வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 15, 2022

அல்குர் ஆனை அழகு படுத்துவோம்.

 அல்லாஹ் நமக்கு வழங்கிய மாபெரும் கொடை குர்ஆன்

அலி ரலி கூறினார்கள்

 القرآن كلام الله، وهو حبله المتين

குர்ஆன், வானத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிற அல்லாஹ்வின் கயிறு.”

 குர் ஆனை கையில் பற்றிக் கொண்டால் அல்லாஹ்வை பற்றிக் கொண்டதாக அர்த்தம்.

 முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வும் பரக்கத்தும் குர் ஆனைக் கொண்டே உறுதிப்படுத்தப்படும்

பாத்திஹா சூராவை ஒரு நபித்தோழருக்கு கற்றுக் கொடுக்க நினைத்து அவரை அழைத்தார்கள். அவர் தாமதாக வந்தார்.

அப்போது இந்த வசனத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ

 திருக்குர் ஆன் முஸ்லிம்களின் வாழ்வை உயிர்த்துடிப்போடு வைத்திருக்க கூடியது என்பது இதன் கருத்து.

 நாம் அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது.

 வாழ்கை ஒரு அர்த்தமில்லாமல் - சுவாரஸ்யமில்லாமல்- சுகமில்லாமல்- வெற்றிகள் இல்லாமல் நகர்கிறதா அதற்கு தீர்வு குர்ஆன் என்ற இரகசியம் இந்த வசனத்தில் இருக்கிறது

அல்லாஹ் மேலும் கூறுகிறான்.

 يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاء لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ [ (57

குர் ஆன் அல்லாஹ்வின் உபதேசம் மட்டுமல்ல. அதில் இதயத்திற்கு ஆறுதலும். நேர்வழியும், அல்லாஹ்வின் கிருபையும் அதிலிருக்கிறது.

 

அல்லாஹ் மேலும் கூறுகிறான்.

وَهَذَا كِتَابٌ أَنْزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ [الأنعام: 155]،

 நபிகள் நாயகம், (ஸல்) அவர்கள் கூறீனார்கள்.

قال صلى الله عليه وسلم: «ما اجتمع قوم في بيت من بيوت الله، يتلون كتاب الله ويتدارسونه بينهم: إلا نزلت عليهم السكينة، وغشيتهم الرحمة، وحفتهم الملائكة، وذكرهم الله فيمن عنده» (صحيح مسلم)

 கோடிக்கணக்கில் செலவ்ழித்து வீடுகட்டுகிறோம் அதை விட அதிகம் செலவழித்து டெகெரேஷன் செய்கிறோம். அந்த வீட்டில் அமைதியும் செழிப்பும் மலக்குகள் சூழ வாழவும் அற்புதமான வழியை பெருமானார் கற்றுக் கொடுக்கிறார்கள்.

குடும்பத்தினர் சேர்ந்து உட்கார்ந்து குர் ஆனை ஓதுங்கள் அமைதி தவழும் அருள்மழை நிறையும்.

 அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்.

 هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ

இந்த வசனத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் நான்கு வேலைகளை செய்வதற்காக அனுப்பப்பட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

முதலாவது திலாவத் : எப்படி ஓத வேண்டும் என்பதை ஓதிக்காட்டுதல்

وقرءاناً فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا ". (الإسراء:106

 இரண்டாவது தஜ்கியத் : குர் ஆனை ஓதி மனதை பரிசுத்தப்படுத்துதல்.

மூன்றாவது தஃலீம்  குர் ஆனுடைய கருத்துக்களை விளக்கி கூறுதல்

நான்காவது தஹ்கீம் : குர் ஆனுடைய முறையிலான வாழ்க்கையை அமைத்தல்

இந்த நான்கையும் மிகச் சிறப்பாக செய்தார்கள் பெருமானார் (ஸல்)

இதில் நாம் கவனிக்க வேண்டியது,

பெருமானாரின் முதல் பணி திலாவத் எனும் திருக்குர் ஆனை ஓதிக்காட்டியதாகும்.

இப்படித்தான் ஓத வேண்டும் என்று சொல்லித் தரப்பட்டி ஓதுவதே திலாவத் ஆகும்,

சூரத்துன் நம்ல் அத்தியாயத்தில் ஒரு இட்த்தில் மஜ்ரீஹா என்று இருக்கும். ஆனால் பெருமானார் (ஸல;) அவர்கள் அதை மஜ்ரேஹா என்று ஓதிக் காட்டினார்கள். அதை அப்படித்தான் ஓத வேண்டும்.

