வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 02, 2023

அகதிகளை தாக்கும் அரக்கன்

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ [البقرة: 218].

உலகில் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் தாம் வாழும் இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறுகின்றனர்.

அகதிகளின் வாழ்வென்பது மிக கொடூரமானது. (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்)

இலங்கையில் கொடூரமாக யுத்தம் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் ராமேஷ்வரத்தில் ஒரு நடுத்தர வயதுக்காரர் பசியால் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் சிலர் பார்ப்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறாய் ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டனர். அவர் சொன்னார். நான் நேற்று வரை இலங்கையில் கோடீஸ்வரன். உயிருக்கு பயந்து இங்கு ஓடி வந்திருக்கிறேன். பசிக் கொடுமையால் உங்களிடம் கையேந்தினேன்.

அகதி வாழ்க்கை என்பது ஒரு கணத்தில் எவ்வளவு பெரும் வேதனைக்கு மக்களை தள்ளிவிடுகிறது ?

நிர்பந்த சூழ்நிலை காரணமாக இப்படி ஒரு நிலைக்கு ஆளாகிறவர்கள் காப்பாற்றப்படுவதற்கு வழி கண்டவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மகத்தான் தலைவர் ஆவார்கள்.

மக்கா நகரிலிருந்து தமது மார்க்கத்தை காப்பாற்றிக் கொண்டு மதீனா வந்து சேர்ந்த அகதிகளை (முஹாஜிர்கள்) மிகச் சிறப்பாக அரவணைக்கிற ஏற்பட்டை பெருமானார் மதீனாவில் செய்தார்கள்.

அகதிகளை தனியாக ஒரு கூடாரத்தில் தங்க வைக்க வில்லை. மதீனாவாசிகளின் குடும்பத்தில் ஒருவராக ஆக்கினார்கள்.

பெருமானார் ஏற்படுத்திய பக்குவத்தின் காரணமாக அந்த மதீனாக்காரர்களோ அந்த அகதிகளுக்காக தமது நிலத்தை பிரித்து பங்கு வைத்து சொந்தமாக்கி கொடுத்து விடுமாறு பெருமானாரிடன் கோரிக்கை வைத்தார்கள்

عن يزيد بن الأصم: أن الأنصار قالوا: يا رسول الله، اقسم بيننا وبين إخواننا من المهاجرين الأرض نصفين. قال: لا، ولكنهم يَكفونكم المَؤُونة، وتقاسمونهم الثمرة؛ والأرضُ أرضُكم. قالوا: رضينا. فأنزل الله تعالى: { وَٱلَّذِينَ تَبَوَّءُو ٱلدَّارَ وَٱلإِيمَانَ مِن قَبْلِهِمْ..}

 உங்களுக்காக அவர்கள் உழைப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் விளைச்சளில் பங்கு கொடுங்கள்! ஆனால் நிலம் உங்களுடையதே! என்றார்க்ள பெருமானார்,

அபூதல்ஹா ரலி அவர்களும்  அவருடைய மனைவி உம்மு சுலைம் ரலி) அவர்களும் தம் குழந்தைக்கு வைத்திருந்த உணவை அகதிகளுக்கு கொடுத்தார்கள். விளக்கை அணைத்து விட்டு தாமும் உண்ணுவது போல நடித்தார்கள்.

أن رسول الله صلى الله عليه وسلم دفع إلى رجل من الأنصار رجلاً من أهل الصفة، فذهب به الأنصاري إلى أهله، فقال للمرأة: هل من شيء؟ قالت: لا، إلا قوت الصِّبْيَة. قال: فَنَوِّميهم، فإذا ناموا فأتيني [به]، فإذا وضعت فأطفئي السراج قال: ففعلت، وجعل الأنصاري يقدم إلى ضيفه ما بين يديه، ثم غدا به إلى رسول الله صلى الله عليه وسلم، فقال: لقد عجب من فعالكما أهل السماء. ونزلت { وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ} . رواه البخاري

மதீனாவின் புற நகரில் குடி இருந்த பனூன்னழீர் யூதர்கள்  ஹிஜிரி 4 ம் வருடம் தம் இருப்பிடங்களை காலி செய்த போது அந்த இடமும் அதிலிருந்த தோட்டம் துறவுகளுக்கும் பெருமானாரின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்தது, அவற்றை இரண்டு ஏழை அன்சாரிகளுக்கு கொடுத்ததை தவிர மற்ற அனைத்தையும் முஹாஜிர்களுக்கே பெருமானார் கொடுத்தார்கள்.  அன்சார்கள் துளியும் சலனப்படவில்லை

 .عَنْ عَبْد اللَّه بْن أَبِي بَكْر , أَنَّهُ حُدِّثَ أَنَّ بَنِي النَّضِير خَلَّوْا الْأَمْوَال لِرَسُولِ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَتْ النَّضِير لِرَسُولِ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّة يَضَعهَا حَيْثُ يَشَاء , فَقَسَمَهَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ دُون الْأَنْصَار , إِلَّا أَنَّ سَهْل بْن حُنَيْف وَأَبَا دُجَانَة سِمَاك بْن خَرَشَة ذَكَرَا فَقْرًا , فَأَعْطَاهُمَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ .

அகதிகளே கனிந்துருகும் அளவு அன்சாரிகள் உதவினார்கள்.

عن أنَس قال، قال المهاجرون: يا رسول اللّه ما رأينا مثل قوم قدمنا عليهم، أحسن مواساة في قليل ولا أحسن بذلاً في كثير، لقد كفونا المؤنة وأشركونا في المهنأ، حتى لقد خشينا أن يذهبوا بالأجر كله، قال:(لا، ما أثنيتم عليهم ودعوتم اللّه لهم) ""أخرجه أحمد في المسند"".

 முஸ்லிம்கள் அவர்களது வரலாறு தோறும் அகதிகளை ஆதரிக்கும் இந்த பண்பாட்டை கை கொண்டார்கள்

சலாஹுத்தீன் அய்யூபி பாலஸ்தீனை வெற்றி கொண்ட போது முஸ்லிம்களுக்கு எதிராக கடும் வெறுப்புணர்வை ஏற்படுத்திய பாதிரியார்களிடமும் கருணை காட்டினார். 10 தீனார் பெற்றுக் கொண்டு வெளியேற அனுமதியளித்தார்.   ஆண்கள் பணக்காரனாக இருந்தாலும் 10 தீனார் செலுத்தினால் போதும் என்றார். பெண்கள் 5 தீனார்கள் செலுத்தினால் போதும் என்றார். குழ்ந்தைகள் 2 தீனார் செலுத்தினால் போதும் என்றார்.

சிலுவையுத்தக்காரர்கள் பல்லாயிரம் கீமீ பயணம் செய்து முஸ்லிம்களை ஆக்ரமிப்பதற்காகவே பாலஸ்தீனிற்குள் வந்திருந்தனர். பல இலட்சம் முஸ்லிம்களை கொன்று குவித்தனர். சிலுவை யுத்தக் காரர்களின் குற்றச் செயல்களுக்கு சலாஹுத்தீன் அந்தக் அகதிகளை கூட்டுப்பலியாக்கவில்லை.

        لقد ضرب صلاح الدين مثلا عظيما في سماحة الإسلام وقوته وعزته ، فحين تَسَلَّم المسلمون بيت المقدس في يوم الجمعة السابع والعشرين من رجب ، استقر رأي صلاح الدين في مجلس الشورى الذي عقده أن يُؤخذ من الرجل عشرة دنانير يستوى فيه الغني والفقير والطفل من الذكور والبنات دينارين ، والمرأة خمسة دنانير فمن أدى ذلك إلى أربعين يوماً فقد نجا ، ومن انقضّت الأربعون يوماً عنه ولم يؤد ما عليه فقد صار مملوكاً

மானுடத்தை நிலை நாட்டுவதில் அந்த மாபெரும் முஸ்லிம் வீரரின் தயாளம் இந்த அளவில் நின்று விடவில்லை

கோட்டைக்குள் இருந்த அறுபதாயிரம் சிலுவைப்போர் வீரர்களுள் பத்தாயிரம் பேருக்கான பிணையத் தொகையைத் தானே தன் சொந்தப் பணத்திலிருந்து கட்டிவிடுவதாக சலாஹுத்தீன் அறிவித்தார்! அத்துடன் இன்னும் ஏழாயிரம் வீரர்களுக்கான தொகையைத் தன் சகோதரர் சைபுத்தீன் அளிப்பார் என்றும் சொன்னார்.

அப்படி வெளியேறுகிறவர்களில் வாகன வசதி இல்லாதவர்களுக்கும் அரசாங்கச்  செலவில் கழுதைகள் வாங்கிக்கொடுக்கவும் உத்தரவிட்டார்!

ஆங்கில வரலாற்றுப் பேராசான் ஸ்டான்லீ லேன் பூல் சொல்கிறார்.

ஒரு நாள் காலை சூரியன் உதித்தததிலிருந்து மறையும் வரை சலாஹுத்தீன் கோட்டைக் கதவின் வாசலில் நின்று கொண்டு எழைகளையும் இயலாதோரையும் கட்டணமின்றி வெளியேற அனுமதித்தார்,

    ويروي (استانلي لين بول ): " إن السلطان قد قضى يوماً من أول بزوغ الشمس إلى غروبها وهو فاتح الباب للعجزة والفقراء تخرج من غير أن تدفع الجزية " .

