நமது இந்திய நாட்டின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த 350 ஆண்டுகால பழமையான பாபர் பள்ளிவாசல், நமது கண்களுக்கு முன்னால் 1992 டிஸம்பர் 6 ம் தேதி வன்முறையாளர்களால் தகர்க்கப்பட்டது. அது நாம் சந்தித்த ஒரு பெருந்துயரமே ஆகும். அன்று ஒரு பள்ளிவாசல் மட்டும் இடிக்கப்படவில்லை. ஒட்டு மொத்த இந்திய சிறுபான்மையினத்தின் நம்பிக்கையையும் பாதுகாப்பும் தகர்க்கப்பட்டது. இந்திய நாட்டின் நீதி அமைப்பும் மதச்சார்பின்மையும் கேள்விக்குள்ளானது. .
இப்போது அந்த இடத்தில் ஒரு கோயில் திறப்பு விழா நடைபெற நாடு முழுவது பரப்பான ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.
கோயில் திறப்பு விழாவில் பிரபலமான பல சங்கராச்சாரியார்கள் கலந்து கொள்ளவில்லை. கோயில் பூசாரி அல்லாத நமது நாட்டின் பிரதமர் கர்ப்ப கிரகத்திற்குள் புகுந்து ராமர் சிலையை தொடுவது சம்பிர்தாயத்திற்கு எதிரானது என பல இந்து சமய துறவிகள் அறிவித்துள்ளனர். கட்டிடப்பணி நிறைவடைவதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக கோயிலை திறப்பது கூடாது என்றும் சிலர் கூறியுள்ளனர்.
பள்ளிவாசல் இருந்த இடம் தான் ராம ஜன்ம பூமி என்றால் பள்ளிவாசல் இருந்த இடத்திலிருந்து 2 கீமீ தள்ளி கோயில் கட்டப்பட்டிருப்பது ஏன் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிற்பட்ட ஜாதியை சார்ந்தவர் என்பதாக் ஜனாதிபதி முர்மூ புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளன.
இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் இப்போது நடைபெறுகிற கோயில் திறப்பு விழா என்பது இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக நடத்தப்படும் ஒரு பிரச்சாரக் கூட்டம் தான் என்பது தெளிவாகியியிருக்கிறது
இந்த கோயில் திறப்பை தங்களுட்டய பெரிய பெறுமை என்பது போல இப்போது மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியினர் காட்டிக் கொள்ள பிரம்மாண்ட முயற்சிகளை செய்கிறார்கள்.
பள்ளிவாசலை இடித்தததை தவறு என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டிய பிறகு அங்கு கோயில் கட்டியதில் பெருமையடைய என்ன இருக்கிறது இமாலய கேள்வியாகும்.
இந்த சூழ்நிலையில் முஸ்லிம் சமுதாயம் நினைவில் கொள்ள வேண்டிய சில செய்திகளையும் நடப்பில் மேற்கொள்ள வேண்டிய சில செயல்பாடுகளையும் இந்த ஜும் ஆல் நாம் பார்க்க இருக்கிறோம்.
முதலில் பாபரி மஸ்ஜித் விவகாரம் என்ன என்பதை பார்ப்போம்.
1528 ம் ஆண்டு அயோத்தி நகரில் முகலாய சக்ரவர்த்தி மீர்பாகி பாபர் பள்ளிவாசலை கட்டினார்.
ராமயணத்தை
எழுதிய துளசி தாஸர் வாழ்ந்த காலம் அது. ராமர் கோயிலை இடித்து விட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதாக ஒரு சிறு குறிப்பு கூட வரலாற்றில் இல்லை.
பள்ளிவாசல் கட்டப்பட்ட போதும் சர்ச்சை இருக்க வில்லை. கட்டி 350 வருடங்களாக ஒரு பிரச்சினையும் எழவில்லை.
