வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 13, 2011

உள்ளாட்சித் தேர்தலின் உன்னதம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களில் 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் ,

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து, 618 ஊராட்சிகள் உள்ளன

மொத்தம், 1 லட்சத்து, 30 ஆயிரத்து, 962 பதவிகள் உள்ளன.

மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு இம்முறை நேரடி தேர்தல் நடக்கிறது. துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி துணை தலைவர்கள், மாவட்டம், ஒன்றிய துணை சேர்மன் பதவிகளுக்கு வழக்கம்போல் மறைமுக தேர்தல் நடக்கவுள்ளது.

ஒரு இமாம் - முஸ்லிம்களுக்கு வழிகாட்ட கடமைப்பட்டவன் -  என்ற முறையில் இத்தேர்தல் தொடர்பாக சில கருத்துக்களை இன்று உங்களுக்கு முன் வைக்கிறேன்.

தேர்தல்களில் ஓட்டளிப்பது மார்க்க கடமைகளில் ஒன்று.


شهادة ة ،شفاعة ، وكالة ،    என்ற மூன்று அடிப்படைகளில் ஓட்டளிப்பது கடமையாகிறது என முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் – (பாகிஸ்தான்) யூசுப் அல் கர்ளாவி (கத்தர்) போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ(8) المائدة
مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا(85) النساء


இந்த வசனங்களின் பின்னணியில்
(சாட்சியத்தை நிறவேற்ற வேண்டும், பொய் சாட்சி கூடாது., சாட்சியத்தை மறைக்க கூடாது, காசு வாங்க கூடாது)
·         ஓட்டளிப்பது கடமை
·         தகுதியான நல்லவருக்கே ஓட்டளிக்க வேண்டும்
·         காசு வாங்கிக் கொண்டு ஓட்டளிக்க கூடாது.
·         தங்களுக்கு வேணிடியவர் என்பதற்காக தவறானவர்களை ஆதரிக்க கூடாது.
போன்ற பல சட்டங்களை அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَفَعَ لِأَحَدٍ شَفَاعَةً فَأَهْدَى لَهُ هَدِيَّةً فَقَبِلَهَا فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ الرِّبَا(احمد)


விவரமற்ற, ஆவேசப்பேர்வழிகள் சிலர் தேர்தல் நடை முறை இஸ்லாமிய நடைமுறை அல்ல என்று சொல்லி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். மக்கள் அத்தகையவர்களை புற்க்கணிக்க வேண்டும். அவர்கள் கருத்துக் குருடர்களாவர். இன்றுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடைமுறையை விட்டால் மாற்று ஏற்பாடு என்ன என்று அவர்களிடம் கேட்டால் அவர்களால் பதில் சொல்ல முடியாது. அல்லது காரியச் சாத்தியமற்ற பதிலை சொல்வார்கள்.

நகர கிராம் உள்ளாட்சி அமைப்புக்களின் முக்கியத்துவம்.


இப்போது நடைபெறுகிற தேர்தலை உள்ளாட்சித் தேர்தல் தானே என்று அலட்சியமாக நினைத்து விடக்கூடாது.

நகர கிராம் உள்ளாட்சி அமைப்புக்கள்தான் இந்திய ஜனநாயக அமைப்பின் உயிர்நாடியாகும். ஜனநாயகத்தின் நாடித் துடிப்பாகவே உள்ளாட்சி நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புக்கள் சீராக இருந்தால் மட்டுமே ஜனநாயகம் சிறப்பாக திகழ முடியும்.

மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை நேரடியாக அனுக முடிந்த இன்றைய ஒரே வாய்ப்பு உள்ளாட்சி அமைப்புக்களாகும்

நம்மில் ஒவ்வொருவருடையவும் வீட்டுக்கு உள்ளே வெளியே உள்ள பிரச்சினைகளோடு நெருங்கிய தொடர்புடையவராக உள்ளாட்சி உறுப்பினர் இருக்கிறார்.

