள்வது
நல்லது.
அல்லாஹ் கிருபை
செய்வானாக!
அல்ஹம்துலில்லாஹ்...
ReplyDeleteதங்களது தகவல்கள் காலத்திற்கு ஏற்றது!
மிகவும் அருமை...பாரகல்லாஹ்.
ReplyDeleteஹஜ்ரத் தங்களுடைய பதிவு ஆக்கப்பூர்வமானது அறிவுப்பூர்வமானது. பாரக்கல்லாஹ் அல்லாஹ் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் தந்தருள்வானாக
ReplyDelete