வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 12, 2012

எல்லாம் அவன் செயல்


·         நமக்கு கிடைத்த அற்புதமான நிஃமத் ஈமான்.
·         அதுதான் நமது ஈருலக வெற்றிக்கு காரணி.
·         அதுவே நமது உந்து சக்தி.
·         வாழ்வின் இறுதி நிமிடம் வரை அதை பாதுகாத்து வைக்க வேண்டியது நமது கடமை.

சகுனம் பார்ப்பது இறை நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகும். ஈமானை இழிவுபடுத்துவதாகும்.

ஈமானில் ஒரு முக்கிய அம்சம், நன்மை தீமை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப் படியும் அவன் விருப்ப்படியுமே நடக்கின்றன. இதில் வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது என்பதை உறுதியாக நம்புவதாகும்.

وَلَا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنْ الظَّالِمِينَ(106)وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ(107) يونس

فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنْ الظَّالِمِينَ எனும் வாசகம் மிகவும் கவனிக்கத்தக்கது.

இது விசயத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் வெளிப்படுத்திய தெளிவு

قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنْ الْخَيْرِ وَمَا مَسَّنِي السُّوءُ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ(188)
உஹது யுத்த்த்தில் முஸ்லிம்களுக்கு தோல்வி கிடைத்த்து.
பெருமானாருக்கும் காயம் ஏற்பட்டது.
ஹுதைபிய்யாவின் போது உம்ரா செய்யாமல் பெருமானார் (ஸல்) அவர்கள் திரும்பினார்கள்.)

தீய தவறான எந்த சக்திக்கும் முஸ்லிம்கள் பயப்படக்கூடாது.
وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ(80)وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(81)  الأنعام

அல்லாஹ்வின்  மீதே உறுதியான நம்பிக்கை வைக்கனும்
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلْ الْمُؤْمِنُونَ(51)  التوبة

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتْ الْأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ  - ترمذي – 2440


இஸ்லாத்தில் சகுனங்களுக்கு இடமில்லை. முஸ்லிம்கள் சகுனங்களை நம்பக் கூடாது. சகுனம் பார்க்கலாகாது. அதற்கு துணை பேவதும் தவறு.

குறிப்பிட ஒரு காலமோ? மிருகமோ? சூழ்நிலையோ நமது வாழ்வில் பாதிப்பை உண்டு பண்ணும் என்று எண்ணுவதே சகுணமாகும்.

'சகுணம்' என்பதற்கு அரபியில் 'تطير  ' எனப்படும். طير

அன்றைய  அரபு நாட்டில் வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிற போது வானத்தை அண்ணாந்து பார்ப்பார்கள். தலைக்கு மேலே பறவை வலது புறம் பறந்தால் புறப்படுவார்கள். பறவை இட்து புறம் பறந்தால் வீட்டிற்குள் முடங்கிவிடுவார்கள்.

சகுணம் பார்ப்பது போலவே குறி பார்த்தல்ஜோஷியம் கேட்டல் ராசி பலன் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல் அனைத்தும் ஈமானை பாதிக்க கூடியவை,

கஃபாவில் அம்புகளை கொண்டு குறிபார்ப்பார்க்கிற பழக்கமும் அரபிகளிடம் இருந்தது.
மக்கா வாசிகள் இபுறாகீம் இஸ்மாயீல் (அலை) ஆகிய இருவரையும் கூட குறிசொல்பவர்களாகவே சித்தரித்திருந்தனர்.

َ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ مَكَّةَ أَبَى أَنْ يَدْخُلَ الْبَيْتَ وَفِيهِ الْآلِهَةُ فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ فَأُخْرِجَ صُورَةُ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ فِي أَيْدِيهِمَا مِنْ الْأَزْلَامِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاتَلَهُمْ اللَّهُ لَقَدْ عَلِمُوا مَا اسْتَقْسَمَا بِهَا قَطُّ  - البخاري 4289

இஸ்லாம் இத்தகைய மூட நம்பிக்கைகளுக்கு அறவே எதிரானது. வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய  நம்பிக்கை ஈமானை பறித்து விடக்கூடியது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَلَا هَامَةَ وَلَا صَفَرَ -  البخاري 5757
(لَا عَدْوَى   என்பதற்கு எந்த நோயும் தானாக தொற்றுவதில்லைஎன பொருள் சொல்லவும்.)

