إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ
இஸ்லாத்தின் முதல் கலீபா அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் மறைந்து இன்றோடு 1432 ஆண்டுகள் கடந்து விட்டன.
ஹிஜ்ரீ 13 ம் ஆண்டு
இதே போன்றதொரு ஜமாதில் ஆகிர் மாதத்தின் 22 ம் பிறையில் பெருமானார் (ஸல்) அவர்களைப் போலவே ஒரு திங்கட்கிழமையில்
அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் வபாத்தானார்கள். பெருமானாரைப் போலவே அவர்களுடைய வயதும்
63 தான்.
இந்த உலகில் ஒரு
நண்பரை நேசித்து அவருக்காக வாழ்வையும் உயிரையும் அர்ப்பணிக்கிற நண்பர்கள் சிலர் இருக்கலாம்
ஆனால் நண்பரைப் போலவே சிந்திக்கிற நண்பரைப் போலவே செயல்படுகிற ஒரு நண்பராக அபூபக்கர்
சித்தீக் ரலி அவர்களைப் போல யாருக் இருக்க முடியாது.
ஒரே
சிந்தனை
ஹிஜ்ரீ 6 ம் வருடம்
மக்காவின் எதிர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஹுதைபிய்யா என்ற இடத்தில் ஒரு உடன்படிக்கை
நடை பெற்றது. அந்த உடன்படிக்கையில் எதிரிகளுக்கு சாதகமான பல அம்சங்கள் இருந்தன. முஸ்லிம்கள்
உம்ராவிற்காக நிய்யத் செய்து மக்காவின் வாசலுக்கு வந்த பிறகும் அதை நிறைவேற்ற முடியாமல்
மக்காவின் எதிரிகள் தடுத்துவிட்ட கவலையும் ஒரு அநீதியான உடன்படிக்கைகு ஒத்துக்கொள்கிற
நிலையும் நபித்தோழர்களுக்கு பெரும் கவலையை அளித்தது. ஆனால் யாரும் வெளிப்படையாக பேசிக்
கொள்ள தயங்கினர் . சத்தியத்தின் பெருங்குரலான ஹஜ்ரத் உமர் ரலி அவர்களால் அதை சகித்துக்
கொண்டிருக்க முடியவில்லை. அவர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து “ நம்மை கோழைகளாக
காட்டுகிற ஒப்பந்தம் தேவைதானா ? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு ஒற்றை
வாசகத்தில் பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதர்.
இந்த வார்த்தைக்கு
மேல் அங்கு நிற்கிற சக்தி உமர் ரலி அவர்களுக்கு இருக்க வில்லை. அவர் அங்கிருந்து நகர்ந்தார்.
ஆனால் மனதிலிருந்த ஆதங்கம் தீர வில்லை. அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை அணுகி “ நம்மை
கோழைகளாக காட்டுகிற ஒப்பந்தம் தேவைதானா ? என்று கேட்டார்
என்ன ஆச்சரியம்
!
அபூபக்கர் சித்தீக்
ரலி அவர்களது நாவிலிருந்தும் அதே பதில் வந்த்து.
அவர் அல்லாஹ்வின்
தூதர்.
புகாரியில் இடம்
பெற்றுள்ள ஹதீஸின் ஒரு பகுதி இது
فقال عمر بن الخطاب: فأتيت نبي الله صلى الله عليه
وسلم فقلت: ألست نبي الله حقًّا، قال: «بلى»، قلت: ألسنا على الحق، وعدونا على
الباطل، قال: «بلى»، قلت: فلم نعطي الدنية في ديننا إذن؟ قال: «إني رسول الله،
ولست أعصيه، وهو ناصري
قال: فأتيت أبا بكر، فقلت: يا أبا بكر، أليس هذا
نبي الله حقًّا؟ قال: بلى، قلت: ألسنا على الحق، وعدونا على الباطل؟ قال: بلى،
قلت: فلم نعطي الدنية في ديننا إذن؟ قال: أيها الرجل، إنه لرسول الله صلى الله
عليه وسلم، وليس يعصي ربه، وهو ناصره،
..
ஒரே
செயல்
அபூபக்கர் சித்தீக்
ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் என்ன செய்வார்களோ அதையே செய்பவராக இருந்தார்கள்.
பயணங்களின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் ஓய்வெடுத்த இடத்தில் அவர்களும் ஓய்வெடுப்பார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் உட்கார்ந்த இடத்தில் அவர்களும் உட்கார்ந்த் எழுவார்கள்.
பெருமானார் (ஸல்)
அவர்கள் வஃபாத்தவதற்கு சற்று முன்பாக உஸாமா ரலி அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவை
அன்றைய ரோமப் பேர்ரசை எதிர்த்து போரிட ஜோர்டானின் உள்ள பல்காஃ என்ற ஊருக்கு அனுப்ப
ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பெரிய சஹாபாக்கள் அத்தனை பேரு இருந்தனர். அபூபக்கர்
சித்தீக் ரலி அவர்கள் கலீபாக பொறுப்பேற்றவுடன் முதலி சொன்ன உத்தரவு அந்த படைப்பிரிவுக்கு
பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக படை தயாராக இருக்கிற் ஜரிப் என்ற இட்த்திற்கு
கிளம்ப வேண்டும் என்பதுதான்.
