வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 09, 2023

ராஜ தந்திர விளையாட்டுக்கள் வீழட்டும்

 ذَٰلِكَ قَوْلُهُم بِأَفْوَاهِهِمْ ۖ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِن قَبْلُ ۚ قَاتَلَهُمُ اللَّهُ ۚ أَنَّىٰ يُؤْفَكُونَ (30

டிப்ளமஸி என்றொரு வார்த்தை இருக்கிறது. ராஜ தந்திரம் என்று அதற்கு அர்த்தம்.

அது ஒரு நல்ல வார்த்தை.

மக்களுக்கிடையே உணர்ச்சி வேகத்தில் ஏற்படுகிற பிணக்குகளை சண்டைகளை அறிவுத்திறன் மிக்க மனிதர்கள் தமது வார்த்தைகளால் சில நிமிடத்துளிகளில் மாற்றிவிடுவார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் இறைவனை சென்றடைந்து விட்ட நிலையில் அன்னாரது மரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் மறுத்து நபித்தோழர்கள் திகைத்து நின்றபோது அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் ஒருவார்த்தை சொன்னார்கள்.

நீங்கள் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அவர் இறந்து விட்டார். நீங்கள் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அவன் நிலைத்தவன். அவனுக்கு மரணமில்லை என்றார்கள்.

فحمد اللهَ أبو بكر وأثنى عليه وقال: ألا مَنْ كان يعبد محمداً صلى الله عليه وسلم فإن محمداً قد مات، ومن كان يعبد الله فإن الله حي لا يموت، وقال: {إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ} (الزمر:30)

அடுத்த நிமிடம் சூழ்நிலை சரியாகிவிட்டது.

இது ராஜ தந்திரச் சொல்லாடல். ஒரு சமூகத்தை நிதனப்படுத்தி நல் வழி காட்டிய சொல்லாடல்.

அதே போல ஹிஜிரீ  5 ம் ஆண்டு அகழ் யுத்தம் நடந்து ஒரு நபித்தோழரின் ராஜ தந்திரம் ஒரு யுத்த்தை தடுத்தது.

அவரது பெயர் நுஐம் பின் மஸ்வூத் (ரலி)  

அகழ் யுத்தம் முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு பெரிய சோதனையான யுத்தம்.

அரபு தீபகற்பத்திலிருந்த முஸ்லிம்களின் எதிரிகள் அனைவரையும் யூதர்கள் ஒன்று திரட்டி அழைத்து வந்திருந்தனர். அதனால் அந்த யுத்த்த்தை அஹ்ஸாப் கூட்டணிப்படையினரின் யுத்தம் என்று திருக்குர் ஆன் கூறுகிறது. இந்த பெயரில் ஒரு அத்தியாயமே இருக்கிறது.

எதிரிகள் சுமார் 10 ஆயிரம் பேர் இருந்தனர். அவர்கள் மதீனாவை நெருங்கியும் விட்டனர். முஸ்லிம் போராளிகளின் எண்ணிக்கை வெறும் மூவாயிரமாக இருந்தது. கடுமையான பனிக்காலமாகவும் இருந்தது. முஸ்லிம்களை அவர்களுடைய நிலத்திலேயே நீர்மூலமாக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எதிரிகள் திரண்டிருந்தனர்.

முஸ்லிம்கள் பீதியில் உறைந்து போயினர்.  

إِذْ جَاءُوكُم مِّن فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ 

மேலிருந்தும் கீழிருந்தும் உங்களை அவர்கள் சூழ்ந்து கொண்டனர். பார்வைகள் நிலை குத்தி நின்று விட்டன. இதயங்கள் தொண்டைக்குழிக்குள் வந்து விட்டன். என்று திருக்குர் அந்த சூழ்நிலையை காட்சிப் படுத்துகிறது.