1887 சிப்பாய் கலகம் நடைபெற்றது. இந்தியாவை ஆட்சி செய்து
கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியினர் துப்பாக்கியில் பன்றி கொளுப்பு தடவப்பட்ட குண்டுகளை
பயன்படுத்தக் கூறியதால் அவர்களது படையில் இருந்த முஸ்லிம் வீர்ர்கள் அதை எதிர்த்து
புரட்சி செய்தனர். அவர்களோடு இந்துக்களூம் மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர். பிரிட்டிஷ் கார்ர்களை ராணுவ ரீதியாக எதிர்த்த முதல் நிக்ழவு
அது என்பதனால் சிப்பாய்க்கலகம் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் என்று கருதப்பட்டது
இந்த சிப்பாய் கலகத்த்த்திற்கு பிறகு இந்துக்களையும் முஸ்லிம்களையும்
பிரிக்க பிரிட்டிஷ்கார்ர்கள் திட்டமிட்டனர். அதற்கு பல்வேறு முயற்சிகளை
செய்தனர்.
அயோத்தியில் சுமார் 3 ஏக்கர் நிலத்தில் பாபர் பள்ளி இருப்பது அந்த ஊரில் இருந்த சில இந்துக்களின் கண்களை உறுத்தியது.அவர்கள் பிரிட்டிஷாரின் திட்ட்த்திற்கு துணைபோயினர்.
சிப்பாய்
கலகம் நடை பெற்ற இரண்டு வருடங்களுக்குப் பிறகு பாபர் பள்ளிவாசல் விவகாரத்தில் 1859 ம் ஆண்டு முதல் தகராறு
தொடங்கியது. இந்துக்களில் சிலர் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என வாதிட
ஆரம்பித்தனர்.
நாடு சுதந்திரத்திரம் பெற்ற
பிறகு 1949 டிஸ்ம்பர் 22 தேதி இஷா வரை அந்தப் பள்ளியில் தொழுகை நடைபெற்றது . 22 ம் தேதி இரவில் பள்ளிவாச்சலுக்குள் திருட்டுத்தனமாக ஒரு சிலையை கொண்டு வந்து வைத்து விட்டனர். சிலையை அகற்றுமாறு
முஸ்லிம்கள் கோரினர்.
மத்திய அரசும் சிலைகள்ள அகற்றுமாறு உத்தரவிட்டது. அவ்வாறு செய்தால் கலவரம் வெடிக்கும் என்று கூறிய பைசாபாத் மாவட்ட ஆட்சியாளர் கே.கே நாயர் சிலைகளை அகற்ற மறுத்தார். அதே நேர்ர்ம் பள்ளிவாசலுக்கு பூட்டும் போட்டார்.
அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்ட்து. காங்கீரஸ் ஆட்சிக்காலத்தில் தொடந்துமுஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப் பட்ட்து
1986 – சிலைகளை வழி பட அனுமதிக்கப்பட்ட்து ஆனால் முஸ்லிம்கள் தங்களுடைய பள்ளிவாசலுக்குள் செல்வதற்கு தடை செய்யப்பட்டனர்.
1989 – சிலா நியாஸ் எனப்படும் ராமர் கோவிலுக்கான அடிக்கல் பள்ளிவாசல் வளாகத்திற்கு
வெளியே நடப்பட்டது.
1990 அத்வானி ரதயாத்திரை நடத்தினார்.
1990 அக்டோபரில் பாபரீ மஸ்ஜித் வளாகத்தில் கூடிய இந்துதுதுவா சக்திகள்
ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்த நிலையில் சிலர் பள்ளிவாசலின் மீது ஏறி காவி கொடியை
நாட்டினர். அவர்களை காவல் துறையினர் தடுத்தனர். தடுத்த காவல்துறையினரை
கடுமையாக தாக்கினா, இதனால் துப்பாக்கி சூடு நடைபெற்றது. சுமார் 10 பேர் கொல்லப்
பட்டனர். இதை இந்துத்துவ சக்திகள் பல நூறு பேர் கொல்லப்பட்டதாகவும் இந்துக்களின்
சடலங்கள் சரயு நதியில் மிதக்க விடப்பட்டதாகவும் பொய்யான பிரச்சாரத்தை செய்தனர். விக்கீபீடியாவிலும்
இப்பொய்ப் பிரச்சாரம் பதியப்பட்டுள்ளது.
1992 – பாபர் பள்ளி உடைப்பு. தொடர்ந்த கலவரத்தில் 2000முஸ்லிம்கள் பலியாயினர். இது விசயத்தை
விசாரிக்க லிபரன் கமிஷம் அமைக்கப்பட்டது.