அப்போது நபித்தோழர்களில்
சிலர், படைப்பிரிவில் பெரும் சஹாபாக்கள் பலர் இருக்கிறார்கள். அரபுகள் இப்போதுதான்
உங்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்திருக்கிறார்கள். அதனால் முஸ்லிம்களின் ஒரு பெரிய
அணியை விட்டு நீங்கள் பிரிந்திருப்பது சரியாக இருக்காதே என்று ஆலோசனை சொன்னார்கள்.
அதற்கு அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அளித்த பதில் பெருமானாரின் வழி முறைகளை பின்பற்றி
நிற்பதில் அவரது உறுதிப்பாட்டை காட்டியது. நான் தனியாக இருந்து என்னை விலங்குகள் கிழித்துச்
சாப்பிட்டு விடும் என்றிருந்தாலும் பெருமானார் (ஸல்) அவர்கள் திட்டமிட்ட படி நான் உஸாமாவின்
படை பிரிவை அனுப்பவே செய்வேன் என்றார்கள்.
ولما تولى أبو بكر الخلافة أمر أن يُبعث أسامة بن زيد الكلبي،
وألا يبقى بالمدينة أحد من جند أسامة إلا خرج إلى عسكره بالجرف،
واقترح بعض الصحابة على أبي بكر بأن يبقي الجيش
فقالوا: «إن هؤلاء جلُّ المسلمين، والعربُ على ما ترى قد انتقضت بك، فليس ينبغي لك
أن تفرق عنك جماعة المسلمين»،[ فقال
أبو بكر: «والذي نفس أبي بكر بيده، لو ظننت أن السباع تخطفني
لأنفذت بعث أسامة كما أمر به رسول الله ﷺ،.
ஒரே
குணம்
வரலாறு மற்றுமொரு
ஒற்றுமைய காட்டுகிறது.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிரா குகையிலிருந்து திரும்பி வந்து கதீஜா ரலி அவர்களிடம் எனக்கு போர்த்து விடுங்கள் என்று சொல்லி ஹிராவில் ஜிப்ரயீல் அலை அவர்களை சந்தித்த அனுபவங்களை சொல்லி வருகிற போது ஜிப்ரயீல் அலை அவர்கள் கட்டியணைத்த்தை குறிப்பிட்ட போது நான் மவ்தாகி விடுவேனோ என பயந்தேன் என்றார்கள். அப்போது பெருமானாருக்கு ஆறுதலால அன்னை கதீஜா ரலி அவர்கள் பெருமானாரை புகழ்ந்து பேசிய சொற்கள் வரலாற்றின் வைர வரிகளுக்கு சொந்தமானவை.
இந்த வார்த்தைகள் புகார்யில் இருக்கின்றன.
لما نزل الوحي على الرسول صلى الله عليه وسلم عاد مذعورا إلى السيدة
خديجة رضي الله عنه يرجف فؤاده وهو يقول: (زملوني زملوني) ثم أخبر خديجة رضي الله عنه بالخبر وقال لها: (لقد خشيت على نفسي، فقالت المرأة المؤمنة: كلا
والله! لا يخزيك الله أبدا؛ إنك لتصل الرحم، وتحمل الكل، وتكسب المعدوم، وتقري
الضيف، وتعين على نوائب الحق
என்ன ஆச்சரியம் பாருங்கள்!.
انظر ما قاله زيد بن الدغنة سيد قبيلة القارة وهو يسأل أبا بكر
عن سبب خروجه من مكة مهاجرا إلى الحبشة، قال أبو بكر: أخرجني
قومي فأريد أن أسيح في الأرض وأعبد ربي، قال ابن الدغنة: فإن
مثلك يا أبا بكر! لا يخرج.: إنك تكسب المعدوم، وتصل الرحم، وتحمل الكل، وتقري الضيف، وتعين
على نوائب الحق،
ولم يكن
مشهورا في العرب أن يوصف رجل بهذه الصفات، ولم يوصف بها إلا رسول الله صلى الله
عليه وسلم والصديق رضي الله عنه وأرضاه
இந்த சூழலில் பெருமானாரும்
அவருடைய அருமைத் தோழரும் ஒன்று போல குணம் கொண்டிருந்தார்கள் என்பதையும் வரலாறு காட்டுகிறது.
திருக்குர்
ஆனில் அபூபக்கர் ரலி
திருக்குர் ஆனின்
சில வசனங்கள் அபூபக்கர் ரலி அவர்களையே குறிப்பாக சுட்டி நிற்கின்றன.