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் பலவும் உள்ளாட்சி அமைப்புக்கள் மூலமாகவே நிறைவேற்ற்ப்படுகின்றன்

உதாரணத்திற்கு  மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத்திட்டம், ஜவஹர் லால் நேரு நகரமைப்புத்திட்டம் போன்ற அதிக நிதி ஒதுக்கீடு கொண்ட திட்டங்கள்- உள்ளாட்சி அமைப்புக்கள் மூலமாகவே நிறைவேற்றப்ப்டுகின்றன். குறிப்பாக மத்திய அரசின் நலத்திட்டங்கள் பலவும் உள்ளாட்சி அமைப்புக்கள் மூலமாகவே நிறைவேற்றப்ப்டுகின்றன்.

( நகராட்சி உறுப்பினர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெட்கமின்றி கூட்டணி அமைத்துக் கொண்டு இந்த நிதியை கையாடல் செய்வதில் மிகவும் கவனமாக் இருக்கின்றனர். )  



நமது மக்கள் அனைவரும் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே பார்வை கொண்டுதான் பார்க்கின்றனர். நாடாளுமன்றத்தின் பணி என்ன, சட்டப் பேரவையின் பணி என்ன, உள்ளாட்சி நிர்வாக அமைப்பின் பணி என்ன, அதிகாரங்கள் என்ன? என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை.

அப்படிப்பட்ட விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் விரும்புவதில்லை.

மக்கள், தங்களுக்கான நிர்வாக அமைப்பை உள்ளாட்சித் தேர்தலின் மூலம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டு, அடிப்படை அதிகாரங்கள் அவர்களிடம்  வழங்கப்பட்டுள்ளன
இந்த நாட்டில் ஒவ்வொரு பஞ்சாயத்தையும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி, பதவிக் கபளீகரம் செய்துகொண்டு, உள்ளாட்சிகள் மூலம் நிறைவேற்றப்படக் கூடிய திட்டங்களுக்கான நிதியை கையாடி கொழுத்துவிட்டு
இராஜீவ் காந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட  பஞ்சாயத்து ராஜ்ய சட்டம் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு மிக அதிக உரிமைகளை வழங்கியுள்ளது. மாநில் அரசுகள் அவற்றை தர மறுத்து தொடர்ந்து உள்ளாட்சிகளுக்கான நிதிகளை வேட்டையாடி வருகின்றன.

உள்ளாட்சி நிர்வாக சபையை கட்சிக்கு அப்பாற்பட்டு உருவாக்க வேண்டும்

உள்ளாட்சி அதிகாரத்தை அரசியல் கட்சிகளுக்கு தாரை வார்த்து விடுவதால் ஏற்படும் அபாயத்திற்கு  ஒரு எடுத்துக்காட்டு,

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட வடசேரியில் 2009ஆம் ஆண்டு நடந்த காவல் துறை - பொதுமக்கள் மோதலாகும்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் அங்கு நிர்மாணிக்க திட்டமிட்ட எரிசாராய ஆலைக்கு அந்த ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆட்சேபனை ஏதும் இல்லை என்று சான்றிதழ் (No Objection Certificate - NOC) அளித்துவிட்டார். அவர் ஆளும் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றவர். அவர் அளித்த சான்றிதழைக் கொண்டு எரிசாராய ஆலையை நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்படி எரிசாராய ஆலை அமைக்கப்பட்டால்,

அதற்குத் தேவைப்படும் தண்ணீரை பெரும் ஆழ்துளைக் குழாய்கள் மூலம் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். எவ்வளவு தண்ணீர்? ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய ஒன்றே முக்கால் இலட்சம் லிட்டர் தண்ணீர் எரிசாராய ஆலைக்குத் தேவைப்படுகிறது.

