வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 30, 2011

உலமா & உம்மத்


.فاسئلوا اهل الذكر إن كنتم لا تعلمون

قال رسول الله صلى الله  عليه وسلم  :من سلك طريقا يبتغي فيه علما سلك الله به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضاء لطالب العلم وإن العالم ليستغفر له من في السموات ومن في الأرض حتى الحيتان في الماء وفضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر-  ترمذي 2606

عن قيس قال سمعت عبد الله بن مسعود يقول قال رسول الله صلى الله  عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها

عن عتبة بن أبي حكيم عن أبي الدرداء قال وما نحن لولا كلمات العلماء  الدارمي

ஆலிம்களும் சமுதாயமும் என்ற தலைப்பில் இந்த வாரம் ஜுமா உரை அமைகிறது.  இந்த உரையை எனக்காக பேச வில்லை. சமுதாயத்தின் நலன் கருதியே பேசுகிறோம்.

 அரபுக்கல்லூரிகளின்   பட்டமளிப்பு விழாக்கள். தொடங்கி விட்டன .

மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்க், இஞினியரிங்க் படிப்புகளுக்கான கவுன்சிலிங்குகளுக்கு சமூதாயமும் ஊடகங்களும் என்ன முக்கியத்துவம் தருகின்றனவோ அதே அளவுக்கு இல்லாவிட்டாலு ஒரு கால்வாசி அளவுக்காவது முஸ்லிம் சமுதாயம் முக்கியத்துவம் தர வேண்டிய விசயம் இப்பட்டமளிப்பு விழாக்கள்.

கரணம் முஸ்லிம்களின் அன்றாட ஈமானிய வாழ்வுக்கு வழி காட்டுப்வர்கள் புதிய ஆலிம்களாக சமுதாய அரங்கிற்கு வருகிறார்கள்.

ஆலிம்கள் விசயத்தில் சமுதாயம் மக்கள் போதிய அக்கறை செலுத்தாத காரணத்தால் தரமான ஆலிம்கள் பலரும் வேறு வேலைகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய நிலையில் தரமான தகுதியான் ஆலிம்களில் ஆயிரக்கணக்கானோர் வளைகுடா நாடுகளில் அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழகத்திலும் கூட கொஞ்சம் ஆங்கிலத்தை படித்துக் கொண்டு நிறுவன்ங்களில் பணியாற்றுகிறார்கள்.

ஆனால் முஸ்லிம் சமுதாயமோ இது பற்றி கவலை இல்லமல் இருக்கிறது. தகுதியான மார்க்க வழிகாட்டிகள் குறைவது ஆபத்தானது

முஸ்லிம் சமுதாயத்திற்கோ அதனுடைய இமாம்களின் பட்டங்கள் குறித்து தெரியாது.
அதென்ன மொளலவி? பாகவி? மிஸ்பாஹி? மன்பஈ? பாஜில்? முப்தி? ஹாபிழ்?

ஆலிம்களின் பட்டங்களுக்கான விளக்கம்
மொலானா , ஹஜ்ரத் இரண்டும் சிறப்பு அடை மொழிகளாகும். எங்கள தலைவர்உயர் சமூகம் என்று பொருள்

அரபுக்கல்லூகளில் ஏழு ஆண்டு கல்வியை நிறைவு செய்பவாகளுக்கு மௌலவி எனும்  (டிகிரி)  பட்டம் வழங்கப்படுகிறது.  இது மற்ற கல்லூரிகள் வழங்கும் (பேச்சுலர் டிகிரி ) இளநிலைப் பட்டத்திற்கு சமமானது.

மௌலவி எனும் வாத்தைக்கு அறிஞா என்று பொருள். ஆனால் இன்றுள்ள சுழ்நிலையில் சமயப்பட்டதாரி  என்று பொருள் கொள்வதே சரியானது.