2009 ஜூன் 30 பதினேழு ஆண்டுகள்
கழித்து, லிபரான் ஆணையம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கை
சமர்ப்பிப்பு. இதில் எல். கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,
கல்யாண் சிங், உமாபாரதி, அசோக் சிங்கல்
உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2010 செப்டம்பர். 30
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.வி.கான்,
சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு,
பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு
வழங்கியது. சன்னி வக்பு வாரியம் ‘ராம் லல்லா),
நிர்மோஹி அகாரா, ஆகிய மூன்று தரப்புக்கும் 2.77 ஏக்கர் நிலத்தை பங்கிட்டு அளிக்க வேண்டும்; தற்காலிக ராமர் கோயில் அமைந்துள்ள முந்தைய கட்டிடத்தின் மைய இடம் ராம்
லல்லாவுக்குச் சொந்தமானது’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
2016
நரேந்திர மோடியும் 2017 யோகியும் பொறூப்பேற்ற பிறகு உச்ச
நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்த்து.
2019 நவம்பர். 9
உச்ச நீதிமன்றம் அயோத்தி நில உரிமை வழக்கில் இறுதித்
தீர்ப்பளித்தது. ‘சர்ச்சைக்கு உரியதாக இருந்த குறிப்பிட்ட 2..77
ஏக்கர் நிலமும் ராம் லல்லாவுக்கே சொந்தம்; அந்த இடத்தில் ராமர்கோயில் அமைக்க அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்க வேண்டும்;
முஸ்லிம்கள் மசூதிகட்ட தனியே 5 ஏக்கர் நிலம் மாநில
அரசால் அளிக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
2020 செப்டம்பர் 30 பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,
கல்யாண் சிங், வினய் கட்டியார், உமா பாரதி, சாக்ஷி மஹராஜ் உள்ளிட்ட 32 பேரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
நாட்டில்
பல ஆண்டுகளாக ஒரு குற்ற வழக்காக நடைபெற்ற ஒரு விவகாரத்தை. அரசியல் அதிகாரத்தால் மூடியும் முடித்தும் வைக்கப்ப்பட்ட ஒரு விவகாரத்தை தான்
இப்போது சிலர் பிரம்மாண்ட பக்தியாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.
உண்மையில்
இது இந்தியாவின் நீதியையும் மதச்சார்பின்மையையும் பன்முக இயல்பையும் சட்ட்த்தின் ஆட்சியையையும் பெருமளவில் பாதித்த ஒரு நிகழ்வே ஆகும்.
அதிகாரத்தின்
உச்சத்தில் ஆணவத்தில் கொக்கரிப்பவர்கள் மக்கள் மெளனமாக இருக்கிறார்கள் என்று நினைக்கலாம்.
ஒன்றைய யாரும் மறுக்க முடியாது.
நாட்டில் உருவாகியிருந்த மோசமான சட்ட ஒழுங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான் உச்சநீதிமன்றம் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதியளித்தது. அதே சூழ்நிலையில் தான் மக்களும் இப்போது மெளனமாக இருக்கிறார்கள்.
மக்களில் ஒரு சாராருக்கு நீதி அநீதியை பிரித்தரியாதவாறு மத போதை ஊட்டப்பட்டிருக்கிறது.
ராமர் பெயரால் அந்த போதை ஊட்டப்படிருப்பது தான் பெரிய விந்தை.
ராமர், கடத்திச் செல்லப்பட்ட அவருடைய மனைவியை மீட்பதற்கான போரில் மாலை நேரமாகி விட்ட்தாலும் ராவணன் களைத்து போயிருந்த படியால் இன்று போய் நாளை வா என ராவணனுக்கு வாய்ப்பளித்த நேர்மையாளன் என்று இராமயணம் கூறுகிறது.
அந்த ராமரின் பெயரைச் சொல்லிக் கொண்டு எல்லா வகையான அக்கிரமங்களையும் கட்டவிழ்த்து விட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி என்று சொல்லிக் கொண்டு இந்த விழா நடைபெறுகிறது. இதற்காக அரசின் அனைத்து துறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
லல்லு பிரசாத் யாதவ் அவர்களின் மகன் தேஜ்ஸ் யாதவ் மிக அருமையாக கூறியிருந்தார்.
