வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 22, 2011

கல்யாண வைபோகமே


ரமலான் முடிந்த கையோடு திருமண வைபவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

இந்த ஆண்டு எனக்கு வருத்தமளித்த ஒரு முக்கியச் செய்தி ;

ஷவ்வால் மாத்த்தின் ஆறு நோன்பு முடிவதற்குள்ளாகவே மூன்று திருமணங்கள் நடைபெறுவதாக அழைப்பிதழகள் தெரிவித்தன.

ஒரு அவசரம் அவசியம் என்றால் ரமலான் மாத்தில் கூட திருமணத்தை நட்த்தலாம், ஏன் ஹஜ் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருக்கிற போது கூட திருமணம் செய்யலாம். தடை ஏதும் இல்லை. (இஹ்ராமில் தாம்பத்யம் மட்டுமே கூடாது)

மார்க்கத்தின் அடையாளமாக இருக்கிற சுன்னத்தான நோன்பின் காலங்களில் - ஷவ்வால் மாதத்தின் முதல் ஆறு நாட்கள், முஹர்ரம் 9, 10- ஷஃபான் 15 - திருமணத்தை தவிர்த்துக் கொள்வது இஸ்லாமிய கலாச்சாரமாகும்.

ஒரு திருமணம் சுன்னத்தான நோன்பிற்குரிய காலஙகளில் வைக்கப் பட்டால் குறைந்த பட்சம் 30 பேர் நோன்பு பிடிப்பது தடைபடும். இந்த செயல் அதிகரிக்கிற பட்சத்தில் சுன்னத்தான நோன்பு நாட்களை சமூகம் மறந்து விடவாய்ப்பு உண்டு.

கல்யாண மண்டபங்கள் கிடைப்பதை காரணமாக் சொல்லி சுன்னத்தான நோன்பிற்குரிய நார்ட்களை விருந்திற்குரிய நாட்களாக மாற்றது முறையா? என முஸ்லிம்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு வேளை அப்படித்தான் வைத்தாக வேண்டுமென்றால் திருமண வைபவத்தை அல்லது விருந்தை இரவுக்கு மாற்றிவிட வேண்டும்.

அதிகப்படியான செலவு

இஸ்லாமிய திருமணத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று  
செலவே இல்லாத திருமண வைபம்.

மஹ்ரை தவிர தாலிக் கயிறு, மாலை வாங்குகிற செலவு போன்ற கட்டாயச் செலவு எதுவும் இஸ்லாத்தில் இல்லை. மஹர் கூட மணப் பெண்ணின் விருப்பத்தின் படி மிக குறைந்த பட்சமான ஒன்றாக - அது  கூட பின்னர் வழங்கப்படுவதாக இருக்கலாம். இல்லை எனில் மனம் விரும்பி ரஜா செய்யப்படலாம்,

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ فَقَالَتْ إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا لِي فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ زَوِّجْنِيهَا قَالَ أَعْطِهَا ثَوْبًا قَالَ لَا أَجِدُ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَاعْتَلَّ لَهُ فَقَالَ مَا مَعَكَ مِنْ الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ زَوَّجْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ.
மார்க்கம் எளிமைப் படுத்தியிருக்கிற  ஒரு காரியத்தை முஸ்லிம் சமுதாயத்தை சிரமமானதாக மாற்றி வருகிறது. தேவையற்ற செலவுகள் ஒரு கடமை போல செய்யப்படுகின்றன.  சில இலட்சங்களாவது இருந்தால் தான் ஒரு திருமணத்தை நடத்த முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய பற்றுக் கொண்டோர் திருமணத்தை எளிமையாக நடத்த முயற்சி செய்ய வேண்டும்.

இன்றைய திருமணங்கள் குடும்பத்தின் பெறுமையை வெளிப்படுத்த உதவும் கருவிகளாகி விட்டன. பகட்டும் பட்டோபடமும் கோலோச்சுகிறது.

நினைவிருக்கட்டும்! பரக்கத் வேண்டுமெனில் எளிமை அவசியம்.
திருமண வைபவத்தின் நோக்கம் என்ன? மணமக்கள் நல் துஆ வை பெறுவது!
சிறப்பான திருமணம் எது? மணமக்கள் பரகத்தாக வாழும் திருமணமே!

அது எதில் கிடைக்கும்?

قال النبي : اعظم النكاح بركة أيسرها مؤنة – اوكما قال

எளிமையாக திருமணம் செய்கிற அனைவரும் மிகிழத்தக்க ஆசீர்வாதம் இதை விட வேறில்லை.

மிக எளிமையாக திருமணம் செய்திருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) யைப்பார்த்து பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன துஆ தான்
بارك  الله لك ،،،

ஆடம்பரத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
إن الله لا يحب المسرفين

ஆடம்பரத்தை மக்களும் விருபுவதில்லை. நீங்கள் கொடுப்பதை எல்லாம் சாப்பிட்டு விட்டு பணத் திமிர் என்று குறை பேசி விட்டுச் செல்வார்கள்

எது ஆடம்பரம் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. வரையறுத்துச் சொல்லவும் முடியாது. ஆட்களையும் வசதியையும் பொறுத்து இது மாறுபடும்.

