வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, May 18, 2011

உயர் கல்வியில் கவனம் தேவை.


 يَرْفَعْ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ 58:11
தமிழகத்தில் 12 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் தங்களது உயர்கல்விக்கான் தேடலில் இறங்கியுள்ளனர்.

கல்வி கற்கும் மாணவர்கள் வானவர்களின் இறக்கைகளில் பயணிக்கின்றனர்.

வெற்றி பெற்ற் மானவர்களுக்கு வாழ்த்துக்கள்!

உயர்கல்வி தேடும் மாணவர்கள் அனைவருக்கும் குறிப்பாக முஸ்லிம் மாணவர்களுக்கு சிறந்த கல்விக்கான வாய்ப்பை அல்லாஹ் வழங்குவானாக! மாணவர்களின் தேடலை பயனுள்ளதாக்கி அவர்களுடைய பெற்றோர்களின் சுமையை அல்லாஹ் இலேசாக்கி வைப்பானாக!

உயர் கலவியில் அக்கறை செலுத்த வேண்டியது முஸ்லிம் மாணவர்கள் பெற்றோர்களுடைய கடமை.

சமூக பொருளாதார மேம்பாடு உயர் கல்வியைச் சார்ந்தே உள்ளது.

முஸ்லிம் வணிகத் த்ந்தை ஐம்பதாண்டுகளில் சம்பாதித்த பொருளாதார பலத்தை கல்வி கற்ற புதிய தலைமுறை ஐந்தாண்டுகளில் சம்பாதித்து காட்டுகிறது.

அரசின் உயர் பதிவிய்லிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் சொன்னார்;
நானெல்லாம் 10 ஆயிரம் 15 ஆயிரம் பார்க்கவே ரொம்ப காலம் ஆச்சு. என் பையன் கெமிக்கல் இன்ஞினியரிங்க் படிச்சு ஒரு கம்பெனியிலே வேலைக்குச் சேர்ந்தான். தொடக்க்மே 25 ஆயிரம் சம்பளம். ஒரு வருஷ்ந்தான் ஆச்சு. அதுக்குள்ள 45 ஆயிரமா சம்பளத்த உயர்த்திட்டாங்க!

எத்தைன்யோ சாமாண்யக் குடும்பங்கள் தங்களது பிள்ளைகளின் உயர்கல்வியால் வளமடை அதிருக்கின்றன,

சமூகத்தின் மரியாதையும் உயர் கல்வியை பொருத்தே அமைகிறது.
ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், தொழில்நுட்பத் திறனாளிகள் பெருகுவதே இன்றைய சூழலிம் முஸ்லிம் சமுதாயத்தின் மரியாதையை மீட்டெடுக்கும்.
·         அப்துல் கலாம் ஒரு உதாரணம்.
·         யூதர்களுக்கு இன்றை உலகில் கிடைக்கிற மரியாதைக்கு காரணம் அவர்களில் ஆய்வாளர்களும் தொழில் நுட்ப அறிஞர்களும் அதிகமாக இருப்பதே!

இஸ்லாம் உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا என்ற பிரார்த்தனை இரண்டு வழிகாட்டுதல்களை தருகிறது.
கல்வியின் முக்கியத்துவம்
அதில் மேம்பாடு காணும் அக்கறை

நிறைய வேண்டும் என்று ஆசைப் படத்தக்க செல்வம் கல்வி மட்டுமே! அது வரவேற்கப் படும்
பணம் பத்விவிக்கு அதிகம் ஆசைப்படுவது வரவேற்கப் படாது.
பாலைவனத்தில் பள்ளிக் கூடம் இல்லாத சமுதாயத்திலிருந்து வந்த நபியின்
பொன் மொழிகளை  கவனித்துப் பாருங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ -  الترمذي
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ خَرَجَ فِي طَلَبِ الْعِلْمِ كَانَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ - الترمذي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَلِمَةُ الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ فَحَيْثُ وَجَدَهَا فَهُوَ أَحَقُّ بِهَا – الترمذي

நபிகள் பெருமானாரின் சமுதாயம் உயர் கல்வியை தேடுவதில் சளைக்காமல் இடுபட்ட்து அதனால முஸ்லிம்கள் உலகின் அறிவுசார் துறைகளில் முன்னோடிகளாக இருந்தார்கள்.

