وَالصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ الْأَنفُسُ الشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا (128)
இன்று பாகிஸ்தானின் தலை நகர் இஸ்லாமாபாத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற இருக்கிறது. அமெரிக்காவின் சார்பில் துணை அதிபரும் ஈரான் சார்பில் நாடாளுமன்ற சபாநாயகரும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
உலகமே இந்த பேச்சு வார்த்தையின் முடிவை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன் போர் நிறுத்தம் பற்றி ஒரு அறிவிப்பு
வெளிவந்து மக்களுக்கு நிம்மதி அளித்த்து என்ற போதும் கடந்த ஒரு நூற்றாண்டாக உலக அமைதிக்கு
பெரும் அச்சுறுத்தலாக இருக்கிற இஸ்ரேல் அதன்பின்னரும் லெபனானை கடுமையாக தாக்கி அப்பாவி
பொதுமக்கள் 200 பேரை கொன்றிருக்கிறது. இதன் பிறகு ஹுர்முஸ் நீரிணையில் ஒரு கப்பலை இரான்
தாக்கி அழித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் உலகில் அமைதி தொடரப் போகிறதா அல்லது யுத்தம்
தொடரப் போகிறதா என்பதை இந்த பேச்சு வார்த்தை தீர்மாணிக்கும் என்பதால் உலகம் முழுவதும்
இந்த பேச்சு வார்த்தையின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அல்லாஹ் நல்ல முடிவை தரட்டும்.
ஈரான் தன்னுடைய பேச்சுக்களிலும் நடவடிக்கைகளிலும் போர்
சூழலிம் கூட நேர்மையை கடைபிடித்து வருகிறது.
ஆனால் அமெரிக்காவோ பல நாடுகளுடையவும் பல கோடி மக்களுடைய வாழ்வாதார பிரச்சனையில் தொடர்ந்து
மிக அபாயகரமாக அரசியல் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.. ஈரானுடைய பாலங்களை தகர்ப்பதை
பிரிட்ஜ் டே என்றும் அதனுடைய மின் உற்பத்தி நிலையங்களை தகர்ப்பதை எலக்ட்ரிசிட்டி டே
என்று கொண்டாடுகிற அளவில் அமெரிக்கவின் மனோ நிலை கொடூரமாகி இருக்கிறது.
ஆனால் ஹுர்முஸ் நீரிணையை தடுப்பது என்ற ஈரானுடைய நிலைப்பாடு உலகிற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தி
இருப்பதாலும் இஸ்ரேலை ஈரான் முடிந்த வரை துவம்சம் செய்து வருவதாலும் அரபு நாடுகளின்
வாழ்க்கை முடங்கிக் கிடப்பதாலும் சிக்கலை மேலும்
அதிகப்படுத்துவது அமெரிக்காவின் மரியாதைக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்
என்பதால் அமெரிக்காவே ஈரானை நோக்கி இறங்கி வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட இருக்கிறது.
அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தையை நாங்கள் ஒரு போதும்
நம்ப மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்த ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்க
துணை அதிபர் இஸ்லாமாபாத்திற்கு வருவது அந்த நாடு எத்தகைய அரசியல் வீழ்ச்சியை கண்டிருக்கிறது
என்பதற்கான ஒரு அடையாளமே ஆகும்.
இஸ்லாமாபாத் எந்த அளவு பலவீனமானது என்றால் மக்கள் போராட்டங்கள்
எதையும் நட்த்தி விடக் கூடாது என்பதற்காக இந்த பேச்சு வார்த்தையை நட்த்துவதற்காக அது
தன்னுடைய நாட்டிற்கே சில நாட்கள் விடுமுறை அளித்து விட்டது.
ஏற்கெனவே இதுவிவகாரத்தில் ஓமன் வழியாக பேச்சு வார்த்தை
நட்த்திக் கொண்டுதான் இருந்தது. அந்த பேச்சு
வார்த்தைக்கு இடையில் தான் அமெரிக்கா ஈரானை தாக்கியது. இப்போது அதுவே பேச்சு வார்த்தைக்கு
இறங்கி வர வேண்டிய சூழலை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்.
உலகிற்கு ஏற்பட்டுள்ள பெரிய துரதிஷ்டம், எந்த அவமானத்தையும்
துடைத்து கொண்டு மீண்டும் மீண்டும் கோட்சூட்
போட்டுக் கொண்டு பேச வருகிற ஒரு நாட்டின் தலைமையை நம்பி அது இருக்க வேண்டியுள்ளது. சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை
செயத அவமானகரமான செயலை கூட அப்படி துடைத்தெறிந்து விட்டவரகளுக்கு இதுவெல்லாம் மிக சகஜம்
என்றே சொல்ல வேண்டும். ஆனால் உலகிறகு இத்தகையோரால் ஏற்படுகிற துயரம் தான் மிக வருத்த்த்திற்குரியது.
