ரபீஉல் ஆகிர் மாதத்தில் நம்முடைய பள்ளிவாசல்களில் முஹியித்தீன் மெளலூதுகள் நடைபெறுவதும் 11 ம் நாள் அன்று கந்தூரிகள் நடைபெறுவதும் நம்முடைய சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்களில் வாடிக்கையானது.
இறைநேசர்களையும்
நேசிப்பதும், அவர்களது வாழ்க்கை வரலாற்றை அறிவதும் நமது ஈமானை வலுப்படுத்தும் காரியங்களாகும்.
அது நமது ஈமானிய வாழ்வின் ஒரு அம்சமாகும்.
أَلا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ. الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ. لَهُمْ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ
நம்மில்
சிலர் அந்த மெளலூதுகளிலும் மஜ்லிஸ்களிலும் கலந்து கொள்ளாமல் போகலாம்.
ஆனால்
அந்த இறைநேசர்களை போல நமக்கு உறுதி மிக்க ஈமானும் தெளிவுமிக்க தீனும் வேண்டும் என்றாவது
ஆசைப்பட வேண்டும். துஆ செய்ய வேண்டும்.
கருணையுள்ள
இறைவா! இந்தப் பெருமக்களை நீ பொருந்திக் கொள்வாயாக! அவர்களது அறிவினாலும் ஆன்மீக அறிவுரைகளாலும்
எங்களை பயன்பெறச் செய்வாயாக! அவர்களைப் போல உன்னையே நம்பவும் வழிபடவும் எங்களுக்கு
வாய்ப்பளிப்பாயாக என்று பிரார்த்திக்க வேண்டும்.
இதில்
யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. ஏனெனில் யாரை இறைநேசர்கள் என்று முஸ்லிம்
சமூகம் கொண்டாடுகிறதோ அவர்கள் இஸ்லாமின் மகத்தான சேகவர்கள் ஆவார்கள்.
கோவை அத்தார் ஜமாத் பள்ளிவாசலுக்கு அருகே ஜமேஷா தர்கா என்றொரு தர்கா உண்டு. அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கிற நல்லடியாரைப் பற்றி கிடைக்கிற செய்தி என்ன வெனில்?
அவர் அத்தார் ஜமாத் பள்ளிவாசலில் இருந்த ஒரு மரத்தடியிலேயே இருப்பார். மக்கள் தங்களது பிரச்சனைகளை கூறிக் கொண்டு வந்தால் ஆலோசனை சொல்வார். மார்க்கத்தின் வழி நடக்கத் தூண்டுவார். தன்னுடைய
அற்புதமான பேச்சால் மக்களுக்கு இறைவனின் அற்புத இயல்புகளை மக்கள் வியக்கும் வண்ணம்
எடுத்துரைத்தவர் என்று கூறப்படுகிறது.
அதன்
காரணமாகவே மக்கள் அவரது இறப்பிற்கு பின்னும் இன்றும் அவரை நினைவு கூறுகிறார்கள்.
இத்தகைய
இறைநேசர்களின் போதனைகளை பின்பற்ற வேண்டியது சமூகத்தின். அது இஸ்லாமிய வாழ்க்கையை நமக்கு
தரும். அவர்களை போற்றுவதும் பாராட்டுவதும் அவர்களது வழியில் நடக்க நம்மை தூண்டும்.
அதற்கான பரக்கத்தை தரும்.
முஸ்லிம் உம்மத் முஹ்ம்மது நபி (ஸல்) அவர்களையே அல்லாஹ் என்று சொல்ல வில்லை. வேறு யாரை அப்படிச்
சொல்லப் போகிறது.
எனவே இறைநேசர்களை புகழ்வதோ போற்றுவதோ இணை வைப்பாகி விடும் என்று ஓலமிடுகிறவர்கள் ,உண்மையில் அவதூறு பரப்புகிறார்கள்.
அதை விட பெரிய கவலை அத்த்கையோர் ஈமானிய வழியை தவற விடுகிறார்கள் என்பதாகும்.