(பார்க்க! முஸ்லிம் முன்னோடிகளைப் பற்றிய எம் தந்தையர்.. சிந்தனை சரம் கட்டுரை )

ஆண் பிள்ளைகளுக்கு இன்றையை சூழலில் ஒரு பட்டப் படிப்பு கட்டாயமாகும். மருத்துவம், சிவில் இன்ஞினியரிங், மெக்கானிக்கல், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் மட்டுமின்றி அறிவியல் துறைகளிலும் அவர்களை உக்குவியுங்கள்.

வங்கிக் கடன் உதவி, குடும்பத்தில் முதல் பட்ட்தாரிக்கான அரசின் உதவிகளை நாடுங்கள்.

உயர் கல்வி பெறுவதில் பெண்களை விலக்கி வைக்க வேண்டாம். ஆனால் கவனம் தேவை..

ஆயிஷா உம்முசல்மா போன்ற சிறந்த கல்வியாளர்களை உலகுக்கு வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.
பெண்களுக்குத் தகுந்த கல்வியை தேர்ந்தெடுங்கள்
சம்பாதிப்பதை விட சேவையாற்ற உதவுக் கல்வியை அவர்களுக்கு கொடுங்கள்,
பெண்களின் ஒழுக்கம் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதற்கான வாய்ப்பு
இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உயர் கல்வி சிறந்த்து.
உங்களது பெண்குழந்தைகலின் இயல்பை கவனியுங்கள். திருமணத்தை வரவேற்கும் நிலையில் இருந்தால் திருமணம் செய்த்து விடுங்கள்.
இவள் படித்தால் சிறந்த பெண்ணாக வருவாள், இவள் படித்தால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலைகள் இருந்தால் பாதுகாப்போடு படிக்க வையுங்கள்.

பெற்றோர்களின் அளவான சிறந்த போதனைகளும் துஆவும் மாணவிகளுக்கு நேரான வழியை காட்டும்.


உயர்கல்விகுக்கு உதவுங்கள்
உங்களது பகுதியின்/ குடும்பத்தின் வசதியற்ற சிறந்த மாணவரின் கல்விக்கு தாரளமாக் உதவி செய்யுங்கள்
மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேல்பழமொழி
கல்வியைப் பற்றிய பேசிய ஒரு நபி பொழியில் உதவிகள் பற்றியும் பெருமானார் பல அறிவுரைகளை கூறினார்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَفَّسَ عَنْ أَخِيهِ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا قَعَدَ قَوْمٌ فِي مَسْجِدٍ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَحَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ

முஸ்லிம் ஜமாத்துக்கள் தங்களது பகுதியில் அதிக மதிப் பெண் பெற்ற் மாணவ மாணவியரைத் திரட்டி மேற்படிப்புக்கு வழிகாட்டுவதும், தேவைப் படுவோருக்கு பொருளாதார உதவிகளைச் செய்வதும் சமுதாயத்திற்கு காலம் அறிந்து செய்கிற அரிய சேவையாக அமையும்

ஒரு முக்கிய அறிவுரை : கலவி பயனளிக்க வேண்டும்.
எந்த உயர்வி ஆண்பெண் யாருக்கானாலும் அது பயனுள்ளதாக அமைய வேண்டும். ஆக்வே எந்த உயர்கல்வியை தேர்வு செய்வதற்கு முன்பும் அதன் பயனை யோசியுங்கள்