 இது மாபெரும் பாரமபரியம் ஆகும்.

ஜிபரயீல் அலை அவர்கள் பெருமானாருக்கு சொல்லிக் கொடுக்க பெருமானார் (ஸல்) அவர்கள் சில சஹாபாக்களுக்கு தனி கவனம் எடுத்து சொல்லிக் கொடுத்தார்கள்.  அந்த சஹாபாக்கள் வழியாக முஸ்லிம் உம்மத் கற்றுக் கொண்ட கலையாகும்.

திருக்குர் ஆனில் உள்ள அல் பய்யினா அத்தியாயம் இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஃபு ரலி அவர்களை அழைதார்கள். அவர் திருக்குர் ஆனை மிக அழகுற ஓதுபவர்களில் ஒருவராக இருந்தார். அவரிடம் இதை அல்லாஹ் உங்களுக்கு ஓதிக்காட்டச் சொன்னான் என்றார்கள். அல்லாஹ் என் பெயரை குறிப்பிட்டானா என்று ஆச்சரியமாக கேட்டார்கள். ஆம் என்று கூறினார்கள் பெருமானார். (ஸல்) அவரது ஆச்சரியம் தீர வில்லை மீண்டும் உபை ரலி கேட்டார் அல்லாஹ்வுடைய சபையில் எனது பெயர் கூறப்பட்டதா ? பெருமானார் (ஸல்) அவர்கள் மீண்டும் கூறீனார்கள். ஆம்அப்போது உபை ரலி அவர்களின் கண்ணகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

  وقال أنس بن مالك«قال النبي  لأبي بن كعب: «إن الله أمرني أن أقرأ عليك القرآن»، قال: «الله سماني لك؟»، قال: «نعم». قال: «وذُكرت عند رب العالمين؟»، قال: «نعم». فذرفت عيناه»

 நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் உம்மத்திற்கு ஆற்றிய முதல் பணி அரசியல் பணி அல்ல, சமூக பணி அல்ல. சமுதாய பணி அல்ல. குர் ஆனை ஓதிக்காட்டியதாகும்.

 அப்படியானால் இந்த தீனில் நமது முதல் பணி குர் ஆனை ஓதுவதாகும்.

திருக்குர் ஆன் ஓதப்படுகிற காரணத்தினால் தான் இஸ்லாம் இன்று 1400 ஆண்டுகளை கடந்தும் உருமாறாமல் இருக்கிறது.

மற்ற சமூகங்களின் வேதங்கள் ஓதப்படுவதில்லை. அதனால் அந்த சமூகங்களின் வணக்க வழிபாடுகள் கூட மாறிவிட்டன.

துறவறம் இஸ்லாத்தில் இல்லை. காரணம் அதை நாம் கடமையாக்கவில்லை என்று திருக்குர் ஆன் உரத்து கூறிக் கொண்டே இருக்கிறது.

 وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ

அல்லாஹ்வுக்கு இணையாக முஸ்லிம்கள் யாரையும் கருதுவதில்லை தாய் தந்தையை அரசியல் தலைவரை உபகாரம் செய்தவரை முஸ்லிம்கள் கடவுளாக்குவதில்லை

 காரணம் வலம் யகுன் லஹூ குப்வன் அஹத் என்று அன்றாடம் ஓதிக் கொண்டிருக்கிறோம்.

 ரஷ்யாவில் கம்யூனிஸ் புரட்சி ஏற்பட்ட காலத்தில் அங்கிருந்த பள்ளிவாசல்களை மூடினார்கள். குர் ஆன் பிரதிகளை தடை செய்தார்கள். அங்கு வாழ்ந்த ஒரு தலை முறை முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு செல்லாதவர்களாகவும் குர் ஆனைப் பார்க்காதவர்களாகவும் வளர்ந்தார்கள்.

