வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 17, 2025

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களின் கண்டிப்பும் கருணையும்.

 டெல்லியில் 2012 ம் ஆண்டு நிர்பயா என்ற மாணவி 4 மனித மிருங்கங்களால் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்ட  போது இந்தியா முழுக்க ஒலித்த குரல். இத்தகைய குற்றாங்களுக்கு இஸ்லாமிய நாடுகளின் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

உலகில் எந்த மூலையிலும் கொடூரமான குற்றங்கள் நடை பெறுகிற போது மக்கள் இதே போல “இத்தகைய குற்றாங்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் இருப்பது போல தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்” என்று  சொல்வது வழமையான ஒரு செய்தியாகும்

கொலை கொள்ளை திருட்டு போன்ற கடுமையான குற்றங்களுக்கு இஸ்லாம் கடுமையான தண்டனைகளை கூறுகிறது.

وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنفَ بِالْأَنفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ ۚ فَمَن تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَّهُ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ (45

 இத்தகைய தண்டனைகள் புதுமையானது அல்ல என்றும் முந்தைய வேதங்களில் சொல்லப்பட்டவை தான் என்றும் குர் ஆன் கூறுகிறது. وَكَتَبْنَا عَلَيْهِمْ

அதாவது கடுமையான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் மனித மரபு என்ற கருத்து அதில் இருக்கிறது.

இத்தகைய தண்டனைகளை இஸ்லாம் நடைமூறை படுத்தியும் காட்டியது.

உரைனா நிகழ்வு

 قَدِمَ أُنَاسٌ مِن عُكْلٍ أوْ عُرَيْنَةَ، فَاجْتَوَوْا المَدِينَةَ فأمَرَهُمُ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، بلِقَاحٍ، وأَنْ يَشْرَبُوا مِن أبْوَالِهَا وأَلْبَانِهَا فَانْطَلَقُوا، فَلَمَّا صَحُّوا، قَتَلُوا رَاعِيَ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، واسْتَاقُوا النَّعَمَ، فَجَاءَ الخَبَرُ في أوَّلِ النَّهَارِ، فَبَعَثَ في آثَارِهِمْ، فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بهِمْ، فأمَرَ فَقَطَعَ أيْدِيَهُمْ وأَرْجُلَهُمْ، وسُمِرَتْ أعْيُنُهُمْ، وأُلْقُوا في الحَرَّةِ، يَسْتَسْقُونَ فلا يُسْقَوْنَ. قالَ أبو قِلَابَةَ: فَهَؤُلَاءِ سَرَقُوا وقَتَلُوا، وكَفَرُوا بَعْدَ إيمَانِهِمْ، وحَارَبُوا اللَّهَ ورَسولَهُ.


الراويأنس بن مالك | المحدثالبخاري 

முஸ்லிம்களின் மந்தையை பாதுகாத்த்துக் கொண்டிருந்த காவலாளியை உரைனா குடும்பத்தை சார்ந்தவர்கள் கொடூரமாக கொலை செய்திருந்தனர். அவரது நாக்கையும் கண்களையும் முற்களால் சேதப்படுத்தியிருந்தனர்.  அதற்கு நிகராக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப் பட்டது.

இன்னொரு குற்றமும் அதற்கான தண்டனையும் –

தலையை நசுக்கி கொலை

وَعَنْ أَنْسٍ بنِ مَالِكٍ - رضي الله عنه -: "أَنَّ جاريةً وُجِدَ رَأسُهَا قَدْ رُضَّ بَيْنَ حَجَرَيْنِ فَسَأَلُوهَا: مَنْ صَنَعَ بِكِ هذَا؟ فُلانٌ فلانٌ؟ حَتى ذَكَرُوا يَهُوديّاً فَأَوْمَأَتْ بَرأسِهَا، فَأُخِذَ الْيَهُودِيُّ فَأَقَرَّ، فَأَمَرَ رَسُولُ الله - صلى الله عليه وسلم - أَنْ يُرَضَّ رَأسُهُ بَيْنَ حَجَريْنِ" مُتّفَقٌ عَلَيْهِ.

இதே போன்ற நடை முறை இஸ்லாமின் வரலாறு தோறும் தொடர்ந்தது.