என் கனவில் ராமர் தோன்றினார். தான் இந்த கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை
என்று கூறினார்.
மிக நிதர்சனமான உண்மை. வெறும் ஒரு அவதூற்றின் மீது எழுப்பட்டுள்ள மாளிகை எவ்வளவு
பலமானதாக இருந்தாலும் அது ராம ராஜ்யம் அமைய உதவாது.
நாம் இந்து சகோதர்ர்கள் நல்லறிவு பெற பிராத்திப்போம். உண்மையில் இந்து சமூகம் ஒரு ஆதிக்க போதையிலிருந்து விழிப்புணர்வு பெறாமல் இதில் மாற்றங்கள் ஏற்படுவது சிரமம்.
ஒரு பள்ளிவாசல் பாழானது என்பதை விட ஒரு பெரிய சமூகம் நேர்வழி பெறாமல் இருக்கிறது என்பதை உணர்வோம்.
யார் மீதும் ஆத்திரமடைவதை விட அவர்கள் நேர்வழி பெற பிரார்த்திப்பதே இஸ்லாம் நமக்கு கற்றுக் கொடுத்த வழிமுறையாகும்.
துபைல் இப்னு அம்ரு என்ற நபித்தோழர் தவ்ஸ் என்ற குடும்பத்தின் மதிப்பு மிக்க தலைவர். அரபு இலக்கியத்தில் தேர்ச்சிமிக்கவர்.. வள்ளல். தேடி வருவோரை ஆதரிப்பவர். அவர் ஹிஜிரத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன் மக்காவிற்கு ஹஜ்ஜுக்காக வந்த இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் ஓதிய திருக்குர் ஆனை கேட்டு முஸ்லிம் ஆனார். பிறகு தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். உன் மக்களிடம் சென்று இஸ்லாமை எடுத்துச் சொல் என்றூ பெருமானார் (ஸல்) அவரை அனுப்பி வைத்தார்கள். அவர் மிகுந்த எதிர்பார்ப்போடு தனது மக்களிடம் வந்து முஸ்லிம்களாகிவிடுங்கள் என்று கூறினார். அவர் சொன்னால் அனைவரும் கேட்டுக் கொள்வார்கள் என்று நினைத்தார். ஆனால் அவருடைய மனைவியை தவிர வேறு யாரும் இஸ்லாம தழுவ வில்லை .அதனால் அவருக்கு கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டது நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனது சமூகம் கட்டுப்பட மறுத்து விட்டது அவர்களுக்கு எதிராக நீங்கள் துஆ செய்ய வேண்டும் என்று கூறினார்.
அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த சமூகத்திற்கு எதிராக துஆ செய்ய வில்லை. இறைவா தவ்ஸுகளுக்கு நேர் வழியை காட்டு என பிரார்த்தனை செய்தார்கள். . இந்த வாசகத்தை நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கான அடையாளம் என்று ஆய்வாளர்கள் சொல்வார்கள்.
فعن أبي هريرة رضي الله عنه قال: (قدِم الطُّفَيل وأصحابه فقالوا: يا رسول الله! إنَّ دَوسْاً قد كفَرتْ وأبَتْ،
فادعُ اللهَ عليها ـ فقيل: هلكتْ دَوس ـ، فقال صلى الله عليه وسلم: اللهمَّ! اهدِ دَوْساً وائتِ بهم) رواه مسلم..
மிகப் பிரபலமான இந்த நிகழ்வு கோபம் ஆத்திரம் ஆகியவற்றிற்கு ஆட்படுவதை விட நிதானமாக சிந்தித்து நேர்வழிக்காக பிரார்த்திக்க வேண்டும்.
அதன் பலன் வீண் போகாது.
இந்த தவ்ஸி குடும்பம் பின்னர் இஸ்லாத்திற்கு வந்தது. அவர்களில் ஒருவர் தான் அபூஹுரைரா ரலி அவர்கள்
இப்போது கோயில் திறப்பு விழா என்று செல்பவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுக்கட்டும்.
அவர்கள் ஹிதாயத் பெற்று விட்டால் பல நூறு பள்ளிவாசல்கள் அவர்கள் எழுப்பக் கூடும்.
