வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 22, 2022

எச்சரிக்கைகள் கவனிக்கப்பட வேண்டியவை!

وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ

பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த முதல் களப்பணி சமுகத்தை எச்சரிக்கை செய்ததாகும்.

ஃபாத்திமா! காசு பணம் வேண்டுமெனில் கேள்! தருகிறேன். ஆனால் அல்லாஹ்விடமிருந்து உன்னை என்னால் பாதுகாக முடியாது. என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியது எச்சரிக்கையின் உச்சமாகும்.

அப்பாஸ் ரலி பெருமானாரின் பெரிய தந்தை! தந்தையின் அண்ணன். சபிய்யா (ரலி) என்பது பெருமானாரின் மாமி. தந்தையின் சகோதரி. ஒவ்வொருவரையும் பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரிக்க தவறவில்லை.

حَدِيثِ عائِشَةَ وابْنِ عَبّاسٍ وأبِي هُرَيْرَةَ في صَحِيحَيِ البُخارِيِّ ومُسْلِمٍ يَجْمَعُها قَوْلُهم «لَمّا نَزَلَتْ (﴿وأنْذِرْ عَشِيرَتَكَ الأقْرَبِينَ﴾) قامَ رَسُولُ اللَّهِ عَلى الصَّفا فَدَعا قُرَيْشًا فَجَعَلَ يُنادِي: يا بَنِي فِهْرٍ، يا بَنِي عَدِيٍّ، لِبُطُونِ قُرَيْشٍ حَتّى اجْتَمَعُوا فَجَعَلَ الرَّجُلُ إذا لَمْ يَسْتَطِعْ أنْ يَخْرُجَ أرْسَلَ رَسُولًا لِيَنْظُرَ ما هو، فَقالَ: (يا مَعْشَرَ قُرَيْشٍ، فَعَمَّ وخَصَّ، يا بَنِي كَعْبِ بْنِ لُؤَيٍّ أنْقِذُوا أنْفُسَكم مِنَ النّارِ، يا بَنِي مُرَّةَ بْنِ كَعْبٍ أنْقِذُوا أنْفُسَكم مِنَ النّارِ، يا بَنِي عَبْدِ شَمْسٍ أنْقِذُوا أنْفُسَكم مِنَ النّارِ، يا بَنِي عَبْدِ مَنافٍ أنْقِذُوا أنْفُسَكم مِنَ النّارِ، يا بَنِي هاشِمٍ أنْقِذُوا أنْفُسَكم مِنَ النّارِ، يا بَنِي عَبْدِ المُطَّلِبِ أنْقِذُوا أنْفُسَكم مِنَ النّارِ، اشْتَرُوا أنْفُسَكم مِنَ اللَّهِ لا أُغْنِي عَنْكم مِنَ اللَّهِ شَيْئًا، يا عَبّاسَ بْنَ عَبْدِ المُطَّلِبِ لا أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا، يا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لا أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا، يا فاطِمَةُ بِنْتَ رَسُولِ اللَّهِ سَلِينِي مِن مالِي ما شِئْتِ لا أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا، غَيْرَ أنَّ لَكم رَحِمًا سَأبُلُّها بِبَلالِها.

எச்சரிக்கை என்றால் மிரட்டுவதல்ல.

உன்னை அடிப்பேன், கொன்றுவேன், என்னை மீறி ஜெயிக்க முடியாது என்று அச்சுறுத்துவது மிரட்டலாகும்.

தரை ஈரமாக இருக்கிறது வழுக்கும். திருடர்கள் அதிகமாக இருக்கிறார்கள் கவனம். தலைக்கவம் அணியாவிட்டால் 1000 ரூபாய் பைன். என்று கூறுவது எச்சரித்தலாகும். அதாவது அச்சுறுத்தும் ஒரு செய்தியை கூறுவது எச்சரித்தலாகும்.

எச்சரிக்கை செய்வதன் நோக்கம் நிம்மதியான      வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் அம்சங்களை அடையாளம் காட்டுவதாகும்.