கல்வி உரிய பயனை தரவேண்டும் என்பதே முக்கியம்.
உயர் கல்வி பெற்று வாழ்வில் நேர்வழி பெறாதவர்கள், பெற்றோருக்கு உதவாதவர்கள் சமுதாயத்திற்கு பயனளிக்காதவர்கள்தங்களது வாழ்வை தவறாக முடித்துக் கொண்டவர்கள் பலருண்டு.
இந்தியாவின் சிறந்த இதயமாற்று அறுவை சிகிட்சை நிபுணரான செரியன் சென்னையில் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆகவே! பய்னுள்ள உயர் கவ்வியை தா! கற்ற கல்வியால் பயன்பெற்ச் செய் இறைவா என்று பிரார்த்திக்க் மறக்காதீர்கள்
 عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم سلوا الله علما نافعا وتعوذوا بالله من علم لا ينفع  إبن ماجة

عن أبي هريرة قال كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما والحمد لله على كل حال وأعوذ بالله من عذاب النار

பயனுள்ள் கல்வி பெற ஒழுக்கம் அவசியம்
உயர் கல்வி நிறுவன்ங்கள் பலவும் ஒழுக்க கேட்டின் வாசல்களாக இருக்கின்றன. சில நிறுவன்ங்கள் சுதந்திரமான அணுகுமுறை என்ற பெயரில் அதையே சிறப்பான நாகரீகமாக காட்ட முயற்சி செய்கின்றன. மாணவர்களும் பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டிய விசயம் இது! கல்வி தேடும் முயற்சியில் வாழ்வையும் மார்க்கத்தையும் தொலைத்து விடக்கூட்து,

பல கல்லூரிகளிலும் முஸ்லிம் மாணவர்களே குறும்புக்கார்ர்களாக இருக்கிறார்கள். பெற்றோர்களின் கண்டிப்பு இல்லாத்தே இதற்கு காரணம்.

அல்லாஹ் விசய்த்தில், மார்க்கம் விசயத்தில், பெற்றோர் பெரியோ ஆசிரியர் விசயங்களில், கல்வி சம்பந்தப் பட்ட பணிகளில் ஒழுக்கம் பேணுபவ்ரே வாழ்வில் உயர முடியும், முடிந்திருக்கிறது,

இபுலீஸின் ஒரு உதாரணத்தை நினைவில் இருத்தினால் போதும்
பணத்தை அளவாகவும் பண்பை அதிகமாக கொடுங்கள்

உயர் கல்வியில் அரசின் கடமை
உயர்கல்வியை அரசு கட்டணமயமாக்கிவிட்ட்து. எந்த அடிப்படை உயர்கல்வியையும் கட்டணம் செலுத்தாமல் படிக்க முடியாது. மருத்துவம் பொறியியல் அறிவியல் படிப்புக்கள் அனைத்தும் வியாபாரச் சரக்காக சந்தையில் கூவிக் கூவி விற்கப் படுகின்றன,

அரசியலில் இலஞ்ச இலாவன்யம் பெருக்கெடுத்த்தன் விளைவு இது. கல்லூரிகளுக்கான அனுமதியை அரசுகள் காசு வாங்கிக் கொண்டு வழங்கின. அதிகாரிகள் கொளுத்தனர்.

பல கோடி ரூபாய இலஞ்சமாக பெற்றுக் கொண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழ்ங்கியதாக மெடிக்கல் கவுன்சிலின் தலைவர் கைது செய்யப் பட்ட்து அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

அரசுகள் கல்வித்துறையில் செயல்படவே இல்லை. புதிய கல்வி நிறுவன்ங்களை அரசுகள் தொடங்கவே இல்லை. பழமை வாய்ந்த கல்வி நிறுவன்ங்களுக்கு போதுமான ஆட்கள் இல்லை. பராமரிப்பு இல்லை.

கவர்ச்சிகரமான் இலவ்சங்களின் மூலம் மக்களிடம் வருகிற அரசியல் வாதிகளை  எங்களுக்கு இலவசமாக கல்வியை வழங்கு என்று மக்கள் கேடக் வேண்டும். அதற்கு நிர்பந்திக்க வேண்டும்.

அப்ப்டி ஒரு நிலை வந்தால் அது உண்மையிலேயே பொன்னாள்தான். 

1 comment:

  1. alhamdulillah! fantatic your jumma bayan.

    ReplyDelete