தங்களது தவறுகளை அவர்கள் திருத்த முயற்சிப்பார்கள்.
துபைல் ரலி அவர்கள் தங்களது குடும்பத்தின் துல் கப்பைன் என்ற சிலையை தகர்த்து அதன் முகத்தில் நெருப்பை பற்ற வைத்தார். அதன் பிறகு தான் விழிப்ப்டைந்த்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கவிதையை படித்தார்.
துல் கப்பைனே! நான் உன்னை வணங்குபவன் அல்ல;
உனக்கு முன் பிறந்தவன்
நான்.உன் இதயத்தில் நெருப்பை வார்ப்பேன்
என்று கவிதை படித்தார் என் தபகாத்து இப்னு சஃது பதிவு செய்கிறது.
قال ابن
سعد: لما أراد رسول الله صلى الله عليه وسلم
المسير إلى الطائف، بعث الطفيل
بن عمرو إلى ذي الكفين - صنم عمرو
بن حممة الدوسي - يهدمه، وأمره أن يستمد قومه ويوافيه بالطائف، فخرج
سريعا إلى قومه فهدم ذا الكفين، وجعل يحش النار في وجهه ويحرقه، ويقول:
يا ذا
الكفين لست من عبادكا ميلادنا أقدم من ميلادكا
أنا حششت
النار في فؤادكا
ஒரு அனுபவம்
இஸ்லாம் கற்றுக் கொடுத்த இந்த மரபில் வழி வந்த ஒரு பெண் மணியை நான் ஹஜ்ஜில் பார்த்தேன். கஃபாவை சுற்று தவாபு செய்பவர்களின் கூட்டம் அதிகமாக இருந்த்து. அவர்களில் திடகாந்திரமான தோற்ற முடைய இனதவர்களும் இருந்தனர். அவர்கள் மோதியதில் ஒரு வயதான பெண்மணி கீழே விழுந்தார். அவ்வாறு விழுவது ஆபத்தானது சட்டென எழுந்திருக்க் முடியாமல் போனால் மரணம் கூட சம்பவிக்கலாம். அந்த நிலையிலும் கீழே விழுந்த அந்தப் பெண் உரத்த குரலில் கூறினார். யா அல்லாஹ் நீ இவர்களுக்கு நேர் வழி காட்டு.
என்னால் மறக்க முடியாத ஒரு வாழ்க்கை பாடம் இது.
மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒரு வழி முறையை திருக்குர் ஆன் சுட்டிக்காட்டுகிறது.
فَٱصْبِرْ كَمَا صَبَرَ أُوْلُواْ ٱلْعَزْمِ مِنَ
ٱلرُّسُلِ
உறுதிமிக்க இறைத்தூதர்கள் க்டை பிடித்த பொறுமையை கடைபிடியுன்ங்கள்
கடலில்
விழுந்து மாள்வதை தவிர வேறு வழ்யில்லை என்ற நிலையிலும் மூஸா அலை அவர்கள் இறை உதவி வரும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
இந்த
மலையை போட்டு தாயிப் மக்களை அழித்து விடுகிறேன் என்று மலக்கு காத்து நின்ற போதும் தாயிப் மக்களின் சந்த்திகளுக்கா முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காத்திருந்தார்கள்.
உலுல்
அஜ்முகளைப் போல பொறுமை என்பதன் பொருள்
அவர்கள்
எப்படி சோதனைகளின் விளிம்பு நிலையிலும் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்து கொண்டார்களோ அது போல நாமும் நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுவதாகும்.
இந்த நபிமார்கள் மிக வன்மமான எதிர்ப்புக்களை எதிர் கொண்டார்கள். பொறூமை காத்தார்கள். இறுதியில் அவர்களே மகத்தான வெற்றியை பெற்றார்கள்.
அல்லாஹ் அடுத்துச் சொல்கிறான்
وَلَا تَسْتَعْجِل لَّهُمْ ۚ
இத்தகையோர் சீக்கிரம் அழிந்து போக வேண்டும் என்று எதிபார்க்காதீர்கள் என்ற இந்த வாசகம் கூறுகிறது.
ஆனால் அந்த நிழ்வு நிரந்தரமானதாக அமைந்தது.
