வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 08, 2022

பேரழிவுகளில் இருந்து தப்பிக்க

أَفَأَمِنَ الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَنْ يَخْسِفَ اللَّهُ بِهِمْ الأَرْضَ أَوْ يَأْتِيَهُمْ الْعَذَابُ مِنْ حَيْثُ لا يَشْعُرُونَ (45) أَوْ يَأْخُذَهُمْ فِي تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِينَ (46) أَوْ يَأْخُذَهُمْ عَلَى تَخَوُّفٍ فَإِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ (47)  النحل

( தீமைகளை இரகசியமாக செய்வோர்,  பூமி அவர்களை விழுங்காது  என்று நினைத்து பயமில்லாமல் இருக்கிறார்களா ?

 அவர்கள் உணராத வகையில் வேறு வேதனைகள் வராது  என்று நினைத்து பயமில்லாமல் இருக்கிறார்களா 

 எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிகிறது என்பதால் அவர்களுக்கு ஒன்றும் ஏற்படாது   என்று நினைத்து பயமில்லாமல் இருக்கிறார்களா 

அவர்களை திகிலூட்டி வேதனைப்படுத்தி விட முடியாது என்று நினைத்து பயமில்லாமல் இருக்கிறார்களா? )

மாண்டஸ் புயல் இன்று சென்னைக்கும் ஸ்ரீ ஹரீ கோட்டாவுக்கும் இடையே கரையை கடக்க கூடும் என்றும். அதனால் இன்று தமிழகத்தின் வட பகுதிகளில் கன மழை இருக்க கூடும் என்றும் சூறைக்காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கருணை மிக்க அல்லாஹ் இம்மழையை  நன்மையானதாக ஆக்கிவைப்பானாக! இதன் தீமைகளிலிருந்து பாதுகாப்பானாக

தமிழகத்தில் ஆண்டுக்கு சில தடவைகளில் புயல் ஏற்படுவது வாடிக்கை தான். ஆனால் சமீப காலங்களில் அந்த புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்று கணிக்க முடிவதில்லை.

2018 ம் ஆண்டு கஜா புயல் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்ட்து சாதாராணமாகத்தான் இருந்த்து. ஆனால் அதன் பாதிப்புக்களிலிருந்து இன்று வரை முழுமையாக மீள முடியவில்லை என்பது தான் எதார்த்தமாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெருங்காற்று வீசும் போதெல்லாம் இது அழிவை தந்து விடுமோ என்று அச்சப்பட்டுள்ளார்கள் என ஆயிஷா ரலி அறிவித்துள்ள நபிமொழி இயற்கையின் போக்குகள் விசயத்தில் நாம் எத்தகைய அச்சம் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

அல்லாஹ் பாதுகாப்பானாக!.

இந்த காலகட்டத்தில் தேவையற்ற பயணம் விழாக்கள் நிகழ்ழ்சிகளை தவிர்த்துக் கொண்டு உயிரையும் உடமைகளையும் பத்திரப்படுத்தி வைப்போம்.

அல்லாஹ்விட்த்தில் இஸ்திக்பார் செய்து துஆ கேட்போம். அல்லாஹ் இந்த பெரு மழைக்காலத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது பாதுகாத்து இம்மாமழையை நன்மையானதாக ஆக்குவானாக!

திருக்குர்ஆன் உலக வரலாற்றின் ஏடுகளிலிருந்து மனித குலத்திற்கு ஏற்பட்ட பேரழிவுகளை இரண்டு வகையாக பட்டியலிடுகிறது.

ஒன்று.  முந்தைய சமூகங்கல் பல முற்றிலுமாக அழிக்கப்பட்ட வரலாறுகள் கூறப்படுகிறது. . ஆது சமூது லூத் சமூகங்களை போல்/

இது மாதிரியான பேரழிவுகள் இனி நிகழாது என இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இரண்டாவது வகை அழிவு புயல் காலரா கொரோனா போன்றவை. பெரும் யுத்தங்களும் இதில் அடங்கும்

இந்த அழிவு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

 أَفَأَمِنَ الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَنْ يَخْسِفَ اللَّهُ بِهِمْ الأَرْضَ أَوْ يَأْتِيَهُمْ الْعَذَابُ مِنْ حَيْثُ لا يَشْعُرُونَ (45) أَوْ يَأْخُذَهُمْ فِي تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِينَ (46) أَوْ يَأْخُذَهُمْ عَلَى تَخَوُّفٍ فَإِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ (47)  النحل

  அல்லாஹ் இவ்வாறான அழிவுகளை ஏன் தருகிறான் என்பதற்கு இஸ்லாம் சில அக காரணிகளை கூறுகிறது.

