ياأيها المدثر(1)قم فأنذر(2)وربك فكبر(3)وثيابك فطهر
உலக சுகாதார தினம் சமீபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. அப்போது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வாழவேண்டும் என்பதும் அதற்கான வழி முறைகளும் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டன.
21 ம் நூற்றாண்டிலும் சுகாதாரத்தைப் பற்றி பாடம் நட்த்த வேண்டியிருக்கிறது.
சாப்பாட்டையும் தண்ணீரையும் போல மிக அத்தியாவசிய வாழ்வாதராமாக சுத்தமும் சுகாதாரமும் உணரப்பட வேண்டும்.
இஸ்லாம் அத்தகைய முக்கியத்துவத்தை கொடுத்தது.
பெருமானாருக்கு முதல் வஹியுக்குப் பின் 3 ஆண்டுகள் வஹி வரவில்லை. فترة الوحي
அதற்குப்பின் அருளப்பட்ட முதல் வசனத்தில் சுத்தம் பற்றி உத்தரவிடப்பட்ட்து.
அதுவும் இறை வணக்கத்திற்கு அடுத்தபடியாக
ياأيها المدثر(1)قم فأنذر(2)وربك فكبر(3)وثيابك فطهر
இஸ்லாமிய சட்டநூல்களில் முதல் பாடமே சுத்தம் தான்
தொழுகைக்கு சுத்தம் அவசியம் என்பதால் முஸ்லிம் தன் உடல் உடை விசயத்தில் சுத்தத்தைப் பற்றி அதிக விழிப்போடு இருக்க கடமைப் பட்டிருக்கிறார்.
உலகம் அசுத்தமாக நினைக்கிற காரியங்களில் மட்டுமல்லாது அதற்கு மேலும் இஸ்லாத்தில் சுத்தத்தின் அளவுகோல் கடுமையாக இருக்கிறது.
طاهر مطهر- طاهر غير مطهر – نجس என்றெல்லாம் தண்ணீரை தரம்பிரித்திருக்கிறது இஸ்லாம்.
உலகின் மற்ற சமயங்கள் - நடுகளில் பலவற்றிலும் சுத்தம் பார்க்கப்படுவதில்லை.
ஓளுவையும் குளிப்பையும் பர்ளாக – சுன்னத்தாக - முஸ்தஹப்பாக இஸ்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
சிறு நீர் விச்யத்தில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் ஒன்று போதும் இஸ்லாத்தில் சுத்தம் பற்றிய விழிப்புணர்வுக்கு எடுத்துக்காட்ட.
தூங்கி எழுந்தவுடன இரண்டு கைகளை கழுவிகொள்ள பெருமானார் வலியுறுத்தினார்கல்
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ
கூக்க சுத்தம் செய்த பிறகு அக்குலில் கை வைத்த பிறகு வியர்க்கும் பகுதிகளி அசுத்தம் சேறும் இடங்கலில் கை வைத்த பிறகு கையை சுத்தம் செய்வது இந்த வகையில் சுன்னத்தாக அமையும்.
சாப்பாட்டிற்கு முன் கை கழுவ வேண்டும் அதன் பின்னும் கை கழுகவேண்டும் என்பதை முஸ்லிம்களிடமிருந்தே ஐரோப்பியர்கள் அறிந்கொண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. .
மூக்கை சுத்தம் செய்வதற்கும் இஸ்லாம் கூறியது.
சுத்தம் விசயத்தில் பெருமானாரின் மற்ற பல்வேறு வழிகாட்டுதல்களும் கவனிக்கத்தக்கவை
عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم عشر من الفطرة قص الشارب وإعفاء اللحية والسواك واستنشاق الماء وقص الأظفار وغسل البراجم ونتف الإبط وحلق العانة وانتقاص الماء قال زكرياء قال مصعب ونسيت العاشرة إلا أن تكون المضمضة زاد قتيبة قال وكيع انتقاص الماء يعني الاستنجاء
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة
عن المقدام بن شريح عن أبيه قال قلت لعائشة بأي شيء كان يبدأ رسول الله صلى الله عليه وسلم إذا دخل بيته قالت بالسواك
عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال الغسل يوم الجمعة على كل محتلم والسواك ويمس من الطيب ما قدر له
عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان
இன்றைய மருத்துவம் கூறுகிறது.
சுத்தமின்மை தான் நோய்களுக்கு காரணம்
பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததினால் ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரி சிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு (டூத் டிகே), வயிற்றுப்போக்கு (டையேரியா) மற்றும் இரத்தபேதி (டிசென்டரி) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் சரியில்லாததினால் ஏற்படுகிறது. இவ்வகை நோய்கள் அனைத்தையும் உடலை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ள பழகுவதின் மூலம் ஏற்படாமல் தடுக்கலாம்.
கண், காது மற்றும் மூக்கை சுத்தம் செய்தல்
|
வாயினை சுத்தம் செய்தல்
| |
· தோல் பராமரிப்பு
|
· கைகளைக் கழுவுதல்
|
· மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது சுத்தம் செய்தல்
|
இனப்பெருக்க உறுப்புகளின் தூய்மை
| |
சுத்த்த்திற்கு இஸ்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. இதை உலகம் பாராட்டுகிறது.
கல்லூரி மாணவர்களுக்கான ஒரு கலந்துறையாடுகளுக்கு நான் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன்.
உன்னுடைய சமயம் அல்லாத பிற சம்யத்தில் உனக்கு பிடித்த அம்சம் எது என்று ஆசிர்யர் மாணவர்களிடம் கேட்டார்.
பலரும் இஸ்லாத்தை சொன்னார்கள். ஒரு இளம் பெண் : பாலை வனத்தில் உருவான ஒரு சமயம் சுத்த்த்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது என்று சொன்னாள்.
ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்கள் வசிக்கும் இடங்கள் தான் சுத்தமில்லாத சுகாதாரக்கேடாக இருக்கின்றன.
இலண்டனில் இஸ்லாமை தழுவிய ஒரு தம்பதி முஸ்லி நாட்டில் வாழ ஆசைப் பட்டு பாகிஸ்தானில் குடியேறினர்.
இரண்டே மாத்தில் இலண்டன் திரும்பி விட்டனர். ஒரு பேட்டியில் முஸ்லிம்களின் சுகாதாரமற்ற நடைமுறையை தங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தொடர்ந்து முஸ்லிம்களாக இலண்டனிலேயே வாழப்ப்போவதக அறிவித்திருந்தனர். இஸ்லாம் சுத்த்த்தை இவ்வளவு தூரம் வலியுறுத்துகிற போது முஸ்லிம்களிடம் அந்த கவனம் இல்லாத்த்து வருத்தமளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இப்போதும் முஸ்லிம்களி வாழ்விடங்கள் சுகாதாரமற்ற பகுதிகளாக இருப்பது வருந்த்த்தக்கது.
இந்நிலை மாற மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும்.
No comments:
Post a Comment