பாலஸ்தீனின் ஒரு பகுதியான காஸாவில் இஸ்ரேல் பயங்கவராத தாக்குதலை தொடுத்து வருகிறது. அதில் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். அதில் மூவாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் அடங்குவர். சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடும் காயம்பட்டுள்ளனர். காஸா நகரின் மீது இஸ்ரேல் தொடர்ந்து வீசிவருகிற குண்டு தாக்குதலால் காஸா நகரம் உருக்குலைந்து போயுள்ளது.
காஸா கடுமையான
முற்றுகைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிற காரணத்தால் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சுமார்
20 இலட்சம் மக்கள் தண்ணீர் , மின்சாரம் , மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்படாமல் தவிக்க விடப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது
காஸாவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் மரண தண்டனை கொடுப்பதற்கு சமமானது என்று ஐ
நா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பாலஸ்தீன
விடுதலைக்கு போராடி வருகிற ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை தாக்கிய போது 220 க்கும்
மேற்பட்டோரை சிறை பிடித்திருந்தனர். அவர்களில் இரண்டு முதிர்ந்த பெண்கள் நேற்று முன் தினம் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவரான
Yokheved
Lifshitz லிஃப்ஜியட், கத்தார் நாட்டின் மத்தியஸ்த ஏற்பாட்டில்
சர்வதேச மனி உரிமை அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்ட போது போராளிகளிடமிருந்து
பிரிந்து வந்த அவர் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு அவர்களிடம் திரும்பிச்
சென்று சலோம் என்று கூறி கைகுலுக்கி விடை பெற்றார். இது ஹமாஸின் மனிதாபிமான
பண்பிற்கும் உலக முஸ்லிம்களின் பாரம்பரியத்திற்கும் கிடைத்த மற்றுமொரு
மரியாதையாகும்.
கைதிகளை
ஹமாஸ் கொடூரமாக நடத்துகிறது என்ற ஊடகப் புலம்பல்களுக்கும் முடிவு கட்டுகிற இந்தக்
காட்சி வன்மமே வாழ்வாக கொண்ட இஸ்ரேலின் முகத்தில் மீண்டும் ஒரு முறை கரி
பூசியிருக்கிறது.
இஸ்ரேலியர்களைப் பற்றி
விவரம் தெரியாதவர்கள், ஹமாஸ் அமைப்பு இந்த நிலையிலும் இவ்வளவு பேரை ஏன் கைது செய்ய வேண்டும் ? அதிலும் வயோதிகர்கள் பெண்கள் குழந்தைகளை ஏன் கைது செய்ய வேண்டும் ? இது என்ன நியாயம்? இது காட்டுமிராண்டித்தனம் அல்லவா? என்று கேட்பதுண்டு.
இஸ்ரேலியர்யர்களின்
விந்தை குணம்
இதுவரை
பாலஸ்தீன் மக்கள் 7 ஆயிரம் பேருக்கு மேல் படுகொன்லை செய்திருக்கிற இஸ்ரேல் தன்னுடைய 200 கைதிகளுக்காக துடிக்கிற துடிப்பை பார்த்தால் யாருக்கும் ஆச்சரியமாக இருக்கும். வெளிநாட்டு அதிபர்கள் கூட அந்தக் கைதிகளைப் பற்றி முக்கியமாக
பேசுகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் ஹமாஸ் இஸ்ரேலியர்களை சிறை பிடித்திருப்பது பற்றி ஒரு தெளிவை அறிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
எல்லா வகையான தொழில் நுட்ப வலுவும் வல்லரசு நாடுகளின் நிபந்தனையற்ற ஆதரவையும் கொண்ட இஸேரேலின் மிருகச் செயல்களை கட்டுப்படுத்தும் ஒரே வழி இஸ்ரேலியர்களை கைது செய்வதாகும். மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதும் சித்ரவதைக்குள்ளாவதையும் கொசுக்களைப் போல கருதுகிற இஸ்ரேலியர்கள் தங்களுடையவர்கள் கைது செய்யப்பட்டால் பதறுவார்கள் துடிபார்கள். எப்படியாவது விடுவிக்க முயலுவார்கள்.
திருக்குர் ஆனின் பகரா அத்தியாயத்தின் 40 முதல் 125 வரையிலான வசனங்கள் யூதர்களின்
அக்கிரமச் செயல்களை தொடர்ந்து பட்டியலிடுகிறது.
அதில் ஒன்றை 2 ம் அத்தியாயத்தின் 85 வது வசனம் விவரிக்கிறது.
