வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 16, 2010

அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கிறது.
கலவரத்தை ஏற்படுத்தி இந்துக்களின் ஓட்டுக்களை வேட்டையாட இந்துத்துவ அமைப்புக்கள் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றன.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களிம் போது வேணுமென்றே கலவரத்தை தூண்டும் வகையில் இதுவரை இல்லாத அளவு முஸ்லிம் பகுதிகளில் சிலைகளை நிறுவ்வும் தகராறுகளை உண்டுபண்ணவும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் அதிக முயற்சி செய்தன செய்து கொண்டிருக்கின்றன.

பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கின் தீர்ப்பும் வர இருப்பதாக செய்திகள் வர்கின்றன.

முஸ்லிம்கள் அதிக எச்சரிக்கயோடு இருக்க வேண்டிய சந்தர்ப்பம் இது.

கலவரத்தை தூண்டுபவர்களை காவல் துறைக்கு அடையாளம் காட்டி விட்டு அதிகப் பட்ச பொறுமையை கடை பிடிக்க வேண்டும்,

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ(46)
ஒரு டாக்ட்ர் அல்லது ஒரு வக்கீல் அல்லது ஒரு அரசியல் வாதி நம்முடன் இருந்தால் அதன் நன்மை என்ன?

அல்லாஹ் நம்முடன் இருந்தால் ? அதன் நன்மை எவ்வளவு?

அல்லாஹ்வை உடன் வைத்துக் கொள்ளும் சக்தி பொறுமைக்கு இருக்கிறது.


எழுபது வசங்களில் பொறுமை பேசப் பட்ட பிறகு பதிலடிக்கான் அனுமதி வழங்கப் பட்ட்து.

பொறுமை என்பது சிரமங்களை தாங்கிக் கொண்டு சும்மா இருத்தல் அல்ல.

இஸ்லாமிய பொறுமை அலாதியான பொருள் கொண்ட்து.

 பொறுமை மூன்று விசயங்களை கொண்ட்து.
·         صبر علي الطاعات   வணங்கி வழி பட ஒரு (செயல் படும்)   பொறுமை தேவை
·         صير عن المعاصي பாவம் செய்யாமல் இருக்க ஒரு (உறுதியான) பொறுமை தேவை
·         صبر علي المصائب சேதனைகளை  தாங்கிக்க் கொள்ள் (நிதானம் என்ற) பொறுமை தேவை   

செயல் + உறுதி + நிதானம் = மூன்றும் இணைந்த்தே இஸ்லாமிய பொறுமை

அடித்தவனை உடனே திருப்பி அடித்தல் பதிலடி
அடித்தவன் யார் எதற்கு அடித்தான் இவனுக்கு எப்படி பதிலடி தருவது என்று யோசிப்பது பொறுமை

இஸ்லாமிய பொறுமை என்பது யோசித்து உறுதியாக  செயல்படுவதே

பெருமானாரின் பொறுமை
மக்காவில் கஃஃபாவிற்கு அருகே படுத்திருந்த பெருமானாரிடம் தோழர்கள் கேட்டார்கள்: எதுவரை பொறுமை?
பெறுமானார் சொன்னார்கள் : அவசரப் படுகிறீர்கள் , நீங்கள் இரும்புச் சீப்பால் தலை வாரப்படுவீர். மண்ணுக்குள் புதைக்கப் பட்டு தலை இரு கூறாக்கப் படும். பின்னர் அமைதி வௌம் சன்ஆ விலிருந்து ஹழரமவ்த் வரை ஆபரணம் அணிந்த பெண் தனியாக நடந்து செல்வாள் தனது ஆடுகளுக்கு ஓநாயை தவிர வேறு எதையும் அவள் பயப்பட்த் தேவையிருக்காது.

இடையூறுகளும் துன்பங்களயிம் நேரில் அனுபவித்த சந்தர்ப் பத்திலும் நிதானம் இழக்காமல் பொறுமை காத்தார்கள்.

فكانوا يخرجون عماراً وأباه وأمه إلى الأبطح إذا حميت الرمضاء يعذبونهم بحر الرمضاء فمرّ بهم النبي صلى الله عليه وسلم فقال: «صبراً آل ياسر فإن موعدكم الجنة»، فمات ياسر في العذاب وأغلظت امرأته سمية القول لأبي جهل فطعنها في فرجها بحربة فماتت وهي أول شهيدة في الإسلام،


இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்களை வம்புக்கிழுத்த்து கலவரத்தை உண்டு பண்ணி அதன் மூலம் ஓட்டு வேட்டையாட நினைப்பவர்களுக்கு நாம் இரையாகி விடக் கூடாது அதிக பட்ச பொறுமையை கடை பிடிக்கனும்

இளைஞர்கள் அதிக எச்சரிக்கையாக இருக்கனும்

ஒரு தலைமைக் கட்டுப்படுகிற மனோநிலையில் தான் எந்த இட்த்திலும் ஒன்று கூட வேண்டும்.

அந்த மனோ நிலை இல்லை என்றால் எங்கும் கூடி நிற்க வேண்டாம். அது சமுதாயத்திற்கு தீமை யே பயக்கும்.

அல்லாஹ் நம்மையும் நமது தேசத்தையும் நிம்மதியாகவும் செழிப்பாகவும் திகழச் செய்வானாக!

முஸ்லிம்களு தொல்லை கொடுத்து இந்த தேசத்தின் அமைதியை சீர் குலைக்க முனையும் சக்திகளின் திட்டங்களை அல்லாஹ் முறியடிப்பானாக!  



1 comment:

  1. salam.bayan kurippukal parthen. nanru. thodarattum thangal pani. valthukkal!

    ReplyDelete