சலாஹுத்தீன் பத்திரமாக அனுப்பி வைத்த அகதிகளை கிருத்துவ உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களிடம் சலாஹுத்தீன் மேலும் தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார். 

வரலாற்றாசிரியர் முல் எழுதுகிறார்.

      ويقول المؤرخ الإنجليزي (مل): " ذهب عدد من المسيحين الذين غادروا القدس إلى أنطاكية المسيحية فلم يكن نصيبهم من أميرها إلا أن أبى عليهم أن يضيفهم ، فطردهم فساروا على وجوههم في بلاد المسلمين ، فقوبلوا بكل ترحاب " .

ஜெரூசலத்திலிருந்து வெளியேறிய அகதிகள் அன்தாக்கியாவிற்கு சென்றனர். அது அப்போது கிருத்துவ மன்னர் வசம் இருந்தது, அவர் அந்த அகதிகளை ஆதரிக்கவோ உணவளிக்கவோ மறுத்து விட்டார்.

அப்போது ஒரு தாய் அழுகிற தன் குழந்தைக்கு உணவு கொடுக்க முடியாத பரிதபத்தில் வேறு வழியே இல்லாமல் கதறியபடி அக்குழந்தையைக் கடலில் வீசிக் கொன்றாள். பிறகு திரிபோலி நகரின் கோட்டையை நோக்கித் திரும்பி நின்று அந்தத் தாய் சபித்ததை சிலிர்ப்புடன் அத்தனை சரித்திர ஆசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.

கிருத்துவ மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்த  திரிபோலியை நோக்கி அகதிகளாக சென்றவர்கள் முஸ்லிம்களிடமே திரும்பி வந்தார்கள். அவர்களை சலாஹுத்தீன் அய்யூபியின் வீரர்கள் வரவேற்று உபசரித்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் தமது ஆளுகைக்கு உட்பட்ட டைர் (Tyre) நகரில் குடியேறி வசிக்கலாம்  என்று சலாஹுத்தீன் அனுமதியளித்தார்

உலகிலுள்ள யூதர்களும்  கிருத்தவர்களும் அகதிகளாக வந்த போது அவர்களை வாரி அனைத்து ஆதரித்து நின்ற முஸ்லிம்கள் இன்று அகதிகளாக உலகின் பல பாகங்களிலும் கடும் துயரை அனுபவித்து வருகிறார்கள்

செஸ்னிய அகதிகள், மியான்மர் அகதிகள், ஆப்கான் அகதிகள் எனும் தொடரும் வரிசையில் இப்போது மிக மோசமான அழிவுகளை பாலஸ்தீன அகதிகள் சந்தித்து வருகின்றன.

காஸாவின் மீது 25 வது நாளாக தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது

இதுவரை 9000 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர் அகதிகள் ஆவார்கள்,

ஆமாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்பவர்கள்.

காஸா என்பதை ஒரு நகரம் என்று சொல்வதை விட ஒரு மாபெரும் அகதி முகாம் என்று சொன்னால் அது மிகையாது.

ஆம். காஸா வில் 20 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 17 இலட்சம் பேர் அகதிமுகாம்களில் வசிக்கிறார்கள் (அல்ஜஸீரா)

அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பெரும் நிலப்பரப்பை ஆக்ரமித்த போது அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். பாலஸ்தீனிற்கு வெளியே செல்லாமல் பாலஸ்தீனின் ஒரு பகுதியான காஸாவிலே அகதிகளாக இருப்பவர்கள்.  

1917  ஆம் ஆண்டு முதல் உலக யுத்தம் முடிந்த பிறகு  பிரிட்டன் பாலஸ்தீனுக்குள் நுழைந்தது.

அப்போது பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஆர்தர் பால்போர் பாலஸ்தீனில்  இஸ்ரேலியர்களுக்கும் இரு தாய்நாடு தரப்படும் என  வாக்களித்தார்.  அதை நியாயப்படுத்துவதற்காக பால்போர் டிக்ளரேசன் மக்காவின் ஷரீபுக்கு (தலைவருக்கு )  பாலஸ்தீனமும் ஒரு தனி நாடாக இருக்கும் வாக்களித்தது. அப்போது யூதர்கள் பாலஸ்தீனில் 8 சத்வீதம் பேரே இருந்தனர்.