இறைநேசர்களில் மகத்தான ஒரு பெருந்தகை தான் முஹியித்தீன்
அப்துல் காதிர் ஜீலானி ரஹி அவர்கள்
ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) இஸ்லாம்
கண்ட மிகப்பெரிய சீர்திருத்த வாதி
· முஸ்லிம்
சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின்
அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர். அதற்கு
வழிகாட்டியவர்.
· உலக்
ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடு மக்கள்
வாழ்வதற்காக காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர்.
· பலவேறு
ஷைகுகளின் வழிகாட்டுதல் படி உருவான் பக்தி மார்க்கமான தரீக்காக்களை (ஷாதுலிய்யா
நக்ஷபந்திய்யா சிஸ்திய்யா) ஒருங்கிணைத்தவர்.
· ஆன்மீகம்
என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர்.
· கேட்போரை
அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிகளால் எராளமான
குற்றவாளிகளை திருத்தினார்..
50 ஆயிரம்
பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர்..
· ஏராளமான
அற்புதங்களுக்கு சொந்தக்காரர்
· كان كثير الكرامة
பிபிறப்பும் வளர்ப்பும்
இன்றைய ஈரானில் காஸ்பியன் கடலை ஒட்டியிருக்கிற ஜீலான் என்ற நகரத்தில் நீப் பகுதியில் ஹிஜ்ரி 470 ல் (கிபி 1077) அப்துல் காதிர் ஜீலானி பிறந்தார்.
அப்துல்
காதிர் ஜீலானி இன்றிலிருந்து சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்தவர் என்பதை
ஒற்றை வரி செய்தியாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
அந்தக் காலம் ஹிஜ்ரி 5 ம்
நூற்றாண்டு காலமாகும் .அப்போது இஸ்லாமிய
அரசாங்கத்தை அப்பாஸிய கலீபாக்கள் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள்.
முஸ்லிம்கள் அறிவியலிலும் அரசியலிலும்
உலகின் முதலிடத்தில் இருந்தார்கள்.
பெற்றோர்
ஜீலானியின் தந்தை அபூசாலிஹ் மூஸா
ஆவார். அவரின் வமிசத் தொடர்
ஹஸன் ரலி அவர்களுடன் முடிகிற்து.
ஜீலானி ரஹ் அவர்களுக்கும் பாத்திமா ரலி அவர்களுக்குமிடையே 11 தந்தையர் உள்ளனர்.
( التاريخ الكبير، تأليف: الحافظ
الذهبي. )
அவரது தாய் உம்முல்கைர் அவருடைய
வமிசம் தொடர் ஹுசைன் ரலி
அவர்களுடன் சேருகிறது. இவ்வாறு
தாய் தந்தை இருவரது சங்கிலித்தொடர்பும் பெருமானார் (ஸல்) அவர்களுடன்
சேருகிறது.
அப்துல் காதிர் ஜீலானியின்
குடும்பம் சாலிஹான குடும்பமாக இருந்தது. அவரது
தந்தையும் பாட்டனார் அப்துல்லாஹ் பின் யஹ்யாவும் இறைச்சிந்தனையில்
முன்னோடிகளாகவும் மக்களுக்கு வழிகாட்டுபவர்களாகவும் இருந்தார்கள்.
மழை குறைந்து போகிற காலங்களில் அப்துல்
காதிர் ஜீலானியின் தந்தையின் சகோதரி ஆயிஷா அம்மாவை வை முன்
வைத்து மழை வேண்டாப்பட்டால் மழை பொழியும்.
இந்த
அளவில் ஜீலானி ரஹ் அவர்களுடைய குடும்பம் பாக்கியமிகு இஸ்லாமிய குடும்பமாக இருந்தது.
கல்வி
அப்துல் காதிர் ஜீலானி ஆரம்ப
கல்வியை தன்னுடைய குடும்பத்தாரிடமிருந்தே கற்றார்கள்.