மதீனாவில் அவ்ஸ்
கஜ்ரஜ் என இரண்டு சகோதரக் குடும்பங்கள் இருந்தன. அவர்களுக்கு அருகில் பனூ நுழைர் பனூகுறைழா
பனூ கைன்காஃ என்ற மூன்று யூதக்குழுக்கள் வந்து குடியேறி இருந்தனர்.
நம்முடைய நாட்டிலுள்ள
பிராமணர்களைப் போல எங்கே இருந்தாலும் அங்கே தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ளும்
பழக்கம் அவர்களுடையது.
அந்த வகையில் மதீனாவிலும்
தங்களது கைவரிசைய காட்டினர். அங்கிருந்த அவ்ஸ் கஜ்ரஜ் களுக்கிடையே சண்டையை மூட்டிவிடுவார்கள்.
யுத்த நெருப்பை மேலும் வளர்க்கும் விதமாக அதை வலுவேற்ற அவர்களே அணி பிரிந்து இரண்டு தரப்பிலும் பங்கேற்பார்கள். இறுதியில் யுத்தத்தில் யூதர்களில் யாரேனும் எதிர் தரப்பில் கைதியாக சிக்கினால் அவர்களை மீட்பதற்காக காசு பணம் வேண்டுமளவு கொடுப்பார்கள். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால் எங்களது பணயக்கைதிகளை மீட்பது எங்களது கடமை என்பார்கள். மானுடம் சிறிதுமற்ற இந்த நடவடிக்கை காரணமாகவே “ஓ இவர்களே! என்று கேவலமாக விழித்து திருக்குர் ஆன் கேட்கிறது.
ثُمَّ أَنتُمْ هَٰؤُلَاءِ تَقْتُلُونَ
أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِّنكُم مِّن دِيَارِهِمْ تَظَاهَرُونَ
عَلَيْهِم بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَإِن يَأْتُوكُمْ أُسَارَىٰ تُفَادُوهُمْ
وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ
பாவமும்
பகையும் வெளிப்பட நீங்கள் சண்டைக்காக வெளியேறி ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்கிறீர்கள்! பிறகு உங்களைச் சார்ந்தவர்கள் கைதிகளாக சிறைபட்டு வந்தால் அவர்களை பணயத் தொகை கொடுத்து மீட்கிறீர்கள். தடை செய்யப்பட்ட சண்டைக்கு காரணமாக
இருந்து விட்டு கைதிகளை விடுவிக்கிறோம் என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?.
என்று திருக்குர்
ஆன் அவர்களது வக்கிர புத்தியை கேள்வி கேட்கிறது.
வேதத்தின் சில
கடமைகளில் அதீத அக்கறை காட்டுவது மற்றவற்றை வேணுமென்றே திமிராக நிராகரித்து விடுவது
இதன் மூலம் அல்லாஹ்விடமே விளையாடுவது –
நீங்கள் நன்றாக
கவனித்துப் பாருங்கள் இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக காஸாவை தாக்குகிறது.. பொதுமக்கள்
அடர்த்தியாக வசிக்கிற பகுதிகளில் குண்டு வீசி வேண்டுமென்றே போரில் சம்பந்தமில்லாத ஆயிரக்கணக்கான
மக்களை கொன்று குவிக்கிறது. மருத்துவ மனைகளில் குண்டு வீசுகிறது அன்றாடம் ஆயிரக்கணக்கான
மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து வருகிற காட்சிகளை காண்பதற்கே இதயம்
நடுங்கும் அளவு நிலமை படு மோசமாக இருக்கிறது.
ஆனாலும் இதைப்பற்றி
எதையும் கண்டு கொள்ளாமல் தங்களது நாட்டின் 200 கைதிகளைப் பற்றி இஸ்ரேல் பெரிதாக பேசுகிறது.
அதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள்
பேசுகின்றன.
காஸா மீதான் போரை
நிறுத்துங்கள் என்று கோரிக்கை வைப்பதற்காக – கவனியுங்கள் போரை நிறுத்துவதற்காக அல்ல;
நிறுத்துங்கள் என்று கோரிக்கை வைப்பதற்காக ஐ நா சபையின் பாதுகாப்பு குழு கூட்டம் நடக்கிறது.
இந்த தீர்மாணத்தை ரஷ்யா முன் மொழிந்திருக்கிறது.
அந்தக் கூட்டத்தில் காஸா முற்றுகை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது” என்று ஐ நா பொதுச் செயலாளர் அந்தோணி குத்ரேஸி என்று பேசினார்.