சபர் பீடை மாதமல்ல
صفر  என்றால் காலி என்று பொருள். துல்கஃதா துல்ஹஜ் முஹர்ரம் ஆகிய மூன்று ஹஜ்ஜுடைய மாதங்களுக்குப் பின் மக்கள் வெளியே செல்வார்கள். ஊர் காலியாகிவிடும்.

சபர் பீடை என்பது ஜாஹிலிய்யா பழக்கம்
وهذا التشاؤم من المعتقدات التي كانت لدى العرب في جاهليتهم، حيث كانوا يعتقدون أن شهر صفر شهر حلول المكاره، ونزول المصائب، وسبب تشاؤمهم من شهر صفر أنهم كانوا يعودون فيه إلى السلب والنهب، والغزو والقتل؛ بعد الكف عنها في الأشهر الحرم، ثم تطور الأمر حتى بلغ بهم الحال إلى أنه لا يتزوج في هذا الشهر من أراد الزواج؛ لاعتقاده أن لا يوفق، ومن أراد تجارة فإنه لا يمضي صفقته في شهر صفر خشية أن لا يربح.

 இவ்வாறு கருதி ஒரு நல்ல காரியத்தை அதில் செய்யாமல் தவிர்க்க கூடாது.
 عن عبد الله بن عمر قال النبي صل هلله عليه وسلم : من ردته الطيرة عن حاجته فقد أشرك –

தற்காலத்தில் சபர் மாதம் குறித்த சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும். சகுனம் பார்த்தல் ஜோஷியம் போன்றவை புதிய வடிவங்களில் மக்களிடம் புகுந்து வருகின்றன. இதற்கு முஸ்லிம்களும் பலியாகிவருகின்றனர்.

புதிய சகுன்ங்கள்
வாஸ்த்து
·         அநியாயத்திற்கு வீட்டை இடிக்கிறார்கள்.
·         வாஸ்த்துப் படி சமையலறை கட்டி விட்டால் சாப்பாடு நன்றாக இருக்குமா என்பதற்கு எந்த ஜோஷியமும் பதில் தருவதில்லை.
·         ஒருமுஸ்லிம் இன்ஞினியர் வீட்டுக்கார்ரிடம் வாஸ்து பார்க்கனுமா என்கிறார். ஆமாம் அப்போதுதான் வாடகைக்கு ஆள் வரும் என்று அவர் கூறுகிறார்.
·         தனக்காக பார்க் கூடாது. பிறருக்காக ஆகும் என்று நினைப்பது தவறு.
·         இஸ்லாத்தில் ஒரே வாஸ்த்து கிப்லாவை பார்த்து கழிவறை வைக்க கூடாது.

வைரக்கல், பிரமிடு, அலங்கார மீன் தொட்டி , வாஸ்த்து மீன் என தினசரி புதுப் புது மூட நம்பிக்கைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு வேடிக்கை என்னவெனில் ; நகரீகம் அறிவு சார் நடைமுறைகளை வாய்கிழிய பேசுகிற ஊடகங்கள் தற்போது இதற்கு துணை போகின்றன, தூண்டுகின்றன.

முஸ்லிம்கள் இத்தகைய எந்த தூண்டுதலுக்கும் ஆட்பட்டு, மசிந்து தங்களது ஈமானை தவ்றவிடக்கூடாது. 

இத்தகைய நம்பிக்க்கள் தீனுக்கு மட்டுமல்ல அறிவுக்கும் பொருந்தாத்தவை . முட்டாள்தனமானவை.

أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا عَدْوَى وَلَا صَفَرَ وَلَا هَامَةَ فَقَالَ أَعْرَابِيٌّ يَا رَسُولَ اللَّهِ فَمَا بَالُ إِبِلِي تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ فَيَأْتِي الْبَعِيرُ الْأَجْرَبُ فَيَدْخُلُ بَيْنَهَا فَيُجْرِبُهَا فَقَالَ فَمَنْ أَعْدَى الْأَوَّلَ – -  البخاري 5717
கிளிஜோஷியக்காரன் புலம்பினான்; இன்னக்கி பார்ட்டிகளே வரலை. ஒரு ஆள் கேட்டார்.
நீ புறப்படுவதற்கு முன் ஒரு தடவை உன் கிளியை விட்டு உனக்கு இன்றைய நாளை கனித்திருக்கலாமே!

நமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் சோதிடர்களும்; சோதிடத்தைப் பொய் என்போரும் தங்கள் பக்க வாதங்களை வைத்தார்கள். அப்போது ஜாதகத்தைப் பார்த்து யாவும் கணிக்க
முடியும் என ஒரு ஜோதிடர்  கூற  மேடையில் ஒரு ஜாதகம் அவரிடம் கொடுக்கப்பட்டு; அச் ஜாதகம் ஒரு ணுடையதா? பெண்ணுடையதா? ன்பதை மாத்திரம் கூற வும்.எனக் கேட்கப்பட்டது. பல சோதிடர்கள் சல்சாப்பு சொல்ல; ஒருவர் சொல்லுவேன்; தவறினால் சோதிடத் தொழிலையே கைவிடுவேன். என்று கூறி கொடுக்கப்பட்ட நேரத்தில் கணித்துப் பெண் ஜாதகம் என்றார். ஆனால் அச்சாதகமோ ஒரு ஆணினது.அதன் பின்
அவர் முகத்தில் ஈயாடவில்லை.

படித்தவர்களும் பெரிய மனிதர்களும் கூட எளிதாக மாட்டிக் கொண்டு விட்ட விச்யம் இது.
இந்தியாவின் சுதந்திரத்தை  நடு இரவில் பெற்றதற்கு கூட நல்ல நேரம் த்த்துவம் தான் கூறப்படுகிறது.

முஃமின்களை  இஸ்லாம் காப்பாற்றியது.  

ليس منا من تطير أوتطيرله  ،  أو تكهن أوتكهن له ، أو سحر أو سحر له

عَنْ صَفِيَّةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً – مسلم 2230

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ لَا يَتْرُكُونَهُنَّ الْفَخْرُ فِي الْأَحْسَابِ وَالطَّعْنُ فِي الْأَنْسَابِ وَالْاسْتِسْقَاءُ بِالنُّجُومِ وَالنِّيَاحَةُ  - مسلم – 934

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ – البخاري 846

ஒரு முக்கிய தகவல்
இதை நம்புகிறவர்களுக்குத்தான் இது சலனத்தையும் அச்சத்தையும் தரும்.

இப்னுல் கையும் ஜவ்ஸி  கூறுகிறார்: 'சகுணமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது'.


