வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 29, 2022

இஹ்ஸானிய வாழ்வு மலரட்டும்

وَأَحْسِنُواْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ ﴾

 2023 ம் புத்தாண்டு தொடங்க இருக்கிறது.

ஒவ்வொரு நாளுமே நமது வாழ்வை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள சிந்திக்க வேண்டிய நாள்தான். ஒரு வருடத்தின் தொடக்கம் என்கிற போது கடந்த வருடத்தை விட புதிய ஆண்டை சிறப்பானதக ஆக்கிக் கொள்ள சிந்திக்க வேண்டிய நேரம்.

டெவலப்மெண்ட் என்பது தான் இன்றைய உலகில் மிக தாரக மந்திரமாக இருக்கிறது.  

அதாவது மேம்படுவதற்கான வழிமுறைகளை கையாள்வது ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்வது

வியாபாரத்தில் Business development,

தனிப்பட்ட மரியாதையில் Career development

உற்சாகத்தில் Energy development

தலைமைத் தன்மையில் Leadership development

திறமையில் Professional development

அமைப்புக்களில் -  Organization development

 என ஒவ்வொன்றிலும் மேம்பாடு காண உழைக்க வேண்டும். அது தான் அர்த்தமுள வாழ்வாகும்.

சிங்கப்பூரை உருவாக்கிய லீகுவான்யூ தனது 90 வது வயதில் கம்பூட்டர் கற்றுக் கொண்டார். எதிர் கால தலைமுறை எதில் செயல்பட இருக்கிறதோ அதை புரிந்து கொள்ளாவிட்டால் ஒரு தலைவர் சரியாக வழிகாட்ட முடியாது என்று காரணம் கூறினார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு குடியேறிய பிறகு யூதர்களோடு நேரடி தொடர்பு கொள்வதற்கு வசதியாக யூத மொழியை கற்றுக் கொள்ள சில நபித்தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

ஜைது பின் சாபித் ரலி அவர்கள் மதீனா அன்சாரிகளில் பனுன்னஜ்ஜார் பிரிவை சேர்ந்தவர். ஆதரிப்பார் அற்ற அநாதையாக இருந்தவர். 11 வயதில் இஸ்லாமைத்தழுவினார். பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது அன்சாரிகள் அவரை பெருமானாரிடம் அழைத்து வந்து இந்த சிறுவருக்கு 17 அத்தியாங்கள் மனனமாக தெரியும் என்று கூறினார்கள். சாபித் ரலி பெருமானாருக்கு அந்த் 17அத்தியாயங்களை ஓதிக்காட்டினார். அவரது திறமையை புரிந்து கொண்ட பெருமானார் (ஸல்) எனக்காக யூதர்களின் பாஷையை கற்றுக் கொள் என்று கூறினார்கள். ஜைது 15 நாட்களில் யூதர்களின் பாஷையை திறம்பட கற்றுக் கொண்டார்.

يقول «زيد بن ثابت» عن نفسه: «أتى بي النبي صلى الله عليه وسلّم مقدمه المدينة فقالوا: يا رسول الله هذا غلام من «بني النجار» وقد قرأ مما أنزل عليك سبع عشرة سورة، فقرأت على رسول الله عليه الصلاة والسلام، فأعجبه ذلك، وقال: «يا زيد تعلم لي كتاب يهود، فإني والله ما آمنهم على كتابي».
قال: فتعلمته فما مضى لي نصف شهر حتى حذقته، وكنت أكتب لرسول الله صلى الله عليه وسلّم إذا كتب إليهم .  

அந்த வகையில் நமது ஈமானிய வாழ்விற்கான மேம்பாடு குறித்தும் நாம் சிந்திக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

ஒவ்வொரு வருடம் பிறக்கிற போதும் நமது வயது அதிகரிக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க நமது ஈமானிய வாழ்வு பக்குவப்பட வேண்டும்.

வெளிப்படையான ஆசாபாசங்களை கடந்து சிந்திக்கவும் வாழவும் முயற்சிக்க வேண்டும்.

கார் பங்களா லக்ஷுரீ லைப் – பிராண்டட் லைப் - சுகபோகமான வாழ்வுமூறை ஆகியவற்றை கடந்து நிஜமான தரமான வாழ்வு குறித்து சிந்திக்க வேண்டும்.