அனைத்து அரபுக்கல்லூகளிலும் மௌலவி என்ற பட்டமே வழங்கப்படுகிறது என்ற போதும் அந்தந்ந நிறுவனங்களின் அடையாளப் பெயரும் அப்பட்டத்தோடு இணைத்து சொல்லப்படுகிறது. வேலூ பாகியாதுஸ்ஸாலிஹாத்தில் தேறியவாகள் மௌலவி பாகவி என்றும் லால்பேட்டை மன்பவுல் அன்வா அரபிக்கல்லூயில் தேறியவாகள் மௌலவி மன்பஈ என்றும் அழைக்கப்படுகின்றனா. இதில் மௌலவி என்பது படிப்பபையும் பாகவி மன்பஈ எனும் பெயாகள் படித்த நிறுவனங்களையும் அடையாளப்படுத்துகின்றன.

இதில் முதுநிலை (மாஸ்டர் டிகிரி) பட்டம் பெறுவோ ஃபாஜில் என்று அழைக்க்ப்டுகின்றனர். . சிறப்பு தோவு பெற்றவா என்பது இதன் பொருள்.


மார்க்க கல்வி  பயின்ற ஆலிம்களின் சிறப்பு

ஆலிம்களின்  பொருளாதார பின்னடைவுஅல்லது அகடமிக் கல்வி (BA,MA) இல்லாமை , ஆங்கிலம் தெரியாமைஅல்லது உலக விபரங்களை அதிகமாக தெரிந்திராமை ஆகிய காரணங்களால் அவர்களை குறைவாக மதிப்பிடுவது ஈமானுக்கு அழகல்ல.

قال الله ، قال رسول الله  என்று சொல்லத்தெரிந்திருப்பது  ஒன்றே  எவ்வளவு உன்னதமான தகுதி என்பதை முஃமின்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

தீனின் கல்வி பெற்றவர்களை பெருமானார் (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் எவ்வளவு உயர்வாக் கருதியுள்ளார்கள் என்பதை முஃமின்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

·        عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهُّ فِي الدِّينِ - احمد
·        عَنِ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مَثَلَ الْعُلَمَاءِ فِي الْأَرْضِ كَمَثَلِ النُّجُومِ فِي السَّمَاءِ يُهْتَدَى بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ فَإِذَا انْطَمَسَتْ النُّجُومُ أَوْشَكَ أَنْ تَضِلَّ الْهُدَاةُ  - احمد
·        عَنْ ابْنِ عَبَّاسٍ يَرْفَعُ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ قَالَ يَرْفَعُ اللَّهُ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ عَلَى الَّذِينَ آمَنُوا بِدَرَجَاتٍ -  الدارمي
·        عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ لَقِيَ عُمَرَ بِعُسْفَانَ وَكَانَ عُمَرُ يَسْتَعْمِلُهُ عَلَى مَكَّةَ فَقَالَ مَنْ اسْتَعْمَلْتَ عَلَى أَهْلِ الْوَادِي فَقَالَ ابْنَ أَبْزَى قَالَ وَمَنْ ابْنُ أَبْزَى قَالَ مَوْلًى مِنْ مَوَالِينَا قَالَ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّهُ عَالِمٌ بِالْفَرَائِضِ قَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَالَ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ
·        عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ أَحَدُهُمَا عَابِدٌ وَالْآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالْأَرَضِينَ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ   - الترمذي
·        قال الْفُضَيْلَ بْنَ عِيَاضٍ : عَالِمٌ عَامِلٌ مُعَلِّمٌ يُدْعَى كَبِيرًا فِي مَلَكُوتِ السَّمَوَاتِ

ஆலிம்களால் தான் குழப்பமான் சூழ்நிலைகளிலும் சிக்கலான சந்தர்ப்பங்களிலும் தங்களையும் சமுதாயத்தையும் பாதுகாக்க முடியும்

عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَكُونُ فِتَنٌ يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا إِلَّا مَنْ أَحْيَاهُ اللَّهُ بِالْعِلْمِ   - إبن ماجة

ஆலிம்கள் சமுதாயப் பணி பிரதானமானது.

சமுதாயத்தை இஸ்லாத்தின் அடிப்படையில் வாழவைத்துக் கொ ண்டிருக்கிறார்கள். சமுதாயத்திற்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லி, அல்லாஹ் ரஸூலைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்து  நபிமார்களின் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.


மார்க்க ரீதியாக சமுதாயத்திற்கு ஏற்படுகிற பிரச்சினைகளை மட்டுமல்லாது சமூக அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களுக்கு வழிகாட்டுபவர்களாக ஆலிம்கள் இருந்தார்கள்.