எனவே எச்சரிக்கை என்பது நிம்மதியான வாழ்கையின் ஒரு அம்சமாகும்.

ஆகவே எச்சரிக்கை செய்வதும் ஒரு நற்காரியமாகும்.

வட்டி வாங்காதே அது அல்லாஹ்வோடு யுத்தம் செய்வதாகும் என்று எச்சரிப்பது ஒரு நன்மை செய்த்தற்கு நிகரானதாகும்.

இந்த உலகிற்கு நபிமார்கள் அனைவரையும் அல்லாஹ் நன்மையாகவே அனுப்பினான். அதனால் தான் அவர்கள் அனைவரையும் எச்சரிக்கையாளர்களாகவும் அமைத்திருத்தான்.

وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ

وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ

எச்சரிக்கை செய்தலின் அவசியம் அதனால் ஏற்படும் நன்மை ஆகியவற்றை உணர்ர்த்துவதற்காக சொற்களுக்கான அனைத்து வடிவங்களிலும் “எச்சரிக்கை” திருக்குர்ஆனில் பயனப்டுத்தப்பட்டுள்ளது என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பெயர்ச் சொல்  الاسم அல்கமர் 05

விணயாற்றுபவன் اسم الفاعل சாப்பாத் 72

விணையாற்றப்படுபவன் اسم المفعول நம்ல் 58

வேர்ச்சொல்  المصدر, முர்ஸலாத் 06

கடந்தகால விணை الفعل الماضي. பகரா 06

எதிர்கால விணை الفعل المضارع அன்ஆம் 13

ஏவல் விணைச் சொல் فعل الأمر  மர்யம் 39

மிகைச்சொல் صيغة المبالغة ஹூத் 3

என அனைத்து வகையிலும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

எச்சரிக்கை செய்து மக்களை காப்பாற்றுவதற்காக பல சட்டங்களிலும் இஸ்லாம் தளர்வுகளை அறிவித்துள்ளது.

தொழுது கொண்டிருக்கும் போது ஒரு மனிதன் பள்ளத்தில் விழப்போவதை அறிந்தால் சைகையால் அவரை தடுக்கலாம்.

அதே போல ஜும்ஆ குத்பா ஓதுவதற்கிடையிலும் எச்சரிக்கை செய்யலாம்.

பாங்கு சொல்வதற்கிடையிலும் இத்தகைய எச்சரிக்கைய செய்யலாம்.

அல்லாஹ் தரும் எச்சரிக்கைகள்

சட்டங்களை மீறினால்

مَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ} [النساء: ١٤]

கியாமத் நாள் எப்படிப்பட்ட்து.

يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الْأَرْضُ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا} [النساء: ٤

إِنَّا أَنْذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا} [النبأ: ٤٠]

அல்லாஹ்வின் சக்தி எப்படிப்பட்ட்து ?

قُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ}

பெருமானார் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்

முக்கிய எச்சரிக்கை தஜ்ஜால

أَخْبَرَنَا ‏ ‏قَتَادَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَ قَوْمَهُ الْأَعْوَرَ الْكَذَّابَ إِنَّهُ أَعْوَرُ وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ 

 பெரிய தஜ்ஜாலை விட ஆபத்தான சிறிய தஜ்ஜால்கள்

 روى الإمام مسلم في "مقدمة الصحيح" (7) عن أَبي هُرَيْرَةَ، قال: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّابُونَ، يَأْتُونَكُمْ مِنَ الْأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ، وَلَا آبَاؤُكُمْ، فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ، لَا يُضِلُّونَكُمْ، وَلَا يَفْتِنُونَكُمْ 

 இதோ இப்போது பித் அத் மாநாடு என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள். காசு கறப்பதே இவர்களது நோக்கம்’

இவர்களை விட பெரிய பித் அத் வேறெதுவும் இல்லை.

முகஸ்துதிக்காக காசு கொடுக்கிறவர்கள் தீனை பிளவு படுத்த உதவுகிறார்கள் என்றே பொருள்.

 உலகியல் மோகம் மிகைக்கிற போது அதற்காக மட்டுமே காரியமாற்றுகிற போது சமுதாயம் அழிவைச் சந்திக்கும்.