ஹிஜ்ரீ 2 ம் நூற்றாண்டைச் சார்ந்த இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) ஆப்கானிஸ்தானில் உள்ள பல்க் என்ற நாட்டின் அரசராக இருந்தார். பெரும் செல்வந்தராக இருந்தார். அவரிடம் 18 இலட்சம் குதிரைகள் இருந்த்தாக ஒரு தகவல் கூறுகிறது. அவர் பெரிய் அரண்மனையில் வசித்தார். ஒரு இளைஞன் அவரது அரண்மனைக்குக் வந்து “ இந்த சத்திரத்திரல் நான் தங்கிக் கொள்ளலாமா என்று கேட்டார். இது சத்திரமல்ல என் அரண்மனை என்றார் இப்றாகீம். அப்படியா இங்கே உங்களுக்கு முன் யார் வசித்தார் ? அவருக்கு முன் யார் வசித்தார் ? அவர்கள் எல்லாம் இதை விட்டு விட்டு எங்கே போனார்கள் என்று கேட்டார். இப்றாகீம் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொன்னார். அப்படியானால் இது சத்திரமல்லாமல் வேறென்ன என்ற கேள்வியை கேட்டுவிட்டு சென்று விட்டான்.

இப்ராஹீம் பின் அத்ஹம் அதன் பிறகு அரச பதவி அனைத்தையும் துறந்து ஒரு சாமாணியராக வாழ்ந்தர்.

ஒரு நாள் ஆற்றங்கரையோரமாக அமர்ந்திருந்தார். அங்கு வந்த ஒருவர் அரச வாழவை துறந்து விட்டு உங்களால் எப்படி இருக்க முடிகிறது என்று கேட்டார். அப்போது அவருக்கு வாழ்வின் அந்தஸ்த்துக்களை உணர்த்துவதற்காக தன் கையில் வைத்திருந்த ஊசியை ஆற்றில் வீசினார். பிறகு மீன்களே அந்த் ஊசியை கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார். ஏராளமான மீன்கள் மேலே எழும்பி வந்தன. அவற்றில் ஒவ்வொன்றின் வாயிலும் ஒரு ஊசி இருந்தது. இபுறாகீம் (ரஹ்) தனது ஊர்சியை அடையாளம் கண்டு பெற்றுக் கொண்டார்.

கேள்வி கேட்ட மனிதரைப் திரும்பி பார்த்து இந்த பாதையில் எனக்கு கிடைத்த மிக சாதாரண மரியாதை இது என்று கூறினார்.

இப்ராஹீம் பின் அத்ஹம் போன்றவர்களின் வாழ்க்கை என்பது ஈமானிய தரத்தில் ஒருவகை உச்சமானது. எல்லோருக்கும் அது சாத்தியப்படாது  என்றாலும் நம்மில் ஒவ்வொரு வரும் பக்குவப்படுவதற்கு நம் தரத்திற்கு ஏற்ற அளவிளாவது முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு நபி மொழி மிகவும் பிரபலமானது

عُمَرُ بنُ الخَطَّابِ قالَ: بيْنَما نَحْنُ عِنْدَ رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ ذاتَ يَومٍ، إذْ طَلَعَ عليْنا رَجُلٌ شَدِيدُ بَياضِ الثِّيابِ، شَدِيدُ سَوادِ الشَّعَرِ، لا يُرَى عليه أثَرُ السَّفَرِ، ولا يَعْرِفُهُ مِنَّا أحَدٌ، حتَّى جَلَسَ إلى النبيِّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، فأسْنَدَ رُكْبَتَيْهِ إلى رُكْبَتَيْهِ، ووَضَعَ كَفَّيْهِ علَى فَخِذَيْهِ. وَقالَ: يا مُحَمَّدُ أخْبِرْنِي عَنِ الإسْلامِ، فقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: الإسْلامُ أنْ تَشْهَدَ أنْ لا إلَهَ إلَّا اللَّهُ وأنَّ مُحَمَّدًا رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، وتُقِيمَ الصَّلاةَ، وتُؤْتِيَ الزَّكاةَ، وتَصُومَ رَمَضانَ، وتَحُجَّ البَيْتَ إنِ اسْتَطَعْتَ إلَيْهِ سَبِيلًا، قالَ: صَدَقْتَ، قالَ: فَعَجِبْنا له يَسْأَلُهُ، ويُصَدِّقُهُ، قالَ: فأخْبِرْنِي عَنِ الإيمانِ، قالَ: أنْ تُؤْمِنَ باللَّهِ، ومَلائِكَتِهِ، وكُتُبِهِ، ورُسُلِهِ، والْيَومِ الآخِرِ، وتُؤْمِنَ بالقَدَرِ خَيْرِهِ وشَرِّهِ، قالَ: صَدَقْتَ، قالَ: فأخْبِرْنِي عَنِ الإحْسانِ، قالَ: أنْ تَعْبُدَ اللَّهَ كَأنَّكَ تَراهُ، فإنْ لَمْ تَكُنْ تَراهُ فإنَّه يَراكَ، قالَ: فأخْبِرْنِي عَنِ السَّاعَةِ، قالَ: ما المَسْؤُولُ عَنْها بأَعْلَمَ مِنَ السَّائِلِ قالَ: فأخْبِرْنِي عن أمارَتِها، قالَ: أنْ تَلِدَ الأمَةُ رَبَّتَها، وأَنْ تَرَى الحُفاةَ العُراةَ العالَةَ رِعاءَ الشَّاءِ يَتَطاوَلُونَ في البُنْيانِ، قالَ: ثُمَّ انْطَلَقَ فَلَبِثْتُ مَلِيًّا، ثُمَّ قالَ لِي: يا عُمَرُ أتَدْرِي مَنِ السَّائِلُ؟ قُلتُ: اللَّهُ ورَسولُهُ أعْلَمُ، قالَ: فإنَّه جِبْرِيلُ أتاكُمْ يُعَلِّمُكُمْ دِينَكُمْ.