ஒரு நாளைக்கு இந்த அளவிற்கு தண்ணீரை எடுத்தால், நிலத்தடி நீரை நம்பியே தாங்கள் செய்யும் உழவுத் தொழில் என்னாவது என்ற கலங்கிய வடசேரி மக்கள் ஒன்று திரண்டு போராட ஆரம்பித்தனர். ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருந்ததால், அரசு இயந்திரம் எரிசாராய ஆலை அதிபருக்கு சாதாகமாகவே நின்றது. மக்கள் கருத்து கேட்க வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், எரிசாராய ஆலைக்குள் அமர்ந்துகொண்டு, கருத்துக் கூற மக்களை அழைத்தது! உள்ளே வந்தால் உதைத்து நொருக்கிவிடுவது என்று ஆலை அதிபர் ஏற்பாடு செய்துவைத்த அடியாட்கள் இருந்தனர். மக்கள் உள்ளே வந்து கருத்துக் கூற மறுத்து மறியலில் ஈடுபட்டனர். காவல் துறை வந்தது. ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்று பாராமல் அனைவரையும் அடித்து, துவைத்து எடுத்துவிட்டது. இத்தாக்குதல் அனைத்தும் நாளிதழ்களிலும் செய்தியானது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் அந்த கிராம மக்களுக்கு உள்ளாட்சி அமைப்பின் அதிகாரம் அரசியல் கட்சியின் கைகளுக்குச் சென்றுவிட்டால், பிறகு தங்களுடைய வாழ்வாதரத்திற்குக் கூட பாதுகாப்பு இருக்காது என்பதை உணர்ந்தனர். அதன் பிறகு ஊரே ஒன்று திரண்டு நீதிமன்றத்திற்கு சென்று போராடிக் கொண்டிருக்கிறது.

இப்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கிராமத்து மக்கள் தங்களுக்குள் முடிவு செய்து, ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட அனைத் தொகுதிகளுக்கும் பொது வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சி நிர்வாகம் தங்கள் கையில் இருக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் முற்றிலுமாக உணர்ந்துள்ளனர். நமது நாட்டின் ஒவ்வொரு கிராமத்தினரும் இந்த உண்மையை உணர வேண்டும். உள்ளாட்சி என்பது மக்கள் ஜனநாயகத்தின் மிக அடிப்படையாக நிர்வாக அமைப்பாகும். இதனை கட்சி அரசியலிற்கு பலியிட்டுவிடக் கூடாது.

நகராட்சி வார்டுகள் என்பது சில்  ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாகக் கொண்டவையே, இவைகள் அப்பகுதி வாழ் மக்கள், தங்களிடைய உள்ள நேர்மையான, நிர்வாக அனுபவமுடையவரை நிறுத்து கைப்பற்றிட வேண்டும். சிற்றூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றை அக்கறையுள்ள மக்கள் பிரதிநிதிகளை நிறுத்தி கைப்பற்ற வேண்டும். அப்படி கைப்பற்றினால் மட்டுமே உண்மையான மேம்பாடு சாத்தியப்படும்.

நமது நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் என்றைக்கு முழுமையாக, முழு அதிகாரம் பெற்றவையாக மக்கள் கையில் வந்து சேருகிறதோ அன்றைக்குத்தான் உண்மையான மக்கள் ஆட்சி என்பது மலரும்.

மக்களும் தங்களுக்கு உள்ள நிர்வாக அதிகாரத்தை உணர்வர். இந்த நிலையை எட்டுவதற்குத் தடையாக நிற்பவையே அரசியல் கட்சிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவைகள் ஒருபோதும் மக்களுக்கு அதிகாரத்தை வழங்க மாட்டா. எனவே, மக்களாக முடிவெடுத்து, தங்களுக்குறிய அதிகாரத்தை தஙகள் வாக்கைக் கொண்டே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த உள்ளாட்சித் தேர்தலின் முக்கிய அம்சங்களில் ஒன்று

கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.  மக்கள் தங்களது பகுதிக்கு நன்மை செய்யும் ஒருவ்ரை தேர்ந்தெடுப்பதற்கு அற்புதமான சமயம் வாய்த்துள்ளது,  