2009 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு வழக்கு ஈரானில் பிரபலமாக இருந்தது.

ஈரான் நாட்டின் தஹ்ரான் நகரில் வாழ்கிற ஆமீனா பஹ்ராமி என்ற பெண் மீது மஜீத் மவாஹிதி என்ற ஆண் ஆசிட் 2004 ம் ஆண்டு வீசி தாக்கினான். இதில் அந்த பெண் படு காயமடைந்தார். 17 அறுவை சிகிட்சை செய்யப் பட்டு அவர் காப்பாற்றப்பட்டார் எனினும் அவரது இரு கண்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி அவர் பார்வையை இழந்தார். இந்த வழக்கு இரானின் ஷரீ நீதிமன்றத்தில் நடைபெற்றது

அப்போது ஆமினா குற்றவாளிக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது சர்வதேச ஊடகங்களை அதிர வைத்தது. ஆமினா கூறினார். எனது கண் பறிபோனது போல அவரது கண் பறிக்கப் பட வேண்டும். அவருடைய கண்களிலும்  20 சொட்டு ஆசிட் ஊற்றப்பட வேண்டும் என்றார். She requested that twenty drops of acid be dropped in his eyes

தெஹ்ரானின் அரசு வக்கீல் அதை ஆதரித்து வாதாடினார். இது போன்ற தண்டனை வழங்கப்பட்டால் தான் இது போன்ற குற்றங்கள் சமூகத்தில் பெருகாமல் தடுக்க முடியும் என்று அவர் வாதாடினார்.

நீதிமன்றம் அவருக்கு சார்பாகவே தீர்ப்பளித்தது.

இஸ்லாம் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்று சொன்னது கடுமையான குற்றங்களுக்கே ஆகும்.

வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு கொலை நடை பெற்றிருந்தால் அதற்குரிய தண்டனை மரண தண்டனை ஆகும். இதற்கும் சில நிபந்தனைகள் உண்டு. திட்டமிடுதல்,கொலை ஆயுதம், அதற்கான காரணம் (மோட்டிவ்) இவை கருத்தில் கொள்ளப் பட்டு கொலை நிரூபிக்கப் படுமானால் அதற்கான தண்டனை மரண தண்டனையே!

·         القتل العمد:

يُعاقب عليه بالقصاص إذا توفرت شروط القصد والآلة وعلاقة السببية. 

 ஒருவர் மற்றவரை அடித்தார் . கொலை செய்ய நினைக்க வில்லை. ஆனால் கொலை நிக்ழந்து விட்ட்து என்றால் அது வேணுமென்றே செய்த்தை போன்றதாகும்.

அதே போல மற்றொரு விதம், தவறுதலாக ஒருவர் கொல்லப் பட்டிருந்தால் அதற்கான  தண்டனை ஈட்டுத்தொகை வழங்குவதாகும்.

·         القتل شبه العمد والخطأ:

يُعاقب عليهما بالدية والكفارة    

இதே போல விபச்சார குற்றத்திற்கான தண்டனை 100 கசையடி அல்லது  மரண தண்டனை ஆகும். இந்த தண்டனைக்கு நான்கு பேர் நேரில் அந்த குற்றம் நிகழ்வதை பார்த்திருக்க வேண்டும்.

திருடினால் கை வெட்டப்படும் என்ற தண்டனை கூட பாதுகாப்பாக வைக்கப் பட்டிருக்கிற மதிப்பு மிக்க பொருளை திருடினால் மட்டுமே ஆகும்.

இந்த நிபந்தனைகளுக்கு உட்படாத  குற்றங்கள் மன்னிக்கப்படும் என்று அர்த்தமல்ல; இந்த அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படாது அதற்குரிய அளவில் நீதிபதி தண்டனைகளை வழங்குவார்.

இஸ்லாமிய தண்டனைகளில் பாரபட்சம் இல்லை.

இந்த நவீன காலத்தில் கூட ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் செய்கிற குற்றத்திற்கு தண்டனைகளில் பாரபட்சம் காட்டப்படுவதுண்டு.

இங்கிலாந்தின் அரச குடும்பத்தினர் செய்யும் குற்றங்களுக்கு சட்ட ரீதியாகவே தண்டனைகள் குறைவாகும்.