இது அறிவிப்பு வெளியிடப்பட்ட 106 வது நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.\

இந்த அறிவிப்பிற்கு பிறகு பாலஸ்தீனிலிருந்து ஒரு பகுதியை பிரித்து   இஸ்ரேல் எனும் ஒரு நாட்டை உருவாக்கும் செயல்பாடு நடை முறைக்கு வந்தது.

ஆனால் பாலஸ்தீனர்களுக்கான் நாட்டை உருவாக்கும் வேலையை பிரிட்டன் செய்யவில்லை. இது வரலாற்றுக்கு பிரிட்டன் செய்த ஒரு மா பெரிய துரோகம்.

இந்த நிலையில்  1948 ல் இரண்டாம் உலக யுத்தம் முடிந்த போது  பாலஸ்தீனிலிருந்து பிரிட்டன் வெளியேறியது. அப்போது யூதர்கள் தங்களுக்கு என்று ஒரு நாட்டை பிரகடணப்படுத்தினர். இப்போதையை இஸ்ரேலின் 10 ல் ஒரு பகுதியளவு சிறியதாக அது இருந்தது. அவர்கள் இஸ்ரேல் என்று அறிவித்த பகுதியிலிருந்து 7 இலட்சம் பாலஸ்தீன் மக்கள் தங்களது வெளியேற்றப்பட்டனர்.

ஒரு சில நாட்களில் ஆயிரமாண்டுகளாய அங்கு வாழ்ந்த வந்த மக்கள் நிலமற்றவர்களாக மாறினார்கள்.

அதன் பிறகு 1967 ல் அரபு இஸ்ரேல் யுத்ததில் இஸ்ரேல் வெற்றியடைந்த போது முழு பாலஸ்தீனத்தையும் அது ஆக்ரமித்த்து. அத்துடன அக்கம் பக்கத்திலிருந்த அரபு நாடுகளின் பல பகுதிகளையும் ஆக்ரமித்தது.

அப்போதும் பல இலட்சம் பாலஸ்தீனர்கள் அகதிகளாயினர்.

இந்த அகதிகளின் தேசமாகத்தான் இப்போது காஸா இருக்கிறது.

75 சதவீதா காஸா மக்கள் அகதி முகாம்களில் இருக்கிறார்கள். காஸாவில் சுமர் 17 அகதிமுகாம்கள் இருக்கின்றனர் என்கிறார்கள். அந்த முகாம்கள் ஒவ்வொன்றிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகின் பிச்சைக்கார்ர்களாக வாழ்ந்து வருகிறார்கள்;

கடுமையான வறுமை, உணவுத் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை, மருந்துகள் இல்லாமை,  என இல்லாமைகளில் வாழும் ஒரு சமுதாயமாக அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்/ இதற்கிடையே இஸ்ரேலின் வன் முறை மட்டும் எந்த குறையுமில்லாமல் அவர்களை வாட்டி வந்தது.

இதெற்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அதை ஆதரிக்கும் நாடுகளுமாகும். இஸ்ரேலின் இந்த கொடுமைக்கு ஆதரவு கொடுக்கிற ஆதரவு தான் இந்த கொடுங்கோன்மையை எந்த வித தயக்கமும் இல்லாமல் செய்யும் மனோ தைரியத்தை இஸ்ரேலுக்கு வழங்குகிறது.

அதனால் காஸா பகுதி மக்கள் 75 ஆண்டுகளாக 3 தலைமுறைகளாக தொடர்ந்து இஸ்ரேலின்  வன்முறையை அனுபவித்து வருகிறார்கள்.

அந்த வன்முறையின் உச்சமாக கடந்த வியாழக்கிழமை காஸாவிலுள்ள  அல் மகாஸி அகதி  முகாம். கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் குண்டு வீசியது. அது உலகை உலுக்கியது.

பல நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் கொல்லப்பட்டார்கள்

மூன்று நாட்களுக்கு முன் காஸாவில் உள்ள மிகப் பெரும் அகதி முகாம்களில் ஒன்றான் ஜபலியா அகதி முகாமை தாக்கியது. ஒரு முறை தாக்கியதோடு நிறுத்த வில்லை ஜபலியா அகதி முகாம் மீது மூன்றாம் நாளாக  தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது

நேற்று மேற்கு கரைப்பகுதியில் உள்ள ஜெனின் அகதி முகாம் மீது குண்டு வீசியுள்ளது.

இவை அகதிமுகாம்கள் என்று இஸ்ரேலுக்கு துல்லியமாக தெரியும். அவர்கள் போராளிகள் அல்ல என்பதும் தெரியும்.