 فعن ثوبان رضي الله عنه أن رسول الله - صلى الله عليه وسلم - قال : ( يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها، فقال أحدهم : " ومن قلةٍ نحن يومئذ ؟ "، فقال لهم : ( بل أنتم يومئذ كثير، ولكنكم غثاء كغثاء السيل، ولينزعن الله من صدور عدوكم المهابة منكم، وليقذفنّ الله في قلوبكم الوهن : حب الدنيا وكراهية الموت 

  وقد بيّن النبي – صلى الله عليه وسلم – ذلك في قوله : ( والذي نفس محمد بيده، لتفترقن أمتي على ثلاث وسبعين فرقة، واحدة في الجنة، وثنتان وسبعون في الناررواه ابن ماجة 

 பிற சமூகங்களுடன் சேர்ந்து அதன் கருத்த்துக்களையும் நடைமுறைகளை சமூகத்தில் சிலர் தங்களுடையதாக் ஆக்கிக் கொள்வார்கள்.

 فعن ثوبان رضي الله عنه أن رسول الله - صلى الله عليه وسلم - قال : ( لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين ) رواه الترمذي

கவனித்துப்பாருங்கள் இப்போது இஸ்லாத்திற்கு எதிராக சிந்திக்கிற எக்ஸ் முஸ்லிம் என்ற பெயரில் எவ்வளவு பேர் உருவாகியிருக்கிறார்கள்?

 முஸ்லிம் பெண்களின் நிலை குறித்த எச்சரிக்கை

நமது திருமண விழாக்கால வைபவங்களில் அணியப்படும் ஆடைகள் எப்படி மாறிவிட்டன.

டிக்டாக் பெண்கள் எப்படி தோற்றமளிக்கிறார்கள் ?

  صِنْفانِ مِن أهْلِ النَّارِ لَمْ أرَهُما، قَوْمٌ معهُمْ سِياطٌ كَأَذْنابِ البَقَرِ يَضْرِبُونَ بها النَّاسَ، ونِساءٌ كاسِياتٌ عارِياتٌ مُمِيلاتٌ مائِلاتٌ، رُؤُوسُهُنَّ كَأَسْنِمَةِ البُخْتِ المائِلَةِ، لا يَدْخُلْنَ الجَنَّةَ، ولا يَجِدْنَ رِيحَها، وإنَّ رِيحَها لَيُوجَدُ مِن مَسِيرَةِ كَذا وكَذا.

சாட்டைகளை வைத்து மக்களை அச்சுறுத்துவோர் எனும் சொல் அனைத்து வகையான ரவுடிகளையும் குறிக்கும்.

مُمِيلاتٌ முந்தானைகளை நகர்த்திக்காட்டி நடக்கிற பெண்கள்

مائِلاتٌ அசைந்தாடி நடக்கும் பெண்கள் \

رُؤُوسُهُنَّ كَأَسْنِمَةِ البُخْتِ المائِلَةِ சாய்ந்து நடக்கும் ஒட்டகையின் திமிழ்போன்ற உயர்ந்த கொண்டைகளை கொண்ட பெண்கள் என்பதற்கு முடி அழகை வெளிப்படுத்தி நடக்கும் அனைத்து அம்சங்களையும் குறிக்கும் .

பெருமானார் (ஸல்) எதற்கும் பிறரிடம் யாசித்து பெருகிற இயல்பை எச்சரித்தார்கள்.

فقد روى الإمام أحمد عن النبي صلى الله عليه وسلم..... ولا يفتح عبد باب مسألة إلا فتح الله عليه باب فقر

இது போல இன்னும் ஏராளமான எச்சரிக்கைகளை பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள்.

 அது போன்ற எச்சரிக்கைகளை மனதில் கொண்டு நடந்தால் நிம்மதியான வாழ்வை பெறலாம் .

தரை வழுக்கும் என்ற எச்சரிக்கையை கவனிக்க தவறினால் நம்க்கு நஷ்டமே!

