வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 24, 2011

ஹிஜ்ரத்தில் பெண்கள்


ஹிஜ்ரி 1433 வது புதிய ஆண்டு பிறக்கிறது.

ஹிஜ்ரத்தின் பயணத்தில் ஆண்களைப் போலவே பெணக்ளும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். சில பெண்கள் அனுபவித்த வலியும் வேதனையும் அவர்களின் தியாகமும் ஆண்களுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல.

பெண்களின் குடியேற்றம் என்பது ஆண்களின் ஹிஜ்ரத்தை விட சிரமம் நிறைந்தது என்பதற்கு விளக்கம் தேவையில்லை.  

அகபா உடன் படிக்கையில் முதல் பெண்

ஹிஜ்ரத் செல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அகபா உடன்படிக்கைகளே என்பது வரலாற்றை வாசித்தவர்களுக்கு தெரியும்.

மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்திருந்த அஸ் அத் பின் சராரா வின் தலைமையிலான 6 நபர்களை சந்தித்து இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள்.  அந்த  6 பேரும் இஸ்லாத்தை ஏற்றனர்.

மூன்று அகபா உடன்படிக்கைகள் முதலாவது நபித்துவத்தின் 11 ஆண்டில் நடந்தது. அப்போது 6 பேரும் அடுத்த ஆண்டு 12 பேரும் அதற்கு அடுத்த ஆண்டு 75 பேருமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றனர்.

மூன்றாவது தடவை வந்த குழுவினர் தங்களது ஊரான யத்ரிபு  முஸ்லிம்களுக்கு பாதுகாப்பளிக்கும்  என்று உறுதியளித்தனர்.

ஹிஜ்ரத்தின் பாதையை மதீனாவை நோக்கி திருப்பி விட்ட பெருமை அந்த மூன்றாம் அகபா உடன்படிக்கைக்குரியது. அந்த உடன்படிக்கைக்கு வந்த 75 முஸ்லிம்களில் இரண்டு பெண்களும் இருந்தனர்.

நஸீபா பின்து கஃபு என்ற உம்மு அம்மாரா அவர்களில் ஒருவர் அஸ்மா பின் து அம்ர் என்ற உம்மு மனீஃ இரண்டாமவர்.
  أم عمارة

نسيبة بنت كعب: بن عمرو: وتكنى أم عمارة الأنصارية، وهي زوج زيد بن عاصم الصحابي الجليل، وكانت بطلة مجاهدة من أبطال الإسلام،
ويحفظ لها التاريخ وقفتها يوم أحد، وهي تقاتل دون النبي - صلى الله عليه وسلم - حتى قال: ((ما التفت يميناً وشمالاً إلا وأنا أراها تقاتل دوني))

وقد جرحت ثلاثة عشر جرحاً، والدم ينزف منها، فنادى المصطفى - صلى الله عليه وسلم - ابنها عمارة قائلاً: ((أمك أمك أعصب جرحها، بارك الله عليكم من أهل بيت، مقام أمك خير من مقام فلان وفلان))
 فلما سمعت أمه قالت: ادع الله أن نرافقك في الجنة، فقال: ((اللهم اجعلهم رفقائي في الجنة))،
فقالت: ما أبالي ما أصابني من الدنيا.

ويحدث التاريخ عن موقفها في حروب الردة، ومقاتلة مسيلمة الكذاب الذي قتل ابنها حبيب، وقطعه قطعاً، حين شاركت في الحرب كأحد الأبطال الميامين حتى قطعت يدهاமுதல் நான்கு முஹாஜிர் பெண்கள்

மதீனா  குடியேற்றத்திற்கு 8 வருடங்களுக்கு முன்னதாக அபீசீனியாவிற்கு குடிபெயர்ந்து செல்லும் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். பெருமானாரின் உத்தரவை ஏற்று நபித்துவத்தின் 5ம் ஆண்டில் 16 பேர் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றனர். இஸ்லாத்தின் அந்த  முதல் 16 அகதிகளில்  நான்கு பேர் பெண்கள். ருகையா, லைலா, சல்மா சஹலா (ரலி) ஆகிய நால்வரே அவர்கள்.
ورقية
ويكون عثمان ورقية أول من هاجر على قرب عهدهما بالزواج،
وهاجرت رقية ثانية مع زوجها إلى الحبشة مع المؤمنين الذين بلغوا ثلاثة وثمانين رجلاً. وبهذا تنفرد رقية ابنة رسول الله بأنها الوحيدة من بناته الطاهرات التي تكتب لها الهجرة إلى بلاد الحبشة،
: "إنهما أول من هاجرا إلى الله بعد لوط".

