சூரத்து
கஹ்பு அத்தியாயம் போதிக்கிற அற்புதமான வாழ்க்கை தத்துவங்களில் ஒன்று. அதிகாரம் கிடைக்கிற
போது அதை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்பது.
துல்கர்ணைன்
மன்னர் அவரது சாம்ராஜ்யத்தின் மேற்கு எல்லையில் சுடு தண்ணீர் ஊற்று இருந்த இடத்திற்கு
சென்ற போது அங்கிருந்த மக்கள் இறை நிராகரிப்போராக இருந்தனர்.
இந்த
மக்களை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அல்லாஹ்வே அவருக்கு சொன்னான்.
ஆனால்
அவர், திருந்தாத மக்களுக்கு தான் தண்டனை, திருந்துவோருக்கு நல்ல வாய்ப்புக்கள் தரப்படும்
என்றார்.
إِنَّا مَكَّنَّا
لَهُ فِي الْأَرْضِ وَآتَيْنَاهُ مِن كُلِّ شَيْءٍ سَبَبًا (84)
فَأَتْبَعَ
سَبَبًا (85)
حَتَّىٰ إِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ
فِي عَيْنٍ حَمِئَةٍ وَوَجَدَ عِندَهَا قَوْمًا ۗ قُلْنَا يَا ذَا الْقَرْنَيْنِ
إِمَّا أَن تُعَذِّبَ وَإِمَّا أَن تَتَّخِذَ فِيهِمْ حُسْنًا (86) قَالَ
أَمَّا مَن ظَلَمَ فَسَوْفَ نُعَذِّبُهُ ثُمَّ يُرَدُّ إِلَىٰ رَبِّهِ
فَيُعَذِّبُهُ عَذَابًا نُّكْرًا (87)
وَأَمَّا
مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءً الْحُسْنَىٰ ۖ وَسَنَقُولُ لَهُ مِنْ
أَمْرِنَا يُسْرًا (88)
. إنهم كانوا كفَّارًا، فخيَّر الله تعالى ذا القرنين أن
يعذِّبهم بالقتل، أو يدعوَهم إلى الإسلام.
மிக
அழுத்தமான வாழ்வியல் பாடம் இது
ஒரு
நேரத்தில் இரண்டு விதமாகவும் நடக்க வாய்ப்பு கிடைக்கும். அப்போது அதிகாரத்தை சரியான
வகையில் பயன்படுத்த தெரிய வேண்டும்.
அத்தகயோரே
உண்மையான ஆட்சித்தலைவர்கள்.
நல்ல
ஆட்சித்தலைவர் மறைமுகமாக கூட அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்ப்டுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்.
உமர் ரலி அவர்கள் ஒரு கொழுத்த ஒட்டகத்தைப் பார்த்தார்கள். இது யாருடையது என்று கேட்டார்கள். உங்களுடைய மகன் அப்துல்லாவுக்குரியது என்று சொல்லப்பட்டது. அவரை அழைத்து இது உன்னுடைய ஒட்டகம் தானா என்று கேட்டார்கள். கேட்டுவிட்டு இது எப்படி இவ்வளவு கொழுத்ததாக மாறியது என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னார், நான் இந்த ஒட்டகத்தை வாங்கினேன். மேய்க்கிற இடத்தில் மேய்க்க விட்டேன். மக்கள் இது கலீஃபா உமருடைய மகனுடையது. அதை நன்றாக மேய்க்க விடுங்கள் என்று சொன்னார்கள். இது கலீஃபா உமருடைய மகனுடையது. இதற்கு நன்றாக தண்ணீர் கொடுங்கள் என்றார்கள். அப்படி இதற்கு நல்ல தண்ணீரும் நல்ல உணவும் கிடைத்தது. அதனால் இது கொழுத்து விட்டது என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள் அப்படியானால் இதை விற்றுவிட்டு உன்னுடைய மூலதனத்தை மட்டும் நீ எடுத்துக் கொள். மற்ற பணத்தை நீ அரசு கஜானாவில் சேர்த்து விடு என்று சொன்னார்.
مرةً رأى هذا الخليفة الراشد إبلاً سمينة ، قال
لمن هذه الإبل قالوا هي لعبد الله بن عمر ، ابنك ، قال ائتوني به ، فلما جيء بعبد
الله بن عمر ، رأى أباه غاضباً ، قال لمن هذه الإبل يا بني ، قال هي لي ،
اشتريتها بمالي ، وبعثت بها إلى المرعى لتسمن ، فماذا صنعت فقال رضي الله عنه
قولته الشهيرة ، ويقول الناس ارعوا هذه الإبل فهي لأبن أمير المؤمنين ، اسقوا هذه
الإبل فهي لأبن أمير المؤمنين وهكذا تسمن إبلك يا ابن أمير المؤمنين ، هل عرفت
لماذا هي سمينة بع هذه الإبل ، وخذ رأس مالك ، ورد الباقي لبيت مال المسلمين
இந்த அளவு எச்சரிக்கையாக இருக்க காரணம்
·
அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்கள் எப்போதும் பயத்துடனும், பாதுகாப்பற்ற
உணர்வுடனுமே வாழ வேண்டியிருக்கும். நீதியின் முன்
அவர்களால் ஒருபோதும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது.