உலக அரசியல் அரசியல் மஃபியாக்களால் நிறைந்து விட்ட்து
என்பது தான் இப்போதைய உலகின் பெருந்துயரம் ஆகும்.
எது எப்படி இருப்பினும் பேச்சு வார்த்தையின்
முடிவு நல்லதாக மனித ராஜதந்திரத்தின் வெற்றியாக அமைய வேண்டும்.
இத்தகைய பேச்சு வார்த்தை டிப்ளமஸி ராஜதந்திர முயற்சி என்று
அழைக்கப்படுகிறது.
டிப்ளமஸி என்ற வார்த்தை உலக அரசியலில்
ஒரு மதிப்பு மிக்க சொல்லாகும்.
நாடுகளுக்கு இடையே உள்ள விவகாரங்களைப் பகைமை இன்றிக் கையாளும் உத்தியே டிப்ளமஸீ ஆகும்.
இரண்டு
சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அவர்களுடைக்கிடையே சமாதானப்படுத்துகிற வார்த்தைகளை பேசி
– இரு தரப்புக்கும் சரி தவறு என்பதை பற்றி அதிகம் ஆராயாமல் பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல்
அல்லது மதித்தலின் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பது ராஜ தந்திர நடவடிக்கை ஆகும்.
பிரிட்டனுக்கும்
அயர்லாந்திற்கும் இடையே பல தலைமுறைகளாக சண்டை நடந்து கொண்டிருந்தது.
அயர்லாந்து
சுயாட்சிக்காக போராடிக் கொண்டிருந்த்து. 1998 ல் நடை பெற்ற ஒரு ஒப்பந்தம் அயர்லாந்திற்கு
சுய அதிகாரம் பெற்ற ஒரு நாடாளுமன்றத்தை கொடுத்த்து அதே நேரத்தில் பிரிட்டனின் ஆதரவோடு
அது செயல்படும் என்பதும் ஏற்கப்பட்டது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வந்த சண்டை முடிவுக்கு
வந்தது. இதை சமீப காலத்தில் நடந்த சிறந்த ராஜதந்திர நிகழ்வாக உலகம் கருதுகிறது.
பேச்சு வார்த்தை என்பது ஒரு அற்புதமான ராஜ தந்திர நடவடிக்கையாகும்.
ஆனால் அது அடிப்படையான மனித இயல்புகளை நெகிழ்ச்சிப்படுத்துகிற சில அம்சங்களை கொண்டிருக்க
வேண்டும். அகம்பாவமும் ஆக்ரமித்தல் சிந்தனையும் அதில் இருக்க கூடாது. முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் உலகிற்கு அருமையான ராஜதந்திர நடவடிக்கைளுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர்
ஆவார்கள். அதன் மூலம் பெரும் வெற்றியை கண்டவரும் ஆவார்கள்.
கஃபாவை கட்டி முடிப்பதில் ஒன்று சேர்ந்து உழைத்த மக்காவின் குறைஷிகள் ஹஜருல் அஸ்வத் கல்லை எடுத்து வைப்பதில் தகறாறு செய்து கொண்ட போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய 35 வது வயதில் அந்த பிரச்சனைக்கு மிக அற்புதமாக தீர்வு கண்டார்கள். ஹஜருல் அஸ்வதை ஒரு போர்வையில் வைத்து அந்த போர்வையை அனைத்து தரப்பினரையும் பிடித்து உயர்த்தச் சொல்லி பிறகு அந்த கல்லை தான் எடுத்து வைத்தார்கள்.
சமூகங்களுக்கிடையே
அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலை நாட்டும் நடவடிக்கைகளில் மிக தாராள மனதுடன் பெருமானார்
நடந்து கொண்டார்கள்.
மரியாதை எனும் ராஜதந்திரம்
இபோதைய
சவூதி நகரான நஜ்ரானில் ஒரு காலத்தில் கிருத்துவர்கள் வாழ்ந்தனர். ஹிஜ்ரீ 9 ம் வருடம்
அவர்களின் ஒரு குழு பெருமானார் (ஸல்) அவர்களை சந்திக்க வந்தனர். அது பெருமானாரின் செல்வாக்கு
உச்சத்தில் இருந்த நேரம். அவர்கள் வந்தது பெருமானாரின் முன்னிலையில் தாங்களே உயர்ந்தவர்கள்
என்பதை நிருபிப்பதற்காகவே கொஞ்சம் திமிருடன் தான் வந்தாரகள். சுமார் 60 நபர்களை கொண்ட
அந்த குழுவை மஸ்ஜிதுன்னபவியிலேயே பெருமானார் (ஸல்) தங்க அனுமதித்தார்கள். அவர்கள் ஒரு
சீராக பட்டாடைகளையும் தங்க ஆபரணங்களையும் அணிந்து அவர்கள் வந்தார்கள். இது பெருமானாருக்கு
பிடிக்காது என்று அவர்களுக்கு தெரியும். வேண்டுமென்றே அவர்கள் அப்படி நடந்த கொண்ட போது
முதல் நாளில் பெருமானார் (ஸ்ல) அவர்கள் அவர்களோடு பேச்சு வார்த்தையில் இறங்கவில்லை.