அதே போல தற்பெருமை அழிவை தரும் என்ற எச்சரிக்கையை கவனிக்க தவறினால் நஷ்டம் இன்று இல்லை என்றாலும் நாளை வந்துவிடும்.

 ஒரு மனிதர் நல்லவர் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று அவர் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் இருப்பது ஆகும்.

ِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا

 பின்விளைவுகளைப் பற்றி கவனமாக இருப்பவர்கள் தான் புத்திசாலிகள். அத்தகையோர் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ய மாட்டார்கள்.

 தண்டனை கண்ணுக்கு நேரே தெரிந்தால் தான் பயப்படுவேன் என்று வாழ்தல் கூடாது.

 குதிரையை வேகமாக ஓட்டி ஒருத்தனை காயப்படுத்தினான் ஒரு வீரன். அரசரிடம் புகார் வந்தது. அவசர வேலையாய் போய்க் கொண்டிருந்தேன் குதிரையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றான் வீரன். அரசன் அவனுக்கு பாடம் புகட்ட நினத்தான். ஒரு பானை தண்ணீரை கொடுத்து இது புனித நீர்! இதில் ஒரு சொட்டு கூட கீழே விழக்கூடாது. அப்படி விழுந்தால் உனக்கு 10 ஆண்டு சிறை தண்டனை என்று கூறி அனுப்பினான்.  வீரன் குதிரை ஏறி அந்த பானை நீரை சுமர்ந்து பத்திரமாக தண்ணீரை கொண்டு  வந்து போய்ச் சேர்த்தான்.

அரசன் கூறினான். தண்டனை மீது உனக்கிருந்த பயம் உன்னை எச்சரிக்கையாக நடக்க வைத்தது. இதே பயம் அடுத்தவனை காயப்படுத்தாமல் வண்டி ஓட்டுவதிலும் இருக்க வேண்டும். அது உன்னால் முடியும் எனப்தை இப்போது நீ உணர்ந்திருப்பாய். என்றார்.

தண்ணீரை தலையில் சுமந்து வண்டி ஓட்டுவதைப் போன்ற எச்சரிக்கை உணர்வை எங்கும் நாம் கை கொண்டால் நாமும் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்காமல் நடந்து கொள்ளலாம்.

இப்போது மீண்டும் கொரோனோ பற்றிய எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய தகவல்களின் படி  அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் போன்ற  நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 5.37 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 145 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அவற்றில் நான்கு சீனாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட BF.7 வகையை சார்ந்தது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 நேற்றைய தினம் முகக் கவசம் அணியுமாறும் கூட்டங்களை தவிர்க்குமாறும். கைகழுவுதலை வழக்க கொள்ளுமாறும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

 தமிழக முதலைமைச்சரின் தலைமையிலும் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

 இந்தியாவில் கடந்த ஆறு மாத்த்தில் கொரோனோ தொற்று அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு கர்நாடகா  தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

நோய்த்தொற்று நமக்கு ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கையை நாம் கடைபிடிக்க வேண்டும். தவ்றக் கூடாது.

காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல் பலவீனம்  போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவர்களை உடனடியாக அனுகி தேவையான சிகிட்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அத்தகையோர் பொது வெளிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்

சமூகத்தில் இது பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எச்சரிக்கை செய்வது நன்மையானது

எச்சரிக்கைகளை கடைபிடிப்பது நன்மையனது.

இது மார்க்கம் நமக்கு வழங்கியிருக்கிற அறிவுரை என்பதை நினைவில் கொள்வோம்.

அல்லாஹ் நம்மையும் நமது நாட்டையும் உலக மக்கள் அனைவரையும் பெரு நோய்த்தொற்றுக்களிலிருந்தும் அதன் தீமைகளிலிருந்தும் பாதுகாப்பானக!

 



 

 

1 comment:

  1. Anonymous11:07 PM

    ஒவ்வொரு வாரமும் பயான் அருமை.ஆனாலும் அரபி வாசகங்கள் தர்ஜமாவோடு அமைந்தால் தடுமாற்றம் தவிர்க்கலாம்.

    ReplyDelete