وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ
خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ
وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ (216)
இஸ்லாம் ஒரு அற்புதமான வாழ்க்கை நடைமுறையை கற்பிக்கிறது.
எதையும்
அளவோடு நேசிக்கனும் அளவோடு வெறுக்கனும்.
ஒன்றை
நேசித்தால் உளமாற நேசிக்கனும் வெறுத்தால் உளமாற வெறுக்கனும் என்பதற்கு இது எதிராணது
அல்ல. விருப்பிலும் வெறுப்பிலும் எல்லை கடந்து சென்று விடக்கூடாது என்பதே இதன் பொருளாகும்.
சிலர்
ஒன்றை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும் எல்லை மீறிச் சென்றுவிடுவர், அதாவது உண்மைக்கு எதிராக சென்று விடுகிறார்கள்
கத்திரிக்காய்
பிடிக்காது என்றால் அதை கண்ணால் பார்ப்பதை கூட விரும்பமாட்டார்கள். கதிரிக்காய் உங்களுக்கு
பிடிக்காது என்றால் சரி. அதில் நன்மையே இல்லை என்பது போல் நடந்து கொண்டால் அது முறையில்லையே. அதுவே எல்லை மீறலாகும்
அசைவம்
பிடிக்காத ஒரு ஆசிரியர் பள்ளிக்கூட்த்தில் மாணவர்களிடம் “இரத்தமும் சாணமும் கலந்து
கிடக்கிற இறைச்சியை எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ என்று முகத்தை எட்டு கோணலாக்கிக்
கொண்டு சொன்னார்.
விவரமான
ஒரு மாணவன் எழுந்து< ஐயா நாங்கள் சாணத்தை தனியே எடுத்து கீரைச் செடிக்கு போட்டு
விடுவோம். இறைச்சியை சுத்தமாக்கிய பிறகு சாப்பிடுவோம். அந்த சாணத்தில் விளைந்த கீரையை
தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றான்.
விருப்பும் வெறுப்பும்
எல்லை மீறுகிற போது அமைதி கெடும்.
அப்துல்லாஹ்
பின் சலாம் (ரலி) யூதராக இருந்து இஸ்லாமை தழுவியவர், ஒரு விருந்தின் போது ஒட்டக கறி
பரிமாரப்பட்ட்து. அப்போது அவரது முகம் வெறுப்பால்
சுருங்கியது. அல்லாஹ் கூறினான்.
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة
இது
ஒரு முக்கியமான தத்துவத்தை தருகிறது.
ஒரு
சமூக அமைப்பிற்குள் முழுமையாக இணைந்து விடும் போது நமது தனிப்பட்ட விருப்பு அல்லது
வெறுப்பை பெரிதாக வெளிப்படுத்தக் கூடாது.
சில்ம்
என்ற வார்த்தை இஸ்லாம் என்ற பொருள்ள சுட்டி நிற்கிறது என்றாலும், அமைதி என்றும் அதற்கு
ஒரு பொருள் உண்டும்.
அதன்படி
பார்க்கிற போது விருப்பு வெறுப்பை பொது வெளியில் ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்
பொது சமூகத்தில் அமைதி நிலவும் என்ற கருத்தை அது உணர்த்துகிறது.
ஒரு
விருந்தில் கலந்து கொள்கிறீர்கள். அங்கே உங்களுக்கு பிடிக்காத ஒன்று பரிமாறப்படுகிற
போது “இதை எல்லாம் மனுஷன் சாப்பிடுவானா” என்று நீங்கள் கோபமாக கேட்பீர்களானால் சண்டைக்கு
சொல்லவும் வேண்டுமா ?
விருப்பு
வெறுப்பின் போது கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம்
இன்று
நீங்கள் வெறுப்பது நாளை எப்படி ஆகும் என்று சொல்ல முடியாது.
أحبب حبيبك هونا ما عسى أن يكون بغيضك يوما ما،
وأبغض بغيضك هونا ما عسى أن يكون حبيبك يوما ما.