அதே வஹ்ஷீ இஸ்லாமை தழுவினார். பிற்காலத்தில்
இஸ்லாத்திற்கு பெரும் சோதனையாக வந்த பொய் நபி மூஸைலமா வை அவரே கொன்றொழித்தார்.
மேற்சொன்ன குர் ஆன் வசனத்தில் அடுத்து அல்லாஹ் கூறுகிறான்.
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوعَدُونَ لَمْ
يَلْبَثُوٓاْ إِلَّا سَاعَةً مِّن نَّهَارٍ
சிந்திப்பவர்களுக்கு இது போதும். சட்டத்தை மீறுபவர்கள் அழிவை தவிர வேறொன்றையும் அனுபவிக்க மாட்டார்கள்.
எனவே உச்சநீதிமன்றம் எப்படி நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியதோ அதே சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் இந்திய நாட்டின் ஜனநாயகத்தின் மீது பற்று கொண்ட பல கோடி மக்களும் இப்போதும் மெள்னமாக இருக்கிறார்கள்.
வன்முறையாளர்கள் மேலும் வன்முறையில் இறங்கி விடக் கூடாதே என்ற அச்சமும், அந்த வன்முறையை வைத்தே இலாபம் அடையக் காத்திருக்கிற பாஜகவின் அரசியல் தந்திரம் வெற்றி பெற்று விடக் கூடாது என்ற எச்சரிக்கையுமே நியாயவுணர்வுள்ளவளும் மெளனம் காப்பதற்கு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு வகையில் ஜனநாயக வழிமுறையில் நாம் நமது எதிர்ப்பை வெளிப்படுத்து வது கூட தீய சக்திகளுக்கு வாய்ப்பளித்து விடக் கூடும் என்ற அளவில் மிக உறுதியான பொறுமையை
நாம் கடைபிடிப்பது சிறந்ததே!.
பிரச்சாரம்
பொறுமையாக இருப்பது என்றால் சும்மா இருப்பது என்று அர்த்தமல்ல. ஆத்திரப்படாம் நமது இலக்கை நோக்கி நகர வெண்டும் என்பதே பொருளாகும்.
ஒரு பள்ளிவாசலை கோயிலாக இடித்து மாற்றுவதை இந்து சகோதர்ர்களில் கனிசமானோர் கொண்டாடுவதற்கு காரணம், அது தான் ராமர் பிறந்த் இடம் என்றும் அங்கிருந்த கோயிலை இடித்து விட்டு பாபர் பள்ளிவாசலை கட்டினார் என்ற செய்தியை தொடர்ந்து தீய சக்திகள் பிரச்சாரம் செய்தது ஆகும்.
ஒரு தீமையை நிலை நாட்ட பிரச்சாரம் இந்த அளவில் பயன்படுத்தப்பட்டிருக்குமானால் ஒரு சத்தியத்தை நிலை நாட்ட நாம் இதையும் விட அதிகமாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
·
1992
பாபர் பள்ளிவாசல்
இடிக்கப்பட்டது தவறு என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்த்து.
அது மட்டுமல்ல பாபர் பள்ளிவாசல் விவகாரத்தில் கடந்த நூறு வருடமாக இந்துத்துவ அமைப்பினர் எழுப்பி வந்த அவதுறு பிரச்சாரததை ஏற்றுக் கொள்ள வில்லை என்பது மிகவும் கவனிக்கத்தக்கத்தாகவும்.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட விவகாரங்களில் பின்வருபவை
கவனிக்கத்தக்கவை.
·
பாபர்மஸ்ஜித் மஸ்ஜிதாக த்தான் இருந்த்து,
·
அது பாபரின் படைத்தளபதி மீர் பாக்கியால் கட்டப்பட்டது.
·
அது கட்டப்பட்ட இட்த்திற்கு கீழ் வேறு ஒரு கட்டிட்டத்தின்
இடிபாடு இருந்தாலும் அதை கோயில் என்று உறுதிப்படுத்த முடியவில்லை.
·
அது பூட்டப்படுவதற்கு முன்புவரை
முஸ்லிம்கள் அங்கு தொழுகை
நடத்தினர்.
·
அந்தப் பள்ளிவாசல் கோயில் வடிவத்தில் இருக்க வில்லை
பள்ளிவாசலாகத்தான் இருந்தது.