18 வயதில்
மேற்படிப்புக்காக இராக்கிலிருக்கிற பக்தாதுக்கு பயணமானார்கள்
.பக்தாதில் أبو
سعيد المُخَرِمي யின் மாணவராக
சேர்ந்தார்.
أبو سعيد المُخَرِمي அக்கால பக்தாதின் தலை சிறந்த அறிஞர்களில் ஒருவராகவும் செல்வந்தராகவும்
திகழ்ந்தார். ஒரு பெரிய தோட்டமும் வீடும் அவருக்கு சொந்தமாக இருந்தது. அக்காலத்தில் பொது குளியல் அறையில் தான் மக்கள்
குளிப்பார்கள். அபூ ஸஈத் தனக்காக ஒரு குளியளறை கட்டிக் கொண்டிருந்தார் என்பதை
அவரது செல்வச் செழிப்புக்கு அடையாளமாக காட்டுகிறார்கள்.
அவர்
செல்வந்தராக இருந்த போதும் மார்க்க கல்வி மீதான அவருடைய அக்கறை ஆழமாக இருந்தது. ஹன்பலி மத்ஹபின் மாபெரும் சட்ட அறிஞராக
மாறினார்.
தனது
செல்வத்தால் பாபு அஸ்ஜ் என்னும் இடத்தில்
ஒரு மதரஸாவையும் நிறுவினார். அதில் ஏராளமான மாணவர்கள் பயின்றனர். அப்துல் காதிர்
ஜீலானியும் அங்கு இணந்து கொண்டார்.
மதரஸாவில் சேர்ந்தார். அங்கு
திறன்மிக்க மாணவராக விளங்கினார்.
ஆனாலும் சில நேரங்களில் உணவு சாப்பிட அவர் மிகவும்
சிரமபட்டிருக்கிறார். அவருடைய அம்மா அனுப்பிய பணம் தீர்ந்த போது பல நாட்கள்
சாப்பிட வழியில்லாமல் ஒரு தடவை பகீர்கள் அமர்ந்திருக்கிற சத்திரத்திற்கு வந்தார்.
அங்கு யாராவது உனவளிப்பார்கள் என்ற நம்பிக்கையில்
ஆனால்
அங்குள்ள நிலையை பார்த்து தன்னால் இந்த பக்கீர்களுக்கு கிடைப்பதில் பங்கு போடும்
நிலை வரக்கூடாது என்று கருதி அருகிலிருந்த பள்ளிவாசலுக்கு சென்றார்.
அப்போது
பசியால் நடக்க முடியாமால் தள்ளாடியபை அங்கு அமர்ந்தார்.
அப்போது
ஒருவர் கையில் ரொட்டிகளோடு வந்து அங்கு சாப்பிட அமர்ந்தார். அவர் சாப்பிடுவதை
காணக் காண ஜீலானி ரஹி அவர்களின் பசி உணர்வு மேலோங்கியது.
இதை
பார்த்த அந்த மனிதர் அருகே வந்து உணவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அவர் அருகே சென்ற போது அந்த மனிதர் ஜீலானியைப் பற்ரி விசாரித்தார். தன்னைப் பற்றிய
விவரங்களை அவர் சொன்ன போது அந்த மனிதர் அலறியபடி எழுந்தார்.
அப்துல்
காதிர்! இது உங்களது அம்மா உங்களுக்காக கொடுத்தனுப்பிய காசில் வாங்கிய ரொட்டி.
உங்களிடம் தருவதற்காக உங்களது தாயார் என்னிடம் பணம் கொடுத்தனுப்பினார். உங்களை பல
இடத்திலும் தேடினேன் கிடைக்கவில்லை. என்னிடம்
இருந்த பணமும் தீர்ந்து விட்டது. இனி சாப்பிடாவிட்டால் மயங்கி விடுவோம் என்ற
பயத்தில் உங்களுடைய பணத்தில் வாங்கிய உணவு தான் இது என்று அவர் சொன்னார்.