இரண்டாம் நாளில் அவர்கள் சாதாரண பாதிரிகளின் ஆடையோடு வந்த போது பெருமானார் (ஸ்ல) அவர்கள்
அவர்களோடு பேசினார்கள்.
وصل هذا الوفد بهيئة منظمة جداً، وفي صورة منمقة وصلت حد
المبالغة، فقد لبسوا الثياب الحريرية وتحلوا بالذهب، والرسول عليه الصلاة والسلام
يحرم هذه الأمور على الرجال، فكره صلى الله عليه وسلم أن يتكلم معهم وهم بهذه
الصورة، وأجلهم يوماً، فجاءوا في اليوم الثاني وهم يلبسون لبس الرهبان، فبدأ
الرسول عليه الصلاة والسلام في الحوار معهم، وهذا الوفد لم يكن من نيته ولا من همه
أن يسلم أو يفكر في الإسلام، وإنما أتى ليناظر الرسول عليه الصلاة والسلام ويجادله
من ناحية، وأتى ليبهره ويبهر المسلمين من ناحية أخرى
அவர்களுடைய
பேச்சுவார்த்தையில் மரியாதை இருக்கவில்லை . அகம்பாவத்தோடு தான் பேசினார்கள்.
இடையில்
அவர்களுடைய பிரார்த்தனைகளுக்கான நேரம் வந்த போது பெருமானாரிடம் அனுமதி கேட்காமலே கிப்லாவிற்கு
எதிர் திசையில் ஒன்று சேர்ந்து அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். சஹாபாக்க்ள்
அதை தடுக்க முயன்ற போது அவர்களை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.
அந்த
கிருத்துவர்கள் அப்போது இஸ்லாமை ஒப்புக் கொள்ள வில்லை எனினும் பெருமானாரிடன் உடன்படிக்கை
செய்து கொண்டு வெளியேறினார்கள்.
பெருமானார்
வெளிப்படுத்திய மரியாதை استقباله للوفود
. وكان النبي
صلّى الله عليه وسلم يكرم الوفود ويبسط رداءه لبعضهم، ويشركهم في الجلوس إمعانا في
إزالة الدهشة، وإدخال المسرة،=
ذكر ابن ماجه
சிறப்பான ஆடை அணிவார்கள்
فيذكر البخاري أن رجلا أهدى
للنبي حلة، فقال
له: «لتتجمل بها يا رسول الله
للوفو
மன்னிப்பு எனும் ராஜதந்திரம்.
திஃசூர் என்பவர் பெருமானாரை கொல்லை மறைந்திருந்து திட்டம் தீட்டி
பெருமானார் தூங்கும் போது பெருமானுருடைய வாளையே உருவி அவரை மிரட்டினார்.
அவரை மன்னித்த பெருமானார் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத போதும்
இனி இஸ்லாமிற்கு எதிராக செயல்படுவதில்லை என்ற உறுதி மொழியை அவரிடம் பெற்றுக் கொண்டு
அவரை மன்னித்தார்கள்.
அவர் பிற்காலத்தில் அவருடைய மொத்த குடுப்த்தினருடனும் வந்து
இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்;
وفي رواية الإمام أحمد أن الرجل
( قام على رأس رسول الله ـ صلى الله عليه وسلم ـ بالسيف فقال: من يمنعك
مني؟ فقال ـ صلى الله عليه وسلم ـ: اللهُ عز وجل .. فسقط السيف من يده فأخذه رسول
الله ـ صلى الله عليه وسلم ـ فقال: من يمنعك مني؟، فقال الأعرابي: كن كخير آخذ،
فقال ـ صلى الله عليه وسلم ـ: أتشهد أن لا إله إلا الله؟، قال: لا، ولكني أعاهدُك
أن لا أقاتِلَكَ، ولا أكونَ مع قوم يقاتلونك، فخلى سبيله، فذهب إلى أصحابه، فقال:
قد جئتُكم من عندِ خير الناس )
. وذكر الواقدي أنه أسلم ورجع إلى قومه فاهتدى به خلق كثير
அன்பளிப்பு எனும் ராஜதந்திரம்.