நகர மக்களுக்கு அறிமுகமானவர், நகரத்துக்கு நன்மை செய்பவர் எனற நிலை மாறி அரசியல் கட்சித் தலைவரின் இரண்டாவது மணைவிக்கு நெருக்கமானவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்ப்படுவதை தடுக்க ஒரு நல்ல சமய்ம் வாய்த்துள்ளது,

மக்கள் இதை பயன்படுத்திக் கொண்டால் நல்ல் மாற்றம் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


வார்டு  கவுன்சிலர் ஆளுங்கட்சியை சேர்ந்தவராக இருந்தால் தேவைகளை விரைவாக நிறைவேற்றுவார் – கோரிக்கைகளை வாதாடிப் பெற்றுத்தருவார் என்று பிரச்சாரம் செய்யப் படுகிறது.

அது வெற்றுப் பேச்சே தவிர வேறில்லை. காசு சேர்க்கவும், ஊரை வளைத்து நில அபகரிப்பில் ஈடும்படவும் தான் ஆளும்கட்சி செல்வாக்கு உதவியது என்பது கடந்த கால வரலாறு.

ஆகவே கட்சி அடிப்படையில் வாக்களிக்காமல்

நீங்கள் தேர்ந்தெடுக்க நினைக்கும் வேட்பாளர்

·         பேச்சாளரையோ சிந்தனையாளரையோ விட செயலாற்றல் உள்ளவரா?
·         நல்லவரா ? தரமானவரா?
·         சாலை வசதி குடிநீர் வசதி சாக்கடை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை கவனிக்க தகுந்த்வரா
·         கூப்பிட்ட குரலுக்கு உண்மையிலேயே ஓடோடி வருவாரா?
·         சமூக அக்கறை கொண்டவரா?
·         சமுதாயத்தில்  மரியாதைக்குரியவரா?
·         சமுதாய பெரியவர்களையும் மதிப்புமிக்க ஜமாத்து அமைப்புக்களையும் மதித்து நடப்பவரா?
·         முஸ்லிமாக இருந்தால் தொழுகையாளியா?
·         எல்லாவற்றிற்கும் மேலாக,  தன்னுடை சொந்த மேம்பாட்டிற்காக இல்லாமல் நகரத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பாரா

என்பதை எல்லாம் எண்னிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

பல் பேருக்கு இடையே யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்படுவது சகஜம் தான். ஆனாலும் யாரை தேர்ந்தெடுத்து விடக்கூடாது என்பதை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கிக் கொண்டே வந்தால் தகுதியான ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்து விடலாம். இந்த அளவுகோள்களின் அதற்கு உதவும்.

இது இஸ்லாம் கற்றுத்தரும் வழிமுறையாகும். திருமணம் யாரை செய்து கொள்ளலாம் என்பதை கூறுமிடத்து யாரை திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லி விட்டு இவர்களல்லாத மற்றவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று திருக்குர் ஆன் கூறுகிறது.

இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பல பகுதிகளிலும் திட்டமிட்டு சதி செய்ய்ப்பட்டுள்ளதால் பல இடங்களிலும் முஸ்லிம்கள் ஒன்றினைந்து பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். அநீதி இழைக்க்ப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக கருதி அந்த வேட்பாளரை ஆதரித்து அந்தப் பகுதியில் உள்ள தங்களது செல்வாக்கை காட்ட முஸ்லிம்கள் முன்வரவேண்டும். அந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்

வீட்டில் உள்ள பெண்களுக்கு தகவலை எடுத்துச் சொல்லி அத்தகைய வேட்பாளரின் சின்னத்தை விளக்கி அவர்களுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு கீழ்காணும் இணைப்பில் உள்ள குறிப்புக்களை கவனிக்கவும்
தமிழக் உள்ளாட்சித் தேர்தல் 2011 
ஜனநாயகம் சீர் செய்யப்பட வேண்டு
ஜனநாயகத் திருவிழா 
 



No comments:

Post a Comment