இந்திய சுதந்திரப் போராட்ட்த்தின் போது ஆலிம்களின் வழிகாட்டுதலே பிரதானமாக இருந்த்து.
லிபியாவின் சுதந்திர்தப் போராட்ட வீர்ர் உமர் முக்தாரும் ஒரு ஆலிமே!
இன்று மலேஷியாவில் வெற்றிகரமாக இஸ்லாமிய ஆட்சிமுறையை அமுல்படுத்திக் கொண்டிருக்கிற மாநில முதல்வர்கள் சிலரும் ஆலிம்களே!

பல முஸ்லிம் நாடுகளின் அரசியல நிர்ணயச் சட்ட உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் ஆலிம்களே இருக்கிறார்கள்.

ஆபாகானிஸ்தானில் அரசிய்ல தலைமை சீர்குலைந்த போது தாலிபான்கள் அங்கு அரசமைப்பை நிறுவினார்கள்.
.
இப்போதும்கூட மேடைகளில் நீட்டி முழுக்குகிற பிரமுகர்கள் பலரும் ஆலிம்கள் மனதுவைத்தால் தான் இது நடக்கும் என்று பல விசயங்களையும் பற்றி பேசுவதை கேட்க முடியும்.  

ஆனால் அப்படி பேசுகிறவர்களும் கூட ஆலிம்களுக்கு தரப்பட வேண்டிய மரியாதை குறீத்து வாய்திறப்பதில்லை.

ஆலிம்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ள சமுதாயமும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் கூட   நேரத்திற்கு தொழ வைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
தங்களது சொல்பேச்சை கேட்டு ஆலிம்கள் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர ஆலிம்கள சொல்வதை கேட்டு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பதில்லை.

இந்தியாவின் சமூக அமைப்பில் ஜமீந்தாரித்தனம் ஒழிக்கப் பட்டு விட்ட்து என்றாலும் பள்ளிவாசல்களில் ஜமீன்தாரித்தனம் இன்னும் இருக்கிறது.

நிர்வாகிக்குப் பிடிக்கவில்லை என்றால் அடுத்த வக்துக்கு இமாம் வீட்டுக்கு அனுப்ப்ப்படுகிறார்.

சாதாரண கூலியாளைவிட (ஒரு பெயிண்டர், பிளம்பர், சேல்ஸ்மேன்)
மிக்குறைவாக ஊதியம் பெற்றுக் கொண்டு மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருப்ப்வர்களை அந்த குறைந்த ஊதியத்தின் காரணமாகவே சமுதாயம் எள்ளி நகையாடுகிறது.

அதனால் சமுதாயத்தின் வழிகாட்டிகளான அவர்கள்  காலத்தின் கோலத்தினால் பணம், அதிகாரத்திற்கு குற்றவேள் செய்பவர்களாக ஆக்கப் பட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட ஓரிரு விதிவிலக்குகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் பூமியின் மேற்பர்ப்பில் வாழும் அல்லாஹ்வின் ஆட்கள் ஆலிம்களே
إنما يخشي الله من عباده العلماء  

எங்களுடையை உஸ்தாத் குடிப்பதற்கு வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வருவார். மதராஸாவின் தண்னிர் மாணவர்களுக்குரியது என்பார்.

பிரச்சினை எங்கு தொடஙகுகிறது?

ஆலிம்கள் சேவையாகத்தான் பணியாற்றுகிறார்கள். சமுதாயம் அதை வேலையாகப் பார்க்கிறது.
சமுதாயம் யோசித்துப் பார்க்க வேண்டும். திடகாத்திரமான இளைஞர்கள் ஒரு கடைகு வேலைக்குப் போனால் கூட எவ்வளவு சம்பாதிக்கலாம் அதை விடுத்து இந்த சேவைக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் தாங்கள் பார்க்கிற பணியை வேலையாகவா கருதிகிறார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவர்கள் சேவை செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டால் அதற்குரிய மரியார்தையை கொடுக்க வேண்டும்.   

சமுதாயத்திற்கு ஆலிம்கள் மீது ஒரு குறை.இருக்கிறது?   
சத்தியத்தை துணிந்து சொல்வதில்லை. காலத்திற் கேற்ப் பேசுவதில்லை.