அவரிடமிருந்து
பணத்தை பெற்றுக் கொண்ட ஜீலானி ரஹ் கிடைத்த பணத்தை கொண்டு அவர் முன்னே சென்ற அந்த
சத்திரத்தில் இருந்தவர்களுக்கு உணவுகளை வழங்கினார்.
இத்தகை
வாழ்க்கை போராட்டம் ஒரு புறம் இருந்தாலும் ஜீலானி ரஹ் அவர்களின் கல்வி படலம் வெற்றிகரமாக
நடந்து கொண்டிருந்தது.
ஜீலானி ரஹ் அவர்கள் அன்றையை உலகின்
சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்திருந்தார். கிராஅத்
தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் மொழி உள்ளிட்ட 13 கலைகளில்
அவர் வல்லுனராக திகழ்ந்தார். ஷாபி
ஹன்பலி மத்ஹபுகளின் படி அவர் பதவாக்கள் வழங்குவார், அந்த
பத்வாக்கள் இராக் அறிஞர்களை ஆச்சரியப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது.
30 வருடங்கள்
கல்வி கற்பதில் செலவிட்ட ஜீலானி ரஹ் அவர்கள்
أبو سعيد المُخَرِمي அவர்களின்
வபாத்திற்கு பிறகு அந்த மதரஸாவிற்கு பொறுப்பேற்ற ஆசிரியப்பணியிலும் பத்வா வழங்கும்
பணியிலும் ஈடுபட்டார்கள்.
பல பகுதிகளிலும் வந்து குவிந்த
மாணவர்களால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அரசர்கள் பொதுமக்கள் எல்லோருமாக சேர்ந்து
அக்கம் பக்கத்து நிலங்களை வாங்கி அந்த மதரஸாவை பொரிது படுத்தினர்.
ஆசிரியப்பணி சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் பக்தாதிலிருந்து திடீரென்
வெளியேறிய ஜீலானி ரஹ் அவர்கள் பல வருடங்கள் இராக்கின் வனாந்தரங்களில் சுற்றினார், இந்த
உலகின் ஈடுபாடுகளை விட்டு தனித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செல்லத்
தூண்டியது.
பிறகு மக்களின் நிலையையும்
தன்னுடைய கடமையையும் உணர்ந்த ஜீலானி ரஹ் அவர்கள் மீண்டும் பக்தாதுக்கு திரும்பி
தன்னுடைய பொறுப்பை கவனிக்க ஆரம்பித்தார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்களது
கனவில் தோன்றி மக்களின் சீர்திருத்தப் பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்
என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
பணிகள்
அனைத்து வகையான கலைகளையும் ஜீலானி
ரஹ் கற்றிருந்த்தனால் அவர்களது சொற்பொழிவுகளும் அறிவுரைகளும் அனைவரையும்
சென்றடைந்த்து.
அவரது சொற்பொழுவுகள் உடனடித்
தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருந்தன. ஏராளமானோர்
நேர்வழி பெற்றனர்.
அவர் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம்கள்
அரசியல் அரங்கிலும் அறிவியல் துறையிலும் முதன்மையாக இருந்தாலும் உள் நாட்டு
நிலவரம் குழப்பமானதாக இருந்த்து, மக்களின்
ம்னோ நிலையிலும் ஈமானிய நிலைப் பாடு குறைந்து – உலகியல்
மோகம் அதிகரித்திருந்த்து. புகழ்
ஆடம்பரம் அதிகாரத்தை பெரிதாக கருதும் போக்கு மிகைத்திருந்த்து.
இளம்
வயதிலேயே இதயங்களுக்குள் ஊடுறுவும் சொற்பொழிவுத்திறமை அவரிடமிருந்தது.
அவருடைய சொற்பொழுவின் ஆகர்ஷனத்தைப்
அறிந்த உஸ்தாது أبو سعيد المُخَرِمي அவர்களே
தன்னுடைய மானவருக்கு மதரஸாவிலேயே தொடர்ந்து சொற்பொழிவாற்றுவதற்கான ஏற்பாடுகளை
செய்து கொடுத்தார். பாபுல்
அஸ்ஜ் என்ற இடத்திலிருந்த அந்த மதரஸாவில் வெள்ளி
ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் காலையிலும் செவ்வாய்க்கிழமை மாலையிலுமாக வாரத்தில்
மூன்று நாட்கள் அன்னாரின் பிரசங்கம் தொடர்ந்தது. அந்தப்
பிரசங்கங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. பெரிய
அளவில் மக்கள் திரண்டனர். பிரமுகர்கள்
அமைச்சர்கள் சுல்தான்கள் அக்கூட்டங்களுக்கு வந்தனர்.
அந்தப் பிரசங்கங்கள் மக்களுக்கு
அறிவுரை சொல்லும் வகையிலும் உள்ளச் சுத்த்தை தூண்டும் வகையிலும் அமைந்தன, அல்லாஹ்
அன்னாருக்கு கொடுத்த அந்த மாபெரிய ஆற்றல் மக்கள் இதயங்களை ஊடுறுவிச் சென்றது.
அக்கிரமம் செய்த அதிகாரிகள் மனம்
மாறினர். திருடர்களும்
குற்றவாளிகளும் மனம் திருந்தினர். சுமார் 1 இலட்சம்
தீயோர் மனம் திருந்தினர். சுமார் 50 ஆயிரம்
பேர் இஸ்லாமை தழுவினர்.
ஜீலானி ரஹ் தன்னுடைய சொற்பொழிவுகள்
மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களது
சிந்தனையை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்ப்டையான இறைச் சிந்தனையின் பால
திருப்புவதில் பெரும் வெற்றி கண்டார்கள். இந்த
ஆன்மீக மாற்றத்தை தேடி குதிரைகள் ஒட்டகைகளில் பயணம் செய்து மக்கள் வந்தனர். ஒரு
சம்யம அவரது உரையை கேட்க 90 ஆயிரம் பேர்
பக்தாதில் கூடினர்.
முஹ்யித்தீன்
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை
பாதைக்கு மக்களை பெருமளவில் அழைத்து வந்த புரட்சிகரமான மாற்றங்கள் நிக்ழந்ததால்
முஹ்யித்தீன் மார்க்கத்திற்கு உயிரூட்டியவர் என்று சிறப்பு பெயரிட்டு
அழைக்கப்பட்டார்கள்.
அன்னாரது உபதேசங்கள் நன்மையை ஏவி
தீமையை தடுப்பதில் சக்திமிக்கதாக அமைந்த்திருந்த்து.
ஒரு நாள் தனது உரையில் அவர்
கூறினார் :
أنت
معتمد عليك ، وعلي الخلق ، ودنانيرك ودراهمك ، وعلي بيعك وشرئك ، وعلي سلكان بلدك
، كل من إعتمدت عليه فهو إلهك ، وكل من خفته ورجوته فهو إلهك، كل من
رأيته في الضر والنفع ، ولم تر أن الحق يجري ذلك علي يديه قهو إلهك
: الفتح الرباني - المجلس
நீ உன்னை நம்புகிறாய! படைப்புக்களை நம்புகிறாய்! உனது தீனார்களையும் திர்ஹம்களையும் நம்புகிறாய்! உனது கொடுக்குதல் வாங்குதலை நம்புகிறாய்! உனது ஊரின் சுல்தானை நம்புகிறாய்! யார் மீது நீ பிடிமானம் கொண்டிருக்கிறாயோ அது தான் உனது கடவுள். யாரை நீ பயப்படுகிறாயோ! ஆசைப்படுகிறாயோ அது தான் உனது கடவுள். அல்லாஹ் தான் எல்லாவற்றையும் நட்த்துபவன் என்று எண்ணாமல் நன்மையும் தீமையும் யார் வழியாக ஏற்படுகிறதோ அதை நீ நம்பினால் அது தான் உன்னுடைய கடவுள்.
ஜீலானி ரஹ் அவர்களின் மற்றொரு நாள் இவ்வாறு கூறினார். . .
كل
من يري الضرر والنفع من غير الله فليس بعبد له ، هو عبد من رأي ذلك له : الفتح
الرباني
அல்லாஹ் அல்லாத மற்ற எதனிடமிருந்து
நன்மையும் தீமையும் ஏற்படுகிறது என்று கருதுகிற எவனும் அல்லாஹ்வின் அடிமை அல்ல.அவன்
எதை நம்புகிறானோ அதன் அடிமையாவான்.
மற்றொரு நாள் இந்த உலக ஆசையில்
திழைப்பதை இப்படி எச்சரித்தார்.
ويحك
! الدنيا في اليد يجوز ، في الجيب يجوز ، إدخارها لسبب وبنية صالحة يجوز ، أما في
القلب فلا يجوز. وقوفها علي الباب يجوز ، اما دخولها إلي وراء الباب فلا . و لا
كرامت لك . الفتح الرباني - المجلس 51
உனக்கு நாசமே! இந்த
உலகம் உனது கையில் இருக்கட்டும். உனது
பையில் இருக்கட்டும். ஒரு
தேவைக்காக அல்லது நல்ல நோக்கத்திற்காக அதை சேர்த்து வைத்தாலும் கூடும். ஆனால்
இதயத்தில் இடமளிக்க கூடாது. அது
வீட்டு வாசலில் நிற்கட்டும். அதை
தாண்டி வரக்கூடாது. அப்படி
வந்தால் உனக்கு எந்த மரியாதையும் இல்லை.
ஷைக் அவர்களின் இந்த உரை
வீச்சுக்கள் ஆயிரம் வருடங்களுக்கு அப்பால் இப்போது கேட்கிற போது கூட சிலிர்ப்பை
ஏற்படுத்துகின்றன. நேரில்
இது எத்தகையை விளைவுக்ளை ஏற்படுத்தியிருக்கும் கற்பனை செய்து பாருங்கள்.
மக்கள் இந்தப் பேச்சுக்கு கூட்டம்
கூட்டமாக திரண்டார்கள். அவரது
வாயிலிருந்து உதிரும் முத்துக்களுக்காக காத்திருந்தார்கள். திருந்தினார்கள். திருத்தினார்கள்.
தன்னுடைய உரையில் அரசர்கள் அதிகாரிகளை
ஜீலானி விட்டுக் வைக்கவில்லை. தவறு
எங்கு கண்டாலும் கண்டித்தார்.
ஜீலானி ரஹ் அரசர்கள் அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பிரமுகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொது மேடையில் நன்மையை எடுத்துச் சொல்பவராகவும் தீமையை தடுப்பவராகவும் இருந்தார் என இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்.
ஒரு நாள் தன்னுடையை உரையில் இப்படி
கர்ஜித்தார்.
إني
أقول لكم الحق ، ولا أخاف منكم ولا أرجوكم ، أنتم واهل الأرض عندي كالبق ، لأني
أري النفع و الضرر من الله – لا منكم . المماليك والملوك عندي سواء
( الفتح الرباني - المجلس الواحد والخمسون )
“நான் உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறேன். நான் உங்களை பயப்படவும் மாட்டேன். உங்களிடமிருப்பதை ஆசைப்படவும் மாட்டேன். நீங்களும் இந்த உலகில் இருப்பவையும் என்னிட்த்தில் ஒரு கொசுவைப் போலத்தான். நன்மையும் தீமையும் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன உங்களிடமிருந்து அல்ல என்றே நான் நம்புகிறேன். மக்களும் மன்னர்களும் என்னிடம் சம்ம் தான்.
ஜீலானி ரஹ் அவர்களின் மற்றொரு மகத்தான பணி
ஆன்மீகம் என்ற பெயரில் மார்க்கத்தின் அடிப்படைகளை குழி தோண்டிப்புதைக்கிற பணியை சிலர் செய்து வந்தார்கள் .
அப்துல் காதிர் ஜீலானி ரஹி அவர்கள் - தரீக்கா என்பது ஷரீஅத்தை மீறீ
நடப்பதல்ல எனபதை ஆணித்தரமாக உணர்த்தினார்.
இஸ்லாம் பக்தியின் பெயரால் தவறான
வழியில் செல்லாமல் காப்பாற்றப் பட்டது.
· قال
الإمام ابن حجر العسقلاني : كان
الشيخ عبد القادر متمسكاً بقوانين الشريعة, يدعو إليها وينفر عن مخالفتها ويشغل
الناس فيها مع تمسكه بالعبادة والمجاهدة ومزج ذلك بمخالطة الشاغل عنها غالبا
كالأزواج والأولاد, ومن كان هذا سبيله كان أكمل من غيره لأنها صفة صاحب الشريعة
صلى الله علية وسلم (قلائد الجواهر، ص 23.)
ஜிலானி (ரஹ்) அவர்கள்
அனைத்து தரீக்கா பிரிவின்ரையும் இணைத்து மாபெரும் மாநாடுகளை நட்த்தி தரீக்கா
பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தினார். அதனால்
நக்ஷபந்தி தரீக்காவினர் ஜீலானி (ரஹ்) அவர்களை
எங்களுடையவும் உங்களுடையவும் ஷைகு என்று அழைப்பதுண்டு.
ஜிலானி ரஹ் அவர்களின் முயற்சியின்
விளைவாவாகத்தான் பல தரீக்காகளும் இணைந்த பொதுவான ஷைகுகளும் தரீக்காகளும் உருவாயின.
ஜீலானி ரஹ் அவர்களால்
திருந்தியவர்கள் – அவரிடமிருந்து
பை அத் பெற்றவர்கள் அன்னாரின் கருத்துக்களை நாடு நகரமெங்கும் எடுத்துச்
சென்றார்கள்.
அப்போது பக்தாது முஸ்லிம்களின் தலை
நகராக இருந்த்தால் இந்தப் பிரச்சாரம் முஸ்லிம் உலகம் முழுவதற்கும் சென்றது.
இன்றும் முஹ்யித்தீன் அப்துல்
காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் பெருமை உலகின் நாலாபுறத்திலும் நிலைத்து நிற்பதற்கு
அல்லாஹ்வின் பாதையில் பெருமானார் (ஸல்) அவர்கள்
காட்டிய வழியில் சரியான தீனை கடைபிடிப்பதற்கு அன்னார் வழி காட்டினார் என்பதே
காரணமாகும். அவரது
உபதேசங்களும் அறிவுரைகளும் இறை நெருக்கத்திற்கு அவர் கற்றுக் கொடுத்த வழிமுறைகளும்
மக்களிடம் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தன.
குடும்ப வாழ்க்கை
ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ளாத அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் ஹிஜிர் 521 ல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் பெருமானாரின் சுன்னத்து என்பது அப்போது தான் தீன் பரிபூர்ணத்துவம் அடையும் என்ற பெருமானாரின் அறிவுரையுமே அதற்கு காரணமாகும். நான்கு மனைவியரை திருமணம் செய்த ஜீலானி ரஹ் அவர்களுக்கு 27 ஆண் குழந்தைகளும் 22 பெண்குழந்தைகளும் பிறந்தன.
40 ஆண்டுகள் தொடர்ச்சியான மார்க்கப் பிரச்சாரத்திற்கு இடையே ஏராளமான நூற்களை எழுதியுள்ளார்கள். அவர்களுடைய உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
இறுதியில் ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91 வது வயதில் வபாத்தானார்கள்.
அன்னாருடை அடக்கஸ்தலம் பக்தாதில்
அவர்கள் பணியாற்றிய மதரஸா வளாகத்திலேயே உள்ளது.
ஜீலானிகள் தோன்றுவார்கள்
அன்றைய காலத்தில் பக்தாது இஸ்லாமிய உலகின் தலை நகராக இர்நுத்து. அங்கு நடக்கும் நிகழ்வும்கள் முஸ்லிம் உலகெங்கும் சென்றடைந்தன. மக்களும் அப்துல் காதிர் ஜீலானியின் சொற்பொழிவுகளை பற்றி அறிந்து அதை கேட்பதற்காகவே பக்தாதுக்கு சென்றனர். 30 ஆண்டு கால பிரச்சாரத்தில் உலகின் மூளை முடுக்கெங்கும் அவரது சீடர்கள் பெருகினார்கள்.
அவர்களை அடிப்படையான் இஸ்லாமை விட்டு விலகாமல் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பாதுகாத்தார்கள்.
அந்த பாரம்பரியம் முடிந்து விடக் கூடியது அல்ல
வலிமார்கள் எனும்
இறைநேசர்கள் இன்றும் இருப்பார்கள். இனியும் தோன்றுவார்கள்.
அல்லாஹ்
தேர்ந்தெடுக்கிற சில இறைநேசர்கள் முஸ்லிம் உம்மத்தை மகத்தான வழியில் வழி நடத்துவார்கள்.
عن أبي هريرة رضي الله
عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن من عباد الله عبادا يغبطهم الأنبياء والشهداء. قيل: من هم يا رسول
الله؟ لعلنا نحبهم. قال: هم قوم تحابوا في الله من غير أموال ولا أنساب، وجوههم نور على منابر من
نور، لا يخافون إذا خاف الناس، ولا يحزنون إذا حزن الناس. ثم قرأ: أَلا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ رواه أبو داود
முஸ்லிம்
சமூகம் ஆட்சியாளர்களால அல்ல இறைநேசர்களால வழி நட்த்தப்பட்ட சமூகம் ஆகும்.
இன்றுள்ள
பிரச்சனைகள் நிறைந்த சூழலில் அத்தகைய வலிமார்கள் தோண்ற வேண்டும் என்று நாம் ஆசைப்பட
வேண்டும். அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.
அத்தோடு
அத்தகைய வலிமார்கள் தோன்றுகிற போது சிக்கலின்றி அவரகளை ஏற்கவும் பின்பற்றவும் நாம்
தயாராக இருக்க வேண்டும்.
மக்கா
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே ஒரு நபி வருவதை எதிர் பார்த்து
தேடிக் கொண்டிருந்தது என்று வரலாற்றாசிரியர்கள்
கூறுகிறார்கள்.
மக்காவும்
மதீனாவும் மற்ற அரபு பிரதேசங்களும் விரைவாக இஸ்லாமை தழுவியதன் பின்னணியில் ஒரு நபி
தோன்றுவதற்கான எதிர்பார்ப்பு அம்மக்களிடம் இருந்த்து என்பதை வரலாறு காட்டுகிறது. .
கதீஜா
ரலி அவர்கள் பெரும் பணக்காரியாக இருந்த போதும் கூட முஹம்மது நபி (ஸல்) அவர்களது இயல்புகளை
அறிந்த போது அது நபித்துவ இயல்புகளாக இருந்தது என்பதை யூகித்திருந்தார்கள் என்று ஆய்வாளர்கள்
சொல்வதுண்டு.
எனவே
ஒரு நபிக்கான எதிர்பார்ப்பு அன்றைய அரபு நாட்டில் இருந்தது. முஹம்மது நபி ஸல்) அவர்களை
தலை மேல் தாங்கிக் கொண்ட்து.
அது
போல நாம் வாழும் காலத்திலும் இறைநேசர்கள் தோன்ற வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம்.
ஒரு நல்ல மனிதர் அப்படி வருகிற போது மன சஞ்சலம் இன்றி அவரை ஏற்க தயாராக இருப்போம்.
நாம்
இறை நேசர்களை நேசிப்பவர்களாக இருந்தால் நிச்சயம் அதற்கான வழிகாட்டுதலை அல்லாஹ் நமக்கு
தருவான்.