ஆனால் ஆனால் 1400 வருடங்களுக்கு முந்தைய இஸ்லாமிய சட்டத்தில் எந்த இடத்தில் யாருக்கும் பாகுபாடு காட்டப்படாது.

    وَعَنْ عَبْدِ الرَّحْمن بْنِ البَيْلمَانيِّ - رضي الله عنه - أَنَّ النّبيِّ - صلى الله عليه وسلم - قَتَلَ مُسْلماً بمُعَاهِدٍ وَقَالَ: "أَنَا أَوْلى مَنْ وَفَى بِذِمّتِهِ"

மற்றொரு புகழ் பெற்ற ஹதீஸ்

 

- أنَّ قُرَيْشًا أهَمَّهُمْ شَأْنُ المَرْأَةِ المَخْزُومِيَّةِ الَّتي سَرَقَتْ، فَقالوا: ومَن يُكَلِّمُ فِيهَا رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ؟ فَقالوا: ومَن يَجْتَرِئُ عليه إلَّا أُسَامَةُ بنُ زَيْدٍ، حِبُّ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَكَلَّمَهُ أُسَامَةُ، فَقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أتَشْفَعُ في حَدٍّ مِن حُدُودِ اللَّهِ، ثُمَّ قَامَ فَاخْتَطَبَ، ثُمَّ قالَ: إنَّما أهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ، أنَّهُمْ كَانُوا إذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وإذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أقَامُوا عليه الحَدَّ، وايْمُ اللَّهِ لو أنَّ فَاطِمَةَ بنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا.

الراويعائشة أم المؤمنين | المحدثالبخاري

 தண்டனைகளின் கடுமைக்கு காரணம்.

1

உயிர்களையும் சொத்துக்களையும் மக்களின் மரியாதையையும் பாதுகாத்தல்.

·         حماية النفس والعرض والمال:

الشريعة الإسلامية تهدف إلى حماية الضروريات الخمس: الدين، والنفس، والعقل، والنسل، والمال.

தற்காலத்தில் மிக சகஜமாக கொலைகள் நடைபெறுவதை பார்க்கிறோம் . பத்ரிகையை திறந்தால் ஒரு பக்கத்து பக்கம் ஒரு கொலைச் செய்தி இருக்கிறது.

மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே சில நேரங்களில் படுகொலைகளை செய்து விடுகிறார்கள்.

இத்தகையோருக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட்டால் தான் குற்றங்களை குறைக்க முடியும். சமூகத்தை பாதுகாக்க முடியும்.

இப்போதும் அரபு நாடுகளில் தனியாக செல்கிற பெண்களிடம் யாரும் அவ்வளவு எளிதில் சீண்டி விட நினைக்க மாட்டார்கள். காரணம் சட்டம் அவ்வளவு கடுமையாக இருக்கிறது.

சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில் உரிய அனுமதி இன்றி தங்குபவர்களுக்கு சாமாணயத்தில் இடம் கொடுக்க மாட்டார்கள். காரணம் சட்டம் அவ்வளவு கடுமையாக இருக்கிறது.

2

குற்றவாளிகளை சீர்திருத்துதல்

·         إصلاح الجاني:

بعض العقوبات، مثل التعزير، تهدف إلى إصلاح الجاني وتهذيبه.

கடுமையான தண்டனை வழங்க்கப்படும் போது தான் குற்றவாளிகள் திருந்துவார்கள்.

உலகம் முழுவதிலும் காசுக்காக குற்றங்களை செய்கிற கூலிப் படையினர் இருக்கின்றனர்.

ரஷ்யாவை சார்ந்த வாக்னர் என்ற கூலிப்படை மிக பிரபலமானது. அவர்கள் நாடுகளை கடந்தும் கூலிக்காக குற்றங்களை செய்வதில் பிரபலமானவர்கள்

நம்முடைய நாட்டிலும் கூலிக்காக குற்றங்கள் செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் பண்ட் என்ற பிரிவினர் இதற்காக பெயர் பெற்றவரக்ள். வட நாட்டிலும் இத்தகைய பல குடும்பங்கள் இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலும் பல குழுக்கள் இப்படி கூலிக்கு குற்றம் செய்ப்வர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் குற்றவாளிகள் எளிதில் தப்பித்துக் கொள்ள வழி இருக்கிறது என்பதாகும்.

கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் மட்டுமே குற்றவாளிகளை திருத்த முடியும்.

3

கடும் தண்டனைகளுக்கான 3 காரணம் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும் என்பதாகும்.

·         إرضاء المجني عليه ورفع الضرر عنه:

تطبيق القصاص أو الدية أو التعويض يهدف إلى إرضاء المجني عليه أو ورثته ورفع الضرر الواقع عليه. 

 

ஒரு குற்றம் நடை பெறுகிற போது அதில் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

குற்றங்களால் பாதிக்கப்பட்டு அநாதைகள் ஆவோர் உண்டு. விதவைகள் ஆவோர் உண்டு. ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவோ உண்டு.ஊனமுறுவோர் உண்டு. நிம்மதி இழப்போர் பலர் இருப்பார்கள்.

அவர்களுடைய மனதுக்கு தகுந்த ஆறுதல் தரப்பட வேண்டும். இல்லை எனில் அவர்கள் பதிலுக்கு இன்னொரு குற்றத்தில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது.

உலகில் பல இடங்களிலும் குற்றங்களுக்கு சரியான தண்டனைகள் வழங்கப்படாத காரணத்தால் தான் பதிலுக்கு பதிலாக குற்றங்கள் பெருகுகின்றன. உரிய தண்டனைகள் வழங்கப்படும் போது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் கூட மக்கள் நிம்மதி அடைவதற்கு அது வழி வகுக்கும். சமூக்த்திற்கு அது நம்பிக்கையை கொடுக்கும்.

உமர் ரலி அவர்கள் ஒரு முறை பாரசீகத்திற்கு பயணம் செய்திருந்தார்கள். அங்கு ஒருவன் அவருடைய பணப் பையை திருடிச் சென்று விட்டான். அப்போதை அரசர் நவ்ஷேர்வானிடம் முறையிட்டார்கள். அவர் சில காலம் பொறுத்திருக்குமாறு கூறினார். இரண்டு நாட்களுக்கு பிறகு மன்னர் உமர் ரலி அவர்களை தர்பாருக்கு அழைத்தார். வேலைக்காரர்கள் மூடியிட்ட இரண்டு தட்டுக்களை கொண்டு வந்தார்கள். முதல் தட்டை உமர் ரலியிடம் நீட்டினார்கள். அதை திறந்து பார்த்த போது காணாமல் போன அவருடை பணப் பை அதில் இருந்தது.  இன்னொரு தட்டை திறந்து பார்த்தால் அதில் ஒரு வெட்டப் பட்ட கை இருந்தது. உமர் ரலி நவ்ஷேர்வானை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

மன்னர் சொன்னார். எங்களது நாட்டிற்கு வந்த உன்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்தை ஏற்படுத்தியவருக்கு இங்கு என்ன தண்டனை வழங்கப்பட்ட்து என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா அதற்காக இது உங்களிடம் காட்டப்படுகிறது .

உமர் ரலி அவரகளது இதயத்தில் நீதியுணர்வு நிலைக்க இதுவும் ஒரு காரணம் என்று வரலாறு சொல்லும்.

தண்டனைகள் விவகாரத்தில் கருணை வேண்டாம்

 الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ

 

அது மட்டுமல்ல தண்டனைகள் பொது வெளியில் நிறைவேற்ற வேண்டும்.

 وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ (2)

அமெரிக்காவில் போதை பொருள் என்பது பெரும் பிரச்சனையாகும். அதை தடுப்பதற்கான வழி முறைகள் ஆலோசிக்கப் பட்ட போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில கவர்ணர் அமெரிக்க அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினார். குற்றவாளிகளுக்கு தரப்படுகிற தண்டனைய வீடியோவாட படம் பிடித்து அதை ஒளிபரப்ப வேண்டும் என்று அதில் கோரிக்கை வைத்தார்.

எனவே இது கவனத்தில் வைக்கப்பட வேண்டிய ஒரு கருத்தாகும்.