இஸ்லாமின் தொடக்க காலத்தில் சுஹைல் பின் அம்ரு )ரலி) என்ற சஹாபி முஸ்லிம்களுக்கு பெரும் எதிரியாக இருந்தார். வாய்ப்பேச்சில் சாமார்த்திய மிக்க அவரால் இஸ்லாத்திற்கு பெரும் தடைகள் ஏற்பட்டு வந்தன. அவரது மகன் பத்று யுத்தத்தில் கைதியாக சிக்கினார். அவரை மீட்க சுஹைல் மதீனாவிற்கு வந்தார். அப்போது உமர் ரலி அவர்கள் பெருமானார் (ஸல் அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே இவரது முன் பற்களை உடைத்து விடவா என்று அனுமதி கோரினார். பல் போனால் சொல் போய்விடும் அல்லவா ?
அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள், நான் அவரை சித்திரவதை செய்தால் அல்லாஹ் என்னை என்ன செய்வான்? என்று கேட்டு விட்டு இவர் உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பவராக மாறக் கூடும் என்றார்கள்
وقال : " يا رسول الله .. دعني أنزع ثنيّتي سهيل بن عمرو حتى لا يقوم
عليك خطيبا بعد اليوم " .. فأجابه الرسول العظيم : " كلا يا عمر .. لا أمثل بأحد، فيمثل الله بي، وان كنت نبيا
" .. ! ثم أدنى عمر منه وقال عليه السلام
: " يا عمر .. لعل سهيلا غدا يقف موقفا يسرّك
" .. !!
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியபடியே நடந்தது. சுஹைல் ரலி மக்கா வெற்றியின் போது முஸ்லிமாக மாறினார், அதன் பிறகு இஸ்லாமிற்கு மிகவும் பயனுள்ளவராக ஆனார். குறிப்பாக பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தான போது மக்கா வின் மக்கள் நிலை குலைந்து
போன போது, மக்காவின் ஆளுநர் கூட வீட்டை விட்டு வெளியே வராது உட்கார்ந்து விட்ட போது
சுஹைல் தனது பேச்சாற்றலால் மக்களுக்கு தெளிவை கொடுத்தார்.
முஹம்மது
நபி (ஸல்) அவர்கள் இந்த தத்துவத்தை மிகவும் உணர்ந்தவர்களாக அதிகம் கைகொள்பவராகவும்
இருந்தார்கள். அவர்கள் வெற்றிகரமான வாழ்வில் எந்த இடத்திலும் எந்த எதிர் இடத்திலும் கடும் வெறுப்பை அவர்கள் வெளிப்படுத்த
வில்லை.
உஹது யுத்தத்தில்
ஹம்ஸா ரலி அவர்களது உடலை கடித்துக் குதறிய ஹின்தா அம்மையாரை மக்கா வெற்றியின் போது
மன்னித்த பெருமானார் அவரது வீட்டில் கூடுபவர்களுக்கு அடைக்கலம் உண்டு என்றார்கள்.
இது போல
ஏராளமான உதாரணங்கள் உண்டு,
முஹம்மது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரும் வெற்றிக்கு இந்த குணமும் ஒரு முக்கிய காரணமாகும்.
இது நமக்கு
தருகிற பாடம
விருப்பையும்
வெறுப்பையும் அளவோடு வெளிப்படுத்துவதே வெற்றிக்கு வழிவகுக்கும்.
ஒரு வியாபாரி
பக்கத்து கடைக்கார்ரை கடுமையாக வெறுத்து அதை வெளிப்படுத்துவார் என்றால் தனது எதிரியை
தானே உருவாக்கிக் கொள்கிறார் என்று பொருள்.
இன்னொன்று
இங்கு கவனிக்கத்தக்கது.
ஒரு வியாபாரிக்கு
அவரது போட்டியாளர் மீது வெறுப்பு தோன்றுவது இயல்பு. ஆனால் அந்த வெறுப்பை அவர் வளர விடக்
கூடாது. அது அவரது மனக்கவலையைத்தான் அதிகரிக்கச் செய்யும். அது வெற்றியை முடக்கிவிடும்
அதே போல
இன்னொன்றும் இங்கு கவனிக்கத் தக்கது.