பொதுவாக மனிதர்களிடம் இருக்கிற தேவையற்ற கோபமும் குரோதமும் தான்
பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். அன்பளிப்புகள் அதை குறைத்து நிதானமாக யோசிக்க வைக்கும்.
அதனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூதுக்குழுவினருக்கு அன்பளிப்புக்களை
வழங்குவார்கள்.
இப்னு கல்தூன் கூறுகிறார்.
ابن خالدون
: ان
النبي صلّى الله عليه وسلم يحسن وفادة الوفود ويحسن جوائزهم، وهذا كان شأنه مع
الوفود ينزلهم إذا قدموا ويجهزهم إذا رحلوا
فيذكر البيهقي قول النعمان
بن المقرن، قدمنا على رسول الله صلّى الله عليه وسلم أربعمائة رجل، فلما
أردنا أن ننصرف قال: «يا عمر زود القوم
உணவளித்தல் எனும் ராஜதந்திரம்
ஹிஜ்ரீ 9 ல் தாயிப் நகர் வாசிகள் பெருமானாரிடம் வந்த போது அவர்களுக்கு
பெருமானார் உணவளித்தார்கள். ஆனால் அவர்களோ இடை தரகரகாயிருந்தவர் சாப்பிட்ட பிறகே அதை
சாப்பிட்டார்கள்.
وعند ما جاء وفد ثقيف إلى رسول الله صلّى الله عليه وسلم كان
خالد بن سعيد (ت ١٤ هـ) يمشي بينهم وبين رسول الله صلّى الله
عليه وسلم وكانوا لا يأكلون طعاما يأتيهم حتى يأكل منه خالد
தூதர்களுக்கான் பாதுகாப்பு
பெருமானாரிடமே அகந்தை பேசிய தூதர்களுக்கும் பெருமானார் பாதுகாப்பளித்தார்கள்.
தூதர்கள் திரும்பச் செல்லும் உரிமை
أن قريشا بعثت أبا رافع رسولا إلى رسول الله صلّى الله عليه
وسلم فوقع في نفسه الإسلام فأراد أن يبقى في المدينة ولا يعود إلى مكة، فقال
له النبي صلّى الله عليه وسلم: «إني لا أخيس بالعهد، ولا
أحبس البرد، ارجع إليهم، فإن كان الذي في قلبك الذي فيه الان فارجع»
பணிவின் அத்தனை அம்சங்களையும் வெளிப்படுத்துகிற போதும் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது கம்பீரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
.. إني أحمد الله إليك أو « ... إني
أدعوك بدعاية الإسلام ... » «
பெருமானார் (ஸல்) அவர்கள் 70 காரிகளை ஒரு குழுவிடம் பெருமானார்
அனுப்பி வைத்தார்கள். அவர்களை அவரக்ள் கொன்றனர்.
அவர்களிடமிருந்து தப்பிய ஒருவர் மதீனாவிற்கு வந்த போது அதே குடும்பத்தை
சார்ந்த இருவர் மதீனாவிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தார். இவர்களும் தீங்கிழைக்க
வந்திருப்பார்களோ என்று நினைத்து அவர் அவ்விருவரை கொன்றார்.
ஆனால் அவ்விருவரும் மதீனாவின் பனூ நுழைர் யூத குழ்வின் விருந்தினர்களாக
வந்திருந்தனர். தவறு நடந்து விட்ட்து என்பதை அறிந்த பெருமானார் (ஸல்) அவர்கள் இது விசயமாக
பனுன் னுழைர்களிடம் பேச்சு வார்தை நட்த்த தன்னுடைய ஆட்களை அனுப்ப வில்லை தானே நேரில்
தனது வளர்ப்பு மகனை மட்டும் துணைக்கு அழைத்து கொண்டு சென்றார்கள்.
இதுவே பெருமானார் (ஸ்ல) அவர்கள் வெற்றி கண்ட ராஜதந்திர நடவடிக்கைகள்
ஆகும்.
மிக வஞ்சகமாக யார் நடந்து கொள்கிறாரோ அவர் சிற்ந்த ராஜதந்திரியாகி
விடுகிறார்.
திருக்குர் ஆன் அருமையாக
கூறுகிறது.
وَالصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ
الْأَنفُسُ الشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا
تَعْمَلُونَ خَبِيرًا (128)
உடன்பாடு காண்பது தான் சிறந்த்து. ஆனால் அதற்கு சுயநலம் பெரும் தடையாக இருக்கிறது. அல்லாஹ்வை அஞ்சி மக்கள் விவகாரத்தில் தலைவர்கள் நடந்து கொள்ல வேண்டும்.
அல்லாஹ் தவ்பீக் செய்யட்டும்
No comments:
Post a Comment