குற்றவாளிகள் விவகாரத்தில் கருணைக்கு இடமில்ல்லயா ?

 இஸ்லாமிய குற்றங்களை மூன்றூ வகையாக பிரித்திருக்கிறது.

·         الحدود: ஷரீஅத்தில் தண்டனை  குறீப்பிடப்பட்ட குற்றங்கள்

هي عقوبات محددة شرعاً لجرائم معينة، مثل:

·         الزنا: الرجم للمحصن والجلد لغير المحصن. 

·         السرقة: قطع اليد. 

·         شرب الخمر: الجلد. 

 

·         القصاص: பதிலுக்கு பதில் நிறைவேற்றப்படும் குற்றங்கள்

هو عقوبة القتل العمد، أو إتلاف عضو، ويُطبق إذا توفرت شروط محددة، ومنها:

·         القتل العمد: يُطبق القصاص بقتل القاتل إذا توفرت شروط القصد والآلة والعلاقة السببية بين الفعل والنتيجة. 

·         إتلاف عضو: يُطبق القصاص بمماثلة الضرر في العضو الآخر.

 

·         التعزير:  கண்டிப்பிற்குரிய குற்றங்கள். அவை நீதிபதியின் முடிவில் விடப்படும்.

·          

هو عقوبة غير مقدرة شرعاً، وتترك لتقدير القاضي، وتتنوع لتشمل:

 இந்த தண்டனைகளில் ஹத்து வகைகளில் கருணை காட்டப்படக் கூடாது என்பதே இந்த வசனத்தின் கருத்தாகும்.

 தனி நபர்களுக்கு எதிராக நடை பெறும் குற்றங்களில் அதாவது கிஸாஸ் வகை தண்டனைகளில்  கருணைக்கு இடமுண்டு.

 தண்டனைகளில் மூன்று வாய்ப்பு

وعن أبي شريح الخزاعي قال: سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: (من أصيب بدم أو خبل "والخبل الجراح" فهو بالخيار بين إحدى ثلاث: إما أن يقتص، أو يأخذ العقل، أو يعفو، فإن أراد الرابعة فخذوا على يديه، فإن قبل من ذلك شيئاً، ثم عدا بعد ذلك فإن له النار.

மன்னிப்புக்கும் இடமுண்டு . மன்னிப்போர் பாராட்டிற்குரியோர்

عَنْ أَنَسٍ - رضي الله عنه - أَنَّ الرُّبَيِّعَ بِنْتَ النّضر -عَمّتَهُ- كَسَرَتْ ثَنِيّةَ جَاريَةٍ فَطَلَبوا إلَيْهَا الْعَفْوَ فأَبَوْا فَعَرَضوا الأرْشَ فَأَبَوْا، فَأَتَوْا رَسُولَ الله - صلى الله عليه وسلم -، فَأَبَوْا إلا الْقِصَاصَ، فَأَمَرَ رَسُولُ الله - صلى الله عليه وسلم - بالْقِصاص، فَقَالَ أَنَسُ بْنُ النّضر: يَا رَسُولَ الله أَتُكْسَرُ ثَنِيّةُ الرُّبَيِّعِ؟ لا، والّذِي بَعَثَكَ بالحَقِّ لا تُكْسَرُ ثَنِيّتُهَا، فَقَالَ رسول الله - صلى الله عليه وسلم -: "يَا أَنَسُ كِتَابُ الله الْقِصَاصُ" فَرَضِي الْقَوْمُ فَعَفَوْا، فَقَالَ رَسُولُ الله - صلى الله عليه وسلم -: "إنَّ مِنْ عِبَادِ الله مَنْ لَوْ أَقْسَمَ عَلى الله لأَبَرَّهُ" متّفَقٌ عَلَيْهِ، واللَّفْظُ للبُخَارِيِّ.

ஈட்டுத் தொகை வழங்க பெருமானார் உதவி செய்துள்ளார்கள்

 وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ - رضي الله عنه -: "أَنَّ غُلاماً لأُنَاسٍ فُقَرَاءَ قَطَعَ أُذُنَ غُلامٍ لأُنَاسٍ أَغْنِيَاءَ فَأَتَوْا النبيَّ - صلى الله عليه وسلم - فَلَمْ يَجْعَلْ لَهُمْ شَيْئاً" رَوَاهُ أَحْمَدُ 

قال البيهقي: إن كان المراد بالغلام فيه المملوك، فإجماع أهل العلم أن جناية العبد في رقبته فهو يدل والله أعلم أن جنايته كانت خطأ، وأن النبي - صلى الله عليه وسلم - إنما لم يجعل عليه شيئاً لأنه التزم أرش جنايته، فأعطاه من عنده متبرعاً بذلك،

இது குற்றவாளிகள் என்றாலும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வழி இருந்தால் அதை வழங்கலாம் அவர்கள் திருந்தி வாழ ஒரு வழி கிடைக்கலாம்.

 பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கவும் செய்யப்பட்ட ஏற்பாடாகும்.

 இவ்வாறு மன்னிக்கும் போது அல்லது காசு பெற்றுக் கொண்டு தண்டனையை குறைக்கிற போது குற்றம் சாதாரணமாகி விடாதா என்ற ஒரு கேள்வி எதார்த்தமானது.

ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது பதிலுக்கு பதில் தண்டனை பாதிக்கப் பட்ட குடும்பத்தினர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். அவர்கள் மன்னிக்க மறுத்துவிட்டால் தண்டனை நிச்சயமே

இந்த ஒரு அம்சம் குற்ற வாளியை வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் போராட வைத்து விடும்.

இது தண்டனையின் வீரியத்தை குறைக்காது.

மாறாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் குடும்பத்திற்கு ஒரு அதிகாரத்தை தரும். அது ஒரு தண்டனையின் மற்ற நோக்கங்களை நிறைவேற்ற உதவும்.

பல கடும் குற்றங்களில் இத்தகைய நடை முறை நல்ல விளைவுகளை தந்திருக்கிறது.

ராஜீவ் காந்தி படு கொலை செய்யப் பட்ட வழக்கில் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்த நளினி என்ற பெண் விவகாரத்தில் திருமதி சோனியா காந்தி அவரை தாங்கள் மன்னித்து விட்டதாக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்படுவது தண்டனைகளின் சரியான நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு வாய்ப்பாக அமையும்.

முகலாய மன்னர் ஜஹாங்கீரின் மனைவி நூர் ஜஹான் வேட்டைக்கு போன இடத்தில் அவர் வீசிய ஒரு அம்பு ஒரு வேட்டைக்காரனை கொன்று விட்டது. மரண தண்டனைக்கு தயாராகுமாறு மன்னர் மனைவியிடம் கூறிவிட்டார்.

அதன் பிறகு நூர் ஜஹானின் உறவினர்கள். குற்றம் தவறுதலாக நடந்து விட்டது என்பதை எடுத்துக் கூறினர். அந்த குடும்பத்தினருக்கும் ராணி நூர்ஜஹானின் அருமை தெரிந்த்திருந்தது. பாதிப்புக்குள்ளான குடும்பத்திற்கு தகுந்த நிதி கொடுக்க ஒப்பந்தம் ஏற்பட்டது. வேட்டைக்காரரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கிய காரணத்தால் நூர்ஜஹான் தப்பித்தார்.       

இஸ்லாம் வழங்கிய இத்தகைய ஒரு சிறப்பான வாய்ப்பை பயன்படுத்தி தற்போது உலகில் ஒரு வழக்கு விவகாரம் பிரபலமடைந்திருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் நிமிசா பிரியா (வயது 36) எமன் நாட்டில் ஒரு நர்ஸாக பணியாற்றச் சென்றிருக்கிறார்.

 அவர் விரைவிலேயே அங்கே ஒரு மருத்துவ மனையை தொடங்கியிருக்கிறார். அதற்கு தொழில் பார்ட்னராக அந்நாட்டைச் சேர்ந்த  தலால் அப்தோ மஹ்தி என்பவரை சேர்த்துக் கொண்டிருக்கிறார், அவர் நிமிஷாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார். அவரது பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்தோடு வீட்டுக்காரர்களுடன் அவர் உரையாடவும் தடை விதித்திருக்கிறார் என்றும் சொல்ல்ப்படுகிறது..

 இந்நிலையில் அவரிடமிருந்த பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கவர்வதற்காக நிமிஷா, தலால் மஹ்திக்கு 2017 ஜூலையில் கோட்டமைன் என்ற போதை பொருளை கொடுத்திருக்கிறார். அது ஓவர் டோஸ் ஆனதில் மஹ்தி மரணமடைந்தார். அவருடை உடலை வெட்டி தண்ணீர் தொட்டியில் மறைத்திருக்கிறார் நிமிஷா.

 இந்த குற்றத்தின் போரில் 2018 ஆகஸ்டில் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. பலத்த சட்ட போராட்டங்கள் நடை பெற்றன. நிமிசாவின் வழக்கு செலவுகளுக்காகவும் ஈட்டுத்தொகை தருவதற்காகவும் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் திரட்டப் பட்டது. எதுவும் பயனளிக்க வில்லை.

 2024 டிஸம்பரில் எமன் அதிபர் ரஷாத் அல் ஆலிமி நிமிஷாவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தார். தற்போது இந்தியாவிற்கும் எமன் நாட்டிற்கும் தூதரக உறவு சரியாக இல்லாததால் இந்திய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்றிஞர் (Attorney-General for India)ஆர் வெங்கட்ரமணி இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று கூறியிருந்தார்.

 2025 ஜூலை 16 ம் தேதி அவரது தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

 இந்த நிலையில் கேரளாவின் மிக பிரபலமான மார்க்க அறிஞர் ஏ பி அபூபக்கர் முஸ்லியார் யமனிலுள்ள மார்க்க அறிஞர்கள் மூலமாக மேற் கொண்ட முயற்சியால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் நிமிஷா வுக்கான தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக  ஏ பி உஸ்தாத் அறிவித்தார்.

 அது பற்றிய உத்தரவின் நகலையும் அவர் பதிரிகையாளர்களிடம் வழங்கியிருக்கிறார்.

 எமன் நாட்டின் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் ஹபீப் உமர் பின் ஹபீஸ் அவர்களோடு ஏபி உஸ்தாத் அவர்களுக்கு உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி இது நடந்திருப்பதாக தெரிகிறது.

 இதன் இறுதி என்னவாகப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை எனினும்,

 இஸ்லாமிய சட்ட அமைப்பில் உள்ள நெகிழ்வுத் தன்மையை இது உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.

 கடுமையான குற்றங்களுக்கு கடும் தண்டனகள் வழங்கப்பட வேண்டும். அதில் இரக்கத்திற்கு இடமில்லை.

 ஆனால் பாதிக்கப் பட்டவருக்கு அல்லது அவரது குடும்பத்தை சாந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில் இதில் கருணை காட்டப்படும் எனில் அதுவும் இஸ்லாம் வழங்கிய ஒரு நீதியே ஆகும்.

 இது இஸ்லாமிய சட்ட அமைப்பை கடுமையானதாக காட்டுகிற அதே நேரத்தில் அதிலிருக்கிற கருனையையும் காட்டுகிறது.

எந்த சட்ட அமைப்பும் இப்படி இருப்பதே சரியானதும் நிலைத்ததும் ஆகும் என்பதை சட்ட அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

எனவே ஏ பி அபூபக்கர் முஸ்லியார் செய்தது இஸ்லாமிய சட்ட அமைப்பின் படி ஆன ஒரு நல்ல காரியம் ஆகும்.

எல்லாம் வல்ல இறைவன் ஆலிம்கள் மூலமாக இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் அழகையும் தொடர்ந்து நிலை நாட்டிக் கொண்டே இருக்கிறான்.

கியாமத் நாள் வரை அது தொடரட்டும்.

நாம் தகுதி வாய்ந்த ஆலிம்களின் மீது நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் அவர்களின் வழி நின்று இஸ்லாமை கடைபிடிப்பவர்களாகவும் ஆவோம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

1 comment:

  1. Anonymous10:13 PM

    இஸ்லாமிய சட்டங்களை அரைகுறையாக தெரிந்து பொதுவெளியில் தவறான தகவல்களை பதிய வைப்பவர்களுக்கு சரியான இன்றைய ஜுமுஆ உரையாக இது அமைந்திருக்கிறது

    ReplyDelete