10 ஆயிரம் எதிரிகள் மதீனாவை சூழ்ந்து இருந்த போதும் கூட சல்மான் பார்ஸி ரலி அவர்களின் ஏற்பாட்டின் படி மதீனாவை சுற்றி ஒரு அகழி வெட்டப்பட்டிருந்தது.  அத் அடர்ந்தேறி வந்த எதிரிகளின் பாய்ச்சலை தடுத்டு நிறுத்தியிருந்தது. என்ன நடக்கப் போகிறது என்பதே இரண்டு தரப்பிலும் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

 மதீனாவிற்குள் முஸ்லிம்களை தவிர பனூ குறைழா என்ற ஒரு யூத குடும்பமும் இருந்த்து. அவர்களோடு பெருமானார் உடன்படிக்கை செய்திருந்தார்கள். இந்த அகழி தோண்டும் பணிக்காக அவர்களிடமிருந்து மண் வெட்டி போன்ற ஆயுதங்களை  இரவலாக கூட வாங்கியிருந்தார்கள்.

 மதீனாவிற்கு வெளியே பட்டயோடு நின்ற யூதர்கள் உள்ளிட்ட எதிரிகள் விசயத்தில் கவலை கொண்டிருந்த போதும் , உள்ளே இருந்த யூதர்கள் விசயத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் அவநம்பிக்கை கொள்ள வில்லை.

ஆனால் வெளியிலிருந்த யூதர்கள் ரகசியமாக இரவின் இருட்டில் அகழியை கடந்து வந்து மதீனாவிற்குள்ளே இருந்த யூதர்களை நீங்கள் உள்ளிருந்து சண்டையை ஆரம்பியுங்கள். உங்களை நோக்கி முஸ்லிம்களின் கவனம் திரும்பும் போது நாங்கள் வெளியிலிருந்து பாய்ந்து வந்து விடுகிறோம் என்றார்கள்.

 அதற்கு பனூ குறைழா யூதர்கள் உடன் பட்டார்கள்.  இந்த செய்தி பெருமானாருக்கும் முஸ்லிம்களுக்கும் தெரிய வந்த போது தான் திருக்குர் ஆன் வர்ணித்த அந்த சூழல் நிலவியது.

 அன்று இரவு ஒரு அதிசயம் நிகழ்ந்த்து. எதிரிகளோடு எதிரியாக யுத்த்த்திற்கு வந்த நுஐம் பின் மஸ்வூத் ரலி அவர்களின் இதயத்தில் அல்லாஹ் ஈமானிய வெளிச்சத்தை பாய்ச்சினான்.

ஆச்சரியகரமான முறையில் அவர் இரவின் இருட்டைப் பயன்படுத்தி பெருமானாரை சந்தித்து இஸ்லாமை தழுவினார்.  பிறகு அல்லாஹ்வின் தூதரே நான் என்ன செய்ய வேண்டும் என்றார். ஒரு தனிமனிதராக நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறிய பெருமானார் (ஸல்) அவர்கள் அவர் விடை பெறும் போது ஒரு வார்த்தை கூறினார்கள் போர் என்பதே தந்திரம் தான் என்றார்கள். அப்போதே அல்லாஹ்வின் தூதரே நான் சில வார்த்தைகளை பேசிக் கொள்ள என்ன அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார் . பெருமானார் (ஸல் அனுமதித்தார்கள்.

 நுஐம் பின் மஸ்வூத் ரலி அச்சம் தந்த அந்த இரவில் தனது பணியை தொடங்கினார். அங்கிருந்து நேரே பனூ குறைழா யூதர்களிடம் சென்றார். “நான்  சொல்வதை இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். நான்  சொல்வதை இரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.என்று சொல்லி ஒரு பெரிய இரகசியத்தை சொல்வது போல பீடிகையிட்டார். . பிறகு அவர்களிடம் வெளியே இருக்கிற கூட்டணிப்படையினரின் பேச்சை கேட்டு யுத்தத்தை  ஆரம்பித்து விடாதீர்கள். அவர்கள் பின் வாங்கிச் செல்லும் மன நிலையில் இருக்கிறார்கள். ஒரு வேளை முஹம்மது வென்று விட்டால் அவர்கள் ஓடிப்போய்விடுவார்கள். நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். அதனால் வெளியிலிருக்கிறவர்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிற வகையில் அவர்களில் சில தலைவர்களை உங்களிடம் பணையமாக ஒப்படைக்க கேளுங்கள். அப்படி ஒப்படைத்தால் அவர்களை விட்டு விட்டு அவர்கள் போய்விட முடியாது. உங்களது நன்மைக்காக இதை சொல்கிறேன் என்று கூறினார். பனூ குறைழா காரர்களுக்கும் இது சரி என்று பட்டது. அப்படியே செய்கிறோம் என்றார்கள்.

 அங்கிருந்து மறைவாக தப்பிப்பது போல வெளியேறிய நுஐம் பின் மஸ்வூத் ரலி வெளியிலிருந்த கூட்டணிப்படையினரின் தலைவர் அபூசுப்யானை சந்தித்தார்.  

 அவர்களிடம் நுஐம் பேசினார்.  “பனூகுறைழாக்கள் நீங்கள் நினைப்பது போல அல்ல  அவர்கள் உங்களில் சில தலைவர்களை பணையம் கேட்பது போல பெற்று முஹம்மதுவிடம் ஒப்படைத்து விட திட்டமிட்டிருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமானாலும் அவர்களிடம் சென்று பேசிப்பாருங்கள் என்றார்.

 அங்கிருந்தவர்கள் மதீனாவிற்குள் வந்து பேசிய  போது பனூகுறைழாக்கள், தலைவர்களை பணையமாக கேட்டனர். “ஆஹா நமது நண்பர் நுஐம் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது என்று கூட்டணிப்படையினர் நினைத்தனர். அப்படி எல்லாம் தர முடியாது என்றனர். ஆஹா நமது நண்பர் நுஐம் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது என்று பனூ குறைழாக்கள் நினைத்தனர்.

 உள்ளுக்குள்ளிருந்து சண்டையை தொடங்க வைக்கலாம் என்று திட்டமிட்ட எதிரிகளின் திட்டம் மண்ணை கவ்வியது.

 அந்த யுத்தம் நின்றது.

 قال نعيم بن مسعود: كنتُ أقدم على كعب بن أسد ببني قُرَيْظة فأقيم عندهم الأيّام أشرب من شرابهم وآكل من طعامهم ثمّ يحمِّلونني تمرًا على ركابي ما كانت، فأرجع به إلى أهلي، فلمّا سارت الأحزابُ إلى رسول الله صَلَّى الله عليه وسلم، سرتُ مع قومي وأنا على ديني ذلك. وكان رسول الله صَلَّى الله عليه وسلم، بي عارفًا، فقذف الله في قلبي الإسلام فكتمتُ ذلك قومي وأخرجُ حتى آتي رسولَ الله صَلَّى الله عليه وسلم، بين المغرب والعشاء فأجده يصلّي، فلمّا رآني جلس ثمّ قال: «ما جاء بك يا نُعيم؟» قلتُ: إني جئت أُصَدِّقُك وأشهد أنّ ما جئتَ به حقّ، فمُرْني بما شئتَ يا رسول الله، قال: «ما استطعتَ أن تُخذِّلَ عنّا الناسَ فخَذِّلْ!» قال قلتُ: أَفْعَل ولكن يا رسول الله أنّى أقول؟ قال: «قُلْ ما بدا لك فأنت في حلّ». قال فذهبتُ إلى بني قُرَيْظة فقلتُ: اكتموا عني اكتموا عني، قالوا: نفعل، فقلتُ: إنّ قريشًا وغطفان على الانصراف عن محمد، عليه السلام، إن أصابوا فُرْصَةً انتهزوها وإلاّ استمرّوا إلى بلادهم، فلا تقاتلوا معهم حتى تأخذوا منهم رهنًا، قالوا: أشرتَ بالرأي علينا والنُّصْح لنا. ثمّ خرج إلى أبي سفيان بن حرب فقال: قد جئتك بنصيحة فاكتم عني، قال: أفعل، قال: تعلم أَنَّ قُرَيْظَةَ قد نَدِموا على ما صنعوا فيما بينهم وبين محمد، وأرادوا إصلاحَه ومراجعته، أرسلوا إليه وأنا عندهم: إنّا سنأخذ من قريش وغَطَفان سبعين رجلًا من أشرافهم نُسلِّمهم إليك تضرب أعناقَهم ونكون معك على قريش وغطفان حتى نردّهم عنك وتردّ جَناحَنا الذي كسرتَ إلى ديارهم يعني بني النضير فإن بعثوا إليكم يسألونكم رَهْنًا فلا تدفعوا إليهم أحدًا واحذروهم. ثم أتَى غَطَفان فقال لهم مثل ما قال لقريش، وكان رجلًا منهم، فصدّقوه. وأرسلت قُريظة إلى قريش: إنّا والله ما نخرج فنقاتل معكم محمدًا صَلَّى الله عليه وسلم، حتى تعطونا رَهْنًا منكم يكونون عندنا فإنّا نتخوّف أن تنكشفوا وتَدَعونا ومحمدًا. فقال أبو سفيان: هذا ما قاله نُعيم، وأرسلوا إلى غطفان بمثل ما أرسلوا إلى قريش، فقالوا لهم مثل ذلك، وقالوا جميعًا: إنّا والله ما نُعْطيكم رَهْنًا ولكن اخرجوا فقاتلوا معنا. فقالت يَهُودُ: نحلف بالتوراة إنّ الخبر الذي قال نُعيم لحَقّ. وجعلت قريش وغطفان يقولون: الخبر ما قال نُعيم، ويئس هؤلاء من نصر هؤلاء، وهؤلاء من نصر هؤلاء، واختلف أمرهم وتفرّقوا، فكان نُعيم يقول: أنا خذّلتُ بين الأحزاب حتى تفرّقوا في كلّ وجه وأنا أمين رسول الله صَلَّى الله عليه وسلم، على سرّه.

 அடுத்த நாள் வீசிய பனிப்புயலை தாங்க முடியாத கூட்டணிப்படையினர் சிதறி ஓடினர்   

 ராஜ தந்திர பேச்சு ஒரு யுத்த்தை நிறுத்தியது என்பதற்கு ஒரு நல்ல உதரணம் இது.

ஆனால் ராஜ்தந்திரப் பேச்சு என்பது இப்போது உலகின் மகா கெட்ட வார்த்தையாகிவிட்டது.

இப்போது டிப்ளமஸீக்கு அர்த்தம் சொல்வதானால் குள்ள நரித்தனம் என்று சொல்லலாம்.

 பாலஸ்தீனில் காஸாவில் 23 இலட்சம் மக்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் போது. குழந்தைகளும் பெண்களும் கூட கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டிருக்கும் போது, உணவு தண்ணீர் மின்சாரம் மருந்து நிம்மதி என வாழ்வதற்கு அத்தியாவசியமான அனைத்தையும் இழந்து இலட்சக்கணக்கான பரிதவித்துக் கொண்டிருக்கிற போது, அந்த படுபாதகத்தை நிறுத்தவும் அக்கிரமம் செய்கிற இஸ்ரேலை கட்டுப்படுத்தவும் முயற்சிக்காமல் அதை நியாயப்படுத்தும் வேலையை அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் போன்ற ஐக்கிய நாடுகளின் அரசுகள் செய்து வருகின்றன.   

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் பேசிக் கொண்டிருந்த ஒரு கூட்டததில் நியாய உணர்வுள்ள ஒரு யூதப் பெண்மணி போர் நிறுத்தம் செய்து யூதர்களை காப்பாற்றுங்கள் என்று கோஷமிட்டார். இதனால் நெருக்கடிக்கு ஆளான அதிபர் பிடன் உடனடி போர் நிறுத்தம் அவசியம் தான் என்று கூறினார். அவ்வாறு கூறிவிட்டு அடுத்து அவர் கூறியது அயோக்கியத்தனத்தின் உச்சமாகும். “அப்போது தான் இஸ்ரேலின் பணையக் கைதிகள் விடுதலை செய்வதற்கு வசதியாக தற்காலிக போர் நிறுத்தம் அவசியம் என்றார்.

இஸ்ரேலிய அரசால் காஸா மீது நிகழ்த்தபட்டுக் கொண்டிருக்கிற கோரத் தாக்குதலால் பாதிக்கப்படுகிற அப்பாவி மக்களுக்காக உலகம் கவலை பட்டு பேசிக் கொண்டிருக்கிற போது அமெரிக்க அதிபரின் வார்த்தைகளில் வெளிப்படுகிற வார்த்தை ஜாலம் எவ்வளவு கடுமையாக இருக்கிறது பாருங்கள் !

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கன் ஜோர்டானில் பதிரிக்கையாளர்களிடம் பேசுகிற போது .

However, US officials said the following day that President Joe Biden does not support “a reoccupation by Israeli forces”.

Blinken doubled down on that message.

காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்ரமிப்பதை அமெரிக்க ஏற்றுக் கொள்ளாது”.

அதாவது காஸாவில் உள்ள மக்களை அழித்த பிறகு காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து  நிலை கொள்ள நாங்க அனுமதிக்க மாட்டோம் என்று பொருள். .

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வா என்று இஸ்ரேலிடம் கூறாத அமெரிக்கா அரபு நாடுகளுக்கு கொடுக்கிற உத்தரவாதம் எவ்வளவு கொடூரமாக இருக்கிறது பாருங்கள்.

யுத்தம் நடக்கட்டும். இஸ்ரேல் கொல்ல விரும்புகிற அளவு மக்களை கொல்லட்டும். ஆனால் அதன் பிறகும் இஸ்ரேல் அங்கே தங்கியிருக்க அனுமதிக்க மாட்டோம். என்று – உலகை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு பெரிய அரசின் பிரதி நிதி கூறுகிறார் என்றால் அதில் தென்படுகிற மிருகத்தனம் எப்படிப் பட்டது  என்று சிந்தித்துப்பாருங்கள்.

இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரிக்கிற கனடா வின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ சொல்வதை பாருங்கள்

கொஞ்சம் பாஸ் செய்யுங்கள்’

யூடியூபில் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிற போது கொஞ்சம் பாஸ் (தற்காலிகமாக நிறுத்துங்கள் என்று சொல்வோம் இல்லையா ? ஜஸ்டின் ரூடோ அது போல சொல்கிறார்

Justin Trudeau told reporters this morning that his government is calling for a pause in the fighting in Gaza to allow captives to be released, get foreign nationals out of the territory, and get assistance in.

  கனடா அரசு இஸ்ரேலிடம் காஸா மீதான போரை கொஞ்சம் பாஸ் செய்ய கேட்டுக் கொள்கிறது. அங்கிருக்கிற வெளிநாட்டவர்கள் வெளியேற அது வாய்ப்பளிக்கும் என்ற்கிறார்.  

அன்றாடம் கொத்து கொத்தாய் செத்துவிழுகிற மக்களை காப்பதற்கு ஒரு வார்த்தை கூட பேசாமல் வேறு விசயங்களில் கவனத்தை திருப்புகிற களவாணித்தனத்தை ராஜ் தந்திரம் என்று நினைத்து இந்த உலகத் தலைவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய பேச்சை தான் அல்லாஹ் இப்படி கண்டிக்கிறான்

ٰلِكَ قَوْلُهُم بِأَفْوَاهِهِمْ ۖ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِن قَبْلُ ۚ قَاتَلَهُمُ اللَّهُ ۚ أَنَّىٰ يُؤْفَكُونَ (30

இது இறைநம்பிக்கையற்றை அக்கிரமக்காரக்ரளின் வெற்று வார்த்தைகள். அல்லாஹ் அவர்களை கொல்லட்டும்.

இவர்கள் தலைவர்கள் அல்ல. மனித சாத்தான்கள்.

அல்லாமா இக்பால் சரியாக சொன்னார்

இரண்டாம் உலக யுத்தம தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது அலிகர் நகரிலுள்ள ஜாமியா மில்லியா பல்கலை கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய அல்லாமா இக்பால் கூறினார்.

இன்றைய கால கட்டத்தில் ன்ன சைத்தான்கள் அனைவரும் பெரிய சைத்தானிடம் கூடின. அவன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நிம்மதியாக சுருட்டுப்பிடித்துக் கொண்டுருந்தான். ஆச்சரியமுற்ற சின்ன சைத்தான்கள் “நீங்கள் எதுவும் செய்யாமல் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே என்று கேட்டன. பெரிய சைத்தான கூறினான். எனது வேலைய பிரிட்டிஷ் அமைச்சரவையிடம் விட்டுவிட்டேன்.

உலக யுத்தங்களின் போது பிரிட்டிஷ் அமைச்சரவையிலிருந்தவர்கள் அப்பாவி மக்களைகளைப் பற்றி கவலைப்படாமல் ராஜதந்திர வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தனர்.

அதே போலத்தான் இப்போது அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் இஸ்ரேல் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளின் அரசுத்தலைவர்கள் காஸாவில் அன்றாடாம் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதைப் பற்றி பேசாமல் ராஜதந்திர வார்த்தை விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அது காஸாவில் விழும் மரணங்களை விட மானுட்த்திற்ற்கு அதிக சேதாரத்தை ஏற்படுத்துகிறது. இது மனித சமூகம் வெட்கித்தலைகுணிய வேண்டிய நடைமுறையாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் தெய்வாதீனமாக மிக தெளிவாக நியாயமாக  பேசுகீறார்/

“This is a starting point for a serious negotiation for a two-state solution. Sometimes the worst tragedies become an opportunity. The situation was completely paralyzed, nothing was moving, Palestinians were losing hope.

“Maybe – I believe in the best-case scenario – this horrible situation may create an opportunity to finally have clear movement to a solution – in my opinion a two-state solution – in which the question of Israel’s security is to be fully taken into account.

“There must be a way for the two states to live in peace with security guaranteed,” Guterres said.

. சில நேரங்களில் சோகமான சந்தர்ப்பங்கள் நல்ல தீர்வுக்கான தொடக்க புள்ளியாக அமையக் கூடும். எல்லாம் முடங்கிப் போய் பாலஸ்தீன் மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் நான் நினைக்கிறேன். பாலஸ்தீன் இஸ்ரேல் என்ற இரண்டு சுதந்திரம் பெற்ற நாடுகளை சிந்திப்பதற்கு இது சரியான நேரமாக இருக்கலாம் என்கிறார்.

ஒரு நடுநிலையான நாகரீகம் மிக்க மனிதரின் மிகச் சரியான பேச்சு இது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொறூப்பான பதவியில் இருப்பவர்கள் இப்படி பேசுகீற போது அமெரிக்க உள்ளிட்ட இஸ்ரேலின் ஆதரவு சக்திகள் பேசும் வார்த்தைகள். அதிலும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளிடம் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மிக மலினமானவையாக இருக்கின்றன.

முஸ்லிம்கள் இந்த ராஜ தந்திர  விளையாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

ஐ நா சபை தலைவர் கூறுவது போல ஒரு சுதந்திர பாலஸ்தீனத்தை பற்றி உறுதியாக சிந்திக்க சரியான நேரம் இது.

இஸ்ரேல் போரில் வெற்றி காண முடியாமல் கண்டபடி மிருகத்த்தனமாக குண்டு வீசி சாமாணிய மக்களை கொன்று கொண்டிருக்கிறது.

