وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنْ اتَّبَعَكَ مِنْ الْمُؤْمِنِينَ( الشعراء 215)
وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ( المائدة 42)
يَادَاوُودُ إِنَّا جَعَلْنَاكَ خَلِيفَةً فِي الْأَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعْ الْهَوَى فَيُضِلَّكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنَّ الَّذِينَ يَضِلُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ بِمَا نَسُوا يَوْمَ الْحِسَابِ( ص 26)
அதிகாரம்
மக்களை அடக்கத் தெரிந்திருப்பது, அவர்களை சுரண்டுவது, பொது நிதியை கையாடி தம்முடைய சொத்துக்களை பெருக்கிக் கொள்வது, பதவியை சுக வாழ்வு வாழ்வது ஆகியவையே தற்காலத்தின் அதிகாரத்தின் அடையாளங்களாக அமைந்துவிட்டன.
கவுன்சிலர், எம்.எல்.ஏ. எம்.பி. அமைச்சர் என கீழிருந்து மேல்வரை இந்த சிந்தனை யோடுதான் பொறுப்பேற்கிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்க வந்த கவுன்சிலர்கள் சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் வாடகை வாகனத்திலும் வந்தனர் என்று நேற்றையை பத்ரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் வருகிறவர்கள், வீடு நிலங்கள், கார் வசதி பற்றிய கன்வோடுதான் வருகிறார்கள் என்பதும் அவர்களது பதவிக்காலம் முடிவதற்குள் அதை பெற்றுவிடுவதையே இலக்காக நினைக்கிறார்கள். அதற்கு அதிக்மாகவும் பெற்று விடுகிறார்கள் என்பது எதார்த்தம்.
இதில் மிகப்பெரிய கொடுமை என்ன என்றால் பொதுமக்களாகிய நாம் இதெல்லாம் சகஜம் என்ற மனோநிலைக்கு வந்து விட்ட்துதான்.
இந்த மனோநிலை ஊழலை விட மிக்க் கெட்ட்து. சீர்திருத்த்திற்கான வாசலையே அடைத்து விடும்.
இது பற்றி குறைந்த பட்ச கோபமும் வெறுப்பும் சமூகத்தில் இல்லாமல் போகும் என்றால் அது நல்ல சமூகம் அல்ல. பெருமானாரின் (ஸல்) அறிவுறை.
مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ - مسلم – 70
இஸ்லாம் கூறும் ஒப்பற்ற தத்துவம் - அதிகாரம் என்பது சேவை செய்வதற்கே!
سيد القوم خادمهم
அதிகாரப் பொறுப்பில்ருப்பவர்களுக்கு இந்த உலகில் மரியாதைக்கிடைக்கிறது என்பது மட்டுமல்ல நாளை மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்தும் கூலியும் உண்டு.
நாளை மறுமையில் அல்லாஹ்வின் அர்ஸுக்கு கீழே நிழல் பெறும் 7 நபர்களில் முதலாவது இடம் பிடிப்பவர் أمام عادل நீதமான தலைவர் என்று பெருமானார் குறிப்பிட்டார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ
நீதி உணர்வுதான். பொறுப்பான மனிதனுக்கு அடையாளம்,
நான் யார்? யாருக்கு கடமைப் பட்டவன்? எப்படி நடந்து கொள்ள கடமைப் பட்டவன் என்பதை அறிதல் நீதியின் முதல் படி.
உமர் (ரலி) அவர்களுக்கு நீதியில் இத்தனை பிடிப்பு ஏற்பட அவரது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு காரணமாக அமைந்த்தாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
இஸ்லாத்திற்கு முன் உமர் (ரலி) ஒரு முறை வெளிநாட்டுக்கு வியாபாரத்திற்கு சென்ற போது அவரது பணம் களவு போனது. மன்னரிடம் முறையிட்டார். அந்த ஊரிலேயே இரண்டு நாள் தங்கியிருக்குமாறு மன்னர் கேட்டுக் கொண்டார். அதற்கான வசதிகளை செய்தும் கொடுத்தார். இரண்டாம் நாள் மன்னரிடமிருந்து அழைப்பு வந்தது. உமர் (ரலி) அங்கு சென்ற போது அவரிடமிருந்து திருடப்பட்ட பணம் அவருக்கு திருப்பி தரப்பட்டது. அத்தோடு துணி போர்த்தப் பட்ட ஒரு தட்டு அவருக்கு முன்னாள் நீட்டப்பட்ட்து. அதை திறந்து பார்த்த போது வெட்டப்பட்ட ஒரு மனிதனின் கை அதிலிருந்தது. மன்னர் கூறினார். “ உங்களது பணத்தை திருப்பித்தருவது மாத்திரமே உங்களுக்கு செயிகிற நீதியாகாது. இத்தனை சிரமத்தை உங்களுக்கு கொடுத்த அந்த திருடனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பதையும் உங்களுக்கு தெரிவிக்க வேண்டுமல்லவா?”
