வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 20, 2011

ஹஜ் பயணிகள் கவனிக்கவும்


அல்லாஹ்வின் கிருபையால இந்த ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்ட்து.

இறையடியார்கள் சுமர் 40 லட்சம் பேர் ஓரிட்த்தில் ஒரே மாதிரி ஆடையில் ஒரே கோஷத்தோடு ஒரே உணர்வோடு ஒன்று கூடும் பக்திப் பெருவிழா ஹஜ்.

உலகின் மிகப்பெரிய மக்கள் திரட்சி என்று ஊடகங்கள் குறிப்பிடுகிற மக்கள் கூட்ட்த்தில் இணைந்து கொள்ள முஸ்லிம்கள் வாழ்கிற பகுதிகள் எங்கும் இருந்து கூட்டம் கூட்டமாக ஹாஜிகள் கிளம்பி வருகின்றனர். 

நேற்று வரை 737,226. பேர்  உலகின்  பல பாகத்திலிருந்தும் சவூதி வந்து சேர்ந்து விட்டன.

ஆகாய மார்க்கமாக்  731,892 பேரும்  தரைமார்க்கமாக 16,017 பேரும்  கடல்மார்க்கமாக்  7,317பேரும்  சவூதிக்கு வந்துள்ளதாக சவூதி அரசு அறிவித்துள்ளது.

ச்வூதி அரேபியாவின் விமானம் நிறுவனம் மட்டுமே 1.244 விமான்ங்கள் மூலம் 20 லட்சம் ஹாஜிகளை சவூதிக்கு அழைத்து வர இருக்கிறது.

சவீதி மன்னர் இந்த ஆண்டு தன்னுடைய சார்பாக 1400 பேரை ஹஜ்ஜுக்கு அழைத்திருக்கிறார்.

இந்தியாவிலிருந்து 285 விமான்ங்கள் மூலம் 80150 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக சவூதியில் உள்ள இந்திய தூர்தரகம் தெரிவிக்கிறது.

மக்காவிலுள்ள 7000  பல அடுக்கு மாடி ஓட்டல்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு விட்ட்தாக மக்கா சேம்பர் ஆப் காமர்ஸீன் சேர்மன் குரேஷி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் விமானம் கோலிக் கோட்டிலிருந்து மதீனா சென்றடைந்து இருக்கிறது.

ஹாஜிகள் அல்லாஹ்வின் குழுவினர்.

عن أَبي هُرَيْرَةَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفْدُ اللَّهِ ثَلَاثَةٌ الْغَازِي وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ -  النسائي

அல்லா நாடியவர்களுக்கு மட்டுமே இந்த தூதுக்குழ்வில் இடம் கிடைக்கிறது.

ஹஜ் என்ற வார்த்தைக்கு மக்கா நகரிலுள்ள கஃபா ஆலயத்திலும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் குறிப்பிட்ட சில நாட்களில் தங்கி சிறப்பு வழிபாடுகளை நிறைவேற்றுவதற்காக பயணித்தல் என்பது பொருள்.

இதை முஸ்லிம்களின் இறுதிக்கடமை என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. அது தவறானது.

 ஹஜ்ஜுக்கு அப்பாலும் ஒரு முஸ்லிம் நிறைவேற்றியாக வேண்டிய கடமைகள் ஏராளம் உண்டு. அது போல ஹஜ் கடமையை நிறைவேற்றும் வசதி வந்தவிட்டால் வாழ்நாளின் இறுதி கட்டத்திற்கு என்று அதை ஒத்திவைக்கக் கூடாது உடனே நிறைவேற்றி விடவேண்டும்


பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கஃபா ஆலயத்iயொட்டி ஹஜ் உம்ரா ஆகிய கடமைகள் நிறைவேற்றப்பட்டு வந்தது என்றாலும் காலப்போக்கில் அதன் அடிப்படை அம்சங்களில் தூய்மையும் வாய்மையும் அற்ற சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. ஹீஜ்ர்p ஒண்பதாம் ஆண்டில் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதில் தகுந்த சீhத்திருத்தங்களை செய்து இஸ்லாமிய உம்ரா இஸ்லாமிய ஹஜ் என்பதற்கான வரையரைகளை ஏற்படுத்தினார்கள். அன்றிலிருந்து இடைவெளியில்லாது ஹஜ் கடமையை முஸ்லிம்கள் மிகுந்த உற்காசத்தோடும் பக்தியுணர்வோடும் நிறைவேற்றி வருகிறார்கள்.