காஸாவிலுள்ள ஒரு செய்தியாளர் கூறுகிறார்

காஸாவிலுள்ள ஒவ்வொரு பகுதியையௌம் கடந்த் பல ஆண்டுகளாக இஸ்ரேல் துல்லியமாக வேவு பார்த்து வைத்திருக்கிறது. காஸா விலுள்ள அகதிகளுக்கான முகாம் கட்டிடங்களில் யார் வசிக்கிறார்கள் என்பது அவர்களது தந்தை பெயர் குடும்ப பெயர் உட்பட இஸ்ரேலுக்கு தெரியும்.

இவர்கள் அனைவரும் அப்பாவிகள். இவர்களுக்கும் சண்டைக்கும் சம்பந்தமில்லை என்று தெரிந்திருந்தும் அகதிமுகாம்கள் மீது இஸ்ரேல் மிருகத்தனமாக தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. மிக கொடூரமான இழப்புக்களை அது ஏற்படுத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபை இதை இனப்படுகொலை என்று வர்ணிக்கிறது.

UN experts say Palestinians face ‘risk of genocide’

 

உலக நாடுகள் மிக சாவகாசமாக யுத்தத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஐந்க்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஒரு வழியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மாணம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றாலும் அந்த தீர்மாணத்தை இஸ்ரேல் கண்டு கொள்ளவே இல்லை.

மாறாக அந்த தீர்மாணம் நிறைவேற காரணமாக இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் யூதர்களுக்கு எதிராக இருப்பதாக கூறி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறது.

இந்த தீர்மாணத்தில் பங்கேற்காமல் இந்தியா வெளிநடப்ப்பு செய்திருக்கிறது. பண்பாட்டுக்கு பெயர் பெற்ற இந்தியாவின் மனசாட்சி இப்போது கருத்துக்கிடைக்கிறது என்பதற்கான சாட்சி அது.  

உலகில் தம்பட்டம் அடித்துக் கொள்ளாத பல நாடுகள் ஜபலியா அகதி முகாம் தாக்குதலுக்கு பிறகு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன என்று கூறுகிறது அல ஜஸீரா

Latin American countries have grown increasingly critical of Israel: Colombia and Chile have recalled their ambassadors, Argentina condemned Israel’s attack on the Jabalia refugee camp, and Bolivia cut ties completely. The moves come as Jordan, one of the first Arab countries to establish ties with Israel, recalled its ambassador in light of the war.

தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியாவும் சிலியும் இஸ்ரேலுக்கான  தங்களது தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டு விட்டன. அர்ஜெண்டீனா கண்டனம் தெரிவித்துள்ளது. போல்வியா நாடு அனைத்து தொடர்புகளையும் துண்டித்து விட்டது.   

இப்போது இஸ்ரேலுடன் தூதரக உறவு கொண்டுள்ள ஜோர்தான் தனது  தூதரை திரும்ப அழைத்திருக்கிறது.

எகிப்து அமீரகம் உள்ளிட்ட மற்ற நாடுகளும் தங்களது தூதர்களை உடனடியாக திரும்ப அழைப்பது இஸ்ரேலுக்கு ஒரளவு நெருக்கடியை தரலாம்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்டி  இஸ்ரேலை தனிமைப்படுத்த முஸ்லிம் நாடுகள் ஒன்று சேரவேண்டும்.

பாலஸ்தீன் கோருவது போல, ஐக்கிய நாடுகள் சபையின் சக்தி மிக்க அமைப்பான் பாதுகாப்பு சபை உடனடியாக இஸ்ரேலின் அடாவடித்தனத்தை நிறுத்த முயற் எடுக்க வேண்டும். அதற்கு அமெரிக்கா ஒத்துழைக்க வேண்டும்.

உலகில் இதயம் உள்ள எவரும் இதற்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

இத்தகைய கோடூரங்களை தயவு தாட்சயமின்றி அரங்கேற்றி வரும் இஸ்ரேல் இதன் பின்னே மீண்டும் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த ஐ நா அனுமதிக்க கூடாது.

இவ்வளவு கொடுமைக்கார இஸ்ரேலை இனி வளரவிடக் கூடாது என்பதில் உலக முஸ்லிம்கள் உறுதியேற்கனும். அதற்காக தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம் நாடுகள் இது குறித்து ஒரு உறுதியான தீர்மாணத்திற்கு வர வேண்டும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

1 comment:

  1. Anonymous7:04 PM

    மாஷா அல்லாஹ்.

    அதேசமயம் முஹாஜிர்களை (குடிபெயர்ந்தவர்களை ) அகதிகள் என்ற கருத்தில் கூறுவது சற்று யோசிக்க வேண்டிய கருத்தாக உள்ளது.

    ReplyDelete