முதல் மதீனா முஹாஜிர் பெண்மணி

மதீனா செல்ல்லும் படி பெருமானார் (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட போது முதல் பெண்மனியாக லைலா (ரலி) மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்தார். அவர் அபீசீனியாவிலிருந்து மதீனாவிற்கு பயணம் மேற்கொண்டார்.  அபீசீனியாவிற்கு முதலில் ஹிஜ்ரத் செய்த நான்கு பெண்களில் லைலா அம்மையாரும் ஒருவராக இருந்தார் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. லைலா அம்மையார் இரண்டு முறை அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்ததோடு முதன் முதலாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர் என்ற சிறப்பையும் சேர்த்துப் பெற்றார். இது மட்டுமல்லாது லைலா அம்மையார் இஸ்லாமை தழுவியதிலும் ஒரு சிறப்புச் செய்தி இருக்கிறது.

லைலா அம்மையார் (ரலி) ஆரம்பமக இஸ்லாமைத் தழுவியவர்களில் ஒருவராவார். அவரது கணவரது பெயர் ஆமிர் என்பதாகும். ஆமிரின் தந்தை ஜைது தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில்  மகன் ஆமிரிடம் ஒரு ரகசியம் சொன்னார்.
ليلى بنت أبي حثمة
أن زيد بن عمرو بن نفيل قال لعامر زوجها: أنا أنتظر نبياً من ولد إسماعيل، ثم من بنى عبد المطلب، ولا أراني أدركه، وأنا أؤمن به وأصدقه، وأشهد أنه نبي، فإن طالت بك مدة - يا عامر - ورأيته فأقرئه مني السلام، وبتهيئة زوجها كانت ليلى مهيأة لقبول الدين الجديد، لأن زوجها كان يردد كثيراً قول زيد بن عمرو بن نفيل؛ فلما سرى في مكة أن رسول الله - صلى الله عليه وسلم - يدعو إلى الله الواحد الأحد؛ أقبل عامر وليلى وأسلما
ولم تكن هجرة ليلى بنت أبي حثمة إلى المدينة (يثرب) مجرد انتقال من مكان إلى مكان، ولكن كان لها دور إيجابي هي وباقي المهاجرات والمهاجرين في توطيد دعائم الدين الإسلامي في قلوب اليثربيات واليثربيين، وليس أدل على ذلك مما رأيناه من خروج الأنصار والمهاجرين ونسائهم للقاء النبي - صلى الله عليه وسلم - بعد  علمهم بهجرته المباركة                         .

லைலா அம்மையார் இஸ்லாமைத் தழுவியதில் மட்டுமல்ல அவர் முதன் முறையாக அபீசினியாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டதிலும் ஒரு விஷேசன் உண்டு. அதை அந்த அம்மையாரே சொல்கிறார்:

நாங்கள் இஸ்லாமைத் தழுவிய காலகட்டத்தில் உமர் இஸ்லாத்தின் பெரும் எதிர்ப்பாளராக இருந்தார். நான் ஹிஜ்ரத் செல்வதற்காக ஒட்டகையில் உட்கார்ந்திருந்த போது உமர் எங்களது பக்கமாக வந்தார். என்னை பார்த்ததும் அப்துல்லாஹ்வின் தாயே! எங்கே செல்கிறீர்! என்று கேட்டார்.

நான்,எங்களது மார்க்கத்தை பின்பற்ற விடாமல் நீங்கள் தொல்லை தருகிறீர்கள். அதனால் நாங்கள் இறைவனை வணங்க தொல்லைகளற்ற ஒரு இடத்திற்கு புலம் பெய்ர்கிறோம் என்றேன். இறைவன் உங்களோடு இருக்கட்டும் என்று சொல்லி விட்டு அவர் நகர்ந்த் விட்டார். இந்த அதிசயச் செய்தியை என் கணவரிடம் சொன்னேன். அப்போது அவர் உமர் இஸ்லாமை தழுவுவார் என்று நீ நம்புகிறாயா? என்று என்னிடம் கேட்டார். நான் ஆம் என்றேன்.
  
இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் உமர் (ரலி) அவர்களால் ஹிஜ்ரத்திற்கு  வழியனுப்பி வைக்கப்பட்டவர் என்ற பெருமையை லைலா அம்மையார் பெற்றார்.

லைலா அம்மையாரின் ஹிஜ்ரததைப் பற்றி கூறுகையில் வரலாற்று ஆய்வாளர்கள் அவரது ஹ்ஜ்ரத் ஒரு ஊரிலிர்ந்து மற்றொரு ஊருக்கு புலம்பெய்ர்தலாக மட்டுமிருக்கவில்லை. அவரும் அவரைப் போன்ற போன்ற பெண்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்த போது மதீனா பெண்களிடம் அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பெருமானாருக்காக பெண்கள் கூட இவ்வளவு பெரிய தியாகங்களை செய்கிறார்களே என்ற மதீனாவாசிகள் மலைத்தனர்.  


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரின் ஹிஜ்ரத்,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களோடு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது அவ்விருவருடைய குடும்பத்தினரும் மக்காவிலேயே இருந்தனர்.

இவ்விரு குடும்பத்தினரும் அபூபக்கர் (ரலி) அவர்களது மகன் அப்துல்லாஹ் வுடன் மதீனாவுக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார்கள். இதில் அபூபக்கர் (ரலி) அவர்கள் மகளும் பெருமானார் (ஸல்) அவர்களது மனைவியுமான ஆயிஷா (ரலி) அவர்களும் இருந்தார். 

மதீனாவில், அபூஅய்யூப் அன்சாரி(ரலி) அவர்களின் வீட்டில் தங்கியிருந்த  பெருமானார் (ஸல்) அந்த வீட்டிலேயே தன்னுடைய குடும்பத்தினரை அன்பும் மகிழ்ச்சியும் பொங்க வரவேற்றார்கள். இவர்களின் வருகையோடு பெருமானார் (ஸல்) அவ்ர்களது குடும்பத்தினரில் பெருமபாலோனோரின் ஹிஜ்ரத் நிறைவடைந்தது. பெருமானாரின் மூத்த மகள் ஜைனப் (ரலி) அவர்கள் மட்டும் மக்காவில் இருந்தார்.
هاجرت أم كلثوم مع أختها فاطمة الزهراء ، وزوجة الرسول صلى الله عليه وسلم سودة بنت زمعة، ثاني زوجاته بعد خديجة رضي الله عنها، بكل شوق وحنان إلى المدينة ، فاستقبلهن الرسول -صلى الله عليه وسلم، وأتى بهنّ إلى داره التي أعدّها لأهله بعد بناء المسجد النبوي الشريف .

ஜைனப் (ரலி) ஹிஜ்ரத்
عندما علم رجال قريش بخبر خروج السيدة زينب إلى أبيها لحق بها هبار بن الأسود ومعه رجل آخر من قريش فعندما لقيها روعها برمحه فإذا هي تسقط من فوق بعيرها على صخرة جعلتها تسقط جنينها، فولى الرجال من بعد ذلك هاربين

உக்பாவின் மகளின் உன்னத ஹிஜ்ரத் 
ஹிஜ்ரத்தின் புரட்சிக்கு ஒரு புதிய உதாரணத்தை உக்பாவின் மகள்  உம்குல்ஸூம் ஏற்படுத்தினார்.

உக்பது பின் முஈத் இஸ்லாமின் மிக தீவிர எதிரிகளின் ஒருவனாக இருந்தான்.
உகபா வின் மகள் உம்மு குச்ஸும் ஹிஜ்ரீ 6 ம் ஆண்டிற்குப் பிறகு இஸ்லாமை ஏற்று மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் புலம் பெயர்ந்து வந்து பெருமானரைச் சந்தித்தார். அப்போது அவர் பதிமூன்றே வய்துடைய பெண்ணாக இருந்த அவர் தனியாகவே நடந்து வந்து சேர்ந்தார்  என்று வரலாற்றின் ஒரு குறிப்பு சொல்கிறது.