ஹிஜ்ரீ 1432ம் ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்டது.


இந்த ஆண்டு நேபாளத்திளிருந்து புறப்படுகிற ஹாஜிகளை வழியனுப்ப வந்தவர்கள் அழுகிற காட்சியை பத்ரிகைகளை படம் பிடித்துப் போட்டிருந்தன்.
Hajj pilgrims cry as they prepare to depart for Mecca from the Tribhuvan International Airport in Kathmandu
என்று  செய்தி வெளியிட்டிருந்தன நேபாளத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இப்படித்தேன்,

ஹஜ் வியனுபபு விழாக்களில் ஹஜ் பயணம் செல்வோர் மட்டுமல்ல வழியனுப்புவோர் கூட ஒரு வித கிளாச்சியோடும் உற்சாகத்தோடும் பங்கே;றபது இந்த விழாக்களின் சிறப்பம்சம்.
க்தியுமு; கிழ்சியும் கண்ணீராக பெருக்கெடுக்கிற தருணம் அது.

ஹாஜியை வழியனுப்புகையில் அவரிடம் ;களுக்காக துஆ செய்யுங்கள் என்று கேட்பது பெரமானாரின் வழிமுறை.

ஊமர் (ரல) அவர்களிடம்  உங்களுடைய பிரார்த்தனையில் எங்களை மறந்துவீடாதீர் சகோதரரே என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வழியனுப்புவோர் பல்வேறுபட்ட கோரிக்கைகளுக்காக பிரார்த்தன செய்ய கேட்டுக்கொள்வார்கள். ஆனால் ஹாஜிகள் அத்தனைபேரும் ஒரே ஒரு கோரிக்கை முன்வைத்து மற்றவர்களை தங்களுக்காக பிராhத்திக்ச் சொல்வார்கள். எங்களது ஹஜ் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைய வேண்டும் அதற்காக துஆ செய்யுங்கள் என்றே கேட்பார்கள்.

இது ஈமானிய குணம். உன்னதமான மனிதர்களின் வழிமுறை. நபி இபுறாகீம் (அலை) கஃபாவை கட்டி முடித்தபிறகு இப்படித்தான் பிரார்த்தனை செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنْ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ(127)رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ(128)

இது பற்றிய கவலை ஒரு ஹாஜியின் சிந்தனையை எந்த நேரமும் ஆக்ரமித்து கொண்டிருக்க வேண்டும்.
ஏனெனில் ஓரு முஸ்லிம் ஹஜ்கடமை நிறைவேற்றுவதற்காக வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து செய்யப்படுவதாக இருந்தாலும் சரி அந்தச் செலவு பிரதானமல்ல. என்னுடைய நண்பர் ஒருவர் இந்தோனேஷியால் கல் வியாபாரம் செய்பவர்;;. ஜகார்த்தாவில் தங்களது வியாபார நிறுவனத்தை விற்றுவிட்டு அதில் கிடைத்த பணத்தை கொண்டு ஹஜ் செய்ததை தான் நேரில் பார்த்ததாக கூறினார். ஏங்களுரில் இந்த ஆண்டு ஹஜ்கடமை நிறைவேற்ற இருக்கிறவர்களில் ஒரு தம்பதியினர் தங்களது பெரிய வீட்டை விற்று ஹஜ்ஜுக்கு செல்கின்றர். ஓரு பெண்மணி தன்னிடமிருந்த நகைகளை விற்று ஹஜ்ஜுக்கு செல்கிறார். ஆயினும் இநத்தகைய செலவுகளால் ஒரு ஹாஜி மகிமை அடைந்துவிடுவதில்லை.
அதுபோலவே பாலைவனத்தின் வெயிலும் குளிரும் அச்சம் தருகிற அளவு ஆபத்தானவை. அத்Nதூடு அந்தக் கூட்டமும் சாமாண்யர்களை மிரள வைக்கக் கூடிய அளவு நெருக்கடி தரக்கூடியது அதனால் ஹாஜி அனுபவிக்கிற சிரமங்கள் ஏரளமானவை என்றாலும் அந்தச் சிரமம் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய சிரமங்களை தாங்கிக் கொள்வதால் ஒரு ஹாஜி சிறப்புற்று விடுவதில்லை.
ஹஜ்ஜுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதோ எத்தகைய சிரமங்களை ஏற்கிநோம் எக்பதோ பெரிதல்ல. அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பிரதானம் என்பதை ஒவ்வொரு ஹாஜியும் உணர்ந்திருக்கிறார் அதனால் தான் எந்த ஒரு மனிதரைச் சந்தித்தாலும் அவர் சிறியவரோ பெரியவரோ அங்கீகரிக்ப்பட்ட ஹஜ்ஜுக்காக பிரார்த்தியுங்கள் என்று கேட்க அவர் தயங்குவதில்லை. இந்தச் செலவுகளும் சிரமங்களும் அப்பொது தான் அர்த்தம் உடையதாக அமையும் என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் ஹஜ் அங்கீகரிக்ப்படுவது என்பது இரண்டாம் மனிதரின் பிராhத்தனையோடு சம்பந்தப்பட்டிருப்பதை விட ஹஜ்ஜுக்கு செல்வோரின் சிந்தனையோடும் செயலோடும் தான் அதிக தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை ஹாஜி புரிந்து கோள்ள வேண்டும்.