வெறுப்புணர்வு
அளவு கடந்து செல்லும் போது அறிவீனமான காரியங்களில் ஈடுபட்டு இழிவடைய நேரிடும்.
இந்தியாவில்
இந்துத்துவ சக்திகள் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை வளர்த்து அதில் அரசியல் இலாபம்
காண முயற்சி செய்கிறார்கள். முடிந்த வகையில் எல்லாம் வெறுப்பை விதைக்கிறார்கள்.
இந்தியாவின்
சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் திப்பு சுல்தான். ஏராளமான இந்துக் கோயில்களுக்கு தாரளமாக மானியங்களை
வழங்கியவர்
கோவையில்
அவினாசி ரோட்டில் தண்டு மாரியம்மன் கோயில் என்ற பிரபலமான ஒரு கோயில் இருக்கிறது. தண்டு
என்ற வார்த்தைக்கு படை தங்கியிருக்கிற இடம் என்று பொருள்.
அந்த இட்த்தில்
திப்புவின் படை தங்கியிருந்த்து. அப்போது ஒரு வீரனுக்கு சாமி வந்த்து. நான் இங்கு குடியிருக்கும்
அம்மன் என்று கூறியது. அந்த இட்த்திலிருந்து படைகளை வெளியேறுமாறு கூறிய திப்பு அங்கு
கோயில் கட்டிக்கொள்ள நிலம் அளித்தார். இதற்கான பட்டம் இப்போதும் கோயிலுனுள் உள்ளது
இது போல
எண்ணற்ற செய்திகள் திப்புவின் சமய நல்லிணக்க உணர்விற்கு சான்றாக இருக்கும் போது பொய்யாக
திப்பு இந்துக்களை கொன்றார் என்று கூறி அவர் மீது வெறுப்பை உண்டு பன்ன முயற்சிக்கிறார்கள்.
அதன் உச்சகட்டமாக அவரது பெயரை கூட பயன்படுத்த மறுக்கிறார்கள்/
கர்நாடக
மாநிலத்தின் சுற்றுலாத்தளங்களின் பட்டியலில் இப்போதெல்லாம் திப்புவின் நினைவிட்த்தையோ
அவரது வாழ்விடங்களையோ குறிப்பிடக் கூட மறுக்கிறார்கள்/
உண்மைக்கு
எதிரான இத்தகை வெறுப்புணர்வு நிச்சயம் நல்லதல்ல. இத்தகையோர் கடைசியில் அறிவீனர்களாகவே
வரலாற்றின் குப்பைத் தொட்டிகளுக்கு வீசப்படுவார்கள்/.
சமீபத்திய
ஒரு உதாரணம் இந்துத்துவ சக்திகள் தங்களது வெறுப்புணர்வு பிரச்சரத்தை பகிரங்கமாக முன்னெடுக்கும்
முயற்சியாக காஷ்மீர் பைல்ஸ் என்ற ஒரு திரைப்பட்த்தை தயாரித்தார்கள். அதில் காஷ்மீரில்
இந்து பண்டிட்கள் காஷ்மீர் முஸ்லிம்களால் கொடூரமாக கொலை செய்ய்ப்படுவதாக காட்டினார்கள்.
பல்லாயிரக்கணக்கானோ அங்கிருந்து விரட்டப்பட்ட்தாக காட்டினார்கள். திரைப்படங்கள் வழியாக முஸ்லிம்கள் மீதான் வெறுப்புணர்வை
தீ யைப் போல பரவச் செய்ய முடியும் என்று நம்பினார்கள்.
இந்த பட்த்தை
பார்க்க செல்லும் படி மக்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள் . பல மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு
இப்பட்த்தை காணச் சொல்லி விடுமுறை அளித்தார்கள். பல்வேறு சலுகைகள் அறிவிக்க்ப்பட்டு
பெரிய இலாபம் அதற்கு வழங்கப்பட்ட்து.
ஆனால் கடைசியில்
என்ன நடந்த்து.