இந்தியாவைச் சர்ந்த ஒரு இன்ஞினியர் ரஷ்யாவில் ஸ்டீல் தொழிற்சாலை ஒன்றை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.  வெள்ளிக்கிழமை அன்று பக்கத்தில் பள்ளிவாசல் ஏது இருக்கிறதா என்று விசாரித்திருக்கிறார், அங்கே ஜமாத் தொழுகை நடைபெறுவதில்லை என்று தெரியும் எனினும் பள்ளிவாசலுக்காவது சென்று வருவோமே என்ற ஆவலில் அவர் விசாரித்தார். செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. ஆனால் அதை மியூசியமாக மாற்றிவிட்டார்கள் என்று மற்றவர்கள் கூறினார். அங்கு போய்விட்டு வருவோம் என்று நினைத்து இன்ஞினியர் அங்கு செனறார். அங்கிருந்த ஒரு ஓரத்தில் தொழுவும் செய்தார். அப்போது ஒரு சிறுவன் அவரது முதுகுல் தட்டி பின்னாள் வருமாறு சாடை செய்தான். அச்சிறுவனை பின் தொடர்ந்து அவர் சென்றார். அருகிலிருந்து ஒரு வீட்டிற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே ஒரு முதியவரும் சிறுவர்கள் சிலரும் இருந்தனர். அவர்கள் பேசுவது இவருக்கு புரியவில்லை,. இவர் பேசியது அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் ரஷ்யாவில் வாழ்கிற முஸ்லிம்கள் என்பது மட்டும் அவருக்கு புரிந்தது. ரஷ்யாவில் ஜமாத்தாக தொழுவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருப்பதாக் அவர்கள் கூறினர். குர் ஆனையும் தடை செய்திருப்பதாக அப்பெரியவர் கூறினார். இன்ஞினியர் பெரிதும் ஆச்சரியப்பட்டு தான் வைத்திருந்த சிறிய குர் ஆனை எடுத்து ஓதிக்காட்டலாம் என்று நினைத்து அவர்களை வட்டமாக உட்கார வைத்து குர் ஆனை ஓத ஆரம்பித்தார் . என்ன ஆச்சரியம். அவர் ஓத தொடங்கியவுடனே அங்கிருந்தவர்களும் அவருடன் சேர்ந்து சரளமாக குர் ஆனை ஓதினர்.  இன் ஞினியர் திகைத்துப் போனார். ரஷயா அரசாங்கத்தால் குர் ஆனின் பிரதியை பிடிங்க முடிந்த தே தவிர குர் ஆன் ஓதுதலை பிடுங்க முடியவில்லை என்பதையும் . பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் கூட திருக்குர் ஆனை ஓதுதல் என்பது அந்த சமூகத்தில் தீனை காப்பாற்றி வந்துள்ளது என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

 குர் ஆனை ஓதும்போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அதை அழகுற ஓத வேண்டும்., 

 عن البراء بن عازب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم«زَيِّنُوا القرآنَ بأصواتِكم -رواه أبو داود

 திருக்குர் ஆனை ஓதுகிறவர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு எச்சரிக்கை

 யார் அழகுற ராகமாக குர் ஆனை ஓதவில்லையோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல என்று பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 فقد قال النبي -صلى الله عليه وسلم-: «ليس منا من لم يتغنَّ بالقرآن». رواه البخاري

 குர் ஆனை அழகுறவும் திறம்படவும் ஓதுகிறவர்கள் மலக்குகளுடன் இருப்பார்கள். குர் ஆனை ஓதுவதற்காக சிரமம் எடுத்துக் கொள்பவருக்கு இரண்டு கூலி கிடைக்கும் (ஒன்று ஓதியதற்காக மற்றொன்று அவர் அனுபவித்த சிரமத்திற்காக) என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) .

 ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்

  ا لذي يَقرَأُ القُرآنَ وهو ماهِرٌ به مع السَّفَرةِ الكِرامِ البَرَرةِ، والذي يَقرَؤُه وهو يَشتَدُّ عليه فله أجْرانِ.

الراويعائشة أم المؤمنين |  أبو داود 

 பெருமானார் (ஸ்ல்) அவர்கள் அழகுற ஓதுவார்கள்

 فعن البراء بن عازب رضي الله عنه قال: ‏سمعت النبي صلى الله عليه وسلم قرأ في العشاء بالتين والزيتون، فما سمعت أحدًا أحسن صوتاً منه

 அழகுற ஓதுபவர்களை பாராட்டுவார்கள்

 அபூ முஸா அல்அஷ்அரி என்ற நபித்தோழர் அழகுற குர் ஆனை ஓதுவார்.