ஒரு நற்செயல் இறைவனது அங்கீகாரத்தை பெறவேண்டுமானால் அதைற்கு தேவையான அம்சங்கள் என்ன? என்பது குறித்து மழு விழிப்புணர்வும் அவரிடம் இருக்க வேண்டும்.
ஹஜ்ஜின் போது கைகொள்ள வேண்டிய விஷேசமான கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் எச்சரிக்கை அடைய வேண்டும். இந்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தான்; அதிக செலவு பிடிக்கிற சிரமமான ஹஜ் என்கிற கடமையை ஹஜ்ஜன் மக்பூலன் மப்ரூரன் அங்கீகரிக்ப்பட்ட நல்ல ஹஜ் என்ற அந்தஸத்திற்கு எடுத்துச் செல்லக் கூடியவை.

ஹாஜி அன்று பிறந்த குழந்தை போல வீட்டுக்கு திரும்புகிறார் என்ற நபிமொழியை கவனித்தப் பாருருங்கள்.

عن أَبي هُرَيْرَةَ  رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ
நூல புகாரி -1521)

இந்நபி மொழியில் கூறப்பட்டுள்ள இரண்டு அம்சங்கள் எந்த நிலையிலும் ஹாஜி நினைவில் வைக்க வேண்டியவை.

முதலாவது, ஹஜ் அல்லாஹ்வுக்காகவே நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த வாசகம் ஒரு முஸ்லிம் அடிக்கபடி கேள்விப் படுகிற அல்லது உபயோகப்படுத்தகிற வாசகம் எனினும் அவர் அதிகமாக மாறுகிற விசயமும் இது தான்

ஹாஜி இந்த ஏமாற்றுத்திற்கு ஒரு போதும் ஆளாகிவிடக் கூடாது. நான் அல்லாஹ்விற்காக இந்தக் கடமையை நிiவேற்றுகிறேன் என்பதை திரும்பத்திரும்ப அவருக்கே கேட்கிற வகையில் அவர் சொல்லிக் கொள்வது நல்லது. இஹ்லாஸ் என்ற எண்ணத்தூய்மை பெற அது உதவும்.
ஹஜ்ஜுக்காக தயாராகிக் கொண்டிருப்போர் இரவு நேரத்தில் தனிமையில் அல்லது தஹஜ்ஜது தொழுது விட்டு உட்கார்ந்து கொண்டு நான் ஏன் ஹஜ்ஜுக்குப் போகிறேன்எனற் கேள்வியை தமக்குள் கேட்டுக் கொள்ள் வேண்டும்

நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது என்பதோ, பணவசதி இருப்பதால் கிடைத்த வாய்ப்பு என்றோ, ஒரு சுற்றுலா அனுபவம் என்றோ, ஹாஜி என்ற பட்டம் கிடைக்கும் என்றோ அல்லது எந்தச் சிந்தனையும் அற்ற ஒரு கிளாச்சியூட்டும் பயணமாகவோ ஒரு ஹாஜி தன் பயணத்தை அமைத்துக் கொண்டு விடக் கூடாது. இது அல்லாஹ்வுக்கான பயணம். மனிதர்களிடமிருந்து கிடைக்கிற எந்தப் புகழும் மரியாதையும் என்கு பிரதானமல்ல. இதன் நற்கூலியை நான் மறுமையில் எதிர்பார்க்கிறேன் என்கிற விசயத்தை அறிவும் மனதும் தெளிவடையும் வண்ணம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது தன்னுடைய ஹஜ் அங்கீகரிகப்பட வேண்டும் என்று நினைக்கிற ஒரு ஹாஜியின் முதல் கடமையாகும்.

ஏகிப்து நாட்டைச் சார்ந்த துன்னூன் (இறப்பு ஹி 245) என்ற பெருந்தகை உள்ளத்துஸய்மையோடு ஒரு காரியம் நிறைவேற்றப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள மூன்று அடையாளங்களைச் சொல்கிறார்.

1.       மக்களிடமிருந்து கிடைக்கிற மரியாதை அவமரியதை இரண்டையும் சமமமாக கருதுதல்
2.       நான் நற்செயல் ஒன்று செய்தேன் என்ற எண்ணத்தை மறந்தவிடுதல்
3.   நற்செயலுக்கான பிரதிபலனை மறுமையில் எதிர்பார்த்தல்.

ஓரு ஹாஜி இந்த அளவுகளில் தனது உள்ளத்த}ய்மையை அளவிட்டுக் கொள்ளலாம். தேவயானால் சீர்செய்தும் கொள்ளலாம். ஒரு உன்னதமான வணக்கம் வெறும் பகட்டாக இல்லாமல் உரிய உயரிய அந்தஸ்த்தை பெற இது உதவும்.

நபிமொழி தருகிற இரண்டாவது எச்சரிக்கை ஹாஜி, ஹஜ்ஜை மாசுபடுத்துகிற செயல்களை செய்யக் கூடாது.
ஹாஜி அவர் செல்லும் இடத்தின் புனிதத்தனமையை எல்லா நிலையிலும் மனதில் நிறுத்த வேண்டும். மக்காவும் மதீனாவும் சட்பூர்மாக புனித இடங்களாக அறிவிக்கப்பட்டவை. அங்கு செய்யப்படகிற நற்செயல்களுக்கு அதிக மரியாதை உண்டு.

إِنَّمَا أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَذِهِ الْبَلْدَةِ الَّذِي حَرَّمَهَا وَلَهُ كُلُّ شَيْءٍ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنْ الْمُسْلِمِينَ((27:91)
)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். ஏனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூழய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்தவதோ இங்குள்ள மரம், செடி கொடிகளை வெட்டுவதொ அனுமதிக்கப்படவில்லை.
மற்றொரு நபிமொழி பின்வரமாறு கூறுகிறது
அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான் எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போர் செய்வது) அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக்கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது. எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது. யாரெனும் தவறவிட்ட பொருட்களை அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக்வுடாது. என்று நபி (!ல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே, எங்;கள் அடக்கக் குழிகளுக்கும் கொல்லத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகின்ற இத்கிர் வாசனைப் புல்லைத் தவிரவா, என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இத்கிர் எனும் புல்லைத் தவிர என்று கூறினார்கள்.
வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது என்பதன் பொருள் நிழலில் படுத்திருக்கும் அதை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தங்குவதுதான் என்று அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள்; விளக்கம் கூறினார்கள். (புகாரி 1833
قَالَ إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ فَلَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا وَلَا يَعْضِدَ بِهَا شَجَرَةً فَإِنْ أَحَدٌ تَرَخَّصَ لِقِتَالِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا فَقُولُوا إِنَّ اللَّهَ قَدْ أَذِنَ لِرَسُولِهِ وَلَمْ يَأْذَنْ لَكُمْ وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ ثُمَّ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالْأَمْسِ وَلْيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றொரு சமயம் மக்காவை பார்த்து பின்வருமாறு கூறினார்கள்.இது பூமியிலுள்ள சிறந்த இடமாகும். அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமான இடமாகும். நூன் நிர்பந்மாக வெளியேற்றப்படடிருக்காவிட்டால் இந்த இடத்திலிரந்து வெளியேறியிருக்க மாட்டேன் (அஹ்மது)