இதில் வெளிப்படுகிற
மகா அக்கிரம்த்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது பாலஸ்தீன்
மக்கள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொல்லப்படலாம் ஆனால் அவர்களுடைய
கைதிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், விடுதலை செய்யப்பட வேண்டும்.
என்ன மோசமான வக்கிரம்
பாருங்கள்!
உலகிற்கு அவர்கள்
என்ன சொல்ல வருகிறார்கள். யூதர்கள் உயர்ந்தவர்கள். அவர்களின் ஒரு உயிருக்கு பல்லாயிரக்கணக்கான
பாலஸ்தீன் உயிர்கள் சமமானது
சாட்சாத் நம்முடைய
நாட்டில் சனாதன கோட்பாட்டாளர்கள் எப்படி உயர் சாதி மக்களுக்கு தாழ்ந்த ஜாதிக்கார்ர்கள்
விசயத்தில் மேன்மை இருப்பதாக நினைக்கிறார்களோ அதே நிலைப்பாடு தான் இது.
இது மிக மிக கேவலமான
கோட்பாடல்லவா?
யூத கைதிகளுக்காக
என்று பேசுகிறவர்கள் இந்த சிந்தனையை நாசூக்காக மறைத்து விடுகிறார்கள்.
தங்களுடைய இன மேலாண்மையை காட்டிக் கொள்ள இஸ்ரேல் அவர்களில் யாராவது கைது செய்யப்பட்டால்
உடனே அவர்களை விடுதலை செய்ய கீழே இறங்கிவருன்,
பாலஸ்தீன் மக்கள் கடந்த 75 ஆண்டுகளில்
பாலஸ்தீன மக்களிடம் இஸ்ரேல் கடைபிடிக்கும் வரன்முறை அற்ற அக்கிரமத்திலிருநது தப்பித்துக் கொள்ளவும் சில தீர்வுகளை தேடிக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கிற
போது இஸ்ரேலியர்களை கைதிகளாக பிடித்துக் கொள்வார்கள்.
இதற்கு முன்பு பல சந்தர்ப்பத்திலும் இப்படி நடந்திருக்கிறது. இஸ்ரேலியர்களை கைதியாக
பிடிப்பது என்பது பாலஸ்தீன மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான
ஒரு கடைசி வாய்ப்பு. அப்படி ஒருவரை கைது செய்வது என்பது சாமாணிய விசயமல்ல. பல உயிர்களை
இழ்ந்து நடக்கிற விந்தை அது.அப்படி யாராவது கைது செய்யப்பட்டால் ஒட்டு மொத்த யூதர்களும்
துடிப்பார்கள். துவள்வார்கள். அவரை விடுவிப்பதற்காக எதையும் செய்வார்கள்.
எனவே தான் தங்களது நூற்றாண்டு வேதனைக்கு விடிவாக இப்போதும் சில கைதிகளை பிடித்துச்
சென்றிருக்கிறார்கள்
அவர்கள் இஸ்ரேலைப் போல மக்களை கொன்று குவிக்கவில்லை. சித்ரவதை செய்யவில்லை. கைது
செய்யப்பட்ட போது ஏற்பட்ட பிணக்குகளை தவிர மற்ற படி தங்களால் முடிந்த உயர் பட்ச மானுட
மரியாதையை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இப்போதும் கூட நேற்று முன் தினம் விடுதலை செய்யப்பட்ட Yokheved Lifshitz லிஃப்ஜியட், ஹமாஸ் அமைப்பினர் இத்தனை
தாக்குலுக்கு நடுவிலேயும் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பாராட்டியிருக்கிறார்.
இதில் கூட ஒரு வக்கிரம் பாருங்கள்
அந்த அம்மையார், தான் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது அந்த பகுதி ஒரு நரகம் போல இருந்தது 'I've been through hell'
என்று கூறியதை நம்முடைய தமிழ்நாட்டின் ஹிந்து தமிழ் பேப்பர் உட்பட பல செய்தி தாள்கள்
நரகில் இருப்பது போல இருந்தது என்று கூறியதாக தலைப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் ஹமாஸ்
அமைப்பினர் தங்களிடம் எவ்வளவு மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டார்கள் என்று அவர் கூறிய
செய்தியை பிரதானப்படுத்தவில்லை.
இந்த இரண்டு முதிரிந்த பெண்கள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஹமாஸின் மற்றுமொரு
மனிதாபிமானத்தை அல் ஜஸீரா கூறுகிறது.
ஹமாஸின் பேச்சாளர் கூறுகிறார்
“We informed our Qatari
brothers yesterday evening that we would be releasing Nourit Yitshaq and
Yokhefed Lifshitz for humanitarian reasons and without expecting anything in
return.