“அத்கா”
நரகிலிருந்து தப்பித்துக்
கொள்ளும் “அத்கா” “இறையச்சம் மிக்கவர்” அவர் தான் என்பது முபஸ்ஸிர்களின் கருத்து
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى (17) الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ (18) وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ (19) إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ (20) وَلَسَوْفَ يَرْضَىٰ (21)
இந்த வசனத்திற்கான விரிவுரையில் தப்ஸீர் குர்துபியில் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் அந்தஸ்து பற்றி பல்வேறு தகவல்கள் தரப்படுகிறது.
فحقق الله تعالى قوله له بكلامه ووصف الصحبة في
كتابه
பெருமானாரின் தோழமையை அல்லாஹ் உறுதிப்படுத்தியுள்ளான். அதானால் மற்ற சஹாபாக்களின் தோழமையை யாரேனும் நிராகரித்தால் அது வரலாற்றுப் பிழையாக அமையும் ஆனால் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களின் தோழமையை நிராகரித்தால் அது திருக்குர் ஆனை மறுக்கிற குப்ராக அமையும்.
நம்முடைய நம்பிக்கையின் படி முஸ்லிம் சமூகத்தில் சஹபாக்களுக்கு எல்லோரையும்
விட உயர்ந்த அந்தஸ்து உண்டு.
நபிமார்களுக்கு அடுத்து சிறந்த மனிதர்கள் நமது நபி (ஸல்) அவர்களின் தோழர்கள்
ஆவார்.
" إن الله نظر في قلوب العباد ، فوجد قلب محمد صلى الله عليه وسلم خير
قلوب العباد ، فاصطفاه لنفسه ، فابتعثه برسالته ، ثم نظر في قلوب العباد بعد قلب
محمد ، فوجد قلوب أصحابه خير قلوب العباد ، فجعلهم وزراء نبيه ، يقاتلون على دينه
، فما رأى المسلمون حسنا فهو عند الله حسن ، وما رأوا سيئا فهو عند الله سيئ
அஹ்லுஸ்ஸுன்னாவின் கருத்த்துக்கள் பலதுக்கும் முரண்படுகிற இப்னு தய்மிய்யா கூறுகிறார்.
கதீப் பக்தாதி கூறுகிறார்
" على أنه لو لم يرد من الله عز
وجل ورسوله فيهم شيء ، لأوجبت الحال التي كانوا عليها من الهجرة ، والجهاد ،
والنصرة ، وبذل المهج والأموال ، وقتل الآباء والأولاد ، والمناصحة في الدين ،
وقوة الإيمان واليقين ، القطعَ على عدالتهم ، والاعتقاد لنزاهتهم ، وأنهم أفضل من
جميع المعدلين والمزكين الذين يجيؤون من بعدهم أبد الآبدين ، هذا مذهب كافة
العلماء ، ومن يعتد بقوله من الفقهاء
அல்லாஹ்வோ, இறைத்தூதரோ சஹாபாக்களின் அந்தஸ்து இது என்று வரையறுத்துக் கூறாவிட்டாலும்
கூட சஹாபாக்கள் இந்த மார்க்கத்திற்கு செய்த பங்களிப்பின் காரணமாக அவர்கள் அனைவரையும்
நீதவான்களாக உறுதிப்படுத்த வேண்டிய கடமையை காலம் நமக்கு இட்டிருக்கிறது.
ஒன்றை நினைவு படுத்துகிறோம்.
நாம் பெருமானாராகுகாக துஆ செய்கிற போது அவர்களுக்கு மட்டும் துஆ செய்வதில்லை. அவர்களுடைய
குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் சேர்த்தே துஆ செய்கிறோம். நம்முடைய எந்த துஆ வும்
எந்த மஜ்லிஸும் அப்படியே தொடங்குகிறது நிறைவடைகிறது.
இதில் பெருமானாரின்
தோழர்கள் என்று கூறும் போது அனைத்து தோழர்களும் அதில் இடம் பெறுவார்கள்.
இதில் நாம் சிலரை
குறை கூற முயலும் போது
நபித்தோழர்கள் சிறந்தவர்கள் , நீதிமான்கள் என்ற கருத்துக்கு அடுத்ததாக நான் நம்பிக்கை கொள்ள வேண்டியது.
ஹழ்ரத் அலி ரலி அவர்கள் கூறினார்கள்.
قدمك
رسول الله فمن ذا يؤخرك؟
قام علي بن أبي طالب ومعه السيف، فدنا منه حتى وضع رجلاً على عتبة المنبر والأخرى على الحصى وقال: «والله لا نقيلك ولا نستقيلك، قدمك رسول الله فمن ذا يؤخرك؟».
அபூபக்கர் சித்தீக் ரலி
உமர் பின் கத்தாப் ரலி
உஸ்மான் பின் அப்பான் ரலி
அலீ பின் அபீதாலி ரலி
இது வெறும் துஆ அல்ல நமது ஈமானை சரியான அளவில் பாதுகாப்பதற்கான ஒரு திட்டமும்
ஆகும்.
"பெஸ்ட் ஃபிரண்ட் "
ReplyDeleteஹழ்ரத் ஒரு வாரம் பிந்தய தலைப்பு
ReplyDelete