 ஒரு நாளிரவு பெருமானார் (ஸல்) அவர்களும் ஆயிஷா ரலி அவர்களும் இரவு நேரத்தில் அவரது வீட்டை கடந்து சென்றன. அப்போது அவர்  ஓதிக் கொண்டிருப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதை இருவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். (அவருக்கு தெரியாமல். ) அடுத்த நாள் அவரிடம் கூறினார்கள். நீங்கள் என்னை கவனித்திருக்கலாம். நீங்கள் நேற்றிரது ஓதியதை நான் கேட்டுக் கொண்டிருந்ர்தேன் இறைவன் தாவூத் அலை அவர்களின் குரலின் இனிமையில் ஒரு பங்கை உங்களுக்கு தந்துள்ளான் என்றார்கள்

 அழகுற ஓதும் வழியை பெருமானார் (ஸல்) அவர்கள் கற்பித்தார்கள். சஹாபாக்கள் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அது இன்று வரை தொடர்கிறது.

 ويبين كيفية الترتيل أنس بن مالك حينما سُئل عن قراءة النبي فقال: كان يمد مداً، ثم قرأ: بسم الله الرحمن الرحيم فمدها

  பெருமானரின் இத்தகைய வழிகாட்டுதல்களால் முஸ்லிம் உம்மத் குர் ஆனை அழகுற ஓதும் கிராஅத் எனும் நடைமுறையை தனது ஒவ்வொரு காரியத்திலும் முன்னிறுத்தி வந்த்து.

 இப்போதும் கூட கத்தாரில் உலக கால்பந்து போட்டியின் தொடக்கத்தில் குர் ஆனின் ஒரு வசனத்தை கானிம் அல் முப்தஹ் என்ற இளைஞர் ஓதி தொடங்கி வைத்தார்,

 நமது காலத்தின் மிகப்பெரிய காரியாக புகழ் பெற்று திகழ்ந்தவர். எகிது நாட்டைச் சேர்ந்த காரி அப்துல் பாஸித்.. அவர் 1986 ல் அமெரிக்கா சென்றிருந்த போது குர் ஆன் உங்களது வாழ்வில் அதிசயம் நிகழ்த்தியதுண்டா என்று கேட்டார்கள். அப்போது அவர் ஒரு நிகழ்வை சுட்டிக்காட்டினார்.

 ஒரு தடவை எகிப்தின் அதிபர் ஜமால் அப்துன்னாஸர் ரஷ்யாவுக்கு பயனம் செய்த போது தன்னுடன் காரி அப்துல் பாஸித் அவர்களை அழைத்துச் சென்றார். இராணுவ அதிகாரிகளின் ஒரு கூட்டத்தில் அப்துல் பாஸித்தை அறிமுகப்படுத்தி விட்டு இவர் எங்களது வேத்ததிலிருந்து சில வசனங்களை ஓதிக்காட்டுவார் என்று கூறினார், காரி அப்துல் பாஸித் தாஹா அத்தியாயத்திலிருந்து சில வசனங்கலை ஓதிக்காட்டினார்,  

காரி அப்து பாஸித் கூறினார். கண்களை மூடியவாறு நான் இரண்டு ரூகூஃகள் ஓதினேன். பிறகு கண்களை திறந்து பார்த்த போது அங்கிருந்த நான்கு ஐந்து அதிகாரிகளின் கண்களிலிருந்து கண்ணீர் தென்பட்டது. என் வாழ்வில் நான் சந்தித்த குர் ஆனிய அற்புதங்களில் ஆச்சரியமானது அது. அர்த்தம் புரிய வாய்ப்பில்லாத அவர்களை குர் ஆனுடை இனிமை ஈர்த்திருந்தது.

 தாஹா அத்தியாயம் ஓதப்படுவதை கேட்ட்தால்  தான் உமர் ரலி அவர்கள் இஸ்லாம் ஆனார்கள் என்பதும் நாம் அறிந்த்தே.

 In 1987, Qari Abdul Basit was visiting America, the same Qari Abdul Basit whose cassettes of the Holy Quran have become famous. Someone asked him once if he had seen a miracle of the Holy Quran, to which Qari Abdul Basit said, “Just one miracle? I can relate thousands which I have seen with my own eyes.” The man asked him to relate some, so Qari Abdul Basit started talking.