அதிகாரப் பொறுப்பிலிருப்பவர்கள் தங்களது கீழ் பணியாற்றுபவர்களைப் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மன்னர் நவ்ஷேர்வான் ஒரு பயணம் புறப்பட்டார். உணவுக்காக ஒரிட்த்தில் தங்கினார்கள். அப்போதுதான் உப்பு கொண்டுவரவில்லை என்ற தகவல் கிடைத்தது. ஒரு வீரணை அனுப்பி பக்கது ஊரிலிருந்து காசு கொடுத்து உப்பு வாங்கி வர பணித்தார். அமைச்சர் கேட்டார். இங்கேயே கிராமத்தில் பக்கத்து வீடுகளிலிருந்து கொஞ்ச்ம் உப்புக் கேட்டால என்ன? மன்னர் என்றால் வாரித்தந்து விட மாட்டார்களா?
மன்னர் சொன்னார்: என் பெயரைச் சொல்லிக் கொண்டு உப்பை கேட்டு இன்று அவர்களிடம் செல்கிற நீங்கள். பின்னாள் உங்களுக்காக ஊரையே கேட்பீர்கள்.
அதிகாரத்திலிருப்பவர்கள் பலகீனமானவ்ர்களை நசுக்க முயற்சிக்க்கூடாது. அவர்களை காப்பாற்றனும் உதவனும் அவர்களது கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செவிமடுக்கனும். பலகீனமானவர்களை அலட்சியமாக கருதக் கூடாது.
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ كُلُّ ضَعِيفٍ مُتَضَاعِفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ (,uf;fkw;w tu;fs;ƒ mfk;ghtk; bfhz;ltu;fs;ƒ bgUik gpoj;jtu;fs
وَقَالَ مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ إِنْ كَانَتْ الْأَمَةُ مِنْ إِمَاءِ أَهْلِ الْمَدِينَةِ لَتَأْخُذُ بِيَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَنْطَلِقُ بِهِ حَيْثُ شَاءَتْ
யாராக இருந்தாலும் கணக்கு வழக்குகளில் கவனம்
عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ اسْتَعْمَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ الْأَسْدِ عَلَى صَدَقَاتِ بَنِي سُلَيْمٍ يُدْعَى ابْنَ اللُّتْبِيَّةِ فَلَمَّا جَاءَ حَاسَبَهُ- بخاري - 1500
அதிகாரத்தில் இருப்பவர்கள் நீதி வழுவக்கூடாது என்பதில் மக்களுக்கு அக்கறை வேண்டும். மக்களது பொறுப்பற்ற தன்மையே பல சமயங்களிலும் அநீதியானவர்கள் பொறுப்புக்களை தொடர்ந்து வகிக்க காரணமாகிறது.
இன்றைய நாகரீக உலகில் தட்டிக் கேட்கும் இயல்பு குறைந்து வருகிறது. அது தவறு. சமுதாயத்தை பாதாளத்தில் வீழ்த்தி விடும்.
உமர் (ரலி) யை பார்த்து ஒரு மனிதர் إتق الله என்று சொன்னார். தோழர்கள் கோபமடைந்தனர். உமர் (ரலி) சொன்னார். விடுங்கள்! அறிவுரைகளை யார் சொன்னாலும் அதை கேட்கிறவரைதான் நாம் நல்லவர்கள். நம்மிடம் நன்மை இருக்கும். அறிவுரைகளை எடுத்துக் கூறுகிற வரைதான மக்கள் நல்லவர்கள், அவர்களிடம் நன்மை இருக்கும்.
இன்றைய அரசிலுக்கு இது சரியாக பொறுந்தும் மக்களின் வாக்குகளை பெற்றுச் செல்கிற பலபேர் அதற்கு பிறகு மக்களின் கைப்பிடிக்குள் வருவதே இல்லை. இனி அப்படி விட்டு விடக்கூடாது.