மக்காவைப் போலவே மதீனாவும் புனித பூமி என்ற சிறப்புத் தகுதியை சட்டரீதியாக பெற்றுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரும் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹத் மலை தென்பட்டது. உடனே, இந்த மலை நம்மை நேசிக்கின்றது நாமும் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா நகரைப் புனிதமானதென அறிவித்தார்கள். நான் இரு மலைகளுக்கு இடையில் இருக்கும் மதீனா நகரை புனிதமானதென அறிவிக்கிறேன் என்று சொன்னார்கள். (புகாரி 7333)

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அதன் மரம் (எதுவும்) வெட்டப்படக் கூடாது. அதில் யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகின்றானோ அவன் மீது அல்லாஹ் வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும் என்று கூறினார்கள்.

மதீனாவின் ஒரு பகுதியை சொர்க்கத் தோட்டம் என்று பெருமானார் (ஸல்)அவர்கள் அறிவித்துள்ளார்கள். என் வீட்டிற்கும் என் சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடையே சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்;கா உள்ளது. என் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எனது (கவ்ஸர்) தடாகத்தின் மீதுள்ளது. என்று அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் (புகாரி 7335)

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தெழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர. ஏன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 1190)

இது போல இன்னும் ஏராளமான நபிமெழிகள் மக்கா மதீனா நகரின் புனிதத்தன்மையை பற்றியும் அங்குநடற்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் பேசுகின்றன. எனவே ஒரு ஹாஜி இது அல்லாஹ்வினாலும் அல்லாஹ்வின் தூதராலும் புனிதப்படுத்தப்பட்ட இடம் என்ற மரியாதையை மனதில் இருத்திச் செயல்பட்டால் அவரது ஹஜ் அங்கீகாரம் பெறத்தேவையான அம்சங்கள் அனைத்தும் அவரிடம் தானவே வந்துவிடு;ம்.

புனிதமான இடங்களில் நற்காரியங்களுக்கு அதிக நன்மை கிடைப்பது போலவே தீயசெயல்கள் பெருங்குற்றங்களாக ஆகிவிடும் ஆகவே ஹாஜி ஹஜ்ஜுக்கு ஊறுவிளைவிக்கும் செயலையம் செய்யக் கூடாது. பிற ஹாஜிகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயலையும் செய்யக் கூடாது.

இதிலும் எச்சரிக்கை மிகவும் அவசியம். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் சாஹிப் சமீபத்தில் தான் ஹஜ்ஜீக்கு சென்ற போது முதல் நாளில் நடற்த அதிர்சிசியான தொரு அனுபவத்தை சொன்னார். அவர் உணவருந்துவதற்காக ஹஜ் சேவை நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு சென்ற போது அங்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டிருக்கிறது. ஒரு பெரியவர் தனக்குப் பக்கத்தில் உள்ள இடத்தை வேறு யாரும் உட்கார்ந்து விடாதபடி துண்டை போட்டு ஒதுக்கீடு செய்து வைத்துள்ளார். அருகில் போய் யாரும் இங்கு வருகிறார்களா என்று கேட்டிருக்கிறார். அது தான் விவகாரமாகிவிட்டது. அந்தப் பெரியவர் வாயில்வந்தபடி கெட்ட வார்த்தைகள் பேச ஆரம்பித்திருக்கிறார். அவ்வார்த்தைகளை கேட்டு அந்த சாப்பாட்டு அரங்கமே அதிர்ச்சியல் உறைந்துவிட்டது என்று அவர் சொன்னார்.