நாம் நமது தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் இந்தக் காரணிகளை அடையளம் கொண்டு ஒதுங்கிக் கொள்வது குறைந்த பட்சம் நமது வாழ்வைய பாதுகாக்கும்.  அதிக பட்சமாக முழு மனித குலத்தையும் பாதுகாக்கும்.

 பேரழிவுகள் ஏன் எப்போது ஏற்படுகின்றன.

 சட்டம் ஒரு தலைப் பட்சமாக நடந்து கொள்ளும் போது.

 فعن عائشة رضي الله عنها قالت: إنَّ قُرَيشاً أَهَمَّهُمْ شَأنُ المرأَةِ المَخزوميَّةِ التي سَرَقَتْ، فقالوا: مَنْ يُكلّمُ فيها رسولَ الله -صلى الله عليه وسلم-؟ فقالوا: ومَنْ يَجترئُ عليه إلا أُسامَةُ بن زَيدٍ، حِبُّ رسولِ الله -صلى الله عليه وسلم-؟ فَكلَّمَهُ أُسَامَةُ، فقال رسولُ الله -صلى الله عليه وسلم-: أتَشفَعُ في حدٍّ مِنْ حُدودِ الله؟ ثم قال: إنَّما أَهلك الذين قبلكم: أنَّهمْ كانوا إذا سَرقَ فيهم الشَّريفُ تَرَكُوه، وإذا سَرَقَ فيهم الضعيف أقاموا عليه الحدّ. وَأيْمُ الله لَوْ أنَّ فاطمةَ بنْتَ محمدٍ سَرَقَت لقطعتُ يَدَهَا

நாம் நமது தனிப்பட்ட குடும்ப விவாகரங்களிலும் ஜமாத் மஹல்லா ஊர் அல்லது மற்ற சமூக விவகாரங்களில் சட்டம் நீதி விவகாரத்தில் ஒரு தலைப்பட்டமாக நடந்து கொண்டால் அது அழிவை கொண்டு வந்து விடலாம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!

 தனது பேரன்பிற்குரிய மகளை சம்பந்தப்படுத்தி பெருமானார் (ஸல்) அவர்கள் பேசியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 தமிழகத்தின் பிரபலமான காவியமான சிலப்பதிகாரம், நீதி தவறியதால் பாண்டிய மன்ன்ன் இறந்தான் எனவும் மதுரை அழிந்த்த்து எனவும் கூறுகிறது.

 பெருமானாரின் துல்லியமான சட்ட நடவடிக்கை

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: بَعَثَ رَسُولُ اللّهِ عُمَرَ عَلَى الصَّدَقَةِ. فَقِيلَ: مَنَعَ ابْنُ جَمِيلٍ وَخَالِدُ بْنُ الْوَلِيدِ وَالْعَبَّاسُ رَضِيَ اللّهِ عَنْهُمَ عَمُّ رَسُولِ اللّهِ. فَقَالَ رَسُولُ اللّهِ: «مَا يَنْقِمُ ابْنُ جَمِيلٍ إِلاَّ أَنَّهُ كَانَ فَقِيرًا فَأَغْنَاهُ اللّهُ وَأَمَّا خَالِدٌ فَإِنَّكُمْ تَظْلِمُونَ خَالِدًا. قَدِ احْتَبَسَ أَدْرَاعَهُ وَأَعْتَادَهُ فِي سَبِيلِ اللّهِ، وَأَمَّا الْعَبَّاسُ فَهِيَ عَلَيَّ. وَمِثْلُهَا مَعَهَا». ثُمَّ قَالَ: «يَا عُمَرُ أَمَا شَعَرْتَ أَنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ؟

ஹதீஸீன் கருத்து

மூன்று பேர் ஜகாத்தை கொடுக்க வில்லை என்றதும்  மூவரையும் பெருமானார் (ஸல்) உடனடியாக கோபிக்கவில்லை, ஒவ்வொருவருக்கான நியாயத்தையும் எடுத்துக் கூறுகீறார்கள்.