பைவ் ஸ்டார் ஓட்டல்பணக்காரருக்கு சாதாரணம். சாமான்யனுக்கு ஆடம்பரம்.

தேவைக்குச் செய்வது ஆடம்பரமாகாது. பெறுமைக்கும் வீண்விரயமாகவும் செய்வது ஆடம்பரமாகும் 
அதிக வசதி படைத்தவர் சாதரணமாக விருந்து கொடுத்தால் கஞ்சன் என்று உலகம் பேசும்

أما  بنعمة ربك فحدث

ஆனால் திருமண அழைப்பிதழில் தொடங்கி , மண மேடையை அலங்கரிப்பது வரை ஒவ்வொன்றிலும் தேவைக்கு மீறிச் செலவு செய்வது ஆடம்பரமாகும்.

சாமாண்யர் தகுதிக்கு மீறிச் செய்தால் அது ஆடம்பரம். கடன் வாங்கி கஷ்டத்தில் சிக்கி ஏன் பரகத் இல்லாத வேலையை செய்ய வேண்டும்.

ஆடம்பரம் சோதனைகளுக்கு காரணமாக அமையும். அல்லாஹ்வின் சோதனைக்கும் அரசாங்கத்தின் சோதனைக்கும்.
அரசாங்கத்தின் சோதனையை தாங்கிக் கொள்ளலாம். அல்லாஹ்வின் சோதனையை தாங்க முடியாது.
முஸ்லிம்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது  அல்லாஹ் ஒரு துஆ வைக் கற்றுக் கொடுத்தான். 
وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين(147)  3

இஸ்ராப் சோதனைக்கு காரணமாகும் என்பதை இது உணர்த்துகிறது.
பணக்காரர்கள் எளிமையாக செய்கிற திருமணம் அதிகம் பாராட்டப்படும். பேசப்படும்.
திருமணத்தில் ஏழை பணக்காரன் வித்தியாசம் கூடாது. பாகுபாடு கூடாது.
ஒரு முஸ்லிம் ஊரில் தனித் தனி பத்ரிகை அடிப்பது பழக்கம். ஒரு பெரும் பணக்காரர் அதை மாற்றி ஒரே பத்ரிகை அடித்தார். அதன் பிறகு ஊர் நடைமுறையே மாறிவிட்டது.
எனவே செல்வந்தர்களுக்கு இதில் அதிக பொறுப்பும் நனமையும் உண்டு. அவர்களைப் பார்த்து மற்றவர்கள் செய்வார்கள்.
ஹிர்கலுக்கு எழுதிய கடிதத்தில் பெறுமானார் சொன்னார். : உங்களுக்கு இரண்டு கூலி
மாக்கத்திற்கு முரணாணதை தவித்துவக் கொள்ளுங்கள் :
எது மாக்கம் அனமதிக்கிற செயல் என்பதை  அறிவது பெரிய ஆய்வுக்குய விசயமல்லல.
வாழை மரம் நடதல் பந்தக்கால் நடுதல் ஆராத்தி தேங்காய் சுற்றுதல்
மருதாணி  - மாலை - தாலி - செயின்  ஏனிந்த முரண்பாடு தடுமாற்றம். 
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى على عبد الرحمن بن عوف أثر صفرة قال ما هذا قال إني تزوجت امرأة على وزن نواة من ذهب قال بارك الله لك أولم ولو بشاة
மாப்பிள்ளை மாலை அணிவது தவறல்ல.
அப்துர ரஹ்மான் ரலி மீது மாப்பிள்ளைக்கான அடையாளம் இருப்பதை பார்த்தே பெருமானார் வாழ்த்தினார்கள்.
நீங்கள் விருந்தில் கலந்து கொள்பவராக இருந்தால்  -சிரமம் தராதீகள் - முறையான அழைப்பின் போல் கலந்து கொள்ளுங்கள். மச்சான்கள் சம்பந்திகள் படுத்தும் பாடு - 
மணமக்களுக்காக துஆ செய்யுங்கள்                
عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم أعلنوا هذا النكاح واجعلوه في المساجد واضربوا عليه بالدفوف  ترمذي

ஆராத்தி அனுமதிக்கப்பட்ட விசயமில்லை
மணப்பெண் மாப்பிள்ளை ஒரே  மேடைஏவ்யில் நிறுத்துவது இஸ்லாமிய நாகரீகம் அல்ல. தேவை எனில் விருந்தினர்கள் வெளியேறிய பிறகு குடும்பத்தினர் மட்டுமே இருக்கிற போது பெண்ணை மேடைக்கு அழைத்துக் கொள்ளலாம்.
வீடியோவில் கவனம் அதை  சுற்றுக்கு விடாதிர்கள்  - அது குமுதம் பத்ரிகை அல்ல. பார்வைகள அனைத்தும் நல்லவையாக இருக்க முடியாது.
يأتيك البر والفاجر     என்று பெருமானாரிடமே உமர் (ரலி) கூறினார். அப்போது தான் பர்தாவுக்கான சட்டமே அருளப்பட்டது.
இளைஞாகளுக்கு ஓரு ஆலோசனை இரண்டு விசயங்களுக்காக காசு சோத்து வையுங்கள் மஹா  லீமா விருந்து

No comments:

Post a Comment