வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 14, 2023

முஸ்லிம் சமுதாயம் பலவீனமடைந்தது எப்படி ?

 இன்றைய முஸ்லிம் உலகம் மிக ஆச்சரியகரமான ஒரு நிலையில் இருக்கிறது.

57 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. பண பலத்திலும் இயற்கை வளங்களிலும் முன்னணியில் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் ரீதியாக மிக பலவீனமாக இருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் ஒன்று சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக தீர்மாணம் போட்டும் இஸ்ரேலை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதில் ஆச்சரியமில்லை. முஸ்லிம் நாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை எனில்  மற்ற உலக நாடுகளாலும் ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு அரசியல் விமர்சகர் சொன்னார். அரபு நாடுகள் ஒன்று சேர்ந்து ஒண்ணுக்கு அடித்தால் இஸ்ரேல் காணாமல் போகும் என்றார். ஆனால் இன்று எதிர்ப்பு தெரிவிப்பதை விட வேறு ஒரு துரும்பையும் அசைக்கிற சக்தி அரபுகளுக்கு இல்லை.

ஏன் இந்த நிலை என்பது இன்று ஆய்வாளர்களை வியக்க வைக்கும் கேள்வி.

இன்றைய ஜும் ஆவில் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் பலவீனத்தையும் முறகால முஸ்லிம் சமூகத்தின் பலத்தையும் குறித்து ஆய்வு செய்கிறோம்.

அன்று எப்படி வென்றார்கள்.? இன்று எதனால் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம்.?

அன்று எப்படி வென்றார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரலாற்றின் மிக ஆச்சரியமன தலைவர்களில் ஒருவர்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய ஒவ்வொன்றும் அவரால் மட்டுமெ உருவாக்கப்பட்ட்து. இன்னொன்றின் தொடர்ச்சியல்ல.

புரிந்து கொள்ள ஒரு உதாரணம்

இந்திய சுதந்திர போராட்ட்த்திற்கு காந்தியடிகள் தலைமை தாங்கினார். ஆனால் அந்த போராட்டம் அவரால் தொடங்கப்பட்டது அல்ல. அவருக்கு முன்னர் பலர் அஸ்திவாரமிட்டு கட்டியிருந்த போராட்ட களத்திற்கு அவர் உயிரூட்டினார். அவ்வளவே.

ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலகில் சாதித்த காரியங்கள் அனைத்தையும் பூஜ்யத்திலிருந்தே உருவாக்கினார்கள்.

முஸ்லிம் சமுகம் பூஜியத்திலிருந்து உருவாக்கப்பட்ட்து. முஸ்லிம்களின் அரசு பூஜ்யத்திலிருந்து உருவாக்கப்பட்டது.

மூஸா அலை அவர்கள் கட்டமைக்கப்பட்ட யூத சமுதாயத்திற்கு நபியாக இருந்தார்கள். பெருமானார் அவர்களுக்கு அப்படி ஒரு சமுதாயத்தின் துணை இருக்க வில்லை.

அலக்ஸாண்டர் அவரது தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன் அரபு தேசத்தில் ஒரு அரசு அமைப்பே இருக்கவில்லை. யமன் நாடு அபீசினியர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. அதனுடன் ஒட்டிக் கொண்டு ஹிஜாஸ் இருந்த்து. அவ்வளவே! பெருமானாரின் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ ஹிஜாஸில் எந்த  ஒரு அரசாட்சியும் இருந்த்தில்லை. ஹஜிஸின் முதல் அரசர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே ஆவார்கள்.  

முஸ்லிம்களின் சமூக அமைப்பையும் அரசியலையும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைத்தார்கள்.

இஸ்லாமிய கோட்பாடு வலிமையானதாக இருந்த்து. அது பூஜ்யத்திலிருந்த முஸ்லிம்களை வரலாற்றின் நட்சத்திரங்களாக்கியது.

அந்த இஸ்லாமின் கோட்பாடு என்பது

நீதியும் சகோதரத்துவம் ஆகும்.

வேதத்தை எடுத்துச் சொல்லவும் நீதியை நிலைநாட்டவுமே பெருமானார் அனுப்பப்பட்டார்கள் என்று குர் ஆன் கூறுகிறது.

وَقُلْ آمَنْتُ بِمَا أَنْزَلَ اللَّهُ مِنْ كِتَابٍ وَأُمِرْتُ لأعْدِلَ بَيْنَكُمُ)[الشورى/ 15].

நாடு நகரங்களை சீரமைப்பதில் நீதிதான் அடித்தளம் என்பதை எல்லா நிலையிலும் இஸ்லாம் முஸ்லிம் சமூகத்திற்கு புரிய வைத்தது.

உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் காலத்தில் இரண்டு நிகழ்வுகள். ஒரே மாதிரியானவை.

இரண்டிலும் கவர்னர்கள் தங்களது நகரத்தின் நிலை மோசமாகிவிட்டது. உதவிகள் கிடைத்தால் தான் சீர் செய்ய முடியும். கடுமையான தண்டனைகளை வழங்கினால் தான் சீர் செய்ய முடியும் என்று எழுதினார்கள். அவர்களுக்கு கலீபா சொன்ன பதில் நீதியை நிலை நாட்டுங்கள் அது பாலடைந்த கட்டிடங்களை சீரமைத்து விடும் என்றார்கள். மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பதில் இது

وفي عهد الخليفة الراشد عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ كتب إِلَيْهِ بَعْضُ عُمَّالِه يقول:
"أَمَّا بَعْدُ ، فَإِنَّ مَدِينَتَنَا قَدْ خَرِّبَتْ، فَإِنْ رَأَى أَمِيرُ الْمُؤْمِنِينَ أَنْ يَقْطَعَ لَهَا مَالًا يَرُمُّهَا بِهِ فَعَلَ!؟

فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ: "أَمَّا بَعْدُ: "قَدْ فَهِمْتُ كِتَابَكَ، وَمَا ذَكَرْتَ أَنَّ مَدِينَتَكُمْ قَدْ خَرِّبَتْ، فَإِذَا قَرَأْتَ كِتَابِي هَذَا، فَحَصِّنْهَا بِالْعَدْلِ، وَنَقِّ طُرُقَهَا مِنَ الظُّلْمِ، فَإِنَّهُ مَرَمَّتُهَا وَالسَّلامُ".

وكتب إليه واليه على خراسان يقول: «إن أهل خراسان قوم ساءت رعيتهم، وإنه لا يصلحهم إلا السيف والسوط، فإن رأى أمير المؤمنين أن يأذن لي في ذلك». فكتب إليه عمر: «.. أما بعد: فقد بلغني كتابك تذكر فيه أن أهل خراسان قد ساءت رعيتهم، وأنه لا يصلحهم إلا السيف والسوط، فقد كذبت، بل يصلحهم العدل والحق، فابسط ذلك فيهم والسلام».  

அதே போல இரு சமுகத்தை கட்டமைப்பதில் சகோதரத்துவ உணர்வு தான் முதன்மையானது.

அந்த சகோதரத்து உணர்வை எந்தக் பெருமையாலும் சிதைத்து விடலாகாது என பெருமானார் (ஸல்) அவர்கள் வலியுறூத்தினார்கள்.

அரபுகள் குலப்பெருமையிலும் மொழிப் பெருமையிலும் போதை கொண்டு கிடந்தனர். அதில் தலைமுறை தலைமுறையாக பகை கொண்டு அலைந்தனர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் கலிமா சொன்ன அனைவரையும் சகோதரர்கள் என்றார்கள்.

இது பெருமானாரின் பெரும் சாதனை

وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَاناً) [آل عمران:103].

 அடிமை பிலால் ரலி அவர்களை முஅத்தினாக்கினார்கள்.

பாரசீகரான சல்மான் அல் பார்ஸியை தன்னுடைய குடுமப்த்தவர் என்றார்கள்.

கடைசிப் பேருரையில் பெருமானாரின் இந்த பிரகடணம் அசாதாரணமானது.

يا أيُّها الناسُ إنَّ ربَّكمْ واحِدٌ ألا لا فضلَ لِعربِيٍّ على عجَمِيٍّ ولا لِعجَمِيٍّ على عربيٍّ ولا لأحمرَ على أسْودَ ولا لأسودَ على أحمرَ إلَّا بالتَّقوَى إنَّ أكرَمكمْ عند اللهِ أتْقاكُمْ-  الراويجابر بن عبدالله

 இந்த பிரகடனம் இஸ்லாமிய உம்மத்தை மகத்தான முறையில் வலிமைப்படுத்தியது.  

இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூகம் தலைமுறை தற்பெருமையை கலைந்து விட்டு லாயிலாக இல்லலாஹுவில் தன்னை இணைத்துக் கொண்ட்து. அதில் எல்லா சமூகத்தவர்களும் பங்கு வகித்தார்கள். வலிமை சேர்த்தார்கள்.

குறைஷி கலீபாக்கள் ஆட்சி செய்ய  மதீனத்து அன்சாரிகள் தோள் கொடுத்தார்கள்.

கலிமா சொன்ன ஒவ்வொருவரும் மற்றவருக்கு பொறுப்பாக இருதார்.

உமர் ரலி அவர்கள் காலத்தில் நடைபெற்ற காதிஸிய்யா யுத்தம் வரலாற்றில் மிக முக்கியத்தும் வாய்ந்த்து. உலக அளவில் இஸ்லாம் பரவ காரணமானது. மாபெரும் பாரசீக சாம்ராஜ்யத்தை சிதைத்தது.

அந்த யுத்த்த்தின் போது பாரசீக படையின் தளபதி உலகப் புகழ் பெற்ற ருஸ்துமின் சபையில் அவர்கள் வேண்டிக் கொண்ட்தற்கேற்ப முஸ்லிம்களின் சார்பாக பல கட்டங்களாக பலர் பேச்சு வார்த்தை நடத்தச் சென்றனர். அப்படிச் சென்றவர்களில் முக்கியமான ஒருவர் ரிப்ஈ பின் ஆமிர் ரலி அவர்கள். அவர் ருஸ்துமுக்கு ஆலோசனை செய்ய இரண்டு நாள் அவகாசம் கொடுத்தார். அத்ற்கு மேல் தர முடியாது என்றார்.

அப்போது நீ தான் தலைவரா பாரசீக படை தளபதி கேட்டார்.

فقال: أسيدهم أنت؟

قال: لا، ولكن المسلمون كالجسد الواحد يجير أدناهم على أعلاهم.

 பாரசீகப் படை தளபதி ருஸ்துமுக்கு வீர்ர் ரிப் இய்யிப்னு ஆமிர் ரலி அவர்களின் சொன்ன பதில் இஸ்லாம் உருவாக்கிக் கொடுத்த சகோதரத்துவ உணர்வின் உச்சமாகும்.  

வரலாற்று புகழ் மிக அந்த உரையாடலின் ஒரு பகுதி  இது.

فقال رستم: قد سمعت مقالتكم، فهل لكم أن تؤخروا هذا الأمر حتى ننظر فيه وتنظروا؟

قال: نعم!كم أحب إليكم؟ يوما أو يومين؟

قال: لا بل حتى نكاتب أهل رأينا رؤساء قومنا.

فقال: ما سن لنا رسول الله  أن نؤخر الأعداء عند اللقاء أكثر من ثلاث، فانظر في أمرك وأمرهم، واختر واحدة من ثلاث بعد الأجل.

فقال: أسيدهم أنت؟

قال: لا، ولكن المسلمون كالجسد الواحد يجير أدناهم على أعلاهم.

فاجتمع رستم برؤساء قومه فقال: هل رأيتم قط أعز وأرجح من كلام هذا الرجل؟

فقالوا: معاذ الله أن تميل إلى شيء من هذا، تدع دينك إلى هذا الكلب أما ترى إلى ثيابه؟

 

இந்த உரையாடல் சாமாணியமனதல்ல. வரலாற்றின் மிகப்பெரிய திருப்பு முனையாகும்.

அடையாளம் தெரியாத நாடோடிகளாக கருதப்பட்ட சமூகம் வல்லரசு நாட்டின் படைத் தளபதிக்கு இவ்வளவு தான் நேரம் தர முடியும் என்று கம்பீரமாக கூறியது. அந்த வல்லரசுப் படையின் தளபதி முஸ்லி வீர்ர்களின் கம்பீரம் கண்டு வாயடைத்துப் போய் நின்றான்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிக் கொடுத்த பேதமற்ற சகோதரத்த்துவப் பாங்கு இஸ்லாமிய சமூகத்திற்கு மிகப்பெரும் அரசியல் வலிமையை கொடுத்த்து.

அரசியலில் மட்டுமல்ல. மற்ற சமூக காரியங்கள் அனைத்திலும் கூட

இமாம் அபூஹனீபா பாரசீகத்தை தாய் மொழியாக கொண்டவர் இஸ்லமிய சட்ட உலகிற்கு மகத்தான பங்காற்றினார்.

அரபியர் அல்லாத இமாம் புகாரி ஹதிஸ்களையின் பெருந் தூணாக விளங்கினார்.

இமாம் மாலிக் ரஹ் அவர்களை தவிர்த்து மற்ற ஆதரப்பூர்வமான ஹதீஸ் தொகுப்புக்களின் அறிஞர்கள் எவரும் அரபு மொழியை தாய் மொழியாக கொண்டவர்க்ள் அல்ல.

முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் பெரும்  நட்சத்திரங்களாக திகழ்ந்த பலர் அரபு சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல.

முஸ்லிம்களை சிலுவை யுத்தக் காரர்களின் பெரும் அழிவிலிருந்து முஸ்லிம் சமூகத்தை காத்து நின்றவர் 12 ம் நூற்றாண்டை சேர்ந்த   நூருத்தீன் ஜங்கி. அவர் இல்லை எனில் இஸ்லாமிய உலகு குறிப்பாக அரபு உலகு மேலும் தீவிரமான இழப்புக்களை சந்தித்து இருக்கும். நூருத்தீன் ஜங்கி அரபி அல்ல. குர்து இனத்தைச் சார்ந்தவர்.  

சிலுவை யுத்தக்கார்ர்களின் பிடியில் 90 ஆண்டுகளாக சிக்கியிருந்த பாலஸ்தீனத்தை மீட்டுக் கொடுத்த  சலாஹுத்தீன் அய்யூபி அரபி அல்ல அவர் குர்து இனத்தை சார்ந்தவர்.

பாரசீகத்தை முஸ்லிம்கள் உமர் ரலி அவர்கள் காலத்திலேயே வெற்றி கொண்டு விட்டார்கள். ஆனால் ரோம சாம்ராஜ்யத்தின் தலை நகரை 800 ஆண்டுளாக வெற்றி பெற முடியவில்லை. ரோம் சாம்ராஜ்யத்தின் தலை நகராக இருந்த கான்ஸ்டாண்டி நோபிள் – (கஸ்தன்தீனிய்யா – இன்றைய இஸ்தான்பூல்- ஐ வென்று கொடுத்தவர் முஹம்மது அல் பாத்திஹ். அவர்  அரபியர் அல்ல; துருக்கியர்.

ஐரோப்பாவின் பெரும் பகுதி வரை – அதாவது பிரான்ஸின் தலை நகர் பாரிஸ் வரை வெற்றி கொண்ட வரலாற்றின் மிகப் பெரும் வெற்றியாளர் சுலைமான அல் கானூனி அரபியர் அல்ல. துருக்கியர்

இன்னும் சொல்வதானால் நீண்ட காலமாக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டவர்கள் உதுமானிய துருக்கியவர்கள். அந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கிய முதலாம் உஸ்மானின் தந்தை உர்துகால் ஒரு ரஷய் வமிசாவழியைச் சார்ந்தவர்.

இத்தனை இத்தனை சாதனைகளையும் கொண்ட சமூகத்தை  பெருமானார் (ஸல்) இஸ்லாமிய சகோதரத்துவம் கொண்டே கட்டமைத்தார்கள்.

இந்த ரீதியில் சிந்திக்கிற போது لا فضلَ لِعربِيٍّ على عجَمِيٍّ ولا لِعجَمِيٍّ على عربيٍّ என்ற சொற்றொடரினால் ஏற்பட்ட விளைவுகளைன் ஆழம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

கலிமாவின் அடிப்படையிலான சகோதரத்துவ கோட்பாடுதான் அன்றைய முஸ்லிம்களை வலிமைப்படுத்தியது.

எந்த ஒரு பகுதியிலும் முஸ்லிம்களை அச்சமற்றவர்களாக தலை நிமிந்து வாழ வைத்த்து.

தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த் முஸ்லிம்களுக்கு துருக்கர் என்ற பெருமை தமிழ்நாட்டிலும் கிடைத்த்தை நாம் அறியலாம்.

இனறைய முஸ்ம்களின் வீழ்ச்சிக்கு முதன்மை காரணம்

அரபு தேசிய வாதம்

நேசனலிஸம் தேசிய வாதம் என்ற சிந்தனை ஒரு பகுதியில் வாழ்கிற மக்களை அந்த பகுதியின் அடிப்படையில் உரிமை கோரவும் சிறப்பை தேடவும் வழி வகுத்த சிந்தனை பிரிட்டனில் தோன்றியதாகும்.

இந்த சிந்தனையின் விளைவாகவே பாஸீஸமும் நாஜிஸமும் தோன்றியது.

ஹிடல்ர் ஜெர்மனியர்களை உலகத்தின் உன்னதமானவர்கள் என்றான்.

அப்போது அனைத்து முஸ்லிம் நாடுகளும் துருக்கியின் தலைமையின் கீழ் நின்றன. துருக்கிதான் உலகின் ஒரே வலிமையான வல்லரசாக இருநத்து.

பிரிட்டிஷ் காரர்கள் தங்களது உளவாளிகள் மூலமாக இந்த சிந்தனையை அரபு நாடுகளுக்குள் விதைத்தார்கள்.

அபுதாபி சார்ஜா கத்தார் ஹிஜாஸ் ஜோர்டான் சிரியா போன்ற பகுதிகளில் இருந்த அரபுகளிடம் நீங்கள் ஏன் துருக்கியருக்கு கட்டுப்பட வேண்டும் என்ற சிந்தனையை எழுப்பினார்கள்.

இஸ்லாமிய சகோதரத்துவத்தை மறந்த அப்போதைய அரபு நாட்டு தலைவர்கள் அரபு தேசிய வாதம் என்ற கருத்துக் ஆட்பட்டார்கள்.

1914 ல் தொடங்கிய முதல் உலக யுத்தத்தின் போது முஸ்லிம்களின் தலை மை பீடமாக இருந்த துருக்கி ஐரோப்பிய நாடுகளை எதிர்த்து போரில் கலந்து கொண்டது. அப்போது அரபு நாடுகளை பிரிட்டன் தூண்டிவிட்டது. நெருக்கடியான கட்டத்தில் தலைமைக்கு உடன்பட்டு உறுதுணையாக இருக்க வேண்டிய அரபு நாடுகள் துருக்கிய தலைமைக்கு எதிராக போராடின,

ஐரோப்பிய நாடுகளை ஒருபுரமும் உள்ளுக்குள் இருந்த கிளர்ச்சியாளர்களை மறுபுரமும் எதிர் கொண்ட துருக்கி பலவீனமடைந்த்து

முதலாம் உலக யுத்த்தின் முடிவில் துருக்கிய கிலாபத் வீழ்ந்த்து.

எனவே துருக்கிய கிலாபத் வீழ்ச்சியடைந்த்தற்கான ஒரு முக்கிய காரணம் அரபுகளிடம் தோன்றிய ஜாஹிலிய்யா இய்ல்பான அரபு தேசிய இன வாத சிந்தனையாகும்.

1918 ல் முதல் உலக யுத்தம் முடிந்த பிறகு மத்திய கிழக்கு பகுதி முழுவதும் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் வந்தது.

பிரிட்டன் தனக்கு உதவிய அரபு குடும்பங்களுக்கு அரபு நாடுகளை பங்கு போட்டுக் கொடுத்த்து.  இப்படித்தான் சவூதி கத்தார் அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் பிரிட்டனின் திட்டப்படி உருவாயின.

இப்படித்தான் 1918 க்குப் பிறகு பிரிட்டன் இஸ்ரேலையும் உருவாக்கியது.

உலக யுத்த்தில் ஜெர்மனி தோற்றது. ஆனால் அது சிதையவில்லை. துரூக்கி தோற்றது ஆனால் அது சிதைந்த்து போனது. காரணம் அரபுகளின் பேராசை. சகோதரத்துவத்தை மறந்து தாங்கள் தாங்கள் பெரிய ஆட்களாக வேண்டும் என்ற பேராசை.

அந்த ஆசைதான் அவர்களை இப்போதும் பிரிட்டன் அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு கீழ் பணிந்து நடக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன ஆச்சரியம் பாருங்கள். கத்தார் நாடு இப்போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிற்கும் சமாதானம் செய்கிறது. அந்த கத்தரில் தான் அமெரிக்காவின் மிகப் பெரிய படைப் பிரிவு இருக்கிறது. வள்ள குடாவில் இருக்கிற அமெரிக்க படைப்பிரிவுகளில் ஆகப்பெரியது கத்தாரில் இருக்கிறது, 1990 களில் அந்த படைப்பிரிவை அமைப்பதற்கு ஆன செலவு மட்டும் 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதற்கு இப்போது வரை நடந்து கொண்டிருக்க செலவு கண்க்கிலடங்காதது.

மத்திய கிழக்கிலுள்ள சவூதி உட்பட உள்ள அரபு நாடுகள் அனைத்திலும் அமெரிக்க இராணுவ படை தளம் இருக்கிறது.

இந்த நாடுகள் அனைத்தும் வேகவேகமா ஐரோப்பிய மயமாகி வருவதையும் நாம் பார்க்கலாம்.

இத்தனைக்கும் காரணம் இஸ்லாமிய சகோதரத்துத்தை தொலைத்த அரபு தேசிய சிந்தனையாகும்.

நீங்கள் கவனித்துப் பாருங்கள் சவூதி அரேபியா உலக முஸ்லிம்களின் தலைமைப் பீட்த்தில் இருப்பதாக பலரும் கருதிக் கொள்கிறார்கள். அது இந்தியாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கிற சிரமத்தை குறித்தோ இங்கு இஸ்லாம்ய ஷரீஅத்திற்கு எதிராக செய்யப்படுகிற திட்டங்கள் குறித்து கொஞ்சமும் கவலைப்படுவதில்லை

காரணம் வேறொன்றும் இல்லை. இஸ்லாமிய சகோதரத்துவம் காணாமல் போய் அரபு தேசிய வாதம் மட்டுமே தலைதூக்கி நிற்பதாகும்.

தெளிவு

வரலாறு ஒரு காட்சியை காட்டுகிறது.

இஸ்ரேலியர்களுக்காக ஒரு எப்பாடு பட்டாவது உருவாக்கி தர வெண்டும் என்ற கோட்பாட்டிற்கு பெயர் தான் சியோனிசம் என்பதாகும்.

அந்த சியோனிஸ கோட்பாட்டை உருவாக்கிய தியோடர் ஹெர்சல் இஸ்ரேல் நாடு அமைவதற்கு முன் இறந்து போனார். அவர் துருக்கி அதிகாரத்தில் இருந்த காலத்தில் துருக்கி சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதிடம் பேரம் பேசினார். துருக்கியின் கான் முழுவதையும் அடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன். பாலஸ்தீனில் ஒரு சின்ன நிலப்பரப்பை இஸ்ரேலியர்களுக்கு தாருங்கள் என்று கேட்டார். அப்போது துருக்கி பெரும் கடன் சுமையில் சிக்கியிருந்த்து. மாமன்னர் இரண்டாம் அபதுல் ஹக்கீம் கூறினார். பாலஸ்தீனம் எங்களு சகோதரர்களின் நிலம். அதை நான் உங்களுக்கு தர முடியாது என்றார்.

 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய இஸ்லாமிய சகோதரத்துவம் நூற்றாண்டுகளை கடந்தும் நிலைத்து நின்றதற்கான சான்று அது

.பெருமானாரின் அந்த சகோதரத்து கோட்பாட்டிலிருந்து விலகி அரபு சமூகம் இன்று தங்களுடை சொந்த பாலஸ்தீன அரபு சகோதர்ர்களையே கூட காப்பாற்ற முடியாத சூழ்நிலைக்கு அது இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளை தவற விட்ட்தே காரணமாகும்.

இப்போது கூட கவனித்தீர்கள் என்றால் அரபு நாடுகள் இஸ்லாமிய அடிப்படையில் துருக்கி யுடனோ மற்ற முஸ்லிம் நாடுகளுடனோ இணைந்து நிற்பதில்லை.

அரபு மேலாண்மையை ஒத்துக் கொண்டால் தான் முஸ்லிம்களுடன் இணைய முடியும் என்று காட்டுகின்றன.

 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய சகோதரத்துவ சமூகம் இந்த அறியாமைகால குணத்தால் இன்று கேள்விக்குரியான சமூகமாக இருக்கிறது.

 நாம் அனைவரும் மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய செய்தி.

 ஒவ்வொரு நிலையிலும் இஸ்லாமிய சகோதரத்தும் நம்மை இணைக்க வேண்டும்.

 சாதி மொழி இன அடிப்படையில் எந்த இட்த்திலும் நாம் சிதறி விடக் கூடாது.

நிறைவாக உமர் ரலி அவர்களின் ஒரு பொன் மொழியை நியாபகப்படுத்துகிறேன்.

 قال عمر رضي الله عنه :"نحن قوم أعزَّنا الله بالإسلام فمهما ابتغينا العزَّة في غيره أذلَّنا الله".

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 முஸ்லிம் உம்மத்தை கடும் சோதனையிலிருந்து அல்லாஹ் மீட்டெடுப்பானாக!

 

      

 

 

 

No comments:

Post a Comment