இந்நிலை மாற முதல் ஸ்டெப் எடுக்க வேண்டியது சமுதாயமே!
-சமுதாயத்திலிருந்து தான் ஆலிம்கள். சமுதாயம் தான ஆலிம்களை உருவாக்குகிறது. ஆலிம்களில் குறை என்றால் அது சமுதாயத்தின் குறை தான்.
-ஒரு நிறுவனம் தனக்காக ஒருவரை தேர்வு செய்தவுடன் அவருக்கு பயிற்சியளிக்கிறது.
-ஆலிம்களிடம் நூல்கள் இல்லை. அங்கிருந்து அவர்கள்  விசயங்களை திரட்டுவார்கள்?  இப்போது தரப்படுகிற சம்பளத்தில் ஒரு பேப்பர் வாங்குவது கூட ஆடம்பரமாகிவிடுகிறது.

--ஆலிம்கள் விசயத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளாத ஒரு சமுதாயம் தன்னைத் தற்காத்துக் கொள்ளாத சமுதாயமே!

அவர்களை திறனாளர்களாக ஆக்க வேண்டிய கடமை சமுதாயத்தினுடையது. அவர்களை விமர்ச்சிக்க நினைக்கும் எவரும் முதலில் அவர்களது மேம்பாட்டிற்கு நாம் என்ன செய்தாம் என்பதை ஒரு நிமிடமாவாது யோசித்துப் பார்த்து விட்டு பிறகு பேசட்டும்.

உதவி கேட்டு வருகிறார்கள் என்பதற்காக மலிவாக கருதி விடாதீகள். நமது பிள்ளைகளுக்கு கலிமா சொல்லிக்கொடுப்பவர்கள் .நமக்கு மார்க்கத்தை சொல்லித்தருபவர்கள் அவர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்
.
ஆலிம்கள் பற்றி குறை பேசியவருக்கு அஃலா ஹஜ்ரத் சொன்ன பதில் : வக்கீலிடம் ஆடிட்டரிடம் காசு கொடுக்காமல் வேலை நடக்குமா?

தங்களுக்காக சேவயாற்றுபவர்கள் என்ற கண்ணோட்டத்திற்கு சமுதாயம் மாறும் என்றால் ஆலிகளின் சேவையின் தரமும் உயரும்

ஆலிம்கள் திறமையாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிற உண்மையான முஃமின்களுக்கு ஒரு தாழமையான வேண்டுகோள்.

ஆலிம்களை அவமதிப்பதை, அவர்களை இலேசாக மதிப்பிடுவதை அல்லாஹ்வுக்காக நிறுத்திக் கொள்ளுங்கள்.

அவர்களை மேம்படுத்த உண்மையாக என்ன செய்யலாம் என்பதை அக்கறையாக யோசியுங்கள்.

அவர்களை உங்களுடைய சகோதர்ர்களில் ஒருவராக கருதி பிரச்சினைகளை யோசித்துப் பாருங்கள்.

நமக்கு இமாமத் செயவதற்கு இவரை அல்லாஹ் கொடுத்திருக்கிறான் என நினைத்து அவர் விசயத்தில் சமுதாயம் நடந்து கொண்டால் நிச்சயமாக சமுதாயத்தில்   ஆலிம்களின் தரம் உயரும். சமுதாயத்தின் தரமும் உயரும்.

இமாம்களையும் ஆலிம்களையும் நாம் மதிப்போம். அது மார்க்கத்தின் மீது நாம் கொண்டிருக்கிற மரியாதையின் அடையாளமாகும்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!

2 comments:

  1. அஹமது11:17 PM

    அற்புதமான உரை

    ReplyDelete
  2. Anonymous9:22 AM

    السلام عليكم ورحمة الله وبركاته

    كل عام وانتم بخير بمناسبة اليوم الوطني

    انا مسرور بملاقاتكم الكريمة عبر فيس بوك ، ونود اعلام لسماحتكم بان خطبتكم المنبرية على موضوع "علماء والأمة " هذه جيدة وثورة .
    ولكم جزيل الشكر

    المولوي صدقة الله الباقوي

    ReplyDelete