இப்னு ஜமீல்  {ரலி} மறுத்திருக்க கூடாது.

காலித் ரலி ஏற்கெனவே யுத்த நீதியாக கேடயங்களையும் போர்க்கருவிகளையும் வழங்கி விட்டார். அவரிடம் நீங்கள் கேட்டிருக்க கூடாது.

அப்பாஸ் ரலி எனது உறவினர் அவரிடமிருந்து ஜகாத்தை பெருவது எனது பொருப்பு என்றார்கள்.

 உறவினர்களிடமும் சட்டப்படியே நடக்க வேண்டும். உறவினர் அல்லது வேண்டப்பட்டவர் என்பதற்காக சட்டத்தை வளைப்பது அல்லாஹ்விற்கு கோபத்தை ஏற்படுத்திவிடும்.

 பேரழிவுகள் ஏன் எப்போது ஏற்படுகின்றன 

இரண்டாவது காரனம். கஞ்சத்தனம் 

 அல்லாஹ் வின் கட்டளைகளிலும் மக்களுக்கான உபகாரங்களிலும்.

 عن جابر بن عبد الله - رضي الله عنهما - أنَّ رسولَ الله - صلى الله عليه وسلم- قال: واتقوا الشُّحّ، فإنه أهلك من كان قبلكم، حملهم على أن سفكوا دِماءهم واستحلّوا محارمهم»

 ஜகாத் சதகா போன்றவற்றில் கஞ்சத்தனம் செய்து சேமித்து வைப்பது நல்லதல்ல.

 அது பல வகையான நஷடங்களுக்கும் அழிவுகளுக்கும் காரனமாகிவிடும்.

 கஞ்சத்தனம் கொண்ட மனிதர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள். அது பல மோசமான குணங்களின் பிறப்பிடமாகும்

 கஞ்சத்தனத்திலிருந்து நான்கு தீய குணங்கள் உருவாகும் என்கிறார் மாவர்தீ ரஹி

 قال الماوردي (المتوفى: 450هـ): ينشأ عن الشح من الأخلاق المذمومة أربعة أخلاق: الْحِرْصُ وَالشَّرَهُ وَسُوءُ الظَّنِّ، وَمَنْعُ الْحُقُوقِ.

 ஹிர்ஸு : இன்னும் நிறைய வேணும் என்ற எண்ணம்

ஷரஹு : கிடைத்த்தில் திருப்தி அடையாமல் இருப்பது.

 கஞ்சனிடம் அல்லாஹ் நாளைக்கானதை தருவான் என்ற தவக்குல் இருக்காது. தீர்ந்து போய்விடுமே என்ற கெட்ட எண்ணம் தான் இருக்கும்.

கல்யாணம் சொலவதற்கு வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் கூட கடன் ஏதும் கேட்டு விடுவானோ என்ற கவலையிலேயே இருப்பான்.

 கஞ்சன் தனக்கே கூட செலவு செய்ய மாட்டான். மனைவி மக்களுக்கு கூட கணக்குப் பார்ப்பான்.