மக்களிடம் ஓரளவு தெளிவு பிறந்திருக்கிறது. நம்மிடம் ஓட்டுப் பெற்றவர்கள் நாட்டை சுரண்டிச் சுரண்டியே நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மிக சிக்கலானதாக சிரம்மானதாக மாற்றி விட்டார்கள்,
மக்களுக்காக என்று போடப்படும் திட்டமும் மக்களுக்காக இல்லை. அரசியல் வாதிகள அரசின் கஜானாவை கொள்ளை அடிப்பதற்காக கணக்கு காட்டும் ஒரு வசதியாகத்தான இப்போது மாறியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புக்களிலே கூட பல ஆயிரம் கோடிகளை அவர்கள் கபளீகரம் செய்திருக்கிறார்கள். நகரத்தின் அத்தியாவசிய பணிகளில் கூட – குப்பதை தொட்டி வழங்கினால் கூட = அது கவுன்சிலர்கள் காசு பார்ப்பதற்காகவே செய்யப்படுகிறது என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த முறை கோவை மாநகராசிக்கு 3 ஆயிரம் கோடி ரூபாரை ஜவர்ஹர்லாக நகர்ப்புற வளர்ச்சித்திட்ட்த்திற்காக வழங்கப்பட்ட்து. அதை காண்ட்ராக்டர்களோடு கை கோர்த்துக் கொண்டு கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைத்து உறுப்பினர்களும் பங்கு போட்டுக் கொண்டனர். மிகப் பெரிய நிதியாதாரத்தோடு தொடங்கப்பட்ட அந்த திட்டம் இப்போது அரைகுறையாக நிற்பதை அனைவரும் அறிவர். தரமற்ற பல அடுக்குமாடி குடியிருப்பவர்கள் கட்டிடப்பணி முடிவதற்குள்ளாகவே மண்ணுக்குள் புதைந்து விட்டன.
இந்த நிலை தொடரக் கூடாது என்றால் மக்களிடம் தொளிவும் தீர்க்கமும் உறுதியும் பரவ்வேண்டும். மக்கள் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப் பட வேண்டும்.
மக்களால் மக்களுக்காக என்ற ஜனநாயகத் தத்துவம் இந்திய ஜனநாயகத்தில் தற்போது உள்ளாட்ச்சி தேர்வுகளில் மட்டும் தான் ஓரளவு எஞ்சி இருக்கிறது. அதையும் அரசியல் கட்சிகள் காவு கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் தமிழக வாக்காளர்கள் முழுக்க அரசிய்ல் கட்சிகளின் அடிமைகளாகிவிடாமல் ஓரளவு ஜனநாயகத் தன்மையை பாதுகாத்துள்ளார்கள். சுயேட்சைகள் கனிசமாக வெற்றி பெற்றுள்ளார்கள்.
5 நகராட்சிகளிலும், 64 பேரூராட்சிகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர். மாநகராட்சி கவுன்சிலர் (50), நகராட்சி கவுன்சிலர் (549), பேரூராட்சி வார்டு உறுப்பினர் (1992) மற்றும் பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் (552) பதவிகளை சுயேட்சைகள் வென்றுள்ளனர்.
மேலும் பல இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் தேசிய கட்சிகளையும் விட அதிக வாக்குகள் பெற்று பிரதான போட்டியாளராக இருந்தார்கள். கோவை மாநகராட்சித் தேர்தலில் ஒன்றிணைந்த முஸ்லிம்கள் சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்ட் அமீர் அல்தாப் சுமார் 36 ஆயிரம் ஓட்டுக்களுடன் மூன்றாவது இடம் பிடித்தார். தங்களது அரசிய்ல் உரிமை பறிக்கப்பட்ட்தாக கருதிய மக்கள் அதை வெளிப்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பை ஓரளவுக்கேனும் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அரசியல் அதிகாரத்தை தவறாக பயப்ப்டுத்தி மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாதவர்களுக்கு எதிராக பல இடங்களிலும் மக்கள் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்ச் செய்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் ஆங்காங்கே உருவாகியுள்ள இந்த அணுகுமுறை நீடிக்கும் என்றால் நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்களிளும் இனி மக்கள் விரும்பும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது சாத்தியமாகிவிடும்.
ஆனால் மக்கள் விரும்புவோர் ஆட்சிக்கு வந்து விட்டால் மட்டும் போதாது. அவர்கள் தொடர்ந்து நல்லவர்களாக இருக்க வேண்டுமானால் மக்களின் கண்காணிப்பும் தொடர்ந்து இருக்க வேண்டும்.