இதை சிந்திக்கிற எவரும் புரிந்து கொள்ள முடியும். இந்த
செய்திகளை நம்மால் முடிந்த வரை நாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டே
இருப்போம்.
இதை மிக நல்லவிதமாக புரிந்து தமிழக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின்
பள்ளிவாசலை இடித்து விட்டு கோயில் கட்டியதில் உடன்பாடு இல்லை என்று
கூறியிருக்கிறார்.
இது போன்ற கருத்தை இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள், உள்ளிட்ட ஜனநாயகத்தை நேசிக்கிற மக்கள் அனைவரும் பேசியிருக்கிறார்கள்.
இந்த கருத்தை நாம் இன்னும் பரவலாக்க வேண்டும்.
அதே நேரத்தில் சட்ட்த்திற்கு புறம்பாக பாபரீ மஸ்ஜித் இடிக்கப்பட்ட்து என்ற பிரச்சாரத்தை
நாம் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்வோம்.
மிக அநீதிபாயக வரலாறு காணாத வன்முறை மூலம் பாபர் பள்ளிவாசலை இடித்து விட்டு
நல்ல பிள்ளைகளைப் போல அந்த விழாவிற்கு அழைப்பு விடுக்க முஸ்லிம்களிடமும் வருகிறார்கள்.
அயோக்கியத்தனத்தின் உச்சம் இது. ஆயினும் நாம் பொறுமை காப்போம்.
வட நாட்டின் சில பகுதிகளில் அன்றைய தினம் முஸ்லிம்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷம் போட
வேண்டும் என சிலர் பேசியிருக்கிறார்கள். ஏன் மிரட்டியிருக்கிறார்கள் என்று கூட கூறலாம்.
இதற்கெல்லாம் நாம் பணிந்து விடக் கூடாது என்று முஸ்லிம் அறிஞர்கள் மக்களை கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இத்தக்கய மிரட்டல்களுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற பிரதமர் உள்துறை
அமைச்சர் உள்ளிட்ட ராமபக்தர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்க வில்லை. என்பது கேலிக்குரியது.
இந்த அகம்பாவ ஆட்டங்களுக்கு விரைவில் முடிவு ஏற்படாமல் போகாது. அல்லாஹ் சத்தியத்திற்கான
வெற்றிய அதற்குரிய நேரத்தில் எளிதாக தந்துவிடுவான்.
குறிப்பிட்ட கோயில் திறப்பு விழா நடைபெறுகிற நாளில் தங்களது மாநிலம் முழுவதிலும்
மத ஒற்றுமை பேரணிகளை நட்த்தப்போவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவிவித்திருக்க்றார்.
தீய சக்திகளின் வலையில் அதிக மக்கள் விழுந்து விடாமல் காக்கிற மிக திறமையான
கையாளுதல் இது.
இந்த முயற்சிகள் வெற்றி பெறட்டும்.
நம்முடைய பிரதம்ர்
திடீரெனெ கேரளாவில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். தமிழகத்தில் மூன்று நாள்
சுற்றுப் பயணம் செய்கிறார். இதுவெல்லாம் வேறொன்றும் இல்லை.
இந்துத்துவாவிற்கு
இதுவரை ஆதரவு கிடைக்காத இந்த மாநிலங்களில் இந்த கோயில் திறப்பு விழாவை வைத்தாவது காலூன்றி
விட வேண்டும் என்று கனவின் வெளிப்பாடுதான் இது.
முதிர்ச்சி பெற்ற
மக்கள் வாழ்கிற இந்த இரு மாநிலங்களிலும் மக்கள் நேர்வழியில் தொட எல்லாம் வல்ல அல்லாஹ்
தவ்பீக் செய்ய வேண்டும்.
திறப்பு விழாவின் பெயரை சொல்லிக் கொண்டு நாட்டின் எந்த பகுதியிலும் எந்த வன்முறையும்
ஏற்பட்டு விடாமல் அல்லாஹ் பாதுகாக்கட்டும்.
தீயவர்கள் திருந்த அல்லாஹ் விரைவில் வழிகாட்டடும்.
ஆமீன்.
Alhamdhulillah
ReplyDeleteமாஷா அல்லாஹ் காலத்திற்கு தகுந்த கட்டுரை......
ReplyDelete