அநீதியினாலும்
அதிகார துஷ்பிரயோகத்தினாலும் கட்டப்பட்ட எந்தவொரு கோட்டையும் நீதியின் ஒரு சிறு காற்றையும்
தாங்காது
·
அதிகார துஷ்பிரயோகம் செய்வோர்
மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள்.
அமெரிக்க
அதிபரின் அதிகாரம் எந்த அளவு உயர்ந்த்து என்பது அனைவருக்கும் தெரியும்.
அமெரிக்காவின்
அதிபர்களில் குறிப்பிட்த்தக்க ஒருவர் நிக்ஸன்.
தனது அரசியல்
எதிரிகளைக் உளவு பார்க்கவும், தேர்தல் வெற்றிக்காக அரசு உளவு அமைப்புகளையும்
அதிகாரத்தையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார். பின்னர் இந்த குற்றங்களை மறைக்க
அதிபர்
அதிகாரத்தைப்
பயன்படுத்தி அதிகாரிகளை அச்சுறுளுமன்றத்தினார்.
இதனால் அமெரிக்க மக்கள் மற்றும் நாடாத்தின் நம்பிக்கையை அவர் முற்றிலும் இழந்தார். பதவி நீக்கத் தீர்மானம் (Impeachment) கொண்டுவரப்படும் நிலை உருவானதால், அமெரிக்க வரலாற்றிலேயே தனது பதவியை ராஜினாமா செய்த ஒரே அதிபர் என்ற பெயரோடு வெளியேறினார்
·
அதிகார துஷ்பிரயோகம் செய்வோர்
வரலாற்றின் மோசமான பள்ளத்தில் வீழ்த்தப்படுவார்கள்.
பெனிட்டோ
முசோலினி (இத்தாலி - 1945 தனது சொந்த நாட்டின் நலனை விடத் தனது சுய அதிகாரப் ஆசைகளுக்காக இத்தாலியை
இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தினார்.
போரினால் ஏற்பட்ட
பேரழிவால் முசோலினி மீது மக்கள் கடும் கோபமடைந்தனர். ஒரு காலத்தில் அவருடைய
ஒவ்வொரு சொல்லுக்கும் கட்டுப்பட்ட இத்தாலிய மக்களே அவரை பிடித்துத்
தூக்கிலிட்டனர். மிக செல்வாக்குடன் திகழ்ந்த ஒரு தலைவன் மோசமான அவச் சொல்லாக
மாறிப்போனான்.
இவ்வ அனைத்தையும் சேத்து குர் ஆன் எச்சரிக்கிறது.
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ (6) إِرَمَ ذَاتِ الْعِمَادِ (7) الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ (8) وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ (9) وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ (10) الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ (11) فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ (12) فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ (13) إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ (14)
·
உமது இறைவன் ஆது கூட்டத்தினரை என்ன செய்தான் என்பதை நீர்
பார்க்கவில்லையா?
·
தூண்களையுடைய 'இரம்' நகரை சேர்ந்த (ஆது
கூட்டத்தினரை)
·
நகரங்களில் அதுபோன்று வேறு எதுவும்
படைக்கப்பட்டிருக்கவில்லை.
·
இன்னும், பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்து (வீடுகளை அமைத்து)
வாழ்ந்த ஸமூது கூட்டத்தினரையும் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
·
பெரும் படைகளை உடைய (ஆணவம் கொண்ட) ஃபிர அவ்னையும் (உமது
இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
·
இவர்கள் அனைவரும் (தங்கள்) நகரங்களில் அதிகார
துஷ்பிரயோகம் செய்தனர்.
·
மேலும், அவற்றில் குழப்பத்தையும் அநியாயத்தையும்
அதிகப்படுத்தினார்கள்.
·
அதனால் உமது இறைவன் அவர்கள் மீது தண்டனையின் சாட்டையை வீசினான்.
·
நிச்சயமாக உமது இறைவன் (அனைவரின் செயல்களையும்)
கண்காணித்துக் கொண்டே இருக்கிறான்.
ஆது கூட்டத்தினர்
மிகவும் உயரமான உடலமைப்பும், பிரம்மாண்டமான கோட்டைகளைக் கட்டும் தொழில்நுட்பமும், மிகுந்த
உடல்பலமும் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால், அவர்கள் தங்கள் பலத்தால் ஆணவம் கொண்டு, ஹூத் (அலை)
அவர்களின் போதனைகளைப் புறக்கணித்து அநியாயம் செய்தனர்.
தங்களுக்கு
வழங்கப்பட்ட அளப்பரிய பலத்தையும் செல்வத்தையும் கொண்டு வரம்பு மீறி, அதிகார துஷ்பிரயோகத்திலும்
அநியாயத்திலும் ஈடுபட்டதால் இறைவனின் கடுமையான தண்டனையால் அழிக்கப்பட்டனர்
அவர்கள் அழிக்கப்பட்ட காட்சியை திருக்குர் ஆன் காட்டுகிறது.
கேட்கிற போதே பயமாக இருக்கிறது.
وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِیْحٍ صَرْصَرٍ عَاتِیَةٍ ۟ۙ سَخَّرَهَا عَلَیْهِمْ سَبْعَ لَیَالٍ وَّثَمٰنِیَةَ اَیَّامٍ ۙ
حُسُوْمًاۙ فَتَرَی الْقَوْمَ فِیْهَا صَرْعٰی ۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ
خَاوِیَةٍ ۟ۚ
ஆது கூட்டத்தாரோ, சுழன்றடிக்கும் கடும் காற்றினால் அழிக்கப்பட்டார்கள். அதை ஏழு
இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது வீசும்படி அல்லாஹ் ஆக்கினான். (அந்நேரத்தில்) அம்மக்களை வேரோடு
சாய்ந்த பேரீச்ச மரத்தின் தண்டுகளைப் போல் வீழ்ந்து கிடப்பதை நீர்
பார்த்திருப்பீர்.
ஸமூது
கூட்டத்தினர் பாறைகளைக் குடைந்து பிரம்மாண்டமான வீடுகளையும் மாளிகைகளையும்
அமைக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர். அவர்களுக்குச் சாலிஹ் (அலை) தூதராக
அனுப்பப்பட்டார். அவர்களின் கோரிக்கையின்படி, பாறையிலிருந்து ஒரு பெண் ஒட்டகம் அற்புதமாக
வெளிப்பட்டது. ஆனால், ஆணவம் கொண்ட அந்த மக்கள் அந்த ஒட்டகத்தைக்
கொன்று, இறைக்கட்டளையை
மீறினர்.
ஒட்டகத்தைக்
கொன்ற மூன்று நாட்களுக்குப் பிறகு, அதிகாலையில் வானத்திலிருந்து கேட்ட பயங்கரமான இடி முழக்கச் சப்தமும் (ஸைஹா), பூமியதிர்ச்சியும்
அவர்களை நிலைகுலையச் செய்தது
அச்சப்தத்தின்
அதிர்வினாலும் பயத்தினாலும் அவர்களின் இதயங்கள் வெடித்து,
தங்களின் வீடுகளிலேயே
முகங்குப்புற விழுந்து பிணங்களாக மடிந்தனர்.
فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِیَةِ ۟
ஸமூது கூட்டத்தார்
(அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
எவ்வளவு பெரிய
பலமும், அறிவியல்
தொழில்நுட்பமும், செல்வமும் இருந்தாலும், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தால் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது
என்பதற்கு இவ்விரு சம்பவங்களும் பெரும் சான்றுகளாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களை
கடுமையாக எச்சரித்தார்கள். அத்தகயோருக்கு சொர்க்கம் கிடையாது என்றார்கள்.
ما مِنْ عبدٍ يسترْعيه اللهُ رعيَّةً ، يموتُ
يومَ يموتُ ، وهوَ غاشٌّ لرعِيَّتِهِ ، إلَّا حرّمَ اللهُ عليْهِ الجنَّةَ
அல்லாஹ் ஒரு அடியானை ஒரு மக்கள் கூட்டத்திற்குப் பொறுப்பாளராக ஆக்கிய பிறகு, அவன் அவர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாமல் (அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து) இறந்துவிட்டால், அல்லாஹ் அவனுக்குச் சொர்க்கத்தை ஹராமாக்கி (தடுத்து) விடுகிறான்."
—புகாரி (
அதிகாரத்தைப்
பயன்படுத்தி மக்களை அடக்குபவர்களும், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களும்
தற்காலிகமாகத் தப்பிப்பது
போல் தோன்றினாலும், அவர்கள் "வரலாற்றின் மோசமான பள்ளத்திலும் மறுமையின்
கடுமையான தண்டனையிலும்" வீழ்த்தப்படுவது உறுதி
நம்முடைய இந்திய நாட்டில் தற்போது வரலாறு காணாத ஒரு அதிகார துஷ்பிரயோகம்
வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
முழுக்க முழுக்க மத்தியில் ஆட்சி இருக்கிறது என்ற அதிகார திமிரில்
மக்கள் மீது மிக கடுமையான அடக்கு முறை சட்ட்த்தின் பெயராலாயே கட்டவிழ்த்து விடப் பட்டிருக்கிறது.
உலகமே இப்போது இந்த செய்தியில் விக்கித்துப் போய் இருக்கிறது.
இந்திய தேர்தல் கமிஷன் சமீபத்தில் நடை முறை படுத்திய SIR என்கிற
தீவிர வாக்குப் பதிவேடு திருத்தம் தேர்தல் கமிஷனின் உள்ள மூன்று உறுப்பினர்களில் இரண்டு
பேரின் ஆட்சேபனையை கவனத்தில் கொள்ளாமல் கமிஷனின் தலைவர் ஞானேஷ் குமார் என்பவரின் தனிப்பட்ட
அதிகார துஷ்பிரயோகத்தால் நடை பெற்றுள்ளது.
எஸ் ஐ ஆரா ல 13 கோடி இந்திய வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை
இழந்தனர்.
மேற்கு வங்காளத்தில் நீக்கப்பட்ட 33 இலட்சம் பேரில் 16 இலட்சம்
பே தங்களது ஆவணங்களை ஒப்படைத்த பிறகும் அதிகாரி அவற்றை தள்ளுபடி செய்து விட்டார்.
காரணம் இதற்கான முழு அதிகாரம் ஒரு டெல்லியில் உள்ள ஒரு டேடா செண்டரிடம் கொடுக்கப் பட்டுள்ளது. அந்த டேட்டா
செண்டர் ஏற்றுக் கொண்டால் தான் எந்த அதிகாரியும் மக்களின்
விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வார். இல்லை எனில் மறுதுவிடுவார்.
கோவா மாநிலத்தில் அதிகாரிகளே ஆதரங்களோடு விண்ணப்ப படிவங்களை
சமர்ப்பித்து டேட்டா உள்ளீடு செய்த போது அது ஏற்றுக் கொள்ளாத போது மேலதிகாரி புட் தெம்
பேக் ஆதாரங்களை தூக்கிப் போடு என்று சொன்னார்.
இந்த விவகாரத்தை இப்போதைக்கு இந்தியன் எக்ஸிபிரஸ் பத்ரிகை வெளியில் கொண்டு வந்திருக்கிறது
இது பற்றி கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு கோரட் கேள்வி எழுப்பிய போது தேர்தல் கமிஷனர்களில் மூவரில் ஒருவரான சுக்பீர் சிங் சந்து என்பவர் தனது அதிகாரிகளிடம் விசாரிக்கிற போதுதான் தங்களது கவனத்திற்கே வராமல் இத்தகய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்கிறார்.
இது பற்றி 10 மாத்தில் 14 முறை ஆட்சேபனைகளை அவர் தலை மை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பியிருக்கிறார். மத்திய பாஜக அரசின் முழு ஆதரவில் இருந்த
அவர் எதையும் கண்டு கொள்ள வில்லை.
சந்து
அவர்கள் இந்த நடைமுறையை அதிகாரப்பூர்வமற்றது என்றும் சட்ட விரோதமானது என்றும் கூறியிருக்கிறார்.
இத்தனைக்கும்
பிறகு எஸ் ஐ ஆர் நடை முறைக்கு வந்து பல மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டு அவற்றில்
பலதில் பாஜக வெற்றியடைந்திருக்கிறது.
பாஜக
வை வெற்றி பெறச் செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து
130 கோடி மக்களை சிரமத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியிருக்கிறார்.
இந்திய
ஜனநாயத்தின் மீது விழுந்துள்ள வரலாறு காணாத பேரிடி இது.
இத்தகைய
அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் நிச்சயம் அதற்குரிய பலனை அனுபவிக்கவே செய்வார்கள்.
இப்போது
அதன் தொடக்கம் தெரியத் தொடங்கியிருக்கிறது.
இந்திய
தலைமை தேர்தல் கமிஷனரை கைது செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின் உத்தவ
தாக்ரே போன்ற பல பெரும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இது
ஒருசிலரின் கோரிக்கையாக மட்டும் இல்லாமல் நாட்டு மக்கள் அனைவரின் கோரிக்கையாக எழ வேண்டும்.
அப்போதுதான்
வாழ்வா சாவா என்ற போராட்ட்த்தில் இருந்த இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்.
No comments:
Post a Comment