இதில் கவலைக்குரிய ஒரு முக்கிய செய்தி. கடந்த காலங்களில் உள்ளாட்சி உறுப்பினர்களாக தேர்வு பெற்ற்வர்கள் அதிகாரிகளின் துணை யோடு பெருமளவில் ஊழலில் தலைப்பட்டு விட்டார்கள் என்பது. ஒரு தெரு விளக்கு பழுதாகி விட்டால் அதை மாற்றுவதில் கவுன்சிலருக்கு கமிஷன் போகிறது.
பஞ்சாயத் ராஜ் திட்டம் மூலம் கோடிகணக்கான பணம் மத்திய அரசால் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு ஒதுக்கபடுகின்றது. இதில் நிறைவேற்றப்படும் திட்டங்களை செயல்படுத்தும் காண்ட்ராக்டர்கள் மூலம் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு கமிசனாக(லஞ்சமாக) 4 சதவிகிதத்திற்கும் அதிகமாக வழங்கபடுகிறது.
இந்தப் போக்கை தடுத்து நிறுத்தத் தவறினால நமக்கு வரவேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் தரமற்றதாவே கிடைக்கும் அல்லது கிடைக்காமலே போகும்.
இந்தை சூழ்நிலையை மாற்றி உள்ளாட்சி அமைப்புக்களை சிறப்பானதாக வழி.
· கவுன்சிலர்களை கண்காணிக்க மக்கள் வார்டு வாரியாக கண்கானிப்பு குழுக்களை அமைக்கவேண்டும். கவுன்சிலரை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும் தார்மீக அதிகாரம் பெற்றதாக அந்தக் கவுன்சில அமைய வேண்டும்.
· தேர்தலுக்கு முந்தைய கவுன்சல்ரின் சொத்து விபரத்தையும் அதற்கு பிந்தைய சொத்து விபரத்தையும் அக்குழு கண்காணிக்க வேண்டும்,
· பெரிய நிறுவன்ங்களிடமிருந்தும் காண்ட்ராக்டரிகளிடமிருந்தும் பெரிய அளவில் கமிஷன் பெற்றுக் கொண்டு அதிகாரிகளும் கவுன்சிலர்களும் கூட்டு சேர்ந்து அடிக்கும் கொள்ளைத்திட்டங்களையும் கண்காணிக்க வேண்டும்.
· நமது பகுதியின் சரியான பிரச்சினைகளை விருப்பு வெறுப்பின்றி கவுன்சிலரிடமும் மேயர்கள் நகராட்சித் தலைவர்களிடமும் நாம் முதலிலேயே எடுத்து வைத்து விடவேண்டும்.
தேர்தல் முடிந்து விட்டது. புதிய உள்ளாட்சி அமைப்புக்கள் பொறூப்பேற்றுவிட்டன இனி நமக்கென்ன வேலை என்று மக்கள் சும்ம இருந்து விட்டால் இனிவரும் காலங்களில் உடுத்தியிருக்கிற வேட்டிக்கு உத்தரவாதம் இருக்காது.
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியை கவுன்சிலர்களை கண்காணிப்பதிலிருந்து நாம் துவக்க வேண்டும்.
இதை எல்லாம் விட்டு விட்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு மாலை மரியாதை செய்து, முகஸ்துதியையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்தி நம்மை நாம் சிறுமைப் படுத்திக் கொள்ளக் கூடாது.
அல்லாஹ் நம்மிடம் இரக்கத்தோடும், நீதியோடும், அவனை அஞ்சிச் செயல்படுகிற அதிகாரிகளை நமக்குத் தந்தருள்வானாக!
குர்பானி பற்றிய்ம் - முடிவெட்டுதல் நகம் வெட்டுதல் பற்றியும் சட்டங்களை நினைவு படுத்துக!
மேலதிக தகவல்களுக்கு கீழ் கணட இணைப்பை சொடுக்கவும்
மேலதிக தகவல்களுக்கு கீழ் கணட இணைப்பை சொடுக்கவும்
மவ்லானா அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஎங்களின் வேண்டுகோளை ஏற்று -புதன்கிழமை இல்லாவிட்டாலும்- வியாழக்கிழமை(4;25am சுப்ஹானல்லாஹ்) அன்றே பயான் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி jazakallah தொடரட்டும் உங்கள் தொண்டு இன்னும் வேகமாய்! வஸ்ஸலாம்