பெருமானாரின் தோழர்கள் எப்படி நடந்த கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிப்பது ஹாஜிகளுக்கு போதுமான எச்சரிக்கை தரும்.

அப்துல்லாஹ்பின உமர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வருகிற பொது ஹரமுடைய எல்லைக்கு வெளியே ஒரு கூடாரம் அடித்து வைத்திருப்பார்கள். தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவதானால் அந்த இடத்திற்கு வந்தவிடுவார்கள். பணியாளர்களை கண்டிக்கிற பொது தடிப்பமான வார்த்ததைகள் வந்துவிடக்கூடும். அவ்வார்த்தைகள் ஹரமின் புனிதன்மைக்கு புறம்பானதாகி தனது குற்றம் பெரிதாகிவிடக்கூடும் என்பதற்காக இவ்வாறு செய்வார்கள் என வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

எனவே ஹாஜி இஹ்ராமுடைய நிலையில் மனைவியோடு சல்லாபிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பது போலவே சக ஹாஜிகளுக்கு சங்கடம் தருவதையும் தவிர்கக வேண்டும். வார்த்தகைளால் வழக்ககாடுவதை தவிர்க்க வேண்டும்.

அந்தப்புனித பூமியில் நிறைந்து காணக்கிடைக்கிற அல்லாஹ்வின் அற்புதங்களை ஹாஜி எண்ணிப்பார்ப்பது அவரது அந்த பகுதியின் கனபெருமானத்தை அவர் நினைவில் நிறுத்த உதவும்.

கஃபாவே ஒரு அதிசயம். அதைப் பார்த்தவர் பார்த்துக் கெர்ண்டே இருக்கிறார். சலிப்பே ஏறபடுவதில்லை. கஃபாவை மக்கள் திரும்கத்திரும்ப வரும் இடமாக தான் ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். (2.125)

இபுறாகீம் (அலை) அவர்கள் கஃபாவை கட்டுகிற போது ஏறி நின்ற ஒரு கல்லில் அவரது பாதச் சுவடுகளை பதிய வைத்த இறைவள் அந்தக்கல்லை இன்று வரை அங்கு பாதுகாத்து வைத்திரக்கிறான்.

லட்சக்கணக்கான மக்கள் மக்காகவில் ஆண்டுதோறும் கூடுகிறார்கள். அங்கே அமைதி கொலுவிருக்கிறது. உடலுக்கும் உள்ளத்திற்கும் அது அமைதியையும் பாதுகாப்பையும் தருகிறது.

உலகின் பல பாகத்திலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் அங்கு வந்து கூடுகிறார்கள்.அவர்களுக்குததேவையான உணவு தண்ணீர் உறைவிட வசதிகளுக்கு எந்தக குறைவும் எற்படுவதில்லை. அவரவர் கலாச்சாரத்திற்கேற்ற உணவையும் வசதியைiயும் அங்கு பெற்றுக் கொள்கிறார்கள். மனித நெருக்கடியை தவிர வேறு எதற்கும் அங்கு நெரக்கடி இல்லை. போக்குவரத்து வசதிக்கும் குறை இல்லை. செல்போன் சிக்னலில் கூட நெரக்கடி இல்லை. இதற்காககவெல்லாம் சவூதி அரசாங்கம் பெரும் முயற்சி எடுக்கிறது என்ற போதும் அந்த அரசாங்கமே கூட இது அத்தனையும் தனது முயற்சியால் நடக்கிறது என்று நம்பாது.

இத்தனை அதிசயங்களையும் கண்ணால் பார்க்கிற ஹாஜி தான் அல்லாஹ்வின் புனித பூமிக்கு தோந்தெடுத்து அழைத்துவரப்பட்டுள்ள பாக்கியசாலி என்ற எண்ணத்தை நினைவில் நிறுத்தி தனக்கான நேரத்தையும் வாய்பபையும் பயன்படுத்திக் கொள்வாரானால் அவர் மினா மைதானத்தில் சைத்தானை நோக்கி எறிகிற சிறுகற்களை மலக்குகள் எடுத்துச் செல்வார்கள். அது அவரது ஹஜ் அங்கீகரிக்ப்பட்டது என்பதற்கான அடையாளம்.