வயது முதிர்ந்த இவ்விருவரை கவனிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக ஹமாஸ் விடுவித்திருக்கிறது.
இதற்காக இஸ்ரேலிடமிருந்து நாங்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை.
இது எவ்வளவு உன்னதமான காரியம் பாருங்கள்!
விடுதலைப் செய்யப்பட்ட 85 வயது மூதாட்டி கூறுகிறார். (ராய்ட்டர் செய்தி நிறுவனம்
இதை பதிவு செய்திருக்கிறது)
என்னை இரு சக்கர வாகணத்தில் கட்த்தி சென்றனர். ஒருவர் முன்னால் வண்டியை ஓட்ட இன்னொருவர்
எனக்கு பின்னால் இருந்தார். அது எனக்கு வலியை கொடுத்த்தது. ஆனாலும் எனகு விலா எலும்பு
உடையாதவாறு என்னை அவர்கள் பிடித்துக் கொண்டனர்.
They didn't break my ribs
அந்த அம்மையார் அடுத்து கூறுகிறார்
"When we got there, first of all they
told us that they believed in the Koran and that they would not harm us,"
she recounted.
எங்களை அவர்கள் பிடித்துச் சென்ற போது எங்களிடம்
அவர்கள் கூறினார்கள் நாங்கள் குர் ஆனை நம்புகிறவர்கள். உங்களிடம் முரட்டுத்தனமாக நடந்து
கொள்ள மாட்டோம் என்று கூறினார்கள்.
Lifshitz said
a doctor visited them every other day and brought them the medicines they
needed.
"They took
good care of the wounded," Lifshitz said.
காயம் பட்டவர்களை
அவர்கள் நன்றாக கவனித்துக் கொண்டனர்.
ராய்ட்டர் செய்தி நிறுவனம் மேலும் கூறுகிறது.
Video of her release on Monday showed her turning around to shake the hand of a masked captor. Asked why she had done that, she replied: "They treated us gently and met all our needs."
லிபிட்ஸ் அம்மையார்
போராளி ஒருவருக்கு கைகொடுத்த்து ஏன் என்று கேட்கப்பட்டது அதற்கவர் பதிலளித்தார் அவர்கள்
எங்களை மிகவும் நாகரீகமாக நட்த்தினார்கள். எங்களது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றினார்கள்
..
وقال ابن عباس: أمر رسول الله أصحابه يوم بدر أن يُكرموا الأسرى، فكانوا يُقَدِّمُونهم على أنفسهم عند الغداء، ينتقون لهم أجود ما لديهم من طعام، ويقدمون لهم الملابس،
எனக்கு ரொட்டிய கொடுத்து விட்டு அவர்கள் பேரீத்தம் பழத்தை சாப்பிடுவார்கள். நான் வெட்கப்பட்டு அவர்களிடம் திருப்பி கொடுப்பேன். அவர்கள் மறுத்து விடுவார்கள்
ஒரு பெண் கைதியாக பிடிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பச்சிளம் குழந்தை இருந்தது.
அந்த குழந்தை இன்றி அவர் தவித்தார். அவரை திருப்பி அனுப்புவது சாத்தியப்படவில்லை .
அப்போது அவரது குழந்தையை பெற்று வருவதற்காக பெருமானார் (ஸல்) அவர்கள் படைய அனுப்பி
வைத்தார்கள்
ورقَّ قلبه للمرأة الأسيرة فأرسل جنوده إلى بلد بعيد ليُأتي لها بابنها
فقال ـ صلى الله عليه وسلم ـ : ( استوصوا
بالأُسَارَى خيرا ) رواه الطبراني .
وكان الوليد بن
الوليد بن المغيرة يقول مثل ذلك ويزيد قوله : "
وكانوا يحملوننا ويمشون " ..
இது தான் இஸ்லாமின் பாரம்பரியம். இதை தான் ஹமாஸ் போராளிகள் நாங்கள் குர் ஆனை நம்புகிறவர்
என்று கூறியுள்ளார்கள்.
கோட்டு சூட்டு அணிந்த மேற்குலக காட்டுமிராண்டிகள் முஸ்லிம்களின் நாகரீகத்தை குறை
சொல்ல எந்த அருகதையும் அற்றவர்கள்.
آمين
ReplyDeleteآمين
ReplyDeleteகால சூழ்நிலைக்கேற்ப ஜும்ஆ குறிப்பு வழங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் ஹழ்ரத் மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்
ReplyDelete