Qari Abdul Basit related an event from the time of Jamal Abdul Nasser, who was once the president of Egypt. Communism was at its height, and once while on tour of the Soviet Union, Nasser was pressured heavily to become a communist and thus spread the doctrine in his country. He was promised that the Soviet Union would make Egypt a technological giant if only Nasser would renounce Islam and introduce Communism as the state religion. Abdul Nasser politely refused and thus ended this particular tour. He reached home but was restless that he had not defended Islam as sufficiently as he should have because he was not knowledgeable enough.

Abdul Nasser was invited to the Soviet Union again after a few years, and so this time he requested Qari Abdul Basit to come to Moscow with him. Abdul Basit was surprised because he had never imagined that he would ever be required in the Soviet Union, a land whose government and people refused to acknowledge Allah.

On this occasion Jamal Abdul Nasser courageously introduced Qari Abdul Basit to the Soviet heads of state, telling them that he would recite the Holy Quran, the Book of Islam. Qari Abdul Basit closed his eyes and started reciting Surah Ta Ha, the same part of the Holy Quran that had made one of the worst enemies of Islam, Hadrat Umar ibn Khattab, bow to Islam.

Qari Abdul Basit opened his eyes and looked up after reciting two rukus, and he saw the miracle of the Holy Quran in front of his eyes. Four to five heads of the Communist Party were in tears. Jamal Abdul Nasser smiled and asked, “Why are you crying?” to which one of them replied, “We don’t know. We haven’t understood a word but there is something in this Quran that has melted our hearts and compelled us to cry. We don’t know what has done this.”

Qari Abdul Basit said that this was an amazing miracle that he saw in front of him. 

 நாமும் திருக்குர் ஆனை உளம் உருக ஓத வேண்டும். நமது பிள்ளைகளை அவ்வாறு ஓத வைக்க வேண்டும் மற்றவர்கள்  ஓதுவதை கேட்கவும் வேண்டும்.

 இப்போது நாம் பாடல்களை கேட்பதில் எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறோம்.

 அதை விட இனிமையானது திருக்குர்ஆன்

அதை விட மன அமைதி தரக்கூடியது திருக்குர் ஆன்

அதை விட நன்மையானது திருக்குர்ஆன்

எல்லாவ்ற்றிற்கும் மேலாக அதை விட பாக்கியம் தரக்கூடியது திருக்குர்ஆன்

 குர் ஆன் மதரஸாக்களில் ஓதுகிற மாணவர்களிடையே திருக்குர் ஆனை அழகுற ஒதுவதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகவும்.

 குர்ஆனை கேட்பதில் மக்களிக்கு உற்சாகத்தை உண்டுபண்ணும் நோக்கிலும் கோவை மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை மாபெரும் கிராஅத் அரங்கை இன்ஷா வருகிற 18.12,2022 ஞாயிற்றுக்கிழமை மஃரிபிலிருந்து இஷா வரை பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டியிலுள்ள மஸ்ஜிதே ரஹ்மானிய்யா காலனி பள்ளிவாசலில் ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த காரிதிருக்குர் ஆனை அழகுற ஓதுவோர்கலந்து கொண்டு அற்புதமாக ஓதிக்காட்ட இருக்கிறார்கள்.

 நம் வாழ்வின் ஒரு அருமையான நன்மையான அனுபவமாக அது அமையும். இன்ஷா அல்லாஹ்.

 மதரஸா மாணவர்களும் , முஸ்லிம் சகோதரகளும் தாய்மார்களும் திரளாக கலந்து கொண் பயன்பெறுவோம்.

 நிறைவாக ஒரு ஹதீஸ்

عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم أنه قال:« إن هذا القرآن مأدبة الله، فاقبلوا من مأدبته ما استطعتم” الحاكم في المستدرك.

இந்த குர் ஆன் அல்லாஹ் வைக்கும் விருந்து தட்டு, அதில் உங்களால் முடிந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள் பெருமானார்.

ஒரு அருமையான அல்லாஹ்வின் விருந்து காத்திருக்கிறது

திருக்குர்ஆனின் கூட்டத்தில் ஒன்று சேர்வோம்

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 


No comments:

Post a Comment