பதிரிகையில் படித்த ஒரு நகைச்சுவை

 ஒரு கருமியான பணக்காரன் சாகும் தருவாயில் இருந்தார்..அப்போது தன மூத்த மகனைக் கூப்பிட்டு,''என்னைஎப்படி அடக்கம் செய்யப் போகிறாய்?'' என்று கேட்டார்..மூத்த மகன்,'சந்தனப் பேழையில் வைத்து அடக்கம் செய்வேன்,''என்றான்.இருந்த சக்தியெல்லாம் திரட்டி ஒரு அறை கொடுத்தார் தந்தை மகனுக்கு.''ஏண்டா,நான் சேர்த்து வைத்ததையெல்லாம் அநியாயமாகக் காலி செய்து விடுவாய் போலிருக்கே,''என்றவர்,அடுத்த மகனைக் கூப்பிட்டு அதே கேள்வியைக் கேட்டார்.அவன் சொன்னான்,''சாதாக் கள்ளிப் பலகையில் அடக்கம் செய்வேன்,''தந்தை கோபத்துடன்,''கள்ளிப் பெட்டியை ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்?ஒரு நாள் அடுப்பெரிக்க உதவுமே.நீயும் சரியில்லை.''என்றார்.மூன்றாம் மகன் அதே கேள்விக்குப் பதில் சொன்னான்,''அப்பா,நீ இறந்தவுடன் உன் உடல் உறுப்புக்களை ஏதாவது ஒரு டாக்டரிடம் விற்று விடுவேன்.''தந்தை மகிழ்ச்சியுடன் சொன்னார்,''சபாஷ்,நீதான் சரியானபையன்.ஆனால் ஒன்று.என்உறுப்புக்களை மேலத் தெருவில் இருக்கும் டாக்டரிடம் விற்று விடாதே.மனுஷன் உடனே பணம் தராது இழுத்தடிப்பான்

 ஒரு கஞ்சனிடம் கஞ்சன் என்று எழுதச் சொல்லியதற்கு,கருமி என்று எழுதினானாம்.ஏனென்று கேட்டதற்கு கஞ்சன் என்ற வார்த்தைக்கு நான்கு எழுத்துக்கள்;கருமி என்ற வார்த்தைக்கோ மூன்று எழுத்துக்கள் தானே இரண்டும் ஒன்று தானே அப்புறம் ஏன் ஒரு எழுத்த வேஸ்ட் பண்ணனும் என்றானாம்.

 அல்லாஹ்விற்கான கடமைகள் மக்களுக்கு செய்ய வேண்டிய அவசியமான கடமைகளை நிறைவேற்றுவதில் கஞ்சத்தனம் செய்தால் அதுவும் அழிந்து போகும். அல்லாஹ் பாதுகாப்ப்பானாக!.

 கஞ்சத்தனம் செய்து சொத்தை காப்பாற்றி விடலாம் என்று நினைத்தால் அது  அல்லாஹ்வின் விதியுடன்  போட்டி போடுவது போன்றது அத்தகையோர் தோற்றே போவார்கள் என்று ஞானிகள் சொல்வார்கள்

قال بعض الحكماء: الشح مسابقة قدر الله، ومن سابق قدر الله سُبِق ، ومغالبة لله ومن غالب الحق غُلِب ،

 கஞ்சன் பிச்ச்சக்காரனை விட மோசமானவன் . அவனுக்கவது வயிறு நிறையும். இவனுக்கு நிறையவே நிறையாது.

 وقد ذكر الإمام القرطبي في تفسيره عن بعض الحكماء أن الشح أضر من الفقر، لأن الفقير إذا وجد شبع، والشحيح إذا وجد لم يشبع أبدا .

 கஞ்சத்தனம் வேண்டாம். அழிவுகளும் வேண்டாம்.

மூன்றாவது காரணம்.   தேவையற்ற கேள்விகள்

عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: خَطَبَنَا رَسُولُ الله - صلى الله عليه وسلم - فَقَالَ: "يَا أَيُّهَا النَّاسُ! قَدْ فُرِضَ عَلَيْكُمُ الحَجَّ فَحُجُّوا". فَقَالَ رَجُلٌ: أَفِي كُلِّ عَامٍ يَا رَسُولَ الله؟! فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلاَثاً، ثُمَّ قَالَ: ذَرُونِي مَا تَرَكْتكُمْ، لَوْ قلْتُ نَعَمْ لَوَجَبَتْ وَلمَا اسْتَطَعْتُمْ، إِنَّمَا أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ كَثْرَةِ سُؤَالهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ 

இன்றைய இளம் தலைமுறை கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்காமல் அநாவசியமாக கேள்விகேட்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

 கல்யாணப் பந்தலில் சில மாப்பிள்ளைகள் கையில் மருதாணி போட்டிருப்பார்கள். அது ஹராம். தங்க பிரஸ்லெட் போட்டிருப்பார்கள். அதுவும் ஹராம். ஆடம்பரமாக ஏகப்பட்ட காரியங்கள் நடக்கும். அதை எல்லாம் விட்டுருவான்.இமாம் துஆ ஓதினால் குர் ஆனி இருக்கிறதா ஹதீசில் இருக்கிறதா என்று கேள்வி கேட்பார்கள்.

 தனக்காகத்தான் துஆ வே ஓதுகிறார்கள் என்பதை நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். அழிவு தானே வந்து விடாதா ?  

 ஒரு கலயாணத்திலே மாப்பிள்ளை யூசுப் சுலைஹாவுக்கு ஆதாரம் இருக்கா என்று கேட்டான். தூத்துக்குடி மதரஸாவின் முன்னாள் நாஜிர் நூஹ் ஹழ்ரத் பட்டென்று பதில் சொன்னார்கள். மூஸா சபூராவுக்கு ஆதரம் இருக்கா ? மூஸா சபூராவுக்கு இருக்கிற ஆதாரம் இதுக்கும் இருக்கு,.

 பொறுப்பற்ற கேள்:விகளும் அழிவுக்கு காரணமாகும் என்று பெருமானார் (ஸல் அவர்கள் கூறுவதை இன்றைய கால கட்ட்த்தில் நாம் அதிகம் கவனத்தில் வைக்க வேண்டும்.

 குர் ன் ஹதீஸ் விசயத்தில்  தகுதியும் தேவையும் அற்ற ஆய்வுகளும் கேள்விகளும் கூட இந்த வகையில் அடங்கும்.

 فعن عبد الله بن عمرو بن العاص - رضي الله عنهما -: قال: هَجَّرْتُ (أي : بكَّرْتُ) إلى رسولِ الله صلى الله عليه وسلم يوماً، فَسَمِعَ أصواتَ رجلين اختَلَفا في آيةٍ فَخَرجَ رسولُ الله صلى الله عليه وسلم يُعْرَفُ في وجهه الغَضَبُ، فقال: إنَّما هَلَكَ مَنْ كانَ قبلكم باختلافهم في الكتاب.

 நான்காவது காரணம் : மார்க்கத்தில் ஒவர் ஆக்ட்

 மிக அருமையாகவும் கவனமாகவும் கவனிக்க வேண்டிய காரனம் இது.

இன்றைய முஸ்லிம் உலகின் சரிவிற்கு இது முக்கிய காரணமாகும்.

அதாவது சிலர் தங்களை தீவிர மார்க்க பற்றாளர்களாக கருதிக் கொள்வது.

 மார்க்கத்தில் தீவிரமாக இருப்பது என்றால் ஏதாவது ஒரு விசயத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு மற்றதை விட்டு விடுவது. அல்லது ஒரு விசயத்திற்கு அதற்குரிய அளவிற்கு மேல் முக்கியத்துவம் கொடுப்பது.

 உதாரணமாக,  காலம் முழுவதும் நோன்பு வைப்பது. தொழுதுகிட்டே இருப்பது.  மக்காவில் ஹஜ்ஜின் போது சிலர் சைத்தானை கல்லெறியும் இடத்தில் சைத்தானை கோப்ப்படுவதாக காட்டிக் கொள்ள பெரிய பெரிய கற்களை வீசுவார்கள். சிலர் செருப்புக்களை கழற்றி எறிவார்கள்.

 இந்த ஹதீஸை கவனியுங்கள்  

ஹஜ்ஜத்துல் விதாவின் போது துல்ஹஜ் 10 ம் நாள் சைத்தானை கல்லெறிய பெருமானார் கற்க்களை பொருக்கி தருமாறு இப்னு அப்பாஸ் ரலி யிடம் கேட்டார்கள். அவர் பொடியான கொண்டைக் கடலை அளவிளான பொடிக் கற்களை கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பாராட்டிய பெருமானார். இப்படித்தான் கற்கள் இருக்க வேண்டும். இதை விட பெரிதாக இருக்க கூடாது. எல்லை மீறாதீர்கள் என்று மக்கலை எச்சரித்தார்கள்.

 فعن ابن عباس - رضي الله عنهما - قال: قال رسولُ الله - صلى الله عليه وسلم - غَدَاةَ العَقَبَةِ وَهُوَ عَلَى رَاحِلَتِهِ: "هَاتِ القُطْ لِي. فَلَقَطْتُ لَهُ حَصَيَاتٍ مِنْ حَصَى الخَذْفِ. فَلمَّا وَضَعْتُهُنَّ فِي يَدهِ قَالَ: بِأَمْثَالِ هَؤُلاَءِ. إِيَّاكُمْ وَالغُلُوَّ فِي الدِّينِ، فَإِنَّمَا أَهْلَكَ مَنْ كَانَ قَبْلكُمُ بِالغُلُوُّ فِي الدِّينِ 

திருக்குர் ஆனும் எச்சரிக்கிறது.

{يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ} [النساء: 171

ஐந்தாவது  காரணம்  உலகியல் மோகம்,  தற்பொருமை

  فقال -صلى الله عليه وسلم-: والله! ما الفقر أخشى عليكم، ولكن أخشى عليكم أن تُبْسط الدنيا عليكم كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها، وتهلككم كما أهلكتهم

காசு பணம் அல்லது கல்வி, அல்லது அரசியல் அதிகாரம்  வரும் போது தனக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் வருகிறது.  பதவிகள், மரியாதைகள் எல்லாம் தனக்கே உரியவை என்று சிந்திக்க தூண்டுகிறது.

 இந்த உலகம் பிரதானமாகிவிடுகிற நிஃமத்துக்களை பெற்றுக் கொண்டு நன்மை செய்வதை தீமை செய்வதில் கவனம் சென்று விடும்.   

 ஆறாவது காரணம், பாவங்கள் பெருகுதல் குழப்பங்கள் அதிகரித்தல்

  فعن أم سلمة -رضي الله عنها- قالت: إذا ظهرت المعاصي في أمتي عمَّهم الله بعذاب من عنده ([22]).

وسُئِل- صلى الله عليه وسلم-  : يَا رَسُولَ اللَّهِ! أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: "نَعَمْ، إِذَا كَثُرَ الْخَبَثُ 

 وَذَكَرَ الْإِمَامُ أَحْمَدُ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ: تُوشِكُ الْقُرَى أَنْ تُخَرِّبَ وَهِيَ عَامِرَةٌ، قِيلَ وَكَيْفَ تُخَرَّبُ وَهِيَ عَامِرَةٌ؟ قَالَ: إِذَا عَلَا فُجَّارُهَا أَبْرَارَهَا، وَسَادَ الْقَبِيلَةَ مُنَافِقُوهَا

விஞ்ஞன வளர்ச்சியும் தொழில் நுட்ப முன்னேற்றங்களும் உச்சத்தில் இருக்கிற போது இயற்கையின் பேரிடர்கள் மக்களை பெரும் துக்கத்திற்கு உள்ளாக்குகின்றன. காரணம் வரை முறை ஏதுவுமின்றி ஒழுக்க மீறல்கள் நிகழ்வதாகும்.

 ஏழாவது காரனம்  தீமைகளை கண்டு கொள்ளாதிருப்பது.

 فقال -صلى الله عليه وسلم- : إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه  أوشَكَ أن  يَعُمَّهُم الله بعقاب من عنده (

حذيفة بن اليمان- رضي الله عنه - عن النبي - صلى الله عليه وسلم - قال: «والذي نفسي بيده لتأمُرُنَّ بالمعروف ولَتَنْهَوُنَّ عن المنكر، أو لَيُوشِكَنَّ الله يبعثُ عليكم عقابًا منه، ثُمَّ تَدْعُونَهُ فَلاَ يسْتَجَيبُ لكمْ

அழிவுக்கான இக்காரணங்களை கூறியது யாரோ அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்களாகும்.  ஒரு முஸ்லிமாக ஆபத்தை விளைவிக்கும் இக்காரணங்களை நாம் அதிகம் நினைவில் வைப்போம்.

 நமது தனிப்பட்ட வாழ்விலும் ஆபத்துக்கள் ஏற்படாமல் இருக்க இக்காரணங்களை முடிந்த வரை தவிர்த்துக் கொள்ள உறுதியேற்போம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 சமூக அளவில் இத்தகைய காரணங்கள் உருவாகாமல் இருக்க பாடுபடுவோம். அல்லாஹ் இலேசாக்கி வைப்பானாக!

 இந்த மழையையும் புயலையும் தீமைகள் அற்றதாக்கி அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக!

 

1 comment: