இன்றைய உலகில் எல்லாமே சூதாட்ட மயமாகிவிட்டது.
வியாபாரம், விளையாட்டு,
அரசியல் என அனைத்திலும் சூதாட்டமே கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
நாம் சூதாடி மற்றவர்களை
வீழ்த்துகிறவர்களாகவும் இருந்து விடக் கூடாது. பிறரின் சூதாட்டதிற்கு பலியாகி வீழ்ந்து
விடவும் கூடாது.
தஸ்தவ்ஸ்கீ
என்கிற மிகப் பெரிய ரஷ்ய இலக்கியவாதி. ஒரு சூதாடி/ அதில் பல இழப்புக்களை சந்தித்தவன்.
தனது அனுபவங்கள் மக்களுக்கு பயன்படட்டும் என்று கருதி தி காம்ப்ளர்" (சூதாடி ) என்ற
ஒரு நாவலை எழுத நினைத்தான்
இன்றைய அறிவியல் காலத்திலும் மக்களிடமும் ஜாஹிலிய்யா காலத்தைப் போல அதிஷ்டத்திற்கு அதிகம் ஆசைப்படுகிற மனோ நிலையும் – நியாயமற்ற இலாபங்களின் மீதான மோகமும் அதிகரித்து வருகிறது. இதுவும் ஒரு வகை சூதாட்டமாகும்.
திருக்குர் ஆன்
பண்டைய அரபு மக்களின் இயல்புகளை படம் பிடிக்கிறது.
அவர்கள் சம்பாதிக்க
விரும்ப மாட்டார்கள். கொள்ளையடிப்பார்கள். அதில் இன்பம் கொள்வார்கள்.
وَالْعَادِيَاتِ
ضَبْحًا (1) فَالْمُورِيَاتِ قَدْحًا (2) فَالْمُغِيرَاتِ صُبْحًا (3) فَأَثَرْنَ بِهِ نَقْعًا (4) فَوَسَطْنَ بِهِ جَمْعًا (5)
நுரை தப்ப ஓடும்
குதிரைகள் மீது சத்தியமாக! தீப்பொறி கிளம்ப ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக!. அதிகாலை
நேரத்தில் தாக்கும் குதிரைகள் மீது சத்தியமாக!. புழுதியை கிளப்பும் குதிரைகள் மீது
சத்தியமாக ! கொள்ளைப் பொருட்களை நடுவில் ஒன்று திரட்டும் குதிரைகள் மீது சத்தியமாக!
என்ற இந்த வசன்ங்கள் அன்றைய அரபுகளின் இயல்பை பற்றி பேசுவதாக திருக்குர் ஆனிய அறிஞர்கள் கூறுகிறார்கள்
وَإِنَّهُ
لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
இதுதான் அன்றைய
ஜாஹிலிய்யா காலத்தின் சம்பாதிக்கிற முறையாக இருந்தது.
மற்றொரு முறை
ஜாஹிலிய்யா
காலத்தில் மக்களிடமிருக்கிற பணத்தை எப்படி எல்லாம்
சம்பாதிப்பார்கள் என்பதை திருக்குர் ஆனின்
அத்தகாதுர் வசனத்தின் பின்னணியில் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
أَلْهَاكُمُ التَّكَاثُرُ (1) حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
உண்மையில் 300
ரூபாய் மதிப்புள்ள பொருளை 2200 ரூபாய் என்று எம் ஆர் பி போட்டு அதில் 80 சதவீதம் டிஸ்கவுண்ட் என்று விற்று விடுகிறார்கள்.
மாத தவனைகளை வைத்து
ஆசையூட்டுகிறார்கள். ஒரு மாத தவனை தாமதமாகும் போதுதான் அது எவ்வளவு பெரிய சதி வலை என்பதை
வாடிக்கையாளர் புரிந்து கொள்வார்.
கடன் தருவதாக கூறி
அடிக்கடி போன்கால்கள் வருவதுண்டு. எப்போதுமே அதை உடனடியாஅ கட் செய்து விடுவேன். சமீபத்தில்
அறிந்து கொள்வதற்காக கொஞ்ச நேரம் போன் பேசிய பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன் . 31/2 இலட்சம்
கடன் தருவதாக கூறுகீறீர்களே ஐந்து வருடத்தின் முடிவில் நான் எவ்வளவு பணம் கட்டியிருப்பேன் என்று கேட்டேன்.
சிறிதும் யோசிக்காமல் கொஞ்சம் தயங்கிய படி அந்த பெண் சொன்னாள். 51/2 இலட்சம் ரூபாய்.
இப்படித்தான் கொள்ளையடிக்கப்படுவது
தெரியாமலே மக்கள் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறார்கள்/
அதிஷ்ட்த்திற்கு
ஆசைப்ப்பட்டு கொள்ளை போகிற மக்களை நிதானப்படுத்துகிற ஒரு ஹதீஸை இந்த நல்ல சந்தர்ப்பத்தில்
நினைவூட்டுகிறோம்.
----------------------------------
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
يأتي في آخر الزمان
قومٌ حُدثاءُ الأسنانِ سُفهاءُ الأحلام
இறுதி நாளின் நெருக்கத்தில்
கனவுகளில் மிதக்கிற முட்டாள்களாக இளைஞர்கள் வருவார்கள் என என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
இதன் பொருள் :
அந்த இளைஞர்கள் நன்மை என்று நினைப்பவை தீமையானதாக இருக்கும். வலிமை என்று நினைக்கிற
காரியங்கள் பலவீனமானவையாக இருக்கும்
இது இளைஞர்களுக்கும்
வயதான பிறகும் பக்குவமில்லாமல் வாழ்கிற பெரியவர்களுக்கும் பொருந்தும்.
நவீன சூதாட்டங்கள்
சீட்டுகள்
அதிக இலாபம் கிடைக்கும்
என்று பங்கு தார்ராக அழைக்கும் வியாபாரங்களில் பல்லாயிரக்கணக்கில் பணத்தை கொண்டு போய்
கட்டுகிறார்கள். சிலர் தங்களிடமிருக்கும் தங்க நகைகள் சொத்துக்களை விற்றும் அடமானம்
வைத்தும் இத்தகைய சீட்டுக்களில் சேருகிறார்கள். சிக்கிரம் அதிஷ்டசாலி ஆகிவிடலாம் என்ற
ஆசை தன் காரணம்.
லாட்டரி
லாட்டரி சீட்டுக்களில்
தங்களுடைய எதிர்காலத்தை தேடுகிற சராசரி தொழிலாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும்
விட இப்போது அதிகரித்திருக்கிற – அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் அதிகரித்திருக்கிறது
என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம்முடைய நாட்டில் மட்டுமல்ல. அரபு நாடுகளிலும் கூட.
ஐரோப்பிய நாடுகளின் இளைஞர்கள் கேஸினோக்களை
அதிஷ்ட்த்தின் தலை வாசலாக நினைக்கும் வழக்கம் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடப்பில் இருக்கிறது.
தமிழ் நாட்டில்
லாட்டரி இல்லை. ஆனால் கேரளாவிலிருந்தும் லாட்டரி அனுமதிக்கப்பட்டிருக்கிற மற்ற மாநிலங்களிலிருந்து
திருட்டுத்தனமாக நடைபெறுகிற லாட்டரிகளில் தமிழக மக்கள் தங்களது எதிர் காலத்தை தேடிக்
கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பத்ரிகை செய்தி
கூறுகிறது தமிழக எல்லையில் ஒரு இடத்தில் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஒரு மாநாடு போல மக்கள் கூடுகிறார்கள்.
10 ரூபாயிலிருந்து லாட்டரி சீட்டு விற்கிறார்கள். கால் மணி நேரத்திற்கு ஒரு குலுக்கல்
நடை பெறுகிறது. என்ன நடக்கிறது என்று உணராமலே
மக்கள் தமது பணத்தை இழ்க்கிறார்கள். என்றாவது ஒரு நாள் அதிஷ்டம் தன் கதவை தட்டும் என்று
ஆசையில் இருப்பவர்கள் அனைத்தையும் இழந்து நிற்கிற போது இந்த கிளப்புகளை நட்த்துகிறவர்கள்
இலவசமாக வண்டி ஏற்பாடு செய்து அவர்களை வீடு வரைக்கும் கொண்டு வந்து விடுகிறார்களாம்.
இப்படியும் விளம்பரம் செய்து சூதாட்ட விடுதிகளுக்கு மக்களை அழைக்கிறார்கள்.
மோசடியான வழிகளை
மக்களை ஏமாற்றி இப்படி காசை பறிப்பது, இலகுவாக காசு கிடைக்கும் என்று மக்கள் ஆசைப்படுவதும்
சாத்தானிய வலைகளாகும் என்று திருக்குர் ஆன்
எச்சரிக்கிறது.
ஒரு போதும் இதில்
வெற்றி கிடைக்காது. தோல்வியே மிஞ்சும். இன்னும் சொல்லப் போனால் பொருந்தோல்வியே மிஞ்சும்
.
திருக்குர் ஆன்
கூறுகிறது. சூதாட்டம் வேண்டாம். அது சாத்தானிய வலை. அதை தவிர்த்துக் கொண்டால் மட்டுமே
வெற்றி.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا
الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ
الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90
அதிகமாக ஆசைப்பட்டு
பொருத்தமற்ற காரியங்களில் ஈடுபடுவது பணத்தை வீணடிப்பதாகு.,இதை அல்லாஹ் வெறுக்கிறான்.
: إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا: قِيلَ
وَقَالَ، وَإِضَاعَةَ المَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ -
البخاري ومسلم
கேரளாவில் மிகப்பெரிய
லாட்டரி வியாபாரி மார்ட்டின். இவர் இந்தியாவின் மிகப்பெரிய பண்க்காரர்களில் ஒருவர்,
கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இவருக்கு பெரும் கல்வி நிறுவனங்கள் தொழில்
கூடங்கள் உண்டு. இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்வதில் முக்கிய இடம் வகிப்பவர்
இவர் கேரளாவில்
சிக்கீம் மாநில லாட்டரி ஏஜெண்ட். 10 வருடங்களுக்கு முன் ஒரு நாளைக்கு 40 கோடி ரூபாய்க்கு
லாட்டரி விற்பவர் ஆண்டுக்கு 14600 கோடி ரூபாயை சிக்கீம் லாட்டரி என்ற பெயரில் கேரளாவுக்கு
வெளியே கொண்டு செல்பவர்.
மக்களுடைய ஆசையை
காசாக்கும் அவரது திட்டம் பின்னர் தெரிய வந்த்து. சிக்கீம் அர்சிடமிருந்து கொஞ்சம்
லாட்டரி சீட்டுக்களை வாங்குகிற அவர் சிவாகாசியில் சொந்தமாக போலியான எண்களுடன் லாட்டரி
சீட்டுக்களை தயாரித்து விற்பார். அது கோடிக்கணக்கில் விற்கும். சிலரு லாட்டரியில் பணம்
கிடைக்கும் பலர் போட்ட பணம் .ஒரு பலனும் இன்றி காணாமல் போகும்.
இந்த மோசடி வழக்கில்
அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார் என்று பத்ரிகை செய்திகள் கூறிகின்றன.
இந்த மோசடியை நிருபிப்பது
போல ஒரு நிகழ்வு நடந்தது.
2006 ம் ஆண்டு
இதே போன்ற ஒரு டிஸம்பர் மாதத்தில் தமிழ் நாட்டை சேர்ந்த முத்து என்பவன் பாலக்காட்டிற்கு
அருகில் உள்ள தத்த மங்களத்தில் ஒரு லாட்டரி கடையை கொள்ளையடித்தான். அங்கு 21/2 இலட்சம்
ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள் இருந்தன. அவற்றில் கண்டிப்பாக தான் இலட்சாதிபதியாகிவிட
முடியும் என்று அவன் நினைத்தான். ஆனால் அந்த லாட்டரி சீட்டுக்களில் ஒன்றுக்கும் கூட
ஒரு பரிசும் கிடைக்க வில்லை. அவன் கைது செய்யப்பட்டான். பதிரிகைகள் கேலியாக எழுதின.
அந்த லாட்டரி சீட்டுக்களை பாதிக் காசுக்கு அவன் விற்றிருந்தால் கூட ஒரு இலட்ச ரூபாய்
கிடைத்திருக்கும்.
இதில் எவ்வளவு
பெரிய மோசடிகள் நடக்கிறது என்றால் ஏதோ சிறியதும் பெரியதுமாக சில ஆயிரங்கள் சிலருக்கு
கிடைத்து விடுகின்றன. ஆனால் முதல் பரிசுத் தொகை என்பது எப்போதாவது சிலருக்குத்தான்
கிடைக்கிறது
மார்ட்டினிடம்
விசாரித்த்தில் அவரிடம் கூட சிக்கீம் லாட்டரிகள் முதல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்
இல்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
எல்லாமே மோசடி.
வாரத்திற்கு ஒரு
தடவை மட்டுமே குலுக்கல் நட்த்த வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. தினசரி குலுக்கல்
நடத்துகிறார்கள். அப்படியே நடந்தால் கூட 18 குலுக்கள்தான் அதிகாரப்படி நடக்க வேண்டும்
ஆனால் 112 குலுக்கல் நடைபெறுகின்றன. பரிசுகளை அறிவிக்கிறார்கள் .அந்த முடிவுகள் பத்ரிகைகளில்
வெளியிடப்படுகின்றன.