இத்தகைய  நம்பிக்கைகளில் தங்களது ஈமானை பறிகொடுக்காத மக்களுக்கு கிடைக்கிற பரிசு

حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَجَعَلَ النَّبِيُّ وَالنَّبِيَّانِ يَمُرُّونَ مَعَهُمْ الرَّهْطُ وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ حَتَّى رُفِعَ لِي سَوَادٌ عَظِيمٌ قُلْتُ مَا هَذَا أُمَّتِي هَذِهِ قِيلَ بَلْ هَذَا مُوسَى وَقَوْمُهُ قِيلَ انْظُرْ إِلَى الْأُفُقِ فَإِذَا سَوَادٌ يَمْلَأُ الْأُفُقَ ثُمَّ قِيلَ لِي انْظُرْ هَا هُنَا وَهَا هُنَا فِي آفَاقِ السَّمَاءِ فَإِذَا سَوَادٌ قَدْ مَلَأَ الْأُفُقَ قِيلَ هَذِهِ أُمَّتُكَ وَيَدْخُلُ الْجَنَّةَ مِنْ هَؤُلَاءِ سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ ثُمَّ دَخَلَ وَلَمْ يُبَيِّنْ لَهُمْ فَأَفَاضَ الْقَوْمُ وَقَالُوا نَحْنُ الَّذِينَ آمَنَّا بِاللَّهِ وَاتَّبَعْنَا رَسُولَهُ فَنَحْنُ هُمْ أَوْ أَوْلَادُنَا الَّذِينَ وُلِدُوا فِي الْإِسْلَامِ فَإِنَّا وُلِدْنَا فِي الْجَاهِلِيَّةِ فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ فَقَالَ هُمْ الَّذِينَ لَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَالَ عُكَاشَةُ بْنُ مِحْصَنٍ أَمِنْهُمْ أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ نَعَمْ فَقَامَ آخَرُ فَقَالَ أَمِنْهُمْ أَنَا قَالَ سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ
ஒரு விளக்கம்
ஹதீஸில் தடுக்கப் பட்டுள்ள ஓதிப்பார்த்தல் என்பது அன்றைய அரபகத்தின் வழக்கத்தில் யூதர்களிடம் சென்று ஓதிப்பதாகும். காபிர்களிடமும் சந்தேகத்திற்குரியவர்களிடம் ஓதிப்பார்க்க செல்லக் கூடாது. இது தவிர நமக்கு நாமே ஓதி ஊதிக்கொள்வதும் குர் ஆனின் வசன்ங்களை ஓதி ஊதிக் கொள்வதும் ஈமானிய வழி முறையே. மார்க்கத்தில் அதற்கு பல சான்றுகள் உண்டு. பெருமானார் (ஸல் அவர்கள் உறங்குவதற்கு முன் معوذتين  ஓதி உடல் முழுவதையும் தன் கைகளால தடவிக் கொள்வார்கள். ஒரு கிர்ரமத்தின் தலைவனுக்கு விஷக கடி ஏற்பட்டபோது ஒரு சஹாபி பாத்திஹா சூராவை ஓதிப்பார்த்தார். குணமானது.அதற்காக 30 ஆடுகள் கொடுக்கப் பட்டது.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சகுனமாக பேசப்படும் செய்தி உங்களை சலனப்படுத்துமானால் பயந்து விடாவேண்டாம். அதற்கு ஆட்பட்டு விடவேண்டாம்.
(اللهم لا طير إلا طيرك ولا خير إلا خيرك ولا إله غيرك)
(وفي حديث عروة بن عامر الذي أخرجه أبو داود قال " ذكرت الطيرة عند رسول الله صلى الله عليه وسلم فقال : خيرها الفأل , ولا ترد مسلما , فإذا رأى أحدكم ما يكره فليقل : اللهم لا يأتي بالحسنات إلا أنت , ولا يدفع السيئات إلا أنت , ولا حول ولا قوة إلا بالله "
இதை ஓதி விட்டு காரியத்தை தொடருங்கள். அல்லாஹ்விடம் பொறுப்பை விடுங்கள். ஈமான பலம் பெறும்.

இன்னொரு விளக்கம்
  
நற்சகுணங்களைப் பற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَيُعْجِبُنِي الْفَأْلُ الصَّالِحُ وَالْفَأْلُ الصَّالِحُ الْكَلِمَةُ الْحَسَنَةُ  - أبودلوود 2415
وأخرج الترمذي وصححه من حديث أنس " أن النبي صلى الله عليه وسلم كان إذا خرج لحاجته يعجبه أن يسمع : يا نجيح يا راشد "
وأخرج أبو داود بسند حسن عن بريدة " أن النبي صلى الله عليه وسلم كان لا يتطير من شيء , وكان إذا بعث عاملا يسأل عن اسمه , فإذا أعجبه فرح به , وإن كره اسمه رؤي كراهة ذلك في وجهه "
قال ابن بطال : جعل الله في فطر الناس محبة الكلمة الطيبة والأنس بها كما جعل فيهم الارتياح بالمنظر الأنيق والماء الصافي وإن كان لا يملكه ولا يشربه .
وقال النووي : الفأل يستعمل فيما يسوء وفيما يسر , وأكثره في السرور . والطيرة لا تكون إلا في الشؤم , وقد تستعمل مجازا في السرور ا ه . وكأن ذلك بحسب الواقع , وأما الشرع فخص الطيرة بما يسوء والفأل بما يسر , ومن شرطه أن لا يقصد إليه فيصير من الطيرة .
அல்லாஹ்வை பற்றி நல்லெண்ணம் கொள்ள உதவுகிற காரணத்தினால் மட்டுமே நல்ல வார்த்தைகளை நற்சகுணமாக கருத  பெருமானார் அனுமதித்தார்கள். அதையே நன்மைக்கான காரணமாக கருதினால் அதுவும் சகுணம் பார்ப்பதாகவே ஆகிவிடும். அது தவறு.
(وقال النووي, ومن شرطه أن لا يقصد إليه فيصير من الطيرة)

எல்லாம் அவன் செயல் என்று நம்புவது தான் தான் உண்மையான ஈமானை தாங்கி நிற்கிறது.


1 comment: