قُلْ يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
பாபர் மஸ்ஜித் நில்விவிவ்கரம் தொடர்பான் வழக்கின் தீர்ப்பு ஒத்திப் போயிருக்கிறது
நமது நாட்டின் நீதி அமைப்பு - பாட்டன் காலத்து வழக்கு கொள்ளுப் பேரன் காலத்தில் தீர்க்கப்படும்
அதற்குள் வாதியின் சொத்தும் பிரதிவாதியின் சொத்தும் தீர்ந்து விடும்.
அனைத்தும் தீர்த்துவிடுவதால் அத்ற்குப் பெயர் தீர்ப்பு
என்று வேடிக்கையாக சொல்லப் பட்டாலும் அதுதான் எதார்த்தம்
பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசய்த்தில் 60 ஆண்டுகளாக நடை பெற்று வந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒருவழியாக செப்டம்பர் 24 ம் தேதி தீர்ப்பை வழங்க இருந்த நிலையில் தீர்ப்பை தள்ளி வைக்க கோரி ஆர் சி திருபாதி என்ற அநாமத்து பேர்பவழி தொடுத்த மனுவின் பேரில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளில் ஒருவர் தீர்ப்பை அறிவிக்க தடை விதித்திருக்கிறார்..
நீதி வழங்க நீதிமன்றமே தடையாக அமைந்த இந்த தலையீட்டினால் மற்றொரு நீதிபதி பய்ந்த்து போல உச்சநீதிமன்றத்தின் மீது மக்களுக்கு ஒரு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
வழக்கோடு சம்பந்தப் பட்ட இரண்டு தரப்பினரும் தீர்ப்பை ஏற்பதாக ஒத்துக் கொண்டிருக்கிற நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப் பட்டிருப்பதில் அரசியல் சூழ்ச்சி இருப்பதாக் கருதப்படுகிறது.
தீர்ப்பு வெளியாகிவிட்டால் பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளுக்கு வேறு பிரச்சினை இல்லை. அதனால் அவை தீர்ப்பு வெளிவருவதை உள்ளார்த்தமாக விரும்ப வில்லை. தீர்ப்பு குறீத்து பாரதீய ஜனதா கருத்து தெரிவிக்க மறுத்து விட்ட்து.அதன் செய்தித் தொடர்பாளர் அருண் ஜேட்லி நான் வக்கீல் என்ற முறையில் பேசுகிறேன் என்று பீடிகை போட்டு தீர்ப்பு தாமதமனதற்கு அதிருப்தி தெரிவிக்கிறார். வ்டிகட்டிய அயோக்கியத்தனம் அது.
காங்கிரஸ் அந்த அயோக்கியத்தனத்திற்கு துணை போகிறது
சமீபகாலமாக பாரதீய ஜனதாவின் விருப்ப்ப்படியே காங்கிரஸ் செயல்ப்டுகிறது.
60 ஆண்டுகளாக பேசித்தீர்க்கப் படாத பிரச்சினையை 4 நாட்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வருவதை காங்கிரஸ் ஏற்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் பேசுகிறார்.
இந்திய முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் செய்த வரலாற்று துரோகங்களில் தீர்ப்பு தள்ளிப் போக துணை நின்ற இந்த சந்தர்ப்பமும் ஒன்று.
காங்கிரஸும் பாரதீய ஜனதாவும் இந்த வழக்கில் தீர்ப்பு வருவதை விரும்ப வில்லை
முஸ்லிம்களை பொருத்த் வரை அன்றும் இன்றும் நம்பிக்கை யோடு இருக்கிறார்கள்.
காரணம் ராமர் கோவிலை இடித்து விட்டு பாபரின் படைத்தளபதி மீர்பாகி பள்ளிவாசலை கட்டவில்லை அவ்வாறு செய்வது முஸ்லிம்களின் பழக்கமில்லை.
திருக்குர் ஆனோ நபிகள் நாயகமோ அவ்வாறு ஒரு சிறு உத்தரவை வெளியிட்டிருப்பார்கள் எனில் ஒவ்வொரு முஸ்லிமும் அதையே இலட்சியமாக கொண்டிருப்பார்கள்.
பாபருக்கு முன்னரே பன்னூறு ஆண்டுகளாக முஸ்லிம்கள் இந்தியாவை ஆண்டு வந்துள்ளனர். இப்படி ஒரு பழி அவர்கள் மீது சொல்லப் பட்ட்தில்லை.
1528 பாபர் பள்ளி கட்டப்பட்ட்து. 350 வருடங்களாக ஒரு பிரச்சினையும் இல்லை
1987 சிப்பாய் கலகத்திற்கு பிறகு இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க பிரிட்டிஷ்கார்ர்கள் திட்டமிட்டனர்.
அயோத்தியில் சுமார் 3 ஏக்கர் நிலத்தில் பாபர் பள்ளி இருப்பது அந்த ஊரில் இருந்த சில இந்துக்களின் கண்களை உறுத்தியது. அவர்கள் பிரிட்டிஷாரின் திட்ட்த்திற்கு துணைபோயினர்.
1859 முதல் தகராறு தொடங்கியது.
சுதந்திரத்திற்குப் பிறது 1949 டிஸ்ம்பர் 22 இஷா வரை தொழுகை நடைபெற்ற பள்ளிவாசலில் இரவோடு இரவாக திருட்டுத்தனமாக சிலை வைக்கப் பட்ட்து.
பிரச்சினை நீதிமன்றத்திற்கு சென்றது நீதிபதி கே.கே நய்யார் பள்ளிக்குப் பூட்டுப் போட்டார். அன்றிலுருந்து நடந்துவருகிற வழக்கிற்கு இப்போது வயது 61
இடையில் காங்கீரஸ் ஆட்சிக்காலத்தில் தொடந்து முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப் பட்ட்து
1986 – சிலைகளை வழி பட அனுமதிக்கப் பட்ட்து –முஸ்லிம்களுக்கு தொடர்ந்து தடை
1989 – சிலா நியாஸ்
1990 ரதயாத்திரை
1992 – பாபர் பள்ளி உடைப்பு. தொடர்ந்த கலவரத்தில் 2000 முஸ்லிம்கள் பலியாயினர்
இத்தனைக்குப் பிறகும் இன்று செப்டெம்பர் 24 அலகத் உயர்நீதிமன்றம் வழங்க இருந்த தீர்ப்பை ஏதோ ஒரு அனாமத்து பேர்வழி – ஆர் சி திரிபதி என்பவன் தொடுத்த மனுவை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடைவிதித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு இது ஏமாற்றத்தை தந்தாலும் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நீதியை அமுக்கிவிட முடியும்
முஸ்லிம்கள் தொடர்ந்து நீதி கேட்டு போராடுவார்கள். போராட வேண்டும்
நீதிக்கான போராட்டம் வர்வேற்க்கத்தக்கத
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தார்கள்
قال المقضي عليه : حسبي الله
قال النبي صل الله عليه وسلم : فإن الله يلوم علي العجز، ولكن عليك بالقيس ،واذا غلب عليك امر فقل حسبي الله
தனது கணவர் விசயத்தில் நீதிக்காக போராடிய பெண்மணியின் குரலை அல்லாஹ்
குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான்
قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ
· முஸ்லிம்கள் பொறுமையோடு நீதிக்காக காத்திருக்கவேண்டும். விரக்தி கூடாது.
· அத்தோடு இந்துப் பெரும்கள், இந்த்துத்துவ சக்திகளின் விஷமத்தனாமான விளையாட்டை அடையாளம் கண்டு கொள்ளச் செய்வதற்கான வழி என்ன என்பதை கண்டறிய வேண்டும்
No comments:
Post a Comment