அந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கும் மக்காவின் எதிரிகளுக்குமிடையே புதிதாக யாரும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்தால் அவர்களை திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது.

உம்மு குல்ஸூம் மதீனாவுக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து அவரது இரு சகோதரர்கள் அம்மாராவும் வலீதும் மதீனாவுக்கு வந்து உம்மு குல்ஸுமை திருப்பி அனுப்பும் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேட்டுக் கொண்டனர்.

ஒப்பந்தத்தை பேணுவதில் நெறி தவறாத பெருமானார் (ஸல்) அவர்கள் இப்போது என்ன செயயப்போகிறார்களோ என்று முஸ்லிம்கள் மனமுருகி நின்றனர். அவர்களது நெஞ்சில் பால் வார்ப்பது போல அப்பொது திருக் குர் ஆனில் ஒரு வசனம் அருளப்பபட்டிருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். ( 60: 10) 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمْ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ وَآتُوهُمْ مَا أَنفَقُوا

இதைக் கேட்டதும் அம்மாராவும் வலீதும் இது என்ன உடன் படிக்கை மீறல்? என்று கோபித்தனர்.
அப்போது இருதரப்பாருக்கும் இடையே நடைபெற்ற உடன் படிக்கையின் வாசகத்தை சுட்டிக் காட்டினார்கள். அந்த வாசகம்

أن لا يأتيك منا رجل وإن كان على دينك إلا رددته إلينا

மக்காவிலிருது வருகிற ஆண்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றே கூறியது.
ருகையா பின்து சைப்பி
ஹிஜ்ரத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியப் பங்கு வகித்த ஒரு பெண்மணியைய் பற்றி வரலாறு பேசுவோர் பலரும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். ஆனால் வரலாறு அந்த அம்மையாரின் பங்களிப்பை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறது.

والتاريخ الإسلامي يحفظ لها وقفة مع الإسلام كثيراً ما يغفلها المؤرخون،
وقد اجتمع كبار المشركين ليلاً ومعهم إبليس اللعين في صورة شيخ نجدي، وانتهى أمرهم إلى أن يقتلوا النبي - صلى الله عليه وسلم - في داره بيد فتية من كل قبيلة فتى؛ ليتوزع دمه - صلى الله عليه وسلم - في القبائل، تلك المرأة المسنة - رقيقة - هي التي استشفت خبر قريش يوم ائتمروا بالنبي - صلى الله عليه وسلم -، فذهبت العجوز تجر أثقالها حتى انتهت إلى النبي - صلى الله عليه وسلم -، وأخبرته الخبر، وحذرته من المبيت في داره، وحدثته بحديث القوم الذي لا يعلمه إلا الله، ثم هي ومن تآمروا عليه، ثم ذهبت العجوز التي أنافت على المائة، لتنقل الخبر، ولم تأمن على نقله ابنها مخرمة بن نوفل وهو من لحمة النبي - صلى الله عليه وسلم - وذوي صحبته؛ ذلك لأن الشك فيها وهي العجوز المسنة مستبعد، وما أطيب امرأة، وأجل منزلتها لاسيما وهي تذهب إلى رسول الله - صلى الله عليه وسلم - بمثل ما سبق به جبريل إليه - على نبينا وعليه أفضل الصلاة والسلام -.

வரலாற்றின் அந்த வரவேற்புக்கு பாதை அமைத்ததில் பெண்மணிகளின் பங்கும் வளப்பமானது.

3 comments:

 1. அ.அ.பாகவி மன்றம்9:03 PM

  விளக்கம்
  அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  நமது மவுலானா அவர்களின் பணிச் சுமையால் சற்று தாமதமாக இந்த வார பயான் குறிப்பு வெளியிடப்பட்டது என்பதை தெரிவிக்கிறோம் வஸ்ஸலாம்
  இவண்
  அ.அ. பாகவி மன்றம்

  ReplyDelete
 2. assalamu alikum ungga loudaya bayan kuripukal meha arumai allahu unggaluku rahumath saivanaha

  ReplyDelete
 3. v gd speach moulavi

  ReplyDelete