லட்சக்கணக்கானோர் கோடிக்கணக்கான பொடிக்கற்களை ஜம்ராவிலுள்ள தூனை நோக்கி எறிகிறார்கள். அங்கு வீசப்படுகிற கற்கள் என்னவாகின்ற என்று நபித்தோழர் அபூஸஈதில் குத்ரீ (ரலி)அவர்கள் பொருமானாரிடம் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். யாருடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானோ அவர் வீசும் கற்களை மலக்குகள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். (மஆரிபுல்குர்ஆன். பாகம் 1 பக்கம் 88)
தான் வீசிய கல் எங்கே சென்றது என்பதை ஹாஜி தன் கண்ணால் பார்க்க முடியாது என்றாலும் அது எங்கெ சென்றிருக்கக் கூடும் என்பதை தனது நடைமுறைகளை வைத்து அவர் யூகித்துக் கொள்ள முடியும்.

ஹஜ் பயணிகளுக்கான இந்த அலோசனைகள் ஹஜ் செல்ல நாடி இருப்பவர்களுக்கும் பொருந்தும். ஹஜ்ஜுக்கான  ஆசையை மனதில் குடியமர்த்துகிற போதே இந்த அறிவுரைகளையும் அவர் பத்திரப்படுத்தி வைத்து கொள்வது நல்லது.

இன்றைய சூழ்நிலையில் ஹஜ் ஒரு வியாபாரமாக பேசனாக ஆகிவிட்ட்து.. ஹஜ்ஜுக்காக தயாராகிறவர்களிடமும் ஹஜ் ஏற்பாட்டாளர்களிடமும் அடிப்படையான தக்வாவை பார்க்க முடிவதில்லை. இலஞ்சம் கொடுத்தாவது ஹஜ்ஜுக்கு சென்று விட வேண்டும் என்று ஆசைப்படுவதும், எப்படியாவது காரியத்தை சாதித்து விட வேண்டும் என்று ஹஜ் நிறுவன்ங்கள் நினைப்பதும் சகஜமாகிவிட்ட்து.
  

இந்த ஆண்டு ஹஜ் விசா பிரச்சினையில் தலையிட்ட மும்பை உயர்நீதிமன்றம் விஐபிகளுக்கான ஹஜ் கோட்டா சம்பமாக அற்புதமாக ஒரு தீர்ப்பை சொல்லி இருக்கிறது.

 The Apex Court termed the VIP quota for Haj pilgrims as a “bad religious practice.” Taking exception to the government quota for the Haj pilgrims, the court said: “May be it has a political use but it is a bad religious practice. It is not really Haj.”

இந்திய அளவில் வழங்கப்பட்ட மிக முக்கியமான தீர்ப்பு இது. இந்தியாவில் முக்கிய பிரமுகர்களுக்கு என்று சுமார் 800 ஹஜ் கோட்டக்கள் ஒதுக்க்க்ப்பட்டுள்ளது. வசதி படைத்த பலர் இதைப்பயன்படுத்தி இலவசமாக ஹஜ் செய்து வந்தனர். மட்டுமல்ல முறைகேடாக விற்றும் வந்தனர்.
நீதிபதி அல்தாப் மிகச்சரியாக இதை : மார்க் நெறிமுறைகளுக்கு எதிரானது –இது ஹஜ்ஜே அல்ல என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல இனி அடுத்த ஆண்டு முதல் ஹஜ் கோட்டா வழங்கும் நடைமுறைக்கான சட்டவிதியை  இனி உச்சநீதிமன்றமே இயற்றும் என்று உச்சநீதிமறம் கூறியுள்ளது.

The Supreme Court of India has taken the responsibility of laying down the Hajj policy for the year 2012 on itself,

அல்லாஹ் இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு செல்வோர் அனைவருக்கும் ஹ்ஜ்ஜை இலேசானாதாக ஆக்குவானாக. ஹஜ்ஜை ஏற்றுக் கொள்வானாக! அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது குடும்பத்தையும் வியாபார தொழில் நிறுவன்ங்களை அவனே பாதுகாப்பானாக!



No comments:

Post a Comment