சரவதேச நாடுகள் பலவும் இஸ்ரேலின் அடவாடித்தனத்தை பகிரங்கமாக குற்றம் சுமத்தி அதன் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என மறுத்துவருகின்றன. பல நாடுகள் தூதராக உறவை முறித்துக் கொண்டு விட்டன .

இஸ்ரேல் அதன் ராணுவ நடவடிக்கையிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் இப்போது பலவீனப்பட்டிருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன் சவூதி அரேபியாவை கூட்டு சேர்ந்து விட்ட்தாக பேசுகிற அளவிற்கு அதனுடைய அரசியல் நிலை வலுப்பெற்றிருந்த்து. ஐக்கிய அரபு அமீரகம் அதனுடன் உறவை தொடங்கிருந்த்து.

இப்போது ரஷ்யா சீனா உள்ளிட்ட பல இஸ்ரேலிற்கு எதிராக நிற்கின்றன.

இங்கிலாந்தில் ராஜினாமக்கள்

இங்கிலாந்து நாடு யுத்த்தை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் கூற மறுக்கிறது. தொடர்ந்து இஸ்ரேல் நடத்தும் யுத்தத்தை ஆதரிக்கிறது. இங்கிலாந்தின் எதிர்க் கட்சி தலைவரா ஸ்டார்மர் அந்த கருத்தை ஆதரித்தார். இதனால் என்ன நடந்தது என்றால் எதிர்க்கட்சி தலைவர் அடுத்த தேர்தல் வந்தால் வெற்றி பெறலாம் என்ற வாய்ப்பிருந்த்து. இந்த அவருடை கருத்தால் அவரது வெற்றி வாய்ப்பு மங்கியிருக்கிறது என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியின் 50 கவுண்சிலர்கள் அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான இம்ரான் ஹுசைன் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.   

The leader of the United Kingdom’s main opposition party, Labour, has refused to call for a ceasefire in Gaza, a position that is costing him political support and could dent his chances in a new general election.

Late on Tuesday, shadow minister Imran Hussain quit Labour’s front bench in protest at Starmer’s refusal to heed calls from many in his party to push for an Israeli ceasefire.

About 50 Labour Party councillors, many Muslim, had earlier resigned from party itself over Starmer’s position, with some even calling for him to step down.

அமெரிக்காவில் மக்கள் கருத்தில் மாற்றம்

யுத்தம் தொடங்குவதற்கு முன் இஸ்ரேலை நட்பு நாடாக கருதிய அமெரிக்கர்கள் இப்போது பிளவு கண்டிருப்பதாக அஸோஸியேட பிரஸ் நடத்திய கருத்து கணிப்பு கூறுகிறது

The survey, which was conducted from November 2 to 6, found that 44 percent of respondents described Israel as an ally that shares US interests and values – up by 14 percent compared to an August poll where only 32 percent of Americans shared that opinion.

இந்த சூழ்நிலையை முஸ்லிம்கள் சரியாக பயனபடுத்திக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவை உருவாக்கி உலக நாடுகளிடம் பாலஸ்தீனத்திற்கு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்று

நியாயம் கேபதற்கு ஒரு சரியான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலை ஆதரிக்கும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் விரிக்கும் ராஜ தந்திர வார்த்தை விளையாட்டுக்களுக்குள் அரபு நாடுகளும் முஸ்லிம் நாடுகளும் நியாய உணர்வுள்ள மற்ற உலக நாடுகளும் பலியாகி விடக் கூடாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் செய்யட்டும்.

ஆயிரக்கணக்கான மக்கள் கொசுக்களை போல குண்டு வீசி அழிக்கப்படும் அவலத்தை தங்களது வார்த்தைகளால் நியாயப்படுத்த முயற்சி செய்யும் சக்திகளை அல்லாஹ் தண்டிக்கட்டும்

 

No comments:

Post a Comment