அரசுகளுக்கு தெரிந்தே
எல்லாம் நடக்கின்றன. அதிஷ்ட்த்டிற்கு ஆசைப்படுகிறவர்களை வைத்து எல்லோருமே மோசடி செய்கிறார்கள்
என்கிறது பத்ரிகை ஆய்வு.
இப்படி ஏமாறுகிறவர்கள் பெரும்பாலும் சாமாணிய தொழிலாளாளர்க்ள்
என்று அந்த ஆய்வு சொல்கிறது. .
சிக்கீம் லாட்டரி
அதிகம் விற்பனையாவது கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும். இரண்டு மாநிலங்களுமே சாதாரண
தொழிலாளிகளை கொண்ட மாநிலங்களாகும்.
ஹதீஸ் குறிப்பிடுவது
போல பாடு பட்டு உழைக்கிற மக்கள் எப்படி முட்டாள் கனவுகளோடு வாழ்கிறார்கள் பாருங்கள்!
இந்த முட்டாள்
கனவுகளுக்கு தங்களுடைய வாழ்வை தொலைத்தவர்கள் ஏராளம் பேர் இருக்கிறர்கள்.
சமீபத்தில் தற்கொலை
செய்து கொண்ட ஒருவரை தேடிப் பார்த்த போது அவரது மெத்தைக்கு அடியில் ஏராளமான லாட்டரி
சீட்டுக்கள் இருந்தன.
லாட்டரி சீட்டு
வாங்கி சாமாணிய தொழிலாளர்கள் தோற்கிறார்கள் என்றால் உயர் ரக் தொழிலாளர்களும் அதிகம்
படித்தவர்களும் யூக வனிகங்களில் ஈடுபடுகிறார்கள்.
இந்த சேர் இவ்வளவு
உயரும். இதில் பணம் போட்டால் இத்தனை மடங்கு அதிகம் கிடைக்கும் என்று அதிர்ஷ்டத்தை நம்பி இறங்குகிறார்கள்.
இவ்வாறு யூக வர்த்தகத்தில்
ஈடுபட்டு தான் சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் சுமார் 80 வங்கிகள் திவாலாகின.
அதிர்ஷ்டத்தை நம்பி
இறங்கும் சூதாட்டம் சாத்தானின் வலை அதில் வெற்றிக்கு வழியில்லை என்ற திருக்குர் ஆனின்
வசனத்திற்கான சாட்சிகள் இவை.
இத்தகையோர்
நட்சத்திரங்களை அடைய நினைத்து நாயை முத்தமிட்டவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கொஞ்சமாக குறைத்து விடுவோருக்கு கேடுதான் என்கிறது இந்த வசனம்
அந்த வகையில் அல்லாஹ்
குடிகாரனை மன்னித்து விடலாம். வட்டி வாங்கியவனை மன்னிக்க அல்லாஹ் மன்னிக்க மாட்டான்
என்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். காரணம் அவன் சக மனிதனின் உரிமையை பறித்திருக்கிறான்.
.
தங்களது வாழ்க்கைகான
அடையாளங்களை மறுமையில் இரண்டு பேர் வெளிப்படையாக வைத்திருப்பார்கள் என்று ஹதீஸ்கள்
கூறுகின்றன.
ஒரு சாரார் எப்பவும்
ஒளுவுள்ள ஆட்கள். அவர்களின் அவையவங்கள் ஜொலிக்கும்
மற்றொரு சாரார்
மக்களின் உரிமையை அநீதியாக பறித்துக் கொண்டவர்கள்.
அத்தகையோரின் முதுகிற்குப்
பின் வால்கள் முளைத்துக் கொள்ளும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்படி ஒரு ஹதீஸ்
புகாரியில் இருக்கிறது.
عن ابن عمر رضى الله عنهما
ان رسول الله صل الله عليه وسلم قال (إن
الغادر يرفع له لواء يوم القيامه يقال هذه غدرة فلان ابن فلان )البخارى
மோசடியாளனுக்கு அருகில் ஒரு கொடி உயர்த்தப்படும் . அந்தக் கொடி அவனுடைய மோசடியின்
அளவிற்கு ஏற்ப உயரமாக இருக்கும் என்றும் மற்றொரு ஹதீஸ் கூறுகிறது.
நியாயமின்றி அடுத்தவருடைய உரிமையை நாம் பறித்துக் கொள்ளக் கூடாது. அப்படிச்
செய்து இப்போது நாம் தப்பித்துக் ஒரு நாள் நாம் மாட்டிக் கொண்டாக வேண்டும்.
No comments:
Post a Comment