53வது சர்வதேச திரைப்பட விழா நம் இந்தியாவின்
கோவா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி துவங்கி 28 ம் தேதி நிறைவடைந்தது. இதில் இதில் திரையிடப்பட்டன. 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்தியப் பிரிவில் 25 திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன
இந்த விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப ப்பட்த்திற்கு
விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை
இத்திரைப்பட
விழாவின் இறுதிநாள் நிகழ்வில் நடுவர் குழுவின் தலைவரும் இஸ்ரேல்
நாட்டை சார்ந்தவருமான நடாவ் லேபிட் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்பட்ட்து
கேவலமானது என்று கூறினார்.
தி காஷ்மீர் பைலஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரச்சார் தன்மை கொண்ட இப்பட்த்தை
திரையிட்ட்தற்காக எனது அதிருப்தியை தெரிவித்துக்
கொள்கிறேன் என்று கூறினார்
கவனியுங்கள்!
இந்த திரைப்பட்த்திற்காக
பிரதமர் மோடியிலிருந்து பாஜகவின் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற ஒவ்வொரு வரும் எவ்வாறு
வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டனர்,
இன்று அதன்
நிலை என்ன ?
நம்முடைய நாட்டில்
நடை பெற்ற ஒரு திரைப்பட விழாவில் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த நடுவர் குழுவின் தலைவர்
இந்த படத்தை பார்த்த்தற்காக வெட்கப்படுகிறார்.
அவரது அந்த
ஒற்றை வார்த்தையில் மத்திய அரசு பாடுபட்டு கட்டிய பொய்யான பிம்பங்கள் அனைத்தும் தவிடு
பொடியாகிவிட்ட்து.
மத்திய
அரசு தனது அதிகார பலத்தை
பய்னபடுத்தி இஸ்ரேல் நாட்டு தூதரை
வைத்து இதற்கு முட்டுக் கொடுக்க
முயற்சி செய்த்து. இயக்குனர் நடாவ் லபிட்,
தனக்கு அளிக்கப்பட்ட நடுவர் குழு தலைவர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததற்காக வெட்கப்பட வேண்டும் இஸ்ரேலிய
தூதர் கூறினார்.
அரசின் பல்வேறு
தரப்பினரும் இஸ்ரேலிய இயக்குனரை மன்னிப்புக்கேட்க நிர்பந்தித்தினார். அவர் மன்னிப்பு
கோரினார்,.
ஆனால் அது இன்னும்
பெரிய அவமானமாகி விட்டது.
இஸ்ரேலிய இயக்குனர்
கூறினார். எனக்கு பாதிக்கப்பட்ட யாருடைய
மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை அப்படி யாராவது புண்பட்டிருந்தால்
மன்னிப்புக் கோருக்றேன் . ஆனால்; இப்படம் மோசமான கருத்துக்களை பிரச்சாரம்
செய்கிறது. திரைப்பட விழாவில் திரையிட தகுதியற்றது என்ற
எனது கருத்தில் மாற்றமில்லை. இது என் தனிப்பட்ட கருத்து அல்ல. படத்தை
பார்த்த நடுவர் குழுவின் ஒட்ட மொத்த கருத்தும்
இதுதான் என்று கூறியுள்ளார்,
செருப்பை
சாக்கடையில் முக்கி அடிப்பது என்றால்
அதற்கு இதை விட வேறு
ஒரு உதாரணம் தேவையில்லை.
வெறுப்புணர்வை
அளவு கடந்து பயன்படுத்தும் போது ஒரு பெரிய அரசுக்கு கூட எவ்வளவு மோசமான அவமானம் ஏற்படக்
கூடும் என்பதற்கு தற்போதைய சாட்சி இது.
இது தனிநபர்களுக்கும்
பொருந்தும்.
அதனால் விருப்பு
வெறுப்பு என்பதை அளவோடு வைப்போம்.
அதுதான் நமது
மனதுக்கும் நல்லது. வாழ்விற்கும் நல்லது. மரியாதைக்கும் நல்லது.
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!
தங்கத்தின் தங்கமே! தங்களது முத்துக்கள் பிரகாசம்.
ReplyDeleteArumaiyaana bayan arumaiyaana pathivu
ReplyDelete