மிக விரிந்து அர்த்தங்களை கொண்ட இந்த நபி மொழியில் இன்று நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வாது இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட இஹ்ஸான் எனும் பகுதி ஆகும்,

முஸ்லிம்களீன் வாழ்வில் ஈமான் இஸ்லாமிற்கு அடுத்து இஹ்ஸான் என்பதும் ஈமானைப் போலவே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். எப்படி ஈமான் இல்லாமல் போய்விட்டால் இஸ்லாமிய வாழ்வு இல்லாது போகுமோ அதே போல இஹ்ஸான் இல்லாவிட்டால் இஸ்லாமிய வாழ்வு அதன் தகுதியை இழந்துவிடும்.

இஹ்ஸான் என்றால் எதையும் உணர்ந்து செய்வதாகும். அதாவது சடங்கு சம்பிரதாயமாக செய்யாமல் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் காரியங்கலை ஆற்றுவதாகும்.

அல்லாஹ்வை நாம் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுக்கு அதுவே பொருளாகும்.

அன்பிற்குரியவர்களே

நாம் கொஞ்சம் சிந்தித்துப்பார்க்கலாம்.

நமது தொழுகை உள்ளார்த்தமானதா ? நமது திலாவத் ? நமது திக்ருகள் ? நமது தர்மங்கள் ?

நாம் அல்லாஹ்விடம் கேட்கிற பிரார்த்தனையில் - துஆ வில் - கூட உண்மை இருப்பதில்லை என்கிறார்கள் ஆன்மீக அறிஞர்கள்

என் பாவத்தை மன்னிப்பாயாக! என்று நிறைய பிரார்த்திர்க்கிறோம்.

அது பற்றிய உள்ளார்ந்த கவலை நமக்கிருக்கிறதா ?

அல்லது அது ஒரு சடங்காக நடைபெருகிறதா ?

யா அல்லாஹ் பரக்கத் செய்வாயாக என்று கேட்கிறோம். அல்லாஹ் தான் பரக்கத் செய்ய முடியும் என்ற உணர்வும் பரக்கத் இல்லை என்றால் என்ன ஆகும் என்ற கவலையும் அதில் இருக்கிறதா ?

பாவங்களை விட்டு எங்களை விலக்கி விடு என்று கேட்கிறோம். உண்மையில் பாவங்களை விட்டு விலகும் சிந்தனை இருக்கிறதா ?

ஹலாலை கொண்டு போதுமாக்கி விடு என்கிறோம். ஹலால் மட்டுமே போதும் என்று உண்மையில் நினைக்கிறோமா ?

மாலிக் பின் தீனார் ரஹ் அவர்கள் தொழுகையில் இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன் என்று ஓதுகிற போது குலுங்கிக் குலுங்கி அழுதுவிடுவார்கள். ஏன் இவ்வாறு அழுகிறீர்கள் என்று சீடர்கள் கேட்டார்கள். நாம் நமது மனோ இச்சை படி வாழ்ந்து கொண்டு. யார் யாரையோ உதவி செய்வார்கள் என்று நம்பிக் கொண்டு இப்படி கூறுகிறோமே இது சரியா என்று நினைத்து அழுகிறேன் என்றார் மாலிக் ரஹ்.

எந்த ஒரு காரியத்தையும் இஹ்ஸானுடன் அதாவது உள்ளார்ந்த உணர்வுடன் செயல்படுத்த நாம் முயற்சி செய்வதே உண்மையான டெவலப்மெண்ட – அதாவது வளர்ச்சியாகும்.

சடங்கு சம்பிரதயத்திற்காக காரியங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது

தொழுகையாக நோன்பாக ஹஜ்ஜாக இருந்தாலும் சரி

மெளலூது ஓதுவதாக. ஜியாரத்தாக இருந்தாலும் சரி.

கஃஹ்பு ஓதுவதானாலும் வாகி ஆ ஓதுவதானாலும்.

குழந்தை பிறந்ததும் காதில் பாங்கு சொல்கிறோம். பாங்கு சொல்ல ஆலிம்களை அழைத்து வருகிறோம்.

புது மனை புகுவிழாவில் யாசீன் ஒதுகிறோம்.

கல்யாணப் பதிரிகைகளில் பாரக்கல்லாஹ் லக என்ற துஆ வை பிரிண்ட் செய்கிறோம்.

இது போல நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் இஹ்ஸானுடன் அதாவது உள்ளார்த்தமான உணர்வுடன் நாம் காரியம் ஆற்ற வேண்டும்.

எதும் சடங்காக அமைந்து விடக் கூடாது.

சுப்யான் அத் தவ்ரீ (ரஹ்) இஸ்லாம் கண்ட மகத்தான ஹதீஸ்கலை அறிஞர்களில் ஒருவர். மிகச் சிறந்த சட்ட அறிஞர். ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தபஉத்தாபியீன்களில் ஒருவர், அவருக்கு பல பெருமைகளில் இருந்தாலும் அவற்றில் முதன்மையானது அவரது உள்ளார்த்தமான வாழ்வு.

ஒரு முறை பள்ளிவாசலுக்கு செல்லும் போது இடது காலை எடுத்து வைத்து விட்டார். அப்போது “யா தவ்ரு! ஓ மாடே! என்ற ஒரு அசரீரி அவருக்கு கேட்டது.   அன்றிலிருந்து தனது பெயருக்குப் பின்னால் தவ்ரு மாடு என்ற பெயரைச் சேர்த்துக் கொண்டவர்.

ஒருமுறை, ஹஜ்ஜுக்கு முயற்சி செய்து அந்த வாய்ப்புக் கிடைக்காத ஒரு நல்ல மனிதர் மிகுந்த கவலையோடு சுப்யான் தவ்ரீ அவர்களிடம் வந்து “ இந்த வருசம் ஹஜ்ஜுக்கு போக முடியவில்லை என்று கூறி பெருமூச்சு விட்டார்.

அப்போது சுப்யன் தவ்ரீ ரஹ். நான் நாற்பது ஹஜ்ஜு செய்திருக்கிறேன். அவற்றின் பலன்களை உங்களுக்கு தந்து விடுகிறேன். இந்த ஒரு பெருமுச்சின் பலனை எனக்கு தரூவீரா என்று கேட்டார்.

சடங்கார்த்தமான ஆயிரம் நற்செயல்களை விட ஒரு நற்செயல் செய்ய முடியாத உண்மையான கவலை ஆயிராமாயிரம் மடங்கு மதிப்பு மிக்கது.  

எனவே நமது வாழ்வை உண்மையானதாக ஆக்கிக் கொள்வோம். ஒவ்வொரு செயலையும் உள்ளார்த்தமாக செய்வது என தீர்மாணிப்போம்.

சடங்குக்காக சம்பிரதாயத்திற்காக காரியங்களை ஆற்றுவதிலிருந்து விலகிக் கொள்வோம்.

அதுவே ஈமானிய வாழ்வின் உண்மையான டெவலப் மெண்ட் ஆகும்.

நமது ஒவ்வொரு செயலிலும்  உண்மையை உணரும் இஹ்ஸானிய வாழ்வு கை கூடட்டும்.  

அல்லாஹ் நமது புதிய வருடங்களை சிற்ப்பானதாக ஆக்கிவைப்பானாக!.

ஆமீன்.

 

 

 

 

4 comments:

  1. Anonymous8:21 PM

    மாஷா அல்லாஹ்! எவ்வளவு ஆழமான கருத்து!

    ReplyDelete
  2. Anonymous10:36 PM

    "டெவலப்" நல்ல கான்செப்ட்!.

    ReplyDelete
  3. குறிப்பு வழங்குவதில் ஹஜ்ரத்திற்கு நிகர் ஹஜ்ரத் தான். மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்

    ReplyDelete
  4. குறிப்பு வழங்குவதில் ஹஜ்ரத்திற்கு நிகர் ஹஜ்ரத் தான்.

    ReplyDelete